Archive for the ‘மதுரை ஆதீனம்’ Category

சைவத்திற்கும், இந்துமதத்திற்கும் இழிவை சேர்க்கும் மதுரை ஆதினம் – அ.தி.மு.க.வை ஆதரித்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தாராம்!

மார்ச் 9, 2014

சைவத்திற்கும், இந்துமதத்திற்கும் இழிவை சேர்க்கும் மதுரை ஆதினம் – அ.தி.மு.க.வை ஆதரித்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தாராம்!

மதுரை ஆதீனம், ஜெயலலிதா

மதுரை ஆதீனம், ஜெயலலிதா

ஊடகங்களுடன் பேசுவதற்கு தகுதியில்லாத மடாதிபதிகள்: மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பழமையான மடத்தின் பீடாதிபதி. அம்முறையில் சைவர் அவருக்கு முழு மரியாதை அளித்து வருகின்றனர். இருப்பினும், தேவையில்லாமல், திக, திமுகவினருடன் சேர்ந்து கொண்டு தேவையில்லாத கருத்துக்களை அவ்வப்போது சொல்லி வரும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மற்ற கிருத்துவ, இஸ்லாம் மதத்தலைவர் போல் ஊடகத்தினருடன் எவ்வாறு பேசுவது என்பது போன்ற விசயங்களில் அனுபம் இல்லாததால், ஊடகத்தினர் தமக்கிச்சைப்போல கேள்விகள் கேட்டு, பதில்களைப் பெற்று செய்திகளாகப் போட்டு, சர்ச்சைகளில் சிக்கி வருவதும் இவருக்கு சாதாரணமாகி விட்டது.மேலும் தமிழக ஊடகக் காரர்களில் பெரும்பாலோர் நாத்திக, கம்யூனிஸ்ட், பின்னணியைக் கொண்டவர்கள், அவர்களில் கிருத்துவர்கள், முஸ்லிம்களும் உள்ளனர்.

கருணா, ஜெயா, ஆதீனம் மதுரை கார்ட்டூன் தினமலர்

கருணா, ஜெயா, ஆதீனம் மதுரை கார்ட்டூன் தினமலர்

.தி.மு..வை  ஆதரித்து   40   நாடாளுமன்ற  தொகுதிகளிலும்  தாம்  தேர்தல்  பிரசாரம்  செய்ய  இருப்பதாகவும்  தெரிவித்த  மடாதிபதி: வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் மதுரை ஆதீனம் பிரச்சாரம் செய்ய  உள்ளதாகவும், இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை   சென்னையில் உள்ள அவரது இல்லத்தில்  வெள்ளிக்கிழமை [07-03-2014] நேரில் சந்தித்த மதுரை ஆதீனம் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்[1], இப்படி தமிழ் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன[2]. 1.500 வருட காலம் பழமையான இம்மடத்தைப் பின்பற்றுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள், நித்தியானந்த பிரச்சினையில் சிக்கிக் கொண்டார், வருமானதுறையினர் ரெய்டு நடந்தன[3] என்று சேர்த்துள்ளன[4]. ஆங்கில ஊடகங்களிலும் அவ்வாறே வெளியாகியுள்ளன[5]. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை மதுரை ஆதீனம் நேரில் சந்தித்தார்[6]. அப்போது தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தெரிவித்து கொண்டதோடு, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்[7]. அதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது[8]. கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது[9]: வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் தான் அதிக அளவு இடங்களில் வெற்றி பெறும். மோடி– ஜெயலலிதா இடையே நல்ல நட்பு உள்ளது. எனவே ஜெயலலிதா பிரதமர் ஆவார். அவருக்கு மோடி ஆதரவு அளிப்பார். ஜெயலலிதா பிரதமர் ஆனால் விலைவாசி குறையும், தீவிரவாதிகள் பயம் இருக்காது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்த ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்[10].

