Archive for the ‘வாத சூத்திரம்’ Category

எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

ஜூன் 26, 2017

எல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்! (10)

Tamil writers, speakers, researchers have been rhetoric

ல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர்.  எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1].  ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்தன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.

Malar Mannan - 2013

இந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக்கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்கப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்டது.

Thiruvalluvar coin minted by F W Ellis. front and observe- British museum

வள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம்.  இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.

Tiruvalluvamalai- 11-12th cent CE, interpolated

மதம் மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்தனர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின்சரித்திரங்கள்எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.

Ellis forged works

திருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபிலர் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் முதலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வள்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy]  முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.

© வேதபிரகாஷ்

26-06-2017

Tiruvalluvamalai- works forged in his name

[1] மலர் மன்னன்,  , http://puthu.thinnai.com/?p=11110

[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D

[3]  ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524

[4] Sir Walter Elliot came to Madras in 1821 and worked till 1860, as a Member of the Council of the Governor of Madras. He was a life long and devoted student of Oriental Studies inBotany, Zoology, Indian languages, Numismatics and Archeology. He rescued the Amaravathi Marbles, which are now housed in the British Museum along with his coin collection and collection of other artifacts.. His work, ‘Coins of Southern India’, formed part of the famous series ‘Numismata Orientalia’, published in 1884

[5] Dirks has suggested that the Mackenzie collection fell through the cracks because it could not be useful either to official Orientalism or to a newly emerging colonial sociology: ‘On the one hand, Mackenzie’s textual materials did not meet Orientalist standards for classicism and antiquity; on the other, Mackenzie’s histories seemed too peculiar, too sullied by myth and fancy, and too localistic and “Oriental” to be of any real help in the development of administrative policy’ .

Dirks, Nicholas B. Castes of Mind: Colonialism and the Making of Modern India, Princeton: Princeton University Press., 200, p.82.

[6] The missionary past was important in shaping the Madras School of Orientalism perspective on several fronts.

  1. First, the Jesuit missionary approach was inspiring as an Indological model in terms of its close attention to the learning of languages (and its focus on the ‘high’ or ‘literary’ vernacular languages).
  2. De Nobili, Beschi, and others among the Jesuit fathers had already come to an appreciation of Tamil language and literature that was taken up by Ellis and his colleagues.
  3. Further, the Jesuit policy of ‘accommodation’ led to an interest in and acceptance of local custom and local communities, which served as the basis for the production of knowledge about South Indian religions, which knowledge the Madras School of Orientalism built upon.
  4. Finally, there was a different approach to questions of origins in the south, and part of this seems due to missionary agendas, which either (in the Jesuit case) sought to uncover an original crypto-Christianity or underlying moral code consistent with Christianity, or (for the Protestants) focussed on uncovering a pre-Brahmanical religion.
  5. In both approaches, the attention of the missionaries—and the Orientalists—was turned toward the Jains.

Orr, Leslie C. “Orientalists, Missionaries, and Jains: The South Indian Story“, in “The Madras school of Orientalism: Producing knowledge in Colonial South India” edited by Thomas R. Stautmann, Oxford University Press, Nrew Delhi, 2009, p.280.