Archive for the ‘உயிர்’ Category

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா? (11)

ஜூன் 27, 2017

ஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோர் “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களை குறிப்பிட்டது, தயாரித்தது ஏன் – அவற்றின் பின்னணி –இவற்றைப் பற்றி போப்-தாசர்கள், எல்லீசர்-பக்தர்கள் அறிவார்களா இல்லையா? (11)

Temple parts kept in thomas museum, Mylapore

ஜி.யூ.போப்பும், தாமஸ் கட்டுக்கதையும்: போப்பின் புத்தகத்தின் முன்னுரையைப் படித்துப் பார்த்தால், கிருத்துவ மிஷினரிகளின் எண்ணம் புலப்படும். அவர்கள் வள்ளுவர் மற்றும் குறள் மீது ஏன் அத்தகைய ஆர்வம் கொண்டார்கள் என்பதும் வெளிப்படும். ஆனால், தமிழ் பேச்சாளர், தமிழ் எழுத்தாளர், தமிழ் ஆசிரியர் முதலியோர், போப்பின் புத்தகத்தை ஒருமுறையாவது படித்தார்களா இல்லையா, குறைந்த பட்சம் முன்னுரையையாவது வாசித்து, விசயங்களை அறிந்தார்களா இல்லையா என்பது சந்தேகமாகவே உள்ளது. இல்லை, படித்தறிந்து தான், இவ்வாறு நடந்து கொள்கிறார்கள், என்றால், அவர்கள் கிருத்துவர்களின் ஏஜென்டுகளாக, இத்தனை ஆண்டுகளாக, செயல்பட்டுக் கொண்டு வந்துள்ளனர், வருகிறார்கள் என்று தெரிகிறது. இனி, போப் சொல்வதைப் பார்ப்போம். “வள்ளுவர் ஒரு பறையர் மற்றும் நெசவாளி. அவர் இன்றைய மெட்ராஸின் புறப்பகுதியான சாந்தோம் அல்லது மயிலாப்பூரில் வாழ்ந்தார். ஏலேல சிங்கன் அவரது நெருங்கிய நண்பர் அல்லது அவரை ஆதரித்தவன். அவன் ஒரு கப்பலின் தலைவனாக இருந்தான்,” என்று முன்னுரையில் ஆரம்பித்து[1], அவ்விடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் கிருத்துவர்களுக்கு மிகுந்த அக்கரைக் கொண்டதாக விளங்குகிறது. ஏனெனில், அங்குதான் செயின்ட் தாமஸ் போதித்தார், வேலினால் குத்தப்பட்டு, இறந்து, புதைக்கப்பட்டுள்ளார்[2]. இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது,” என்று தாமஸ் கட்டுக்கதையை நுழைத்தார்[3].  இதை அந்த மெத்தப் படித்த தமிழ் வல்லுனர்களுக்கு தெரியாதா?

Bleeding cross- planted by the Portuguese im 1537 CE

ஜி.யூ.போப் தாமஸ் வந்து போதித்து, கிருத்துவ நூல்களை வைத்துதான் திருக்குறள் எழுதினார் என்றது: பிறகு, போப் / போப் ஐயர்[4], திருக்குறள் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுவதாவது, “மயிலாப்பூர் நமக்கு சாந்தோம் என்றுதான் அறியப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களிலிருந்து, இங்கு கிருத்துவ சமூகம் வாழ்ந்து வந்துள்ளது. இங்கு ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றை நாம் காண்கிறோம். இங்குதான் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த பன்டானியஸ் என்பவர் போதித்தார். வள்ளுவர் எல்லா தத்துவங்களையும் தன்னுள் ஈர்த்த கவியாக இருந்திருந்திருந்ததால், அவருக்க்கு ஜைன மதம் பற்றித் தெரிந்திருந்தது, ஜாதிபேதங்களைப் பார்க்காதவராக இருந்தவரதலால் அந்நியவர்களுடன் பழகினார். ஏலேல சிங்கன் நண்பராக இருந்ததால், வெளிநாட்டுக்காரர்கள் வரவு பற்றியும் அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் தனது தோனியிலேயே கூட்டி வந்திருக்கலாம். ஆகையால், நான் சொல்வது என்னவென்றால், கடற்கரையில் இருந்த கிருத்துவ போதனையாளர்களுடன் அவர் இருந்ததை காண்கிறேன்; அவர்களது அலெக்சாந்திரிய தத்துவங்களை போதித்ததையும், வள்ளுவர் உள்வாங்கிக் கொண்டதையும் கவனிக்கிறேன். இவ்வாறு நாளுக்கு நாள் அந்த தாக்கத்தினால், அவற்றை திருக்குறளில் சேர்த்துக் கொண்டார் என்று முடிவுக்கு வருகிறேன்”, என்று முடிக்கிறார்[5]. அதுமட்டும் அல்லாது, உணர்ச்சிப் பூர்வமாக விசுவாசத்தோடு, “இந்த புனித ஸ்தலத்தில், அப்போஸ்தலரின் தியாகப்பணி தங்கியிருக்கிறது. “மலைமீது போதித்த கருத்துகள்” அந்த கிழக்கத்தைய புத்தகத்தில் அடங்கியுள்ளது……..அதனால், நான் குறள் உண்டாவதற்கு கிருத்துவ நூல்களும் மூலங்களாக இருந்தன, என்பதை தயங்காமல் கூறுவேன்,” என்று முடிக்கிறார்[6]. இதைத்தான் எல்லீஸும் சொன்னார். அந்த சந்தோசம்-சாமுவேல்-தெய்வநாயகம் கூட்டமும் சொல்கிறது! இனி வேதங்கள், வேதாங்கமங்கள் இவையெல்லாம் தேவையாயிற்றே?

Plaque put up in 20th cent- Saidapet - Little mount

போப் குறிப்பிடும்தாமஸ் கட்டுக்கதைபற்றிய ஆதாரங்களின் போலித்தனம்: 19ம் நூற்றாண்டில், போப் குறிப்பிடும் “ஆர்மீனிய மற்றும் போர்ச்சுகீசிய சர்ச்சுகள் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு முதலியவற்றைப்” பற்றி பார்ப்போம்:

1.       ஆர்மீனியன் தெருவில் இருக்கும் ஆர்மீனியன் சர்ச் 1712ல் கட்டப்பட்டது, 1772ல் மாற்றிக் கட்டப்பட்டது.

2.       சைதாபேட்டையில் உள்ள “சின்னமலை” கோவில், 18-19ம் நூற்றாண்டுகளில் ஆக்கிரமித்துக் கொண்டு கட்டப்பட்டது.

3.       பரங்கிமலையில் உள்ள சர்ச், அங்கிருக்கும்பெருமாள் / விஷ்ணு கோவிலை இடித்து 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை அருளாப்பா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

4.       மயிலாப்பூர் / சாந்தோம் சர்ச்சும் 1523ல் அங்கிருந்த கபாலீஸ்வரர் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.

5.       அதேபோல, “லஸ் சர்ச்” என்று அழைப்படுகின்ற சர்ச் 1516ல், அங்கிருக்கும் கோவிலை இடித்துக் கட்டப்பட்டதாகும்.

