Archive for the ‘கமிஷன்’ Category

சோலார் பெனர் வழக்கில் தீர்ப்பு, வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு, தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது, மேல் முறையீடு செய்வேன் என்று சாதிக்கும் சரிதா நாயர்!

ஜூன் 20, 2015

சோலார் பெனர் வழக்கில் தீர்ப்பு, வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு, தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது, மேல் முறையீடு செய்வேன் என்று சாதிக்கும் சரிதா நாயர்!

biju_தி ஹிந்து போட்டோ

biju_தி ஹிந்து போட்டோ

கேரள மாநிலத்தில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் ரூ. 7 கோடி பணம் வாங்கி மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா எஸ். நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[1]. இவர்கள் “டீம் சோலார்” [The Team Solar Energy Company (Team Solar) ] என்ற கம்பெனி வைத்து நடத்தி அத்தகைய மோசடியை செய்தனர். சில ஆவணங்களில் அக்கம்பெனியின் பெயர் “Team Solar Renewable Energy Solutions Private Limited” என்று குறிப்பிடப்பட்டுள்ளது[2]. இந்த மோசடியில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியதால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டனர். முதல்–மந்திரி அலுவலக ஊழியர்கள் டென்னி ஜோசப் உட்பட சிலரும் 2013ல் கைதானார்கள். அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்[3].

  1. சரிதா எஸ் நாயர் – குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபர்.
  2. பிஜு ராதாகிருஷ்ணன் – சரிதாவின் கணவன்.
  3. டெனி ஜோப்பன் – உமன் சாண்டியின் முக்கியமான உதவியாளர்.
  4. ஏ. பிரோஸ் – அரசு ஊழியன், தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டான்.
  5. ஷாலு மேனன் – நடிகை.

அதன் பின்பு நடந்த விசாரணையில், புற்றீசல் போல பல்வேறு மோசடி புகார்கள் வெளியானது. இது தொடர்பாக சரிதாநாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் மீது போலீசார் 31 வழக்குகள் பதிவு செய்தனர். உம்மன் சாண்டி, தீர்ப்பு விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்துள்ளதையும், தனது நிலையினையும் எடுத்துக் காட்டுகிறது என்றார்[4].

Solar scandal link - India Today graphicsவிசாரணை கமிஷனை உன்னன் சாண்டியும், அதனை எதிர்த்த சரிதா நாயரும்: முன்னர் போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, எதிர்கட்சிகளின் அழுத்தத்திற்காக, ஜஸ்டிஸ் கி. சதாசிவன் கீழ் அக்டோபர் 28, 2013 அன்று ஒரு விசாரணை கமிஷனை உம்மன் சாண்டி அமைத்தார். அக்கமிஷன் சரிதாவிடம் உபயோகத்தில் உள்ள செல்போன், கம்ப்யூட்டர் போன்ற எல்லா உபகரணங்களையும் ஒப்படைக்குமாறு ஆணையிட்டது. சரிதா ஒருமுறை உம்மன் சாண்டியைச் சந்தித்ததாக உள்ளது, ஆனால், தலைமைச் செயலகத்தில் உள்ள வளாக கேமராக்களில் உள்ள பதிவுகளை அழித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால், சரிதா நாயர், இதனை எதிர்த்து கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்க தொடர்ந்தார். ஏற்கெனவே போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, இத்தகைய விசாரணை தேவையில்லை மேலும் இது அரசியல் நோக்கத்தில் உள்ளது என்று மனு தாக்கல் செய்யப்பட்டது[5].

