Archive for the ‘டுவிட்டர்’ Category

மோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (2)

மார்ச் 11, 2014

மோடியின் திருமணம், ஜஸோதாபென் என்ற பெண்மணியின் நேர் காணல், திரித்து வெளியிட்ட ஊடகங்கள், தூஷணத்தில் முற்றியுள்ள விவகாரம் (2)

 

சுதந்திரம் இல்லை-ஊடகம் புலம்பல்

சுதந்திரம் இல்லை-ஊடகம் புலம்பல்

 

மோடி  திருமணமானவரா[1]  (மார்ச்.8, 2014)?: வழக்கம் போல திக்விஜய் சிங் மோடியின் மீது வசைபொழிய ஆரம்பித்து விட்டார். இம்முறை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையினை எடுத்துக் கொண்டுள்ளார். அதிலும், சர்வதேச மகளிர் தினமான 08-03-2014 அன்று அந்த தூஷனங்களை ஆரம்பித்துள்ளார். மனைவியை மதித்து காப்பாற்ற முடியாதவர், இந்தியாவை எப்படி காப்பாற்றுவார்? என்று, நரேந்திரமோடி மீது காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் தாக்குதல் தொடுத்தார்[2].  “வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைப்பெண்ணான யசோதா பென்னை அவர் திருமணம் செய்தாரா”, என்ற வரியை காப்பியடித்த நக்கீரன் பிழையை சரி செய்யாமல் அப்படியே போட்டுள்ளது[3]. அதாவது தமிழ் ஊடகங்களின் தரம், ஊடக தர்மம், கருத்து சுதந்திரம் முதலியன அந்த அளவில் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், சர்வதேச மகளிர் தினமான 08-03-2014 அன்று நரேந்திரமோடி குறித்து சில கருத்துகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:

 

el_sari_rojo_javier_moro

el_sari_rojo_javier_moro

நரேந்திர  மோடியின்  மனைவி[4] (இது  தினத்தந்தியின்  தலைப்பு): ‘‘மோடியிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நரேந்திரமோடியின் இதயத்தில் பெண்கள் மீது கொஞ்சமாவது மரியாதை இருந்தால், அவரிடம் இருந்து சில தகவல்களை அறிய விரும்புகிறேன். தேர்தல் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட வேண்டிய பகுதியில் அவருடைய மனைவியின் பெயரை குறிப்பிடாதது ஏன்? வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைப்பெண்ணான யசோதா பென்னை[5] [Jashodaben ] அவர் திருமணம் செய்தாரா, அல்லது திருமணம் செய்து கைவிட்டாரா, என்ற தகவலை தெரிவிக்காதது ஏன்? , இப்படி அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆனால், மேலே நேர்காணலில் குறிப்பிடப் பட்டுள்ளபடி, அந்த பெண்மணியே தனித்து வாழ்ந்தார், அவ்வாறே வாழ விரும்புகிறார் என்ற போது, இவருக்கு இந்த குசும்புத்தனம், அவதூறான விளக்கம், தூஷண பிரச்சாரம் முதலியவை ஏன்?

Sonia faces
மோடியின்  அந்தரங்கம்:   திக்  விஜய்சிங்  கடும்  விமர்சனம்  (இது  மாலை  மலரின்  தலைப்பு)[6]: மோடி தனக்கு திருமணமாகிவிட்டதாக ஏன் அதில் கூறவில்லை? அவர் திருமணம் செய்து கொள்ளவில்லையா? அல்லது தனது மனைவியை கை விட்டுவி்ட்டாரா? வறுமையில் வாடும் ஜஷோடாபென் (மோடியின் மனைவி என கூறப்படுபவர்) வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்[7]. இவ்வளவு பெரிய மனிதராக வந்திருக்கும் மோடி ஏன் அவரது மனைவிக்கு பங்களாவை தரவில்லை? தனது மனைவியை கவனிக்கத் தெரியாத ஒருவர் நாட்டை எப்படி கவனித்துக் கொள்ள போகிறார்?, என்று திக்விஜய் கேளிவிகளை அடுக்கினார். மனைவி என்று சொல்லிக் கொள்பவரே 45 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றார், என்று சொல்லியுள்ள நிலையில், கணவனைப் பற்றி ஏன் கேள்விகள் எழுப்ப வேண்டும்? இத்தனை தடவை மோடி வெற்றிப் பெற்று வந்துள்ளார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவ்வாறே குறிப்பிட்டிருப்பார். ஆனால், இக்கேள்வி கேட்கப்படவில்லை. அதாவது, அதில் ஒன்றும் விசயமே இல்லை. இப்பொழுது, மனைவி எனப்படுகின்ற 62 வயதான பெண்மணியே விளக்கல் கொடுத்து விட்டார். பிறகு என்ன பிர்ச்சினை?

