Archive for the ‘வருமான வரித்துறை நோட்டீஸ்’ Category

திமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா?

மார்ச் 22, 2013

திமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா?

2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மாறன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.

சிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன?: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு..வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.

முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

பேரன்வீட்டில்ரெய்ட்குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.

அர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.

விவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].

தி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “திமுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் .அன்பழகன், பொருளாளர் மு..ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் .மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.

திஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணுசொல்வது என்ன?: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.

“Mr. Stalin prevailed on his father to take a final decision on the night of March 18. By announcing withdrawal of support in the forenoon of Tuesday, Mr. Karunanidhi also pre-empted any attempt by the Congress leadership to come up with a compromise formula to convince him into staying with the UPA,” party sources said.“Mr. Stalin’s insistence was the final straw. He convinced our leader that reconsidering our position will be political suicide and that we will lose our credibility among the people,” said a senior leader.

Party sources said that after the three Union Ministers — P. Chidambaram, A.K. Antony and Ghulam Nabi Azad — held parleys with Mr. Karunanidhi and left for Delhi, Mr. Stalin stayed back with his father and persuaded him to snap ties without any delay.

“At one point, he even threatened to quit his position in the party since as a future leader he has to shoulder more responsibility than anyone else,” said leaders who were close to Mr. Stalin.

உண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.

Dravida Munnetra Kazhagam president M. Karunanidhi has disputed a report published in The Hindu that said party treasurer M.K. Stalin threatened to quithis position if the DMK did not snap ties with the United Progressive Alliance.In a statement here on Thursday, Mr. Karunanidhi said the DMK functioned on the basis of democratic principles and major decisions were not made by individuals.

He said that after Union Ministers P. Chidambaram, Ghulam Nabi Azad and A.K. Antony had met him on the Sri Lankan issue, he held discussions with senior party leaders, including K. Anbazhagan and Durai Murugan, before taking a decision on leaving the UPA.

இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.

கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா?: அழகிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.

இலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன? அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.

© வேதபிரகாஷ்

22-03-2013


[2] The investigating agency is also said to be conducting searches at the residence of Mr Stalin’s Secretary Raja Shankar.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

[6] Sources say the searches are being conducted after the Directorate of Revenue Intelligence complained that the DMK leader hadn’t paid the duty for some of the cars owned by him.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

[11] Mr Radhakrishnan, Spokesperson of the DMK, told NDTV, “Mr Stalin has always played an important role. He even went to the Unite Nations with our MP Mr. TR Baalu and met Mr Naveneethan Pillai to present resolutions passed by the Tamil Eelam Supporters Organisation. He represented our Thalaivar’s memorandum there”.

http://www.ndtv.com/article/south/how-stalin-shaped-the-dmk-s-exit-from-government-345010

[13] Karunanidhi, sarcastically has said he believes a central minister (Chidambaram) when the central minister says the government didn’t know what was going on. Yes ! so do we !

http://www.business-standard.com/article/current-affairs/cbi-raid-at-stalin-s-house-who-s-calling-the-shots-113032100292_1.html

தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!

ஒக்ரோபர் 28, 2010

தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!

தும்பை விட்டு  வாலைப் பிடிக்கும் மன்மோஹன் அரசு: தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு வருமானவரி கட்டவில்லை என்று இறங்கியிருக்கிறது!. “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்’ என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது[1].

2002ல் சோதனை, 2010ல் நோட்டீஸ்: ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான கிலானி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர், 2002ல் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் 10.2 லட்சம் மற்றும் 10,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய்) கைப்பற்றினர். விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வைர கைகடிகாரம் போன்றவற்றை வாங்கியதற்கான ஆவணங்களையும் கண்டுபிடித்தனர்.