The office of Team Solar on Chittoor Road in Kochi raided on Sunday 16-06-2013பாபுராஜ் புகாரின் வழக்கு விசாரணையில் தீர்ப்பு: வெளிநாடு வாழ் இந்தியரான ஆரன் முளாவைச் சேர்ந்த பாபுராஜ் என்பவர் தன்னை சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் சேர்ந்து சோலார் பேனல் நிறுவனத்தில் இயக்குனர் பதவி தருவதாக கூறி ரூ.1 கோடியே 19 லட்சம் பணம் மோசடி செய்ததாக புகார் கூறி இருந்தார்[6]. இது தொடர்பாக பத்தினம் திட்டா கோர்ட்டில் விசாரணை நடந்தது. அப்போது பாபுராஜ் தரப்பில் பல்வேறு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் 8 தவணைகளாக பணம் வாங்கி இருப்பதற்கான ஆவணங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் பாபுராஜை நம்ப வைக்க சரிதாநாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் முதல்–மந்திரி அலுவலக ஆவணங்களை போலியாக தயாரித்து அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஜெயகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு அளித்தார்[7]. பிஜு ராதாகிருஷ்ணனுக்கும், சரிதாநாயருக்கும் தலா 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததோடு, சரிதாநாயருக்கு ரூ.45 லட்சம் அபராதமும், பிஜு ராதாகிருஷ்ணனுக்கு ரூ.75 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்[8]. மேலும் தண்டனை பெற்றவர்கள் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் எனவும் தீர்ப்பில் கூறி இருந்தார்[9].

டி.எப்.வொய்.ஐ. அமைச்சர் கூட்டத்தில் கலட்டா தொந்தரவு செய்தனர் 2015.

டி.எப்.வொய்.ஐ. அமைச்சர் கூட்டத்தில் கலட்டா தொந்தரவு செய்தனர் 2015.

தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது, மேல் முறையீடு செய்வேன்சரிதா நாயர்: தீர்ப்பை கேட்க பிஜு ராதாகிருஷ்ணனும், சரிதாநாயரும் பத்தினம் திட்டா கோர்ட்டுக்கு வந்திருந்தனர். பிஜு ராதாகிருஷ்ணன் அவரது முதல் மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருப்பதால்[10] போலீசார் அவரை மீண்டும் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர். சரிதாநாயர் சோலார் பேனல் மோசடி வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார். எனவே அவர், கோர்ட்டு முன்பு நிருபர்களிடம் கூறியதாவது[11]: பத்தினம்திட்டா கோர்ட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஏமாற்றமாக உள்ளது. எனது தரப்பு நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கருதுகிறேன். என்றாலும் நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். தீர்ப்பில் மேல் முறையீடு செய்ய எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தண்டனையை எதிர்த்து ஒரு வாரத்துக்குள் மேல் முறையீடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். சரிதாநாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 28 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. அதில், பாபுராஜ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதுவே சோலார் பேனல் மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் வெளியான முதல் தீர்ப்பாகும். இன்னும் 27 வழக்குகளில் தீர்ப்புகள் அடுத்தடுத்து வெளியாகுமென தெரிகிறது.

டி.எப்.வொய்.ஐ. அமைச்சர் கூட்டத்தை தொந்தரவு செய்தனர் 2015

டி.எப்.வொய்.ஐ. அமைச்சர் கூட்டத்தை தொந்தரவு செய்தனர் 2015

சோலார் பேனல் மோசடி வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு: சோலார் பேனல் மோசடி வழக்கில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் தொடர்பு உண்டு என்றும், அவர்களது பெயர்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பேன் என்றும் சரிதா நாயர் கூறினார்[12], “சோலார் பேனல் வழக்கில் பல அரசியல் பிரமுகர்கள் எனக்கு உதவுவதாக கூறினர். ஆனால் என் மீது தொடரப்பட்ட வழக்குகளில் யாரும் எனக்கு உதவவில்லை. மற்ற சில விசயங்களில்தான் எனக்கு அவர்கள் உதவினார்கள். சோலார் பேனல் ஊழல் வழக்கில் நிதியமைச்சர் கே.எம்.மாணியின் மகன் ஜோஸ் கே.மாணி தவிர மேலும் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டு. அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு இந்த மோசடியில் பங்கு உண்டுசோலார் ஊழல் வழக்கில் தொடர்புடைய அனைவரின் பெயர்களையும் நான் 3 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். அருவிக்கார தேர்தலை பாதிக்கும் என்பது பற்றி எனக்கு கவலையில்லை[13], இவ்வாறு அவர் கூறினார்[14].