Sonia-dances-with-tribals -renuka

மகாத்மா  காந்தியின்  படுகொலைக்கு  ஆர்.எஸ்.எஸ்.   இயக்கத்தை  குற்றம்  சாட்டிய  ராகுல்  காந்தியின்  கருத்து  சரியானது  தான்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்கும் நரேந்திரமோடி, அந்தப் பெண் வசிப்பதற்கு பங்களா போன்ற வசதிகளை செய்த கொடுக்காதது ஏன்? தனது மனைவியை மதிக்காமல், காப்பாற்ற முடியாத சிலரால், இந்திய நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்?’’, இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார். அவர் மேலும் கூறும்போது, மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை குற்றம் சாட்டிய ராகுல் காந்தியின் கருத்து சரியானதுதான் என்றும் திக்விஜய்சிங் தெரிவித்தார். ‘‘ஆர்.எஸ்.எஸ். கொள்கைதான் காந்தியின் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. இதை எங்களால் நிரூபிக்க முடியும்’’ என்றார், அவர்[8]. ஆக, இவ்வாறு மறுபடிமறுபடி பொய்களை சொல்லிக் கொண்டே காலத்தைத் தள்ள வேண்டும், பொய்பிரச்சாரத்தை மேற்கொள்ல வேண்டும் என்று தீர்மானமாக இருக்கின்றனர் என்றாகிறது.

Rahul Gandhi-with actress, girl friend etc

பெண்களுடன் மோடியின் டீக்கடை  பிரசாரம்: நரேந்திரமோடியை டீ விற்றவர் என்று காங்கிரஸ் தரப்பில் விமர்சிக்கப்பட்டதால், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பா.ஜனதா நாடு முழுவதும் ‘நமோ டீக்கடை’கள் மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். மகளிர் தினமான நேற்று டீக்குடித்தபடி நரேந்திரமோடி பொதுமக்களுடன் கலந்துரையாடிய காட்சி இந்தியா முழுவதும் 1,500 இடங்களில் இணைய தளம் மூலம் ஒளிபரப்பானது. இந்த நிலையில், அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடும் திக்விஜய்சிங் இப்போது நரேந்திரமோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில கேள்விகளை எழுப்பி புதிய சர்ச்சையை அவர் தொடங்கி வைத்து இருக்கிறார்.

Was Rahul detained at Boston airport 2001 -The Hindu cutting

மனைவி என்கின்ற பெண்மணி சொன்னதையும் மீறி அவதூறு பேசுவதேன்?: ஜஸோதாபென் என்கின்ற 62 வயதான அப்பெண்மணி பேட்டி கொடுத்திருப்பதிலிருந்து, அவரது வெளிப்படைத்தனம் காணப்படுகின்றது. லக்ஷ்மி அஜய் ஊடகதோரணையில் கேள்விகள் கேட்டிருந்தாலும், அதனை பெரிதாக எடுத்டுக் கொள்ளாமல் பதில் அளித்திருக்கிறார். குறிப்பாக அவருக்கு / மோடிக்கு எந்த பாதிப்பையும் தான் ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அந்நிலையில் அதேமுறையில் மற்ற பெண்களான சாகரிகா கோஷ் அல்லது ஆண்களான திக்விஜய் முறையாக பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள், வேண்டுமென்றே தங்களது வார்த்தைகளை வரம்பு மீறி உள்நோக்கத்துடன் உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.  அதாவது, அப்பெண்ணின் நிலையைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். இப்படி தேவையில்லாமல் கேள்விகள் கேட்பதனால், அந்த 62 வயதான பெண்மணியில் நிலை பாதிக்கப்படுகிறது.

