"செக்யூலரிஸம்" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..
எதிரிகளிடம்நமதுவலிமையைகாட்டுவதற்குபதில்நமக்குள்ளேநாம்சண்டையிட்டுவருகிறோம் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் – இதன் அர்த்தம் என்ன?
அறிவுரையாரைநோக்கிசொல்லப்பட்டுள்ளது: ஜூன் 2023 முதல் வாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளதில் பல விசயங்கள் உள்-பொதிந்துள்ளன. ஒவ்வொரு வரியும் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்திய ஒற்றுமை என்ற நிலையில், பற்பல இப்பொழுதைய பிரச்சினைகளுக்கு பதில் கொடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் பதில் கொடுத்துள்ளார். குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்களுக்கு அதிகமாகவே அறிவுரை கூறியுள்ளார். கர்நாடத் தேர்தல் தோல்வி மற்ற நிகழ்வுகளை மனத்தில் வைத்துக் கொண்டு பேசியுள்ளதை கவனிக்கலாம். முஸ்லிம் பிரச்சினை தீவிரமாகும் நிலையில் அவர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளார். அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தும். ஏனெனில், எல்லையில் உள்ள எதிரிகளை எதிர்க்க, எல்லோரும் தான் ஒன்று படவேண்டியுள்ளது. பாகிஸ்தானை முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள், சீனர்கள் கம்யூனிஸ்டுகளுடன் மோத மாட்டார்கள் என்றிருக்க முடியாது.
இந்தியர்களுக்குள்எத்தனைவேறுபாடுகள்இருந்தாலும்ஒற்றுமையாகசெயல்படவேண்டும்: 01-06-2023 அன்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சங்க ஷிக்ஷா வர்க்’ நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.‛‛இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையானது எனவும், அதை நோக்கி அனைவரும் உழைக்க வேண்டும்” என ஆர் எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மோகன் பகவத் பேசியதாவது: “வேறுபாடுகள்இருந்தாலும், பலநூற்றாண்டுகளாகநாம்ஒன்றாகஇருக்கிறோம்என்றபுரிதலின்மூலம்மட்டுமேநாட்டில்உள்ளசமூகங்களின்உணர்வுபூர்வமானஒருங்கிணைப்புஏற்படும்[1]. வேறுஇடங்களிலிருந்துஇங்குபலசமூகங்கள்வந்தன[2]. அவற்றுடன்நாம்அப்போதுசண்டையிட்டோம். எல்லையில் அமர்ந்திருக்கும் எதிரிகளிடம் நமது பலத்தை காட்டாமல், நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்[3]. நாமெல்லாம் ஒரே நாடு என்பதை மறந்து விடுகிறோம். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்[4]. இந்தியர்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
இந்தியர்கள்அந்நியர்களின்கலப்பினைமறந்துஒன்றுபடவேண்டும்: [மோகன் பகவத் பேசியதை இடது பக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. அதன் விளக்கம் வலது பக்கம் கொடுக்க்ப் படுகிறது]
வேறுஇடங்களிலிருந்துஇங்குபலசமூகங்கள்வந்தன, ஆனால்அவர்கள்இப்போதுஇல்லை. இப்போதுஅனைவரும்இங்குஉள்ளவர்கள்தான். எனவே, நாம்வெளியில்இருந்துவந்தவர்களுடன்உள்ளதொடர்பைமறந்துவாழவேண்டும். இங்குள்ளஅனைவரும், நமதுஅங்கத்தினர். அவர்களதுசிந்தனையில்ஏதேனும்வித்தியாசம்இருந்தால்அவர்களிடம்பேசவேண்டும்.
இடைகாலத்தில் இந்தியாவுக்கு வெளியிலிருந்து பல இனத்தவர் இங்கு வந்து, கலந்து, அவர்கள் மூலம் சந்ததியர் உண்டாகியுள்ளனர். அவர்கள் தாங்கள் இந்தியர்களை விட மாறுபட்டவர்கள் என்ற எண்ணம் இருக்கக் கூடாது. அத்தகைய எண்ணம் தான் பிரிவினைவாதமாகி, இந்தியர்களைப் பிளக்கிறது, ஒருவரை ஒருவர் எதிர்க்கவும் தூண்டுகிறது.
பாரசீகம், முகமதியம் / இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல அந்நிய மதத்தவர் இந்தியாவில் நுழைந்து, தமது மதத்தினைப் பரப்பியுள்ளனர். அவர்களது சந்ததியினரும் வளர்ந்துள்ளர், அத்தகையோர் இக்காலத்தில் தமது மதம், மத அடையாளங்கள் முதலியவற்றை இந்தியாவிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ள அதிகமாக முயன்று வருகின்றனர். ஆனால், புறத்தோற்றத்தில் அவ்வாறு காட்டிக் கொண்டாலும், அவர்கள் மற்ற காரணிகளால் இந்தியரே தவிர, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் இல்லை.
ஆனால், அரசியலுக்குஒருஎல்லைஇருக்கவேண்டும். அவர்கள்ஒருவரைஒருவர்விமர்சனம்செய்துகொள்ளலாம். ஆனால்அது, சமூகத்தில்பிளவைஉண்டாக்கக்கூடாதுஎன்றவிவேகம்அவர்களுக்குஇருக்கவேண்டும். இந்தியாவில்பிளவுகளைவிரும்பும்சக்திகள்குறித்துமக்கள்அறிந்துவைத்துள்ளனர்[7].
இன்றைக்கு அரசியலாலேயே இந்துக்களே பிளவு பட்டுள்ளார்கள். அதே போல இந்துத்துவவாதிகளும் தனித்தனியாக இயங்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், பிஜேபிகாரர்கள் கூட தனித்தனியாக கோஷ்டிகளாக செயல் படுகிறார்கள். இவையெல்லாம் அவர்களது பேச்சு, நடவடிக்கை முதலியவற்றிலிருந்தே புரிந்து-தெரிந்து கொள்ளலாம்.
நமதுபழங்காலபெருமைகளைபுத்துயிர்பெறசெய்வதுமுக்கியம். இந்தியாவின் 75வதுசுதந்திரதினகொண்டாட்டங்களில்புரட்சியாளர்கள்மற்றும்சுதந்திரபோராட்டவீரர்களின்கதைகளைமையமாககொண்டு, நாட்டில்தேசியஉணர்வுஏற்பட்டுஉள்ளது[8]. கோவிட்போன்றசவால்களைஎதிர்கொள்வதையும், சமாளிப்பபையும்உலகம்உன்னிப்பாககவனித்துவருகிறது[9]. ஜி20 அமைப்பின்தலைமைப்பதவிநம்மைத்தேடிவந்துள்ளது”. இவ்வாறு அவர் பேசினார்[10].
[5] Indian Express, ‘Where is Islam safe other than India?’: RSS chief Mohan Bhagwat in Nagpur, By: Express News Service, First published on: 02-06-2023 at 14:06 IST;; Updated: June 4, 2023 15:42 IST.
விநாயகர்சிலைக்குதினமும்மாலைஅணிவித்து, பூஜைநடத்தப்பட்டுவந்தது: புதுக்கோட்டையில் பழமையான கட்டிடத்தில் ஆட்சியரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது[1]. இந்தக் கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த விநாயகர் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, பூஜை நடத்தப்பட்டு வந்தது[2]. அப்படியென்றால், அச்சிலை இடந்த இடம் பலருக்குத் தெரிந்த விசயமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின், புதிய மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா சமீபத்தில் பொறுப்பேற்றார்[3]. கடந்த சில தினங்களாகவே, ஆட்சியர் தங்கும் முகாம் அலுவலகத்தில், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன[4]. ஒருவேளை, இதை சாக்காக வைத்து, அச்சிலையை இடம் மாற்றம் செய்திருந்தாலும், அதனை முறைப் படி அறிவித்து, விவகாரத்தை முடித்திருக்கலாம். இதற்கிடையேதான், ஆட்சியர் முகாம் அலுவலகத்தின் நுழைவுவாயிலிலிருந்த பழைமையான விநாயகர் சிலை அகற்றப்பட்டதாகவும், அகற்றப்பட்டபோது, அந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
மெர்சிரம்யா, பா.ஜ.கநிர்வாகிகள்சிலரைமுகாம்அலுவலகத்துக்குள்வரவழைத்துப்பேசினார்: இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் விஜயகுமார் தலைமையில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தின் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பினர். உடனே, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பா.ஜ.க-வினர் முகாம் அலுவலகத்திலுள்ள விநாயகர் சிலையைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதி மறுத்தனர்[5]. இதனால், முகாம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, ஆட்சியர் மெர்சி ரம்யா, பா.ஜ.க நிர்வாகிகள் சிலரை முகாம் அலுவலகத்துக்குள் வரவழைத்துப் பேசினார்[6]. அப்போது, விநாயகர் சிலை அகற்றப்படவில்லை எனவும், சிலை சேதமடையவில்லை எனவும், இது பற்றி தவறான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆக முதலில், போலீஸார் உள்ளே செல்ல மறித்தனர், ஆனால், பிறகு ஆட்சியர் உள்ளே கூப்பிட்டு பேசினார் என்றாகிறது.
