Archive for the ‘வித்யா’ Category

“தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையும், காங்கிரஸ்-கம்யூனிஸ தகாத உறவும், செக்யூலரிஸ விபச்சாரமும், பொய் பிரச்சாரமும்!

நவம்பர் 1, 2013

“தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையும், காங்கிரஸ்-கம்யூனிஸ தகாத உறவும், செக்யூலரிஸ விபச்சாரமும், பொய் பிரச்சாரமும்!

Why anti-hindu Hindu

பாட்னாவில்  குண்டு  வெடித்த  போது, கங்கணாவுடன் இருந்த ஷிண்டே,  வித்யா  என்றால்,  உடனே  நடவடிக்கை  என்றதேன்?: வித்யா சுப்ரமணியம் தில்லியில் பார்லிமென்ட் தெருவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் “தான் எழுதிய கட்டுரைக்காக ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து மிரட்டல் தொலைபேசிகள் வந்துக் கொண்டிருப்பதாக” புகார் கொடுத்ததாக அஜய் மாக்கன் என்ற காங்கிரஸ் தொர்பாளர் ஊடகங்களுக்குக் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[1]. உடனடியாக அவர் உள்துறை அமைச்சர் ஷிண்டேவிற்கு ஒரு கடிதம் எழுதி, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்[2]. ஷிண்டேயும் உடனே “நடவடிக்கை எடுக்கப் படும்”, என்றார்.  பாட்னாவில் குண்டு வெடித்தபோது, கங்கணாவுடன் இருந்த ஷிண்டே, வித்யா என்றால், உடனே நடவடிக்கை என்றது ஆச்சரியம் தான்! அதுமட்டுமல்லாது, மாக்கன் ஒருபடி மேலே போய், மோடி-பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கைக்கு சுதந்திரம் இப்படித்தான் இருக்கும் என்றும் விமர்சித்தார். இதற்குள் புகார் கொடுத்ததாகக் கூறப்பட்ட வித்யா சுப்ரமணியம், தான் அவ்வாறு புகார் கொடுக்கவில்லை என்றும், இதற்காக காங்கிரஸிடம் தான் செல்லவில்லை[3], எந்த அரசியல் கட்சியிடமும் செல்லமாட்டேன் என்று டுவிட்டரில் அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டன. தான் காங்கிரஸிடம் செல்லவில்லை என்றாலும்[4], காங்கிரஸ் ஏன் தொடர்ந்து இ[ப்பிரச்சினையை எழுப்பவேண்டும்? ஆனால், இவர் மோதிக்கு எதிராக எழுதியுள்ள மற்ற கட்டுரைகள் சந்தேகத்தை எழுப்புகின்றது. மோதி பிரதம மந்திரி பதவிக்கு லாயக்கில்லாதவர் என்று ஒரு கட்டுரை உள்ளது[5].

செய்திகள் அறிவிக்கப் படுகின்றனவாஉருவாக்கப் படுகின்றனவா?: 31-10-2013 ஆர்.எஸ்.எஸ்.ஆட்கள் என்று சந்தேகிக்கப் படுபவர்கள், “ஹிந்து அலுவகத்தில் அதிரடியாக நுழைந்தனர்” என்று தலைப்பிட்டு செய்தி “ஹிந்துஸ்தான் டைம்ஸ்” வெளியிடப்பட்டுள்ளது. உள்ளே, நான்கு அல்லது ஐந்து பேர் வித்யா சுப்ரமணியம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட கட்டுரையின் மீது புகார் அளிக்க வந்ததாக உள்ளது. வித்யாவும் தனக்கு மிரட்டல் தொலைபேசிகள் வந்ததால் புகார் கொடுத்தார், ஆர்.எஸ்.எஸ். அலுவகத்திற்கு போன் செய்து கேட்டபோது, அவர்கள் மறுத்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டது[6]. அந்த நிருபருக்கு அந்த அளவிற்கு சாதுர்யம் இருப்பதால், அந்த சந்தேகிக்கப் படுபவர்களின் முகத்திரையைக் கிழித்தெரிந்திருக்கலாம். ஆனால், இப்படி சொதப்பலாக “செய்தி” வெளியிட்டிருப்பது, காங்கிரஸுக்கு சாதகமாக உற்பத்திச் செய்யப்பட்ட செய்தி போல உள்ளது[7]. திக்விஜய் சிங் போன்றோரே அவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் இறங்கியுள்ள போது, அதே முறையை இந்த “தி இந்து” மற்றும் “தி ஹிந்து” மற்றும் அவற்றில் சம்பந்தப் பட்டவர்கள் செய்கிறார்கள் என்பதனை கவனிக்க வேண்டும். தொழிலில் சுத்தம், நாணயம், யோக்கியதை, மதிப்பு, மரியாதை எல்லாம் வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றபோது, எப்படி அதே தரா-தரங்களை பின்பற்ற தயங்குவது ஏன்?

