Posts Tagged ‘பாஸ்டன்’

திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால், குழந்தை பெற்று கொள்ள ஆசை!

பிப்ரவரி 22, 2023

திருமணம் பற்றி ராகுல் காந்தி மறுபடியும் பேசியது – திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, ஆனால், குழந்தை பெற்று கொள்ள ஆசை!

கொரியர் டெல்லா சேரா என்ற இத்தாலி நாளிதழில் வெளிவந்த ராகுல் காந்தியின் பேட்டி (1-02-2023): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி [52 வயதான] இத்தாலி நாட்டைச் சேர்ந்த நாளிதழ் ஒன்றுக்கு [ Italian daily “Corriere della Sera”] பேட்டி அளித்துள்ளார்[1]. இப்பேட்டி பிப்ரவரி 1, 2023 அன்று முழுபக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த பேட்டியில் தனது திருமணம், பாரத் ஜோடோ யாத்திரை, 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவை குறித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்[2]. ஆனால், இந்திய ஊடகங்களில் சுருக்கமாக வெளிவந்துள்ளது எனலாம். ராகுலின் திருமணம் பற்றி அடிக்கடி இத்தகைய கேள்விகள், செய்திகள் மற்றும் குசுகுசுக்கள் கடந்த 25 ஆண்டுகளாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. பல பெண்களுடன் இருப்பது போன்ற புகைப் படங்கள், அவர்கள் தான் காதலி, கார்ள்-பிரென்ட், வருங்கால மனைவி, திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார், திருமணம் செய்து கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது வரை ஒப்புக்கொண்ட-ஏற்றுக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை.

பல இடங்களில் படித்தவர்: இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போது வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி ஜூன் 19, 1970 அன்று புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தலைவரான மோதிலால் நேரு ஆவார். இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர். 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார். மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். இவர் 1995 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரி, கேம்பிறிஜில் ஆய்வியல் பட்டம் பெற்றார்.

ரகசியமாக வேலை செய்தவர்-காதலித்தவர்: ராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் [the Monitor Group[3], a management consulting firm, in London] மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002-ன் பிற்பகுதியில் மும்பை திரும்பினார். 2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் வைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.

இத்தாலிய உறவுகளை மறக்காதவர்: 52 வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு ராகுல் காந்தி, “விசித்திரமாகத்தான் இருக்கிறது. நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன. இருப்பினும் எனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை உள்ளது. குழந்தைகள் பெற விரும்புகிறேன்” என்றார்[4]. எங்கள் குடும்பத்தில் இந்திய பாட்டியான இந்திரா காந்திக்கு என் மீது பாசம் அதிகம்[5]. இத்தாலி பாட்டிக்கு பிரியங்கா மீது பாசம் அதிகம்[6]. இத்தாலி பாட்டி பாவ்லோ மைனோ [Paola Maino] 98 வயது வரை வாழ்ந்து கடந்தாண்டு தான் மறைந்தார்[7]. கடந்த வருடன் 2022 ஆகஸ்ட் மாதத்தில் காலமானார் . இத்தாலி பாட்டியுடன் மிகுந்த பாசத்துடன் இருந்தேன். என் பாட்டியுடன் மிகவும் பாசத்துடன் இருந்தேன். அதே போல மாமா வால்டர் மற்றும் அவரின் மகன்களிடமும் பாசமாக இருந்தேன்… என்று குறிப்பிட்ட ராகுல்[8], “இந்திய ஒற்றுமை யாத்திரை முடியும் வரை தாடியை எடுக்க கூடாது என்று முடிவு செய்தேன். அதனால் தான் தாடியுடன் உள்ளேன். இனி தாடியை வைத்திருக்கலாமா அல்லது எடுக்கலாமா என்று முடிவு செய்வேன்” என தாடி ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்[9].

இந்திய அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவா் அளித்த பதில்[10]: இந்தியாவில் ஏற்கெனவே ஃபாசிஸம் உள்ளது[11]. ஜனநாயக அமைப்புகள் நிலைகுலைந்துள்ளன. நாடாளுமன்றம் செயல்படுவதில்லை. அதிகார சமநிலை இல்லை. நீதித் துறை சுதந்திரமாக இல்லை. அனைத்து செயல்பாடுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஊடகம் சுதந்திரமாக இல்லை. கருத்து சுதந்திரம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகள், நிறுவனங்களில் ஆா்எஸ்எஸ்ஸின் ஹிந்து பயங்கரவாதிகள் ஊடுருவி, அவற்றைக் கட்டுப்படுத்தி வருகின்றனா். இந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனா். அவா்களால் தங்கள் எதிர்காலத்தைப் பார்க்க முடியவில்லை. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், பிரதமா் மோடியை 100 சதவீதம் தோற்கடிக்க முடியும். மாற்றுக் கண்ணோட்டத்தை முன்வைப்பதன் மூலம் ஃபாசிஸம் தோற்கடிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். வரும் தேர்தலில் பிரதமர் மோடி நிச்சயம் தோற்று போவார் என்று சொல்லவில்லை. அதேவேளை, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்தால் 100 சதவீதம் அவர்களை தோற்கடிக்கலாம். நாட்டின் ஜனநாயக அமைப்புகளில் பாசிசம் ஊடுருவிவிட்டது. நாடாளுமன்றம் முறையாக செயல்படுவதில்லை.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெளி நாட்டு உறவுகள் பற்றிக் குறிப்பிட்டது: உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தை பொறுத்தவரை நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை[12]. அது வெளியுறவுக்கொள்கை சார்ந்தது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு காண்பது அவசியமானது[13]. சீனாவால் மேற்கத்திய நாடுகளால் தொழில்துறையில் போட்டியிட இயலாது. ஆனால், இந்தியாவால் அது முடியும்” என்றார். ராகுல் காந்தி 164 நாட்கள் நாடு தழுவிய நடைபயணத்தை அன்மையில் மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் கடந்த மாதம் 30ஆம் தேதி காஷ்மீரில் நிறைவுற்றது. பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்ற ராகுல் காந்தி, கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்த நிலையில் தனிப்பட்ட பயணமாக ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் சென்றுள்ளார். அதே நேரத்தில் கேம்பிரிட்ஜில் பேசப் போகிறார், சீனாவைப் பற்றி ரகசியமாக பேசப் போகிறார், என்றெல்லாம் செய்தி வந்துள்ளது.

© வேதபிரகாஷ்

22-02-2023.


[1] நியூஸ்.18.தமிழ், சிங்கிளாக இருப்பது ஏன்?… தாடி ரகசியம்மனம் திறந்த ராகுல் காந்தி..!, NEWS18 TAMIL First published: February 22, 2023, 09:07 IST, LAST UPDATED : FEBRUARY 22, 2023, 09:34 IST.

[2] https://tamil.news18.com/news/national/rahul-gandhi-answers-about-his-marriage-plans-in-an-interview-to-italian-news-media-896290.html

[3] Monitor Deloitte is the multinational strategy consulting practice of Deloitte Consulting. Monitor Deloitte specializes in providing strategy consultation services to the senior management of major organizations and governments.

[4] மாலைமலர், இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: ராகுல் காந்தி பதில், By மாலை மலர், 22 பிப்ரவரி 2023 8:15 AM

[5] https://www.maalaimalar.com/news/national/why-not-married-yet-rahul-gandhi-answers-575262

[6] தமிழ்.வெப்.துனியா, குழந்தை பெற்று கொள்ள ஆசை…..ராகுல் காந்தி பேட்டி…!, செவ்வாய், 21 பிப்ரவரி, 2023 20:49 IST

[7] https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/rahul-gandhi-says-about-marriage-and-child-123022100079_1.html

[8] தமிழ்.ஏபிபி.லைவ், Rahul Gandhi: “திருமணம் நடக்காதது ஏன் என தெரியவில்லை; ஆனால் இந்த ஆசை இருக்கு” – மனம் திறந்த ராகுல் காந்தி!, By: ஆர்த்தி | Updated at : 22 Feb 2023 12:39 PM (IST), Published at : 22 Feb 2023 12:39 PM (IST)