ஊடகங்கள்மாறுபட்ட / முரண்பட்டவிதமாகசெய்திகலைவெலியிடுதல்: இதையடுத்து, பா.ஜ.க நிர்வாகிகள் சமாதானமடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர், என்கிறது விகடன். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது, சிலையை இடம் மாற்றவில்லை என்று ஆட்சியர் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர், என்கிறது, தமிழ்.இந்து.. உள்ளே வந்தவர்களுக்கு விநாயகர் சிலையையும் காட்டியிருந்தால், விசயம் அத்துடன் முடிந்திருக்கும். அதாவது, விநாயகர் சிலை முன்பு இருந்த இடத்திலேயே உள்ளது, எந்த சேதமும் அடையவில்லை என்றாகிறது. தினமும் முன்படியே பூஜை நடந்து வருகிறது என்றாலும், பிரச்சினை இல்லாமல் போகிறது. ஆனால், மாறுபட்ட செய்திகள் வருவதும் பொது மக்களுக்கு குழப்பத்தைத் தான் உண்டாக்கும். “மதசார்பற்றுநடந்துவரும்மாவட்டநிர்வாகத்தின்மீதுமதசாயம்பூசமுயற்சிக்கும்செயலாகும்” என்றெல்லாம் விவரிப்பதும் தேவையில்லாதது. “மதசார்பற்றுநடந்துவரும்மாவட்டநிர்வாகமா” இல்லையா என்பதனை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆட்சியாளர்கள் அல்ல.
புதியதாகவந்தவர்தமதுவேலையைவிட்டு, இத்தகையஇடமாற்றம்வேலைசெய்யதேவையில்லை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது[7]. புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மெர்சி ரம்யா என்பவர் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்[8]. இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவியது[9]. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை எங்கே என கேட்டு பாஜகவினர் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவி்ட்டு வந்தனர்[10]. அதனைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுலகத்தில் திறந்து விநாயகர் சிலை பற்றி கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது[11]. இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவினரை சந்தித்த ஆட்சியர் மெர்சி ரம்யா விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்றும் சிலை அகற்றப்பட்டதாகவும், சேதப்படுத்திவிட்டதாகவும் கூறி தகவல்கள் பொய்யானது என்றும் விளக்கம் அளித்திருந்தார்[12].
“விநாயகர்சிலஅங்கேயேதான்உள்ளது”என்றால்பிறகுஎப்படிபிரச்சினைஏற்பட்டிருக்கும்: இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை அகற்றப்படும்போது உடைந்து விட்டதாக தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்பில் வந்த செய்தியில் உண்மை இல்லை. சிலை தொன்மையானதன்று. உடையாமல் நல்ல நிலையில் உள்ளது. அரசியலமைப்புசட்டத்தின்படி, மதசார்பற்று நடந்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது மத சாயம் பூச முயற்சிக்கும் செயலாகும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கவும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் உள்ளவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொதுமக்கள் சந்தேகம்கொள்ள ஏதுவாக இச்செய்தி திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விநாயகர் சில அங்கேயே தான் உள்ளது என்பதையும் தாண்டி அதன் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆக, நேரிடையான விளக்கம் கொடுத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். இந்த அளவுக்கு நிலைமையை பெரிதாக ஆக்கியிருக்க வேண்டாம். முன்னர் கலாக்ஷேத்திரத்தில் லீலா சாம்சன் விநாயகர் சிலையை அகற்றிய முறைதான் வெளிப்படுகிறது. பொதுமக்களை ஏமாற்றவேண்டாம்.
[1] தமிழ்.இந்து, புதுக்கோட்டைஆட்சியர்முகாம்அலுவலகத்தில்விநாயகர்சிலையைஇடம்மாற்றியதாகசர்ச்சை, செய்திப்பிரிவு, Published : 04 Jun 2023 10:13 AM; Last Updated : 04 Jun 2023 10:13 AM.
[9] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், பிள்ளையார்சிலைஅகற்றமா.? பொய்செய்திபரப்பியவர்கள்மீதுகடும்நடவடிக்கை– ஆட்சியர்எச்சரிக்கை, Ajmal Khan, First Published Jun 4, 2023, 10:10 AM IST; Last Updated Jun 4, 2023, 10:10 AM IST
[11] சமயம், புதுக்கோட்டைஆட்சியர்அலுவலகத்தில்பிள்ளையார்சிலைஉடைப்பு? – சாட்டையைசுழற்றியகலெக்டர்மெர்சிரம்யா..!, Curated by Poorani Lakshmanasamy | Samayam Tamil | Updated: 4 Jun 2023, 10:50 am
திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம்செய்யாமல்இருப்பதற்கானகாரணம்என்னவென்றுதெரியவில்லை, ஆனால், குழந்தைபெற்றுகொள்ளஆசை!
கொரியர்டெல்லாசேராஎன்றஇத்தாலிநாளிதழில்வெளிவந்தராகுல்காந்தியின்பேட்டி (1-02-2023): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி [52 வயதான] இத்தாலி நாட்டைச் சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு [ Italian daily “Corriere della Sera”] பேட்டி அளித்துள்ளார்[1]. இப்பேட்டி பிப்ரவரி 1, 2023 அன்று முழுபக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த பேட்டியில் தனது திருமணம், பாரத் ஜோடோ யாத்திரை, 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்[2]. ஆனால், இந்திய ஊடகங்களில் சுருக்கமாக வெளிவந்துள்ளது எனலாம். ராகுலின் திருமணம் பற்றி அடிக்கடி இத்தகைய கேள்விகள், செய்திகள் மற்றும் குசுகுசுக்கள் கடந்த 25 ஆண்டுகளாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. பல பெண்களுடன் இருப்பது போன்ற புகைப் படங்கள், அவர்கள் தான் காதலி, கார்ள்-பிரென்ட், வருங்கால மனைவி, திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார், திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது வரை ஒப்புக்கொண்ட-ஏற்றுக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.
பல இடங்களில் படித்தவர்: இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போது வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி ஜூன் 19, 1970 அன்று புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தலைவரான மோதிலால் நேரு ஆவார். இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர். 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார். மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். இவர் 1995 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரி, கேம்பிறிஜில் ஆய்வியல் பட்டம் பெற்றார்.
ரகசியமாக வேலை செய்தவர்-காதலித்தவர்: ராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் [the Monitor Group[3], a management consulting firm, in London] மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002-ன் பிற்பகுதியில் மும்பை திரும்பினார். 2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் வைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.
இத்தாலிய உறவுகளை மறக்காதவர்: 52 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, “விசித்திரமாகத்தான் இருக்கிறது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது. குழந்தைகள் பெற விரும்புகிறேன்” என்றார்[4]. எங்கள் குடும்பத்தில் இந்திய பாட்டியான இந்திரா காந்திக்கு என் மீது பாசம் அதிகம்[5]. இத்தாலி பாட்டிக்கு பிரியங்கா மீது பாசம் அதிகம்[6]. இத்தாலி பாட்டி பாவ்லோ மைனோ [Paola Maino] 98 வயது வரை வாழ்ந்து கடந்தாண்டு தான் மறைந்தார்[7]. கடந்த வருடன் 2022 ஆகஸ்ட் மாதத்தில் காலமானார் . இத்தாலி பாட்டியுடன் மிகுந்த பாசத்துடன் இருந்தேன். என் பாட்டியுடன் மிகவும் பாசத்துடன் இருந்தேன். அதே போல மாமா வால்டர் மற்றும் அவரின் மகன்களிடமும் பாசமாக இருந்தேன்… என்று குறிப்பிட்ட ராகுல்[8], “இந்திய ஒற்றுமை யாத்திரை முடியும் வரை தாடியை எடுக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் தான் தாடியுடன் உள்ளேன். இனி தாடியை வைத்திருக்கலாமா அல்லது எடுக்கலாமா என்று முடிவு செய்வேன்” என தாடி ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்[9].