மதுரை ஆதீனம் ஜெயலலிதாவை சந்தித்தது

மதுரை ஆதீனம் ஜெயலலிதாவை சந்தித்தது

மடாதிபதிகள் மரியாதையைக் காக்க வேண்டும்: பொதுவாக அரசியல்வாதிகள் எந்த பதவியை வகித்தாலும், அவர்கள் தாம் மடாதிபதிகளைச் சென்று பார்க்கவேண்டும். மடாதிபதிகள் சென்று பார்ப்பது கிடையாது. ஆனால், இங்கு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பழமையான மடத்தின் பீடாதிபதியாக இருந்து கொண்டு, இப்படி ஜெயலலிதாவைச் சென்று பார்ப்பதும், பொக்கே கொடுப்பதும், பிரச்சாரம் செய்வேன் என்பதும் மிகமிகத் தவறான செயலாகும். ஏற்கெனவே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, ஒழுங்குமுறை அமூலுக்கு வது விட்டது. இந்நிலையில் இவர், இவ்வாறு ஒரு கட்சிக்கு ஆறுதல் என்று பேசுவது முதலியன, சரியானதல்ல. இனி அரசியல்வாதிகள் மசூதிகள், சர்ச்சுகள் என்று சுற்றி வருவார்கள்; பேரம் பேசுவார்கள், சாதித்துக் கொள்வார்கள். ஆனால் இந்துக்கள் அவ்வாறு செய்யவில்லை, செய்ய மாட்டார்கள். செக்ய்டூலரிஸ சித்தாந்தமும் அவர்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறது.

2012ல்  வருமானவரி  துறையினர்  ரெய்டு நடந்தபோது பத்திரிக்கைக் காரர்களுக்கு சொன்னது[11] (மே 2012): ஆதீன மடத்தில் பெண் சீடர் வைஷ்ணவி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இரவு அனைவரையும் அழைத்து விசாரித்தோம். பின்னர் அவர்களை சமரசம் செய்து வைத்தேன். மற்றப்படி எந்த பிரச்சினையும் இல்லை. இது ஒரு சாதாரண சம்பவம் சிலரால் பெரிதாக்கப்பட்டுள்ளது. இப்போது மதுரை ஆதீன மடத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று முன்தினம் நடந்த வருமான வரித்துறை சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் கொடுத்துள்ளோம். அவர்கள் மடத்தின் கணக்கு புத்தகங்களை எடுத்து சென்றுள்ளனர். மற்றபடி ஒன்றுமில்லை. இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார். இருப்பினும், தமிழ் ஊடகங்கள் இவ்விசயத்தை நக்கலாக செய்திகளை வெளியிட்டு தூஷித்து சந்தோஷம் பட்டுக் கொண்டன.

அமர்அக்பர்அந்தனிபாணியில்  கோர்ட்டில்  வக்கீல்கள்  வாதபிரதிவாதங்கள்[12]: இந்தியில் அமர்-அக்பர்-அந்தனி பாணியில் அல்லது தமிழில் சங்கர்-சலீம்-சைமன் பாணியில் சோலைகண்ணன்  “இந்து மக்கள் கட்சி” தலைவர் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகி வாத-பிரதிவாதங்கள் புரிந்தது, செக்யூலரிஸ புற்களின் அரிப்பு தாங்கமுடியாமல் போய்விட்டது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[13], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”, என்றெல்லாம் சொன்னபோது, வேடிக்கையாக இருந்தது. அதற்கு என்ன ஆதாரங்கள் என்ரு அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. ஏதோ குற்றஞ்சாட்டவேண்டும் என்ற போக்கில் வாரியிறைக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆயிரங்காலமாக இருந்துவரும் ஒரு சைவ மடத்தின் மீது உண்மையிலேயே அக்கரையுள்ளவர்கள் அல்லது படித்துத் தெரிந்து கொண்டவர்கள் இத்தகைய விதத்தில் மனுக்களில் குறிப்பிடமாட்டார்கள், வாதங்களும் செய்திருக்க மாட்டார்கள். இதிலிருந்தே அவர்களுக்கு உண்மையில் இந்து மதத்தில் எந்த அக்கறையும் இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.