[9] https://tamil.abplive.com/news/india/former-congress-president-rahul-gandhi-has-mentioned-in-an-interview-to-a-private-daily-that-he-is-not-married-but-wants-to-have-children-103132

[10] தினமணி, திருமணம் செய்யாதது விசித்திரம்! – ராகுல் காந்தி பேட்டி, By DIN  |   Published On : 22nd February 2023 12:26 AM  |   Last Updated : 22nd February 2023 12:26 AM

[11] https://www.dinamani.com/india/2023/feb/22/i-was-indian-grandmothers-favourite-priyanka-italian-grandmothers-rahul-4005068.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, குழந்தைகளை பிடிக்கும்திருமணம் எப்போது? இத்தாலி நாளிதழில் ராகுல் ஓபன் டாக்.. மோடி பற்றியும் பேச்சு, By Mani Singh S, Published: Tuesday, February 21, 2023, 21:12 [IST.

[13] https://tamil.oneindia.com/news/delhi/i-would-like-to-have-children-rahul-gandhi-interview-to-the-italian-daily-499794.html

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

ஓகஸ்ட் 9, 2013

ராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)

Ragul Gandhi absolved of rape case IE Photo

பிரமச்சாரியாக  இருந்து  தியாகம்  செய்யவே  திருமணம்  செய்து  கொள்ளாமல்  இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Rahul in Bhopal

காங்கிரஸ்  செயலாளர்  சியோராஜ்  ஜீவன்  வால்மீகியின்  புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்திற்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].

Rahul Gandhi meets potential Youth Congress candidates

குடும்ப  அரசியல்  மற்றும்  பரம்பரை  ஆட்சிமுறையைத்  தவிர்ப்பதற்காகவே  காங்கிரஸ்  துணைத்தலைவர்  ராகுல்  திருமணம்  செய்து  கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5].  பின்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].

Meenakshi Natarajan.3

वाल्मीकि ने प्रेस कॉन्फ्रेंस में राहुल गांधी को लेकर दावा किया, ‘वह महान आदमी हैं और उन्होंने काफी बलिदान दिया है। यही वजह है कि उन्होंने शादी न करने का फैसला किया है। यहां तक कि अटल बिहारी वाजपेयी ने भी शादी नहीं की थी।’ हालांकि, जब उनसे पूछा गया कि क्या खुद राहुल गांधी ने शादी न करने की बात उनसे कही है तो वाल्मीकि ने यू-टर्न ले लिया। वाल्मीकि ने कहा, ‘मैं राहुल गांधी से नहीं मिला हूं। मैंने ये बातें अखबारों में पढ़ी हैं। यह बात गलत भी हो सकती है।’

Meenakshi Natarajan with Rahul.2

மோடியும் பிரமச்சாரி தானே?: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ? இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. Rahul Gandhi-with Nandita Das-2009-TOI photoநிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார். rahul-gandhi-girlfriend-veroniqueஇந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று தெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.

Rahul Gandhi-with Nandita Das-2009-another angle

கடந்த  மார்ச் –  ஏப்ரல்  மாதங்களிலும்  ராகுலே  இத்தகைய  விளக்கம்  கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்?”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன?

வேதபிரகாஷ்

© 09-08-2013


[2] Walmiki praised Gandhi as a “great person” who has made a lot of sacrifices. He also cited the example of Atal Bihari Vajpayee, the former BJP prime minister, who did not marry.

http://news.oneindia.in/2013/08/08/pm-poverty-marriage-whats-rahul-gandhis-state-of-mind-1278663.html

[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு,  பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST

[6] Talking to reporters here, Valmiki first said that Rahul had vowed that he would not marry in order to prevent “vanshwad” (dynastic rule).  However, when asked to repeat his statement, he refused to do so and instead apologized. “I read it somewhere that he (Rahul) had said that he will not marry so as to prevent dynastic rule,” Valmiki said. He later apologized and said, “I may be wrong and therefore want to apologize.”

http://timesofindia.indiatimes.com/india/Congress-leader-courts-controversy-over-Rahuls-marriage-regrets/articleshow/21683376.cms

[8] Recently, Rahul said he did not want to get married. “If I get married and have children, then I will become a status quoist and will be concerned about bequeathing my position to my children,” he said. The news of Rahul getting married has broken the hearts of many men in India.

