Archive for the ‘கபட நாடகம்’ Category

குழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்!

ஓகஸ்ட் 4, 2012

குழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்!

 

முஸ்லீகள் காளியின் பெயரால் நரபலி கொடுத்தார்களாம்: இரண்டாண்டுகளுக்கு முன்பு, ஜூலை மாத வாக்கில் (ஜூலை 2010) இந்த குரூர நிகழ்சி நடந்தது. முதலில் தர்காவில் குழந்தையை நரபலிக் கொடுத்து பூஜை முடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. சன்-டிவி போன்ற செனல்கள் கூட விவரமாக வீடியொ-செய்திகளை வெளியிட்டது. ஆனால், திடீரென்று “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை  கொடுப்பதாக  இருந்தால்  காளிக்குல்  கொடுங்கள்”, என்று கொலையாளி சொன்னதாக செய்தி வந்தது[1]. ஒரு முஸ்லீம் இவ்வாறு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மை சொல்கிறாரா தப்பித்துக் கொள்ள இப்படி நாடகம் ஆடுகிறாரா என்று தீவிர விசாரணை செய்யவேண்டிய அவசியம் உள்ளது[2]. நூற்றுக்கணக்கான குழந்தைகள் மறைவதற்கு நரபலி காரணமா என்ற சந்தேகமும் எழுந்தது[3]. மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டும் குழந்தைகள் கொலைசெய்யப் படுகின்றன[4]. அவ்விதத்தில் காணாமல் போன குழந்தைகள் விஷயத்திலும் மற்ற விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன[5].

 

மனைவியின் நோயையை நீக்க நரபலி கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை: மதுரையில் ஒருவயது குழந்தையை கடத்தி, நரபலி கொடுத்த வழக்கில் கணவன், மனைவிபோல் வாழ்ந்த இருவருக்கு மதுரை கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. தூத்துக்குடி, காயல்பட்டினம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கபூர் (30). அவர் மனைவியை விவாகரத்து செய்தவர். ஏர்வாடி காட்டுப்பள்ளிவாசல் தர்காவில் தங்கி, சமையல் வேலை செய்து வந்த இவருக்கும், அங்கிருந்த ரமீலாபீவிக்கும் (28), பழக்கம் ஏற்பட்டது. ரமீலாபீவி கணவரை விவாகரத்து செய்தவர். இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்ந்தனர்.

 

நரபலி கொடுத்தது, ரத்தம் குடித்தது: தலைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை நரபலி கொடுத்து, பூஜை செய்தால், செல்வந்தராகலாம் எனக்கருதி, அத்தகைய குழந்தையை தேடி மதுரை வந்தனர். கோரிப்பாளையம் பள்ளிவாசலில் 21 நாட்கள் தங்குவதற்கு இருவரும் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.  மதுரை எஸ்.ஆலங்குளம் கோவலன் தெருவை சேர்ந்த கவுகர் பாட்ஷாவின் மனைவி சிரின் பாத்திமா. இவர் தனது ஒரு வயது குழந்தை காதர்யூசுப், தாய் சுல்தான் பீவியுடன், 2010 ஜூலை 1ல், கோரிப்பாளையம் பள்ளிவாசலில் தங்கினர். அங்கு மறுநாள் இரவு, தூங்கிக்கொண்டிருந்த குழந்தை, காதர்யூசுப்பை அப்துல்கபூரும், ரமீலாபீவியும் கடத்தி, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கொண்டு சென்றனர். அங்கு இருவரும் தங்கி இருந்த விடுதியின் குளியலறையில் கழுத்தை அப்துல்கபூர் அறுத்து ரத்தத்தை வாளியில் பிடித்தனர். ரத்தத்தையும் குடித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன[6]. தலை, உடல்களை தனித்தனியாக வெட்டி எடுத்தனர். ஏர்வாடி சோமன் நகரில் 2 நாட்கள் பூஜை செய்து, அங்கு குழந்தையின் உடலையும், திருச்செந்தூர் கல்லாமொழி கடற்கரையில் தலையையும் புதைத்தனர். ரத்தத்தை கடலில் வீசியுள்ளனர்[7].

