Archive for the ‘தூக்கில் போட வேண்டும்’ Category

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

மார்ச் 24, 2013

கொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.

 

மனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.

 

அந்நிலையில்கொடூரக்குண்டுவெடிப்புகளில்குரூரமாகக்கொல்லப்பட்டவர்களின்ஆத்மாஎன்னவாகும்?: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.

 

காபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.

 

உயித்தெழும்போதுகாத்திருக்கிறதுஎன்றுதொடர்ந்துகுரூரங்களைசெய்யலாமா?: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்?

 

© வேதபிரகாஷ்

24-03-2013

 

 

தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!

மே 7, 2012

தூக்குத் தண்டனை: அபிஷேக் சிங்வி, அன்னா ஹஸாரே, சல்மான் குர்ஷித் – சோனியா காங்கிரஸின் செக்யூலார் வேடங்கள்!

மீசை-தாடி இல்லாத இஸ்லாமிய அடிப்படைவாதி: ஷாருக் கான் அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப் பட்டபோது, “முஸ்லீம் என்பதால் தான் அப்படி செய்கிறார்கள்”, என்று சொல்லப்பட்டது. தமிழகத்தின் கமல்ஹசன் என்ற முஸ்லீம் அடிவருடிகூட, ஏதோ தானு ஒரு முஸ்லீம் போலவும், தனக்குக் கூட அப்படித்தான் ஏற்பட்டது என்றுக் கூட சொல்லிக் கொண்டது! ஆனால் இப்பொழுது எல்லாமே பொத்திக் கொண்டு இருக்கின்றன. சல்மான் குர்ஷித் என்பவர் என்னதான் செக்யூலரிஸ முகமூடி அணிந்து கொண்டு, மீசை-தாடிகள் இல்லாமல் உலா வந்தாலும், தான் ஒரு இருகிய, கெட்டியான, உறுட்தியான இஸ்லாமிய அடிப்படைவாதி என்று பலமுறை காண்பித்து வருகிறார். உபி தேர்தல் சமயத்தில், முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு தேவை, கொடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து வகையாக மாட்டிக் கொண்டார். ஆனால், சட்ட அமைச்சராயிற்றே. ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தல் ஆணையமும் கண்களை மூடிக் கொண்டு விட்டது. சட்டம், நீதி முஸ்லீம் என்றால் அப்படித்தான் இந்தியாவில் வேலை செய்கிறது. இப்பொழுது, ஆபாச-சிடி புகழ் அபிஷேக் சிங்வி வகையாக மாட்டிக் கொண்ட பிறகு, உண்மை நிரூபிக்கப் பட்டால், அவருக்கு மிக்கக் கடுமையான தண்டனையளிக்கப்ப்டவேண்டும், தூக்கில் போட வேண்டும் என்று அன்னா ஹஸாரே பேசியிருந்தார். அதற்கு சல்மான் குர்ஷித் சொல்கிறார்:

நான் நீதி / சட்ட அமைச்சர் என்று இருமாப்புடன் பேசும் சல்மான் குர்ஷித்: “நான் நீதி மந்திரி, சட்ட மந்திரி. எனக்கு சட்டத்தைப் பற்றித் தெரியும். என்னைப் பொறுத்த வரையிலும் ஒருவன் கொலை செய்திருந்தால், அவனுக்கு தூக்குத் தண்டனை அளிக்கலாம். ஆனால், மற்றதற்கு அத்தகைய தண்டனை கொடுக்கலாம் என்றால் எனக்குத் தெரியவில்லை. அவர் எந்த சட்டத்தைப் பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சட்டம் இருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொள்ள தயாராக இருக்கிறேன்”, என்று கிண்டலும் நக்கலும் கலந்த இந்தியில் நிருபர்களுக்கு[1] பேட்டியளித்துள்ளார்[2]. அதாவது, பொருள் கலந்து புன்சிரிப்பில் இஸ்லாமிய நாடுகளில் தான் அத்தகைய சட்டம் உள்ளது, இந்தியாவில் இல்லை என்பது போல பேசினார்! ஆனால், இதே ஆள் தான் இப்படியும் பேசியுள்ளார்:

என்னை தூக்கில் போட்டாலும் நான் அப்படித்தான் பேசுவேன், (என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது): இப்படி பேசினதும் சல்மான் குர்ஷித் தான்!

