Archive for the ‘கூடா கலவி’ Category

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)

ஜனவரி 17, 2015

“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (3)

ஆதாரம் இல்லை - பெருமாள் முருகன்

ஆதாரம் இல்லை – பெருமாள் முருகன்

மாதொருபாகன் பிரச்சினையை சார்லி ஹெப்டோவுடன் ஒப்பிட்டது: இப்பிரச்சினையில், கிருத்துவ-இஸ்லாமிய சர்ச்சைகளையும் ஏன் இணைக்க வேண்டும் என்று சிலர் கேல்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அத்தகைய ஒப்பீட்டை “தி இந்து” தான் செய்தது[1], “ஜனநாயகச் சமூகங்களின் அடிப்படையே கருத்துச் சுதந்திரம்தான். அந்தக் கருத்துச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல்தான் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அந்த இதழின் ஆசிரியர், கேலிச்சித்திரக்காரர்கள் நால்வர், காவலர்கள் இருவர் உட்பட 12 பேரைப் பயங்கரவாதிகள் கொன்றிருக்கிறார்கள். பேனாவுக்கு மாற்று பேனாதானேயொழிய, துப்பாக்கி அல்ல என்பதை உணராத அந்தப் பயங்கரவாதிகள், இந்தத் தாக்குதலின் மூலம் பிரான்ஸில் உள்ள அப்பாவி முஸ்லிம்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்கள்!”, என்று ஆரம்பித்து, தி இந்து தமிழில், “உலகின் பெரும்பாலான நாடுகளில் இது ஒரு பெரிய பிரச்சினை. படைப்புகளை உருவாக்குபவர்கள் கத்தி மேல் நடப்பதுபோல் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவில் சமீபத்திய உதாரணங்களாக ஆமிர் கானின் ‘பி.கே.’ திரைப்படத்துக்கும் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலுக்கும் எழுந்த சகிக்க முடியாத எதிர்ப்புகளைக் குறிப்பிடலாம்”, என்று இதையும் சேர்த்துள்ளது[2]. பிறகு யார், யாருக்கு வழி காட்டுகிறார்கள்?

பெருமாள் முருகன் சமரசத்திற்கு பிறகு வெளியே வருதல்

பெருமாள் முருகன் சமரசத்திற்கு பிறகு வெளியே வருதல்

பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெருமாள் முருகன் வெளியிட்ட கடிதம்: 13-01-2015 அன்று அமைதி பேச்சிற்குப் பிறகு, வெளியிட்ட கடிதம்[3]: “எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே, உயிர்த்தெழப்போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள். ‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே, பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

  1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர, அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி, எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
  2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
  3. பெருமாள்முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
  4. இனி, எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
  5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி. – பெ.முருகன் (பெருமாள்முருகன் என்பவனுக்காக)”, தி இந்து இதை வெளியிட்டு, இக்குறிப்பையும் கொடுத்துள்ளது. குறிப்பு: சர்ச்சைக்குரிய ‘மாதொருபாகன்’ நாவல் எதிர்ப்புப் போராட்டக்குழுவினர் – எழுத்தாளர் பெருமாள்முருகன் இடையே நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில், “ பெருமாள்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். ‘மாதொருபாகன்’ நாவலில் சர்ச்சைக்குரிய பகுதிகள் நீக்கப்பட வேண்டும். தற்போது விற்பனையில் உள்ள பிரதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்” ஆகிய நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டன. கடைசியாக, பெருமாள்முருகன் இவற்றை ஏற்றுக்கொண்டதன்பேரில், அவருக்கு எதிரான போராட்டங்களைக் கைவிடுவதாகப் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் பெருமாள்முருகன் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை இது.

பெருமாள் முருகன் - மாதொருபாகன்

பெருமாள் முருகன் – மாதொருபாகன்

மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள்[4]: பெருமாள்முருகன் 13-01-2015 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எழுத்தாளன் பெருமாள்முருகன் இனி இல்லை. அவன் கடவுள் அல்ல. ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். மாதொருபாகன்நூலோடு பிரச்சனை முடியப்போவதில்லைவெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் நான் எழுதிய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். நான் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது. எனது நூலை வெளியிட்ட பதிப்பகங்களுக்கு உரிய நஷ்டஈடு அளிப்பேன். எனது நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்க தயார்”, என்று பெருமாள்முருகன் தெரிவித்துள்ளார்[5]. இது விரக்தியா, அகங்காரமா என்பது அவருக்குத்தான் தெரியும். “உயர்வு நவிற்சி அணி” எப்படியிர்க்கும் என்பது தமிழர்களுக்குத் தெரிந்தது தான்! மேலும், “மாதொருபாகன் நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது ஒரு நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும்”, என்பது, ஏதோ எச்சரிப்பது போலத்தான் உள்ளது. அப்படியென்றால், அவரது-அவர்களது அடுத்த திட்டம் என்ன என்று தெரியவில்லை.

மாதொரு பாகன் ஆதரவு.2

மாதொரு பாகன் ஆதரவு.2

நாத்திகக் கட்சிகள் உள்நுழைந்து ஆர்பாட்டம் செய்தது: சென்னைப் புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை (14-01-2015) இரவு திடீரென இருவர் முகத்தில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு வந்து கருத்துரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றனர்[6]. பபாசி நிர்வாகிகளும் வந்து புத்தகத் திருவிழா அமைதியாக நடக்க ஒத்துழைக்குமாறு கோரினர். ஆனால், முகத்தில் கருப்புத் துணி கட்டியவர்கள் கோஷங்களை எழுப்பி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் அப்பகுதியிலிருந்து போலீஸார் அழைத்துச் சென்றனர்[7]. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்’ நூல் தொடர்பான சர்ச்சையில், எழுத்தாளருக்கு ஆதரவாக மாற்றுவின் இடதுசாரி இளைஞர் சார்பில் போராட்டம் நடைபெற்றது, ஆனால், டிவிசெனலில் “விடுதலை ராஜேந்திரன்” தன் பெயரைச் சொல்லிக் கொண்டு பேட்டி கொடுத்தார். அதாவது, திராவிடக்கழகத்தவரும் இதில் நுழைந்துள்ளனர். இது குறித்து பபாசி செயலர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்ட அறிக்கையில், புத்தக திருவிழாவை குறும்பதிப்பகத்தார், எழுத்தாளர்கள், ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே, யாருக்கும் ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ யாரும் புத்தகக் காட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். அடுத்த நாள், “எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்து விட்டான்”, என்றெல்லாம் செய்திகள் வெளியிடப்பட்டன[8]. பெருமாள் முருகன், இனிமேல் தான் எழுதுவதையே விட்டுவிடப் போகிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

Madhuru Bagan - Oppopsition for sales increase DM

Madhuru Bagan – Oppopsition for sales increase DM

மனுஷ்ய புத்திரன், எல்.ஆர்.ஜெகதீசன் முதலியோரின் விமர்சனங்கள்: பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நண்பர்கள் சிலர் புத்தக கண்காட்சிக்கு வெளியே மெளனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது பெருமாள் முருகன், தனது படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், தன் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அந்த நூல்களை இனி விற்க வேண்டாம் என்றும், அதற்கான் நஷ்ட ஈடை தான் பதிப்பகங்களுக்கு கொடுத்து விடுவதாகவும், அதேபோல தன் புத்தகங்களை இதுவரை வாங்கியவர்கள் அவற்றை எரித்துவிடலாம் என்றும், அதற்கான நஷ்ட ஈடை தான் கொடுத்து விடுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்… இதன் மூலமாக தனக்காக குரல் கொடுத்த அத்தனை பேரையும் செருப்பால் அடித்திருக்கிறார் பெருமாள் முருகன். ………அவர் – பெருமாள் முருகன் இப்போது செய்திருப்பதென்ன? இது பச்சையான கோழைத்தனம். பச்சாதாபத்தை தூண்டி தனக்கு இப்போது கிடைத்திருக்கும் ஊடக வெளிச்சத்தை இன்னும் சில தினங்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி இது, என்று சாடியுள்ளார் மனுஷ்ய புத்திரன்[9]. எல்.ஆர்.ஜெகதீசன், காட்டமாக இதற்கெல்லாம் பெரியார் தான் காரணம் என்று நக்கலாக வாதம் புரிந்துள்ளார்[10]. அதாவது, இங்கு உண்மையினை மறைத்து, பிரச்சினையைத் திசைத்திருப்பி, விசயத்தையும் வேறுவழியில் இழுத்துச் செல்லும் போக்கைக் கவனிக்கலாம்.

ருஷ்டி-நஸ்.ரீன் -முருகன்

ருஷ்டி-நஸ்.ரீன் -முருகன்

தமிழ் இந்துவின் விவரங்கள்: சல்மான் ருஷ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ நாவல் தடைசெய்யப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ‘டாவின்சி கோட்’ திரைப்படம் தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு வெண்டி டோனிகரின் ‘தி ஹிந்துஸ்: அன் ஆல்டர்னேட்டிவ் ஹிஸ்டரி’ புத்தகம். இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். இந்த உதாரணங்களுடன், எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நாவலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது, என்று “தி இந்து” கூறுகிறது. இந்த நாவல், திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் புத்தகத்தின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள்முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்திருக்கின்றன[11], என்று விவரித்தது. எம்.எஃப்.ஹுஸைன், தஸ்லீமா நஸ்.ரீன், ஜோசப் முதலியோரை விட்டுவிட்டது! பொதுமக்கள் திரண்டு எதிர்த்துள்ளதை மறைத்து, அவர்களைக் கண்டித்து, தமிழகம் எங்கும் குரல்கள் எழுந்துள்ளது என்று விவரிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

வேதபிரகாஷ்

16-01-2015

[1] தி இந்து, பேனாவைக் கொல்ல முடியாது!”, 10-01-2015.

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6785870.ece

[3]http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/article6772647.ece

[4] தினகரன், மாதொருபாகன் நாவல் ஆசிரியர் விரக்தி என் புத்தகங்களை தீவிட்டு கொளுத்துங்கள், 14-01-2015.00.08.39, புதன்கிழமை.

[5] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127240

[6]http://www.dinamani.com/edition_chennai/chennai/2015/01/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/article2620630.ece

[7] தினமணி, கருத்துரிமைக்காக போராட்டம், By dn, சென்னை First Published : 15 January 2015 04:47 AM IST

[8] The Hindu, “The writer is dead”,  Wednesday, 14-01-2015, p.7.

[9] http://heronewsonline.com/novel-controversy/

[10] http://heronewsonline.com/periyaar/

[11]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/article6733122.ece