 

குழந்தையை பெற்றொர் புகார், குற்றவாளிகள் கைது: சிரின் பாத்திமா புகாரின் பேரில், மதுரை தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். கோரிப்பாளையம் பள்ளிவாசலில் தங்குவதற்கு பெயர் பதிவு செய்துவிட்டு மாயமான அப்துல் கபூர், ரமீலா பீவியை தேடினர். அவர்கள் கொடுத்த காயல்பட்டினம் முகவரியில் விசாரித்த போலீசார், ஏர்வாடியில் இருப்பதை அறிந்து இருவரையும் கைது செய்தனர்[8].  இவ்வழக்கு மதுரை 6 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி எம்.சுரேஷ் விஸ்வநாத் முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் சிவமுருகன் ஆஜரானார்.

 

தண்டனைக் கொடுக்கப் பட்டது: குற்றத்தை இருவரும் ஒப்புக் கொண்டனர், அவர்கள் விளக்கியபடி குறிப்பீட்ட இடங்களுக்குச் சென்று, ஆதாரங்களை போலீஸார் திரட்டினர். குழந்தையை கடத்தியதற்காக அப்துல், கபூர், ரமீலாவிற்கு ஆயுள் தண்டனை, கொலை செய்ததற்காக இருவருக்கும் மற்றொரு ஆயுள்தண்டனை[9], தடயங்களை மறைத்ததற்காக இருவருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, தலா 2000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டார்[10].

 

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் ஏனிப்படி நரபலிகள் தொடர்கின்றன: கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட கழகம் மற்றும் திமுக, அதிமுக முதலிய திராவிடக் கட்சிகள் பகுத்தறிவோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய சித்தாந்தக் கூட்டாளிகள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்ற இந்து-எதிர்ப்பு கோஷ்டிகள் அத்தகைய பகுத்தறிவோடுதான் நடந்து கொண்டு வருகிறார்கள் ஊடகங்களில் ஊலையிட்டு வருகிறார்கள். பிறகெப்படி அத்தகைய ஞானப் பிழம்புகள் நரபலி கொடுக்க முடியும்? பெரியாரின் வாரிசான கலைஞரின் மூத்த வாரிசின் மண்ணான மதுரையில் எப்படி நரபலிகள் கொடுக்கப்படமுடியும்? திமுகவினரே[11] அதில் எப்படி துணைப் போக முடியும்? “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை  கொடுப்பதாக  இருந்தால்  காளிக்குல்  கொடுங்கள்”, என்று ஒரு முஸ்லீம் சொன்னது போல, ஒரு பெரியாரிச, பகுத்தறிவாளனும் அவ்வாறே சொன்னால் என்னாவது? இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜலட்சுமி என்ற குழந்தையைக் கொன்று ரத்தம் தூவியவனின் அயூப் கான்[12]. இங்கு மதச்சாயம் பூச விரும்பவில்லையென்றாலும், எப்படி முஸ்லீம்கள் இக்காரியங்களில், அதிலும் பகுத்தறிவாளனாக, பெரியார் பாதையில் செல்லும், திமுகவின் அதிகாரியாக, மேலாக ஒரு முஸ்லீமாக இருந்து அத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள்? ஒருவேளை ஆதிசங்கரர் எதிர்த்துப் போராடிய நரப்ச்லிக் கூட்டத்தார் இவர்கள்தாம் போலும்[13].

 

வேதபிரகாஷ்

04-08-2012


[6] Times of India, Fakir ‘beheads’ toddler, ‘drinks’ his blood in Tamil Nadu, TNN Jul 26, 2010, 12.33am IST

http://articles.timesofindia.indiatimes.com/2010-07-26/india/28315709_1_dargah-child-sacrifice-exhumed

[7] “Gafoor and Ramala Beevi took the child to a lodge in Ramanathapuram. When the child started crying, Gafoor slit his throat. He then beheaded the boy and buried the head at Kattupallivasal near the Erwadi dargah. The couple then took the head to Thoothukudi where they buried it near the Kallamozhi dargah,” Chidambaram Murugesan, inspector and head of the special team investigating the case said.

[12] According to the police, A. Ayub Khan of Katchakatti, the DMK functionary, sprinkled the child’s blood around a newly constructed building as part of fulfilling a vow………….Ayub Khan, who was then the deputy chairperson of the Madurai district panchayat, was constructing a new building for a women’s college. As he could not complete construction even after two years, he was advised to sprinkle the blood of a girl child around the campus. Ayub Khan offered Rs.8.5 lakh to carry out the task. Mahamuni and Karuppu, the butchers, were lured by broker A. Murugesan (54) of Vadipatti and Ponnusami (22) and Lakshmi……….Ayub Khan had confessed to sprinkling the blood on the college campus, the SP said.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3364973.ece

[13] ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்று அரேபியர்களுக்கு போதித்தார் என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. காளாமுகர்கள், நரபலி கூட்டத்தார் முதலிரோரையும் எதிர்த்ததாக கூறுகின்றன.

