Archive for the ‘கொடுங்கலூர்’ Category

யூத செப்பேடு நகல்களை மோடி, நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (1)

ஜூலை 9, 2017

யூத செப்பேடு நகல்களை மோடி, நெதன்யாகுவிற்கு பரிசாக கொடுத்தல்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (1)

PM Modis gifted Israeli PM 2 sets of copper plates believed to have been inscribed in 9-10th century

04-07-2017 [செவ்வாய் கிழமை இரவு] பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, மோடி கொடுத்த மாதிரிசெப்பேடுகள் நினைவுபரிசு: மோடி மூன்று நாட்கள் [4 முதல் 6 வரை] அரசு முறை பயணமாக மோடி 03-07-2017 [திங்கட்கிழமை] சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விமான நிலையத்துக்கு நேரில் வந்து உற்சாக வரவேற்பு அளித்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்து, இத்தகைய மரியாதை மோடிக்குக் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி இந்தியா சார்பாக கேரளாவிலிருந்து கொண்டு வந்த இரு நினைவுப் பரிசுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு 04-07-2017 [செவ்வாய் கிழமை இரவு] வழங்கினார். இந்தியாவிலுள்ள நீண்ட யூத வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த பரிசு குறித்து பிரதமர் அலுவக ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “யூதர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் இரு காப்பர் தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இவை 9-ஆம் மற்றும் 10-ஆம் நூற்றாண்டை சார்ந்தவை[1], என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், “9-10ம் நூற்றாண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது”, என்றுதான் டுவிட்டரில் சொல்லப்பட்டுள்ளது[2].

PM Modis gifted Israeli PM - second set of copper plates believed to have been inscribed in 9-10th century

மாதிரிசெப்பேடுமுதல் தகடின் விவரங்கள்: இதில் முதல் காப்பர் தகடு யூதர்களின் தலைவரான ஜோசப் ராபனுக்கு, அப்போதைய ஆட்சியில் இருந்த இந்து அரசர் சேரமான் பெருமாளால் [பாஸ்கர ரவி வர்மா என்று சிலர் அடையாளம் காண்கிறார்கள்] வழங்கப்பட்டது[3]. பின்னாளில் ஷிங்க்ளியின் இளவரசனாக ஜோசப் ராபன் முடிசூட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், “யூத பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவ்வாறு கருதப்படுகிறது”, என்றுதான் உள்ளது[4]. ஷிங்க்ளிக்கு சரிநிகரான யூதர்களின் விருப்பமான மற்றும் கலாச்சார ஸ்தலமாக ரங்கனூர் விளங்கியது. இந்த காப்பர் தகடுகள் கொச்சியின் மட்டான்சேரியில் உள்ள பாரதேசி சினகோக் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது[5]. பின்னர், காலப்போக்கில் அங்கிருந்த யூத மக்கள் கொச்சினுக்கும் மலபார் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பிறபகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். வழிவழியாக இந்த இடப்பெயர்வு நடந்துள்ளது[6]. ஷிங்க்லி பகுதியும், கிராங்கனூர் பகுதியும் யூதர்களின் இரண்டாவது ஜெருசலேம் என்று இப்போதும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, உள்ளூர் யூதர்கள் ஒருதடவை ஒரு கைப்பிடி மண்ணை சவப்பெட்டியில் போட்டு, ஷிங்ளி / கிராங்கனூரை “இரண்டாவது ஜெருஸலேம்” என்று சொன்னதாக உள்ளது[7]. இந்தப் பகுதி இப்போதுள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[8].

Benjamin Netanyahu-Modi - Jews copper plate

மாதிரிசெப்பேடுஇரண்டாம் தகட்டின் விவரங்கள்: இரண்டாவது தகடு, இந்தியாவுடனான யூதர்களின் வர்த்தகம் குறித்து விளக்குகிறது. அதுமட்டுமின்றி கொல்லம் மற்றும் மேற்கு ஆசியாவுடனான இந்திய வர்த்தகத்தையும் விளக்குகிறது. மேற்கு ஆசிய வர்த்தகத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சோராஸ்டிரியன்களுடன் யூதர்களும் வர்த்தகம் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[9].  இந்தியா மற்றும் இந்தியாவுடனான கடல் கடந்த வாணிகம் எனும் போது, அது இருவழி வியாபாரம் என்பதை கவனிக்க வேண்டும். முதலில், இடைக்காலம் வரை, இந்தியா தான் கடல் வாணிகத்தில் கோலோச்சி வந்தது. பிறகு, அரேபியர்கள், வளைகுடா மார்க்கத்தை அடைத்து, வரிகேட்டு, கடற்கொள்ளை அடித்து, வணிகர்களைக் கொடுமைப் படுத்திய நிலைகளில், இந்தியாவுடன் நேரிடையான வாணிகத்தில் ஈடுபடத்தான், இந்த்யாவிற்ற்கு கடல்வழி தேடப்பட்டது. அவ்வாறுகண்டுபிடித்தப் பிறகு, ஐரோப்பியர்கள் ஆதிக்கம் வளர ஆரம்பித்தது. இதனால், இந்திய வணிகம் தென்கிழக்காசிய நாடுகளுடன் சுருங்கியது. கிளாடியஸ் பச்சனன் என்பவர், இந்த செப்பேடுகளைப் பற்றி 1806ல் ஆய்ந்தபோது, தனக்கு மூலப்பட்டயங்கள் / செப்பேடுகள் கிடைக்கவில்லை என்றும், மாதிரிகள் தான் கிடைத்தன, அவற்றை மலங்காரா சர்ச் பிஷப்பிடம் கொடுத்தார் என்று 1806 / 1811ல் குறிப்பிட்டுள்ளார். ஆக, 19ம் நூற்றாண்டிலேயே, பச்சனன் பார்த்தது, மாதிரி தான். பிறகு, அம்மாதிரியிலிருந்து பல மாதிரிகள் தயாரிக்கப் பட்டதாகவும், அவை படித்தறிவதற்காக, பல ஐரோப்பிய அறிஞர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் எழுதியுள்ளார்[10].

