Archive for the ‘ஒளிப்பதிவாளர்’ Category

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (1)

மார்ச் 9, 2015

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா – சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய தலைமுறை நிகழ்ச்சி (1)

புதிய தலைமுறை விளம்பரம்

புதிய தலைமுறை விளம்பரம்

இந்து அமைப்பினர் தாக்குதல்: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பிரபல டி.வி., சேனலான புதிய தலைமுறையில், ஒளிபரப்பாக இருந்த நிகழ்ச்சியை கண்டித்து, ஒளிப்பதிவாளரைத் தாக்கியதுடன் கேமிராவையும் அடித்து உடைத்துள்ளதுள்ளனர் இந்து அமைபினர்[1] என்று பொதுவாகவும்,  இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் என்று நக்கிரனும்[2],  “பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்று ஒன்.இந்தியா.தமிழ்[3] முதலியன ‘குறிப்பிட்டுள்ளன.  ஆனால், இந்து அமைப்பினர் ஏன் அந்நிகழ்ச்சியை எதிர்த்திருக்க வேண்டும் என்பது பற்றி மூச்சுக்கூட விடவில்லை. ”பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா” என்பது அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் தலைப்பு, உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே விஜய்-டிவியில் இத்தகைய நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மையில் பெண்மையினை அவமதிப்பதாக இருந்தது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது. எந்த அமைப்பும், அந்த அமைப்பு சார்ந்தவர்களும் அவர்களுடைய உணர்வுகள் பாதித்திந்திருந்தால் ஒழிய, இத்தகைய எதிர்ப்புகள் ஏற்படாது.

My rights and the rights of others

My rights and the rights of others

பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா”: சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக, பெண்களுக்கு தாலி பெருமைப் படுத்துகிறதா அல்லது சிறுமைப் படுத்துகிறதா என்ற கருத்தை வைத்து உரக்கச் சொல்லுங்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருந்தது[4]. இதற்கான படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வந்தன. இந்நிலையில், இது தாலியை இழிவு படுத்துவதாக அமைந்துள்ளது என்பதால், நிகழ்ச்சியை எடுக்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மீறி எடுத்தால் தாக்குதல் நடத்துவோம் என்று அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர், என்று ஊடகத்தினர் வெளியிட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. இவ்விசயத்தில் இவ்விரு பிரிவினரிடையே உரையாடல்கள் அடந்துள்ளன என்றாகிறது. அதையும் மீறி ஒப்புக்கொள்ளாத காரணங்களுக்காக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அச்சுருத்தல் ஆரணமாக புகார் கொடுக்கப்பட்டது. எனவே, இது குறித்து காவல்துறைக்கு தகவலளித்து டி.வி., சேனல் நிலையத்துக்கு பாதுகாப்பு வழங்கும் படி புதிய தலைமுறை கேட்டுக் கொண்டது. இதற்கமைய புதியதலைமுறை கட்டிடடத்திற்கு பாதுகாப்பும் போடப்பட்டது. கட்டிடத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

இந்து முன்னணியினர் தாக்கியதாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்: இந்நிலையில், ஞாயிறு காலை (09-03-2015), புதிய தலைமுறை அலுவலகத்திற்கு வெளியில் இருக்கும் தேநீர் கடையில், நின்று கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் மற்றும் பெண் நிருபர் இருவரை சிலர் தாக்கியுள்ளனர். சிலர் தாக்கியுள்ளனர் என்றது, இந்து அமைபினர்[5] என்று பொதுவாகவும்,  இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் என்று நக்கிரனும்[6],  “பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்” என்று ஒன்.இந்தியா.தமிழ்[7] முறையே வெளியிட்டன. பிறகு .அலுவலகம் அருகே நின்ற தன்னை பேச இடமளிக்காமல் இந்து முன்னணியினர் தாக்கியதாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் கூறினார்[8]. இப்படி செய்திகள் மாற்றி-மாற்றி எளியிட்டிருப்பதும் புதிராக உள்ளது. அப்படியென்றால், குறிப்பிட்டக் கருத்தைத் தடுக்க வேண்டும் என்ற போக்கு ஏன் இருந்தது என்பதை மற்றவர்கள் தாம் விளக்கியிருந்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