6.       சின்னமலை மற்றும் பெரியமலையில் இருக்கும், கற்சிலுவைகள், போர்ச்சுகீசியரால், 16ம் நூற்றாண்டில் அங்கு வைக்கப் பட்டன.

7.       அந்த “ஐந்தாம் நூற்றாண்டின் கிருத்துவ கல்வட்டு” பற்றி கிருத்துவர்களிடையே ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளன, ஏனெனில், அவை 16-17ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. “ரத்தம் சொரிந்த சிலுவை” சுற்றிலும் எழுத்துகள் இருந்தன, இல்லை, பிறகு எழுதப்பட்டது என்று பலவாறான சர்ச்சைகள் உள்ளன. மேலும் ஒன்றிற்கு மேலாக பல சிலுவைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதால், அவையெல்லாம் போலி என்று அப்பட்டமாக தெரிந்து விட்டது.

8.      தாமஸால் வரையப் பட்ட சித்திரம், முதலியவற்றை கார்பன் தேதி பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டால் தேதி தெரிந்து விடும். அதேபோல, ரத்தம் படிந்திருப்பதாக சொல்லப் படும் மாதிரியை, “டி.எச்.ஏ” பரிசோதனைக்கு உட்படுத்தினால், “குளோனிங்” செய்தால், குட்டு வெளிப்பட்டுவிடும். ஆனால், அதை அவர்கள் செய்வதற்கு பயப்படுகிறார்கள். போப் ஏற்கெனவே, இந்த கட்டுக்கதையினை மறுத்து விட்டார்.

How thomas was killed in different countries-myth making

போப் போலித்னமான “தாமஸ் கட்டுக்கதை” ஆதாரங்களைக் குறிப்பிட்டதன் பின்னணி: ஆகவே, போப் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே, 1886வது வருடத்தில் வெளிவந்த புத்தகத்தில், இவற்றையெல்லாம் ஏன் குறிப்பிடவேண்டும் என்று நோக்கத்தக்கது. அதாவது, எல்லீஸ், மகன்ஸி, பச்சனன் முதலியோர் போலி நூல்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர். அந்நிலையில், எல்லீஸ், போப் முதலியோர் இத்தகைய போலி அத்தாட்சிகள் உருவாக்குவதில் ஈடுபட்டனர் போலும். அவ்விதத்தில் தான் “திருவள்ளுவர்” நாணயம் வெளிவந்துள்ளது. ஆனால், பிரச்சினையாகும் என்றபோது, அமுக்கி விட்டனர்.  போப் சொன்னதை கவனிக்க வேண்டும், “இந்த நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படா விட்டாலும், இப்பொழுது ஏற்கப்படுகிறது”, அதாவது, அப்பொழுது, “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடியும் வளர்க்கத் தீர்மானித்தத்து வெளிப்படுகிறது. இந்த எல்லீஸ் கூட்டம் அதில் தீவிரமாக செயல்பட்டதும் தெரிகிறது.

  1. இங்கு, மேலே நிக்கோலஸ் டிர்க் என்பவர்[7] குறிப்பிட்டதை மறுபடியும், நோக்கத்தது, – “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது.
  2. மெக்கன்ஸியின்சரித்திரங்கள்எல்லாம் விசித்திரமாக இருந்தன.
  3. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”.
  4. லெஸ்லி ஓர்[8], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது.
  5. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன.
  6. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.

ஆகவே, இவர்கள் மிகப்பெரிய அகழ்வாய்வு மோசடி, போலி நூல்கள் உருவாக்கம், கள்ள-ஆவணங்கள் தயாரிப்பு, சரித்திர திரிபு, புரட்டு மற்றும் மோசடி முதலியவற்றில் ஈடுப்பட்டனர் என்றாகிறது.

Many crosses found prove the forged-manufactured ones

கத்தோலிக்க-புரொடெஸ்டென்ட் சண்டையில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது: இந்த ஆராய்ச்சிகளில் கிருத்துவ மிஷனரிகளின் [Christian Missionaries] பங்கும் நோக்கத்தக்கது.  இடைக்கால ஆரம்ப காலங்களில் (போர்ச்சுகீசிய வரவுகளில்) ஜெஸுவைட்டுகளின் மூலம் கத்தோலிக்க [Catholic] கிருத்துவ ஆதிக்கம் தான் இந்திய-ஆராய்ச்சிகளில் வெளிப்பட்டது. ஆங்கிலேயர் புரொடெஸ்டென்ட் [Protestant] கிருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.  இதனால், அவர்கள் கத்தோலிக்கர்களை நம்பவில்லை. 1857 முதல் சுதந்திர போர் அல்லது எழுச்சியைக் கூட அவர்களது சதி தான் என்றும் கிருத்துவத்தின் வீழ்ச்சி என்றும் நம்பினர்[9]. புரொடெஸ்டென்ட் கிருத்துவர் “தாமஸ் கட்டுக்கதை”யினை நம்பாதவர் மேலும் எதிர்ப்பவர். அந்நிலையில் எல்லீஸ், கால்டுவெல் முதலிய புரொடெஸ்டென்ட் கிருத்துவர், “தாமஸ் கட்டுக்கதை”யினை மறுபடி எடுத்துக் கொண்டு, பரப்ப ஆரம்பித்ததின் நோக்கத்தை கவனிக்க வேண்டியுள்ளது. இதே காலகட்டத்தில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை”யினை, ஐரோப்பிய-அமெரிக்க கிருத்துவ வல்லுனர்கள் நிரூபித்து, ஒதுக்கித் தள்ளினர்[10].  கிருத்துவத்தின் மீதான பௌத்தத்தின் தாக்கத்தை மறைக்க இந்த கட்டுக்கதையை உருவாக்கியதும் புலப்பட்டது. எல்லீஸ் கும்பலும் அதை ஜைனத்தைத் தூக்கிப் பிடித்தலில் செய்துள்ளது தெரிகிறது. ஆனால், அவர்களது மததுவேஷ, சிக்கல்-சன்டைகளில் குறள் மற்றும் வள்ளுவர் சிக்கிக் கொண்டது. தமிழ் வல்லுனர்களும், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், “எல்லீசர்” புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.

© வேதபிரகாஷ்

26-06-2017

Chinna malai forgeries- encroached temple and destroyed

[1] G. U. Pope, The Sacred Kural of Thiruvalluva-Nayanar with Introduction, Grammar, Translation, Notes, W. H. Allen & Co., London, 1886, Introduction,

[2] Then, he mentioned about Thomas getting killed at Mylapore, “A higher interest is imparted to the spot and its neighbourhood, at least to Christians, by the tradition (so long and lightly discredited, but now generally acknowledged to be authentic) that here S. Thomas preached, and here met his death by a spear (vel) such as the poet often speaks of, and was here buried”.

For this, G. U. Pope gives a note as follows – The reader may find a full discussion of this subject in Dr. German’s learned and instructive work, Die Kirche der Thomas Christen.

[3] Incidentally, the writings of the G. U. Pope have been full of “Thomas myth”, as could be noted from his “Introduction” of his book . pp. ii-iii.

[4] “போப் ஐயர்” என்று சாதாரணமாக சொல்லும் போது, “போப் ஐயங்கார்” என்று ஏன் சொல்வதில்லை என்று தெரியவில்லை. இல்லை, “போப் பறையர்” என்று கூட சொல்லலாமே?