Modi met Benjamin Netanyahu

கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் சர்ச்சிலிருந்து இந்த தகடுகள் 2017ல் கொண்டு வரப்பட்டுள்ளன: இந்த தகடுகள் கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் தேவாலயத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தத் தகடுகளுடன் கேரளாவிலுள்ள யூத சமூகத்தைச் சேர்ந்த பழமையான தோரா சுருளையும் நெதன்யாகுவுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்தார். தென்னிந்தியாவின் கலையை பிரதிபலிக்கும் தங்கத்தால் பூசப்பட்ட உலோக கிரீடம் ஒன்றையும் பரிசாக வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதும், “கேரளாவின் திருவல்லாவில் உள்ள மலங்கரா மார் தோம சிரியன் சர்ச்சிலிருந்து இந்த தகடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன”, என்றுள்ளதால், இப்பொழுதும் – 2017ல், அதே போல இன்னொரு மாதிரி, போலி தயாரிக்கப்பட்டது என்பது உண்மையாகிறது. ஆக, –

  1. 1811ம் ஆண்டிற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட போலி-மாதிரி செப்பேடுகள்,
  2. 1811 முதல் 2016 வரை தயாரிக்கப் பட்ட போலி-மாதிரி செப்பேடுகள்,
  3. 2017ல் தயாரிக்கப்பட்ட போலி-மாதிரி செப்பேடுகள்.

என்று பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. மற்றும், அத்தகைய ஆட்களை, தாமிர பட்ட்யங்கள், செப்பேடுகள் தயாரிக்கும் தொழிற்நுட்பமும் அவர்களிடம் இருக்கிறது, இருந்து வருகிறது என்றும் தெரிகிறது.

PM Modis gifted Israeli PM - scroll

மோடிநேதன்யாகு பரஸ்பர பரிசுகள் பகிர்வு: இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, பிரிட்டிஷ் ராணுவத்தில் ஒரு பிரிவாக இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை  பரிசாக அளித்தார்[11]. அதாவது, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய வீரர்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப் பட்டுள்ளனர்[12]. பெஞ்சமின் நேதன்யாகு தனது இல்லத்தில் பிரதமர் மோடிக்கு அளித்த தனிப்பட்ட விருந்தின் போது இந்த புகைப்படத்தை பரிசாக அளித்தார்[13]. பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்திலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது[14].  இப்பொழுதைய அனைத்துலக தீவிரவாத எதிர்ப்பு என்று கோணத்தில் மட்டும் தான், இந்த இந்திய-இஸ்ரேல் தொடர்புகளை காணமுடியும். விவசாய-யுக்திகள், பொருளாதார பரஸ்பர உதவிகள் முதலீடுகள் பிறகு வருகின்றன. இவற்றை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் மற்றும் இந்திய-இந்து விரோதிகளும் சேர்ந்து கொண்டு, வலுமையான பிரச்சாரத்தை முடுக்கி விடுவார்கள் என்பதையும் கவனித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

09-07-2017

Modi presented to Benjamin Netanyahu - Metal crown covered in gold sheets from South India

[1] தி.இந்து.தமிழ், இஸ்ரேல் பிரதமருக்கு மோடி அளித்த நினைவுப் பரிசு, பிடிஐ, Published: July 5, 2017 15:35 ISTUpdated: July 5, 2017 15:52 IST.

[2] They comprise two different sets of copper plates that are believed to have been inscribed in 9-10th Century, the PMO tweeted.

The Hindu, Narendra Modi gifts replicas of relics from Kerala to Netanyahu, JERUSALEM,JULY 05, 2017 10:00 IST; UPDATED: JULY 07, 2017 20:33 IST.

[3]http://tamil.thehindu.com/world/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/article9750122.ece

[4] According to traditional Jewish accounts, Joseph Rabban was later crowned as the Prince of Shingli, a place in or equated with Cranganore.