வித்யா சுப்ரமணியம் தில்லியில் ஏன் புகார் கொடுத்தார்?: புகார் கொடுக்கப்பட்டதால், அதன் படி இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 506ன் கீழ், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதனை தமிழ்நாட்டு போலீஸாருக்கு அனுப்பியுள்ளதாக எஸ்.பி.எஸ். தியாகி, டெபுடி கமிஷனர் செய்தி ஊடகத்திற்கு கூறியுள்ளார்[8]. சென்னையில் பதிப்பிக்கப் பட்ட கட்டுரையின் மீதான உருவாகியுள்ளப் பிரச்சினைக்கு தில்லியில் வித்யா சுப்ரமணியம் ஏன் புகார் கொடுத்தார் என்று தெரியவில்லை… ஒருவேளை, அப்பொழுது தான், இந்த சாதாரணமான விசயத்தைப் ஊதி பெரிதாக்கி விடலாம் என்று நினைத்தாரோ, என்னமோ? வித்யா சுப்ரமணியம் “தமிழ் ஹிந்துவில்” “பாதி-உண்மை-பாதி-பொய்மை” என்ற ரீதியில் பாரபட்சமாக எழுதியிருந்த கட்டுடைக்கு வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வெளிவந்தன. அவற்றுள் சில “தி ஹிந்து” வெளியிட்டது. அப்படி இருக்கும் போது, நடுநிலையோடு கட்டுரை எழுதியிருக்க வேண்டும்.

இந்து நாளிதழ்,  இந்துவிரோத நாளிதழாகி விட்டது: ஆனால், அந்நாளிதழ் வழக்கம் போல, ஒரு குறிப்பிட்ட, அதாவது, பிஜேபி-எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு, வலதுசாரி-எதிர்ப்பு என்ற ரீதியில், இந்து மதம், இந்துமதக் கொள்கைகள், நம்பிக்கைகள் மற்றும் இந்துக்களை அவதூறாக, தூஷித்து வரும் போக்கை 60-90 வயது கொண்ட முதியவர்கள் நன்றாகவே அறிந்துள்ளனர். அதனால், அவர்கள் பலமுறை இந்து நாளிதழ், இந்து-விரோத நாளிதழாகி விட்டது என்று வாங்குவதை நிறுத்தி விட்டனர். இதனால், அதன் விற்பனையும் சென்னையில், தமிழகத்தில் குறைந்து விட்டது. இப்பொழுது, படித்த இளைஞர்களும் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சித்தாந்தம் என்ற போர்வையில், ஒட்டு மொத்தமாக, பல கும்பல்கள் பிஜேபி-எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ்-எதிர்ப்பு, வலதுசாரி-எதிர்ப்பு என்ற முகமூடிகளை அணிந்து கொண்டு, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்வதையும் கண்டு பிடித்து விட்டார்கள்.