என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா?

ஜனவரி 26, 2012

என். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா?

நரசிம்மன் ராம், இந்து ராமாகியது: “இந்து ராம்” என்று செல்லமாகக் குறிப்பிடப் படும் என். ராம் ஒரு ஐய்யங்கார், பிராமணர் (உண்மையில் இவர் இந்து விரோதி ராம் என்று கூட சிலர் சொல்வதுண்டு[1]). மே 5, 1945ல் ஜீ. நரசிம்மனது முதல் மகனாக பிறந்தவர், கஸ்தூரி ஐயங்காரது பேரன். லயோலா காலீஜில் படித்து 1964ல் பட்டம் பெற்றவர். அப்பொழுதுதான், இவர் கம்யூனிஸம், கிருத்துவம் முதலியவற்றில் ஈர்க்கப் பட்டார். பிரகாஷ் காரத்[2], கே. சந்துரு[3], பி. சிதம்பரம்[4] போன்றோர் நண்பர்கள் ஆகினர்[5]. பிரிசெடன்சி கல்லூரில் படித்து 1966ல் எம்.ஏ பட்டம் பெற்றார். இங்கும் அவரது சித்தாந்த மாறுதலுக்கு நண்பர்கள் கிடைத்தனர். கல்லூரி வாழ்க்கையில் கம்யூனிஸ சித்தாந்தியாக இருந்து, அரசியலில் தீவிரமாக கலந்து கொண்டார்[6]. ஸ்டூடண்ட்ஸ் பெடெரேஷன் ஆஃப் இந்தியா [Students Federation of India (SFI), which is politically linked to the Communist Party of India (Marxist)], என்ற கம்யூனிஸப் இயக்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்து பத்திரிக்கைப் படிப்பு பள்ளியில், “ஒப்புமை பத்திரிக்கைத் துறை” பாடத்தில் மேற்படிப்பு முடித்து கொண்டார். 1977லிருந்து, இந்து நாளிதழின் தலைமை ஆசிரியராக பணியை ஆரம்பித்த இவர், 1980ல் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். 1991 முதல் 2003 வரை பிரண்ட்-லைன் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிக்கைகளின் ஆசிரியாக இருந்தார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் போபோர்ஸ் ஊழல் செய்திகளை வெளியிட்டதில் பிரபலமானார். இவ்வாறு கொலேச்சிக் கொண்டிருந்தவர், ஜனவரி 19, 2012 அன்று தமது ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.

இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மீது நில-அபகரிப்பு புகார்: சென்னை அருகே ரூ.300 கோடி மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மற்றும் சிலர் மிரட்டி அபகரிக்க முயற்சிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. சென்னை நகர போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி, டிஜிபி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோரிடம் நேற்று தனித்தனியாக புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது[7]:

கே.சி.பழனிச்சாமி, அதிமுக முன்னாள் எம்.பி. புகார்: “நான் கோவை நகரில் வசிக்கிறேன். அதிமுகவில் திருச்செங்கோடு எம்.பி., காங்கேயம் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். எனக்கு கோவையில் சேரன் குரூப் ஆப் கம்பெனிகள் உள்ளது. இது சேரன் என்ட்ரபிரைசஸ் (பி) லிமிடெட் (சிஇபிஎல்) ஆகும். கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் நடத்தும், ‘இந்து’ நாளிதழின் துணை நிறுவனமான ஸ்போர்ட்டிங் பாஸ்ட் (ஐ) லிமிடெட் (எஸ்பிஐஎல்) ஆகும். இந்த நிறுவனத்திற்கு சென்னை அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 400 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தில் சர்வதேச தரத்தில் கோல்ப் கோர்ஸ் உருவாக இருந்தது. இதை எனது சிஇபிஎல்க்கு 2004ம் ஆண்டரூ.30 கோடிக்கு விற்றனர். இதன் மதிப்பு 2007ம் ஆண்டில் ரூ.300 கோடி ஆக உயர்ந்தது.