இந்தியஅரசியல்குறித்தகேள்விகளுக்குஅவா்அளித்தபதில்[10]: இந்தியாவில் ஏற்கெனவே ஃபாசிஸம் உள்ளது[11]. ஜனநாயக அமைப்புகள் நிலைகுலைந்துள்ளன. நாடாளுமன்றம் செயல்படுவதில்லை. அதிகார சமநிலை இல்லை. நீதித் துறை சுதந்திரமாக இல்லை. அனைத்து செயல்பாடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஊடகம் சுதந்திரமாக இல்லை. கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகள், நிறுவனங்களில் ஆா்எஸ்எஸ்ஸின் ஹிந்து பயங்கரவாதிகள் ஊடுருவி, அவற்றைக் கட்டுப்படுத்தி வருகின்றனா். இந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனா். அவா்களால் தங்கள் எதிர்காலத்தைப் பார்க்க முடியவில்லை. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், பிரதமா் மோடியை 100 சதவீதம் தோற்கடிக்க முடியும். மாற்றுக் கண்ணோட்டத்தை முன்வைப்பதன் மூலம் ஃபாசிஸம் தோற்கடிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். வரும் தேர்தலில் பிரதமர் மோடி நிச்சயம் தோற்று போவார் என்று சொல்லவில்லை. அதேவேளை, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தால் 100 சதவீதம் அவர்களை தோற்கடிக்கலாம். நாட்டின் ஜனநாயக அமைப்புகளில் பாசிசம் ஊடுருவிவிட்டது. நாடாளுமன்றம் முறையாக செயல்படுவதில்லை.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வெளி நாட்டு உறவுகள் பற்றிக் குறிப்பிட்டது: உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தை பொறுத்தவரை நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை[12]. அது வெளியுறவுக்கொள்கை சார்ந்தது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு காண்பது அவசியமானது[13]. சீனாவால் மேற்கத்திய நாடுகளால் தொழில்துறையில் போட்டியிட இயலாது. ஆனால், இந்தியாவால் அது முடியும்” என்றார். ராகுல் காந்தி 164 நாட்கள் நாடு தழுவிய நடைபயணத்தை அன்மையில் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் கடந்த மாதம் 30ஆம் தேதி காஷ்மீரில் நிறைவுற்றது. பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற ராகுல் காந்தி, கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட பயணமாக ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் சென்றுள்ளார். அதே நேரத்தில் கேம்பிரிட்ஜில் பேசப் போகிறார், சீனாவைப் பற்றி ரகசியமாக பேசப் போகிறார், என்றெல்லாம் செய்தி வந்துள்ளது.
[1] நியூஸ்.18.தமிழ், சிங்கிளாகஇருப்பதுஏன்?… தாடிரகசியம்… மனம்திறந்தராகுல்காந்தி..!, NEWS18 TAMIL First published: February 22, 2023, 09:07 IST, LAST UPDATED : FEBRUARY 22, 2023, 09:34 IST.
[3] Monitor Deloitte is the multinational strategy consulting practice of Deloitte Consulting. Monitor Deloitte specializes in providing strategy consultation services to the senior management of major organizations and governments.
[4] மாலைமலர், இன்னும்ஏன்திருமணம்செய்துகொள்ளவில்லை?: ராகுல்காந்திபதில், By மாலை மலர், 22 பிப்ரவரி 2023 8:15 AM
[10] தினமணி, திருமணம்செய்யாததுவிசித்திரம்! – ராகுல்காந்திபேட்டி, By DIN | Published On : 22nd February 2023 12:26 AM | Last Updated : 22nd February 2023 12:26 AM
கிறிஸ்தவமகளிர்உதவும்சங்கம், முஸ்லிம்மகளிர்உதவும்சங்கம்துவக்கப்படுதல்: முஸ்லிம், கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் மூலம் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளை ஆட்சியா் கவிதா ராமு புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வழங்கினார்[1]. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 541 மனுக்கள் பெறப்பட்டன[2]. கோவை மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது[3]. இந்த சங்கங்களின் மூலம் கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆதரவற்ற, ஏழ்மை நிலையில் உள்ள மகளிர் மற்றும் ஆதரவற்ற விதவைகள், சிறுதொழில் செய்யவும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மகளிர் மற்றும் பெண்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக பொருளாதார உதவி அளித்தல் செயல்படுத்தப்படுகிறது[4]. இந்த சங்கங்களை மேலும் செம்மையாக செயல்படுத்தும் வகையில், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய கோவை மாவட்டத்தில் வசிக்கும், கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்களை சார்ந்த சமூக பணிகளில் ஆர்வம் உள்ள தகுதியான நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும், 25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை 0422-2300404 என்ற எண்ணிலும், dbcwo-tncbe@nic.in என்ற அலுவலக இ-மெயில் முகவரி மூலமும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் நிர்வாக குழுவில் உறுப்பினராக சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்[5]. விண்ணப்பதாரர்கள் சமூகப் பணிகளில் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் ஆர்வமுடன் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். அதேபோல, குற்றவியல் நடவடிக்கையோ, நீதிமன்ற வழக்கு நிலுவையிலோ இருக்கக்கூடாது[6].
உலாமா நலவாரியம், நிதியுதவி: உலமாக்கள் மற்றும் பிற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு “உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்” துவங்கப்பட்டது. பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரிவோர் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறும் வகையில் உலமா அடையாள அட்டை தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது[7]. தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது[8]. இதன் மூலம் பள்ளிவாசல்கள், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன[9].
உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்[10]. வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி ஈடுசெய்ய உதவித்தொகை, விபத்து நிவாரணம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே பதிவு பெற்ற உறுப்பினர்கள் 60 வயது அடைந்து ஓய்வுபெற்றிருப்பவர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பெறுவதற்கு உலமா அடையாள அட்டை அசல், வக்ஃபு வாரியச் சான்று-எந்தப் பள்ளிவாசலில் ஓய்வு பெற்றவர், ஓய்வு பெற்ற சான்று, வேறு அரசுத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறவில்லை என்ற வருவாய்த் துறை சான்று, மருத்துவச் சான்றிதழ், வங்கிக் கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -1 என்ற முகவரியை அணுகி பயன் பெறலாம்.
இந்துத்துவ வாதிகளே, பதில் சொல்லுங்கள். கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் என்று செயல்படுகின்றன, அதுபோல, இந்து மகளிர் உதவும் சங்கம் உள்ளதா?
இந்த கிறிஸ்தவ / முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது.
இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது. இந்த நிதிக்கு இணையான தொகையினை (Matching Grant) அரசு இச்சங்கத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது.
இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது.
இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.
தலைசிறந்த உள்ளுர் முஸ்லிம்களிலிருந்து ஒருவர் கௌரவ செயலாளராகவும், இரண்டு நபர்கள் கௌரவ இணைச் செயலாளர்களாகவும், மூன்று நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாகவும், மாவட்ட ஆட்சியாளர் அவர்களால் ஒரு ஆண்டு காலத்திற்கு நியமனம் செய்யப்படுவர்.
அடுத்த ஆண்டில் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து நபர்களை மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு இச்சங்கத்தின் பொதுக்குழு தேர்வு செய்யும்.
இதே போல, ஜைன, பௌத்த, சீக்கிய, பாரசீக மற்ற சிறுபான்மையினர்களுக்கும் சங்கம் உண்டா, நிதியுதவி கொடுக்கப் படுமா?
இதெல்லாம், ஹலால்-ஹராம், ஷிர்க்-ஷிர்க்-இல்லை, காபிர்-மோமின், பாவம்-பாவமில்லை போன்ற வகையறாக்களில் வருமா-வராதா?
செக்யூலரிஸம் கடைபிடிக்கும் அரசு, இவ்வாறு மதரீதியில் சங்கங்களை வைத்து, நிதியுதவி கொடுத்து பரபட்சத்தைக் கடை பிடிக்கலாமா?
[1] தினமணி, முஸ்லிம், கிறிஸ்தவசங்கங்கள்ரூ. 40 லட்சம்நிதியுதவி, By DIN | Published On : 30th November 2021 01:42 AM | Last Updated : 30th November 2021 01:42 AM.
சிறுபான்மையினர்என்றசான்றுபெற்றால்மட்டுமேநலத்திட்டஉதவிகளைபெறமுடியும்: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவ முஸ்லிம் மகளிர் சங்கங்கள் மற்றும் உலமாக்கள் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் சாமு நாசர் மற்றும் செஞ்சி கே.மஸ்தான் ஆகியோர் பங்கேற்று தையல் இயந்திரம் இஸ்திரி பெட்டி மிதிவண்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். சிறுபான்மையினர் என்ற சான்று பெற்றால் மட்டுமே நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என அத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்[1]. இந்துக்களாக சான்றிதழில் பதிவு செய்துவிட்டு கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களாக மதத்தினை தழுவுபவர்களுக்கு சிறுபான்மை துறை சார்பில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படாது[2]. ஒருவர் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம் எனவும் தெரிவித்தார்.
