Posts Tagged ‘சுங்கம்’

சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்

மார்ச் 28, 2013

சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்

 

சி.பி..  சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.

 

  1. தில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.
  2. சோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.
  3. அந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].

 

சி.பி.அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

 

  1. லல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.
  2. மாயாவதி மீதான வழக்குகள்.
  3. முல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.
  4. ஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்

 

ஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].

 

முடிவை இரவே  எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா? …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்

 

அர்த்த ராத்திரியில் ரெய்ட்  ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா?

 

டி.ஆர்.அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].

 

கைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி?: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.

 

இந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா?: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].

 

சி.பி.ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்?: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா? நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்?

 

சி.பி.. என்னவிதமாக சுதந்திரமாக,  தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம்! அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது? அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.

 

© வேதபிரகாஷ்

28-03-2013


[1]CBI’s clean chit to the Italian middleman Ottavio Quattrocchi in the Bofors case.

http://newindianexpress.com/opinion/article1516897.ece

[2]  Naïve as he is, even Rahul Gandhi had blurted out that political parties tended to misuse CBI. “Every party in power can pressure institutions. Every government tries to push its people into such agencies. It is a fact, it is a reality of Indian politics,” he said in May 2009.

http://newindianexpress.com/opinion/article1516897.ece

[5] The investigating agency is also said to be conducting searches at the residence of Mr Stalin’s Secretary Raja Shankar.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

 

[9] . Immigration officials had arrested Joseph when he arrived at Hyderabad airport from Dubai on November 6, 2011 with a fake passport.

http://www.asianage.com/india/car-racket-led-cbi-stalin-s-bungalow-996

[10] Among the vehicles under the CBI scanner are 11 allegedly being used by the India Cements group, belonging to BCCI president N. Srinivasan.

http://www.asianage.com/india/car-racket-led-cbi-stalin-s-bungalow-996

[11] The DRI had assigned the probe to one of its senior officers called Muruganandam. However, Muruganandam fined only one vehicle while letting free the other 32.