[5]we may fairly, I say, picture him pacing along the sea-shore with the Christian teachers, and imbibing Christian ideas, tinged with the peculiarities of the Alexandrian school, and day by day working them into his own wonderful Kurral”.

[6] Then , finally he confirmed the myth as “authentic”, “It is undoubtedly a noteworthy fact that from this Mayilapur, on which the eyes of Christendom have ever rested as the one sacred spot in India of Apostolic labour, comes the one Oriental book, much of whose teaching is an echo of the ‘Sermon on the Mount’”, adding, “….I cannot feel any hesitation in saying that the Christian Scriptures were among the sources from which the poet derived his inspiration.”

[7] Dirks has suggested that the Mackenzie collection fell through the cracks because it could not be useful either to official Orientalism or to a newly emerging colonial sociology: ‘On the one hand, Mackenzie’s textual materials did not meet Orientalist standards for classicism and antiquity; on the other, Mackenzie’s histories seemed too peculiar, too sullied by myth and fancy, and too localistic and “Oriental” to be of any real help in the development of administrative policy’ .

Dirks, Nicholas B. Castes of Mind: Colonialism and the Making of Modern India, Princeton: Princeton University Press., 200, p.82.

[8] The missionary past was important in shaping the Madras School of Orientalism perspective on several fronts.

  1. First, the Jesuit missionary approach was inspiring as an Indological model in terms of its close attention to the learning of languages (and its focus on the ‘high’ or ‘literary’ vernacular languages).
  2. De Nobili, Beschi, and others among the Jesuit fathers had already come to an appreciation of Tamil language and literature that was taken up by Ellis and his colleagues.
  3. Further, the Jesuit policy of ‘accommodation’ led to an interest in and acceptance of local custom and local communities, which served as the basis for the production of knowledge about South Indian religions, which knowledge the Madras School of Orientalism built upon.
  4. Finally, there was a different approach to questions of origins in the south, and part of this seems due to missionary agendas, which either (in the Jesuit case) sought to uncover an original crypto-Christianity or underlying moral code consistent with Christianity, or (for the Protestants) focussed on uncovering a pre-Brahmanical religion.
  5. In both approaches, the attention of the missionaries—and the Orientalists—was turned toward the Jains.

Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains: The South Indian Story“, in “The Madras school of Orientalism: Producing knowledge in Colonial South India” edited by Thomas R. Stautmann, Oxford University Press, Nrew Delhi, 2009, p.280.

[9] Metcalf, Thomas R. Aftermath of Revolt: India 1857-1970. Princeton University Press, 2015.

[10] Garbe, Richard. “St. Thomas in India.” The Monist (1915): 1-27.

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

ஒக்ரோபர் 28, 2015

பசு மாமிசமா, மாட்டிறைச்சியா – மாடுகள் இறைச்சிற்கா, பாலுக்கா – விசயம் வியாபாரமாக்கப்படுகிறாதா, அரசியலாக்கப் படுகிறதா (1)?

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

கேரளா ஹவுஸ் பீப் வறுவல் பிரச்சினை

பசுவதை, பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, முதலியவற்ரைப் பற்றிய சட்டநிலைமை: பசுக்கள் வதைசெய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்திய அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 48ல், “பால் கொடுக்கும் பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் மற்ற மாடுகளைக் கொல்வது நடக்காமல் அரசு தடை செய்ய வேண்டும்” என்றுள்ளது. அக்டோபர் 26, 2005 அன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில், அரசியல் நிர்ணய சட்டத்தில் உள்ள அப்பிரிவை ஆமோதித்தது மட்டுமல்லாது, மாநிலங்கள் ஏற்படுத்தியுள்ள அத்தகைய பசுவதை எதிர்ப்பு சட்டங்களையும் ஆதரித்தது. ஆக, 24 மாநிலங்களிலும் பசுவதை தடுப்பு, பசுமாமிசம் விற்பது, பற்றிய விவகாரங்களை ஒழுங்குபடுத்த சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கேரளா, மேற்கு வங்காளம், அருணாசலப் பிரதேசம், மீசோராம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் மாநிலங்களில் தடையில்லை. இருப்பினும், ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்களின் ஓட்டைகளை உபயோகப்படுத்திக் கொண்டு, பொய்யான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு, பசுமாடுகள், கன்றுகள் முதலியன தடையில்லாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தடையுள்ள மாநிலங்களிலேயே  சட்டங்களை மீறி, திருட்டுத்தனமாக கசாப்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் தான் அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப் படும் பசுமாடுகள் பிடிக்கப்படுகின்றன.

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

Tamilnadu Tavhith Jamad mischevous poster on cow 2015

புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரை போடும் போலி வேடங்கள்: புளூ கிராஸ் சொசைடி போன்ற நிறுவனங்களும் இவ்விவகாரங்களில் இரட்டைவேடம் போட்டு வருகின்றன. ஏதோ மிருகங்கள் கஷ்டப்படுவதைப் பற்றி, இவர்கள் கஷ்டப்படுவதாகக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள், மாமிசத்தை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதேபோலத்தான் மற்ற ஜீவகாருண்ய சங்கங்கள், அஹிம்சை போதிக்கும் இயக்கங்கள் முதலியன இத்தகைய ஜீகாருண்யம் மற்றும் இம்சைகளை ஆதரிப்பது போல மௌனம் சாதித்து வருகின்றன. “மாமிசம் இல்லாமல் ஒரு நாள்”, என்று போலித்தனமாக, சாது வாஸ்வானி என்ற இயக்கம் விளம்பரம் செய்து வருகிறது. அதாவது, வருடத்தில் ஒரு நாள், மிருகங்களைக் கொல்லாமல், மற்ற 364 நாட்களிலும் கொன்று சந்தோஷமாக இருக்கலாம் போலிருக்கிறது. பௌத்தர்கள் அஹிம்சை போதித்தாலும், மாமிசம் உண்டுகொண்டுதான் வாழ்கிறார்கள்.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

பக்ரீத் மிருகவதை கண்டுக்கொள்ளப்படாது: நன்றாக எல்லாவித மாமிசங்களையும் உண்டு வாழும் முகமதியர்களும் ஜீவகாருண்யத்தைப் பற்றிப் பேசுவதும், வல்லாளார் பெயரில் கூட்டங்களில் கலந்து கொள்வதும் வினோதமாகத்தான் இருந்து வருகின்றன. இவ்வாறுதான் அஹிம்சை மற்றும் மிருகவதை எதிர்ப்பு போன்றவை உள்ளன. இந்த புளூ கிராஸ் முதல் ஜீகாருண்ய இயக்கங்கள் வரையுள்ள கோஷ்டிகள் மற்ற மிருகவதைகள் நடக்கும் போது கண்டுகொள்ளமாட்டார்கள். பக்ரீத் போது, ஒட்டகம், பசு, ஆடு-மாடு என்று வெளிப்படையாகவே அறுத்து பலியிட்டு, தோலை உரித்து, ரத்தம் ஓடவைத்து பலி கொடுப்பார்கள். ஆனால், இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அவ்வப்போது, சில இரக்கமுள்ளவர்கள், நடிகைகள் முதலியோர், ஏதோ பறவைகள் எல்லாம் துன்பப்படுகின்றன, என்று அவற்றை கூண்டுகளிலிருந்து வெளியே சுதந்திரமாக பறக்கவிட்டோம் என்றும் பீழ்த்திக் கொள்வார்கள். ஆனால், இதைப்பற்றி தெரியாதது மாதிரி இருப்பார்கள்.