இந்துக்களாகசான்றிதழில்பதிவுசெய்துவிட்டுகிறிஸ்தவர்மற்றும்முஸ்லிம்களாகமதத்தினைதழுவுபவர்களுக்குசிறுபான்மைதுறைசார்பில்எந்தவிதநலத்திட்டஉதவிகளும்வழங்கப்படாது: இங்கு முக்கியமாக நடந்து வரும் மோசடியை, “மத மொசடியை” கவனிக்க வேண்டும். குறிப்பாக எஸ்.சிக்கள், அதாவது பட்டியல்-சலுகை பெறும் இந்துக்கள், இந்துக்களாக இருந்தால் தான் இன்வொதிக்கீடு போன்ற சலுகைகளைப் பெற முடியும். ஆனால், கிருத்துவம் மற்றும் இஸ்லாம் மதம் மாறும் நபர்களுக்கு அந்த சலுகை தொடராது, கிடைக்காது. அதனால், மதம் மாறியப் பிறகும், தாங்கள் எஸ்.சிக்கள், இந்துக்கள் என்று மெய்ப்பிக்க சான்றிதழை வைத்திருக்கிறர்கள். நியாமாக, சட்டப் படி, மதம் மாறியப் பிறகு, அவர்களுக்கு அந்த சலுகை இல்லாமல் போகிறது. அதனால், சான்றிதழின் படி இந்துவாக இருந்து, அரசு சலுகைகள் பெற்று வாழும் அவர்கள், கிருத்துவர் அல்லது முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு, இத்திட்டங்களின் கீழ் அளிக்கப் படும் சலைகைககள், மானியங்கள், நிதியுதவிகள் போன்றவற்றைப் பெற முடியாது. இதைத் தான் அமைச்சர் மறைமுகமாக எடுத்துக் காட்டுகிறார்.
17-12-2022 – பயனாளிகளுக்குநலத்திட்டஉதவிகள்வழங்கும்நிகழ்ச்சி: கிறிஸ்தவ மக்களுக்கு உதவுவதற்காக தனி நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்[3]. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 17-12-2022 சனிக்கிழமை நடைபெற்றது[4]. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன் தலைமை வகித்தார். இதில், 314 பயனாளிகளுக்கு ரூ.33.99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா் பாட்ஷா முத்துராமலிங்கம், செ.முருகேசன், கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினா் நல அலுவலா் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே.கார்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.
முஸ்லிம்மகளிர்உதவும்சங்கம்: சிறுபான்மை இசுலாமிய சமூகத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு உதவும் பொருட்டும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், சென்னையில் “முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்” என்ற அமைப்பு 01.10.1982 – ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இச்சங்கம் அதனது நிதி ஆதாரத்தினை நன்கொடைகள் மூலம் திரட்டுகிறது[5]. இந்த நிதிக்கு இணையான தொகையினை (Matching Grant) அரசு இச்சங்கத்திற்கு மானியமாக வழங்கி வருகிறது. இதே போன்ற சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் 2007 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டது. இச்சங்கங்கள் தொண்டு நிறுவனங்களாக (NGO) செயல்பட்டு முஸ்லிம் மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்கு பாடுபடுகின்றன. இத்திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) நிர்வாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இச்சங்கங்களுக்கான விதைத் தொகை (Seed Money) ரூ.1 இலட்சம் மற்றும் அரசின் இணைத் தொகை ஆகியவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநர் மூலம் விடுவிக்கப்படும்.
உள்–ஒதுக்கீட்டிலும்–உள்–ஒதுக்கீடுகேட்டுபங்குபெறலாமாஎன்றுகுழுக்கள்அமைச்சரைசந்தித்ததுஅவர்களதுபோலித்தனத்தைவெளிப்படுத்தியுள்ளது: கிருத்துவத்தில், கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவ மதத்தில் 3000-4000ற்கும் மேலாக சமூகப் பிரிவுகள், சமுதாயக் கட்டமைப்புகள், குமுக தனி அமைப்புகள் எல்லா நாடுகளிலும், இந்தியாவில் மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மிஷினர்கள் அவ்வாறுத்தான் பிரகடனப் படுத்திக் கொண்டு, அமெரிக்க-ஐரோப்பிய மற்ற அயல்நாட்டு மிஷின்களிடமிருந்து பணத்தைப் பெற்று வருகின்றன. அதனை வைத்து பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியோர் நன்றாக கொள்ளையடித்து ஜாலியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் என்பதெல்லாம் உலகம் அறிந்த விசயம் தான். ஆனால், இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசாங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நல திட்டங்கள் மற்றும் நிதியுதவி முதலியவற்றிலும், மதரீதியில் பங்குப் போட்டுப் பெற, தனி மதநல வரியம் என்று ஆரம்பித்துள்ளனர். இதிலும், ஆதிக்கக் கிருத்துவர் எங்கு மொத்தமாக அள்ளிக் கொண்டு சென்று விடுவரோ என்று பயந்து, உள்ஓதுக்கீட்டிலும்-உள்-ஒதுக்கீடு கேட்டு பங்கு பெறலாமா என்று குழுக்கள் அமைச்சரை சந்தித்தது அவர்களது போலித் தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது மதநம்பிக்கையால் அவர்கள் மதமாற்றப் படவில்லை, மோசடிகளால் மற்ற காரணங்களுக்காக மதமாற்றம் செய்யப் பட்டுள்ளனர், என்பது உறுதியாகிறது.
மே 2022ல்கிருத்துக்குழுசெஞ்சிமஸ்தானைசந்தித்தது: செபி பேராயம் சார்பில் அதன் தமிழக தலைவர் பேராயர் மேசக் ராஜா தலைமையில், செபி பேராயத்தின் பேராயர்கள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சென்னை தலைமைச் செயலகத்தில் 05-09-2022 அன்று சந்தித்தனர்[1]. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செபி பேராயத்தின் மாநிலத் தலைவர் மோசக் ராஜா[2], “செபி பேராயத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மூன்று அம்சக் கோரிக்கைகளை அளித்துள்ளோம். இதில் சட்ட சபையில் நடைபெற்ற சிறுபான்மையினர் மானிய கோரிக்கையின் போது –
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செபி பேராயத்திற்கு சம உரிமை மற்றும் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
1997ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகளை விதி எண் 4 (3) காரணம் காட்டி தேவாலயம் கட்டவும் மக்கள் கூடுகைக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகையால் இந்த விதியை உடனே நிறுத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் கிறிஸ்தவ மக்களுக்கும் ஒரு தாலுகாவிற்கு 3 ஏக்கர் கல்லறை தோட்டம் அமைக்க இடம் ஒதுக்கித் தரவேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளோம்.
இதில்செபிபேராயத்திற்குசமஉரிமைமற்றும்அங்கீகாரம்வழங்கவேண்டும்: இப்படி கேட்பதிலிருந்து, கிருத்துவர்களிடம் உள்ளா 3000-5000 பிரிவுகளைத்தான் குறிக்கிறது. தனி கல்லறைகள் என்பது, டினாமினேஷகளில் தான் அதிகம் உள்ளது போலிருக்கிறது. ஏனெனில் சடங்குகள் செய்வதிலிருந்து, சலுகைகள், நிதியுதவி பெறுவது போன்றவற்றில், அந்தந்த சர்ச், டினாமினேஷன் என்று தான் கிடைக்கும். ஆகவே, அவர்கள் அவ்விசயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். “பங்கு தந்தை” என்று தெளிவாக பெயரை வைத்துள்ளார்கள். ஆகவே, “பங்கு தந்தை” ஏரியா./ சர்ச் / பகுதி விட்டு ஏரியா வந்து வசூல் செய்ய முடியாது. ஆக, செபி பேராயம் கேட்டுள்ளது, அவர்களது நியாயப் படி போலும். இதெல்லாம் அவர்களது உள்-விவகாரப் பிரச்சினை போல காட்டிக் கொண்டாலும், நிதர்சன நிலையில், அவர்களது வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகிறது. அரசு எப்படி கொடுக்கும், இவர்கள் எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
மே 2022ல்கிருத்துக்குழுசெஞ்சிமஸ்தானைசந்தித்துகூறியது: தமிழகத்தில்கிறிஸ்தவர்களுக்குகல்லறைத்தோட்டம்பற்றாக்குறைஏற்பட்டுள்ளது: தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு கல்லறைத் தோட்டம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது[3]. ஆகவே ஒவ்வொரு தாலுகாவிலும் தமிழக அரசு கல்லறை தோட்டம் அமைப்பதற்கு 3 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர வேண்டும். புதிதாக தேவாலயங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் எந்த பள்ளிகளிலும் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை. அந்தெந்த பள்ளி விதிகளின்படி பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை வழங்கப்படுகின்றது. பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. நாங்கள் எங்கள் மதத்தின் சிறப்புகளை மட்டுமே எடுத்துக் கூருகின்றோம். யாரையும் கட்டாய மதமாற்றம் செய்வதற்கு வற்புறுத்தவில்லை. சென்னை பள்ளி விபத்தில் மரணமடைந்த மாணவனின் உடலை அடக்கம் செய்வதற்கு இடம் தர மறுத்தது வருத்தத்திற்குரியது. இதுபோன்ற சூழ்நிலைகளில் மனிதாபிமானத்தோடு அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஜூன் 2022 நலவாரியம்ஆமைக்கஆணைவெளியிடமுடிவுசெய்தது: தமிழக சட்டப்பேரவையில் கடந்த வருடம் 2021-22 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்[4]. அதன்படி தமிழக அரசு தற்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசங்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்க அரசாணை வெளியிட்டது[5]. சிறுபான்மையினர் நலத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது[6]: சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர், ‘‘கிறிஸ்தவதேவாலயங்களில்பணியாற்றும்உபதேசியார்கள்மற்றும்பணியாளர்கள்மேம்பாட்டுக்காகநலவாரியம்அமைக்கப்படும்,’’ என்று அறிவித்தார்[7].