  “முஸ்லீம்களுக்கான உரிமைகளுக்காக நான் போராடுவேன். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் போட்டால் கூட கவலைப்பட மாட்டேன்”, என்று பேசியவர்[3] யார் என்று ஞாபகம் இருக்கிறதா? இந்த திருவாளர் மெத்தப் படித்த சட்ட / நீதி அமைச்சர் தான்! இதை தாடி வைத்திருந்த ராகுல் காந்தியை பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் அவ்வாறு பேசியுள்ளார். ஆக தாடி-மீசை மழித்த இந்த முஸ்லீமிற்கும், அந்த தாடி-மீசை வைத்திருக்கும் ராகுலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முஸ்லீம்களின் ஓட்டுக்கள் வேண்டுமானால், முஸ்லீம் முஸ்லீம் இல்லாதது போலக் காட்டிக் கொள்ள வேண்டும், முஸ்லீம்-அல்லாதவர், முஸ்லீம் போல வேடம் போட வேண்டும். இப்படித்தான் தேர்தல் பார்முலா வேலை செய்யும் என்பதினால் தான் இவர்கள் இப்படி பேசுகிறார்கள், போதாக் குறைக்கு, பெரிய பதவிகளில் முஸ்லீம்கள் வேறு. இவர்கள் பாரபட்சமில்லாமல் வேலை செய்வதில்லை என்பது இப்படித்தான் நிரூபணம் ஆகிறது.
  • சட்டத்தைத் தெரிந்து கொண்டு பேசினாரா இல்லையா என்பதனை அவரிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி பேசுவதற்கு யார் தைரியம் தருவது? அருகில் ராகுல் சிரித்துக் கொண்டே இருப்பதினால், அங்கீகரித்து விட்டார் என்ற மமதையா?
  • நீதி-சட்ட அமைச்சர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர் அப்படி பேசலாமா? இல்லை தான் ஒரு முஸ்லீம், அதிலும் சட்ட அமைச்சர், அதனால், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிரில் பேசினாரா? இதற்குத் தான் செக்யூலரிஸம் என்று அர்த்தமா?
  • தேர்தல் கமிஷனரும் ஒரு முஸ்லீம் தான். ஆனால், அவரும் ஒன்றும் செய்யவில்லையே?
  • அப்படியென்றால், அவர் முஸ்லீம் என்பதால், மற்றொரு முஸ்லீம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டாரா?
  • பிறகு எப்படி பெரிய பதவிகளில் இருக்கும் முஸ்லீம்களை நம்புவது?
  • நாளைக்கு அவர்கள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் அல்லது உத்திரவாதம்?
  • பிறகு என்ன சட்டம்-நீதி எல்லாம் எல்லோருக்கும் ஒன்று, சட்டத்தின் முன்பாக எல்லோரும் சமம் என்ற பொய்யயன பேச்சு, நாடகம் எல்லாம்? இதுதான் சமதர்மமா, நியாயம்-தர்மம் என்று பேசும் பேச்சா?
  • இந்தியாவில் என்ன இஸ்லாமிய ஆட்சியா நடக்கிறது?
  • முஸ்லீம்கள் என்னவேண்டுமானாலும் பேசலாம், செய்யலாம், யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றால், அதற்கு என அர்த்தம்?
Working for people, let EC hang me: KhurshidPTI – Farukkhabad, February 11, 2012

Sticking to his stand on minorities, Congress leader Salman Khurshid has said he would ensure the rights of Pasmanda Muslim community even if the Election Commission “hangs” him[4].

Addressing an election rally in Khatakpur locality on Friday night, the law minister said that EC had

censured him, but even if the “Commission hangs him or does anything else”, he would ensure that people of Pasmanda community get their rights[5].

“Can’t I even say that Pasmanda Muslims would get their due?” he said, adding that Congress was set to hoist the tricolour in the state assembly after 22 years.

The Commission had censured Khurshid for his remarks on sub-quota for minorities, finding them to be a violation of the model code of conduct for elections.

Khurshid, while campaigning for his wife Louise, a Congress candidate from Farrukhabad assembly constituency in Uttar Pradesh, had promised the electorate last month that the party would increase the sub-quota for minorities to 9%, out of the 27% Other Backward Classes (OBC) reservation.

