Archive for the ‘ஆதாரம்’ Category

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (1)

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தின் மீது தனி கவனம் செல்லுத்தி வருகிறது என்பது அவற்றின் பல செயல்பாடுகள், நிகழ்வுகள் மற்றும் நிலைப்பாடுகள் முதலியன எடுத்துக் காட்டுகின்றன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவற்றின் வேலைகள் அதிகமாகியுள்ளன. திமுக திராவிட ஸ்டாக் மற்றும் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டு, மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடிக்க ஆரம்பித்தது. புரோஹித் கவர்னராக இருந்தபொழுதே, அவருக்கு எதிரான செயல்கள் பல நடந்தேறின. பிறகு, ஆர்.என். ரவி கவர்னராக வந்தவுடன், திமுகவுடனான மதித்திய அரசு மோதல் “ஒன்றிய அரசு” விரோதமாகவே மாறிவிட்டது. “இந்தி தெரியாது போடா,” “மோடி கோ பேக்,” கவர்னருக்குக் கருப்புக் கொடி என்று பல உருவங்களில் செயல்பட ஆரம்பித்தது. பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தமிழ், திருவள்ளுவர் என்றெல்லாம் தாஜா செய்ய ஆரமித்தது. மோடி, “தமிழ் தான் தொன்மையான மொழி,” என்றெல்லாம் பேச ஆரம்பித்தார். ஆனால், திராவிடத்துவ சித்தாந்திற்கு எதிராக எடுபடவில்லை.

2018 முதல் 2023 வரை மேற்கொண்ட முயற்சிகள்: அம்பேத்கரை “இந்துத்துவவாதி” ஆக்கி ஏற்றுக் கொண்டாகி விட்டது. தமிழ்-தொன்மை முதல் திருவள்ளுவர் வரை பேசியாகி விட்டது. பெரியாரிஸத்தில் எங்களுக்கு உடன்பாடே என்றாகி விட்டது [வைத்யா முதல் வானதி வரை, குஷ்பு கொசுரு]. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களையும் சேர்த்தாகி விட்டது. உரையாடல்கள், வாழ்த்து சொல்வது, பார்ட்டிகள் நடத்துவது என்று நடந்தாகி விட்டது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பான நிலையே இருந்து வருகிறது. இந்த செக்யூலரிஸ-சமதர்ம, ஊடல்-உரையாடல்களில் இந்துக்கள், இந்துமதம் முதலியவை தாக்கப் படுவதும் தொடர்கின்றன. கோவில்கள் நிலை, வழிபாடு, பாரம்பரியம் முதலியன நீர்க்கப் பட்டு வருகின்றன. மடாதிபதிகளும் சித்தாந்தங்களில், வேறுபடுகிறார்கள், ஆக மொத்தம் பாதிக்கப் படுவது  இந்துக்கள், இந்துமதம் முதலியவை தான். இதில் தான் அரசியல் நடந்து வருகிறது….

ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யப் போகிறது?: பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது[1].   ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது[2]. அந்நிலையில், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ்.என் மூன்று நாட்கள் கூட்டம் என்ற செய்தி வந்தது. அதன் படி கூட்டமும் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் கூட்டம் முடிந்து, தீர்மானங்கள் திறைவேற்றப் பட்டு, அவை ஊடகங்களுக்கு அறிவிக்கப் பட்டால், நிலைமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா திட்டம் என்ன?: தத்தாத்ரேயா ஹோசபலே சொன்னதை ஞாபகத்தில் கொள்ளலாம்[3], “2025 ஆம் ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு ஆண்டாக இருக்கப் போகிறது. பொதுவாக, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை நாங்கள் தயார் செய்கிறோம். இந்த கண்ணோட்டத்தில், எங்கள் பணியை மண்டல நிலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, நாட்டில் உள்ள 6,483 தொகுதிகளில், 5,683 தொகுதிகளில் சங்கப்பணி உள்ளது. 32,687 மண்டலங்களில் பணி உள்ளது. 910 மாவட்டங்களில், 900 மாவட்டங்களில் சங்கத்தின் பணி உள்ளது, 560 மாவட்டங்களில் மாவட்டத் தலைமையகத்தில் ஐந்து ஷாகாக்கள் உள்ளன, 84 மாவட்டங்களில் அனைத்து மண்டலங்களிலும் ஷாகாக்கள் உள்ளன. வரும் மூன்று ஆண்டுகளில் (2024க்குள்) சங்கப் பணிகள் அனைத்து மண்டலங்களையும் சென்றடைய வேண்டும் என்று நினைத்தோம். 2022 முதல் 2025 வரை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முழுநேர ஊழியர்களை ஈடுபடுத்தும் திட்டமும் உள்ளது”. ஆக ஷாகாக்களை உயர்த்தும் பணி இன்றியமையாதது என்று தெரிகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளின் முக்கியத்துவம்: பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு, 2024 மற்றும் 2025 இரண்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். பிஜேபியைப் பொறுத்த வரையில் 2024 தேர்தலை வென்றே ஆக வேண்டும், இப்பொழுதைய பெருபான்மையினைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து சில மாநிலங்களில் தோற்று வரும் நிலையில், எம்.பிக்களின் எண்ணிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசியம் வந்துள்ளது. இதனால், வடக்கில் இழந்தவற்றை தெற்கில் பெறமுடியுமா என்று கவனிக்கிறது. அதனால், கூட்டணி சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து திட்டமிடுகிறது. அரசியல் என்பதால் அரசியல் கட்சி அதுமாதிரி தான் செயல்படுகிறது. இதில் திராவிடத்துவம்-இந்துத்துவம் இடையே வேறுபாடு மறையும் நிலையும் உண்டாகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு அந்த கவலை இல்லை. 2025ஐ 2024ஐத் தாண்டிதான் கவனிக்கிறது. பிஜேபியில் யார் வேண்டுமானாலும் சேரலாம், ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-இல் அவ்வாறு முடியுமா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு இருப்பவர், பணி புரிந்தவர் முதலியவர்களையே கண்டுகொள்ளாத நிலையும் உண்டாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி: ஆர்எஸ்எஸ்ஸின் விரைவான வளர்ச்சி உண்மையில் இரண்டாவது சர்சங்கசாலக் எம்.எஸ்.சின் (குருஜி) ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை). ஏபிவிபி, விஎச்பி, பிஎம்எஸ், வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் டஜன் கணக்கான அமைப்புகளை நிறுவிய காலம் அது. அதன்பிறகு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது, மெதுவான அல்லது விரைவான வளர்ச்சிக் கட்டம் இல்லை. ஆர்எஸ்எஸ்-ன் ஈர்க்கப்பட்ட அமைப்புகள், நிச்சயமாக, அவற்றின் வளர்ச்சியின் கட்டங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக, ராமஜென்மபூமி இயக்கத்தின் காரணமாக 1980களில் VHP வேகமாக வளர்ந்தது; ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் சேவா பாரதி கடந்த இரண்டு தசாப்தங்களாக மிக வேகமாக வளர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் பின்னர் 2014 க்குப் பிறகும் வேகமாக வளர்ந்தது.

13-07-2023 அன்று கூட்டம் ஆரம்பம், படுகரின் வரவேற்பு: நீலகிரி மாவட்டம் உதகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் [The Rashtriya Swayamsevak Sangh’s Akhil Bharatiya Prant Pracharak Baithak (All-India Prant Pracharak Meeting)] 13-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 15-ந் தேதிவரை நடைபெற்று வருகிறது[4].  இந்த கூட்டத்தில் கலந்து கொள் வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார்[5]. அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது[6]. அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது[7]. இந்த வரவேற்பில் மகிழ்ந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பகவத் படுகர் சமுதாய மக்களுக்கு தனது அன்பான  வணக்கத்தை தெரிவித்தார்[8]. ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான இட்டுகல் ராஜேஷ் இந்த வரவேற்பு நிகழ்வை ஒருங்கிணைத்தார்[9].

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS  , Kathiravan V • HT Tamil, Jul 11, 2023 04:47 PM IST.

[2] https://tamil.hindustantimes.com/tamilnadu/annual-meeting-of-rss-pracharaks-to-be-held-in-ooty-131689073805904.html

[3] “The year 2025 is going to be the centenary year of the Sangh. Generally, we prepare a plan to expand the organisation every three years. From this point of view, it has been decided to take our work to mandal level. At present, out of 6,483 blocks in the country, there is Sangh work in 5,683 blocks. There is work in 32,687 mandals. Out of 910 districts, the Sangh has its work in 900 districts, 560 districts have five shakhas at district headquarter, 84 districts have shakhas in all mandals. We have thought that in the coming three years (by 2024), the Sangh work should reach all the mandals. There is also a plan to engage full-time workers during 2022 to 2025 for at least two years.”

[4] தினமணி, உதகையில் ஆர்எஸ்எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்!, By DIN  |   Published On : 14th July 2023 12:49 PM  |   Last Updated : 14th July 2023 12:49 PM.

[5] https://www.dinamani.com/tamilnadu/2023/jul/14/rss-reviwe-meeting-in-ooty-4037755.html

[6] மாலைமலர், ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ் தலைவருக்கு பழங்குடி மக்கள் உற்சாக வரவேற்பு, By மாலை மலர்,13 ஜூலை 2023 2:50 PM

[7] https://www.maalaimalar.com/news/district/tribal-people-give-enthusiastic-welcome-to-rss-leader-in-ooty-635605

[8] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்க்கு உற்சாக வரவேற்பு அளித்த படுகர் இன மக்கள், Velmurugan s, First Published Jul 14, 2023, 10:58 AM IST; Last Updated Jul 14, 2023, 10:58 AM IST

[9] https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/badugar-people-did-traditional-type-of-invite-to-rss-president-mohan-bhagwat-in-nilgiris-rxrtvl

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்க முலாம் பூசப் பட்ட செங்கோல் – செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

ஜூன் 18, 2023

பெரியார் முகம், தலை, உருவம் வைத்த தங்கமுலாம் பூசப் பட்ட செங்கோல்செக்யூலரிஸம் சொல்லி வாங்காமல் இருந்த சீதாராமையா, கர்நாடக முதல்வர்!

சித்தராமையா, கருணாநிதி ஒப்புமை: சித்தராமையா ஒரு பழுத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி, ஓரளவுக்கு கருணாநிதியை ஒப்பிடலாம். அந்த அளவுக்கு அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், போன்ற திறமைகளும் எதிர்வினை குணங்களும் கொண்டவர். இடத்திற்கு, ஆட்களுக்கு, கூட்டத்திற்கு ஏற்ப மாறுவார், நடந்து கொள்வார். அரசியலில் ஆதாயம் என்றால் எந்த வேலையையும் செய்வார். கோடிகள் செலவழித்து, பெங்களூரில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தினார். உண்மையில் காங்கிரஸுக்கு ஆதரவு திரட்டவே அம்மாநாடு நடத்தப் பட்டது. சோனியாவைத் தவிர எல்லா காங்கிரஸ் தலைவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் என்று திரண்டு வந்திருந்தனர்.. பெரியார் வேண்டும் என்றால் அதையும் பிடித்துக் கொள்வார். ஜூலை 2022 சென்னைக்கு வந்திருந்த பொழுது, பெரியார் திடலுக்குச் சென்று, பெரியார் சமாதிக்கு மாலை அணிவித்து, வணங்கி விட்டு சென்றார். பிறகு தனது டுவிட்டரில் புகைப்படங்களுடன் பதிவு செய்தார். பசவேஸ்வரர் என்றாலும் பிடித்துக் கொள்வார். திப்பு ஜெயந்தியும் நடத்துவார் அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். ஆகவே பெரியார் முகம், தலை, உருவம் பொறித்த செங்கோலை வாங்கவில்லை என்று புரட்டி-புரட்டி செய்திகள் போட்டிருப்பது தமாஷாக இருக்கிறது.

மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை செங்கோல் கொடுக்க தீர்மானித்தது: மதுரையில் உள்ள மக்கள் சமூக நீதி பேரவை கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், பெரியாரின் சிலை பொறிக்கப்பட்ட சமூக நீதிக்கான செங்கோலை 17-06-2023 சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருந்ததாக முன்பு தனியார் நாளிதழ் வெளியிட்டிருந்த நிலையில், அதனை சித்தராமையா வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. இப்படி ஊடகங்கள் இந்த கதையை ஆரம்பித்து சுழற்ற ஆரம்பித்தன. கர்நாடகாவில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வருக்கு, சமூக நீதி பேரவை தலைவர் மனோகரன், கணேசன் உள்பட 30க்கும் மேற்பட்டோர் 10 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்க திட்டமிட்டு இருந்தனர்[2]. மாலை 6 மணியளவில் சித்தராமையாவிடம் அவரது அலுவலகத்தில் செங்கோல் ஒப்படைக்கப்படும் என்று முன்பு கூறப்பட்டு இருந்தது[3]. முதல்வருக்கு செங்கோல் பரிசாக அளித்து, ஜனநாயகத்தில் சமூக நீதியை காப்பாற்றுவதை குறிப்பிட வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்[4]. இவர்கள் அவருக்கு சொல்லவேண்டிய தேவை என்ன என்று தெரியவில்லை[5]. ஆனால் அதனை அவர் வாங்க மறுத்தது பலருக்கு ஏமாற்றம் அளித்தது[6].

மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதால் மதசார்புள்ள சின்னமான செங்கோலை வாங்க முடியாது: 17-06-2023 அன்று கர்நாடக சென்ற சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் சித்தராமையாவை சந்தித்து, மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துவதாக கூறியுள்ளனர்[7]. அதோடு தாங்கள் எடுத்து சென்ற பெரியார் முகம் பொரித்த செங்கோலை வழங்கியுள்ளனர்[8]. அதனை வாங்க மறுத்த சித்தராமையா, “செங்கோல் என்பது அரச மரபை போற்றும் ஒன்று. அதனாலேயே பாஜக, நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை நாங்கள் எதிர்த்தோம்,” என்று விளக்கம் அளித்து, செங்கோலை வாங்க மறுத்தார்[9]. மதச்சார்பற்ற ஆட்சியை நடத்துகிறோம் என்றால், மதத்தை குறிக்கும் அடையாளமான செங்கோலையும் எதிர்க்கிறோம்[10]. இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு[11]. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம்[12]. ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார்[13]. அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்[14].

10 கிலோ எடையுள்ள இந்த பெரியார் தலை, முகம், உருவம் பொறிந்த, செங்கோலை யார் செய்திருப்பர்?: சீதாராமையா இதனை மதசார்புள்ள சின்னம் என்கிறார். இது விசித்திரமாக இருக்கிறது. பிறகு, அதைப் பற்றி பெரியாரிஸவாதிகள், பெரியார் குஞ்சுகள், பிஞ்சுகள், பெரியார் தொண்டர்கள் எல்லாம் யோசித்திருக்க மாட்டார்களா? 10 கிலோ எடைக்கு பணம் செலவழித்து தனை தயாரிக்க பொற்கொல்லர்களுக்கு சொல்லியிருப்பார்களா? 40 பேர் சேர்ந்து பெங்களூருக்குச் சென்றது, என்றெல்லாம் மொத்தமாக செலவு பார்த்தால் லட்சங்களில் செலவாகியிருக்கும். பிறகு அந்த அளவுக்கு யார் “ஸ்பான்ஸர்” செய்தது, அல்லது எப்படி செலவழிக்க முடியும்? ஆக அந்த அளவுக்கு செல்வம் மிக்க நிறுவனமாக, இயக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு கர்நாடகா முதல்வரால் என்ன ஆக வேண்டியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கர்பெரியார்திப்பு சுல்தான் சின்னங்கள் செக்யூலார் ஆகாது, செக்யூலரிஸம் என்றும் சொல்லிக் கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு ஒருவேளை லிங்காயத்து மடாதிபதி கொடுத்தால் நிச்சயம் வாங்கிக் கொள்வார். சோனியாவே அந்த மடாதிபதியைப் பார்த்து ஆசி பெற்றார். ஆக, கொடுப்பது யார் என்பதும் முக்கியமாகிறது. இங்கு பெயர் தெரியாதவர்கள் சம்பந்தமே இல்லாமல் சின்னங்களை உபயோகப் படுத்தி விளம்பரம் தேடும் யுக்தியினையும் கவனிக்கலாம். மேலும், நதிநீர் பிரச்சினை தமிழ்நாடு-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையில் தீர்வு ஏற்படாத நிலையில் உள்ளது. அரசியல் இந்த இரு மாநிலங்களை எதிரும்-புதிருமாகத் தான் வைத்திருக்கின்றன. இப்பொழுது மேகதாது அணை விவாகாரம் எழுந்துள்ளது. அந்நிலையில், அம்பேத்கர்-பெரியார்-திப்பு சுல்தான் என்று வைத்துக் கொண்டு செக்யுலார்- மதசார்பற்ற அரசு நடத்துகிறேன் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஊடகக் காரர்கள் ஊதிவிடும் செய்திகள்: ஊடகக் காரர்கள், இணைதள ஊடகக் காரர்கள், காபி அடித்து போடும் வகையறாக்கள், பிடிஐ போன்று அப்படியே காபி அடித்து போட்டு, தலைப்புகளை மட்டும் அதிரடியாக ஏதோ விசயம் இருப்பது போல போடுவர். படித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது. இதற்கென்று ஒரு 10 பேர் இருக்கிறார்கள். ஒரு செய்தி வந்து விட்டால் போதும், உடனே தலைப்பை பரப்பரப்பாக மாற்றி விருவிரு என்று போட்டு விடுவர். இவர்களுக்கும் மாத சம்பளம் கொடுத்து வைத்திருப்பார்கள் போலும். ஏனெனில், ஒரு பலன் கிடைக்காமல், எவனும், எந்த வேலையினையும் செய்ய மாட்டான். செங்கோல் செக்யூலரா-கம்யூனலா என்றால், அதைப் பற்றி தைரியமாக விவாதிக்க வேண்டும். ஆனால், திராவிகட்சிகள், செங்கோல் கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருக்கின்றன. இப்பொழுது மோடி செய்து விட்டார் என்பதால், எதிர்க்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தான் இத்தகைய சின்னங்கள் தேவைப் பட்டன, படுகின்றன. இப்பொழுது நடிக்கிறார்கள்.

 © வேதபிரகாஷ்

18-06-2023


[1] தமிழ்.ஏபிபி.லைவ், Periyar Sengol: பெரியார் சிலை பொறித்த செங்கோலை வாங்க மறுத்த சித்தராமையாகாரணம் என்ன?, By: ஜான் ஆகாஷ் |Published at : 18 Jun 2023 11:01 AM (IST),  Updated at : 18 Jun 2023 11:01 AM (IST).

[2] https://tamil.abplive.com/news/india/periyar-sengol-karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-sengol-engraved-with-periyar-statue-123751

[3] நியூஸ்7தமிழ், கர்நாடக முதலமைச்சருக்கு சமூகநீதி பேரவை சார்பில் பெரியார் உருவம் பொறித்தசெங்கோல், by Web EditorJune 17, 2023.

[4] https://news7tamil.live/scepter-engraved-with-periyars-image-on-behalf-of-social-justice-council-to-karnataka-chief-minister.html

[5] தமிழ்.ஒன்.இந்தியா, நாங்களும் தருவோம்ல.. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் செங்கோல் வழங்கும் தமிழ்நாடு அமைப்பு, By Mathivanan Maran Published: Saturday, June 17, 2023, 17:55 [IST]

[6] https://tamil.oneindia.com/news/bangalore/now-periyar-sengol-to-be-gift-to-karnataka-cm-siddaramaiah-517083.html?story=2

[7] தமிழ்.வெப்துனியா, பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?, Written By Siva Last Updated: ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:27 IST).

[8] https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-cm-siddharamaiya-refused-to-get-sengol-123061800010_1.html

[9] செய்திபுனல், பெரும் சர்ச்சைசெங்கோலை ஏற்க கர்நாடக முதல்வர் மறுப்பு, வினோத் குமார், 17-06-2023 09.41.40 மாலை.

[10] https://www.seithipunal.com/politics/karnataka-cm-refuses-senkol-with-periyar-statue

[11] தினத்தந்தி, பெரியார் முகம் பொறித்த செங்கோலை வாங்க மறுத்த கர்நாடக முதல்மந்திரி சித்தராமையா..!, தினத்தந்தி Jun 18, 9:26 am (Updated: Jun 18, 9:36 am)

[12] https://www.dailythanthi.com/News/India/karnataka-chief-minister-siddaramaiah-refused-to-buy-the-scepter-with-periyars-face-989009

[13] தமிழ்.ஒன்.இந்தியா, பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம்அவங்களுக்குதான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!, By Mathivanan Maran Published: Sunday, June 18, 2023, 10:45 [IST]

[14] https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-chief-minister-siddaramaiah-refuses-to-accept-periyar-sengol-517143.html

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யா-அமுதா மாவட்ட-அதிகாரி ஆட்சி-மாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

ஜூன் 4, 2023

ரம்யா மெர்சீயும் லீலா சாம்ஸனும், விநாயகர் சிலையும் –  ரம்யாஅமுதா மாவட்டஅதிகாரி ஆட்சிமாற்ற விவகாரத்தில் விநாயகர் சிலை இடம் பெயரப் பட்டதா இல்லையா?

விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து,  விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சி ரம்யா, பா.. நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.

ஊடகங்கள் மாறுபட்ட / முரண்பட்ட விதமாக செய்திகலை வெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகமா”  இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.

புதியதாக வந்தவர் தமது வேலையை விட்டு, இத்தகைய இடமாற்றம் வேலை செய்ய தேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].

“விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது” என்றால் பிறகு எப்படி பிரச்சினை ஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம்.  முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.

© வேதபிரகாஷ்

04-06-2023


[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டை ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலையை இடம் மாற்றியதாக சர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1001354-controversy-over-shift-of-vinayagar-statue-in-pudukottai-collector-camp-office.html

[3] நக்கீரன், விநாயகர் சிலை எங்கே? ஆட்சியரிடம் எகிறிய பாஜகவினர், பகத்சிங், Published on 03/06/2023 (18:17) | Edited on 03/06/2023 (18:41).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bjp-people-besieged-pudukkottai-district-collectorate/

[5] விகடன், புதுக்கோட்டை: முகாம் அலுவலகத்திலிருந்து விநாயகர் சிலை அகற்றப்பட்டதா?! – மாவட்ட நிர்வாகம் விளக்கம், மணிமாறன், .இரா, Published:Today at 9 AM Updated: 10 AM 51 mins.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/has-the-vinayagar-statue-in-the-pudukkottai-collectors-camp-office-been-removed

[7] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை உடைபட்டதாக வதந்தி: கலெக்டர் எச்சரிக்கை, June 3, 2023 20:55 IST

[8] https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukottai-district-collector-explained-about-vinayagar-statue-687010/

[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கைஆட்சியர் எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST

[10] https://tamil.asianetnews.com/tamilnadu/pudukottai-collector-warns-that-strict-action-will-be-taken-against-those-who-spread-false-news-about-the-removal-of-ganesha-statue-rvpozr

[11] சமயம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை உடைப்பு? – சாட்டையை சுழற்றிய கலெக்டர் மெர்சி ரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am

[12] https://tamil.samayam.com/latest-news/pudukkottai/pudukkottai-collector-warned-strict-action-will-taken-against-those-who-spread-false-news-about-pillaiyar-statue-in-collectorate/articleshow/100739106.cms

IUML – DMK கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது! அண்ணாவின், “இனம் இனத்தோடு சேரும்,” சித்தாந்தம், ஸ்டாலின் டுவிட்டரில் வெளிப்பட்டுள்ளது.

மே 8, 2021

IUML – DMK கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது! அண்ணாவின், “இனம் இனத்தோடு சேரும்,” சித்தாந்தம், ஸ்டாலின் டுவிட்டரில் வெளிப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோற்றதும், ஜவஹிருல்லா வென்றதும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் போட்டியிட்ட மூன்று இடங்களிலும் – கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் தோல்வியடைந்தது. உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல், தங்களது சின்னத்தினால் நின்றதால் தோல்வியடைந்தனர். ஆனால், ஜவஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்தது கவனிக்க வேண்டும். சிலர் ஜவஹிருல்லாவை விமர்சித்தாலும், வெற்றி பெற்றது நிதர்சனம் ஆகிறது. மேலும், சபாநாயகராக நியமிக்கப் படுவார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, அப்படி செய்யப் பட்டால், இவர் மீதான வழக்குகள், அரசியல் ரீதியில் நீர்க்கப் பட்டு விடும்.

SDPI,  AIMIM, அம்மா.முக கூட்டு யாரை தோற்கடிக்க வைத்தது?: டிடிகே.தினகரனுடன் கூட்டு வைத்துக் கொண்ட அஸாசுதீன் ஒவைஸி – AIMIM கட்சியினரும் தோல்வியடைந்தனர் –  

  1. டி.எஸ். வகீல் அஹ்மது, வாணியம்பாடி (T.S. Vakeel Ahmed contested in Vaniyambadi),
  2. அமீனுல்லா, கிருஷ்ணகிரி (Ameenualla in Krishnagiri),
  3. முஜிபூர் ரஹ்மான், சங்கராபுரம் (Mujibur Ragiman in Sankarapuram)

அஸாசுதீன் ஒவைஸளாம்பூருக்கு வந்து, உருதுவில் பேசி, பிரச்சாரம் செய்தும், அங்குள்ள முஸ்லிம்கள் இவர்களுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். ஆக, இங்கெல்லாம் முஸ்லிம்கள் தோல்வியடையவில்லை, வெல்லும் குதிரைகளுக்கு ஓட்டளித்துள்ளனர் அல்லது ஏற்கெனவே திட்டமிட்டு, திமுக கூட்டணி வெல்லாமல் இருக்க இவ்வாறு செயல்பட்டனர் என்றாகிறது..

தோல்வியடைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொஹிதீன் ஸ்டாலினை பாராட்டியது: தலைவர் காதர் மொஹிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், சாதுர்யமாக, சாமர்த்தியமாக ஸ்டாலினைப் போற்றி, 07-05-2021 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உண்மையினை எடுத்துக் காட்டியுள்ளார். முதன் முதலில், காமராஜர் தான், ஒரு முஸ்லிமுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். பிறகு, அந்த வழக்கம் பின்பற்றப் பட்டது. அண்ணா-கருணாநிதி வழி வந்த ஸ்டாலினும், இரு முஸ்ம்களை மந்தியாக்கியுள்ளார்[1]. தந்தையின் வழியில் தப்பாமல் செல்லும் தனயன் என்னும் பேர் பெற்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கலும் தனது தந்தையின் வழிநின்றுளைரனு முஸ்லிம்களுக்கு தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளது என்று கூறியுள்ளார். இதனால், அவரும், சம்பிரதாயத்தை மறக்காமல் பின்பற்றியுள்ளார்[2]. சரியான தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவராக, ஸ்டாலின் விளங்குகிறார் என்றெல்லாம்  என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஆவடி சா.மு.நாசர் [S M Nasar – Minister for Milk & Dairy]: அமைச்சரை வீழ்த்திய வேட்பாளருக்கு கட்சி தலைமை அமைச்சர் பதவி கொடுத்து கவுரவிக்கும் என்கிற பொதுவான செண்டிமெண்ட் ஒன்று இருக்கிறது[3]. தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் ஆவடி தொகுதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வசிக்கும் தொகுதியாக ஆவடி இருக்கிறது. ராணுவத்திற்கு பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலையும், ராணுவ வீரர்களுக்கான ஆடை தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மையம் இங்கு அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும், விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் அமையப்பற்றது ஆவடி[4]. பால்வளத்துறை அமைச்சராகும் சா.மு. நாசர் (61) ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள சா.மு.நாசருக்கு பாத்திமா கனி என்ற மனைவியும், ஆசிம் ராஜா என்ற மகனும் உள்ளனர். ஆவடி சட்டமன்ற தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டுள்ளார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை வீழ்த்தி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

செஞ்சி கே.எஸ். மஸ்தான் [Gingee K S Masthan – Minister for Minorities Welfare and Non Resident Tamils Welfare – Minorities Welfare, Non Resident Tamils Welfare, Refugees & Evacuees and Wakf Board]: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவுள்ள செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (66) விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். இவருக்கு சைத்தானி பீ மஸ்தான் என்கிற மனைவியும் கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான் என்கிற மகனும், மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா என்கிற மகளும் உள்ளனர். செஞ்சி தேசூர் பாட்டையில் வசித்து வருகிறார். தொடர்ந்து திமுக விசுவாசியாக, பல பொறுப்புகளில் இருந்து வேலை செய்துள்ளார்.

பெரும்பாலான முஸ்லிம், கிருத்துவத் தலைவர்கள், நிறுவனங்கள் வாழ்த்து சொல்லியிருப்பது:  இது ஒரு சாதாரணமான, வழக்கமாக, ஏதோ மரியாதை நிமித்தம் செய்யப் பட்டது இல்லை.

  • ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி,
  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், ஊவா மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான செந்தில் தொண்டமான்,
  • சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,
  • மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
  • தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன்,
  • தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார்,
  • அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணி அரசன்,
  • இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப்,
  • சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்,
  • காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன்,
  • தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம்-கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம்,
  • தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி, தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் அறம் அருண்,
  • இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சி.கே.ரங்கநாதன்,
  • தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம்,
  • அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்,
  • ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்கள் தோல்வியடைந்து, வென்றுள்ளது திட்டமே: முஸ்லிம் கட்சிகள் பிரிந்து கிடப்பது காட்சியளித்தாலும், ஓட்டளிப்பதில், அவர்கள் கட்டுண்டுள்ளனர்.

  1. ஒவைசியை, மஸ்தான் இதயங்களை இணைப்போம் மாநாட்டிற்கு அழைத்து, ஜகா வாங்கியது, முக்கியமான நிகழ்வு. அந்த மஸ்தான் இப்பொழுது மந்திரியாகியுள்ளார்.
  2. குறைந்த வாக்குகளைப் பெற்ற நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக, ஐஜேகே, ஓவைசி உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகளாகவும் போட்டியிட்டவர்கள் பல இடங்களில் தங்களது வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
  3. ஆகவே, வெல்ல மாட்டோம் என்று தெரிந்தும், இவை கூட்டணி அமைத்து, தேர்தலில் களம் கண்டன. இதனால், திமுக எதிர்ப்பு மற்றும் அதிமுக ஆதரவு ஓட்டுகள் சிதறின.
  4. பல இடங்களில் அமமுக மற்றும் அதிமுக ஓட்டுகளை சேர்த்தால், திமுக் ஓட்டுகளை விட அத்கமாக வருகிறது.
  5. இதே போலத்தான் மக்கள் நீதி மய்யம், பிஜேபி ஆதரவு ஓட்டுகளை உடைத்துள்ளது.
  6. அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம், திமுகவின் பி-டீமாக வேலை செய்து வெற்றி பெற செய்துள்ளது.
  7. ஐஜேகே / பச்சமுத்து, தனது வியாபாரத்தை காத்துக் கொள்ள திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது. வேலூர் இஞ்னியைங் குழுமம் விஸ்வநாதனும் அவ்வாறே செய்துள்ளார். முன்னர் இவர்கள் பிஜேபியுடன் இருந்தனர். இதற்கு பிரஷாந்த கிஷோர் ஆலோசனை கொடுத்தாரா என்று தெரியவில்லை.
  8. ஐஜேகே அட்மிஷன் வியாபாரத்திற்கு உதவுவதால் தொடர்ந்து இருக்கும். ஆனால், மக்கள் நீதி மய்யம் மறைந்து விடும்.
  9. தோல்வியுற்ற காதர் மொஹிதீன் அபாரமாக புகழ்ந்தது, ஆற்காடு நவாப் செக்யூலரிஸமாக வாழ்த்து தெரிவித்தது எல்லாமே, இதில் சேரும்.
  10. திராவிடத்துவம் அதனால், அண்ணாவின், “இனம் இனத்தோடு சேரும்,” சித்தாந்தத்தில், போலித்தனமாக, ஸ்டாலின் டுவிட்டரில் வெளிப்பட்டுள்ளது.

 © வேதபிரகாஷ்

08-05-2021


[1] Times of India, IUML president lauds Stalin for inducting two Muslims into his cabinet, R Gokul / TNN / May 7, 2021, 18:11 IST.

[2] https://timesofindia.indiatimes.com/city/chennai/iuml-national-president-lauds-stalin-for-inducting-two-ministers-from-muslim-community/articleshow/82457244.cms

[3] டாப்.தமிள்.நியூஸ், சா.மு. நாசருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?, By, kathiravan, 06/05/2021 5:53:56 PM

[4] https://www.toptamilnews.com/255540how-did-nasser-become-a-minister/

திமுக திட்டத்துடன் செயல்பட்டது.
12% வாக்கு வங்கியை வைத்து, 7 எம்.எல்.ஏக்கள், இரண்டு மந்திரி பதவிகள் பெற்றது.