. மார்க்ஸின்  “நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு?”[9]:: இப்பொழுது கூட “நேருவை மோடி வெறுப்பதில் என்ன வியப்பு?” என்று அ. மார்க்ஸ்[10] என்ற கம்யூனிஸ சித்தாந்தியை வைத்து, எழுதப்பட்டு, பிரசுருத்துள்ளது[11]. அதன் கீழ் கட்டுப்படுத்தப் பட்ட வெளியாகும் பதில்களில் மார்க்ஸ் எப்படி பாரபட்சத்துடன், ஒடருதலைப்பட்சமான சித்தாந்த கருத்துகளை எழுதியுள்ளார் என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதில் உபயோகப்படுத்தப் பட்டுள்ள கடுமையான வார்த்தைகள், சொல்லாடல்கள், வாக்கியப் பிரயோகங்கள் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன. அவை, மற்ற அனுபவம் மிக்க ஆராய்ச்சியாளர்களுக்குத் தான் தெரியும். சாதாரண வாசகர்கள் படித்து கோபம் தான் கொள்வார்கள், ஆனால், உண்மையறியும் மற்றவர்கள் வருத்தம் கொள்வார்கள். “அடடா, இந்த ஆள் இப்படி எழுதியுள்ளாரே, மக்களிடம் திரிபுவாதங்களை வைத்து மக்களைத் தூண்டி விடுகிறாரே, ஏன் இப்படி விஷமத்தனமாக செய்கிறார்”, என்றுதான் கவலையுடன் கேட்டுக் கொள்வார்கள். அவர் கட்டுரையில் உள்ள சில சரித்திர ஆதாரமற்ற, முரண்பாடான விசயங்கள் அலசப்படுகின்றன. முதலில் அவரது வாக்கியங்கள் அப்படியே கொடுக்கப் படுகின்றன. [அடைப்புகளில் எது பொய், முரண்பட்டது, ஆதாரமற்றது என்பது எடுத்துக் காட்டப் படுகிறது]:

  1. நேருவின் மீது இந்துத்துவவாதிகள் கடும் காழ்ப்பைக் கக்குவது புதிதல்ல. [கடுமையான வார்த்தைப் பிரயோகம். நேரு எப்படி இந்து-விரோதியாக இருந்தார் என்பது இதுவரை யாரும் விளக்கமாக ஆராய்ச்சி செய்யவில்லை.O. P. Mathai எழுதிய “Remniscences of Nehru Dynasty” ஓரளவிற்கு, ஒரு கோணத்தில் தான் அலசப்பட்டுள்ளது]
  2. ஜனவரி 29, 2004-ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன், “காந்தி இரண்டு தவறுகளைச் செய்தார். ஒன்று பாகிஸ்தான் பிரிவினைக்குத் துணைபோனது. மற்றது நேருவைப் பிரதமராக்கியதுஎன்றது நினைவுக்கு வருகிறது. [நிச்சயமாக இது கருத்தல்ல, சரித்திர உண்மை. காந்தி சொன்னதையும் நினைவுகூர வேண்டும். பாகிஸ்தான் உருவானால் எனது பிணத்தின் மீதுதான் நடந்து போக வேண்டும் என்றார். என்னவாயிற்று?]
  3. இந்தியாவை ஓர் இந்து ராஷ்டிரமாக ஆக்காமல், பலரும் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற பன்மைச் சமூகமாகக் கட்டமைத்ததில் காந்தி, நேரு இருவருக்கும் மிக முக்கியமான பங்கு இருந்ததுதான் அவர்கள் மீது இத்தனை வெறுப்பு. இது காந்தியின் கொலை வரைக்கும் சென்றது. [இது சரித்திர ஆதாரமற்ற பொய்யாகும். இஸ்லாமிய மதவாதத்தால் பிளவுண்ட 1947ல் இந்தியா குடியரசானது 1950ல், நேரு இறந்தது 1964, செக்யூலரிஸத்தில் திளைத்தது 1976, …..என்றுள்ளது. அதாவது, நேருவால், ஏன் படேலால் கூட இந்தியாவை செக்யூலரிஸ நாடாக்க முடியவில்லை. எனவே செக்யூலரிஸம் பிரச்சினையல்ல, காந்தி-நேரு மட்டுமல்ல, திராவிடவாதிகள்-கம்யூனிஸவாதிகள் என எல்லோரும் பாகிஸ்தான் உருவாக ஆதரித்தது தான். இதை மறைக்க ஏதேதோ எழுதுகிறார் “மார்க்ஸ்”
  4. அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி, நந்தா, சியாமா பிரசாத் முகர்ஜி, வல்லப பந்த் முதலானோர் வலதுசாரிச் சார்புடையவர்கள். [இடதுசாரி சித்தாந்தத்தினால் இப்படி மரியாதைக்குரிய தலைவர்களை சாயம் பூசி இப்பொழுது விமர்சிப்பது சரியா என்று அவரது மேதாவித்தனத்தைத் தான் கேட்கவேண்டும்]
  5. ஜூடித் பிரவுனின் மொழியில் சொல்வதானால் பல தரப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கி உரையாடலை நிகழ்த்துவதில் நேருவுக்கு இணையானவர்கள் அல்ல. [ஆமாம், இவரைப் பொருத்தவரையில் ………………மிகப்பெரியவர், அவருக்கு யாருமே இணையில்லை, இணைவைக்கக் கூடாது………………………..இப்படி யார் சொல்வார்கள் என்று புரிந்து கொள்ளலாம்]
  6. சுருங்கச் சொல்வதானால் அமைச்சரவையிலும் கட்சியிலும் காந்தியின் மறைவுக்குப் பின் நேரு ஒரு சிறுபான்மையாக இருந்தார்.[ஆஹா, அதுதான் நேருவைப் பற்றி அதிகமாகவும், படேலைப் பற்றி குறைவாகவும் உள்ளது போலும்]
  7. டெல்லி தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள சர்தார் படேல் தொடர்பான நுண்படத் தொகுப்பின் மூன்றாம் சுருளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து அன்று காங்கிரஸ் கட்சி சுற்றுக்கு விட்ட அறிக்கை உள்ளது. அதில், “பாசிஸத்துக்குக் காரணமாகக் கூடிய ரகசிய வன்முறையை ஆர்.எஸ்.எஸ். கைக்கொண்டுள்ளது” என்று இவர்களை பாசிஸ்ட்டுகளாக வரையறுத்திருப்பது குறிப்பிடத் தக்கது [இப்படி ஒன்றைக் குறிப்பிட்டு மற்றதை மறைக்கிறார். அ. மார்க்ஸ் சித்தாந்த ரீதியில் பாரபட்சம் மிக்க கருத்துகளை கொடுப்பதில் திறமையுள்ளவர். ஆவணங்களைப் பொறுத்த வரையிலும், ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் தங்களுக்கு சாதமாக உள்ளவற்றை, அதிலும் ஒன்று அல்லது இரு வரிகளைக் குறிப்பிட்டு, மற்றதை விடுத்து எழுதும் வழக்கம் கொண்டவர். உதாரணத்திற்கு, சவர்க்கருக்கு, “காந்தி கொலை வழக்கில்” எப்படி அம்பேத்கர் உதவினார் என்று எந்த ஆராய்ச்சியாளரும் எடுத்துக் காட்ட மாட்டார்கள். எப்படியாவது, மோதியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வேண்டிய அவசியம், அதனை வெளியிடும் அவசரம் சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. பாரபட்சமின்றி சிந்தனைக்களம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மதிப்பு உயரும். . மார்க்ஸ் சித்தாந்த ரீதியில் பாரபட்சம் மிக்க கருத்துகளை கொடுப்பதில் திறமையுள்ளவர். ஆவணங்களைப் பொறுத்த வரையிலும், ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக மார்க்ஸ் போன்றவர்கள் தங்களுக்கு சாதமாக உள்ளவற்றை, அதிலும் ஒன்று அல்லது இரு வரிகளைக் குறிப்பிட்டு, மற்றதை விடுத்து எழுதும் வழக்கம் கொண்டவர். உதாரணத்திற்கு, சவர்க்கருக்கு, “காந்தி கொலை வழக்கில்எப்படி அம்பேத்கர் உதவினார் என்று எந்த ஆராய்ச்சியாளரும் எடுத்துக் காட்ட மாட்டார்கள். எப்படியாவது, மோதியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத வேண்டிய அவசியம், அதனை வெளியிடும் அவசரம் சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. பாரபட்சமின்றி சிந்தனைக்களம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மதிப்பு உயரும்.]