நிலமதிப்பு உயர்ந்ததால் திரும்ப கேட்ட ராம் மற்றும் ரங்கராஜன்: “இந்நிலையில், நிலத்தின் மதிப்பு உயர்ந்ததை அறிந்த கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனம், அரசியல் ஆதரவுடன் ரூ.30 கோடிக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினர். ஆனால், அந்த நிலத்தை நான் திரும்ப கொடுக்க மறுத்துவிட்டேன். இந்நிலையில், கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் கோவை, அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள எனது சேரன் டவர்ஸ் அலுவலகத்திற்கு சோதனை என்ற பெயரில் போலீசாரை வைத்து மிரட்டினர். அதன்பின் வந்த அவர்களது ஆட்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சேரன் டவர்சில் உள்ள சட்டப்பிரிவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் 2008ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மனித உரிமை ஆணையத்திற்கு தந்தி அனுப்பினார். இந்த அராஜக செயலை சென்னையிலுள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றமும் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து 2008ம் ஆண்டு மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், இந்த தேதி வரை நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, சதி திட்டம் தீட்டி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்து கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அந்த புகார் மனுவில் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தப் புகார் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்து நாளிதழ் மீது வழக்கு: தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்ட நக்கீரன் மீதும் அந்தக் கட்டுரையைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து நாளிதழ் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது[8]. தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட அவதூறான பொய்த் தகவலை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். நக்கீரன் பத்திரிகை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பம் ஆகியவை தொடர்பில் இந்து நாளேடு செய்தி வெளியிடுகையில், நக்கீரன் வெளியிட்ட அதே அவதூறான தகவலை உண்மை நிலை அறியாமல் இந்துவும் மீள் பிரசுரம் செய்ததால், அந்தப் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் மற்றும் செய்தியாளர் கோலப்பன் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். குற்றவியல் சட்டப் பிரிவுகள் 500 மற்றும் 501ன் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் கூறினார். நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக ஏற்கனவே நக்கீரன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில், அப்பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது. ஆனால் முதல்வர் மீது அவதூறு பரப்பியமைக்காக புதிய வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளது என்று அரசு வழக்குரைஞர் விளக்கினார்.

ராம் பதவி விலகல்: இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்[9]. இந்து குழுமத்தை நடத்தி வரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார். இந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்[10]. இவர் கஸ்தூரி அண்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியில் அமர்வார். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என்.ராம் நீடிப்பார். நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் யுடிவி நியூஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார். கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (board members) மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடையே பத்திரிக்கையை நடத்துவதிலும் யார் ஆசிரியராக இருப்பது என்பதிலும் பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை ஆசியராகவும் செயல் இயக்குனராகவும் நியமிக்கும் முடிவுக்கு இந்த நிறுவனம் வந்தது. தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவரான என்.ராம், கடந்த 8 ஆண்டுகளாக இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக மிகத் திறம்பட செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பச் சண்டை, பிரச்சினைகள்; கஸ்தூரி அண்ட் சன்ஸ் 12 அங்கத்தினர் கொண்ட அளுமைக்குழுக் கொண்டது[11]. கஸ்தூரி ஐயங்காரின் குடும்பத்தாரான, இவகர்ளில் நான்கு பேர் ஒன்று விட்ட சகோதரர்கள் ஆவார்கள் –

  1. ஜி. நரசிம்மன், இவர் என். ராம் என். ரவி, என். முரளி முதலியோர்களின் தகப்பனார்.
  2. எஸ். பார்த்தசாரதி – மாலினி பார்த்தசாரதி, நிர்மலா நரசிம்மன், நளினி கிருஷ்ணன் முதலியோர்களின் தகப்பனார்.
  3. எஸ். ரஙராஜன் – ரமேஷ் ரங்கராஜன், விஜடயா அருண், அகிலா ஐயங்கார் முதலியோர்களின் தகப்பனார்.
  4. ஜீ. கஸ்தூரி – கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ச்மி ஶ்ரீநாத் முதலியோர்களின் தகப்பனார்.

பொதுவாக, ராமின் போக்கு குடும்பத்தாருக்கு பிடிக்காமல் இருந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில், ராம் –

