“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.

சட்டத்தை மீறும் நீதிகள்

இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.

இந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா?: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].

ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…

View original post 576 more words

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

3 பதில்கள் to ““இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.”

 1. M. K. Mahalakshmi Says:

  கருணாநிதி மீது வழக்கு : ஐகோர்ட்டில் தள்ளுபடி
  பதிவு செய்த நாள் : ஜூலை 13,2010,22:51 IST
  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38761

  சென்னை : “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது.

  இதுகுறித்து வக்கீல் ஆர்.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவின் விவரம்: சென்னை எழும்பூரில் உள்ள ஒரு சர்ச்சில், 2002 அக்டோபர் 24ம் தேதி மத மாற்ற தடை சட்டத்தை எதிர்த்து, சிறுபான்மையினர் நடத்திய கூட்டத்தில் அப்போதைய தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர், “இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று பேசினார். “இந்தப் பேச்சு இந்து மக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இருக்கிறது’ என்று கூறி, பிரேம்நாத் என்பவர், போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுப்படி, எழும்பூர் இன்ஸ்பெக்டர் கிரிமினல் வழக்கு பதிவு செய்ததால், வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் தன்மையை அறிய 2007 மே மாதம் 5ம் தேதி பார்த்த போது, அரசு உதவி வக்கீல் இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனு செய்திருந்தார். அதன் மீது மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்ததால், இந்த வழக்கு திரும்ப பெறப்பட்டு, வழக்கில் இருந்து கருணாநிதி விடுவிக்கப்பட்டிருந்தார்.

  இதை எதிர்த்து, வழக்கை திரும்ப நடத்தும்படி ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டது. இந்த வழக்குக்காக ஐகோர்ட் வாய்தா விதித்தபோது, ஆஜராக முடியவில்லை. இதனால், ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடியானது. இதுபோன்ற நடவடிக்கையில் 25 நாட்களுக்குள் மீண்டும் விசாரிக்குமாறு கோரலாம். அதனடிப்படையில், தள்ளுபடி செய்து வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எலிப் தர்மாராவ், சசிதரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் அடுத்து டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவில், “இந்த வழக்கின் வாய்தா 2009 ஜூலை மாதம் 21 மற்றும் 23ம் தேதி, செப்டம்பர் 21ம் தேதி மற்றும் அக்டோபர் 12ம் தேதிகளில் வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜராகவில்லை. இதுகுறித்து கூறும் காரணங்கள் முறையாக இல்லை. காலதாமதத்திற்கான வேண்டுகோளை ஏற்க முடியாது; அதற்கான காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

  • K. T. Narayayanaswamy Pillai Says:

   இந்து அமைப்பினர் அனைவரும் இவ்வழக்கை சிறப்பாக நடத்த வேண்டும்.

   இதனை உச்சாநீதி மன்றம் வரை எடுத்துச் சென்று ஒரு முன்மாதிரியாக்க வேண்டும்.

   நாளைக்கு இம்மாதிரியானவர்கள் இவ்வாறு பேசும் முன்னர் யோசிக்கும் படி தீர்ப்பு அமைய வேண்டும்.

   அதற்காக கருத்துருவாக்க வேண்டும். ஆவணங்களை உரிய முறையில் நீதி மன்றத்தில் சமர்ப்பித்து, சட்ட நுணுக்கங்களுடன், எவ்வாறு –
   # ஒரு முதலமைச்சர்,
   # கட்சியின் தலைவர்
   # மூத்த அரசியல்வாதி
   # தமிழில் வல்லவர்
   …………………………………………..
   என்றெல்லாம் தகுதிகளைக் கொண்ட பொறுப்பானவர், அவ்வாறு இந்துக்களைத் தொடர்ந்து தூஷித்துள்ளார் என்பதனை நிறுபீக்க வேண்டும்.

   பார்ப்போம், கவுதமன் என்ற வாதி என்ன செய்வார் என்று.

 2. K. T. Narayayanaswamy Pillai Says:

  இந்த மண்ணிலேயே பிறந்து, இத்தாய்நாட்டு நீரைப் பருகி, காற்றை சுவாத்து, இம்மண்ணில் விளைந்தவற்றை உண்டு, …………பலன்களை அனுபவித்து, வயதாகியும், பக்குவப்படாமல், சிறுப்பிள்ளைத்தனத்தை விட கேவலமாக, சொந்தத் தாயை வேசி, விபச்சாரி என்று சொல்லக்கூடிய தன்மையுள்ள இவர்களை என்னென்பது?

  அண்ட வந்த பிறமதத்தினரின் காலகளை அடிவருடி, வாழும் நாய்கௐளை விட கேவலமான பதர்களை எப்பெயரில் அழைப்பது?

  இந்திய கலாசார, நாகரிக, பண்பாட்டு, பாரம்பரிய சின்னங்களை, தொடர்புடைய காரணிகளை அழித்து, ஒழித்தக் கயவர்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டு அவர்களை விட மோசமாக நடந்து கொள்ளும் உன்மத்தர்களை ஒருவேளை இவ்வாறு அடையாளம் காணுவார்களா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: