Archive for the ‘ஹலால்’ Category

இப்பொழுது ஒரு இந்தியனின் இதயம் பாகிஸ்தானியனுக்குத் துடிக்கிறது – நான் மறுபடியும் உயிர் வாழத் தயாராக இருக்கிறேன், இக்கருணையெல்லாம் என்னுடைய காத்தவரின் இதயத்திற்கே சேரும் – என்று நன்றி சொல்லும் மௌலானா!

மே 24, 2013

இப்பொழுது ஒரு இந்தியனின் இதயம் பாகிஸ்தானியனுக்குத் துடிக்கிறது – நான் மறுபடியும் உயிர் வாழத் தயாராக இருக்கிறேன், இக்கருணையெல்லாம் என்னுடைய காத்தவரின் இதயத்திற்கே சேரும் – என்று நன்றி சொல்லும் மௌலானா!

Paki-Islamic propagandist lives with the haeart of Hindu priestபாக்கிஸ்தான் மதபோதகருக்கு இந்தியர் இதயம் தானம்: இதய நோயால் உயிருக்கு போராடிய, பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய மதக் கல்வி ஆசிரியருக்கு –  மதபோதகருக்கு, சென்னை,  ஃபோர்ட்டீஸ் மலர் மருத்துவமனை மருத்துவர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்[1]. பாகிஸ்தானில் குஜராத்தில் உள்ள கரியான் பகுதியைச் சேர்ந்தவர் மவுலானா முகமது ஜுபேர் ஆஸ்மி, 41. [ Moulana Mohammed Zubair Ashmi] மதபோதகரான இவருக்கு, சில மாதங்களுக்கு முன் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதோடு, உடல் வீக்கமும், சிறுநீர் வெளியேறுவதில் சிரமமும் இருந்துள்ளது.

Maulana Mohammed Zubaid Asmi with doctors - courtesy The Hinduபாகிஸ்தான் ஆஸ்பத்திரிக்களில் பலனில்லாததால் இந்தியாவிற்கு வந்த மௌலானா: பாகிஸ்தானில் பல ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு, பிறகு லாகூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்[2]. அங்கும் சிகிச்சை பலனில்லாததால், இதயம் மாற்றவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் இந்தியாவில் அந்த அறுவை ன்சிகிச்சை செய்தால் நல்லது என்றும் கூறியிருக்கின்றனர். இதனால், லாகூரில் இருந்து மவுலானா முகமது சென்னை அடையாறில் உள்ள மலர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்[3]. அவருக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால், மேல்சிகிச்சைக்காக, சென்னை, அடையாரில் உள்ள, மலர் மருத்துவமனையில், கடந்த மார்ச், 10ம் தேதி 2013, அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடந்த ஏப்ரல் 2013 இறுதியில், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது[4].

Maulana heart transplanted at Fortis Malar Hspitals.4அரியவகைஇதயநோய்: இதுகுறித்து, மலர் மருத்துவமனை, இதயநோய் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவர் சுரேஷ் ராவ் கூறியதாவது: “ஜுபேர் ஆஸ்மி, “டைலேட்டட் கார்டியோமயோபதி’ [cardiomyopathy] எனும் அரிய வகை இதய நோய்க்கு ஆளானதால், அவரது இதயத்தின் இரண்டு தமனிகளும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன் ரத்தம் வெளியேற்றும் திறன், வழக்கமான, 60 சதவீதத்திற்கு பதில், 15 சதவீதமாக குறைந்திருந்தது. இதனால், அவரின் சிறுநீரகமும் செயலிழந்து, ஒரு நாளைக்கு, 150 மி.லிக்கும் குறைவாகவே சிறுநீர் கழித்து வந்தார். கூடவே, மஞ்சள் காமாலை பாதிப்பும் இருந்தது. நோயாளியின் ரத்த வகை மிகவும் அரிதான ஏபி பாஸிட்டிவ் ஆகும். எனவே அவருக்கு சிகிச்சையளிப்பது மருத்துவர்களுக்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது[5].

Maulana heart transplanted at Fortis Malar Hspitals.3கோயில் அர்ச்சகரின் இதயம்: கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 37 வயதான கோயில் அர்ச்சகருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. இதையடுத்து அர்ச்சகரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர். உடனே அவருக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், மூளைச்சாவு அடைந்த, 37 வயது வாலிபரின் இதயம் தானமாக கிடைத்தது, அவரது உயிரைக் காப்பாற்ற தயாராக இருந்தது. ஆனால், இதயம் தானமாக தந்தவரின் ரத்த வகையில் இருந்து (ஓ பாசிட்டிவ்), ஜுபேர் ஆஸ்மியின் ரத்த வகை (ஏபி பாசிட்டிவ்) மாறுப்பட்டிருந்ததால், மாற்று இதயத்தை அவரது உடல் ஏற்றுக் கொள்ளுமா என்ற சந்தேகம் இருந்தது. “டிஷ்யூ மேப்பிங்” பரிசோதனையில் வந்த நேர்முறையான முடிவு, எங்கள் சந்தேகத்தை தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் பாகிஸ்தான் ஆசிரியருக்கு வெற்றிகரமாக இந்திய அர்ச்சகரின் இதயம் பொருத்தப்பட்டது. இதய கோளாறுடன், சிறுநீரக செயலிழப்பு, மஞ்சள் காமாலை பாதிப்பு என, உயிருக்கு போராடிய ஜுபேர் ஆஸ்மி, சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின், உடல்நலம் தேறிவருகிறார். சில நாட்களில், அவர் தாயகம் திரும்ப உள்ளார். இவ்வாறு சுரேஷ் ராவ் கூறினார்.

