Archive for the ‘லாதரவு’ Category

சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)

ஏப்ரல் 11, 2013

 சௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)

Jagannaath Swami - colour photo

மூன்று சீடர்கள் தீயில் குளித்த விதம்: இந்நிலையில், கருவறைக்குள் தலைமை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். 08-04-2013 அன்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, “மளமள’வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்தனர்[1]. சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோது கோரக்காட்சியை கண்டு அலறினர். பக்தர்களும் மடத்து நிர்வாகிகளும் சுதாரித்து கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்[2]. தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர். இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”, என, குறிப்பிடப்பட்டிருந்தது. பிரணவ் குமார் சுவாமி இளையவர், அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அதனால், அவர்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்[3]. இதைத் தவிர வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதில் அம்மூவரும் மேற்கொண்ட முடிவு பற்றிய விவரங்கள் இருந்தன.

Pranav Swami - colour photo

சிவகுமார்,  ஶ்ரீஞானேஸ்வர் அவதூதர் ஆனது: சிவகுமார் என்பவர்தாம் இம்மடத்தை ஆரம்பித்தார். சௌலி கிராமம் பீதரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் குக்வாட், என்ற ஆதானி என்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள, ஊரைச் சேர்ந்தவவர். சங்கய்யா சாமி என்ற போலீஸ்காரர் தான் இவரை சௌலிக்கு 1989 அல்லது 1990ல் அழைத்து வந்தது. 1990லேயே சங்கய்யா கொல்லப்பட்டார், ஆனால், அது மடத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்று போலீஸார் கூறுகின்றனர்[4]. இவர்தாம் ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் (Sri Ganeshwar Avadhoot) என்று அழைக்கப்படலானார். முதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா என்பவர் கொடுத்த இடத்தில் ஆசிரமத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அது சௌலி முத்யா என்று அழைக்கப்பட்டது. இது மராத்தி பேசும் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தது. ஆனால், இது பசவேஸ்வரர் கொள்கைகளைப் பின்பற்றாமல், தனக்கேயுரிய பாதையில் சென்றது. கடந்த ஆண்டுகளில் மடத்திற்கு பணம் அதிகமாக வர ஆரம்பித்தது. லிங்காயத் பிரிவைச் சேர்ந்த இந்த மடம் சொத்து விஷயமாக[5] பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது[6]. மடத்திற்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன.

KPN photo

நிலமதிப்பு உயர மடம் பிரச்சினையில் சிக்குண்டது: 2007ல் சௌலியில் நிலத்தின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிச்சுற்றுப்பாதை / சாலை அமைக்கப்பட்டபோது, அது பீதர் வழியாகச் சென்றதால், நிலமதிப்புக் கூடியது. இதனால், அம்மடத்தின் விஸ்தாரன திட்டங்கள் முடங்கின. முன்பு ஒப்புக்கொண்ட மாதிரி, நிலத்தை மடத்திற்கு விற்க விவசாயிகள் விரும்பவில்லை. இதனால், சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. மடாதிபதியின் சீடர்கள், நிலத்தின் சொந்தக்காரர்களின் மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பசவராஜப்பா என்பவரை கைது செய்யும்படி வற்புறுத்தினர். அவர்தாம், மாருதி சாமியைக் கடத்தியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினர்[7]. இதற்கு கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல மடங்கள் உள்ளன, அவை தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன[8]. ஆக சில சீடர்களுக்கு சொத்து, பதவி தவிர இத்தகைய ஆசைகளும் உள்ளன என்று தெரிகிறது.

KPN photo

அஷோக் சுவாமி ஏற்படுத்திய பிரச்சினைகள்: 1989ல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராஞ்சி சகோதரர்கள் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அஷோக் சுவாமி என்ற சீடரின் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. இவர்தாம் முன்னர், ஞானேஸ்வர் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு இடையே, பிளவு உண்டாக்க சதி செய்தார் என்று கூருகின்றனர். 28-02-2013 அன்று அவர் ஜீவன்முக்தி அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டதற்கும் காரணம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர பாடில் (Karnataka Industrial Areas Development Board officer Rajshekhar Patil) என்ற கர்நாடக அரசு தொழிற்துறை மேம்பாட்டு வாரிய அதிகாரியின் மகளுக்கு இருந்த தண்டுவடப் பிரச்சினையை மடாதிபதி தனது ஆசிர்வாதத்தால் போகியபிறகு, அவர் நெருக்கமானது, இவருக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, மாருதி சுவாமி மறைந்த வழக்கில், போராஞ்சி சகோதரர்களை இணைத்து ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷன்களையும் போட்டுள்ளார்[9]. ஆக, உள்ளூக்குள்ளே ஒரு ஆள் இருப்பதும் தெரிகிறது.


[6] The mutt, which attracts followers from the Lingayat community, has been dogged by controversies over property related issues.

http://articles.timesofindia.indiatimes.com/2013-04-08/bangalore/38372031_1_suicide-note-seer-pontiffs