  • பலமுறை திருமணம் செய்து கொண்டது (சூஸன்[12] முதல் மனைவி, மரியம் சாண்டி இரன்டாவது மனைவி),
  • விவாகரத்து செய்தது (சூஸனை விவாகரத்து செய்து விட்டு மரியம் சாண்டியை[13] மணந்து கொண்டது),
  • முந்தைய மனைவியர் வழக்குகள் போட்டது, சொத்துக்கள் கேட்டது (ஆக்ஸ்போர்ட் உனிவர்சிடி பிரஸ் கட்டிடம், நிலத்தை சூஸன் கேட்டது),
  • இடது சாரி சித்தாந்தவாதியாக இருந்து கொண்டு செய்திகளை வெளியிட்டது, குறிப்பாக சீனாவிற்கு ஆதரவாக எழுதியது[14]),
  • திமுகவிற்கு சாதாகமாக இருந்து வந்தது (கனிமொழி ஆசிரியக்குழுமத்தில் இருந்தது, ஜி. ராமஜெயம் இந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தது முதலியன),
  • ஊழலில் ஜெயிலில் இருக்கும் ஏ. ராஜாவிற்கு அளவிற்கு அதிகமாக ஆதரவாக செய்திகளை வெளியிட்டது (திமுக, கனிமொழி உந்துதல் பேராக),
  • அதிக ஆதாரங்கள் இருந்தாலும் சுரேஷ் கல்மாடி, அசோக் சவான், எடீயூரியப்பா போன்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தது.

என்று விவாதத்தில் வெளிவந்தது[15]. இப்படி ஒருவேளை ஆளும் கட்சி, எதிராக திரும்பியுள்ளாதால், பெருத்த அளவில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம்.

2ஜி விவகாரத்தில் ராம் திமுகவை / மைத்துனர் தயாநிதி மாறனை ஆதரிப்பதேன்? ரமேஷ் ரங்கராஜனின் மனைவி மற்றும் தயாநிதி மாறனின் மனைவியும் (பிரியா) சகோதரிகள். அதாவது பிரியா ரன்கராஜனின் மகள். இதனால், மைத்துனருக்கு உதவுவதில் ரமேஷ் மற்றும் ராம் ஈடுபடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. போதா குறைக்கு சிதம்பரம் வேறு பால்ய நண்பவர்கள், ஆனால் சிதம்பரமும் அக்கச்சக்கமாக மாட்டியுள்ளார். யார் விட்டாலும், சுப்ரமணி சுவாமி விடுவதாக இல்லை. இந்நிலையில் தான் இந்த இருவர் மீதும் அதிமுக முன்னாள் எம்.பி புகார் கொடுத்துள்ளார்.

வேதபிரகாஷ்

26-01-2012


[1] ராமஜன்ம பூமி விவகாரத்தில், பலதடவை இந்துக்களுக்கு எதிராக, குறிப்பாக அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்து கட்டுரைகள் மற்றும் தலையங்களில் எழுதி வெளியிட்டு வந்த போது, பலர், அதிலும் பெரியவர்கள், உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் முதலியோர்கள், அவற்றை தவறு என்று எடுத்துக் காட்டிக் கூட அவற்றை பிரசுரிக்காமல், தொடர்ந்து சித்தாந்தக் கட்டுக்கதைகளை சரித்திரம் என்ற போர்வையில் பரப்பி வந்த போது, பாரம்பரியமாக இந்துவை வாசித்து வந்த பெரியோர்கள் உட்பட பலர், அதை வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கூட, தனது ஆசிரிய-தலையங்க நடுநிலை காக்க முடியாமல், சித்தாந்த ரீதியிலேயே செயல்பட்டு வந்ததினால், குடும்பத்திலேயே அதிருப்தி ஏற்பட்டது. அதற்குள், இந்துவின் சுற்றறெண்ணிக்கையும் சரிய ஆரம்பித்தது

[2] N. Ram, mate, comrade, editor of The Hindu, the prolix Mahadev of rightpolitic.

http://www.tehelka.com/story_main34.asp?filename=Ne150907THEcommissar.asp

[3]  Justice K. Chandru has always been a rebel with a cause. In his college days, he ran the Students’ Socialist Forum (SSF) before joining the CPI(M) where he and his friends were absorbed into the Students Federation of India (SFI), CPM’s student wing.

http://www.theweekendleader.com/Heroism/553/No,-My-lord.html.

[4] பி. சிதம்பரம், வழக்கறிஞர், சட்ட ஆலோசனையாளர், மத்திய மந்திரி என்று பல அவதாரங்களில் உள்ளவர்.