The EC order had come on BJP’s complaint about Khurshid’s remarks, asking the Commission to take action against him for violation of model code of conduct.

பாவம், தேர்தல் கமிஷன், கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது[6], தூக்கில் போடவில்லை. தேர்தல் நடைமுறை ஒழுங்கு பற்றியும் சோனியா காங்கிரஸ் கவலைப் படவில்லை. தனது சகோதரன் இருந்தான் என்பதினால், பிரியங்கா கூட, சல்மானுக்கு வக்காலத்து வாங்கி வந்ததை டிவி-செனல்கள் வெளிப்படையாகத் தான் காட்டின. ஏன், அவரது கணவனும் அதிக அளவில் வண்டிகளுடன் உலா வந்தார், ஆனால், தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யவில்லை! சோனியா மெய்னோவின் மாப்பிள்ளை – ராபர்ட் வெதேரா ஆயிற்றே, சட்டம் எப்படி வெல்லை செய்யும்?

வேதபிரகாஷ்

07-05-2012


[2] “I respect Anna. I am a law minister…as per my understanding a person is hanged in rarest of rare cases, especially relating to murder. “If somone has other knowledge on law, I am prepared to learn from him. I will try to understand more about law,” Khurshid said taking a dig at social crusader Hazare.

http://www.dnaindia.com/india/report_salman-khurshid-takes-a-dig-at-anna-for-his-knowledge-of-law_1684950

அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்?

ஜூலை 9, 2010

அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்?

காங்கிரஸைப் பார்த்து கேட்டுள்ளது, பி.ஜே.பியின் தலைவர் நிதின் கட்காரி என்பவர்!

अफजल गुरु को ‘कांग्रेस का दामाद’ कहने वाले बीजेपी के राष्ट्रीय अध्यक्ष पर कांग्रेस आगबबूला हो गई है।

அப்சல் குரு கோ “காங்கிரேச் கா தாமாத்” கஹ்னே வாலே பிஜேபி கே ராஷ்ட்ரீய அத்யக்ஸ பர் காங்கிரஸ் ஆகபபூலா ஹோ கயா ஹை!

அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்? அவனுக்கு பெண்ண தரப்போகிறார்களா? பிறகு எதற்கு காலந்தாழ்த்துகிறார்கள்? (தூக்குப் போடாமல் காலம் தாழ்த்தி பிரச்சினை வளர்த்து அரசியல் செய்யும் போக்கு)

நான் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்? நமது பாராளுமன்றத்தைக் காக்க உயிர்விட்ட தியாகிகளை அவர்கள்தாம் அவமானப்படுத்தி விட்டார்கள். அதனால், அவர்கள்தாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பாராளுமன்றத்தைத் தகர்க்க முயன்றவர்களுக்கும், பாராளுமன்றத்தைக் காக்க உயிர்விட்டவர்களுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையா, என்று கேட்கப்படுகிறது.

காங்கிரஸ் பயங்கரவாதத்தை எதிர்க்கமுடியாத கட்சி: காங்கிரஸ் கட்சியில் முழுக்க முழுக்க அச்சமூட்டும் / அச்சப்படும் நபர்களே உள்ளனர். அவர்கள் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வென்றதும் இல்லை. பயங்கரவாதிகளிடம் சரணடையும் கட்சிதான் காங்கிரஸ். அது ஒருபோதும் இந்தியாவைக் காப்பாற்ற முயன்றதில்லை,” என்றும் கட்கரி கூறினார்.

பார்லி., அட்டாக் பயங்கரவாதி அப்சல் குரு காங்கிரசாருக்கு மருமகனா ? நிதின் கட்காரி ஆவேச கேள்வி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35972

புதுடில்லி: பார்லி., தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த பயங்கரவாதி காங்., கட்சிக்கு மருமகனா இதனால் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது என்ற கட்காரியின் பேச்சு டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டை கிளப்பியிருக்கிறது. பா.ஜ., அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசும்போது லாலுவும், மாயாவதியும், ராம்விலாஸ் பஸ்வானும், காங்., தலைவர் சோனியாவுக்கு ஆதரவு தெரிவித்து ( நாய்கள் போல) சுற்றி வருகின்றனர். இந்த பேச்சு கடும் எதிர்ப்பை கிளப்பியது, இதற்கு பின்னர் நான் ஒரு உவமையாகத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் டேராடூனில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அப்சல் குருவை தூக்குத்தண்டனை வழங்குவதில் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. டில்லி முதல்வரிடம் கேட்டால் உள்துறை உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறுகிறார். அறிக்கைகள் மீது அமர்ந்து இருக்கிறாரா முதல்வர்? அப்சல் குருவை காப்பாற்ற ஏன் காங்கிரஸ் முயற்சிக்கிறது? அப்சல்குரு என்ன காங்கிரசாருக்கு மருமகனா ? இவருக்கு பெண் கொடுக்கப் போகிறீர்களா என்று கேட்டார்.

