Archive for the ‘பொதுநல சேவை’ Category

ஜிஹாதி தீவிரவாதியும் பத்மஸ்ரீக்குப் பரிந்துரைக்கப் படுகிறான்!

பிப்ரவரி 4, 2010

ஜிஹாதி தீவிரவாதியும் பத்மஸ்ரீக்குப் பரிந்துரைக்கப் படுகிறான்!

இந்த தடவை சோனியா-தலமையில் ஆட்சி செய்யும் அரசாங்கத்தில், தேசிய விருதுகள் கொடுக்கப்பட்ட விஷயத்தில் பல அவமானத்திற்குரிய சர்ச்சைகள், கேவலமான குளறுபடிகள் முதலியவை ஏற்பட்டிருக்கின்றன. அதைப் பற்றி விவாதங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் குலாம் முஹப்பது மீர் அல்லது “மோமா கன்னா” என்று செல்லமாக அழைக்கப்படும் என்ற காஷ்மீர ஜிஹாதி தீவிரவாதியின் பெயர் பத்மஸ்ரீ விருதுகள் பட்டியிலில் உள்ளது திகைப்பாக இருகிறது. அதுவும் வேடிக்கை என்னவென்றால் “பொது நல சேவை” என்ற பிரிவில், இவனது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது தான் அந்த அசிங்கதின் உச்சக் கட்டம்! ஆனால் அவன் மீதுள்ள வழக்குகளோ – கடத்தல், பணம் பறிப்பு, கொலைகள் என நீள்கின்றன.

யார் பரிந்துரைத்தார்கள்?:  இப்படி கேட்டதற்கு, மிரே பதில் சொல்கிறான், தனது பெயரை பரிந்துரைச் செய்தவர்கள்:

1. ஃபரூக் அப்துல்லா, புதிய மற்றும் புதுப்பிக்கப்படும் சக்தி துறை மத்திய அமைச்சர்.

2. குலாம் ஹசன் மீர் – மாநில விவசாயத் துறை அமைச்சர்.

3. வஜஹத் ஹபிபுல்லா – மாநில உரிமையுடன் செய்திகள் அறியும் துறையின் தலைவர்.

ஃபரூக் அப்துல்லா எப்பொழுதும் போல பதில் சொல்ல மறுத்துவிட்டார்!

அவன் சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் வந்து ஒரு “சான்றிதழ்” கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான். அதன்படியே, குலாம் ஹஸன் மீர், தான் ஒரு “சான்றிதழ்”தான் கொடுக்க பரிந்துரை செய்தேனேத் தவிர, நிச்சயமாக, பத்மஸ்ரீ விருதுக்கு அல்ல என்று அடித்துச் சொல்லிவிட்டார்!

சரியான ஆனால் வஜாஹத் ஹபிபுல்லா மட்டும் தான் அவ்வாறு பரிந்துரைத்ததாக ஒப்புக்கொண்டார்!

என்னசெய்வது அவர்களால் அத்தகைய சேவைதான் செய்யமுடியும், அதுவும் “அல்லாவின்” பெயரால்! கேட்கவேண்டுமா, இந்திய “செக்யூலார்”வாதிகளை, அந்த கொலைகாரர்களுக்கு, கொள்ளைக்காரர்களுக்கு, தேசவிரோதிகளுக்கு………….தான் விருதுகளை அள்ளிக் கொடுக்கும்!

உமர் அப்துல்லாவை இதைப் பற்றிக் கேட்டபோது, தனக்கு நினைவில்லை என்றும், சரி பார்த்து சொல்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்!

களவியல் மன்னன், காதல் கோமாளிக்கும் பத்மஸ்ரீ: இதே மாதிரி காதல் கோமாளி, களவியல் மன்னன் என்றெல்லாம் அழக்கப்படுகின்ர சைஃப் அலி கான் என்ற நடிகனுக்கும் விருது கொடுக்கப்பட்டுள்ளது பற்றி, மஹாராஷ்டிர அரசியல் கட்சிகளே “எப்படி இத்தகைய உயர்ந்த விருதை இப்படி நடிகர்களுக்கும், சினிமாக்காரர்களுக்கும் கொடுக்கப்படுகின்றன” என்ற்ய்  ஆச்சரியப்படுகின்றனவாம்!!

வங்கி மோசடி ஆளுக்கு பத்ம பூஷன்! சன்த் சிங் சத்வால் என்ற அமெரிக்க ஹோட்டல் நிறுவனருக்கு பத்மபூஷன் கொடுக்கப்பட்டதற்கு, ஏற்கெனவே பிரச்சினை எழும்பியுள்ளது. ஏனனில், அவன் 9 மில்லியன் வங்கி மோசடியில் சிக்கியுள்ளான்!