Archive for the ‘சூரஜ்’ Category

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

மே 8, 2013

சோனியாவே ஆடியுள்ளபோது, தாக்கூர் ஆடியதில் என்ன பிரச்சினை?

Sonia-dances-with-tribals -renuka

சோனியா, மேற்கத்தையகலாச்சாரம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்: சோனியா ஆந்திராவிற்குச் சென்றிருந்த போது, வனவாசி பெண்களுடன் கைக் கோர்த்துக் கொண்டு[1], காலைத் தூக்கி ஆடியுள்ளார் (Febrarary 27, 2009). படங்கள், வீடியோ முதலிய உள்ளன[2]. பிறகு, 2011ல் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் பழங்குடியின பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பான மாநாடு டில்லியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற காங். தலைவர் சோனியா மேடையில் இருந்து இறங்கி வந்து அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின பெண்களுடன் இணைந்து நடனம் ஆடினார்[3]. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நான்கு மாதங்களுக்கு பின் இவ்வாறு சோனியா நடனமாடியதை பார்த்த காங்., மகளிர் அணியினர் உற்சாகமடைந்தனர். ஆண்டு தோறும், கிருஸ்துமஸ் விடுமுறையை (டிசம்பர் 25லிருந்து ஜனவரி 7 வரை[4]) கோவா மற்றும் லட்சத்தீவுகளுக்கு பிரத்யேகமாக குடும்பத்துடன் சென்று கழிப்பதுண்டு[5]. அப்பொழுது அங்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாமே உண்டு[6]. சோனியா பலதிறமைகள் உள்ள பெண்மணி[7].

Sonia-dances-with-tribals

இளைஞர்காங்கிரஸ்கோடைக்காலமுகாம்நடக்கும் விதம்: இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பில் மும்பை புறநகர் பகுதியான கண்ட்விலியில் 14-4-2013 அன்று கோடைக்கால முகாம் நடந்தது[8]. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு, என்.எஸ்.யு.ஐ., இதன், மும்பை நகர தலைவராக இருப்பவர், சூரஜ் சிங் தாக்குர். பொவையில் உள்ள சந்திரபன் சர்மா கல்லூரியின் மாணவன் மற்றும் கிருபா சங்கர் சிங், அரிப் நசீம் கான் (சிறுபான்மையினர் பிரிவு தலைமை) போன்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டியவன்[9]. இதனால், இப்பிரிவு குழுக்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்று காங்கிரஸார் நினைக்கின்றனர்[10]. மார்ச் 13 முதல் 15 வரை கன்டிவிலியுள் ஒரு ஓட்டலில் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது[11]. அதில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

Sonia-dances-with-tribals-AP

ஓட்டலின் மாடியில் பார்ட்டி நடத்திய இளைஞர் காங்கிரஸ்: இரண்டாவது நாள் 14-03-2013 அன்று ஓட்டலின் மாடியில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தனர். அதில் சுமார் 30-40 பேர் குடித்து சட்டையில்லாமல் ஆடிக் கொண்டிருந்தனர். தாகுர்தான், அனைவரைரும் சர்ட்டை எடுக்கும் படி கூறியுள்ளான். வைபவ் தனவதே என்பவன் உள்ளே நுழைந்த போது, அவனையும் சர்ட்டைக் கழட்டச் சொன்னான். மறுத்தபோது, சர்ட்டைப் பிடித்து இழுத்தான். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் தனவதேயின் சர்ட் கிழிந்து விட்டது. மற்றவர்கள் அவனை சமாதானப் படுத்தினர்[12]. இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து, தாக்குர், நிர்வாண நடனம் ஆடியுள்ளார்[13]. அந்தக் காட்சிகள், கடந்த ஞாயிறு அன்று, இணையதளங்களில் வெளியாகின.

UPA Chairperson Sonia Gandhi dances with tribal women at Kutagudam in Khammam district of Andhra Pradesh

ராகுல் பார்த்ததும், நடவடிக்கை எடுத்ததும்: இதனிடையில் ராகுலுக்கும் புகார் அனுப்பப்பட்டது[14]. அதைப் பார்த்த காங்கிரஸ் மேலிடம்[15], தாக்குரை, இளைஞர் அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து, தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது[16]. நேற்று முன் தினம் வரை, தாக்குரின் நிர்வாண நடன காட்சிகள், இணைய தளங்களில், உலா வந்தன. கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தக் காட்சிகள், பிறகு நீக்கப்பட்டன. அதாவது, சோனியா அல்லது ராகுலுக்கு அந்த அளவிற்கு உண்மைகளை அமுக்க சக்தி உள்ளது என்பதனை நினைவிற்கொள்ள வேண்டும். தாக்குர் உடன் சேர்ந்து, மேலும் சில நிர்வாகிகள், தங்கள் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக ஆடியுள்ளனர். தாக்குர் மற்றும் அவருடன் நிர்வாண நடனம் ஆடிய அனைவருமே, போதை மயக்கத்தில் இருந்தது, வீடியோ காட்சிகளில் தெரிந்தது. கட்சி கூட்டத்தில், எதற்காக, தாக்குர் நிர்வாண நடனம் ஆடினார்;