பாகிஸ்தானிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்ற விலையுயர்ந்த வைர கடிகாரம்: ஜொலி-ஜொலிக்கும் வைரங்கள் பறித்த அந்த கடிகாரத்தை பாகிஸ்தான் அரசு தனக்குப் பரிசாக வழங்கியது என்று கிலானி அப்போது தெரிவித்தார்[2]. அதில் “பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து” [“From Pakistan Government”] என்று[3] பொறிக்கப்பட்டிருந்தது! ஜெயலலிதாவையும் விஞ்சிவிடுவாரோ/

பதிலளிக்காத ஜிலானியும், நோட்டீஸ் அனுப்பிய வருமானத்துறையும்: கிலானியிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது வருமான விவரங்கள் குறித்த விவரங்களை கேள்வி-பதில் போல தயாரித்து, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், கிலானி உரிய பதில் அளிக்காததால், வருமான வரியாக 1.73 கோடி ரூபாயை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பினர்.

அப்பீலுக்குச் சென்ற ஜிலானி: இதை எதிர்த்து, வருமான வரி ஆணையரிடம் கிலானி தாக்கல் செய்த அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது:  “நான் காஷ்மீரில் எம்.எல்..,வாக பணியாற்றி ஓய்வு பெற்ற வகையில், ஓய்வூதியத் தொகை 7,100 ரூபாய் மற்றும் விவசாயம் செய்து வருவதால் அதிலிருந்து 10 ஆயிரம் என, வருடத்திற்கு 17,100 மட்டுமே கிடைக்கிறது. வேறு எந்த வகையிலும் எனக்கு வருமானம் வருவதில்லை. நான் செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை 1.73 கோடி ரூபாயை ரத்து செய்து உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்”,  இவ்வாறு கிலானி அப்பீல் செய்திருந்தார். அதாவது, இப்படி ஆட்டிப் படைத்து எகப்பட்டு செலவு செய்து கலாட்டா செய்து வருகின்றார் எனும்போது, வெளியிலிருந்து பணம் வருகிறது என்பது உறுதியாகிறது[4]. சமீபத்தில் கல்லடிப்பதற்கே கோடிக்கணக்கில் செலவழித்துள்ளதாகத் தெரிகிறது.

வருமானதுறை நடவடிக்கை எடுத்துள்ளதா, இழுத்தடித்து உதவியுள்ளதா? கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இந்த விசாரணையில், கிலானியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருமான வரி தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, கிலானிக்கு உத்தரவிடப்பட்டது. ஆக, இத்தனை காலம் தூங்கி, திடீரென்று விழித்துக் கொண்டது, ஜிலானிக்கு உதவுவதைப் போலத்தான் உள்ளது. மன்மோஹன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்ற பொருளாதார பிஸ்தாக்கள் இந்தியாவை ஆண்டு, நிதித்துறையை நிர்வகித்து வந்துள்ள நிலையில், ஜிலானி இப்படி செல்லமாக வளர்க்கப்பட்டுள்ளார் என்றால், அவர்கள் உதவியுள்ளது நன்றகவே தெரிகிறது[5].

15 வேலைக்காரர்கள் என சொகுசு வாழ்க்கை வாழும் ஜிலானி[6]: இவருக்கு இரண்டு மகன்கள், ஐந்து பெண்கள்[7]. இவர்களுக்கே செலவு அதிகமாம். அதாவது, தனது மருமகன்கள் பேரில் அதிகமாக செலவு செய்துள்ளாராம். அவர்களும், இவரைப்போலவே, இந்தியாவிற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார்கள்[8]. வருமான வரித்துறை தயாரித்த அறிக்கையின் படி, கிலானியின் மாத வருமானம் 1 லட்சத்திலிருந்து 1.50 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது. அவரது வீட்டில் 15 வேலைக்காரர்கள் இருக்கின்றனர். சமையல் செலவாக மட்டும் மாதம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவழிப்பதாக கிலானியின் மனைவியே ஒப்புக் கொண்டிருக்கிறார்[9]. இது குறித்து கிலானியிடம் கேட்டபோது, “தனக்கு எந்தவிதமான நோட்டீசும் அனுப்பப்படவில்லை’ என தெரிவித்தார்[10]. வருமான வரித்துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து, அத்துறையின் தீர்ப்பாயத்துக்கு செல்லவும் கிலானி திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் பால் ஊட்டி வளர்த்த பாம்பு எனலாமா? இந்திராகாந்தி பிந்தரன்வாலாவை வளர்த்த மாதிரி, சோனியா ஜிலானியை வளர்த்துள்ளார் போலும்! தீவிரவாதி, பிரரவினைவாதி என்றெல்லாம் இருக்கும் போது, இப்படி அரசு இப்படி மெத்தனமாக இருந்திருக்கிறது என்று ஆச்சரியமாக உள்ளது. அமெரிக்காவே விசா அளிக்க மறுத்த போது[11], மன்மோஹன் சிங் பாஸ்போர்ட்டை கொடுக்க ஆணையிட்டார்[12]. தீவிரவாதத்தை / வன்முறையை கைவிடவில்லை என்ற காரணத்திற்காகத்தான் விசா மறுக்கப் பட்டது என்று அமெரிக்கா காரணம் கூறியது. ஆக அமெரிக்காவைவிட, இந்தியா தாராளமாக செயல்பட்டு வந்துள்ளது.