இந்து முன்னணி சார்பில் பரமேஸ்வரன் தெரிவித்த பதில்: தாலி பற்றிய விவாத நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை இந்து முன்னணியினர் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுவதற்கு அவ்வமைப்பின் மாநில செயலாளர் பரமேஸ்வரன் தெரிவிக்கும் பதில்[9] என்று பிபிசி வெளியிட்டுள்ளது. இந்து முன்னணியினரே இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்ற புதிய தலைமுறையின் குற்றச்சாட்டுக்கு இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் பரமேஸ்வரன் தமிழோசையில் பதிலளித்தார். புனிதமான தாலியைக் கொச்சைப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்துவது கருத்து சுதந்திரம் அல்ல என்று அவர் கூறினார்[10]. இதைக் காவலர்கள் பார்த்து கொண்டு இருந்தும், தாக்கியவர்கள் மீது நவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. இதனால், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களில் இச்செய்தி தீயாகப் பரவியதை அடுத்தே, போலீசார், இது சம்பந்தமாக 5 பேரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு, கட்சித் தலைவர்களும், மற்ற ஊடகங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன, என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது: புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் மீது, நிறுவனத்தின் அலுவலகம் அருகே காவல் துறையினர் முன்னிலையில் மத அடிப்படைவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன[11] என்று புதியதலைமுறையே வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வன்முறை மூலம் பறிக்க முயன்று தாக்குதல் நடத்திய கும்பலையும், அதற்குத் துணை நின்ற தமிழகக் காவல்துறையையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துச் சுதந்திரத்துக்குத் தாங்கள் எதிரானவர்கள் என்பதை இத்தாக்குதலில் ஈடுபட்டோர் நிரூபித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய தவ்ஹீத் ஜமா அத் மாநில செயலாளர் முஹமது ஷிப்லி, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது வேதனையாக உள்ளதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தாக்குதல் நிகழ்த்தியவர்களை கைது செய்து கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆணவம், அகம்பாவத்துடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதே போல் சென்னை பத்திரிகையாளர் சங்கம், ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட் யூனியன் ஆப் தமிழ்நாடு, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ், சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கம், திருச்சி மீடியா கிளப் உள்ளிட்ட அமைப்புகளும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன[12]. இப்படி கம்யூனிஸ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது வித்தியாசமாகத்தான் உள்ளது.

வேதபிரகாஷ்

© 10-03-2015

[1] தமிழ் உலகம், தாலிநிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: புதிய தலைமுறை கேமிராமேன் மீது தாக்குதல்..!!, Monday, 09 March 2015 10:07.

[2] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=139198

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/tv-cameraman-attacked-chennai-222343.html

[4]http://www.tamizhulagam.com/index.php?option=com_k2&view=item&id=23934:%E2%80%99%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E2%80%99-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=10;

[5] தமிழ் உலகம், தாலிநிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: புதிய தலைமுறை கேமிராமேன் மீது தாக்குதல்..!!, Monday, 09 March 2015 10:07.

[6] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=139198

[7] http://tamil.oneindia.com/news/tamilnadu/tv-cameraman-attacked-chennai-222343.html

[8] http://www.bbc.co.uk/tamil/india/2015/03/150308_puthiyathalaimuraiattack

[9] http://www.bbc.co.uk/tamil/india/2015/03/150308_parameswaran

[10]http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6972068.ece

[11]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5-2-204262.html

[12] புதியதலைமுறை, புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர், பெண் செய்தியாளர் மீது தாக்குதல்: பல்வேறு அமைப்புகள் கண்டனம், பதிவு செய்த நாள்மார்ச் 08, 2015, 1:46:12 PM; மாற்றம் செய்த நாள்மார்ச் 08, 2015, 10:38:57 PM.