Anti-modi campaign - nakkeeran-2013

இதேமாதிரி, சோனியா, ராகுல்  இடத்தில்  சென்று  பேட்டிக்காண, இவர்களது  ஊடகதர்மம்,   ஊடகத்துணிவு,   முதலியவை  வருமா, வேலை  செய்யுமா  என்றெல்லாம்  தெரியவில்லை: இதுவரை யாரும் துணிந்ததாகவும் இல்லை. ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) “சிவப்புப் புடவை” என்ற சோனியாவப் பற்றிய புத்தகம் இந்தியாவில் வெளியிடப்படக் கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் தடுத்து விட்டனர்[9]. அப்பொழுது இவர்கள் கருத்து சுதந்திரம், பத்திரிகா தர்மம், முதலிவற்றைப் பற்றி பேசவில்லை. ராகுலின் காதலி, மனைவி என்று பல செய்திகள் வந்துள்ளன. அவற்றை வைத்துக் கொண்டு ஏன் ராகுலிடம் கேள்விகள் கேட்கப்படவில்லை? துணிச்சலான அர்னவ் கோஷ்வாமி ராகுலிடம் கேட்டிருக்கலாமே? ஆனால், கேட்கவில்லையே? இதிலிருந்தே ஊடகக் காரர்கள் பாரபடசமாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது. தேர்தல் வருவதினால், காங்கிரஸ்காரகள், கீழ்த்தரமான பிரச்சாரங்களிலும் இறங்கத் தயார் என்று வெளிப்படுத்திக் கொள்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை வேவு பார்த்தார் என்று செய்திகளை வெளியிட்டன[10], ஆனால், அமுங்கி விட்டன. இவற்றை ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும் போது, மோடியை என்னமோ பெண்களுக்கு விரோதி, பெண்மையை எதிர்ப்பவர், பெண்ணுரிமைகளைப் பறிப்பவர் என்பது போல பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேலை செய்வது போல உள்ளது. கற்பழிப்பு என்று முன்னர் ஆர்பாட்டம், கலாட்டா செய்தனர். பிறகு ஊழல் என்று தெருக்களில் ஆர்பாட்டம், கலாட்டா செய்தனர். இப்பொழுது மோடியைப் பிடித்துக் ஒண்டு விட்டனர் போலும்.

 

வேதபிரகாஷ்

11-03-2014


[1] தினமணி, மோடிதிருமணமானவரா?, By dn, புது தில்லி, First Published : 09 March 2014 12:38 AM IST

[2] தினத்தந்தி, மனைவியைமதித்துகாப்பாற்றமுடியாதவர், இந்தியாவைஎப்படிகாப்பாற்றுவார்?நரேந்திரமோடிமீது திக்விஜய்சிங்கடும்தாக்கு, பதிவு செய்த நாள் : Mar 09 | 04:00 am

[3] நக்கீரன், ஏழைப்பெண்யசோதாவைமோடிதிருமணம்செய்தாரா?
 
திக்விஜய்சிங்கேள் , ஞாயிற்றுக்கிழமை, 9, மார்ச் 2014 (7:56 IST)

[6] மாலைமலர்,மோடியின்அந்தரங்கம்: திக்விஜய்சிங்கடும்விமர்சனம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 08, 6:41 PM IST

கர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா?

ஓகஸ்ட் 17, 2012

கர்நாடகத்தின் மீது பிரச்சாரத் தாக்குதல்: விஷமத்தனமான வதந்தியா அல்லது காங்கிரஸின் அமைதியை சீர்குலைக்கும் தந்திரமா?

காங்கிரஸின் மெத்தனப் போக்கு: குஜராத் அல்லது கர்நாடகம் இப்படி காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் எது நடந்தாலும், தேசிய தலைப்புச் செய்திகளாக மாறி வருவது வழக்கமாகி விட்டது. இப்பொழுது, அதனுடன், மின்னணு வதந்தியும் சேர்ந்துள்ளது. பேஸ்புக், ட்விட்டர் முதலிய இணைதளங்களில் கருத்து சுதந்திரம் என்ற போக்கில் கண்டபடி பொறுப்பில்லமல் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இவற்றை மற்றவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றபடி திரித்து வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர். அரசு, அதிகாரிகள், புலனாய்வுத் துறை முதலியோர் அத்தகைய விஷமிகளைக் கண்டுபித்து தண்டிக்காமல் அல்லது அவர்களுக்கு முன்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்குக் காரணம். அதிலும் காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சி செய்யும் மாநிலம், அதிலும் பி.ஜே.பி என்றால் சொல்லவே வேண்டும், காங்கிரஸ் சந்தோஷமாகத்தான் இருக்கும்.