Beef sale in J and K state - Court ti decide DM

Beef sale in J and K state – Court ti decide DM

பீப் ஈட்டிங் – பசுமாமிசம் உண்ணுதல் பிரச்சினை: சமீப காலமாக மாட்டிறைச்சி விவகாரம் பலவிதங்களில் வெளிப்பட்டு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக ஊடங்களின் உசுப்பிவிடும் வேலைகள் தான் இதில் அதிகமாக இருக்கின்றன. இந்து சேனா அமைப்பினர் இது தொடர்பாக மாட்டிறைச்சிக்கு தடை பெறுவதில் மும்முரமாக உள்ளனர். இதுவரை, இந்த சேனா எங்கிருந்தது என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. உ. பி., மாநிலம் தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக எழுந்த வதந்தியால் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  பிறகு, கொல்லப்பட்டவரின் மகன் “லவ்-ஜிஹாதில்” ஈடுபட்டான், அதாவது, ஒரு இந்து பெண்ணை காதல் புரிந்ததால் அவ்வாறான நிலைமை ஏற்பட்டது என்று செய்திகள் வந்தன. மேலும் காஷ்மீரில் மாட்டிறைச்சி பார்ட்டி நடத்திய சுயேச்சை எம்.எல்.ஏ. ரசீத் என்பவர் சட்டசபையில் தாக்கப்பட்டார். அவர் டில்லி வந்த போது கறுப்பு மை வீசப்பட்டது[1]. சாப்பிடுகிறேன் என்றால் சாப்பிட்டு விட்டு போகலாம், பிரச்சினையே இல்லை, ஆனால், அதனை, விளம்பரப்படுத்தி, ஏன் பிரச்சினையாக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதெல்லாம், தேசிய அளவில் அதிகமாக பேசப்பட்டன. ஊடகங்கள் இவைத்தான் முக்கியமான செய்திகள் போன்று “மாட்டிறைச்சி அரசியல்” என்று தலைப்பிட்டு தினம்-தினம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

Beef eating politics - DK way

Beef eating politics – DK way

மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா?: மாடுகள் வெட்டப்படுவதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என யோகாகுரு பாபா ராம்தேவ் 27-10-2015 அன்று கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையில் அவர் ஏன் சொல்லவேண்டும். மாடுகளின் தேவை இறைச்சிற்கா, பாலுக்கா என்பதனை யார் தீர்மானிப்பது? எதற்காக மாடுகளை வைத்திருக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்பதனை யார், எதற்காக தீர்மானிக்க வேண்டும் என்று யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறு இருக்கையில் தற்போது கேரள அரசுக்கு மாட்டிறைச்சி விவகாரம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் ஜந்தர் மந்தரில் கேரள பவன் உள்ளது. இங்கு மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறது இதனை நிறுத்துங்கள். இல்லாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஒரு குரல் போலீஸ் ஸ்டேஷன் போனில் ஒலித்தது[2]. இந்துசேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் இந்தப் புகாரை அளித்தார்[3]. இதனையடுத்து போலீசார் கேரள பவனுக்கு சென்று பிரச்னைகள் ஏதும் வராமல் இருக்க மாட்டிறைச்சியை நிறுத்தி கொள்ளுங்கள் என கேட்டு கொண்டனர். இப்புகாரை அடுத்து, அங்கு டெல்லி போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்[4]. ஆனால் அங்கு பரிமாறப்பட்டது எருமை மாட்டு இறைச்சி என்று பின்னர் தெரியவந்தது[5]. டெல்லியில் பசு இறைச்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 20 போலீஸார் உடனே கேரளா பவன் உணவகம் சென்று அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதுவே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

ban-on-beef-in-maharashtra-cartoon

ban-on-beef-in-maharashtra-cartoon

மலையாளத்தில் கிறுக்கியதும், ஆங்கிலத்தில் எழுதியதும்: கேரள தலைமைச் செயலாளர் ஜி.ஜி. தாமஸ் டெல்லியில் கூறும்போது, “கேரளா பவன் உணவகத்தில் பசு இறைச்சி பரிமாறப்படவில்லை. எருமையின் இறைச்சியே பரிமாறப்பட்டது. இதுவே மெனு அட்டையில் பீஃப் (மாட்டிறைச்சி) என்று கூறப்பட்டுள்ளது” என்றார். “கேரளா பவனில் உள்ளுரை ஆணையரின் அனுமதியில்லாமல் சில அமைப்பினர் உள்ளே நுழைந்துள்ளனர். இதுபற்றி டெல்லி காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். டெல்லி போலீஸார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்திருக்கலாம். எனினும், நடந்த சம்பவங்களை கருத்தில்கொண்டு உணவக மெனுவில் இருந்து மாட்டிறைச்சி தற்காலிகமாக நீக்கப்படுகிறது” என்றார் ஜி.ஜி. தாமஸ்[6]. ஆனால், இல்லை, நாங்கள் விற்போம் என்று அறிவித்து விட்டது[7]. என்.டி-டிவி தனது செய்தியில், ஒரு மாதிரியாக சொல்வதிலிருந்தே இதில் விவகாரம் இருக்கிறது என்று தெரிகிறது[8]. “Three men who visited the Kerala House canteen yesterday noticed “beef fry” on a handwritten menu on the whiteboard. It was the only dish scribbled in Malayalam, and they wasted no time in calling the police.” நேற்று மூன்று ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள். மெனுவில் “பீப் பிரை” என்று கையினால் எழுதிவைத்ததைப் பார்த்து, நேரத்தை விரயமாக்காமல் உடனடியாக போலீசுக்கு புகார் கொடுத்தனர். மலையாளத்தில் அது கிறுக்கலாக இருந்தது, என்று நக்கலாக விளக்கும் போதே தெரிகிறது. போர்டில் உள்ளது அழகாகத்தான் உள்ளது, கிறுக்கல் ஒன்றும் இல்லை. மீன் கறி, மீன் வருவல் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுபோது, அடுத்ததை ஏன் மலையாளத்தில் இருக்க வேண்டும்? அதுதானே “பசு மாமிச வருவல்” என்று அறியப்பட்டது! ஆக, இதில் யார் பொய் சொல்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

28-10-2015

[1] http://www.ndtv.com/india-news/j-k-lawmaker-engineer-rashid-attacked-with-black-ink-in-delhi-1233954

[2] தினமலர், கேரளா பவனில் மாட்டிறைச்சி மெனு ; இந்து சேனா எதிர்ப்பால் பதட்டம் ,பதிவு செய்த நாள் அக் 27,2015 12:56; மஅற்றம் செய்ய்த நாள். அக் 27,2015 15:56;

[3] http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7809438.ece

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1373708

[5] http://www.maalaimalar.com/2015/10/27162437/Oomen-chandy-Mamata-Kejriwal-c.html

[6] தி.இந்து, கேரளா பவன்மாட்டிறைச்சிவிவகாரம்: டெல்லி போலீஸ்சோதனையும் 10 முக்கிய தகவல்களும், Published: October 27, 2015 13:21 ISTUpdated: October 27, 2015 19:39 IST.