காங்., பொங்கி எழுகிறது : இந்த பேச்சு காங்., மத்தியில் கடும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவரது பேச்சுக்கு காங்., தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. காங்., மேலிடம் வெளியிட்டுள்ள செய்தியில், கட்காரி மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது. காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில் , கட்காரியின் பேச்சு மோசமாக உள்ளது. இவ்வாறு இழி சொல்லை பேசுவதை நிறுத்திக கொள்ள வேண்டும் . ஆனால் இதற்கு நான் ஒன்றும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என கட்காரி கூறியுள்ளார். பா.ஜ., வும் கட்காரியின் பேச்சில் தவறு ஓன்றும் இல்லை என கூறியுள்ளது.

டேய், ஒரு நாளைக்கு 15 பேர் சாக வேண்டும்!

ஜூலை 9, 2010

டேய், ஒரு நாளைக்கு 15 பேர் சாக வேண்டும்!

திவிரவாதிகளின் திட்டமிட்ட சதி அவர்களின் உரையாடலில் வெளிப்படுகிறது: குலாம் அஹமது தார் (Ghulam Ahmad Dar) மற்றும் ஷபீர் அஹமது வானி (Shabir Ahmed Wani) என்ற ஹுரியத் என்ற அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பட்காம் என்ற இடத்தில் போட்ட கூட்டத்தில் இப்படி பேசிக்கொள்கிறார்கள்[1]:

ஷபீர் அஹமது வானி: உங்க ஆளுங்க காசை வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார்கள்.

குலாம் அஹமது தார்: இல்லை, இந்த கும்பலை கட்டுப்படுத்துவதற்கு கஷ்டமாக போய்விட்டது………………அதற்கு பிறகும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

ஷபீர் அஹமது வானி: என்னடா பேசுரே, அவர்கள் மகம் என்ற இடத்திலிருந்து இருந்து பட்கம் நோக்கி வருவதற்குள் கலவரம் வெடிக்க வேண்டும், என்று சொல்லியாகி விட்டதே.

குலாம் அஹமது தார்: நான் சொன்னேனே………………

ஷபீர் அஹமது வானி: ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…… (அதாவது அப்பாவி மக்கள் சாகவேண்டும்).

குலாம் அஹமது தார்: ஐயா………………

ஷபீர் அஹமது வானி: இன்று 15 பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…………..

குலாம் அஹமது தார்: ம்ம்ம்ம்ம்ம்………………

செய்யது அலி ஷா கிலானி என்ற ஹுரியத் தலைவரின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் இவ்வாறு பேசிக் கொள்வதாக ஒலிஅலைகளை இடையில் குறுக்கிட்டு பதிவு செய்தபோது தெரிகின்றது[2].

கல்லெரி-கலவரம்-ஹுரியத்-காரணம்

கல்லெரி-கலவரம்-ஹுரியத்-காரணம்

இதைத்தவிர, இன்னுமொரு பதிவு செய்யப்பட்ட உரையாடலும் கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்கும் விவரங்கள், இதோ:

Abu Inquilabi: Stone-throwing has started. அபு இன்குவிலாபி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டதா?.

Suspect: Stone-throwing has started.

தீவிரவாதி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டது.
Abu: Allah be praised.

அபு இன்குவிலாபி: அல்லாவைப் போற்றுவோமாக!
Suspect: Allah be praised. Today, curfew was imposed at night.

தீவிரவாதி: அல்லாவைப் போற்றுவோமாக! இன்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
Abu: Yes, I’ve also heard the army has been called.

அபு இன்குவிலாபி: ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது என்று கேள்விப் படுகிறேன்?
Suspect: Yes, some troops have arrived.