http://news.oneindia.in/2013/04/01/rahul-gandhi-breaks-brahmachari-vrat-getting-married-1183624.html

[9]  He also let his secret of not marrying as a footnote, while leaving his chair.  “Once one is married, his outlook changes as he has to devote time to raise the family and also take care of adjusting the family members, about the future of children,” he quipped. He added: “Maybe I am not marrying so that I have no ‘swarth‘ (self-interest).”

http://www.dnaindia.com/india/1807750/report-not-getting-married-in-interest-of-party-nation-rahul-gandhi

[11] Last week while touring his constituency Amethi, Rahul came across one of his supporters, Devi Prasad, who asked him what even those close to the Gandhi parivaar probably wouldn’t dare to ask: When will Amethi get a royal bahu? He got a short and sweet reply from Rahul Gandhi – ‘soon’. With a smile.

http://wonderwoman.intoday.in/story/whod-be-the-perfect-mrs-rahul-gandhi/1/87842.html

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

ஏப்ரல் 25, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)

அமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].

மதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.

காஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.

ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்:  இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது.  அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].

தமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன? தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.

இதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

வேதபிரகாஷ்

24-04-2013


[4] http://islamindia.wordpress.com/2009/10/17/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%A9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/

http://islamindia.wordpress.com/2010/02/18/%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

http://islamindia.wordpress.com/2010/02/26/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/

[10] Praveen Swami, Riyaz Bhatkal and the origins of the Indian Mujahidin, CTC Sentinel, May 2010, Vol.3, Issue.5, pp.1-5.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

ஏப்ரல் 24, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (2)

Bangalore blast - graphical figure

அமெரிக்கஜனாதிபதியும், இந்தியஜனாதிபதியும்: அமெரிக்க ஜனாதிபதி, ஒவ்வொரு நாளும், ஏன் குறிபிட்ட நேரத்தில் ஒரே நாளில் பலமுறை கக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். நாட்டுப்பற்றை ஊக்குவித்து அமெரிக்கர்கள் எல்லோரும் தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனால் தான் தீவிரவாதிகளைப் பிடித்தபோது (ஒருவன் கொல்லப்பட்டான், ஒருவன் பிடிபட்டான்) மக்கள் அந்த அளவிற்கு மகிழ்சியோடு ஆர்பரித்தனர்.  ஆனால், இந்திய ஜனாதிபதி பெங்களூரில் குண்டு வெடித்தபோது, பிரணப் முகர்ஜி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. 17-04-2013ல் அவரது ராஜிய வெசைட்டில் ஒன்றையும் காணோம்[1]. சரி, ஜனாதிபதிதான் இப்படி என்றல், பிரதம மந்திரி என்ன செய்து கொண்டிருந்தார் என்று பார்த்தால், 16-04-2013 அன்று பாஸ்டன் குண்டு வெடிப்பைக் கண்டிக்கிறார்[2]:

 

PM condemns Boston bombings

The Prime Minister, Dr. Manmohan Singh condemned the Boston terrorist attack and expressed his solidarity with the American people in the struggle against terrorism. In a message to President Obama the Prime Minister assured all help in the investigations.

The text of PM’s message is as follows:

“I am deeply shocked and saddened by the outrageous terrorist attack in Boston yesterday. This senseless and cowardly act of violence has struck a city that has long stood as the symbol of openness, learning, innovation and enterprise.

The people of india join me in condemning the attack in the strongest terms. We stand in solidarity and sympathy with the bereaved families, the injured and the people of the United States.

The attack serves as a tragic reminder of the evil of terrorism that still threatens our nations and lurks in our cities. At the same time, it redoubles our resolve to remain unrelenting in our efforts to defeat terrorism and to defend and uphold the values that define our nations.

Mr. President, in keeping with the excellent cooperation between India and the United States to combat terrorism, we offer you our full support for the investigations into the attack.

 

17-04-2013 அன்று பாகிஸ்தானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[3]:

PM condoles the loss of lives in the earthquake in Pakistan

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Pakistan.