மின்னணு கலவரத்தைத் தூண்டும் அமைதியைச் சீர்குலைக்கும் பொய்மைப் பிரச்சாரம்: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தின் எதிரொலியாக மும்பையில் வதந்திகளை வைத்துக் கொண்டு, ஆனால் திட்டமிட்டு, ஒரு கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லீம்கள் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இப்பொழுது மஹாராஷ்டிரத்தை

வடகிழக்கு மாநிலத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்ப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்,  கர்நாடக முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர், மகராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் மற்றும் அசாம் முதல்வர் தருண் கோஹாய் ஆகியோரிடம் போனில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் தமது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் கூறியதாவது: கர்நாடகாவில் வடகிழக்கை சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக பரவியுள்ள வதந்தி கவலை அளிக்கிறது. வடகிழக்கு மாநிலத்தவர்கள் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாக உணரும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்து கர்நாடகம் என்ற முறையில், இன்னொரு பிரச்சாரத் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. பெங்களூர் நகரில் வசித்து வரும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வடகிழக்கு மாநிலங்களவைச் சேர்ந்தவர்கள் திடீரென ஒரே நேரத்தில் பெங்களூர் நகரை விட்டு ரயில் மூலம் வெளியேறிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காரணம் செல்போன்களில் வதந்திகளைப் பரப்பி விட்டதுதானாம்! வழக்கம் போல, அரசு எந்திரங்களுக்கு, இதைப் பற்றி தெரியும்-தெரியாது என்று முரண்பாடாகச் சொல்ல ஆரம்பிப்பர். ஆனால் உண்மையென்னவென்றால், அத்தகைய விடியோவை பரப்ப விட்டது யார் என்பதனை அரசு தெரியப்படுத்த வேண்டும்.

கலவரங்களைக் கட்டுப்படுத்தாத அரசுகள் மற்ற மாநிலங்களை ஏன் குறைகூற வேண்டும்: கர்நாடகத்தில் பீதியைக் கிளப்பி மாணவர்களை அசாமிற்கு அனுப்பத்தூண்டியவர்கள், அங்குள்ள நிலைமையினையும் அறிந்து கொள்ளவேண்டும். நேற்றுவரை அங்கு கலவரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை மத்திய அல்லது மாநில அரசுகள் ஒன்றும் தடுத்துவிடவில்லை. மாறாக முழு செய்திகள் வரவிடாமல் தடுத்து வருகின்றன.

ஆகஸ்ட் 15/16, 2012: அசாம் மாநிலத்தின் பக்ஷா மாவட்டத்தில் இரு பிரிவினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ளது.  வன்முறையை தடுக்கும் பொருட்டு போலீசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். கலகக்காரர்கள், பஸ் உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு தீவைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையை கட்டுப் படுத்தும் வண்ணம், தமுல்பூர் மற்றும் பக்ஷா பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப் பட்டுள்ளனர். முன்னதாக நடந்த வன்முறையில் சி்க்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலத்தோர் மீது ஆகஸ்ட் 20ஆம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று திடீரென பரவியது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரில் நேற்று திடீரென பரவ ஆரம்பித்தது. மும்பைப்போலவே பொய்யான வீடியோக்களும் பரப்பப் பட்டன. ஆனால் போலீஸார் எந்த விவரங்களையும் கொடுக்காமல் இருக்கின்றனர்.

பெங்களூரில் தவறான வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். அப்படி சொல்வதை விட நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவர்கள் மனங்களில் நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருக்குமே?

அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த வதந்தி காட்டுத்தீயாகப் பரவியது. இதையடுத்து. இதையெல்லாம் அரசு கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. கண்டு பிடித்தும் நடவடிக்கை எடுக்காமல் அல்லது காலம் தாழ்த்துவது ஏன் என்று மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

அரசியல் செய்து வரும் மத்திய அரசு: தங்கள் உடைமைகளுடன் ஒரே நேரத்தில் பெங்களூர் ரயில்நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்.  இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷின்டே ஆகியோர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் புதன்கிழமை இரவு தொடர்பு கொண்டு, வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாயிடம் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசியுள்ளார். இப்படியெல்லாம் மும்பை கலவரத்தின் போது பேசிக் கொண்தார்களா? ஹிமான்ஸு ராய் என்ற போலீஸ் அதிகாரி அரசுக்கு எல்லாமே தெரியும் என்று உறுதியாகச் சொல்கிறார், பிறகு ஏன் மெத்தனமாக இருந்து கலவரத்தை நடத்த அனுமதித்தார்கள்? முன்னமே அவர்களை கைது செய்திருக்கலாமே? கூட்டம் / ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்திருக்கலாமே? அதேநிலைதான் இங்கும் உள்ளது. எல்லாவற்றையும் அனுமதித்துவிட்டு, இருப்பினும் பரபரப்பு அடங்கவில்லை என்று தெரிகிறது என ஊடகங்கள் சந்தோஷிக்கின்றன.