ஜூன் 2022 நலவாரியம்ஆமைக்கஆணைவெளியிட்டது: இதையடுத்து, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆதரவற்றோர் இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முறையான மாத ஊதியம் இல்லாமல், தேவாலயத்துக்கு வரும் அங்கத்தினரின் நன்கொடைத் தொகையில் இருந்து, சிறு தொகைவழங்கப்பட்டு வருகிறது. எனவே, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் மேம்பாட்டுக்கு நல வாரியம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்[8]. இதை ஆய்வு செய்த தமிழக அரசு, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், பணியாளர்களின் நல வாரியத்தை அமைக்க ஒப்புதல் வழங்குகிறது[9]. நலவாரிய உறுப்பினர்-செயலராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார். உறுப்பினர்களைக் கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கும்பணியை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
[3] வெளிநாடுகளில் இப்பொழுதெல்லாம், கிருத்துவர்கள் தங்களது இறந்தவர்களின் உடல்களை எரிக்க அரம்பித்து விட்டர்கள். இல்லை, அடுக்கு மாடிகள் போன்று அடக்கம் செய்ய பெட்டிகள் போன்று அமைத்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, மற்ற உடல்களை உதைக்கிறார்கள்.
[4] தினத்தந்தி, தேவாலயபணியாளர்களுக்குநலவாரியம் – தமிழகஅரசுஅரசாணை, Jun 1, 7:24 pm.
காஞ்சுக்கல்மடாதிபதிபசவலிங்கசுவாமிதற்கொலையில்மூவர்கைது: கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவருக்கு வயது 45. இவர் லிங்காயத் சமுதாய மடமான இங்கு 1997 முதல் பசவலிங்க சுவாமி மடாதிபதியாக இருந்து வருகிறார். சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழா கொண்டாடினார். மடாதிபதியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் இளம்பெண், மற்றொரு மடாதிபதி உட்பட மூவர் 30-10-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்[1]. கைதான கல்லுாரி மாணவி மொபைல் போனில், பல பிரமுகர்களுடன் ஆபாசமாக பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன[2]. கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பண்டி மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி, 24ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்[3]. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருந்தது[4]. அவரது கடிதத்தில், தற்கொலைக்கு மற்றொரு மடாதிபதி மற்றும் இளம்பெண் தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் 10-க்கும் மேற்பட்டோரின் பெயரை மடாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.
மடங்கள் அரசு, அதிகாரம் மற்றும் அரசியலுடன் சம்பந்தப் பட்டிருப்பது: கர்நாடகாவைப் பொறுத்த வரையில், லிங்காயத் சாமிகள் அதிக அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளனர். தமிழகத்து சங்கராச்சாரியார் போல, எல்லா அரசியல்வாதிகளும் இவர்களிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதுபோலவே, இந்திரா காந்தி, சோனியா காந்தி, இப்பொழுது ராகுல் காந்தி என்று எல்லோரும் வந்து, இவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளனர். மேலும், பாரம்பரியமாக 400 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால், கோடிகணக்கில் நிலம், முதலிய சொத்துகளும் இருக்கின்றன. பள்ளிகள் என்று நிறுவனங்களும் நடத்தப் பட்டு வருகின்றன. இதனால், ஆளும் அரசு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும், மடங்களுக்கும் சம்பந்தங்கள், உறவுகள் மற்றும் போக்குவரத்துகள், பலவிதங்களில் இருந்து கொண்டே இருக்கும். ஆட்சி, அதிகாரம் மாறினாலும், இத்தகைய உறவுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறாகத்தான், இந்த மடாதிபதியு சிக்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், அவ்வாறு திட்டமிட்டு தற்கொலைக்குத் தூண்டியது இன்னொரு மடாதிபதி.
இதையடுத்து, போலீசார்விசாரணையில்கிடைத்ததகவல்கள்: ராம்நகர எஸ்.பி, சந்தோஷ் பாபு, 30-10-2022 அன்று இந்த விவரங்களை கூறினார். தற்கொலை செய்து கொண்ட மடாதிபதிக்கு போன் செய்து பேசியது, தொட்டபல்லாபூரைச் சேர்ந்த நீலாம்பிகா, 22. இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியான இவருக்கு, கன்னுார் மடாதிபதி மிருத்யுஞ்ஜயாவின் அறிமுகம் கிடைத்தது. முதலில் தனக்கு பணகஷ்டம் என்று சொல்லி ரூ 500, 1000 என்றெல்லாம் வாகிக் கொண்டிருக்கிறாள். இந்த இரண்டு மடாதிபதிகளும் உறவினர்கள். இருவரது மடங்களும் மாகடி பகுதியில் தான் உள்ளன. பண்டி மடாதிபதியின் புகழை கெடுத்தால், தனக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என கன்னுார் மடாதிபதி கணக்கு போட்டார். மேலும் இரண்டு மடங்களுக்கும் இடையே நிலம் பற்றி வழக்குகளும் உண்டு. இதனால், நீலாம்பிகையை வைத்து, காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமியை மாட்ட வழி வகுத்தார். எனவே, தனக்கு அறிமுகமான நீலாம்பிகாவை, அவரிடம் ‘வீடியோ’ காலில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் பேச வைத்து, பதிவு செய்து கொண்டார்[5]. ஏப்ரலில் இந்த வீடியோக்கள் எடுக்கப் பட்டதாகத் தெரிகிறது. இதனால், அந்த மாணவியும் ஏதோ காரணங்களுக்காக ஒப்புக் கொண்டு அவ்வாறு செய்துள்ளாள் என்று தெரிகிறது.
கன்னூர்மடாதிபதிவீடியோவைவைத்துகாஞ்சுக்கல்மடத்தின்மடாதிபதியாகஇருந்தவர்பசவலிங்கசுவாமியைமிரட்டியது: இந்த வீடியோவை பண்டி மடாதிபதியிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்ந்தார். மேலும், அந்த மாணவியையும் வைத்து எச்சரிக்க செய்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு தொடர்ந்து அடிக்கடி தொந்தரவு செய்து, நிலைமை மீறி மனத்தளவில் பாதிக்க்ப் பட்ட நிலையை அடைந்துள்ளார். அத்தகைய மிரட்டல்-சதாய்ப்புகளால், பயந்து, மனவலிமை இழந்து. 24-10-2022 அன்று, அவர் தற்கொலை செய்து கொண்டார்[6]. அவர் எழுதி வைத்த கடிதத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு போலீசார் விசாரணை செய்தனர். முழு விவரங்கள், வீடியோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்தப் பிறகு, முறைப்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தனர். இதையடுத்து ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் –
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி நீலாம்பிகா, இவர்களுக்கு உதவியாக இருந்த
கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருத்யுஞ்ஜயா சுவாமி,
மகாதேவய்யா, ஓய்வு பெற்ற ஆசிரியர், இப்பொழுது வக்கீல்
ஆகிய மூவரையும் போலீசார் 30-11-2022 அன்று கைது செய்தனர்[7].