[7] http://www.deccanherald.com/content/508682/beef-back-kerala-house-menu.html

[8] http://www.ndtv.com/india-news/cops-rush-to-kerala-house-after-call-alleging-beef-on-menu-1236740

நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?

மே 10, 2013
நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்?முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்?: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.

  • நாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா?
  • ஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா?
  • தாடி, மீசை வைக்கலாமா, கூடாதா?
  • புகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா?
  • தாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா?
  • பூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா?
  • நடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா?
  • பாட்டு பாடலாமா, கூடாதா?

என்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.

ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்? சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க்! ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.

சபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.

மதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].

வந்தே மாதரம் கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்!

வந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்?

பத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா? இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா?

© வேதபிரகாஷ்

10-05-2013


[5] An angry Speaker Meira Kumar ticked off Barq for walking out during the national song whenParliament was being adjourned sine die on Wednesday. “One honourable member walked out when Vande Mataram was being played. I take very serious view of this. I would want to know why this was done. This should never be done again,” Kumar said.

[6] “I absent myself when Vande Mataram is played to avoid any awkward situation but here I was present when it was being played,” Barq said, indicating that he was caught in a situation that he normally ducks.

http://timesofindia.indiatimes.com/india/Cant-be-part-of-Vande-Mataram-BSP-MP-Barq/articleshow/19978268.cms

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)

மே 7, 2013

இன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (2)

காங்கிரஸின் சக்தியின் காரணம்: 60 வருடங்களாக மத்தியிலும், மாநிலங்களிலும் பொதுவாக சிறிது இடைவெளி அல்லது கூட்டணி மாறுதல் அல்லது தற்காலிக தோல்வி என்று காங்கிரஸ் பல உருவங்களில், பெயர்களில், கூட்டணிகளில் ஆட்சி செய்து வரும் நிலையில், ஓரளவிற்கு எல்லாதுறைகளிலும் (ராணுவம், போலீஸ், நிதிநிறுவனங்கள் முதலியவை), எல்லா தொழிற்சாலை மற்றும் வியாபார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முடிவுகளைத் தீர்மானிக்கும் பெரிய மணிதர்கள் என அனைத்து நபர்களிடமும், அனைவற்றிலும் தொடர்ந்து ஆதிக்கம், தாக்கம் மற்றும் பலம் கொண்டிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அங்கங்கு வேலை செய்யும் தலைமை அதிகாரிகள், அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று யாராக இருந்தாலும் காங்கிரஸ்காரகள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். காங்கிரஸ் ஆட்சிய்யில் உள்ளது இல்லை என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

இந்திய சரித்திரத்தில் சீக்கிரர்களின் பங்கு: சீக்கியர்கள் இந்தியாவைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளனர். முகலாயர்-முகமதியர்-முஸ்லீம் காலம் தொடங்கி, ஆங்கிலேயர் காலம் வரை அவர்களது பங்கு, சேவை, தியாகம் முதலியன விலைமதிப்பற்றது. இஸ்லாத்தின் உக்கிரத்தை, தீவிரத்தை, தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை பலவிதங்களில் எதிர்கொண்டு, இந்தியாவை சிக்கியர்கள் காத்துள்ளனர். முகலாயர் காலத்தில் சீக்கிய குருக்கள் அதிக அளவில் துன்ன்புறுத்தப் பட்டார்கள்[1].  இருப்பினும் சுதந்திரமாக போராடி வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலும் அவர்கள் தங்களது தனித்துவத்தைக் காட்டி வந்தனர். சுதந்திரத்திற்கு பின்னாலும், முப்படைகளில் சிறந்து விளாங்கி வந்தார்கள்.

காந்தி குடும்பம், சீடர்களுக்கு எதிரன விதம்: ஆனால், இந்திர காந்தி காலத்தில், காங்கிரஸுக்கு ஏதிராக, குறிப்பாக தனக்கு எதிராக அரசியல் சக்தி உருவாகிறது என்று அறிந்ந்தும், 1971ற்குப் பிறகு, பாகிஸ்தான் பங்களாதேசம் உருவானதால், பழிவாங்க திட்டம் போடும் என்றும் தீர்மானித்து, சீக்கியர்களை வைத்து ஆதாயம் தேடலாம், என்ற எண்ணத்தில் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே என்ற சீக்கிய குருவை முன்னிருத்தி தனது வேலை ஆரம்பித்தார்[2]. ஆனால், பிறகு அவரே இந்தியாவிற்கு எதிராக திரும்யதும், 1984ல் “ஆபரேஷன் புளூ ஸ்டார்” என்ற ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பிந்தரன்வேலே கொல்லப்பட்டார். சீக்கியர் தங்களது புண்ணியஸ்தலம் அவமதிக்கப்பட்டது, மாசுப்படுத்தப் பட்டது என்று கொண்டு, அதனை அவ்வாறு செய்தவர்களை பழிவாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டினர். விளைவு, சத்வன் சிங் மற்றும் பியான் சிங் என்ற இருவர், இந்திரா காந்தியை சுட்டுக் கொண்டர். கோபமுற்ற ராஜிவ் காந்தி பேச்சால், சீக்கியர்களுக்கு எதிராக, கலவரம் தூண்டிவிடப்பட்டு, 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் கங்கிரஸ் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றவவர்களுக்கு தொடர்பு இருந்தது.

காங்கிரஸின் சதி  2012லேயே ஆரம்பித்துள்ளது: ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[3]. கேப்டன் அம்ரித் சிங் என்பவரை காங்கிரஸ் கட்சி தலைவராக அமைத்து, சோனியா சீக்கியர்களைப் பிளக்க சதிசெய்து வருகிறார் என்று தெரிகிறது. தற்பொழுது, பிஜேபி கூட்டணியில் ஆளும் கட்சி, சிரோமணி அகாலிதள் உள்ளது. இந்த கூட்டணியை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பது தான் சோனியாவின் நோக்கம். 2012 ஆண்டில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில், எவ்வளவு சூழ்ச்சி செய்து பார்த்தும், ஆக்ரோஷத்துடன் பிராச்சாரம் செய்தும், மன்மோஹன் சிங்கை முன்னிருத்தியும், பல யுக்திகளைக் கையாண்டுப் பார்த்தது. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பிஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[4].

தில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்பு, ஆர்பாட்டம், போராட்டம்: சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[5] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுகின்றனர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து வருகிறது.