தீவிரவாதி: ஆமாம், சில ராணுவ வீரர்கள் வரவழைக்கப் பட்டுள்ளார்கள்.
Abu: There was no Army earlier…

அபு இன்குவிலாபி: ஆனால், முன்னால் ராணுவம் இல்லை, இல்லையா………….?

Suspect: There are some troops in Srinagar, but here in Shopian and Pulwama, there is CRPF and police.

தீவிரவாதி: ஸ்ரீநகரில் சில ராணுவ வீரர்கள் இருந்தார்கள், ஆனால், சோஃபியான் மற்றும் புல்வாமா பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப் மற்றும் போலீஸ்தான் இருந்ததன.
Read more at: http://www.ndtv.com/article/india/kashmir-more-phone-conversations-prove-instigated-violence-36612?cp

கலவரம் செய்ய ஆட்கள் பணம் கொடுத்து கூட்டிவந்தது: ஹுரியத் மாநாடு என்ற பிரிவினைவாத, இந்திய-விரோத, இந்து விரோத, பாகிஸ்தான் ஆதரவு கூட்டத்திற்கு[3] எந்த மனித உணர்வுகளும் இல்லாத வெறிபிடித்தக் கூட்டம் என்பதை தானே வெளிப்படுத்திக் கொண்டு விட்டது. ஹுரியத் மற்றும் இந்திய விரோத தீவிரவாத இயக்கங்கள், கல் எறிவதற்கு ஒருநளைக்கு ரூ.300/- என்று பணம் கொடுத்து[4] கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளனர்[5]. அதனால் அந்த கல்லெறி வெறிக்கூட்டம் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை[6] (என்னுடைய முந்தைய பதிவில் புகைப்படங்களைப் பார்க்கவும்). இப்படி அடியாட்கள் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் தீவிரவாதிகளுடந்தான் “பேச்சு” நடத்துகிறார் சிதம்பரம்! இதற்காக பணம் துபாயிலிருந்து காஷ்மீரத்திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது[7]. சந்தேகம் வராத அளவிற்கு ரூ.10 லட்சங்கள் என்று வங்கிகள் மூலம் மாற்றப் பட்டு, பணம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. ஏற்கெனவே 40 ஆண்டுகளாக அழகான காஷ்மீரத்தை நரகமாக்கி விட்ட இந்த தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் தான் காஷ்மீர் மக்களுக்கு சொர்க்கத்தைக் கொடுக்கப் போவதாக நம்பியிருக்கும் மக்களை என்ன சொல்லுவது?

மக்களை இப்படி நரபலியிடுவது தியாகம் . ஷஹீத் ஆகுமா? ஹுரியத் என்ற இந்திய விரோத இயக்கத்தின் தலைவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறான்[8]. மதத்தால் மூளைசலவை செய்து, இப்படி 10-15 பேர்களை நரபலி கொடுக்கப் படவேண்டும் என்று ஒரு வெறிபிடித்தவன் கத்திக் கொண்டிருக்கிறான், ஆனால், அது தெரிந்த பிறகும், இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகள், முஸ்லீம்கள் அமைதியாக இருக்கிறார்கள். எந்த பொறுப்புள்ள முகமதியனோ / முஸல்மானோ, முஸ்லீமோ இதைக் கண்டிக்கவும் இல்லை. சென்னைக் குலுங்கியது, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது என்று பெருமை பேசி, தம்பட்டம் அடித்துக் கோண்ட கூட்டங்களும் பொத்திக் கொண்டுதான் உள்ளன[9]. செக்யூலரிஸ ஜீவிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற இந்தியர்களுக்கோ, கால்பந்து பார்ப்பதற்கக நேரமில்லை, இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை.

மெஹ்பூபா முஃப்டியின் அடாவடித்தனம்[10]: நிருவர்கள் அந்த மெஹ்பூபா முஃப்டி என்ற பெண்மணியிடம் கேட்கிறார்கள், “என்ன அம்மையாரே, இப்படி தாங்கள் ஆதரிக்கும் தீவிரவாத ஆட்கள் பேசிக் கொள்கிறார்களே, என்ன சொல்கிறீர்கள்?”

மெஹ்பூபா முஃப்டி: அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லமுடியாது. அங்கு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளது உண்மை.

நிருபர்: ஆனால், கலவரத்தை உண்டாக்கியது, தாங்கள் ஆதரிக்கும் ஹுரியத் ஆட்கள் தாம். அதை பற்றி என்ன சொல்கிறிர்கள்?