[5] On to the elite Madras Christian College where he meets N. Ram and P. Chidambaram. Spark merges with spark and makes a pool of light. It’s a journal called The Radical Review. It has things to sustain it — there’s the affluence of Ram and Chidambaram, there’s the ferment over America’s bull-headed misadventure in Vietnam. It’s a time heady with the air of resistance. Fidel Castro has repelled the Bay of Pigs; the CIA explosive in his cigar has turned a damp squib.

http://www.tehelka.com/story_main34.asp?filename=Ne150907THEcommissar.asp

[6] Did N. Ram formally hook Karat with the CPM? Nobody’s telling. It’s true, though, that at the time, Ram had known Sundaraiyya better and longer than Karat. And he had a good sense of where Karat’s heart lay, what promise he held. Future general secretary of the party? Threeand- a-half decades is a long and risky period to lay bets over in politics, but there are those who never doubted where Karat would end up. Says a contemporary in the party, “We used to joke about it with him, sure, but everybody knew it was only half a joke.

http://www.tehelka.com/story_main34.asp?filename=Ne150907THEcommissar.asp

[11] Kasturi & Sons has 12 board members, and roughly 50 shareholders – all of them members of the Kasturi Ranga Iyengar family. Each of the four cousins, who together control the entire equity, has three members on the board. The owner cousins are G Narasimhan (father of N Ram, N Ravi, N Murali), S Parthasarathy (father of Malini Parthasarathy, Nirmala Lakshman and Nalini Krishnan), S Rangarajan (father of Ramesh Rangarajan, Vijaya Arun and Akila Iyengar), and G Kasturi (father of K Balaji, K Venugopal and Lakshmi Srinath).

[12] Susan was an English woman who came to south India as a research student. Like Ram, she was (and remains) an atheist with a Left perspective on politics. After their marriage, Susan worked as a teacher, a freelance journalist, an editor for Oxford University press publications in India and a television presenter. As a husband and wife team, both published the first volume of a biography on R.K.Narayan, the eminent Indian writer. Their daughter Vidya Ram, herself a journalist, was a Journalism topper at Columbia University in New York and even won a Pulitzer fellowship for Journalism.

[13] Mariam Chandy, who is the founder and Managing Director of TNQ Books and Journals (an ePublishing company that works on the leading scientific journals of the world).

[14] Twenty years later, another senior left-wing editor has provided a willing whitewash of a totalitarian regime. The cover story in the latest issue of the Chennai fortnightly, Frontline, written by N. Ram, provides an extended and lavishly illustrated brief for the Chinese occupation of that country. The Chinese, claims Ram, have brought hospitals, roads and schools to a previously deprived land. He minimizes the attacks on Tibetan cultural institutions and religious beliefs that the Chinese have so demonstrably carried out.

http://www.telegraphindia.com/1000908/editoria.htm#head3

[15] Ravi has also alleged that there have been distortions creeping into the “editorial framework” of the paper. “Among the issues that I have raised with the other directors during the discussions in the Board and outside are: the unmerited coverage of certain political favourites on specific directions; excessive coverage of the activities of the Left and some of its leaders; for reasons that are bound to emerge sooner rather than later, turning the newspaper into an apologist for A Raja through the 2G scam coverage, remaining deafeningly silent on his resignation in the face of mounting evidence even when demanding the resignation of Suresh Kalmadi, Ashok Chavan and Yeddyurappa…”

சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!

ஒக்ரோபர் 29, 2010

சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!

உள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது[1].

தேச விரோத பேச்சும், காங்கிரஸின் நாட்டுப் பற்றும்: சில தினங்களுக்கு முன்பு, டில்லியில் காஷ்மீர் பிரச்னை குறித்த கருத்தரங்கிற்கு, உள்துறைக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்[2]. அந்த கூட்டத்தில் பிரிவினைவாத குழு தலைவரான சையது அலி ஷா கிலானியும், பிரபல எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயும் கலந்து கொண்டனராம். அந்த கூட்டத்தில் அருந்ததி ராய் பேசிய பேச்சு, கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளதாம். காஷ்மீர் தங்களின் பகுதி அல்ல என்பதை சர்வதேச அரங்கில் இந்தியாவே ஒப்பு கொண்டதாக அருந்ததி ராய் கூறியிருந்தாராம். இதற்கு இந்த கூட்டம் முடிந்ததுமே பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தாராம். அருந்ததி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தாராம். பாவம், நாட்டில் பிஜேபியைத் தவிர வேறு எந்த இந்தியனுக்கும் சுரணை வரவில்லும் போலும்! இதுகுறித்து டில்லி போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்துவர் என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்தாராம்.