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [1]

செப்ரெம்பர் 11, 2018

பாண்டி இலக்கிய விழாவும், தீடீர்இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்! [1]

PondyLitFest-dates

பாண்டி லிட்பெஸ்ட்என்ற பாண்டி இலக்கிய விழா: “பாண்டி லிட்பெஸ்ட்” என்ற பெயரில் பல தனிப்பட்ட நிறுவனங்களின் ஆதரவில், இலக்கிய கொண்டாட்ட விழா ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 தேதிகளில் புதுச்சேரியில் நடைப்பெற்றது[1]. நிகழ்ச்சி நிரலை இங்கு பார்க்கலாம்[2]. இதை ஆதரிக்கும் நிறுவனங்களை இங்கு பார்க்கலாம்[3]. புதுச்சேரி இலக்கிய விழா பற்றி கேட்டபோது, பங்கு கொண்ட இந்துத்துவவாதிகள் வழக்கம்போல, திமிருடன் அகம்பாவத்துடன் பதில் கொடுத்தனர். பிறகு, அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். சித்தாந்த ரீதியில் போராடும் போது, எதிர்-சித்தாந்தவாதிகளையும் வரவேற்று கலந்துரையாட வேண்டும், எங்கு இயைந்து போகிறோம் என்றுப் பரீசித்துப் பார்க்கலாம். ஆனால், இங்கோ முழுக்க-முழுக்க வலதுசாரி-இந்துத்துவவாதிகள் கலந்து கொண்டு ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டுள்ளனர். அந்தந்த விசயத்தில் திறமை, அனுபவம், ஞானம் உள்ளவர்களை அழைக்காமல், தங்களுக்கு வேண்டியவர்கள் என்ற ரீதியில், விழாவில் சேர்த்துள்ளனர். அவர்களில் பாதிக்கு மேல், எந்த இலக்கிய மாநாட்டிலும் காணப்படாதவர்கள். பிஜேபி, ஆர்எஸ்எஸ் மற்றும் தொடர்புடைய அரசியல்வாதிகள் பரிந்துரையில் அவர்கள் சேர்க்கப் பட்டனர். பிஜேபி ஆட்சியில் இருக்கிறது என்று புதியதாகத் தோன்றி மறைந்து விடுவது வலுவான சித்தாந்தம் இல்லை, அவர்களும், அத்தகைய போராளிகளாகத் தான் இருக்கின்றனர்.

All against RIGHT - The Hindu

தி பாண்டி லிட் பெஸ்ட்நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் எதிர்ப்பு[4]: மாநாட்டில் வலது சாரி சிந்தனையாளர்களைப் பங்கேற்க செய்வதாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், சிபிஐ (எம்-எல்), திராவிடர் கழகம் ஆகியவை அறிவித்தன. இந்நிலையில் எழுத்தாளர்களும் இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், பா.செயப்பிரகாசம், ரவிக்குமார், மாலதி மைத்ரி உட்பட பலரும் இவ்விழாவை புறக்கணிக்க வலியுறுத்தினர். இந்நிகழ்வுகள் புதுச்சேரி மண் சார்ந்த கலை இலக்கியத்தையோ, தமிழ் கலை இலக்கியத்தையோ பிரதிபலிக்கவில்லை. “இந்நிகழ்வு முழுக்க ஆர்எஸ்எஸ், இந்துத்துவா, சங்கப்பரிவாரங்களின் கருத்தியல் பிரச்சாரத்துக்கு தளம் அமைப்பதாகவே உள்ளது. நிகழ்வில் பங்கேற்போர் இந்துத்துவ அமைப்புகளிலும், வலதுசாரி அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயல்படுவோராக இருக்கின்றனர். புதுச்சேரியில் நிலவும் சமூக நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் இந்நிகழ்வு சீர்குலைத்து விடும் என்று அஞ்சுகிறோம். இந்நிகழ்வை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்[5]. ஆனால், மாநாட்டை ஆதரித்தவர்[6], “மாநாட்டில் 50 சதவீத புதுவை எழுத்தாளர்கள் மற்றும் அமிஷ்திரிபாதி, கிட்டுரெட்டி, மைக்கேல் டேனியோ, பஞ்சாங்கம் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மேலும் 35 புத்தகங்கள் வெளியாகின்றன. நாளொன்றுக்கு 12 நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு. அரசியலுக்கு தொடர்பில்லை. எழுத்தாளர்கள், இலக்கிய கலாச்சாரத்துக்காகவே இந்த மாநாடு நடக்கிறது,” என்றனர்[7].

PondyLitFest-Alliance Francaise clarification

பிரெஞ்சு தூதரகம் விலகிக் கொண்டது: “பாண்டி லிட்பெஸ்ட்” பொறுத்தவரை, பிரெஞ்சு தூதரகம் [Alliance Française Foundation, the parent body of its venue partner] அதனை தனது வளாகத்தில் நடத்துவாக இருந்தது. ஆனால், இத்தகைய ஒருதலைப்பட்ச கூடுதலாக மாறிவிட்டதால், இதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. நடந்தப்படும் நாடுகளின் அரசியல் மற்றும் மதசம்பந்த விசயங்களில் தலையிட விரும்பவில்லை என்ற பொறுப்புள்ளது என்றும் அறிவித்தது[8]. அதாவது, இந்த அமர்வுகளில் அரசியல், சமயம் முதலியவற்றைச் சார்ந்த விசயங்கள் அலசப் படுவதால், பிரெஞ்சு அரசு சார்புடைய அந்த நிறுவனம் அவ்வாறு அறிவித்தது. பிறகு நிகழ்ச்சி நடக்கும் இடம் மாற்றப்பட்டது. அரவிந்தர் பக்தர்களை வைத்துக் கொண்டு, ஒப்பேற்றிது போல தெரிகிறது. மைக்கேல் டேனினோ போன்றவர், அரவிந்த பக்தராக உள்ளார், எழுதுகிறார். இப்பொழுது [என்டிஏ ஆட்சிக்கு வந்த பிறகு], “விசிடிங் புரொபசர்” நிலையைப் பெற்றுள்ளார். அதாவது, நாளைக்கு ஆட்சி-அதிகாரம் இல்லை என்றால், பதவி இல்லை என்ற நிலையில் சித்தாந்திகள் வேலை செய்யக் கூடாது.

PondyLitFest-participants-1

உண்மையான சித்தாந்த போராளி திடீரென்று தோன்றி மறைய மாட்டான்: சரித்திர ரீதியில் விவதங்கள் நடந்தன. சரித்திரம் எப்படி மாற்றி எழுதப் படவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இங்கு வந்துள்ளதாக குறிப்பிட்டவர்களை IHC, SIHC, TNHC, etc போன்ற எந்த சரித்திர மாநாடுகளுக்கு வந்துள்ளதாகவோ, ஆய்வுக் கட்டுரை வாசித்ததாகவோ தெரியவில்லை [பொரபசர் வெங்கட ரகோத்தமன் தவிர]. சித்தாந்த போராளி எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் / இல்லாவிட்டாலும், கலந்து கொள்வான், தனது கருத்தை / கவிதையை தைரியமாகச் சொல்வான். தொடர்ந்து அவன் சென்று கொண்டிருப்பான், தனியாகக் கூட போராடி வருவான், ஏனெனில் அத்தகையோர் பணம், விருது, அதிகாரம் பார்த்து போவதில்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தனை வருடங்கள் இல்லாமல், இப்பொழுது திடீரென்று இவர்கள் எப்படி தோன்றியுள்ளார்கள் என்று தெரியவில்லை.

PondyLitFest-continued despite Vajpayee demise

வாஜ்பேயி இறந்தாலும், நாங்கள் இலக்கிய விழா நடத்துவோம் என்று நடத்தப்பட்ட விழா: 16-08-2018 அன்று வாஜ்பாயி இறந்தாலும், பிடிவாதமாக கொண்டாடினர். “பிரமாண்டமான துவக்க விழா” மட்டும் நடப்பதை தவிர்ப்பதாக அறிவித்தனர். இலக்கியவாதிகள் இவ்வாறா இலக்கிய அஞ்சலி செல்லுத்துவார்கள் என்று மற்றவர் திகைத்தனர். அதிகமாக வலதுசாரிகள் இருப்பதை, அடுத்த வருட விழாவில் சரி செய்வோம் பலதர கருத்துகளை ஏற்போம் என்பதே, விவகாரத்தைக் காட்டி விட்டது. எத்தனை ஆசைகாட்டினாலும், செம்மொழி மாநாட்டில் நொபுரா கராஷிமா கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத் தக்கது. சித்தாந்தம் பேசுபவர்கள் தத்துவம் பேச மாட்டார்கள், “திங்-டாங்க்” என்று தம்பட்டம் அடிப்பவர்கள் மற்ற செமினார்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆரியர் பற்றிய விவாதம் எல்லாம் அரைத்த மாவை அரைக்கும் தோரணையில் இருந்தது. உதாரணத்திற்கு, “ஹர்பன் நக்சல்” பற்றிய உரையாடல், தெரிந்த விவரங்களாகவே இருந்தன[9]. டீ, காபி, புகையிலை, திருட்டுத் தனமாக கஞ்சா போன்ற விவகாரங்களில் பலரின் பங்கு இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் ஆரமொஇத்து வைக்கப் பட்ட “கூட்டுக் கொள்ளை” இன்றும் தொடர்கிறது. அரசு அதிகாரிகள், அரசுசாரா நிறுவனங்கள், கிருத்துவ மிஷினரிகள், வேலையாட்களைக் கட்டுப் படுத்தும் தாதாக்கள், என்று பலவுள்ளன. இவற்றை நீக்காமல், ஒன்றும் செய்யமுடியாது.

© வேதபிரகாஷ்

09-09-2018

All against RIGHT - but could not do against LEFT

[1] http://pondylitfest.com/index.php

[2] http://pondylitfest.com/events.php

[3] http://pondylitfest.com/index.php – eventpartners

[4] தி.இந்து, ‘தி பாண்டி லிட் பெஸ்ட்நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் எதிர்ப்பு: முதல்வர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க எழுத்தாளர் ரவிக்குமார் வலியுறுத்தல், செ.ஞானபிரகாஷ், புதுச்சேரி, Published : 16 Aug 2018 19:17 IST; Updated : 16 Aug 2018 19:17 IST

[5] https://tamil.thehindu.com/tamilnadu/article24707228.ece

[6] மாலைமலர், புதுவையில் எழுத்தாளர்கள் மாநாடுமத்திய மந்திரி ஸ்மிருதிராணி தொடங்கி வைக்கிறார், பதிவு: ஆகஸ்ட் 11, 2018 15:39.

[7] https://www.maalaimalar.com/News/District/2018/08/11153931/1183208/Writers-Conference-in-Pondicherry-central-minister.vpf

[8] The Alliance Française Foundation said in a press release on Wednesday that it regretted that the event had been announced “as organised in partnership” with its branch in Puducherry. It said that it was not judging the appropriateness or quality of the event. But it emphasised that the organisation had “an obligation of non-interference in political and religious discources of the host countries” in which it operated, and upheld the “values of tolerence and neutrality”. It said that the main objective of Alliance Françaises network has always been to teach French language and to promote Indo-French cultural exchanges.

Scroll.in, Left demand to cancel ‘right-wing’ Pondy Lit Fest sparks fresh debate on free expression, by  Harsimran Gill, Published Aug 17, 2018 · 07:30 am

https://scroll.in/article/890722/controversy-around-pondy-lit-fest-sparks-fresh-debate-on-free-expression

[9] PondyLitFest, Urban Naxals- Nationals, Anti-Nationals and the rest of us, Published on Aug 22, 2018; https://www.youtube.com/watch?v=7JlCQlwnhUQ

“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (2)

திசெம்பர் 17, 2017

பெண் குளிப்பதை பார்த்தார்என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (2)

The Hindu-tamil-reports- gov.convoy killed

கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா? இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2].  பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டியே, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

Ungal news-15-12-2017

கற்பனை செய்தியின் வர்ணனைகருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையும் மீறி ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].