Solar scam details - The Hindu - Graphicsஆடூர் பிரகாஷ் சரிதாவுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்: ஆடூர் பிரகாஷ், மாநில நிதுத்துறை அமைச்சர், தனக்கும் சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் இல்லை, DYFI ஆட்கள் வேண்டுமென்றே, இதனை அரசியல் ஆக்கப்பார்க்கிறார்கள், என்று கூறியுள்ளார். DYFI ஆட்கள் அமைச்சர் விழா நடக்கும் இடத்தில் வந்து கருப்புக் கொடிகளைக் காட்டி ஆர்பாட்டம் செய்தனர். பெனி ராதாகிருஷ்ணன், சரிதா நாயரின் வழக்கறிஞர், தம்பன்னூர் ரவி மூலம் உம்மன் சாண்டி மற்றும் ஆடூர் பிரகாஷ் சரிதா நாயருக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுத்து அனுப்பினார் என்றார்[15]. இது ரகசியமாக பதிவான ஒரு விடியோவில் பதிவாகியுள்ளது. இதை வைத்துக் கொண்டு DYFI ஆட்கள் கலாட்டா செய்தனர்[16].

வேதபிரகாஷ்

© 20-06-2015

[1] http://www.dailythanthi.com/News/India/2015/06/18162533/Saritha-Nair-Biju-Radhakrishnan-sentenced-to-3-years.vpf

[2] Kerala High Court – Joy Kiatharath vs Unknown on 7 August, 2013 – Crl.MC.No. 3536 of 2013 (D); http://indiankanoon.org/doc/16838222/

[3]  தினத்தந்தி, சோலார் பேனல் வழக்கு சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில் ரூ.45 லட்சம் அபராதம் கோர்ட் உத்தரவு, பதிவு செய்த நாள்:

வியாழன் , ஜூன் 18,2015, 4:25 PM IST

[4] http://www.business-standard.com/article/pti-stories/solar-case-verdict-vindication-of-govt-stand-on-probe-chandy-115061901078_1.html

[5] Saritha S. Nair, an accused in the solar scam, has approached the Kerala High Court to quash the appointment of a judicial commission that is probing into the case. Saritha, in her petition, said there was no need to appoint a judicial panel since the case did not involve the public. She said the case should be probed only by the vigilance department or a Central agency. She said police was already investigating the case and there is no need for a parallel probe. The United Democratic Front government set up the commission due to pressure from the Opposition. The panel was set up under the Commission of Inquiry Act on October 28, 2013 headed by Justice G. Sivarajan. Saritha submitted before the court that the appointment of the commission was politically motivated it was not needed in a cheating case involving a dispute between her company, Team Solar Renewable Energy Solutions Private Limited, and some aggrieved private individuals. The commission also asked her to submit details of her electronic devices including her computer. She argued that it would amount to violation of the protection guaranteed in the Constitution under Article 20 (3) which prohibits compelling an accused to be a witness against herself.

http://indiatoday.intoday.in/story/kerala-solar-scam-saritha-nair-united-democratic-front-oommen-chandy/1/369511.html

[6]  தமிழ் இந்து, சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை, Published: June 19, 2015 08:31 ISTUpdated: June 19, 2015 08:32 IST

[7]  தினமலர், சரிதா நாயருக்கு கிடைத்தது 3 ஆண்டு சிறை தண்டனை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 19, 00:19 .

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1277859

[9] மாலைமலர், சோலார் மோசடி வழக்கு: 3 ஆண்டு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடுசரிதா நாயர் பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 19, 11:21 AM IST

[10] http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/article7332357.ece

[11] http://www.maalaimalar.com/2015/06/19112149/solar-panel-scam-3-year-senten.html

[12]  தினகரன், சோலார் பேனல் மோசடியில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது: சரிதா நாயர் பாபரப்பு குற்றச்சாட்டு, சனிக்கிழமை, 20-06-2015: 01:49:12.

[13] http://english.manoramaonline.com/news/just-in/kerala-mlas-ministers-involved-in-solar-scam-saritha-s-nair.html

[14] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=151557

[15] http://www.thehindu.com/news/national/kerala/dyfi-men-disrupt-ministers-meet/article7335666.ece

[16] The agitation was triggered by a leaked statement, allegedly made by Saritha’s lawyer Feni Balakrishnan, that Chief minister Oommen Chandy and Adoor Prakash had sent money to Saritha through Thampannoor Ravi. The statement was heard in the backdrop of a video footage, shot by a hidden camera, that showed Saritha Nair raising fresh allegations that ministers and MLAs were involved in the solar scam.

http://english.manoramaonline.com/news/kerala/adoor-prakash-links-with-saritha-nair-solar-scam.html