வருடாவருடம் ஒரே பிரச்சினை எழுப்பப்படுதல்[6]:முதலில் கடந்த தேர்தலில் கேப்டன் அம்ரித் சிங், பிந்த்ரன்வாலே பூதத்தைக் கிள்ளப்பியுள்ளார். சந்த் ஜெர்னைல்சிங் பிந்தரன்வேலே நினைவிடம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஐந்து உறுப்பினர் கொண்ட எஸ்.ஜி.பி.சி (SGPC) என்ற அமைப்பும் ஒப்புக்கொண்டது[7]. இருப்பினும், இப்பொழுது மறுக்கிறது. அது சீக்கியர்களை தேசியவிரோதமான நிலையில் காட்டப்படும் என்று அமுக்கி வாசிக்கின்றனர். சிரோமணி அகாலிதள் கட்சியும் மறுத்தது. இந்நிலையில் தான், ஆனால், இப்பொழுது, சீக்கியர்களைத் தூண்டி விட்டுள்ளதால், அவர்கள் அதனை எடுத்துக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் எதிர்பார்த்தபடியே, சீக்கியர்கள் இரண்டுவிதமாக பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கிடையில், பிந்தரன்வாலே படம் இருந்த சுவர் கடிகாரம் அப்புறப்படுத்தப் பட்டு, சாதாரண கடிகாரம் 01-05-2013 அன்று வைக்கப்பட்டது[8]. இருப்பினும், பிந்தரன்வாலேவின் பெயர் கல்வெட்டில் உள்ளது.

பிந்தரன்வாலே படம் இருக்கலாம், ஆனால் பெயர் இருக்கக் கூடாது: குருத்வாராவில் எந்தவித படமோ, பெயரோ இருக்கக் கூடாது என்று ஒரு பிரிவினரும், படம் எடுத்தாலும், பெயரை எடுக்கக் கூடாது என்று அடுத்த பிரிவும் விவாதித்து வருகின்றன[9]. பெயரை எடுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்[10]. ஆனால், கடிகாரத்தை எடுத்தவர்கள், பெயர் கொண்ட கல்வெட்டையும் எடுப்பார்கள் என்று சில சீக்கியர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். சரப்ஜித் சிங் தியாகியாகும் போது பிந்தரன்வாலே எப்படி தியாகி ஆகமாட்டார் என்றுதான் சாதாரண சீக்கிய மக்கள் கேட்கிறார்கள், இங்குதான் காங்கிரஸ் புகுந்து விளையாடியுள்ளது.

© வேதபிரகாஷ்

06-05-2013


[1] இந்த சரித்திர நிகழ்ச்சிகளைக்கூட இந்திய செக்யூலரிஸ ஆட்சியாளர்கள் மறைத்துள்ளார்கள். அவற்றை இந்தியர்கள் தெரிந்து கொண்டால், முகமதியர்களின் கொடூர, குரூர குணாதிசயங்கள் மற்றுன் அசுரத்தனம் வெளிப்பட்டுவிடும் என்று மறைத்துள்ளார்கள்,, இன்னும் மறைத்து வருகிறாரர்கள்.

[2] ஜகத்ஜித் சிங் சௌஹான் என்பவர் காலிஸ்தான் இயக்கத்தை ஆரம்பித்து, கனடாவிலிருந்து தாந்தான் ஜனாதிபதி என்று பிரகடனம் செய்து கொண்டார். அப்பொழுது இஸ்லாமிய பிரிவினைவாதிகள் அவருக்கு உதவி வந்தனர்.

[3] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரிஸத்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.

[10] Punjab Youth Congress chief Vikramjit Singh Chaudhary has asked the Shiromani Guruduwara Prabhandhak Committee to remove the name of militant preacher Jarnail Singh Bhindranwale inside the newly-constructed Operation Bluestar memorial in the Golden Temple complex http://www.hindustantimes.com/Punjab/Jalandhar/Remove-Bhindranwale-s-name-from-memorial-PYC/SP-Article1-1053864.aspx

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

ஏப்ரல் 23, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

Boston-marathon-bombing-headline

பாஸ்டன்முதல்பெங்களூருவரைதீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:

  • 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
  • இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
  • இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
  • 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
  • 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
  • அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

Boston bomber - alert notice

பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.  இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

boston-marathon-suspects

குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.

Boston bomber - a believer of Islam

தேசபக்திநாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tamerlan Tsarnaev as a boxer

பாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.

Boston-Marathon-bombing-suspect-No.-2-in-crowd

வீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

boston-marathon-bombing-injuries-hard-to-treat-shrapnel

கால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Location of boston_marathon bombings

தப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.

Boston bomber - hiding in a boat aerial view

சந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.

Boston-marathon-bombing-suspect-dzhokhar-tsarnaev-captured

விரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

boston blast victim a woman

குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

1)       April 15, 2:50 pm – Bombing attacks at the finish line of the marathon.2)   April 18, 10:30 pm – MIT police officer Sean Collier shot and killed.

3)   April 18, 11:00 pm – SUV hijacked by Tsarnaev brothers.

4)   April 18, shortly thereafter – SUV driver released unharmed.

5)   April 18, 11:18 pm – Surveillance photos identify brothers at an ATM.

6)   April 19, 1:00 am – Gunfire opens up on Laurel Ave. in Watertown between police and suspects. Tamerlan Tsarnaev is critically injured in the incident and later reported dead. Dzhokhar Tsarnaev escapes.

7)   April 19, 7:00 pm – More gunfire breaks out in Watertown, on Franklin St.;

Dzhokhar is found hiding in a stored boat and taken into custody.

இவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும்  பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

வேதபிரகாஷ்

22-04-2013


[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html

[5] தினமலர், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2013,07:49 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2013,08:55 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=694915

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

ஏப்ரல் 12, 2013

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)

Where the three immolated themselves - Chawli mutt

நேரு குடும்பத்தினர் மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: “செக்யூலரிஸம்” பேசி மதசார்பின்மையைக் கொச்சைப் படுத்தி, “கம்யூனலிஸம்” என்ற நஞ்சைவிட, மதவெறி ஏற்றி, இந்தியாவில் ஜிஹாதியை வளர்த்ததில் நேரு குடும்பத்தினருக்கு அதிகமான பங்கு உள்ளது. நேரு மேற்கத்தைய கலாச்சாரத்தில் ஊறியதால், இந்திய கலாச்சார காரணிகள் பற்றி அவருக்குக் கவலை இல்லாதிருந்தது. மகள் இந்திரா பிரியதர்சனி, வீட்டுக்கு காய்கறி விற்றுவந்த பிரோஸ் கந்தியை மணந்த பிறகு, அவர் இந்திரா காந்தி ஆனார். பிரோஸ் கந்தி, பிரோஸ் காந்தி ஆனார். அவருடைய மகன் ராஜிவ் காந்தி, சோனியா மெய்னோவை கல்யாணம் செய்து கொண்டு கத்தோலிக்கக் கிருத்துவரானார். ராஜிவ் கொலைச்செய்யப்பட்டப் பிறகும், சோனியா தனது மகன் மற்றும் மகளை கத்தோலிக்கர்களாகவே வளர்த்தார். ராஹுல் ஒரு தென்னமெரிக்க நாட்டு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள, பிரியங்கா வெளிப்படையாகவே ராபர்ட் வதேராவுக்கு மனைவியாக்கப்பட்டார்.

Modi-Rahul-Sonia-Advani

சோனியா மதவாத – ஜாதி அரசியலைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் விதம்: இப்படி பட்ட குடும்பத்தினர், இந்தியர்களை ஏமாற்றி ஆட்சி செய்து வருகின்றனர். அதற்கேற்றபடி அவர்களின் அடிவருடிகள் தங்களது பதவிற்காக, பணத்திற்காக, வாழ்க்கை வசதிகளுக்காக எல்லாவற்றையும் புனிதமாக்கி, சோனியவை “அம்மையார்” ஆக்கி ஊழலில் திளைத்து வருகின்றனர். ஆகவே எப்படி தனது கணவர் ராமஜஜென்மபூமி விஷயத்தை பிஜேபிக்கு எதிராக உபயோகப்படுத்தினாரோ, அதேபோல சோனியா லிங்காயத் பிரிவினரைப் பகடைக்காயாக்கி உள்ளார்.

