Archive for the ‘ஹரி கி பௌடி’ Category

கங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்!

ஜூலை 3, 2016

கங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்!

ஜாதி பிரசினையில் சிக்கிய வள்ளுவர் சிலை - 02_07_2016_010_010-1

உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாகமாக நிறுவப்படவில்லை (01-07-2016): உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[1] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ.க – எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டு, அதற்காக, சிலையுடன் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணம் பாரதியார் பிறந்த எட்டயபுரம், மதுரை, கரூர், கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் வழியாக சென்னைக்கு கடந்த 22 ஆம் தேதி சென்றடைந்து,  பிறகு, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார்.  இதற்கு மாநில அரசின் அனுமதியும் முறையாக பெறப்பட்டிருந்தது[2]. ஆனால், எந்த இடத்தில் என்ற விவரங்கள் அதில் இருந்தனவா என்று தெரியவில்லை.

Evening_view_of_Har-ki-Pauri,_Haridwar

தருண் இங்கு சிலை வைக்கிறேன் என்பது அடாவடியான செயல்தான், பிறகு சாதுக்கள் ஏன் எதிர்க்கமாட்டார்கள்?

திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்: அங்கு கங்கைக் கரையில், “ஹர் கி பவுடி” என்ற இடத்தில், திருவள்ளுவர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக் கூடாது என, சிலர் எதிர்த்தனர்.  திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக்  காரணம்[3].  ‘சாதுக்கள் வாழும் பகுதியான ஹரித்துவாரில் அரசியல்வாதிகள் சிலை வைக்க அனுமதிக்கமாட்டோம்’ என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சிலை அமைப்புக் குழுவிடம் வாக்குவாதம் புரிந்தனர்.  ஏராளமானோர் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது என்கிறது விகடன்[4]. ஆனால், சாதுக்கள் எப்படி வள்ளுவரை அரசியல்வாதி என்று நினைத்தனர் அல்லது அவர்கள் அவ்வாறு நினைத்தனர் என்பதனை விகடன் நிருபர் புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்[5]. தருண்விஜய் தலைமையிலான குழு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, “சங்கராச்சாரியா சவுக்” என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது. அங்கு கடந்த 01-07-2016 வெள்ளிக் கிழமை அன்று சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் விழாவை திடீரென புறக்கணித்தனர்[6].  இப்படி தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தன.

Sanaracharya statue - valluvar - Tarun issue

சிவபெருமானின் பாதம், மற்றும் ஆதிசங்கரர் சதுக்கத்தில் சிலை வைப்பேன் என்றால் சரியாகுமா?

உண்மையில் நடந்தது என்ன?: ஹர் கி பௌரி [हर की पौड़ी = Har ki Pauri] = சிவபெருமானின் பாதங்கள் என்ற இடம், ஹரித்வாரில் மிகமுக்கியமான காட் = கங்கைக்கரை இடமாகும். மிகப்புண்ணியஸ்தலமாக அவ்விடத்தை மக்கள் போற்றுகின்றனர். கும்பமேளா சமயத்தில் ஆயிரம்-லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். அதுமட்டுமல்லாது, தினமும் மாலையில் நடக்கும் கங்கா-ஆரத்தியின் போதே ஆயிரக்ககணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். சாதுக்களின் இடம், பல்லாண்டுகளாக அவர்கள் அவ்விடத்தில் இருக்கும் இடமாகும். அதனால் அது “சாதுக்களின் சௌக்க்சாதுக்களின் சதுக்கம் என்றே அழைக்கப்படுகிறது. அதனால், அவர்கள் அங்கு சிலை வைப்பதை எதிர்த்தனர். கடந்த ஒரு வாரமாகவே கங்கை சபை [Ganga Sabha] மற்றும் அகில பாரதிய தீர்த்த புரோஹிதர் சபை [Akhil Bharatiya Teerth Purohit Mahasabha] இவற்றைச் சேர்ந்தவர்கள், இப்படி கங்கைக் கரையில், ஒரு சிலையை வைக்க அனுமதித்தால், இனி நாளுக்கு நாள், சிலைகள் வைப்பது அதிகமாகி விடும். கங்கையே கடவுள் ஆகும், அப்படியிருக்கும் போது, அதன் கரையில், எதற்காக மனிதர்களின் சிலை வைக்கவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்[7]. இந்த விவரங்களை தமிழக ஊடகங்கள் கொடுக்கவில்லை.