[5] மாலைமலர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு நினைவு பரிசு வழங்கினார் பிரதமர் மோடி, பதிவு: ஜூலை 05, 2017 06:03

[6] தமிழ்.ஒன்.இந்தியா, மோடி அளித்த கேரள பரிசு.. மனம் நெகிழ்ந்து போன இஸ்ரேல் பிரதமர்!, Posted By: Devarajan, Published: Wednesday, July 5, 2017, 13:48 [IST].

[7] Local Jews once placed in each coffin a handful of earth from Shingli/Cranganore that was remembered as a holy place and a “second Jerusalem.”

http://www.thehindu.com/news/national/narendra-modi-gifts-two-sets-of-relics-from-kerala-to-netanyahu/article19214296.ece

[8] http://tamil.oneindia.com/news/international/pm-narendra-modi-gifts-two-sets-relics-from-kerala-israel-pm-benjamin-netanyahu-288538.html

[9] http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/05060301/1094596/PM-Modi-gifts-two-sets-of-relics-from-Kerala-to-Netanyahu.vpf

[10] Cladius Buchanan recorded as follows: “But there are other ancient documents in Malabar, not less interesting than the Syrian Manuscripts. The old Portuguese historians relate, that soon after the arrival of their countrymen in India, about 300 years ago, the Syrian Bishop of Angamalee (the place where I now am) deposited in the Fort of Cochin, for safe custody, certain tablets of brass, on which were engraved rights of nobility, and other privileges granted by a Prince of a former age ; and that while these Tablets were under the charge of the Portuguese, they had been unaccountably lost, and were never after heard of. Adrian Moens, a Governor of Cochin, in 1770, who published some account of the Jews of Malabar, informs us that he used every means in his power, for many years, to obtain a sight of the famed Christian Plates ; and was at length satisfied that they were irrecoverably lost, or rather, he adds, that they never existed. The Learned in general, and the Antiquarian in particular, will be glad to hear jthat these ancient Tablets have been recovered within this last month by the exertions of Lieutenant- (Colonel Macauley, the British Resident in Travan-core, and are now officially deposited with that Officer. ‘ The Christian Tablets are six in number. They are composed of a mixed metal. The engraving on the largest plate is thirteen inches long, by about four broad. They are closely written, four of them on both sides of the plate, making in all eleven pages. On the plate reputed to be the oldest, there is writing perspicuously engraved in nail-headed or triangular- headed letters, resembling the Persepolitan or Babylonish. On the same plate there is writing in another character, which is supposed to have no affinity with any existing character in Hindoo* tan. The grant on this plate appears to be witnessed by four Jews of rank, whose names are distinctly engraved in an old Hebrew character, resembling the alphabet called the Palmyrene: and to each name is prefixed the title of ‘ Alagen,’ or Chief, as the Jews translated it. — It may be doubted, whether there exist in the world many documents of so great length, which are of equal antiquity, and in such faultless preservation, as the Christian Tablets of Malabar. — The Jews of Cochin indeed contest the palm of antiquity: for they also produce two Tablets, containing privileges granted at a remote period; of which they presented to me a Hebrew translation. As no person can be found in this country who is able to translate the Christian Tablets, I have directed an engraver at Cochin to execute a copper-plate facsimile of the whole, for the purpose of transmitting copies to the learned Societies in Asia and Europe. The Christian and Jewish plates together make fourteen pages. A copy was sent in the first instance to the Pundits of the Shanscrit College at Trichiar, by direction of the Rajah of Cochin ; but they could not read the character.* — From this place I proceed to Cande-nad, to visit the Bishop once more before I return to Bengal.’

Claudius Buchanan, Two Discourses preached before the University of Cambridge, on the commencement of Subday July 1, 1810 and a sermon before the Society of Missions to Africa and the East; at their tenth anniversary. June 12, 1810. To which added Christian Researches in Asia, T. Cadell and W. Davies, in the Strand; and J. Deighton, Cambridge, London, 1811, pp.121-122.

In footnote, he recorded, “Most of the Manuscripts which I collected among the Syrian Christians, I have presented to the University of Cambridge; and (they are now deposited in the Public Library of that University, together with the copper-plate fac-similes of the Christian and Jewish Tablets.” (Ibid. P.122). Thus, it is evident that there were no originals of the said copper plates and thus, the available / claimed copper plates have no historical value.

[11] தினத்தந்தி, இந்திய வீரர்கள் இடம் பெற்ற புகைப்படத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார் நேதன்யாகு, ஜூலை 05, 2017, 09:38 PM

[12] http://www.dailythanthi.com/News/TopNews/2017/07/05213841/Netanyahu-gifts-Indian-soldiers-photo-to-Modi.vpf

[13] விகடன், இஸ்ரேலில் மோடிக்கு நினைவுப் பரிசு!, Posted Date : 01:50 (06/07/2017); Last updated : 10:28 (06/07/2017)

[14] http://www.vikatan.com/news/world/94506-modi-receives-a-memorial-prize-from-benjamin-netanyahu.html