வேதபிரகாஷ்

28-10-2010

 


 

[1] தினமலர், 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த கிலானிக்கு நோட்டீஸ், அக்டோபர் 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=115180

[2] தினமணி,  வைரக் கடிகாரம் பரிசு பெற்ற வழக்கு: ரூ.1.73 கோடி வரி செலுத்த கிலானிக்கு உத்தரவு, First Published : 28 Oct 2010 12:10:00 AM IST.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324299&SectionID=130&MainSectionID=130&SEO……..81

[4] Hurriyat Leader Syed Ali Shah Geelani’s Arrest – ISI Funding for Kashmiri Militants, 10 June 2002

http://www.jammu-kashmir.com/insights/insight20020601a.html

[5] அதாவது சோனியா மெய்னோவிற்குத் தெரியாமல், எதுவும் நடப்பதில்லை. ஆகவே, இப்படி நாடகம் ஆடி, இந்தியர்களை இவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக ஏமாற்றிவருவதே, பெரிய தேசத்துரோகக் குற்றம் தான்!

[6] According to Jammu and Kashmir police chief, A.K. Suri, Geelani, in his returns filed in the last two years, had shown he received a monthly pension of Rs 7,100 per month from the Jammu and Kashmir Assembly for being a former MLA and Rs 10,000 as agriculture income. However, the approximate monthly expense of Geelani worked out to more than Rs. 1,50,000. One diamond studded watch with the inscription “From Pakistan government” and two vehicles purchased out of unaccounted sources were also recovered from Geelani’s residence.  Geelani also maintained 14 servants at his house who were paid Rs. 2,000 each. Geelani’s wife on interrogation revealed she was given Rs 25,000 per month for kitchen expenses, and said the house was on rent but did not specify the rent amount and to whom it was being paid to. Geelani’s driver and close confidant, G. M. Baba also possessed  a truck worth Rs.2,40,000 and a drilling machine worth Rs. 1,40,000 besides documents relating to mining contract business of stone quarries. Baba has not been filing his income tax returns.

[7] He has two sons named Naseem and Nayeem, and five daughters. http://en.wikipedia.org/wiki/Syed_Ali_Shah_Geelani

[8] On 10 June 2002, police in New Delhi arrested Iftikhar Geelani, son-in-law of Syed Ali Shah Geelani. Police and income tax officials raided Iftikhar Geelani’s residence in New Delhi and seized a computer which had a file of five pages with information about the strength of troops of the Indian Army and paramilitary forces in Jammu and Kashmir. Geelani, a correspondent with a Kashmir-based daily has also been charged under the Official Secrets Act.

[10] இது வழக்கமாக, எல்லா இந்திய அரசியல்வாதியும் கூறும் பதில்தான்! அதுதான், அப்பீல் என்றெல்லாம் செறுள்ளார் போலும்!

[11] The reason given by the U.S. for turning down Geelani’s request for a visa was, that he has” failed to renounce violence”.