Maulana heart transplanted at Fortis Malar Hspitals.1மௌலானா நன்றி கூறியது யாருக்கு?: ஜுபேர் ஆஸ்மியின் உறவினர், ஜமீல் ரகுமான் ஆஸ்மி கூறுகையில், “ஒரு இந்தியர் தானமாக கொடுத்த இதயத்தால், ஜுபேர் ஆஸ்மி மறுபிறவி பெற்றுள்ளார் என்பதை எண்ணும்போது, பெருமையாக உள்ளது. இதற்கு காரணமான மருத்துவர்களுக்கு நன்றி,” என்றார். இதுபற்றி மவுலானா கண்ணீர் மல்க கூறும் போது, “நான் இறைவனின் அருளால் மறுபிறவி எடுத்துள்ளேன். இதயம் தந்த இந்திய மக்களை நன்றியுடன் பாராட்டுகிறேன், என்றார்[6] [“I am ready to live life all over again and it is all due to the kindness of my saviour’s heart,” Ashmi was quoted as saying by the hospital[7]]. மலர் மருத்துவமனை, இதய சிகிச்சைப் பிரிவு இயக்குனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்[8].  இன்டோ ஏசியன் நியூஸ் சர்வீஸ் என்ற செய்தி நிறுவத்தினடமிருந்து பெறப்பட்ட இச்செய்தி தான் அல்லோரும் எடுத்து உபயோகப்படுத்தியுள்ளனர். ஆனால், தமிழில் பொழிபெயர்க்கும் போது, அவர்கள் மாற்று இதயத்திற்காக இரண்டு மாதங்கள் காத்திருந்தனர் என்பதனை மொழிபெயர்க்கவில்லை. மேலும், “நான் மறுபடியும் உயிர் வாழத் தயாராக இருக்கிறேன், இக்கருணையெல்லாம் என்னுடைய காத்தவரின் இதயத்திற்கே சேரும்”, என்றதை வேறுவிதமாக மொழிபெயர்த்துள்ளனர். டு-சர்கில்ஸ்.நெட் என்று முஸ்லிம்களுக்கு சார்பாக உள்ள இணைதளமும் “இப்பொழுது ஒரு இந்தியனின் இதயம் பாகிஸ்தானியனுக்குத் துடிக்கிறது” என்று தலப்பிட்டு[9] எழுதியுள்ளது! மற்ற முஸ்லிம் தளங்களிலும்[10] இச்செய்தி அப்படியே வெளியாகியுள்ளது[11]. “After a wait of about two months, a suitable Indian donor heart of a different blood group became available, the hospital said. “I am ready to live life all over again and it is all due to the kindness of my saviour’s heart,” Ashmi was quoted as saying by the hospital[12]. ஹில் போஸ்ட் என்ற தளத்திலும் இந்த கடைசி வரிகள் உள்ளன[13].

© வேதபிரகாஷ்

24-05-2013


[2] An Indian’s heart is now beating for 40-year-old Moulana Mohammed Zubair Ashmi, a Pakistani national, who has undergone a successful heart transplant surgery at the Fortis Malar Hospital here. Ashmi was suffering from a condition called dilated cardiomyopathy in which functioning of both the ventricles of the heart is severely depressed, said a statement from the hospital Thursday. He was repeatedly admitted to several hospitals in Pakistan with breathing difficulty, poor urine output and swelling in the body, and doctors advised Ashmi’s family that his only chance of survival was a heart transplant. K.R. Balakrishnan, director of cardiac sciences at Fortis Malar, said Ashmi was on medication for more than a year and his heart’s pumping efficiency was only around 10-15 percent against the normal 60 percent. He was flown to Fortis Malar from a hospital in Lahore, and on a detailed examination doctors realised Ashmi also had renal failure; fluid in his lungs and abdomen; and he was hepatitis C positive. After a wait of about two months, a suitable Indian donor heart of a different blood group became available, the hospital said. “I am ready to live life all over again and it is all due to the kindness of my saviour’s heart,” Ashmi was quoted as saying by the hospital – By IndoAsian News Service.

[4] தினமலர், பதிவு செய்த நாள் : மே 24,2013,06:05 IST

[8]  தினமணி, 24 May 2013 03:29 AM IST

[12] Buiness Standard, IANS  |  Chennai  May 23, 2013 Last Updated at 19:02 IST