Sonia attending Lingayat conference Aprl 2012

ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார்[1]: கர்நாடகத்தில் மடங்கள் பிரசித்திப் பெற்றவை மட்டுமல்லாது, நன்றாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மடமும் தனக்கான ஆசாரத்தை, தொடர்ந்து வரை முறைகளைப் பின்பற்றி வருகின்றன. பொதுவாக விதவைகளுடன் மடாதிபதிகள் நெருக்கமாக உட்காரமாட்டார்கள், அவர்களுடன் பொருட்களைக் கொடுத்து வாங்கிப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், ஆசாரம் பார்க்கும் கர்நாடக மடாதிபதி எப்படி விதவை சோனியாவிற்கு மதிப்பளித்தார் என்று தெரியவில்லை. புகைப்படங்களில் 105 வயதான சித்தகங்கா மடாதிபதி, கத்தோலிக்க சோனியா மெய்னோவிற்கு அத்தகைய மதிப்பை அளித்துள்ளார்[2]. ஆகவே, எடியூரப்பாவை மீறிய நிலையில் சோனியா இருந்துள்ளார். திருமலையிலும் காங்கிரஸ்காரகள் இதவிட மோசமாக நடந்து கொண்டார்கள்[3](ஆகற்டு 2011ல் சோனியா குணமடைய மொட்டை அடித்துக் கொண்டனர்[4]). இதனால், எடியூரப்பாவை சோனியா பயன்படுத்திக் கொண்டு, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க இறுதி அஸ்திரத்தை விடுத்துள்ளார் என்று தெரிகிறது.

PHOTO CAPTION

லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் என்று இருகட்சிகளையும் ஆதரிக்க முடியாது: லிங்காயத்தார் கர்நாடகத்தில் அரசியல் செல்வாக்கு, பணம் முதலியவைக் கொண்ட பலம் பொறுந்திய சமுதாயத்தினர் ஆவர். பிஜேபி லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பவை முதலமைச்சராக்கி பலத்தைப் பெருக்கினர். இதனால், சோனியா எப்படியாவது, அவர்களைக் கவிழ்க்க திட்டமிட்டார். பரத்வாஜ் கவர்னராக அனுப்பப் பட்டார். முதலில் ரெட்டி சகோதர்கள் பிரச்சினை வைத்துக் கொண்டு தொந்தரவு செய்தார். பிறகு எடியூரப்பாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்து, அவரை பதவி விலகச் செய்தார். எடியூரப்பா கட்சியிலிருந்து விலகவும் செய்தார். அந்நிலையில்தான், சோனியா லிங்காயத்தார் நிகழ்சியில் கலந்து கொண்டார். ஆனால், லிங்காயத்தார் பிஜேபி மற்றும் சோனியா காங்கிரஸ் இரு கட்சிகளையும் ஆதரிக்க முடியாது.

Sonia faces

லிங்காயத்தார் பிளவுபட்டுள்ளனரா: காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. ஆனால், இதை ஜாதி பிரச்சினையாக்க அவர்களின் உள்மட விவகாரங்களை வெளிபடுத்தும் விதத்தில் சவ்லி / சௌலி மட விஷயம் அமைந்துள்ளது[5]. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[6]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

மடங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது அரசியல் மட்டும் அல்ல, துவேஷ நோக்கு உள்ளது: லிங்காயத்து மடங்களுக்குள் வேற்றுமை ஏற்படுத்தும் விதத்தில் தான், ஊடகங்கள் வேலை செய்துள்ளன[7]. பிறகு மனோதத்துவ விளக்கம் என்ற போர்வையில், கிருத்துவ மதத்துடன் ஒப்பிடும் போக்கும் காணப்பட்டது. கிருத்துவ அடிப்படைவாத அமைப்புகளில் நூறு-ஆயிரம் என்று தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் ஹிப்னாடிஸம், பரனாய்டு, போதை மருந்து முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். ஆகவே, அதை இதனுடன் ஒப்பிடுவது தவறு மட்டுமல்லாது, திசைத்திருப்பும் விஷமத்தனமாகும். ஏனெனில் இந்தியர்கள் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், மேனாட்டவர்கள் இதைப் படித்து நிம்மதி கொள்வர் அல்லது நாளைக்கு, ஆஹா, இந்தியாவில் கூட எங்களை போன்ற மடையடர்கள் இருக்கிறார்கள் அல்லது அவர்கள் கூட கிருத்துவர்களைக் காப்பியடித்துதான், அத்தகைய முறைகளைக் கற்றுக் கொண்டார்கள் என்றும் பல்கலைக்கழக புரொபசர்களை வைத்து எழுத வைப்பார்கள்.

CM-Visited-Siddaganga-Mutt-31-07-2010

31-07-2010 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளார்.

CM-Visit-to-Siddaganga-Mutt-02-08-2011

02-08-2011 அன்று எடியூரப்பா சித்தகங்க மடாதிபதியைச் சந்தித்துள்ளார்.

28-04-2012 அன்று சோனியா சித்தகங்க மடாதிபதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சந்தித்துள்ளார்

Siddhaganga mutt meets Modi

இதன் பிறகு, சோனியாவை மதித்த அதே லிங்காயத்து மட துறவிகள் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளனர். 105வது பிறந்த நாள் நினைவுப் பட்டயத்தை அவருக்கும் அளித்தனர்.

Siddhaganga mutt meets Modi2

அவர்கள் மோடியுடன் உட்கார்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இப்படி எல்லா கட்சித் தலைவர்களயும் சந்தித்துப் பேசுவது, அரசியல் ஆதாயத்திற்காகவா, இல்லை, தேர்தலில் ஓட்டுகளை ஜாதி ரீதியில் பிரிக்கவா? வெளிநாட்டவர் “பிரித்தாண்டனர்” என்று சொல்லி சமாதனம் செய்ய முடியாது, ஏனெனில், இப்பொழுது துரோகத்தை செய்வது இந்தியர்கள் தாம், ஆட்சியைப் பிடிக்க இவ்வாறு செய்கிறோம் என்றால், முஸ்லீம்களை மறுபடியும், இன்னொரு பிரிவினையை உருவாக்க வழி செய்கின்றனர் என்றாகிறது. காஷ்மீரத்தில் ஏற்கெனவே பிரிவினை தீவிரவாதம், பயங்கரவாதத்துடன் இணைந்து செயல்பட்டு வந்து நரகத்தை உண்டாக்கியுள்ளது. உவைசி போன்றவர்கள் வெளிப்படையாகவே அடுத்த தாக்குதலைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசி மிரட்டுகின்றனர்.

