Archive for the ‘பியான் சிங்’ Category

சோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது!

செப்ரெம்பர் 4, 2013

சோனியாவிற்கு அமெரிக்கக் கோர்ட் சம்மன் – 1984 சீக்கியப் படுகொலை செய்தவர்களுக்கு இடம் கொடுத்ததாக புகாரின் மேல் கொடுக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க சீக்கியர்கள் சோனியா மீது தொடுத்த வழக்கு: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று அவரது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’  [Sikhs For Justice (SFJ)] என்ற மனித உரிமை அமைப்பினர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப் பட்ட இருவர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்[1]. இதற்கு முன்னர் கூட பிரகாஷ்சிங் பாதல், கமல்நாத் முதலியோர்களின் மீது வழக்குத் தொடர முயற்சித்து தோல்வி கண்டனர்[2].

அமெரிக்க சீக்கியர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் புகார்கள்: 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார்[3]. சமீபத்தில் சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் முதலியோருக்கு கோர்ட்டுகளில் விடுவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சீக்கியர்கள்  கடுமையாக எதிர்ததனர், ஆர்பாட்டம் செய்தனர்.

ராஜிவ்காந்தி  தூண்டிவிட்ட  கலவரம்  (1984): அமெரிக்கா எப்படி ஒசாமா பின் லேடனை உருவாக்கி, தீவிரவாதத்தால் வாங்கிக் கட்டிக் கொண்டதோ, அதேபோல முன்னர் இந்திரா காந்தி பிதரன்வாலேயை உருவாக்கி, சீக்கியர்களாலேயே அக்டோபர் 31, 1984 அன்று கொலையுண்டார். அதனால், கோபமுற்ற ராஜிவ் காந்தி, “உன்கி நாநி யாத் ஆயேகி  (அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளூப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும்)” என்று சீக்கியர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் தூண்டி விட்டதாக பேசினார்[4]. கனிகான் சௌத்ரி, ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூடி, சீக்கியர்களைக் கொல்ல திட்டம் போட்டு, அதன்படியே ஆயிரக்கணக்கானவர் 1984ல் கொலை செய்யப்பட்டனர்[5]. தில்லியில் அப்பொழுது ஒரு பெரிய கூட்டத்தில், “ஒரு பெரிய மரம் விழுந்தால், அப்படித்தான் அதன் சுற்றியுள்ள பூமியின் மண் பெயரத்தான் செய்யும்” என்று ராஜிவ் பேசினார்[6]. ஏப்ரல் 2012ல் கூட, தில்லி கன்டோன்மென்ட் வழக்கில், சிபிஐ தனது வாதத்தை வைக்கும் போது, இது ஒரு அரசியல் பின்னணியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும் என்றது[7].

29  வருடம் கழித்து நீதிமன்றம் சஜ்ஜன்குமாரை விடிவித்தது[8] (மே.2013): 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டார். முன்னர், ஜகதீஸ் டைட்லரும் இதே மாதிரி விடுவிக்கப்பட்டார். இதைக் கண்டித்து, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் 02-05-2013 வியாழக்கிழமை அன்று முற்றுகையிட்டனர். சீக்கிய அமைப்புகள் செவ்வாய், புதன் இரு நாள்களிலும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின. மன்மோஹன் சிங், சோனியா முதலியோரது கொடும்பாவிகளை எரித்தனர்[5]. கடந்த புதன்கிழமை ஏராளமான சீக்கியர்கள், சோனியா காந்தியின் வீடு அமைந்துள்ள அக்பர் சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மத்திய துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கூட்டத்தைக் கலைத்தனர். ஜந்தர் மந்தர், திலக் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதிகளில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேடிக்கையென்னவென்றால், அதே நாளில் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல, கர்நாடகத்தில் பிஜேபியை வசைபாடி, தேர்தல் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

தில்லியில் தொடரும் சீக்கியர்களின் எதிர்ப்புஆர்பாட்டம்,போராட்டம் (மே.2013): சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந்து வருகின்றது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[9] பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்த நாடகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினர். எனவே, 2014ற்குள், அவர்களை எப்படியாவது பிரிப்பது ஏன்ற சூழ்ச்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. சீக்கியர்களின் போராட்டம் தில்லியில் தொடர்ந்து பெற்றது[10]. திடீரென்று ராகுல் அந்த நேரத்தில் சரப்ஜித் அந்திமக்கிரியையில் கலந்து கொண்டு நாடகம் ஆடியது வியப்பாக இருந்தது[11].

சோனியா காந்திக்கு சம்மன்: இந்த கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாக கூறி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு  குற்றம் சாட்டி உள்ளது[12]. எனவே, சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியா காந்தியிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டம் மற்றும் சித்ரவதைக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் [Alien Tort Claims Act (ATCA) and Torture Victim Protection Act (TVPA)] இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது[13]. வழக்கை நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்திக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இந்த சம்மன் வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சோனியா காந்தி இந்த சம்மனை வாங்கிக் கொள்வாரா? அல்லது வக்கீல் மூலமாக பதில் அளிப்பாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்[14].

© வேதபிரகாஷ்

04-09-2013


[4]  According to the CBI the police were co-conspirators as the officials did not register cases and did not pick up dead bodies from the streets. The CBI referred to a speech senior Congress leader Sajjan Kumar had made in Delhi’s Raj Nagar where he incited the mob and said that not a single Sikh should survive and those sheltering Sikhs should be set ablaze. The CBI also pointed out that police control room records don’t have details of any of the major incidents of violence. In fact the police asked those residing in the Raj Nagar Gurdwara to surrender their weapons and hours later mobs came and attacked them. No damage to houses other than those of Sikhs were reported from the area.

[5] While there have been documented reports of voter-lists and school registration forms being distributed amongst the rampaging hooligans to specifically identify the Sikh families and destroy them, it is also a proven fact that during the same period, at a massive rally in Delhi, while reacting to the killings, Rajiv Gandhi had stated that ‘Once a mighty tree falls, it is only natural that the earth around it shakes‘.

[7] The killing of people in the Delhi Cantonment area during the 1984 anti-Sikh riots was the result of a well executed conspiracy, the Central Bureau of Investigation (CBI) said on Monday as the agency finished its arguments in the 1984 anti-Sikh riots in the Delhi Cantonment area case. The CBI said that people belonging only to a certain community were targeted with the pattern and scale of operation indicating that the action wasn’t a spontaneous reaction but a well organised operation, which had the backing of the police and patronage of the system.