Sonia-dances-with-tribals2

உண்மையை மறைக்க கதைகளை அவித்து விடும் காங்கிரஸ்: மும்பை நகர தலைவர் பொறுப்புக்கு, கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தாக்குரை, கட்சி மேலிடத் தலைவர்கள், “ராகிங்’ செய்தனரா; அதனால் தான், அவர் நிர்வாணமாக ஆடினாரா என, விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு, தாக்குரும், அவருடன் ஆடிய நிர்வாகிகள் இருவரும், காங்கிரசில் இருந்து நீக்கப்படுவர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் எழுதிய புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2011ம் ஆண்டு போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமான சூரஜ் சிங் தாக்கூர், தொடர்ந்து 2வது முறையாக கடந்த டிசம்பர் மாதம் மும்பை கிளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது[17].

Saurav Ganguly dance - naked or otherwise

சர்ட்டைக் கழட்டி ஆடுவது நிர்வாணமா?: சௌரவ் கங்குலி என்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர், இந்தியா வெற்றிப் பெற்றபோது, சர்ட்டை அவிழ்த்து, சுற்றி-சுற்றி ஆட்டி ஆடியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் அதனை ஆதரித்து, ரசித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். பிறகு அதனை ஏற்றுக் கொண்ட ரீதியில், அவர் அதை மறுபடியும் செய்துள்ளார். அப்படியென்றால், சர்ட்டைக் கழட்டி ஆடுவது ஆண்கள்  ஆடுவது நிர்வாணம் ஆகுமா? உண்மையில், குடித்து கலாட்டா செய்ததை மற்றும் வேறதையோ மறைக்கத்தான் காங்கிரஸ்காரர்கள் முயன்றுள்ளார்கள். இல்லையென்றால், அப்படங்கள் முழுவதையும் அப்புறாப்படுத்த வேண்டிய அவசியல் இல்லை. அபிஷேக் சிங்வி, திவாரி முதலியோரது செக்ஸ் படங்கள் வெளியிட்டதை முழுமையாகத் தடுக்கவில்லை. பிறகு இதனை மறைப்பதேன்?

Suraj Takur with Soniaசோனியாவுடன் சூரஜ் தாகூர் – நெருக்கமான இளைஞர் தலைவர்!

Suraj Takur with Rahul shaven neatlyராகுல் – முழுக்க மழித்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul shavenராகுல் – கொஞ்சம் முடி வளர்ந்த முகத்துடன் – உடன் தாகூர்!

Suraj Takur with Rahul bearededஆஹா, தாடி வளர்ந்து விட்டது – உடன் தாகூர் – ஆமாம், தாடி வைத்தவர்களுக்கு காங்கிரஸில் மௌசு போல!

© வேதபிரகாஷ்

08-05-2013


[3] Congress president Sonia Gandhi dances with tribal women during the National Convention on Empowerment to Tribal Women at AICC office in New Delhi

http://www.hindustantimes.com/photos-news/Photos-India/Sonia/Article4-783351.aspx

[4] ஏசு, கிருஸ்து, ஏசுகிருஸ்து இருந்தாரா, இல்லையா என்ற பிரச்சினையில், பிறந்ததேதியும் பலவாறு சொல்லப்படுகிறது. இருப்பினும், உலகத்தில் டிசம்பர் 25 மற்ற்யும் ஜனவரி 7 நாட்களில் கிருஸ்துமஸ் கொண்டாடுகின்றனர்.

[5] Congress president Sonia Gandhi is on a week-long private visit to the Lakshadweep Islands to celebrate the New Year along with her family, officials said here on Friday. The UPA (United Progressive Alliance) Chairperson arrived here on Thursday from Goa along with her mother Paola Maino, daughter Priyanka Gandhi and son-in-law Robert Vadra, they said.

http://www.thehindu.com/news/sonia-gandhi-in-lakshadweep-for-new-year/article74004.ece

[15] சோனியாவா அல்லது ராகுலா என்பது காங்கிரஸ்காரகளுக்குத் தான் தெரியும். மேலிடம் என்பது அந்த அளவிற்கு புனிதமாக, ரகசியமாக வௌக்கப்பட்டுள்ளது.