Governor visit to Caddalore- 15-12-2017-Troll trousers

கற்பனை செய்தியின் வர்ணனைநடப்பது பாஜக ஆட்சி, அதனால் கிருஷ்னர் முறையைக் கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும். மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].

Ungal news-15-12-2017-2

கற்பனை செய்தியின் வர்ணனைகண்னைத் துடைத்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].

Anti Gov, ant-modi to anti-hindu attitude

இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெருக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்கள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.

© வேதபிரகாஷ்

16-12-2017

Governor visit to Caddalore- 15-12-2017-webduniya

[1] தி.இந்து, கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்,, Published :  15 Dec 2017  21:24 IST; Updated :  15 Dec 2017  21:24 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article21715911.ece

[3] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[4] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

[5] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[6] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

[7] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[8] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

ஜூலை 9, 2017

போலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: சேரமான் பெருமாள் கட்டுக்கதை (2)

 PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

மோடியின் பரிசளித்தல்நட்புறவு யுக்தி: நிச்சயமாக மற்ற பிரதம மந்திரிகளை விட மோடி வித்தியாசமாக, சாதுர்யமாக, நட்புறவுகளை வளர்த்து கொள்ள பாடுபட்டு வருகிறார். அனைத்துலக தலைவர்களும் அவரை, மிக்க அக்கரையுடன், ஜாக்கிரதையுடன், கவனத்துடன் அணுகி வருகின்றனர். பரிசுகள், நினைவு-பரிசுகள் கொடுப்பதிலும் மோடி மிகவும் அக்கரையுடனும், கவனத்துடனும், சாதுர்யமாக செயல்பட்டு வருகிறார்[1].  இவற்றை கீழ் காணும் உதாரணங்களிலிருந்து அறியலாம்[2]:

  1. 2014ல் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு ஷாலை பரிசாக அனுப்பி வைத்தார்.
  2. நவாஸ் செரிப்பின் பேத்தியின் திருமணத்திற்கு ரோஸ் கலர் டர்பனை அனுப்பி வைத்தார்.
  3. இரான் தலைவர் சையத் அலி காமெனேயை சந்தித்த போது, 7ம் நூற்றாண்டு கூஃபி லிபியில் எழுதப்பட்ட குரானின் கையெழுத்துப் பிரதியை பரிசாகக் கொடுத்தார்.
  4. உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி, இஸ்லாம் கரிமோவை சந்தித்தபோது, அமிர் குர்சுவின் சித்திரத்தின் நகலை பரிசாகக் கொடுத்தார்.
  5. 2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தார்[3].
  6. டொனால்டு டிரம்பை சந்தித்தபோது, வெள்ளி வளையல் மற்றும் ஷாலைப் பரிசாகக் கொடுத்தார்.

Modi twitter on Cheraman mosque 2016

இதில் உள்ள அனைத்துலக அரசியல், நட்புறவு, வியாபாரம் முதலியவை ஒருபக்கம் இருந்தாலும், கேரளா சம்பந்தப்பட்ட “நினைவு பரிசுகள்” திடுக்கிட வைக்கின்றன.  2016ல் சவுதி அரேபிய அரசர் சல்மானை சந்தித்தபோது, சேரமான் பெருமாள் மசூதியின் மாதிரியை பரிசாகக் கொடுத்தது, விசித்திரமாக இருந்தது. இப்பொழுது, இஸ்ரேல் விசயத்தில் இவ்வாறு உள்ளது. இனி யூத செப்பேடுகளின் பின்னணியைப் பார்ப்போம்.

Marthoma cyrch, thiruvalla- copper plates-1

இதன் சரித்திரப் பின்னணி, உண்மைகள்: கேரள மாநிலத்தைப் பொறுத்த வரையிலும், சரித்திர ஆதாரத்துடன் கூடிய சரித்திரம் இடைக்காலத்திலிருந்து தான் தெரியவருகிறது. அதிலும், பெரும்பாலான விவரங்கள் போர்ச்சுகீசியர் போன்றவர் தங்களது “ஊர் சுற்றி” பார்த்தது-கேட்டது போன்றவற்றை எழுதி வைத்துள்ளவற்றை வைத்துதான் “சரித்திரம்” என்று எழுதி வைத்துள்ளனர். மற்றபடி, புராணங்கள், “கேரளோ உத்பத்தி” [17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்] போன்ற நூல்கள் மூலமாகத்தான், இடைக்காலத்திற்கு முன்பான “சரித்திரத்தை” அறிய வேண்டியுள்ளது. கேரள கிருத்துவ மற்றும் முகமதியர்களின் ஆதிக்கத்தினால், உள்ள ஆதாரங்கள் மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு, புதியதாக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள், செப்பேடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வைத்து, கட்டுக்கதைகளை உருவாக்கில் போலி சரித்திரத்தை எழுதப்பட்டு வருகிறது. இதற்காக கேரள கிருத்துவ மற்றும் முகமதிய செல்வந்தர்கள், அயநாட்டு சக்திகள், கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வருகிறது. சமீபத்தைய “பட்டினம்” அகழ்வாய்வுகள் அத்தகைய மோசடிகள் பல வெளிக்காட்டியுள்ளன. இருப்பினும் கேரள சரித்திராசிரியர்கள், அகழ்வாய்வு வல்லுனர்கள் முதலியோர் இம்மோசடிகளைப் பற்றி, அதிகமாக பேசுவதில்லை, விவாதிப்பதில்லை.

Marthoma cyrch, thiruvalla- copper plates-2

இப்பொ ழுது, இவ்விகாரத்தில் கூட,

  1. 9-10ம் நூற்றாண்டுகளில் இச்சேப்பேடுகள் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
  2. “இந்து அரசர்” பெயர் குறிப்பிடப்படவில்லை.
  3. ஆனால் அந்த அரசர் சேரமான் பெருமாள் என்று முதலில் அடையாளம் காணப்பட்டது. பிறகு, அத்தகைய அரசனே இருந்ததில்லை என்றும் கேரள சரித்திராசிரியர்கள் எடுத்துக் காட்டினர்[4].
  4. பிறகு, அந்த அரசர், பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்.
  5. ஜோசப் ரப்பன் கதையும் அத்தகைய நம்பிக்கைக் கதையே, அதாவது, சரித்திர ஆதாரம் இல்லை.How Ceraman myth is promoted in Kerala by the vested groups
  6. யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது என்றுதான், இப்பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. ஆகவே, ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுதான், இத்தகைய கட்டுக்கதைகளை உருவாக்கி, பின்னர், காலத்தை பின்னோக்கித் தள்ள, உள்ளூர் ஆதாரங்கள், கட்டுக்கதைகள் முதலியவற்றுடன் இணைத்து மோசடி செய்து வருகின்றனர்.
  8. சேரமான் பெருமாள் விசயத்தில், முகமதியர்களின் மோசடிகள் அவ்வாறுதான் வெளிப்பட்டன என்பது கவனிக்கத் தக்கது.
  9. சேரமான் கட்டுக்கதைகளுக்கு எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. மேலும் அக்கதைகளை, இன்றைய ஆசார முகமதியம், வஹாபி அடிப்படைவாத இஸ்லாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் கேவலமாம கட்டுக்கதைகளில், இஸ்லாம் “நான்காவது வேதம்” என்று குறிப்பிடப்படுவதும் நோக்கத்தக்கது!
  10. ஆக, கேரளாவில், இந்துக்கள் அல்லாதவர்கள் எல்லோருமே சேரமான் பெருமாள், ஒரு இந்து ராஜா என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மோசடிகளை செய்து வருவதை கவனிக்கலாம்.

How Ceraman myth is promoted

சேரமான் பெருமாள் கட்டுக்கதைகள்: கேரளக் கட்டுக்கதைகளில், அடிக்கடி தோன்றும் ஒரு புனையப்பட்ட பாத்திரம் சேரமான் பெருமாள் தான். கேரளோத்பத்தியில் 25 சேரமான் பெருமாள்கள் மற்ற கதைகளில் 12 சேரமான் பெருமாள்கள் என்று விவரிக்கப் பட்டுள்ளதால், அப்பாத்திரம், ஒரு சுத்தமான கற்பனை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆளும் தெரியாது, அவனது காலமும் தெரியாது, என்ற நிலையில் சரித்திர ரீதியில் யாரும் அதனைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அந்த போலி-கற்பனை பாத்திரத்தை வைத்து, கிருத்துவர்-முஸ்லிம்கள் மாற்றி-மாற்றி கதைகளை தயாரித்து வருகின்றனர். முஸ்லிம்களின் கட்டுக்கதைகளின் படி, சேரமான் பெருமாள், கொடுங்கலூரின் ராஜா. அவன் கனவில், சந்திரன் இரண்டாகப் பிரிவது போலவும், அதில் ஒரு பாதி பூமியின் மீது விழுவது போலவும் ஒரு காட்சி கண்டானாம். இது மொஹம்மது கண்ட காட்சி என்பது முகமதியருக்கு நன்றாகவே தெரியும்[5]. அப்பொழுது, அரேபிய தீர்த்த யாத்திரிகர்கள், கொடுங்கலூர் வழியாக, ஆதாம் மலையுச்சிற்கு சென்று கொண்டிருந்தனராம். ராஜாவின் விசித்திரக் கனவை அறிந்த அவர்கள், அது அவனை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீக அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விளக்கம் கொடுத்தனராம். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் மெக்காவுக்குச் செல்ல ஒரு கப்பலை ஏற்பாடு செய்யுமாறுக் கேட்டுக் கொண்டானாம்[6]. மொஹம்மதுவை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டானாம். ஹத்ரமாவ்த் [Hadramawt] என்ற இடத்திற்கு சென்று, சுன்னத் செய்து கொண்டு, துலுக்கன் ஆகி, அங்கேயே தங்கிவிட்டானாம். மாலிக் பின் தீனார் [Malik ibn Dinar] என்பவனின் சகோதரியை மணந்து கொண்டானாம். அங்கு மதத்தைப் பரப்பி, கேரளாவுக்குத் திரும்ப விழைந்தானாம்[7]. அப்பொழுது, இறந்து விட்டதால், அவன் சிஹிர் [Shihr] என்ற ஹத்ரமாவ்த்தில் இருந்த துறைமுகம் அருகில் அல்லது அதற்கு பக்கத்தில் இருந்த ஜஃபர் [Zafar] என்ற இடத்தில் புதைக்கப் பட்டான் என்றும் கதைகள் சொல்கின்றன. அவன் இறப்பதற்கு முன்னர் தலைமையில் மிஷனரிகளை மலபாருக்கு, இஸ்லாமாகிய நான்காவது வேதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தானாம்[8].

© வேதபிரகாஷ்

09-07-2017

A chola painting 11th cent. depicting the ascension of Cheraman Perumal and Sundarar to kailisa

[1] Firstpost, PM’s flair gift diplomacy shows he’s a thoughtful guest, July.5, 2017. 17.00 IST.

[2] http://www.firstpost.com/india/narendra-modi-in-israel-pms-flair-gift-diplomacy-shows-hes-a-thoughtful-host-a-gracious-gu

[3] http://www.narendramodi.in/pm-modi-presents-king-salman-bin-abdulaziz-al-saud-a-gold-plated-replica-of-the-cheraman-juma-masjid-in-kerala-439914

[4] According to Sreedhara Menon, “The Cheraman legend is not corroborated by any contemporary record or evidence. None of the early or medieval travelers who visited Kerala has referred to it in their records. Thus Sulaiman, Al Biruni, Benjamin of Tuleda, Al Kazwini, Marco Polo, Friar Odoric, Friar Jordanus, Ibn Babuta, Abdur Razzak, Nicolo-Conti – none of these travelers speaks of the story of the Cheraman’s alleged conversion to Islam”.

