Archive for the ‘திருப்தி தேசாய்’ Category

கோவில் நுழைவு போராட்டம் – தருண் விஜயும், திருப்தி தேசாயும் – எதிர்ப்பின் காரணங்கள் அரசியலா, பாரம்பரியமா, சாத்திரங்களா – ஊடகங்களின் பாரபட்சம் ஏன்!

மே 21, 2016

கோவில் நுழைவு போராட்டம் – தருண் விஜயும், திருப்தி தேசாயும் – எதிர்ப்பின் காரணங்கள் அரசியலா, பாரம்பரியமா, சாத்திரங்களா – ஊடகங்களின் பாரபட்சம் ஏன்!

Tarun Vijay with BSP leader Daulat Kunwar at Silgur Temple in Uttarakhand. Photo- Virender Singh Negi-The Hinduசமீபத்தைய கோவில் நுழைவு போராட்டங்கள்: தருண் விஜய் என்ற பிஜேபி எம்.பி அதிக ஆர்வத்துடன் சில வேலைகளை செய்து வருவது தெரிந்த விசயமே. திருக்குறள் தேசிய நூல், திருவள்ளுவருக்கு சிலை என்றெல்லாம் அதிரடியாக வேலைகளை செய்து வந்தார். தமிழுக்கு ஆதரவாகவும் பாராளுமன்றத்தில் பேசிவந்தார். அவரது பேச்சுகள் மற்றும் காரியங்கள் முதலியவற்றைக் கவனிக்கும் போது, அவருக்கு ஆர்வம் இருந்தாலும், அவருக்கு இவ்விசயங்களில் ஆலோசனை கூறுபவர்கள் சரிவர விவரங்களை சொல்வதில்லை என்றே தெரிகிறது. யாரும் திடீரென்று ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு தடாலடியாக இருங்க முடியாது. குறிப்பாக இருக்கின்ற சமூகக்கட்டமைப்பை எதிர்த்து செயல்படும் காரியங்கள் பொறுமையாக, நிதானமாக செய்ய வேண்டிய நிலையுள்ளது. மேலும், திருப்தி தேசாய் போன்றோர் செய்து வரும் கலாட்டாக்களுக்கு கொடுத்த விளம்பரம், முக்கியத்துவம் மற்றும் 24×7 பாணி-பிரச்சாரம் இவருக்கு செய்யப்படவில்லை. இப்பொழுது கூட பிடிஐ கொடுத்த செய்தியை, எல்லா நாளிதழ்களும் வெளியிட்டுள்ளன. திருப்தி தேசாய் பின்னால் ஓடிச் சென்று வீடியோ எடுத்து, டிவி-செனல்களில் போட்டு, வாத-விவாதங்களை வைத்து எதையும் செய்யவில்லை.

TARUN-VIJAY attacked by mob 20-05-2016கோவில் நுழைவு அனுமதி யாருக்கு மறுக்கப்படுகிறது?: டேராடூனில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் புனா கிராமம் உள்ளது. அங்குள்ள சக்ரதா கிராமத்தில் உள்ள சில்குர் தேவதா கோயிலில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது[1]. இதேபோல, ஜவுன்சார் – பாபார் பகுதியில் 349 கோயில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய், அந்தக் கோயில்களுக்கு தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்று வழிபடும் பிரசார இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார். அதன்படி, 20-05-2016 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் சில தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சில்குர் தேவதா கோயிலுக்குச் சென்று தருண் விஜய் வழிபட்டார்[2]. பின்னர் வெளியே வந்த தருண் விஜய் மீதும் அவருடன் வந்த குழுவினர் மீதும் ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது[3].  கோவிலில் நுழைய யாருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டவர் (Backward communities), தலித் (Dalit) என்று பலவாறாகக் குறிப்பிடப்படுகின்றன.

tarun-vijay-attacked_20-05-2016போலீஸ் தரப்பில் கூறப்பட்டது[4]: இந்தச் சம்பவம் குறித்து உத்தரகண்ட் மாநில காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: “ஒரு பிரிவு சமுதாயத்தினருடன் கோயிலுக்குள் தருண் விஜய் சென்றது பற்றி கோயில் அருகே பந்தல் அமைத்துபண்டாரா‘ (உணவு வழங்கும் நிகழ்ச்சி) நடத்திய கோயில் நிர்வாகிகளுக்குத் தெரிய வந்தது. இதை அறிந்து கோயில் வாயில் எதிரே முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது வெளியே வந்த தருண் விஜய்யிடம்தாழ்த்தப்பட்டோருடன் கோயிலுக்கு எவ்வாறு செல்லலாம்?’ என்று ஒரு பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அதைத் தொடர்ந்து அவர் மீதும் குழுவினர் மீதும் அந்தக் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கோயிலுக்கு வெளியே இருந்த தருண் விஜய்யின் கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இது பற்றி தகவலறிந்ததும் உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் பகுதிக்குச் சென்று தருண் விஜய்யை மீட்டனர். அவரது தலை, கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது உடனடியாக அவரையும் மற்றவர்களையும் டேராடூனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி கிடைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்”, என்றார் உயரதிகாரி[5].