Sadhus oppose Tarun efforts for politicization

திடீரென்று அவ்வாறு செய்ய முற்பட்டதால் தான் சாதுக்கள் எதிர்த்தனர்

இரவோடு இரவாக சிலை வைக்க வேண்டிய அவசியம் என்ன?: அதற்குள் 28-06-2016 செவ்வாய்கிழமை இரவு, சங்கராச்சாரியார் சௌக்கில் சிலை வைக்கப்பட்டது. இதனால், அருகில் இருந்த ஆஸ்ரமங்களில் உள்ள சாதுக்கள், அகராக்கள் என்ற மடத்தலைவர்கள் அங்கு கூடி அதனை எதிர்த்தனர். ஏற்கெனவே, அங்கு, ஆதிசங்கரரரின் சிலை இருக்கும் போது, இன்னொரு சிலை அங்கு வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்[8]. இதனால், மாநில கலெக்டர் சிலை நிறுவ தகுந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்க் சிலை நிறுவப்படும் என்றார்[9]. ஒரு சாது வெளிப்படையாகவே, அவர்கள் இவ்விசயத்தை அரசியலாக்கி, பலன் பெற பார்க்கிறார்கள், ஆனால், இவ்விடத்தில், அத்தகைய அரசியல் தேவையில்லை என்றார்[10]. தருண் விஜய் எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதிலிருந்தே, அவர்கள் ஏதோ அடாவடித்தனமாக செய்ய முயல்கின்றனர் என்று தெரிகிறாது. மேலும், சிலை வைக்கும் அமைப்பாளர்கள், தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் அதற்கான முன்னறிப்பும் செய்யவில்லை என்று தெரிகிறது. கங்கை கரையில் எங்கு வேண்டுமானாலும் சிலை வைத்து விடலாம் என்ற தைரியத்தில் வந்து விட்டது போன்று தெரிகிறது.

திருவள்ளுவர் கங்கை சிலை.அவசரம்பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த சிலை திறப்பு விழா: இதையடுத்து, பெயரளவுக்கு பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்[11].  ஆனால், இந்த உண்மைகளை எல்லாம் புரிந்து கொள்ளாமல் தமிழ் ஊடகங்கள், வேறுவிதமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வமாக நிறுவப்படாமல், ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது[12]. அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். புனித நதியான கங்கை கரையோரத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திட்டமிட்ட இடத்தில் நிறுவப்படாமல் வள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது[13]., என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டன.

© வேதபிரகாஷ்

03-07-2016

[1] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.

[2] விகடன், அரசியல்வாதி திருவள்ளுவர்! – சாதுக்கள் எழுப்பிய சர்ச்சை, Posted Date : 18:11 (29/06/2016).

[3] http://www.vikatan.com/news/tamilnadu/65670-tiruvalluvar-statue-fails-to-launch-in-haritwar.art

[4] தமிழ்.ஒன்.இந்தியா, கங்கை நதிக்கரையில் திருவள்ளூவர் சிலை நிறுவ சாதுக்கள் எதிர்ப்புதற்காலிக இடத்தில் சிலை திறப்பு!, By: Karthikeyan, Updated: Thursday, June 30, 2016, 0:14 [IST].

http://tamil.oneindia.com/news/india/opposition-thiruvalluvar-statue-at-haridwar-257086.html

[5] http://tamil.oneindia.com/news/india/opposition-thiruvalluvar-statue-at-haridwar-257086.html

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554809        

[7] However, the project had been opposed by the Ganga Sabha and Akhil Bharatiya Teerth Purohit Mahasabha, another body of priests in Haridwar. “If one such statue is allowed to be installed, there will be a number of others queuing up for it, for so many other people and organisations will insist on having statues of their choice put on the Ganga banks,” Ganga Sabha office bearers argued. “Ganga is a goddess herself. Why have other gods or great men on her banks?” said Ganga Sabha president Purushottam Sharma Gandhiwadi.

The Times of India, Thiruvalluvar statue opening deferred after Haridwar ascetics protest, Sheo S Jaiswal| TNN | Jun 29, 2016, 10.36 PM IST

[8] https://www.youtube.com/watch?v=Dpypnlzqh_8

[9] However, as soon as the statue was installed at the spot on Tuesday night, ascetics from various akharas and ashrams arrived and began protesting, on the grounds that with the staue of Adi Shankara already at the spot, there was no need for a statue of “someone else”. District magistrate Harbans Singh Chugh said a fresh date for its unveiling will be fixed after an appropriate place to install it is decided.

http://timesofindia.indiatimes.com/city/dehradun/Thiruvalluvar-statue-opening-deferred-after-Haridwar-ascetics-protest/articleshow/52978525.cms

[10] https://www.youtube.com/watch?v=WQWuS45nH0w

[11] நியூஸ்.7.டிவி, சாதுக்களின் கடும் எதிர்ப்பால் கங்கை கரையோரம் நிறுவப்படாத திருவள்ளுவர் சிலை!, June 29, 2016.

[12] தினகரன், கங்கை கரையில் நிறுவ சாமியார்கள் கடும் எதிர்ப்பு திருவள்ளுவர் சிலை அலைக்கழிப்பு, Date: 2016-06-30@ 00:16:06.

http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94913

[13] http://ns7.tv/ta/thiruvalluvar-statue-not-installed-ganga-banks.html