மெஹ்பூபா முஃப்டி: சிலர் அவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அரசு சக்திகள்தாம் அந்த இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம்.

நிருபர்: ஆனால், கலவரம் ஏற்படுத்தியதே ஹுரியத் ஆட்கள் என்றாகிறது. அதற்கு நீங்கள் பதில் சொல்லாமக் இருக்கிறீர்கள்.

மெஹ்பூபா முஃப்டி: (அதே பாட்டைத் திரும்ப-திரும்ப பாடிக்கொண்டிருந்தது, உண்மையை எதிர்கொள்ள முடியவில்லை என்று நன்றாகவே தெரிகிறது)

ஷபீர் அஹமது வானி கைது: வெள்ளிக்கிழமையன்று, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டு, மக்கள் வெளியே வரவேண்டிய நிலையுள்ளதால், ஏற்கெனெவே சிசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஷபீர் அஹமது வானி என்பவன் வியாழக்கிழமை அன்றே, அடையாளங்காணப்பட்டான். மேலே குறிப்பிடப்பட்ட ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த, ஷபீர் அஹமது வானி என்பவன் தான் அது, என்று உறுதி செய்யப் பட்டப் பிறகு, கலவரத்தைத் தூண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளான்[1].

பாகிஸ்தான், பாகிஸ்தான் அபகரித்துள்ள காஷ்மீர், இந்த்ய காஷ்மீர் என்று ஜிஹாதிகள் இந்தியர்களைக் கொன்றுவருகின்றனர்: ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் காஷ்மீரத்தில் இப்பொழுதைய கலவரங்களை ஊக்குவித்து, அப்பாவி மக்களைப் பகடைக் காய்களாக உபயோகித்து, பிரச்சினையை வளர்க்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது:

Transcripts show Hizb activist seeking details from PoK
Press Trust Of India
New Delhi, July 09, 2010; First Published: 18:16 IST(9/7/2010)
Last Updated: 21:21 IST(9/7/2010)
http://www.hindustantimes.com/Transcripts-show-Hizb-activist-seeking-details-from-PoK/Article1-569818.aspx

In clear signs of cross-LoC linkages to the latest trouble in Kashmir, talks intercepted by security agencies reveal how a Hizbul Mujahideen activist based in Pakistan-occupied Kashmir enquires from a local contact about the status of protests and government response. The undated transcripts of the conversation describe a person in Shopian in South Kashmir informing Abdul Inquilabi about protests, curfew and troop movement into Srinagar.

“Kya baat hui hai yaar (what has happened, friend?),” asks Inquilabi, who according to security agencies is a Hizbul Mujahideen activist based in PoK.

“Pata nahi, halat kharab huyi hai (I do not know, the situation has deteriorated),” responds the unidentified person from Shopian, according to the transcripts.

“Yeh Hindustani fauj panga le rahi hai Kashmiriyon ke saath. Yeh kahan Chhodegi inko (The Indian Army is troubling Kashmiris. It will not spare them),” remarks Inquilabi.

“Chhodte nahi yeh (They don’t spare),” is the response.

Then Inquilabi asks whether stone-pelting has begun and the answer is in affirmative.

Inquilabi asks whether a procession is to be taken out on that day and the response is that it is to start at 9 am.

The Shopian-based person says that an announcement had been made in the morning that all should participate in the protest. He then informs that security forces have clamped curfew at night.

Inquilabi says that he has heard about more Army being requisitioned. The response is, “yes, some has reached.”

Inquilabi then asks, “was Army not there earlier?”

His contact replies that it is in some strength in Srinagar, but in Shopian and Pulwama it is CRPF and police.

ஆனால், காஷ்மீரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்தே, அத்தகைய பயங்கரவாதத்திற்கு, இஸ்லாம் என்ற பார்வையில் துணை போகின்றனர்.

ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் உரிமைகள் கிடைக்கின்றனவா? இந்திய முஸ்லீம்கள் இதை முக்கியமாக கவனித்து யோசிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் ஜிஹாதி பயங்கரவாத்தால் நாட்டையேக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். பெண்கள் அங்கு வெளீயே வரமுடியாது. பாகிஸ்தானில் தினம் வெடிகுண்டு வெடித்து மக்கள் சாகிறார்கள். அதாவது, முஸ்லீம்களே முஸ்லீம்கள் இஸ்லாம் பெயரில் கொன்றுக் குவிக்கிறார்கள். இத்தகைய நுனுக்கங்களை முஸ்லீம்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும். ஆக, இந்த நவீன காலத்தில், தங்களது மதத்தைத் தாராளமாகப் பின்பற்றிக் கொண்டு, ஏன் அமைதியாக, ஆனந்தமாக வாழக்கூடாது? எதற்கு யாதாவது, ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு இப்படி கலவரங்கள், கலாட்டாக்கள் செய்து கொண்டு அமைதியைக் குலைத்து வாழவேண்டும்? இந்துக்களை விரட்டிவிட்டார்கள், பிறகு ஏன் அங்கு அமைதி வரவில்லை?


[1] http://economictimes.indiatimes.com/news/politics/nation/Hurriyat-leader-Wani-held/articleshow/6149661.cms


[1] http://www.ndtv.com/article/india/kashmir-intercept-10-15-people-more-must-be-martyred-36362?cp

[2] http://timesofindia.indiatimes.com/India/Did-separatists-plan-instigate-Kashmir-violence/articleshow/6143623.cms

[3] http://sify.com/news/home-ministry-says-kashmir-valley-violence-being-planned-instigated-news-national-khis4dedbdd.html

[4] With reports of anti-national elements owing allegiance to the separatists creating unrest in Kashmir, the Centre has already asked the state government to take stern measures. It was claimed by government agencies that the stone-pelters were being paid Rs 300 per day by separatists and militant outfits.

http://www.deccanchronicle.com/hyderabad/kashmir-rebels-wanted-15-killed-fan-trouble-647

[5] திராவிட கட்சிகள் எப்படி காசு கொடுத்து லாரி-லாரியாக, பஸ்-பஸ்ஸாக குட்டத்தைக் கூட்டி வருவார்களோ, கலவரம் செய்ய இப்படி கான்டிராக்ட் எடுத்து மக்களைக் கொல்லும் கூட்டம் இப்பொழுதுதான் வெளிப்படுகிறது போலும்.

[6] உள்ளுர் அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள் முகமூடி இல்லாமல் இருப்பார்கள், இறக்குமதி செய்யப் பட்ட அதாவது காசு கொடுத்து கூட்டி வரப்பட அடியாட்கள் கூட்டம் முகங்களைத் துணியால் மறைத்து இருப்பதைப் பார்க்கலாம்.

[7] http://thehindu.com/news/article506279.ece

[8] http://www.tribuneindia.com/2010/20100709/main3.htm

[9] இணைத்தள வீரர்கள் காஷ்மீரத்தின் அராஜகம், கொலைகள், கற்பழிப்புகள் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். மற்ற ஏதாவது ஒரு பிரச்சினையை 50-100 பேர்கள் மாற்றி-மாற்றி பிளாக் போட்டு, திசைத் திருப்பி விடுவார்கள்.

[10] http://ibnlive.in.com/news/separatist-leaders-behind-kashmir-violence/126253-3.html?from=tn

கசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம்! – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்

மே 4, 2010

கசாப்பை தூக்கில் போட வேண்டும், போட வேண்டாம்! – இப்பொழுதே துரோகத்தை ஆரம்பித்து வைத்து விட்டன ஊடகங்கள்: ஒட்டுமொத்தமாக, எல்லொருக்கும் அந்த குரூரக்கொலை-குண்டு வெடுப்புத் தீவிரவாதிகள் தூக்கிலிடப்படவேண்டும் என்று உறுதியாக இருக்கும் நிலையில், தீடீரென்று டைம்ஸ் ஆஃப் இந்தியா, “அவனைத் தூக்கில் போட வேண்டாம்!” என்று ஆரம்பித்து விட்டது[1]. பிறகெதற்கு 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.​ 304 பேர் காயமடைந்தனர், என்றெல்லாம் சொல்லவேண்டும்? ஏதோ செத்துவிட்டார்கள் என்று மெழுகு வர்த்தி எரித்து, ஊர்வலம் வந்து, டிவிக்களில் காட்டி, விவாதங்கள் நடத்தில் நேரத்தைக் கழித்து விடலாமே?