பத்திரிகாதர்மம், எழுத்துமரியாதை, செய்திவெளியீட்டுமுறை நாணயம் இல்லாத இதழியல் வல்லுனர்கள்: ஆனால், தவறுகளை, பிழைகளை, சரித்திர-பிறழ்சி வாதங்களை ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை. இங்குதான் பிரச்சினை வருகிறது. கட்டுரை எழுத “தி ஹிந்து” வழக்கமாக மார்க்சிஸ்ட், மற்ற கம்யூனிஸ்ட் சித்தாந்தம் கொண்ட அல்லது ஆதரவு உள்ளவர்களைத்தான் வைத்து கட்டுரை எழுதப்பட்டு வெளியிட்டு வருகிறது. இப்போக்கு 1990களிலிருந்து காணப்படுகிறது. ஏதோ அதிகமான புகார்கள் வந்து, பிரஸ் கவுன்சிலிடம் புகார்கள் அனுப்பும் நிலை வரும் போது, ஒன்று-இரண்டு கட்டுரைகளை வெளியிடுவார்கள் அல்லது அக்கருத்துக்களை சுருக்கி “ஆசிரியர் கடிதம்” கீழ் வெளியிடப்படும். ஆனால், பிரசுரிக்கப் பட்ட கட்டுரைகள், நிலைநிறுத்தப் பட்ட உண்மைகள் போல, மற்ற பத்திரிக்கைகளில், புத்தகங்களில், ஏன் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆதாரங்களாகக் குறிப்பிட்டு, சுற்றில் வந்து கொண்டிருக்கின்றன. இது அப்பட்டமான மூளை சலவை செய்யும் பிரச்சாரமே அன்றி, உண்மையான அறிவுஜீவித்தனமோ, பாண்டித்யமோ கிடையாது. இதைத்தான் 60-90 வயதான பெரியவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

இந்துதுவேஷம்,  இந்துகாழ்ப்பு,  இந்துதூஷணம் என்றே தொழில் நடத்தும் சித்தாந்த கூலிகள்: “தி இந்து”விற்கு / அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு “தமிழால் இணைவோம்” என்ற கொள்கை இருந்தால், இப்படி பத்திரிகா தர்மம், எழுத்துமரியாதை, செய்திவெளியீட்டுமுறை நாணம் முதலியவை இல்லாமல், “எதிர்-இந்து”, “இந்து-விரோதம்”, இந்து-துவேஷம், இந்து-காழ்ப்பு, இந்து-தூஷணம் என்றே தொழில் நடத்த வேண்டியிருக்க மாட்டார்கள். யாரும் கோபப் பட்டிருக்க மாட்டார்கள்; தூண்டிவிடப்பட்டிருக்க மாட்டார்கள்; தூண்டிவிட வேண்டும் என்ற எண்ணமும் வந்திருக்காது. ஆனால், இவையெல்லாம் சில நாட்களிலேயே நடந்து விட்டன. ஆகவே, நிச்சயமாக “தி இந்து” மற்றும் “தி ஹிந்து” இந்து-விரோத்தன்மையினின்று மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், “அப்படித்தான் இருப்போம்” என்றாகி விடுகிறது. பிறகு நடப்பது நடக்கும்.

© வேதபிரகாஷ்

31-10-2013


[1] Maken added that the journalist filed a complaint saying that she was getting threatning calls from the RSS. Is this the kind of politics that they want to take forward, he then questioned the BJP.

http://news.oneindia.in/new-delhi/ajay-maken-rss-threatned-senior-jounalist-over-patel-article-1333764.html

[2] Congress spokesman Ajay Maken told reporters in New Delhi that he had conveyed to home minister Sushilkumar Shinde concerns expressed by the journalist and has requested him to probe her complaint. He said she had given full details about the threats.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/RSS-threatened-journalist-over-article-on-Patel-Congress/Article1-1145715.aspx

[6]HT correspondent with all his wisdom could have very well investigated and unmasked the “suspects”, instead of pleading that “Despite repeated queries from HT, the RSS denied”. In fact, this makes to suspect the HT corres that he might have manufactured such news just to strengthen the Congresswalas accusation. Why then, the “Hindu”, “Hindu”sthan Times prefer to aid and abet Congress’ allegations?

http://www.hindustantimes.com/india-news/newdelhi/suspected-rss-men-barge-into-the-hindu-office/article1-1135611.aspx

[8] “A case under Section 506 of Indian Penal Code (punishment for criminal intimidation) was registered, regarding the complaint of Vidya Subramaniam at the Parliament Street Police station. The same day, the matter was referred to Tamil Nadu Police,” Deputy Commissioner of Police S.B.S. Tyagi told IANS.

http://www.ummid.com/news/2013/October/31.10.2013/congress-bjp-spar.html

[10] http://amarx.org/?page_id=154

எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ள: செல் பேசி:  +91 94441 20582; மின் அஞ்சல்:  professormarx@gmail.com; அஞ்சல் முகவரி:  அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-  600 020 ( A.Marx,  3/5, First Cross St.,  Sastri Nagar, Adyar, Chennai- 600 020, India ).