போலீஸார் கைது செய்ய தயாராக இருந்தாலும் உள்துறை செய்யும் சூழ்ச்சிகள்: இந்நிலையில் நேற்று இப்பிரச்னை தீவிர வடிவம் எடுக்க துவங்கியுள்ளது. அருந்ததி ராயை கைது செய்வதற்குண்டான சட்ட ரீதியிலான அனைத்து விவரங்களையும் சேகரித்து, அவரை கைது செய்யலாம் என்ற முடிவுக்கு டில்லி மாநகர போலீசின் சட்டப்பிரிவு வந்துள்ளது.  அறிக்கையும் கொடுத்தாகி விட்டது, ஆனாலும் கைது நடவடிக்கைக்கு முன்பாக மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது[3]. அருந்ததியின் பேச்சு, ராஜதுரோக குற்றம் என்றும் அவரை குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் கைது செய்யவும் முகாந்திரம் இருக்கிறது என்றும் டில்லி போலீஸ் நம்புகிறது. ஆனாலும் மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. காரணம் மிகவும் நுணுக்கமான இந்த பிரச்னையில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.  அதை போலவே சட்ட அமைச்சகமும் இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் கருத்துக்களை கேட்டறிந்து விட்டு, எதையும் மேற்கொண்டு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அபிஷேக் சிங்வி, கபில் சிபல்,…….போன்ற சட்ட நிபுணர்கள் வாய்மூடி மௌனியாகி விட்டார்கள் போலும்!

“உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லைஎன்றும் பேசும் சட்ட அமைச்சர்! சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இதுபற்றி கூறுகையில், “உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லைஎன்றார். பாவம் , இவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார், அவர் சீனாவில் இருக்கிறார். மானம் கெட்டவர்கள், நடந்து சென்றாலே நேராக பார்த்து கேட்டுவிடலாம், ஏனெனில் இருப்பது ஒரே கட்டிடத்தில் அருகருகே தானே! இதற்கிடையில் நேற்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா டில்லியில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அளித்த பேட்டியில், “கிலானி, அருந்ததி ஆகியோரின் பேச்சுக்கள் விவரம் ஆராயப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார். இப்படி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது!

இதே பிரஷாந்த் பூஷன் தான் முன்னமும் சூஸன்னாவை ஆதரித்தது[4]: இதே மற்றவர்கள் விஷயம் என்றால், ஆஹா முன்பு கோட்சேவிற்கு ஆஜரானாரே அதே வக்கில்தான், இப்பவும் ஆஜராகிறார் என்று கதை விடுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மைகளை மறைக்கிறார்கள். ஆமாம், இப்படி பல டிவி செனல்களுக்கு சொந்தக்காரர்களாக, சோனியாவின் நண்பர்களக இருந்தால், என்ன செய்ய முடியும்? அருந்ததி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்திருப்பதால், பிரபல மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.  பிரபல வக்கீலான பிரஷாந்த் பூஷன் கருத்து தெரிவிக்கையில், “சுதந்திரத்தை அடைய வேண்டுமென்று ராணுவத்தை தூண்டி விடும் வகையிலோ அல்லது வன்முறை கலவரம் போன்றவற்றிற்கு ஆதரவாகவோ பேசினால் மட்டுமே ராஜதுரோக வழக்கு போட முடியும்.  அருந்ததி ராயின் பேச்சு என்பது ராஜதுரோகம் என்று கூற முடியாது. அப்படி இருக்கையில் அவர் மீது ராஜதுரோக வழக்கு போட்டால் அது ஜனநாயகத்தின் முடிவையே குறிக்கும்’ என்றார்.

IN THE SUPREME COURT OF INDIA
CONTEMPT PETITION (CR) NO. 2/2001
IN THE MATTER OF:
J.R. PARASHAR AND ORS.
PETITIONERS
VERSUS
PRASHANT BHUSHAN AND ORS.
RESONDENTS

AFFIDAVIT IN REPLY ON BEHALF OF RESPONDENT NO. 1

I, Prashant Bhushan, son of Shanti Bhushan, resident of B-16, Sector 14, Noida, do hereby solemnly state and affirm as under:

நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது[5]: இதற்கிடையே, தனது பேச்சின் மூலம் எழுந்துள்ள சர்ச்சை குறித்து, அருந்ததி ராய், கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து செவ்வாய்க்கிழமை (26-10-2010) அறி்க்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “இங்குள்ள லட்சக்கணக்கான மக்கள்[6] தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். நானும் என்னைப் போன்ற விமர்சகர்களும் கடந்த பல ஆண்டுகளாக எழுதி வரும், பேசி வரும் கருத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். எனது பேச்சை முழுமையாகப் படித்தவர்களுக்கு, அது நீதிக்கான உரிமையின் குரல் என்பது புரியும். உலகின் மிகக் கொடூரமான ராணுவ ஆதிக்கங்களில் ஒன்றின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களின் நியாயத்துக்காக நான் பேசினேன்‘ என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ‘எழுத்தாளர்கள் தங்கள் மனம் திறந்து பேசுவதை இந்த அரசு அடக்க நினைப்பது பரிதாபமானது. மதவாதக் கொலைகாரர்கள், பெரிய நிறுவனங்களின் ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், ஆகியோர் சுதந்திரமாக நடமாடும் நிலையில், நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது‘ என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