கோட்ஸேவும், கசாப்பும், இந்திய சித்தாந்தவாதிகளும்: மஹாத்மாவைக் கொன்றவன் கோட்ஸே, அவன் தூக்கிலிடப்பட்டான். அப்பொழுது, நேரு போன்ற செக்யூலரிஸவாதிகள் கூட, “அவனைத் தூக்கில் போடவேண்டாம், அவனை தூக்கில் போடுவதால், போன உயிர் திரும்ப வந்துவிடுமா“, என்றெல்லாம் அறிவிஜீவித்தனமான தத்துவங்கள் பேசவில்லை. ஆனால், இந்த கசாப்புக்கடைக்காரனைவிட குரூரமான கசாப்பின் விஷயத்திக்ல் இப்படி பேசுவது ஏன்? எது அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது, மனது, ஏற்று அத்தகையக் கருத்துகளை முன்வைக்கிறது? ஊடகங்களிலும் பெருமையாக தலைப்புச் செய்திகளாகப் போட்டு, விவாதிக்கப் படுகிறது?

ஃபஹிம் அன்சாரியின் மனைவி, மகிழ்ச்சியில் திளைத்தாள்!: ஃபஹிம் அன்சாரி மற்றும் சஹாப்புத்தீன் அஹமத் மீதான கூற்றங்கள் நிரூபிக்கப் படும் வகையில் போலீஸாரால், பலமான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை, ஆகையால்அவர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப் படுகிறது, என்று தஹல்யானி நீதிபதி கூறினாராம். கேட்டவுடன், தன் காதுகளையே நம்ப முடியவில்லையாம், ஃபஹிம் அன்சாரியின் மனைவி யாஸ்மி[2], மகிழ்ச்சியில் திளைத்தாளாம், கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்கியதாம்!

பிறகு அந்த உயிரிழந்த 25 வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர்,. காயமடைந்த 304 பேர்களுடைய மனை-மக்கள் ஏன் சந்தோஷப்படவில்லை? அந்த செத்தவர்கள் எல்லாம் யார்? அவர்களுடைய மனை-மக்கள் நிலை என்ன? அவர்கள் சொல்வது என்ன? ஏன் அவர்களுடைய படங்கள், பேச்சுகள் முதலியவை இடம் பெறவில்லை?

இப்படி திசைத் திருப்பும் நோக்கம் என்ன? “மைனாரிட்டி”, “மைனாரிட்டு வோட் பேங்க்” …………….என்று இப்பொழுதே ஆரம்பித்து விட்டனர்[3]. என்.டி.டி.வி போன்ற கேடு கெட்ட ஐந்தாம் படைகள், கசாப் ஒரு வீரன் போன்று காட்டி வருகிறது. அவன் ஆடுவது, பாடுவது போன்று சித்தரிக்கப் படுகிறது. முன்பே, “அவன் பால் கொடுக்கும் சிறுவனல்லாவோ, அவன் அம்மாதிரியெல்லாம் செய்திருக்க முடியுமோ“, என்பது போல, அவன் ஒரு சிறுவன் என்றெல்லாம் நாடகமாடினர். ஆனால், அவனோ எனக்கு சென்ட் வேண்டும், உலாவ வேண்டும் என்று சொகுசாக வாழ்க்கை நடத்தினான். கோடிகள் கொட்டி அரசாங்கமும் வசதி செய்து கொடுத்தது.

கசாப்பின் தாயார் இந்தியாவிற்கு வர அனுமதிப்பார்களா? இப்படியும் இனி விவாதங்கள் வரப்போகின்றன. என் மகனை பார்க்க வேண்டும் என்றால், அரசு அனுமதித்து தான் வேண்டும் என்று வாதிட கிளம்பி விடுவர். இல்லை, சில தாராள பேர்வழிகள், கட்சிகள், அவர் இந்தியா வந்து செல்ல ஆகும் செலவையெல்லாம் நாங்களே செய்து தருகிறோம் என்றெல்லாம் கூப்பாடுப் போடுவர்.


[1] http://timesofindia.indiatimes.com/NEWS/City/Hyderabad/Kasab-should-not-be-hanged/articleshow/5887870.cms

[2] http://www.deccanherald.com/content/67380/tears-joy-fahims-wife.html

[3] Do you think Ajmal Kasab will get death penalty? , http://www.merinews.com/article/do-you-think-ajmal-kasab-will-get-death-penalty/15805892.shtml