Tarun Vijay attacked 20-05-2016தருண் விஜய் மீது தாக்குதல்[6]: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தருண் விஜய், நேற்று அம்மாநிலத்தில் உள்ள சக்ரதா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அழைத்துச் செல்ல முயன்றார். அதற்காக அவர்களுடன் அவர் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தபோது, அவரது செயலுக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவிலுக்கு முன்பு, இருதரப்புக்கும் இடையே கைகலப்பு உருவானது. அதில், தருண் விஜய் தாக்கப்பட்டார். விஜய் மீது ஒரு கும்பல் கற்களை வீசி கடுமையாகத் தாக்கியது. அவர் காயம் அடைந்ததுடன், அவரது காரும் நொறுக்கப்பட்டது. அவர் டேராடூனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tarun Vijay at Silgur Temple in Uttarakhand.20-05-2016கோவிலில் நுழைய தடை ஏன், என்ன நடந்தது?: கோவிலில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பது எந்த காரணத்தால் என்று தெரியவில்லை என்கிறார்கள். மேலும் தாக்குதல்-மோதல்-கல்வீச்சு முதலியவை ஏன் ஏற்பட்டது என்றும் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார்கள். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த முதல்–மந்திரி ஹரீஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்[7]. எனினும் கோவிலுக்கு வெளியே எதனால் மோதல் ஏற்பட்டது என்பதற்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை[8]. கோவிலுக்கு செல்லும் முன்னர் அல்லது சென்று வெளியே வந்தபோது, வாக்குவாதம், கல்வீச்சு ஏற்பட்டன என்று இருவிதமாக செய்திகள் வந்துள்ளன. சமீபத்தில் பிஜேபி சாங்கிரஸ் ஆட்சி கவிக்க்க சில காரியங்கள் செய்ததும், பிறகு நீதி மன்றம் மூலம், விலக்கப்பட்ட முதலமைச்சர் மறுபடியும் அமர்த்தப்பட்டது முதலியவை நடந்துள்ளன என்பதால், ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்குமா என்றும் யோசிக்கப்படுகிறது. மேலும் பி.எஸ்.பி தலைவியுடன் கோவிலில் சென்று தரிசனம் செய்துள்ளதால், உ.பி தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு செய்யப்படும் வேலையா என்றும் நோக்கத்தக்கது. சில்கூர் தேவ்தா கோவிலுக்குள் தலித்துகள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உத்தரகாண்டில் இருந்து நியமன எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் தருண் விஜய் ஆவார்[9].

Tarun Vijay with BSP leader Daulat Kunwar at Silgur Temple in Uttarakhandவைரமுத்து கண்டனம்- தருண் விஜயை பெரியாரோடு ஒப்பிட்டது[10]: தருண் விஜய் எம்.பி. சம்பவத்துக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: “தருண் விஜய் மீதும், தலித்துகள் மீதும் நடந்த தாக்குதலை ரத்தம் கசியும் நெஞ்சோடு வன்மையாக கண்டிக்கிறேன். இது சமூக நீதியின் மீது விழுந்த காயம் என்று வருந்துகிறேன். கடவுள் மனிதனை படைத்தார் என்பது உண்மையானால், தலித்துகளையும் அவர் தான் படைத்திருப்பார். தலித்துகளை ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்காதவர்கள் கடவுளையே அவமதிக்கிறார்கள். உத்தரகாண்ட் அரசு உரிய நடவடிக்கை எடுத்து சமூகநீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு வன்முறை இனி நிகழாமல் காக்க வேண்டும். எனக்கு தோன்றுகிறது, வடநாட்டுக்கும் ஒரு பெரியார் தேவைப்படுகிறார்”, இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். “வடநாட்டுக்கும் ஒரு பெரியார் தேவைப்படுகிறார்”, என்று சொன்னதால் பெரியார் பக்தர்கள், அத்தகைய ஒப்பீட்டை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

 21-05-2016

[1]    Indian Express, Mob attacks BJP MP Tarun Vijay in Dehradun, By: PTI, Dehradun, Updated: May 21, 2016 12:37 am

[2] http://indiatoday.intoday.in/story/ukhand-bjp-mp-tarun-vijay-attacked-by-mob/1/673715.html

[3] http://indianexpress.com/article/india/india-news-india/mob-attacks-bjp-mp-tarun-vijay-2811424/

[4] தினமணி, கோயிலுக்கு தலித்துகளை அழைத்து சென்ற தருண் விஜய் மீது தாக்குதல்: உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பவம், By  நமது நிருபர், டேராடூன் / புது தில்லி,; First Published : 21 May 2016 03:21 AM IST.

[5]http://www.dinamani.com/india/2016/05/21/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4/article3443926.ece

[6] தினத்தந்தி, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதலில் தருண் விஜய் எம்.பி. காயம் அடைந்தார் கவிஞர் வைரமுத்து கண்டனம், மாற்றம் செய்த நாள்: சனி, மே 21,2016, 12:18 AM IST; பதிவு செய்த நாள்: சனி, மே 21,2016, 12:18 AM IST.

[7] தமிழ்.ஒன்.இந்தியா, உத்தரகாண்ட் கோவிலில் கோஷ்டி மோதல்.. பாஜக எம்.பி. தருண் விஜய் படுகாயம், By: Karthikeyan, Published: Friday, May 20, 2016, 20:51 [IST].

[8] “What exactly happened remains unclear, but it is not a case of Dalits not being allowed in the temple. Had that been the case, the MP and Mr. Kunwar would not have been allowed into the temple. But they were attacked after they visited the temple,” Dehradun Superintendent of Police (Rural) T.D. Waila toldThe Hindu.

http://www.thehindu.com/news/national/other-states/bjp-mp-tarun-vijay-injured-in-mob-attack-outside-temple-in-uttarakhand/article8627010.ece

[9] http://tamil.oneindia.com/news/india/bjp-mp-tarun-vijay-injured-after-scuffle-hospitalized-254222.html

[10] http://www.dailythanthi.com/News/India/2016/05/21001853/MP-Tarun-Vijay-in-attack-Was-injured.vpf