போன்களைகைப்பற்றிஉரையாடல்களையும்கேட்டுவபுலன்விசாரணைநடத்தப்பட்டது: கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். இதில், மாணவி நீலாம்பிகா, தற்கொலை செய்த மடாதிபதி தவிர, மேலும் பல பிரமுகர்களுக்கும் போன் செய்ததுடன், ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்களையும் அனுப்பி உள்ளது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில், பங்கஜா என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பண்டி மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அவர்கள் மாகடி 1-வது ஜே.எம்.சி. கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்[8]. இதனால் மிருதனஞ்ஜெய சுவாமியும், மகாதேவய்யாவும் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீலாம்பிகா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
தற்கொலைக்கானகாரணம்என்ன?: இதுபற்றி விசாரணை நடத்தியபோது பெண் ஒருவர் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்[9]. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர்[10]. மேலும் வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர். மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோகாலில் பேசியுள்ளனர். இதனை வைத்து அந்த பெண் உள்பட மேலும் சிலர் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், வழக்குக்கும் என்ன தொடர்பு? உள்ளது என்பது பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் மடத்தில் உள்ளவர்கள் உள்பட பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கைதானவர்களிடன் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்து மடாதிபதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம்: முன்னமே பல சம்பந்தப் பட்ட பதிவுகளில் அகசியுள்ள படி, மடாதிபதிகள், தங்களது சீடர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட, குடும்ப, இல்லற மற்றும் பொருளாதார பிரச்சினைகள், குறைகள் முதலியவற்றை சொல்லி, தீர்வு காண முறையிடுவர். மடாதிபதிகள் இறை நம்பிக்கையுடன், எல்லாம் நல்லபடி நடக்கும் என்று தான் ஆசி வழங்குவார். அவ்வாறே நடக்கும் போது சீடர்கள், பக்தர்கள் முதலியோர் சந்தோஷம் அடைவர், நடக்கா விட்டால், வெளிப்படையாக பிரச்சினைக்குக் காரணமானவர்களைக் குறிப்பிட்டு, சமாதானம் மத்தியஸ்தம் செய்ய கோருவர். பிடிவாதமாக, அடம் பிடித்து, ஆர்பாட்டமும் செய்வர். அழுது கலாட்டா செய்யும் ஆட்களும் உண்டு. அந்நிலைகளில், முடிந்த வரை மடாதிபதி பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார். ஆனால், முடியாத போது, பிரச்சினைகள் வேறு வகையில் உருவெடுத்து, குற்றங்கலிலும் முடிகிறது. மடாதிபதிகளுக்குள் பிரச்சினை ஏற்படும் போது, சட்டரீதியில் நீதிமன்றங்களில் வழக்குகளாகச் செல்கின்றன. நிச்சயமாக அங்கு வழக்கு ஒரு மடாதிபதிக்கு வெற்றி என்றால், இன்னொரு மடாதிபதிக்கு தோல்வி என்றாகிறது. பிறகு, மேல்முறையீடு என்றெல்லாம் போகலாம். ஆனால், மடாதிபதிகள் தங்களது தார்மீக, தரும, மதக் கடமைகள், கிரியைகள், செயல்கள் முதலியவற்றை தவறாமல் செய்ய வேண்டும். அந்நிலைகளில் இத்தகைய பிரச்சினைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
உடல்நலம் குறைவு முதலிய விசயங்கள்: இந்த நிலையில் மடாதிபதியின் தற்கொலை குறித்து அவரது உதவியாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் குதூர் போலீசார் பிரிவு 306-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்[1]. இவர் சில மாதங்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்[2]. இதனால் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்தார். உடல் எடையை குறைக்க ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட்டு வந்தார் என மடத்தின் ஊழியர்கள் கூறினர் இருப்பினும் இவையெல்லாம் தற்கொலை செய்து கொண்டதற்கு சம்பந்தம் இல்லை என்று தெரிகிறது. ஏலும், இவர் சமூக அக்கரைக் கொண்டு, சில காரியங்களை செய்து வந்தார். அவை அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடலுக்கு திங்கள்கிழமை 24-10-2022 மாலை இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
லிங்காயத்துமடாதிபதிகள்மீதுபாலியல்குற்றச்சாட்டுமுதலியன: கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் லிங்காயத்து மடாதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு புயலாக கிளம்பி பரபரப்பை கிளப்பியுள்ளது[3]. சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்[4]. கடந்த ஆண்டு 2021 டிசம்பா் மாதத்தில் சிலுமே மடத்தின் பீடாதிபதி பசவலிங்க சுவாமிகளும் இதேபோல தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்[5]. அவரது உடல்நலம் கெட்டுவிட்டதால், மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது[6].
பாலியல்புகார் –போக்சோவில்வழக்குப்பதிவு – கைதானமடாதிபதி (செப்டம்பர் 2022): கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரசித்த பெற்ற முருக மடத்தின் தலைமை மடாதிபதியாக உள்ள சிவமூா்த்தி முருகா சரணரு செயல்பட்டு வருகிறார்[7]. இந்த மடத்திற்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 10ம் வகுப்பு மாணவிகள் இருவர், மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் பாலியல் புகார் அளித்தனர்[8]. இந்த புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கடந்த 29-ம் தேதி மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, மடாதியும் போலீசார் முன்பு ஆஜராக விளக்கம் அளித்தார். பின்னர், பாலியல் புகார் கூறிய இரு மாணவிகளும், சித்ரதுர்கா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மடாதிபதியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, தலித் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுருவை போலீசார் கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மடாதிபதியைசந்தித்தராகுல்காந்தி – அடுத்தபிரதமராகஆசி: கடந்த மாதம் செப்டம்பர் 2022, தார்வாடில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி, கூட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது இந்த மடத்திற்கு திடீர் விஜயம் செய்தார். அங்கு வழிபாடு செய்த அவருக்கு, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு, திருநீறு பூசி, தாயத்து அடங்கிய கயிற்றைக் கழுத்தில் அணிவித்தார்[9]. அந்தச் சமயத்தில் மற்றொரு துறவியான ஹாவேரி ஹொசமட சுவாமி, “இங்குவந்தஇந்திராகாந்திபிரதமரானார்; அதேபோலராஜீவ்காந்தியும்பிரதமரானார். தற்போதுராகுல்காந்தியும்வந்திருப்பதால்அவரும்நிச்சயம்பிரதமராவார்,” எனக் கூறி ஆசீர்வதித்திருக்கிறார்[10]. அப்போது, தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு குறுக்கிட்டு, தயவுசெய்து இப்படிச் சொல்ல வேண்டாம், அதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்; இது அரசியல் பேசவேண்டிய இடமல்ல என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இது அரசியல் ரீதியில் ஏதாவது பிரச்சினையை உண்டாக்கியதா என்று தெரியவில்லை.
05-09-2022 அன்று பசவலிங்கசுவாமிதற்கொலைசெய்துகொண்டது: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள நெகின்ஹாலில் குரு மடிவாளேஸ்வரர் மடம் உள்ளது. லிங்காயத்து சாதி மடமான இதன் மடாதிபதியாக பசவலிங்க சுவாமி (28) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். அண்மையில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான லிங்காயத்து மடாதிபதி சிவமூர்த்தி முருக ஷரணருவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 2 பெண்கள் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று வெளியானது. அதில் அந்த பெண்கள், பசவலிங்க சுவாமியும் விரைவில் பாலியல் வழக்கில் சிக்குவார் என்று கூறியுள்ளனர்[11]. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதால் பசவலிங்க சுவாமி பதற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால், சீடர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்[12]. இதுகுறித்து தகவல் அறிந்த பெலகாவி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பசவலிங்க சுவாமி உடலை கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனைக்காக பெலகாவி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் இருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில்தொடர்ந்துசைவமடாதிபதிகள்தற்கொலைசெய்துகொள்வது– மதப்பிரச்சினையா, உளவியல்குழப்பமா, அரசியல்அழுத்தமா?: 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். 05-09-2022 அன்று மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் லிங்காயத்துக்களின் ஓட்டு வங்கி கணிசமாக கர்நாடகத்தில் இருந்து வருவதால், அரசியல் கட்சிகள் எப்பொழுதும், அம்மடங்களை குறிவைத்து திட்டம் போட்டுக் கொன்டிருக்கும். சோனியா சாந்தி 2012ல் விஜயம் செய்தது போல, இப்பொழுது 2022ல் ராகுல் காந்தி விஜயம் செய்வதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து லிங்காயத்து மடங்களில் தற்கொலைகள் நடப்பது, இயற்கையாக இல்லை. பாலியல் புகாரில் சிக்குவது என்பது, சைவ மடங்களில் புதுமையாக இருக்கிறது எனலாம். அரசியல் தொடர்புகளினால் தான் இத்தகைய சர்ச்சைகள், குழப்பங்கள், முரண்பாடுகள், மனரீதியிலான பாதிப்புகள், துறவிகளையும் பாதிக்கின்றன, தாக்குகின்றன என்று கவனிக்கும் போது, துறவரம் என்பதெல்லாம், வெறும் சடங்குகளாக நடந்து வருகின்றனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.