IN THE SUPREME COURT OF INDIA
CONTEMPT PETITION (CR) NO. 2/2001
IN THE MATTER OF:
J.R. PARASHAR AND ORS.
PETITIONERS
VERSUS
PRASHANT BHUSHAN AND ORS.
RESONDENTS

AFFIDAVIT IN REPLY ON BEHALF OF RESPONDENT NO. 3

I, Arundhati Roy, daughter of Mary Roy, resident of 2A Kautilya Marg, New Delhi 110021, do solemnly state and affirm as under. I have received the showcause notice issued by the Supreme Court and I have read and understood the contents of the contempt petition in which this notice has been issued[7].

இவர்கள் எல்லோருமே, பெரிய பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தினரின் ஆதரவாளர்கள், தாங்களே முதலாளிகள் மற்றும் முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் கோஷ்டியினர் என்பதால், ஏதோ மக்களின் உரிமைக்குப் போராடுகிறொம் என்ற போர்வையில் செயல்படுவார்கள்.

ORIGINAL JURISDICTION

In the matter of

CONTEMPT PETITION (CRL) NO. 10 OF 2001

(Suo motu Contempt Proceedings under Rule 3(a) of the Rules to regulate proceedings for Contempt of the Supreme Court 1975 initiated on the basis of Affidavit dated 16.4.2001 filed on 17.4.2001 in Contempt Petition (Crl) No.  2/2001 titled J.R. Parashar and Others Versus Prasant Bhushan and Others.)

Affidavit in Response of the respondent/noticee

I, Arundhati Roy, daughter of Mary Roy, resident of 2A Kautilya Marg, New Delhi 110021, do hereby state and affirm as follows: That I have read and understood the contents of the Contempt Notice issued to me dated 5th September 2001 and my reply to it is as under[8]:

நோபல் பரிசுக்காக அலையும் சூஸன்னா அருந்ததி: “அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம் என்ற கருத்து அவருடையாக இருந்து வருகிறது. அவர் வரும் வேளையில் காஷ்மீர் பிரச்னை பெரியதாக வெடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.  மேலும்  காஷ்மீர் இந்து பண்டிட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ., பேசி வருவதும் நெருக்கடியை தருகிறது. தவிர புக்கர் பரிசு பெற்றவர் அருந்ததி ராய். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அது சர்வதேச அளவில் பேசப்படும் விஷயமாகி விடும்.  ஆகவே அருந்ததி ராய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவசரம் காட்டுவதா வேண்டாமா என்ற குழப்பம் அரசுக்கு ஏற்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன”[9], இப்படியெல்லாம் நினைக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய நிலையில், “பிரபலம் வேண்டும்” என்ரு வெறித்தனத்துடன் செய்யும் காரியங்களை நாட்டு நலனுடன் இணைத்து பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், சூஸன்னா அருந்ததி, அடுத்த நோபல் பரிசுக்காகவே இத்தகைய நாடகம் ஆடுகிறார் என்பது தெரிந்த விஷயமே. அடுத்த புத்தகம் காஷ்மீர போராளிகளைப் பற்றியதாம்! இலக்கு 2011!

வேதபிரகாஷ்

© 28-10-2010

 


 

[1] தினமலர், அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2010,23:27 IST, மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2010,00:09 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=114407

[2] ஆனால் உள்துறைக்கு தெரியாது என்று சொல்லிவிட்டது!

[3] முன்பு தமிழக போலீஸார் ஒரு காமுகனை – கற்பழித்து நிர்வான வீடியோ எடுத்தவனை – கைது செய்ய வேண்டும் எனும் போது, கருணாநிதியின் உத்தரவு பெற்றுதான் செய்தனரே, அதைப் போன்ற சமாச்சாரம் தான் இது. குற்றத்தின் தன்மையினை விட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலை தான் கருத்திற்கொள்ளப்படுகிறது.

[6] ஆனால், அதே நேரத்தில் லட்சக் கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்வது சூஸன்னாவிற்குத் தெரியவில்லையாம்!

[9] நன்றி-தினமலர் மற்றும் அதன் டில்லி நிருபர்