Dr. Manmohan Singh sent his condolence message to President Zardari of Pakistan.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“I was deeply saddened to learn of the damage and loss of life caused in Pakistan following the earthquake that struck the eastern region of Iran yesterday. While the reported magnitude of the earthquake is large, it is our sincere hope that its impact has been minimal. Our thoughts and prayers are with all those who have lost their dear ones, sustained injuries or suffered damage to their property. I am confident that under your leadership, your government and the people of Pakistan will come together to respond quickly and effectively to the natural disaster and help people rebuild their lives.”

 

 

அதே 17-04-2013 அன்று ஈரானில் நிகழ்ந்த பூகம்பத்திற்காக வருத்தம் தெரிவிக்கிறார்[4]:

PM condoles the loss of lives in Iran earthquake

The Prime Minister has condoled the loss of lives and destruction in the earthquake in Iran.

Dr. Manmohan Singh in a message, to President Ahmadinejad of Iran, offered all possible assistance to Iran in the relief efforts.

Excerpt of the Prime Minister’s message is as follows:

“It is with deep sorrow that I learnt about the earthquake that struck the eastern region of Iran today.

The people of India join me in conveying our deepest condolences for the the loss of life, injury and destruction of property as a result of this natural disaster. Our thoughts and prayers are with the people of Iran. I am confident that with the support of your government, the people of Iran will respond to this tragedy with their characteristic resolve and resilience and will succeed in restoring normalcy quickly.

We are prepared to provide all assistance within our means to support your efforts to provide relief to the affected people.”

 

அடுத்த நாள் 18-04-2013 அன்று ராமநவகிக்காக வாழ்த்துத் தெரிவிக்கிறார்[5]:

 

PM greets people on the occasion of Ram Navami

The Prime Minister, Dr. Manmohan Singh, has greeted the people on the auspicious occasion of Ram Navami.

In a message, the Prime Minister described the festival as a celebration of Lord Ram’s life of righteousness and truth.

We should  renew our commitment to these ideals on this occassion, the Prime Minister added.
 

 

ஆனல் பெங்களூர் வெடிகுண்டு வெடிப்பைப் பற்றி மூச்சுக்கூட விடக் காணோம். மேலும் இவையெல்லாம் சுருக்கம் தானாம், அப்படியென்றால், முமையாக எவ்வளவு எழுதி ஒப்பாறி வைத்தார் என்று தெரியவில்லை.

Manmohan-tweets-not-for-India

இதை ஊடகங்களும் எடுத்துக் காட்டவில்லை. ஒரேயொரு ஊடகம் தான் எடுத்துக் காட்டியிருக்கிறது[6]. இப்படி ஒரு ஜனாதிபதி / பிரதம மந்திரி இந்நாட்டிற்குத் தேவையா என்று மக்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. கொஞ்சமும் சுயபுத்தியில்லாத, சுரணையில்லாத, மரத்துப் போன கட்டையும் விட கேவலமான ஒரு மனிதர் போல இப்படி இருப்பது ஏன்? மன்மோஹன் சிங் சாதாரணமான ஆள் அல்ல, மிக்கப் படித்தவர், பெரிய மேதை, அதிகமான அறிவு கொண்டவர். ஆனால், இப்படியிருப்பதற்கு காரணம் அவரே ஒப்புக் கொண்டு சோனியாவிற்கு அடிவருடும் அடிமையாக, தலையாட்டும் கைப்பாவையாக, வாலோட்டும் நாயாக இருக்கிறர் என்பதுதான் உண்மை.