Courtesy- Keerthana Dharavalli- facebook

இவற்றின் மகத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், தேர்தலின் போது ஆதரவு என்று வரும்போது, வெளிக்காட்டி விடும். முஸ்லீம்களை மதரீதியில் ஒன்று சேர்த்து ஓட்டு வங்கியை உருவாக்கி, அதற்கேற்றபடி தொகுதிகளையும் உருவாக்கி அல்லது மாற்றியமைத்து, இத்தனை தொகுதிகளில் அவர்கள் தாம் வெற்றியை நிர்ணயிப்பார்கள் என்று அமைத்த பிறகு, இந்துக்களை இப்படி பிரிப்பது தான், தேசவிரோத கொள்கையை எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

12-04-2013


[1] பெண்மை என்ற நோக்கில் இவ்வாறு அலசவில்லை, மடாதிபதிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டப் படுகிறது. ஒரு மடாதிபதி கண்ணடி போட்டுக் கொள்கிறார் என்று விமர்சிக்கும் நாத்திகர்கள் / செக்யூலரிஸ்டுகள், மற்ற சாமியார்கள் சொகுசு கார்களில் பயணித்து, சொகுசாக, ஜாலியாக வாழ்கிறார்களே என்று எடுத்துக் காட்டுவதில்லை.

[2] திருப்பதியிலும் சோனியா இதேவிதமான பிரிவினை வேலையை செய்துள்ளார். இவருக்காக தனியாக எலிபேட் வசதி செய்யப்பட்டது. மற்றொரு முறை, திருமலைக் கோவில் பூசாரியே வந்து சோனியாவிற்கு பிரசாதம், துணி முதலியவற்ரைக் கொடுத்து ஆகமவிதிகளை மீறியுள்ளார். அதாவது, சோனியா காங்கிரஸ்கரகள் அவரை அவ்வாறு ஊக்குவித்துள்ளனர்.

The Hindu, Friday, Jul 18, 2008; http://www.hindu.com/2008/07/18/stories/2008071853030300.htm

[4] காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் பூரண குணமடைய வேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் தாமோதரராஜ நரசிம்மா, சோனியா பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபட்டார். பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொட்டை அடித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, இந்திய மக்களுக்காக ஓய்வின்றி கடுமையாக உழைத்ததால் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் பூரண குணமடைய வேண்டி ஏழுமலையானுக்கு மொட்டை போட முடிவு செய்திருந்தேன். இதன்படி எனது நேர்த்திக்கடனை செய்து முடித்துள்ளேன். என்றார். http://cinema.maalaimalar.com/2011/08/25113618/andhra-deputy-cm-bud-at-tirupa.html

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)

ஏப்ரல் 11, 2013

 சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)

Jagannaath Swami - colour photo

மூன்று சீடர்கள் தீயில் குளித்த விதம்: இந்நிலையில், கருவறைக்குள் தலைமை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். 08-04-2013 அன்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, “மளமள’வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்தனர்[1]. சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோது கோரக்காட்சியை கண்டு அலறினர். பக்தர்களும் மடத்து நிர்வாகிகளும் சுதாரித்து கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்[2]. தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர். இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”, என, குறிப்பிடப்பட்டிருந்தது. பிரணவ் குமார் சுவாமி இளையவர், அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அதனால், அவர்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்[3]. இதைத் தவிர வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதில் அம்மூவரும் மேற்கொண்ட முடிவு பற்றிய விவரங்கள் இருந்தன.

Pranav Swami - colour photo

சிவகுமார்,  ஶ்ரீஞானேஸ்வர் அவதூதர் ஆனது: சிவகுமார் என்பவர்தாம் இம்மடத்தை ஆரம்பித்தார். சௌலி கிராமம் பீதரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் குக்வாட், என்ற ஆதானி என்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள, ஊரைச் சேர்ந்தவவர். சங்கய்யா சாமி என்ற போலீஸ்காரர் தான் இவரை சௌலிக்கு 1989 அல்லது 1990ல் அழைத்து வந்தது. 1990லேயே சங்கய்யா கொல்லப்பட்டார், ஆனால், அது மடத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்று போலீஸார் கூறுகின்றனர்[4]. இவர்தாம் ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் (Sri Ganeshwar Avadhoot) என்று அழைக்கப்படலானார். முதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா என்பவர் கொடுத்த இடத்தில் ஆசிரமத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அது சௌலி முத்யா என்று அழைக்கப்பட்டது. இது மராத்தி பேசும் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தது. ஆனால், இது பசவேஸ்வரர் கொள்கைகளைப் பின்பற்றாமல், தனக்கேயுரிய பாதையில் சென்றது. கடந்த ஆண்டுகளில் மடத்திற்கு பணம் அதிகமாக வர ஆரம்பித்தது. லிங்காயத் பிரிவைச் சேர்ந்த இந்த மடம் சொத்து விஷயமாக[5] பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது[6]. மடத்திற்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன.

KPN photo

நிலமதிப்பு உயர மடம் பிரச்சினையில் சிக்குண்டது: 2007ல் சௌலியில் நிலத்தின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிச்சுற்றுப்பாதை / சாலை அமைக்கப்பட்டபோது, அது பீதர் வழியாகச் சென்றதால், நிலமதிப்புக் கூடியது. இதனால், அம்மடத்தின் விஸ்தாரன திட்டங்கள் முடங்கின. முன்பு ஒப்புக்கொண்ட மாதிரி, நிலத்தை மடத்திற்கு விற்க விவசாயிகள் விரும்பவில்லை. இதனால், சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. மடாதிபதியின் சீடர்கள், நிலத்தின் சொந்தக்காரர்களின் மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பசவராஜப்பா என்பவரை கைது செய்யும்படி வற்புறுத்தினர். அவர்தாம், மாருதி சாமியைக் கடத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினர்[7]. இதற்கு கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல மடங்கள் உள்ளன, அவை தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன[8]. ஆக சில சீடர்களுக்கு சொத்து, பதவி தவிர இத்தகைய ஆசைகளும் உள்ளன என்று தெரிகிறது.

KPN photo

அஷோக் சுவாமி ஏற்படுத்திய பிரச்சினைகள்: 1989ல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராஞ்சி சகோதரர்கள் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அஷோக் சுவாமி என்ற சீடரின் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. இவர்தாம் முன்னர், ஞானேஸ்வர் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு இடையே, பிளவு உண்டாக்க சதி செய்தார் என்று கூருகின்றனர். 28-02-2013 அன்று அவர் ஜீவன்முக்தி அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டதற்கும் காரணம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர பாடில் (Karnataka Industrial Areas Development Board officer Rajshekhar Patil) என்ற கர்நாடக அரசு தொழிற்துறை மேம்பாட்டு வாரிய அதிகாரியின் மகளுக்கு இருந்த தண்டுவடப் பிரச்சினையை மடாதிபதி தனது ஆசிர்வாதத்தால் போகியபிறகு, அவர் நெருக்கமானது, இவருக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, மாருதி சுவாமி மறைந்த வழக்கில், போராஞ்சி சகோதரர்களை இணைத்து ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷன்களையும் போட்டுள்ளார்[9]. ஆக, உள்ளூக்குள்ளே ஒரு ஆள் இருப்பதும் தெரிகிறது.


[6] The mutt, which attracts followers from the Lingayat community, has been dogged by controversies over property related issues.

http://articles.timesofindia.indiatimes.com/2013-04-08/bangalore/38372031_1_suicide-note-seer-pontiffs