[5] இத்தகைய கட்டுக்கதைகளை இன்றும் நம்புவார்களா- இன்றைய முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை.

[6] கப்பற்துறையில் இந்தியா சிறந்து விளங்கியபோது, ஒரு கேரள மன்னன், அரேபியரிடத்தில், இவ்வாறு கேட்பதாக குறிப்பிடுவதே கேவலமானது, அபத்தமானது.

[7]  இதுவரை, சித்தர் ராமதேவர் / யாக்கோபு கட்டுக்கதை போலவே உள்ளது. ராமதேவர், சதுரகிரிக்கு [இந்தியாவுக்கு] திரும்ப வந்து விடுகிறார்.

[8]  R. E. Miller, Mappila Muslims of Kerala, Orient Longman, 1976, Madras,op. cit., pp. 46-9.PM Modi gifted Saudi Arabia's King Salman a replica of Cheraman Juma Masjid. Image courtesy- www.narendramodi.in

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா? (12)

ஜூன் 28, 2017

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களாஇல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா? (12)

Voltaire appreciated Vedas

போலிஏஸுர் வேதம்உருவாக்கியதி எல்லீஸ் மாட்டிக் கொண்டது எப்படி?: போலி “ஏஸுர் வேதம்” உருவாக்கியதில் ஐரோப்பியர்களுக்கு பெரிய பிரச்சினை, அசிங்கம் ஏற்பட்டது. ஏனெனில், வோல்டேர், அவருக்குக் கிடைத்த அந்த போலி “ஏஸுர் வேதவத்தை” உண்மை என்று நம்பி, பாராட்டி எழுதி விட்டார்[1]. அதனால், இந்தியவியல் வல்லுனர் மற்றும் கிருத்துவ மிஷினரிகளுக்குள் கருத்து வேறுபாடு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறுதல், கள்ள ஆவணத்தை உண்டாக்கியவர் என்றெல்லாம் மோதல்கள் ஏற்பட்டன. “ஏஸுர் வேதம்” நொபிலி தயாராத்தால், எல்லீஸார் விட்டுவிடுவாரா என்ன? அதில் எல்லீஸ் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டார். ஆமாம், அவரும் அத்தகைய தயாரிப்பில் ஈடுபட்டார். எல்லீஸ் ஏசுர் வேதம் என்ற என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கியதாக, தாமஸ் ட்ரௌட்மேன் எடுத்துக் காட்டுகிறார். அதே நேரத்தில், பீட்டர் ஆர். பச்சனன், தன்னுடைய புத்தகத்தில், “பாதிரி எல்லீஸ்: 1822ல் நவீன போலியான வேதங்கள் மற்றும் உண்மையான புத்தங்களைப் பற்றிய விவரங்கள்”, என்று அடிக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[2].

Ezourvedam - Ludo Rocher

யஜுர் வேதம்மற்றும் யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda]: “யஜுர் வேதம்” [Yajur Vedam] நான்கு வேதங்களில் ஒன்று என்பது அறிந்த விசயமே, இருப்பினும், கிருத்துவர்கள், தங்களது “ஏசு கட்டுக்கதை”யின் படி, 18 [12 முதல் 30 வரை] வருடங்கள் காணாமல் போயிருந்த போது, இந்தியாவுக்கு வந்தார் என்ற கட்டுக்கதையினை உருவாக்கினர். அந்நிலையில் அவர் போதித்தது தான் “யஸூர் வேதம்” [Yasur Veda] என்று சொல்லி, அதனை பலவாறாக, ஐரோப்பிய மொழிகளில் குறிப்பிட்டனர். “யசுர், யஸுர், யஸௌர்” [Ezour Veda] என்றெல்லாம் குறிப்பிட்டு குழப்பினர். எல்லீஸும் இதில் குழம்பிபோனதில் ஆச்சரியம் இல்லை. மச்சிலிப்பட்டனத்தில் நீதிபதியாக இருக்கும் போது, ஒருவேளை, அத்தகைய யஸுர் வேதத்தைத் தயாரித்திருக்கலாம். சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். இங்கு, “பாதிரி எல்லிஸ்” [“Fr. Ellis”] என்றிருப்பதால், இவர் பாதிரியாக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது, என்றதும் ஏற்கெனவே சுட்டிக்கட்டப்பட்டது.

How Ezour Vedam was manufactured by the Christian missionaries

போலி வேதங்கள் எத்தனை இருந்தன?: மேலும், இன்னொரு ஏசுர் வேதம் என்ற கள்ளபுத்தகம் இருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது. ராபர்ட் டி நொபிலி 1609ல் உருவாக்கிய போலி வேதம் இருந்து 213 ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லீஸ், இன்னொரு ஏசுர் வேதத்தைக் கண்டு பிடித்தாரா? எல்லீஸ் அதை பாண்டிச்சேரியில் கண்டு பிடித்தார் என்றுள்ளது. ஆனால், 1822 வரை அது வெளியிடப்படவில்லை, எச்.எச்.வில்சன் அறிக்கையிலும் காணப்படவில்லை. அதுமட்டுமல்லாது, இன்னொரு குறிப்பில், எல்லீஸ் தென்னிந்திய மற்றும் ஈப்ரூ மொழிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையை ஆய்ந்ததாக உள்ளது. மேலும், இலங்கையின் தலைமை நீதிபதி சர். அலெக்சாந்தர் ஜான்சன், எல்லீஸிடம் பாரிஸில் அச்சடிக்கப் பட்ட ஏசுர் வேதம் புத்தகத்தைக் கொடுத்தார் என்றுள்ளது. அதுமட்டுமல்லாது, அவர் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளில், ஒன்றல்ல, மற்ற மூன்று போலி வேதங்களின் பிரதிகளும் இருந்தன என்றுள்ளது[3]. அதாவது, இத்தகைய போலி வேதங்களை அதிகமாகவே உருவாக்கியுள்ளனர் என்றாகிறது.

ezoure-Vedam - Jean Calmette and Ludo Rocher

போலிஏஸுர் வேதம்மிஷினரிகளை உலுக்கியது ஏன்?: லுடோ ரோச்சர் “ஏஸுர் வேதம்” உருவாக்கப்பட்டத்தில், மூன்று நிலைகள் / காலங்கள் உள்ளதாக விளக்குகிறார்[4].

போலிஏஸுர் வேதம்உண்டாக்கப் பட்ட காலம் யார் உருவாக்கியிருக்க முடியும்?
முதல் கட்டம் – 1760-1782

இரண்டாம் கட்டம் – 1782 – 1822

மூன்றாம் கட்டம் – 1822லிருந்து

ராபர்டோ டி நொபிலி Roberto de Nobili
ஜீன் கால்மெட் Jean Calmette
அன்டோய்ன் மொசாக் Antoine Mosac
மற்ற மிஷினரிகள் Other Missionaries
மெர்ரி மார்டீன் Pierre Martin
மதம் மாறியவர் New converts

ezoure-Vedam published in French-vol.I and II

சோனெரெட் 1782ல் போலி “ஏஸுர் வேதம்” மச்சிலி / மசூலிப்பட்டினத்தில் தான் மிஷினரிகளால் உருவாக்கப்பட்டது என்றார். ராபர்ட் டி நொபிலைப் பற்றி முதன் முதலில் 1822ல் குறிப்பிட்டவர் எல்லீஸ் தான். பொதுவாக அவர்தான், முதன் முதலில் அத்தகைய மோசடி வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டனர். ஆனால், எல்லீஸ்ஸின் கட்டுரையே, பல போலி கையெழுத்துப் பிரதிகள் இருந்ததை வெளிக்காட்டியது[5]. லௌவினன் [Lauuenan] என்பவர், “ஏஸுர் வேதத்தின்” மூலம் [சமஸ்கிருத ஓலைச்சுவடி] காணாமல் போனதற்கு காரணம் எல்லீஸ் தான் காரணம் என்றார். 1816ல் பாண்டிச்சேரி நூலகத்திலிருந்து, அப்பிரதி எல்லீஸிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது திரும்பக் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் கேஸ்டெட்ஸ் [Castets] மறுத்தார். எல்லீஸ் தனது கட்டுரையில், அந்த போலி ஏஸுர் வேதம் கையெழுத்துப் பிரதி சமஸ்கிருதம் மற்றும் பிரெஞ்சு இரண்டு மொழிகளிலும் இருந்தது. மொழி பெயர்த்தவர் மற்றும் மூலத்தை எழுதியவர் ஒன்றே என்றும் கூறினார்[6].  அதாவது கத்தோலிக்க  ஜெசுவைட் மிஷினரிகளை குற்றஞ்சாட்டினார்[7]. இதனால், ஹோஸ்டன் [Hosten, 1921: 499] ஜெசுவைட்டுகளைப் பற்றி அவதூறு பேசியதில் எல்லீஸ் தான், முக்கியமான ஆளாக இருந்தார், என்று கோபத்துடன் கூறினார். எல்லீஸ் ஒரு புரொடெஸ்டென்ட் என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இதனால், தமது வித்தியாசத்தை, சண்டையை மறைக்க, இவ்விசயத்தில் ஜாதிப்பிரச்சினையை நுழைத்தனர். அதுதான், போப்பை ஐயராக்கியது, ஆனால், வள்ளுவரை  பறையன் ஆக்கியது.

Pope Iyer - usage by Tamil writers

போப் ஐயர்என்று சொல்லும் போது, “போப் பறையர்ஏன்று ஏன் சொல்வதில்லை?: கட்டுக்கதைகளை உருவாக்குவதில் கிருத்துவ மிஷனரிகளுக்கு இணை யாரும் இல்லை எனலாம். எப்படி தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கினார்களோ, அதேபோல, வள்ளுவர் கட்டுக்கதைகளையும் உருவாக்கினர். பிறகு, அவர் பறையன் என்ற கதையினையும் சேர்த்தனர். அதாவது, சந்தேகிக்கப்படும் தாமஸ் முதலில் பறையனுக்குத் தான் பைபிளை போதித்தான் என்ற கதை! ஆனால், அவனை கொல்வதற்கு ஒரு ஐயர் வேண்டும், ஆனால், மோசடியில் வல்லவர்களான அவர்கள், நாமத்தைப் போட்டு மாட்டிக் கொண்டனர். இதெல்லாம் தெரிந்தும்-தெரியாத தமிழ் வல்லுனர்கள், “போப் ஐயர்” என்று இன்று வரை வெட்கமில்லாமல் உபயோகப்படுத்தி வருகின்றனர்[8]. ஆனால், “போப் பறையர்” என்று ஏன் உபயோகப்படுத்தவில்லை என்று யாரும் கேட்பதில்லை. மேலும் “ஐயர்” எனும்போது, ஐயங்கார், முதலியார், பிள்ளை, வேளாளர் என்றெல்லாம் கூட உபயோகப் படுத்தியிருக்கலாம். இது “பார்ப்பனீயம்” என்று கூட யாரும் எதிர்க்கவில்லை. இது பார்ப்பன ஆதரவா, எதிர்ப்பா என்றும் புரியவில்லை. அதாவது, ஜாதிப்பிரிவினை உண்டாக்கவும் அத்தகைய முயற்ச்சிகளில் ஈடுப்பட்டிருந்தனர் என்றாகிறது. அந்நிலையில், தாமஸ் ட்ரௌட்மேன், எல்லீஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து உருவாக்கிய 19ம் நூற்றாண்டின் ஆரிய-திராவிட பிளவுதான், பிறகு, 20ம் நூற்றாண்டில் பிராமணர்-பிராமண விரோத போக்காக மாறியது என்று எடுத்துக் காட்டுகிறார்[9]. பிராமண விரோத போக்கு, பிராமண-எதிப்பாக இருப்பதற்கான வழிமுறை, கால்டுவெல்லின் சித்தாந்தம் மூலம் பெறப்பட்டது என்று, வி.ரவீந்திரன்[10], நிக்கோலஸ் டிக்ஸ்[11] போன்றோர் விளக்கம் கொடுக்கின்றனர். இவ்வளவு விவகாரங்கள் இருக்கின்ற நிலையில் தான், பித்தம் பிடித்த, இந்துத்துவவாதிகள், அறக்கட்டளை உருவாக்கி, போலி புத்தகங்களை உண்டாக்கிய எல்லீஸைப் போற்றி, விழா எடுத்து, வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்துள்ளனர். பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்ட மோசடி பேர்வழி, எல்லீஸ் பெயரில், வி.ஜி.சந்தோசத்திற்கு விருது கொடுத்த இந்துத்துவவாதிகளை என்ன செய்வது?