[3] தமிழ்.நியூஸ்.18, கர்நாடகாவில்சாமியார்தூக்கிட்டுதற்கொலை.. பின்னணிஎன்ன?, LAST UPDATED : SEPTEMBER 05, 2022, 20:05 IST, Published by:Kannan V, First published: September 05, 2022, 20:05 IST
முற்றும்துறந்ததுறவிகள்தற்கொலைசெய்துகொள்ளலாமா?: இந்துமடாதிபதிகள் கொலை செய்யப் படுவது, தற்கொலை செய்து கொள்வது, புதிய செயல்பாடு, நிகழ்வு மற்றும் போக்காக தென்படுகிறது. கர்நாடகாவில் அடிக்கடி நடப்பது திகைப்பாக இருக்கிறது. 2013ல் சௌலி ஆஸ்ரமத்தில் மூன்று சீடர்கள் தீக்குளித்து இறந்தனர். இவ்வாறு நடப்பது, மடாதிபதி பதவிக்கு வரவா, சொத்தா, அரசியலா போன்ற கேள்விகள் எழத்தான் செய்தன, செய்கின்றன. ஆனால், உடனே, அப்பிரச்சினை அமுங்கி விடுகிறது. துறந்தவர் என்ற நிலையில், துறவியாகி, சந்நியாசியாகி, மடாதிபதியாகி விட்டப் பிறகு, உலக ஆசைகளில் ஈடுபட்டு, மாட்டிக் கொண்டு, இத்தகைய நிலையை அடைவது, துறவிக்கு, துறவறத்திற்கு, மடத்திற்கு, இந்துமதத்திற்கே இழிவைத் தேடித் தரும் காரியமாகும். இதெல்லாம் திட்டமிட்டு நடத்தப் படுகின்றனவா, அவ்வாறான இழுக்கை உண்டாக்க நடத்தப் படுகின்றனவா அல்லது மனித ஆசைகளால் நிகழ்கின்றனவா என்று பாரபட்சம் இல்லாமல், நடுநிலையோடு பிரச்சினையை அலச வேண்டியுள்ளது.
லிங்காயத்துசைவநம்பிக்கையும், வேதமறுப்பும்: கர்நாடகாவில் ஒரு பிரிவினர் லிங்காயத் என்ற பெயரில் தனி வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர்[1]. லிங்காயத் பிரிவை 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் நடைமுறையில் கொண்டு வந்தார்[2], ”வேதங்கள், புராணங்கள், ஆகமங்களைநிராகரிக்கும்மதமாகவும், யாகங்கள்தேவையற்றவைஎன்றும்பசவண்ணாலிங்காயத்துமதத்தைஏற்படுத்தினார். கடவுளுக்குபலிகொடுக்கும்வழக்கம்லிங்காயத்துவழிபாட்டில்இல்லை. லிங்காயத்தைபின்பற்றுபவர்கள்தங்களைவீரசைவர்கள்என்றுஅழைத்துகொள்வர். இவர்கள்தங்களோடுஎப்போதும்லிங்கத்தைஉடன்வைத்திருக்கவேண்டும், லிங்கத்தைகைகளில்வைத்துபூஜிக்கவேண்டும், குழந்தைபிறந்ததும்லிங்கத்தைகழுத்தில்தொங்கவிடவேண்டும்என்பதுபசவண்ணாஉருவாக்கியகோட்பாடுகள். அதோடுஅசைவம்உண்ணக்கூடாது, மதுஅருந்தக்கூடாதுபோன்றவைபசவண்ணாஉருவாக்கியகொள்கைகள். சாதிகளைவைத்துமக்கள்பிரிக்கக்கூடாதுஎன்றார். விதவைதிருமணத்தைஆதாரித்தார், குழந்தைதிருமணத்தைதடுக்கவேண்டும்,” என்றார்.
லிங்காயத் தனிமதம், இந்து மதமல்ல போன்ற கோரிக்கைகள், ஆர்பாட்டங்கள்: உண்மையில், இடைக்கால ஜைன-பௌத்த போராட்டங்கள், மோதல்கள், வாத-விவாதங்கள் வன்முறையில் முடிந்துள்ளன. இடைகாலத்தில் சைவவிரோத, ஜைனத்திலிருந்து விடுபட, பசவேஸ்வரர் இத்தகைய கொள்கைகளை முன்வைத்து, ஜைனத்தை தோற்கடித்தார். இந்த முற்போக்கு கருத்துக்களால் பசவண்ணா பின்னால் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இவர்களே லிங்காயத்தார் என அழைக்கப்படுகின்றனர். லிங்காயத்தைத் தனிமதமாக அறிவிக்கக் கோரி நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த விவகாரம் 2018 கர்நாடக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்று கூறப்பட்டது. கர்நாடகாவில் சுமார் 17% பேர் லிங்காயத் மதத்தை சேர்ந்தவர்கள். இதனையடுத்து லிங்காயத்தை தனிமதமாக அறிவித்தனர். இதை வைத்துக் கொண்டு, தமிழகத்திலும் சில கோஷ்டிகள் கலாட்டா செய்து வருகின்றன[3]. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை, வகை-வகையாக தங்களது சித்தாந்தங்களை வெளிப்படுத்தி, திரிபு விளக்கங்களுடன் கலாட்டா செய்வர். திமுக இவர்களுக்கு மேடை கொடுப்பதால், ஊடக விளம்பரமும் தாராளமாகக் கிடைக்கிறது[4]. கர்நாடகாவில், அதே வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது.
திங்கள்கிழமை 24-10-2022 அன்றுகுஞ்சகல்பண்டேமடத்தின்பீடாதிபதிபசவலிங்கேஸ்வரசுவாமிகள்தூக்கிட்டுத்தற்கொலைசெய்துகொண்டது: கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டத்தில் உள்ள குஞ்சகல் பண்டே மடத்தின் பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் தற்கொலை செய்து கொண்டார்[5]. ராமநகரம் மாவட்டம், மாகடி வட்டத்தில் கெம்பாபுராவில் அமைந்துள்ளது குஞ்சகல் பண்டே மடம்[6]. இதன் தலைமை மடாதிபதியாக பசவலிங்கேஷ்வரா சுவாமி கடந்த 1997 முதல் பொறுப்பு வகித்து வந்தார்[7]. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மடத்தின் பீடாதிபதியாக உள்ள பசவலிங்கேஸ்வர சுவாமிகள், தனது மடத்தின் பூஜையறையின் கண்ணாடிக் கம்பியில் திங்கள்கிழமை 24-10-2022 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்[8]. 1997ஆம் ஆண்டு மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பசவலிங்கேஸ்வர சுவாமிகள், அண்மையில் வெள்ளி விழாவைக் கொண்டாடியிருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மடத்தின் பணியாளர்களுடன் நிதி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் தன் அறைக்கு உறங்க சென்றவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
பூஜைக்குப்பிறகுஎடுத்தமுடிவு: தினமும் அவா் காலை 4 மணிக்கு எழுந்து பூஜை செய்வது வழக்கம். அந்த சமயத்தில் பூஜையறையின் கதவுகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக திங்கள்கிழமை காலை 6 மணிக்குப் பிறகும் பூஜையறையின் கதவுகள் மூடியிருந்ததைக் கண்ட மடத்தின் ஊழியா்கள், கதவைத் தட்டினா். கார் டிரைவர் தான் முதலில் கவனித்தார் என்று சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அவரது கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தனா். ஆனாலும், கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த மடத்தின் ஊழியா்கள், பின்புறமாகச் சென்று அறைக்குள் பார்த்த போது பீடாதிபதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மடத்தில் இருப்பவர்கள், இதனை நம்பவில்லை. நிச்சயமாக, ஏதோ ஒரு காரணத்திற்காக, குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக, அவர் மிரட்டப் பட்டிருக்க வேண்டும், அதனால், அத்தகைய முடிவுக்குச் சென்றிருக்க வேண்டும் என்று கூறப் படுகிறது.
பலகேள்விகளுக்குவிடைகிடைக்கவேண்டியுள்ளது: இதுகுறித்த தகவலின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். பீடாதிபதி பசவலிங்கேஸ்வர சுவாமிகள் எழுதி வைத்திருந்த மரணக் குறிப்பை போலீஸார் கைப்பற்றினா். அதில், ஒருசிலா் தனது செல்வாக்கை குறைக்கும் வகையிலான தகவல்களை வெளியிடுவதாக மிரட்டியதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அக் கடிதத்தில் தன்னை யார் மிரட்டினார்கள் என்பதையும் பீடாதிபதி குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் கூறினா். அவா்களின் பெயரைத் தெரிவிக்க போலீஸார் மறுத்துவிட்டனா். இந்த நிலையில் மடாதிபதிக்கு யாரோ அடிக்கடி வீடியோ கால் பேசியதும் தெரியவந்து உள்ளது[9]. இதனால் அவர் பயன்படுத்திய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்து உள்ளனர்[10]. மேலும் மடாதிபதி பசவலிங்க சாமியின் டைரியையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்[11]. மேலும் ஹனிடிராப் முறையில் மடாதிபதி மிரட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[12]. பிறகு, தற்கொலைக்குத் தூண்டியவர்கள் அடையாளம் காணப் பட்டு, அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப் படுமா என்று கவனிக்க வேண்டும்.