பிறர்  தூண்டுதலில்,    உள்நோக்குடன்,   கற்பனையான  குற்றச்சாட்டுகளுடன்,  சுய  விளம்பரத்திற்காக  ஏன்  மனுதாக்கல்  செய்யப்பட  வேண்டும்? “இந்து மக்கள் கட்சி” நாத்திக ஆட்சிக்காரர்களின் ஆதரவில், “இந்து முன்னணி”க்கு எதிராக உருவாக்கப் பட்டக் கட்சியாகும். ஒருசில செயல்களைத் தவிர மற்ற செயல்பாடுகள், ஆர்பாட்டங்கள், முதலியவற்றை கவனித்துவரும் போது, அவர்கள் நிச்சயமாக இந்துக்களின் நலன்களுக்கு எதிராக, ஏன் சமயங்களில் மற்ற மதங்களுக்கு ஆதரவாக அரசு தீர்மானங்களை எடுக்க உதவும் முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். எனெவே இப்பொழுதும் அதே போக்கில் அவர்கள் நடந்து கொள்வதை காணமுடிகிறது. இவர்கள் ஏதோ சைவைத்தையே கரைத்துக் குடித்து வந்தவர்கள் போல பேசுகிறார்கள். மனுவில் குறிப்பிடுகிறார்கள். இதைப் படிக்கும்போதே, அவர்களது அஞ்ஞானம் இல்லை, உள்மனது எதிராக செயல்படும் போக்கை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டியுள்ளது.

இந்து  நலன்கள்  ஏன், எப்படி, எவ்வாறு பாதிக்கப்  படுகின்றன?; இந்துத்வ முகமூடியில் மறைந்துள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள், ஈழத்தை ஆதரிப்போம் என்கின்ற வகையறாக்கள், அது தவிர இந்து சித்தாந்திகள், இந்து அறிவுஜீவிகள், இந்து எழுத்தாளர்கள், இந்து பேச்சார்கள், இந்து பேஸ்புக்கர்கள், டுவிட்டர்கள், மோடி ஆதரவாளர்கள், பிஜேபிகாரர்கள், ஆர்.எஸ்.எஸ்காரர்கள், இந்து முன்னணி இந்துக்கள், இந்து மக்கள் கட்சி இந்துக்கள், இந்து தமிழர்கள், தமிழ் இந்துக்கள், இப்படியெல்லாம் இருந்தாலும், இந்துமதத்தின் விரோதிகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்த சிலரே உள்ளனர். இதனால், இந்துநலன்கள் பெரிதளவில் பாதிக்கப் படுகின்றன. ஏனெனில், அவர்கள் தங்களை அடையாளப்படுத்துக் கொள்ளும் முறையிலேயே பிரிந்து கிடக்கிறார்கள். கருணாநிதியை எதிர்க்க ஜெயலலிதாவை ஆதரிப்பது, மோடிக்கு ஆதரவில்லை எனும் போது, ஜெயலலிதாவை எதிர்ப்பது, மாற்றி-மாற்றி திராவிட கட்சிகளை வசைப்பாடுவது, அச்சிந்தாந்திகளில் உள்ள இந்துநம்பிக்கையாளர்களிடம் முறைப்படி பேசி, உரையாடல் நடத்தி ஒரு ஒப்பந்தத்திற்கு கூட்டிவரும் முயற்சிகளை செய்யாமல் இருத்தல், முதலிய விசயங்களிலும் பின்தங்கியே இருக்கிறார்கள். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, ஒழுங்குமுறை அறிவிக்கப் பட்ட நிலையில் மதுரை ஆதீனத்தின் இத்தகைய அறிவிப்பு இந்துநலன்களுக்கு உகந்ததாக இல்லை.

வேதபிரகாஷ்

09-03-2014


[7] தினமணி, அரசியலில்ஆன்மிகம் : அதிமுகவுக்குஆதரவாகமதுரைஆதீனம்பிரச்சாரம், By dn, சென்னை, First Published : 08 March 2014 11:21 AM IST

[10] மாலைமலர், பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் மாநில கட்சிகள் வெற்றிபெறும்: மதுரை ஆதீனம் பேட்டி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 11, 5:51 PM IST