© வேதபிரகாஷ்

27-06-2017

Nobili Lost Veda fraud

[1] Ezour Védam arrives in France in 1731. It is sent by the Abbot Bazin and is destined to the library of the king. The Knight of Maudave, returning from India, visits Voltaire in 1760 and offers him his copy of the Ezour Vedam . The text is presented to Voltaire as an excerpt from the Veda translated into French by Father Martin, a former Jesuit missionary from Pondicherry. Maudave expresses doubts as to the quality of Father Martin’s translation. In 1761, Voltaire read the manuscript handed over by Maudave and prepares a new chapter entitled “Bracmanes, Vedam, and Ezourvedam” for the second edition of the Essay on Morals .

[2]  Peter R. Bachmann, Fr. Ellis: Account of a Discovery of a modern imitation of the Vedas with Remarks on the genuine works, Asiatic Rsearches, Vol.14, 1882, pp.1-59.

[3] Prodosh Aich, Lies with Long Legs: Discoveries, Scholars, Science, Enlighent Documentary, Samskriti, New Delhi, 2004

[4] Ludo Rocher (Ed.), Ezourvedam: A French Veda of the Eighteenth Century, John Benjamins Publishing Company, Philadelphia, 1984.

[5] In this dissertation, Ellis describes eight manuscripts of the same type as the Ezour Vedam , called “pseudo-Vedas,” found in the library of the Jesuit missionaries of Pondicherry, and having in the conversion business by accomodatio .

[6] Ellis, Francis Whyte, “Account of a Discovery of a Modern Imitation of the Vedas“, in Asiatic Researches , vol. 14, London, printed for J. Sewell et al., 1822, p. 1-49.

[7] The posthumous publication of the article by Francis Whyte Ellis on the manuscripts in deposit in the library of the Jesuit missionaries of Pondicherry. Ellis proves in this article that it is not a Vedic text but the work of Jesuit missionary Roberto de Nobili written in 1621 for conversion purposes. Ellis visits the library of the Capuchins and discovers the “pseudo-Vedas”. He considers the Ezour Vedam and the other pseudo-Vedas as dangerous counterfeits which were intended to shake the Hindu religion without succeeding in substituting it for Christianity.

[8] http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=306&pno=116

[9] In his book, Tom Trautmann suggests that the Aryan-Dravidian contrast `revealed’ by F. W. Ellis and his Tamil assistants in the early nineteenth-century was later resignfied as a Brahmin/non-Brahmin opposition, and in that form contributed to the non-Brahmin movement in the early twentieth-century.

Trautmann, Thomas R.. Aryans and British India. Berkeley: University of California Press, 1997, pp.221-222

[10] Ravindran, V. 1996. `The unanticipated legacy of Robert Caldwell and the Dravidian movement‘. In South Indian Studies, Vol. 1, pp.83-110.

[11] Dirks, Nicholas. 1995. The conversion of caste: location, translation and appropriation. In Conversion to Modernity, ed. Peter van der Veer, pp. 115-136. London: Routledge

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

ஜூன் 16, 2017

திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை,தாமஸ் கட்டுக்கதை பரப்பும்வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (1)

Tiruvalluvar Invitation-1

திருவள்ளுவர் திருநாட்கழகம் நடத்திய திருவள்ளுவர் பிறந்தநாள் விழா மற்றும் எல்லீசர் அறக்கட்டளை விருது வழங்கும் விழா: 08-06-2017 அன்று மதியம் பேஸ்புக் நண்பர் Dr சந்தோஷ் முத்து[1] என்பவர், இந்த அழைப்பிதழை “திருவள்ளுவர் திருநாட்கழகம், சென்னை – 92 நடத்தும், திருவள்ளுவர் பிறந்த நாள் விழா, விருது வழங்கும் விழா அழைப்பிதழ்” என்று பேஸ்புக்கில் போட்டிருந்தார்.  இவர் சங்கப் பரிவாருடன் தொடர்புள்ளவர் ஆவார். வியாழன் 08-06-2017 அன்று காலையில் 9.15 மணியளவில், திருவள்ளுவர் கோவில் மற்றும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகம் முதலிய இடங்களில் நடப்பதாக முதல் பக்கத்தில் இருந்தது. திருவள்ளுவர் திருநாட்கழகம், 2/48, முதல் முதன்மைச்சாலை, ஏ.வி.எம். அவென்யூ, விருகம்பாக்கம், சென்னை – 600 092 என்ற விலாசம் போடப்பட்டுள்ளது. சரி, அதுதான் நடந்து முடிந்து விட்டதே என்று யோசிக்கும் போது, “எல்லீசர்” என்பது கண்ணில் பட்டதும், அப்பெயரே விசித்திரமாக இருந்ததால், விழா அழைப்பிதழை கவனமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

Tiruvalluvar Invitation-2

சாமி தியாகராசனின் அழைப்பிதழில் இவ்வாறு வேண்டியுள்ளார் (25-05-2017): சாமி. தியாகராசன்[2], தலைவர், திருவள்ளுவர் திருநாட்கழகம் அழைப்பிதழில், இவ்வாறு கூறியுள்ளார், “அன்புடையீர்! வணக்கம் எமது கழகத்தின் சார்பில் ஐந்தாம் ஆண்டாகத் திருவள்ளுவர் பிறந்தநாளை, நிகழும் திருவள்ளுவராண்டு 2048 வைகாசி மாதம் 25 ஆம் நாள் அனுட நட்சத்திரம் நிலைபெறும் (08-06-2017) வியாயக் கிழமை அன்று காலை 9.15 மணிக்குச் சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் சிறப்புப் பூசையுடன் வழிபாடு செய்து கொண்டாடுகிறோம்.

“மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி நிரலில் காணும் வண்ணம் விழாக்கள் நிகழ்வுரும்.

தாங்கள் அன்புகூர்ந்து விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்”, என்று முடித்துள்ளார். சென்னை, 25-05-2017 என்ற தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாக, இதைப் பற்றி பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர்களுக்கு இவ்வழைப்பிதழ் அனுப்பப் படவில்லை மற்றும் தெரிவிக்கப்படவில்லை.

Mylapore function 08-06-2017-13

நிகழ்ச்சி நிரலில் கொடுக்கப்பட்ட விவரங்கள்: நிகழ்ச்சி நிரல் இவ்வாறு விவரங்களைக் கொடுத்துள்ளது:

காலை: 9.15 மணி வழிபாடு

காலை: 10.30 மணி விருது வழங்கும் விழா

இறைவணக்கம்

வரவேற்பு

விழாத்தலைவர் தவத்திரு திருஞான சம்பந்தத் தம்பிரான் சுவாமிகள் எம்.ஏ; எம்.பில் அவர்கள் இளவரசு, காசித் திருமடம் திருப்பனந்தாள்.

முன்னிலை:

திரு. இரா. வெங்கடேசன் I.A.S., அவர்கள், செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை, தமிழ்நாடரசு.

முனைபவர். மா. வீரசண்முகமணி, I.A.S., அவர்கள், ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடரசு.

முனைவர் கோ. விசயராகவன் அவர்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையும் எழுதியுள்ளமைக்காக விருது பெறுபவர்

திரு பசுபதி தனராஜ் அவர்கள், வழக்கறிஞர், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்புமிகு பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், நடுவண் அரசின் கப்பல் பற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர்.

திருவள்ளுவரின் திருவுருவத்தைத் தமது சொந்தச் செலவில் படிம வடிவில் உருவாக்கி உலகின் பலபகுதிகட்கு அனுப்பி நிறுவச் செய்து வள்ளுவரின் பெருமையைப் பாரெங்கும் பரவச் செய்து வருவதற்காக

விருது பெறுபவர்

கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், தலைவர் V.G.P குழுமம், சென்னை.

விருது வழங்கி வாழ்த்துரை

மாண்முமிகு சேவூர். எஸ். இராமச்சந்திரன் அவர்கள், தமிழ்நாடரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர்.

ஆள்வினையே ஒருவரை அடையாளப்படுத்தும் மற்றபடி அவரது அங்கங்கள் அல்ல என்னும் வள்லுவத்தை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்ந்து வருவதற்காக

விருது பெறுபவர்

அ. சுபாஷ் அவர்கள்

விருது வழங்கி வாழ்த்துரை

திரு. இல. கணேசன் அவர்கள்.

தலைவர் ஆசியுரை

நன்று நவிலல்

நாட்டு வாழ்த்து.

தலைவர் – பேராசிரியர், முனைவர் சாமி தியாகராசன்

மதிப்பியல் தலைவர் திரு இரா. முத்துக்குமாரசுவாமி

Pon radhakrisha at Valluvar temple-function 08-06-2017.3 -twitter

செயற்குழுவினர் பட்டியலில் உள்ள பெயர்கள்:

  1. திரு பால. கௌதமன்.
  2. வழக்கறிஞர் முனைவர் எஸ். பத்மா.
  3. மா. மணிவாசகம்.
  4. சிவாலயம் ஜெ. மோகன்.
  5. கவிஞர் முத்துலிங்கம்
  6. திரு எஸ். இராமச்சந்திரன்.
  7. வழக்கறிஞர் ஜி. முருகவேல்.
  8. வழக்கறிஞர் பால சீனிவாசன்
  9. திரு பி. ஆர். ஹரன்.
  10. டால்பின் திரு ஶ்ரீதர்
  11. திரு ஆர் சீனிவாசன்
  12. திரு ஆர். பரிதிமால்கலைஞர்.
  13. செங்கோட்டை ஶ்ரீராம்

பொருளாளர் திர்மதி வெ. பத்மப்ரியா.

தொடர்புக்கு: 044 – 4201 6242; +91 95518 70296

Muthulingam-poet, Nambi Narayanan,......, .....

அறக்கொடையாளர்கள் என்று பட்டியல் இவ்வாறு இருந்தது:

  1. அதிபர், காசித்திருமடம், திருப்பனந்தாள்.
  2. டாக்டர். C. பூமிநாதன், ஆஸ்த்திரேலியா,
  3. திரு செகந்நாதன். புதுச்சேரி.
  4. திரு சியாம் சுந்தர், புதுச்சேரி.
  5. திரு சௌந்தரராசன், சென்னை.
  6. திரு முருகவேள் சென்னை.
  7. திரு இராதாகிருஷ்ணன், குடந்தை.
  8. முனைவர் மு. செல்வசேகரன் குடந்தை.
  9. திரு. கணேசன், குடந்தை.
  10. திரு திருநாவுக்கரசு குடந்தை.
  11. திரு கண்ணன் குடந்தை.

இப்படி மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், அதிகாரிகள், பல்துறை வல்லுனர்கள் என்று அமர்க்களமாக விழா நடந்தது போலும். ஆனால், ஊடகங்களில் செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2017

திருவள்ளுவர், சந்தோஷம், பிஜேபி, தம்பிரான்

[1] Dr M.Santhoshkumar, MSc PhD, Founder Associate Director, Center for Creativity & Innovation in Education, Sri Lathangi Vidhya Mandir Hr Sec School, Coimbatore. (Formerly Assistant Professor in Biochemistry in RVS College and PSG College- 2011-2016). ABVP activist.

https://www.facebook.com/drmsanthosh/; https://twitter.com/SanthoshMuthu16

[2]  பிஜேபியின் இலக்கிய அணி பொறுப்பாளராகவும் இருக்கிறார்.

16 Department for Party Journals and Publications Sami Thyagarajan State Convenor , Tamil Literature Cell

95518 70296

 

கணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்-பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா?

ஜூலை 21, 2016

கணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா அல்லது அதிலும் “செக்யூலரிஸ நிரலாக்கம்” போன்றவை உள்ளனவா?

Top ten criminals of India - google.The Guardian UK

உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் வருவதால் வழக்கு பதிவு: உலகின் முதல் 10 குற்றவாளிகள் / “Top 10 criminals in the world” என்று கூகுள் தேடுபொறியில் டைப் அடித்தவுடன் அதில் பிரதமர் மோடியின் பெயரையும் காட்டும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது[1]. மோடியுடன் உலகத்தில் உள்ள தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் புகைப்படங்கள் வருகின்றன. வக்கீல் சுஷில் குமார் மிஸ்ரா [Sushil Kumar Mishra] என்பவர் அளித்த புகாரின் பேரில் கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதன் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப 20-07-2016 அன்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[2]. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுஷில் குமார் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், கூகுளின் தேடுபொறியில் உலகின் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் ஒருவர் என பிரதமர் மோடியை படத்துடன் வெளியிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்[3].  புகார் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை[4].

Lawsuit-against-Google

கூகுள் அளித்த விளக்கமும், மெபொருள் விசமர்த்தனமும்: இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு சுஷில்குமார் மிஸ்ரா விளக்கம் கோரியுள்ளார்[5]. 2015ம் ஆண்டு கூகுளில் உலகின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலை தேடியபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்தது[6]. இதையடுத்து மோடியின் புகைப்படத்தை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார் ஆனால் பயனில்லை[7]. மறுபடிபறுபடி தேடும் போது, அவ்வாறான படத்தொகுப்புகளே வந்து கொண்டிருந்தன. கூகுள் நிறுவனம் அதற்கு, தேடுபொறியில் சில தேவையற்ற புகைப்படங்கள் இடம்பெற்று விட்டதாகவும், அது சில மென்பொருள் எண்கள் மீது ஆதாரமாக இருப்பதாகவும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேடுபொறியை மேம்படுத்தி வருவதாகவும், விளக்கமளித்திருந்தது[8]. இதற்கு கூகுள் நிறுவனம் ஜூன் 2015ல் மன்னிப்பும் கேட்டது என்கிறது தினமலர்[9].  மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[10]. இதனை ஏற்க மறுத்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுஷில்குமார் மனுத்தாக்கல் செய்தார்.

Top ten criminals of India - google

போலீஸ் புகாரை ஏற்காதது ஏன்?: இது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது, எந்த பதிலும் அளிக்காமல் மெத்தனமாக இருந்து வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தை [the Civil Line police station in Allahabad ] அணுகினேன், ஆனால் அவர்கள்  வழக்கு பதிவு செய்யவில்லை, என்று தெரிவித்திருந்தார்[11].  அதாவது, உபியில் அகிலேஷ் யாதவ் அரசு நடந்து கொண்டிருப்பதாலும், பொதுவாக அதனை சார்ந்த அதிகாரிகள் முதலியோர், எதிர்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதில்லை என்பது உபியில் தெரிந்த விசயம் தான். எருமைமாடுகள் காணவில்லை என்றால், தனி-போலீஸ் படை அமைத்துத் தேட செய்வார்கள், ஆனால், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் நடந்தால், அதெல்லாம் சகஜமப்பா என்பார்கள்! ஆகவே, இதைப் போன்றவற்றை கண்டுகொள்ளவில்லை போலும்!

Top ten criminals of India - google.5

2015ல் பதிவு செய்த வழக்கு தள்ளுபடி: இதை தொடர்ந்து கடந்த ஆண்டு தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்[12]. ஆனால் அது சிவில் வழக்காகக் கருதப்பட வேண்டும் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த உத்தரவின் மீது சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்[13]. தற்போது சீராய்வில் இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ம் தேதி தலைமை நீதி மேஜிஸ்ட்ரேட் முன்னர் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது[14].

Top ten criminals of India - google.vikatan

மோடி, குற்றவாளி, வழிமுறை (algoritm) அமைப்பு வடிவமைக்கப் பட்டிருந்தால் மாற்றிவிடலமே?: மேலும் இணைதளத்தில் படங்கள் எவ்வாறு விவரிக்கப்படுகின்றனவோ, குறிப்பான வார்த்தைகளை உபயோகப்படுத்தி கேள்வி கேட்பது போன்றவற்றாலும், அத்தகைய முடிவுகள் ஏற்படலாம் என்றும் விளக்கம் கொடுத்தது[15]. அதாவது, “மோடி குற்றவாளி” என்று ஆயிரம் பேர் படங்கள் போட்டு, அதே ஆயிரம் பேர் அவ்வாறு கேட்டு தேடிக் கொண்டே இருந்தால், மோடியின் படம் வர ஆரம்பித்து விடும் போலிருக்கிறது. இத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு அப்படி இருப்பதனால், அத்தகைய முடிவுகள் வருகின்றன. அபாடியென்றால், இன்னொரு நபர் “பெயர்” மற்றும் “குற்றவாளி” என்று தேடினால், அவ்வாறே அரவேண்டும், ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அத்தகைய வழிமுறை (algoritm) அமைப்பு மோடி விசயத்தில் வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்றாகிறது. ஒருவேளை, அனைத்திலும் “செக்யூலரிஸம்முள்ளது போல, இதிலும் அத்தகைய “செக்யூலரிஸ நிரலாக்கம், வழிமுறை” முதலியன உள்ளன போலும்! பிறகு, அது தவறு எனும்போது, மாற்றியிருக்கலாமே, மாற்றாமல், ஏதோ இதுபோன்ற பதிலைக் கொடுப்பது ஏன்?

according to Google algorithm, Modi is a criminal

கணினி நிரலாக்கம் (Computer programming), தகவல் அளிப்பதில்பெறுவதில் நம்பகத்தன்மை, ஆதாரத்தன்மை பேணப்படுகிறதா?: இன்றைய நாட்களில் கூகுள் போன்றவை அறிவுதேடல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், உண்மையான தகசவல்கள் கிடைக்கின்றன என்று பயனாளிகள் நினைது / நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவையும் பாரபட்சம் கொண்டவை, சில நேரங்களில் சரியான முடிவுகள், சில நேரங்களில் தவறான முடிவுகளை எல்லாம் கொடுக்கும் என்ற விசயம் சில நேரங்களில் தெரிய வருகின்றன. கணினி மனிதனால் உருவாக்கப்பட்டது, அதனை இயக்கும் மென்பொருள் முதலியனவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அம்மென்பொருள் உருவாக்கம், செயல்படுத்தும் முறை, மாற்றும் முறைகள், முதலியனவும் கணினிகளை இயக்கும் திட்டங்களினால் சிலரது விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றமுறையில் மாற்றியமைக்க முடியும், அத்தகைய முறையில் கருத்துருவாக்கத்தை சிதைக்க முடியும், கெடுக்க முடியும், சீரழிக்க முடியும் என்பனவெல்லாம் தெரிய வரும் போது, பயனாளிகள் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது. இனி கிடைக்கும் செய்திகள், தகவல்கள், விவரங்கள் ஆதாரமானவையா, ஏற்றுக் கொள்ளத்தக்கதா என்று சரிபார்த்து எடுத்தாளா வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

21-07-2016

[1] தினகரன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடியை சேர்த்த கூகுளுக்கு .பி. கோர்ட் நோட்டீஸ், Date: 2016-07-20@ 19:14:32

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=232537

[3] தமிழ்.வெப்துனியா, உலகின் 10 கிரிமினல்கள் பட்டியலில் பிரதமர் மோடி: கூகுள் மீது வழக்க தொடர உத்தரவு, புதன், 20 ஜூலை 2016 (10:07 IST).

[4] http://www.tamil.webdunia.com/article/national-india-news-intamil/google-lists-pm-modi-in-top-criminals-gets-court-notice-116072000018_1.html

[5] நியூஸ்.7.டிவி, இந்தியாவின் டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் பிரதமர் மோடிகூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்!, July 20, 2016

[6] நாணயம்.விகடன், டாப் 10 குற்றவாளிகள் பட்டியலில் மோடி; கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், Posted Date : 15:39 (20/07/2016)

[7] http://www.vikatan.com/personalfinance/article.php?aid=12977

[8] http://ns7.tv/ta/google-lists-pm-modi-top-criminals-gets-court-notice.html

[9] தினமலர், கிரிமினல்கள் பட்டியலில் மோடி : கூகுளுக்கு கோர்ட் நோட்டீஸ், பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016. 08:18

[10] “These results don’t reflect Google’s opinion or our beliefs; our algorithms automatically matched the query to web pages with these images……… the company is working to improve its search related algorithm to prevent unexpected results like this..” Sometimes, the way images are described on the internet can yield surprising results to specific queries, Google added.

http://www.deccanchronicle.com/technology/in-other-news/200716/google-lists-modi-in-top-10-criminals-gets-court-notice.html

[11] Deccan chronicle, Google lists Modi in ‘top 10 criminals’, gets court notice, Published. Jul 20, 2016, 1:25 pm IST, Updated. Jul 20, 2016, 1:28 pm IST

[12] New Indian Express, Google gets court notice for listing PM Modi in ‘top 10 criminals’ search, By Online Desk, Published: 20th July 2016 11:48 AM, Last Updated: 20th July 2016 11:49 AM

[13] http://www.newindianexpress.com/nation/Google-gets-court-notice-for-listing-PM-Modi-in-top-10-criminals-search/2016/07/20/article3538537.ece

[14] http://www.dinamalar.com/news_detail.asp?id=1567858

[15] “These results don’t reflect Google’s opinion or our beliefs; our algorithms automatically matched the query to web pages with these images……… the company is working to improve its search related algorithm to prevent unexpected results like this..” Sometimes, the way images are described on the internet can yield surprising results to specific queries, Google added.

http://www.deccanchronicle.com/technology/in-other-news/200716/google-lists-modi-in-top-10-criminals-gets-court-notice.html