[7] தினமணி, குஞ்சகல்பண்டேமடத்தின்பீடாதிபதிபசவலிங்கேஸ்வரசுவாமிகள்தற்கொலை, By DIN | Published On : 26th October 2022 01:23 AM | Last Updated : 26th October 2022 01:23 AM
IUML – DMK கூட்டணி, ஏழு முஸ்லிம்கள் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது, இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆனது! அண்ணாவின், “இனம் இனத்தோடு சேரும்,” சித்தாந்தம், ஸ்டாலின் டுவிட்டரில் வெளிப்பட்டுள்ளது.
இந்தியயூனியன்முஸ்லிம்லீக்தோற்றதும், ஜவஹிருல்லாவென்றதும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் போட்டியிட்ட மூன்று இடங்களிலும் – கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் தோல்வியடைந்தது. உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல், தங்களது சின்னத்தினால் நின்றதால் தோல்வியடைந்தனர். ஆனால், ஜவஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்தது கவனிக்க வேண்டும். சிலர் ஜவஹிருல்லாவை விமர்சித்தாலும், வெற்றி பெற்றது நிதர்சனம் ஆகிறது. மேலும், சபாநாயகராக நியமிக்கப் படுவார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, அப்படி செய்யப் பட்டால், இவர் மீதான வழக்குகள், அரசியல் ரீதியில் நீர்க்கப் பட்டு விடும்.
SDPI, AIMIM, அம்மா.முககூட்டுயாரைதோற்கடிக்கவைத்தது?: டிடிகே.தினகரனுடன் கூட்டு வைத்துக் கொண்ட அஸாசுதீன் ஒவைஸி – AIMIM கட்சியினரும் தோல்வியடைந்தனர் –
டி.எஸ். வகீல் அஹ்மது, வாணியம்பாடி (T.S. Vakeel Ahmed contested in Vaniyambadi),
அமீனுல்லா, கிருஷ்ணகிரி (Ameenualla in Krishnagiri),
முஜிபூர் ரஹ்மான், சங்கராபுரம் (Mujibur Ragiman in Sankarapuram)
அஸாசுதீன் ஒவைஸளாம்பூருக்கு வந்து, உருதுவில் பேசி, பிரச்சாரம் செய்தும், அங்குள்ள முஸ்லிம்கள் இவர்களுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். ஆக, இங்கெல்லாம் முஸ்லிம்கள் தோல்வியடையவில்லை, வெல்லும் குதிரைகளுக்கு ஓட்டளித்துள்ளனர் அல்லது ஏற்கெனவே திட்டமிட்டு, திமுக கூட்டணி வெல்லாமல் இருக்க இவ்வாறு செயல்பட்டனர் என்றாகிறது..
தோல்வியடைந்தஇந்தியயூனியன்முஸ்லிம்லீக்கட்சியின்தலைவர்காதர்மொஹிதீன்ஸ்டாலினைபாராட்டியது: தலைவர் காதர் மொஹிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், சாதுர்யமாக, சாமர்த்தியமாக ஸ்டாலினைப் போற்றி, 07-05-2021 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உண்மையினை எடுத்துக் காட்டியுள்ளார். முதன் முதலில், காமராஜர் தான், ஒரு முஸ்லிமுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். பிறகு, அந்த வழக்கம் பின்பற்றப் பட்டது. அண்ணா-கருணாநிதி வழி வந்த ஸ்டாலினும், இரு முஸ்ம்களை மந்தியாக்கியுள்ளார்[1]. தந்தையின் வழியில் தப்பாமல் செல்லும் தனயன் என்னும் பேர் பெற்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கலும் தனது தந்தையின் வழிநின்றுளைரனு முஸ்லிம்களுக்கு தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளது என்று கூறியுள்ளார். இதனால், அவரும், சம்பிரதாயத்தை மறக்காமல் பின்பற்றியுள்ளார்[2]. சரியான தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவராக, ஸ்டாலின் விளங்குகிறார் என்றெல்லாம் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஆவடிசா.மு.நாசர் [S M Nasar – Minister for Milk & Dairy]: அமைச்சரை வீழ்த்திய வேட்பாளருக்கு கட்சி தலைமை அமைச்சர் பதவி கொடுத்து கவுரவிக்கும் என்கிற பொதுவான செண்டிமெண்ட் ஒன்று இருக்கிறது[3]. தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளில் ஆவடி தொகுதிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் வசிக்கும் தொகுதியாக ஆவடி இருக்கிறது. ராணுவத்திற்கு பீரங்கி தயாரிக்கும் தொழிற்சாலையும், ராணுவ வீரர்களுக்கான ஆடை தயாரிப்பு மற்றும் ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மையம் இங்கு அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு சிறப்பு காவல் படையும், விமானப்படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்களும் அமையப்பற்றது ஆவடி[4]. பால்வளத்துறை அமைச்சராகும் சா.மு. நாசர் (61) ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள சா.மு.நாசருக்கு பாத்திமா கனி என்ற மனைவியும், ஆசிம் ராஜா என்ற மகனும் உள்ளனர். ஆவடி சட்டமன்ற தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டுள்ளார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை வீழ்த்தி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
செஞ்சிகே.எஸ். மஸ்தான் [Gingee K S Masthan – Minister for Minorities Welfare and Non Resident Tamils Welfare – Minorities Welfare, Non Resident Tamils Welfare, Refugees & Evacuees and Wakf Board]: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவுள்ள செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (66) விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். இவருக்கு சைத்தானி பீ மஸ்தான் என்கிற மனைவியும் கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான் என்கிற மகனும், மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா என்கிற மகளும் உள்ளனர். செஞ்சி தேசூர் பாட்டையில் வசித்து வருகிறார். தொடர்ந்து திமுக விசுவாசியாக, பல பொறுப்புகளில் இருந்து வேலை செய்துள்ளார்.
பெரும்பாலான முஸ்லிம், கிருத்துவத் தலைவர்கள், நிறுவனங்கள் வாழ்த்து சொல்லியிருப்பது: இது ஒரு சாதாரணமான, வழக்கமாக, ஏதோ மரியாதை நிமித்தம் செய்யப் பட்டது இல்லை.
ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், ஊவா மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான செந்தில் தொண்டமான்,
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன்,
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்குமார்,
அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணி அரசன்,
இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப்,
சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்,
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன்,
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம்-கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம்,
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி, தென்னிந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை தலைவர் அறம் அருண்,
இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சி.கே.ரங்கநாதன்,
தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம்,
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்,
ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்கள் தோல்வியடைந்து, வென்றுள்ளது திட்டமே: முஸ்லிம் கட்சிகள் பிரிந்து கிடப்பது காட்சியளித்தாலும், ஓட்டளிப்பதில், அவர்கள் கட்டுண்டுள்ளனர்.
ஒவைசியை, மஸ்தான் இதயங்களை இணைப்போம் மாநாட்டிற்கு அழைத்து, ஜகா வாங்கியது, முக்கியமான நிகழ்வு. அந்த மஸ்தான் இப்பொழுது மந்திரியாகியுள்ளார்.
குறைந்த வாக்குகளைப் பெற்ற நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக, ஐஜேகே, ஓவைசி உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகளாகவும் போட்டியிட்டவர்கள் பல இடங்களில் தங்களது வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
ஆகவே, வெல்ல மாட்டோம் என்று தெரிந்தும், இவை கூட்டணி அமைத்து, தேர்தலில் களம் கண்டன. இதனால், திமுக எதிர்ப்பு மற்றும் அதிமுக ஆதரவு ஓட்டுகள் சிதறின.
பல இடங்களில் அமமுக மற்றும் அதிமுக ஓட்டுகளை சேர்த்தால், திமுக் ஓட்டுகளை விட அத்கமாக வருகிறது.
இதே போலத்தான் மக்கள் நீதி மய்யம், பிஜேபி ஆதரவு ஓட்டுகளை உடைத்துள்ளது.
அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம், திமுகவின் பி-டீமாக வேலை செய்து வெற்றி பெற செய்துள்ளது.
ஐஜேகே / பச்சமுத்து, தனது வியாபாரத்தை காத்துக் கொள்ள திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது. வேலூர் இஞ்னியைங் குழுமம் விஸ்வநாதனும் அவ்வாறே செய்துள்ளார். முன்னர் இவர்கள் பிஜேபியுடன் இருந்தனர். இதற்கு பிரஷாந்த கிஷோர் ஆலோசனை கொடுத்தாரா என்று தெரியவில்லை.
ஐஜேகே அட்மிஷன் வியாபாரத்திற்கு உதவுவதால் தொடர்ந்து இருக்கும். ஆனால், மக்கள் நீதி மய்யம் மறைந்து விடும்.
தோல்வியுற்ற காதர் மொஹிதீன் அபாரமாக புகழ்ந்தது, ஆற்காடு நவாப் செக்யூலரிஸமாக வாழ்த்து தெரிவித்தது எல்லாமே, இதில் சேரும்.