Rahul in party mood during Mumbai attack2

வருங்காலபிரதமமந்திரிராஹுல்என்னசெய்துகொண்டிருந்தார்?: முன்பு 26/11 போது, ராஹுலிடம் கருத்துக் கேட்க ஊடகங்கள் முயன்ற போது, அவரைக் காணவில்லை. ஏதோ ஒரு பார்ட்டியில் இருந்ததாகச் சொல்லப் பட்டது. ஊடகங்களில் சில செய்திகளும் அவ்வாறே வந்தன. பிறகு அடுத்த நாளில், பாராளுமன்றத்தில் வந்து உளறிக் கொட்டினார்.இப்பொழுதும், அதே வேலையில் தான் ஈடுபட்டுள்ளார். மேலாக கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல், 26/11ற்காக ராஹுல் பிரமாதமாக வேலை செய்தார், வெட்டினார், பிரட்டினார் என்று உளறியிருக்கிறது மிலிந்த் தியோரா[7] என்ற சிங்கக்குட்டி[8]. ராஹுல் கர்நாடகத்தில் இருந்தாலும், பிஜேபி கர்நாடகத்தை ஐந்து ஆண்டுகளில் கொள்ளையடித்தது என்று பேசியுள்ளார்[9]. அதனால், சந்தோஷமாகத்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. அதனால், இப்படியொரு குண்டைப் போட்டிருக்கிறார். இதைவிட கேவலம் என்னவென்றால், சைனா எல்லைகளில் ஊடுருவியுள்ள நேரத்தில் அதைப்பற்றிக் கூட கவலைப்படாமல், சைனாவையும் பிஜேபியையும் இணைத்து பேசியது அசிங்கமாகவே உள்ளது[10]. லாயக்கற்ற இவர் தனது பேடித்தனத்தை மறைக்க இப்படி பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

Rahul in party mood during Mumbai attack

எப்.பி..யும், சி.பி.ஐயும்: அமெரிக்காவில் எப்.பி.ஐ இந்தியாவில்  சி.பி.ஐ என்றுள்ளன. பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களை மணிக்கு-மணிக்கு தனது இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்து வந்தது, இன்னும், கொடுத்து வருகின்றது. ஆனால், சி.பி.ஐ.யின் இணைத்தளத்தைப் பார்த்தால் தமாஷாக இருக்கிறது. ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு மறுப்புச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதே ஜனாதிபதி / பிரதம மந்திரி பங்குக் கொண்ட நிகழ்சிகளைப் பற்றி விவரிக்கும் வரைவுகள், புகைப்படங்கள் உள்ளன. ஆனால், பெங்களூரு குண்டுவெடிப்புப் பற்றி ஒன்றையும் காணோம். தனக்கு அந்த வேலைக் கொடுக்கவில்லை எனலாம். ஆனால், கொடுத்தாலும், சோனியா சொன்னால் தான் செய்வேன் என்ருதானே இருக்கும்.  எப்.பி.ஐ மாதிரி ஒரே வாரத்தில் எதையாவது கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையோடு நிறுத்தியிருக்கிறார்களா?

ied-cutout01

மத்தியஅரசும், மாநிலஅரசுகளும்: அடுத்தது, இதெல்லாம் மாநில அரசுகளின் பிரச்சினை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று மத்திய அரசு கூறித் தப்பித்துக் கொள்ளும் அதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் என்று வரிசையாக இருந்து கொண்டு பதில் சொல்ல தயாக உள்ளார்கள். இல்லை, தேசிய புலனாய்வுக் கழகம் உள்ளது, அது பார்த்துக் கொள்ளும் என்று விளக்கம் அளிக்கும். மாநில அரசோ, மட் ஹ்திய அரசு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டும். இங்கோ, கேட்கவே வேண்டாம், பிஜேபி ஆட்சிய்ல் இருப்பதால், ஒருவேளை காங்கிரஸுக்கு சந்தோஷமாக கூட இருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், ஜனாதிபதி / பிரதம மந்திரி அப்படி ஊமைக் கோட்டான்களாக, குருடர்களாக, செவிடர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களது மந்திரிகள், மற்ற கட்சிக்காரர்கள் மோசமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

IED - cycle bombs placed - locations

மத்தியஉள்துறைஅமைச்சர்மாநிலஅரசுகளைகுறைகூறுகிறார்: இவ்விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அப்படித்தான் நடந்து கொள்கிறர், பேசுகிறார். 21-04-20132 அன்று லோக் சபாவில் பேசும்போது, அம்மோனியன் நைட்ரேட்டின் உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தாம் தங்களது அதிகாரிகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளச் செய்ய வேண்டும்[11]. அப்பொழுதுதான், அதன் துஷ்பிரயோகத்தைத் தடுக்க முடியும்[12].  இதில் வேடிக்கையென்னவென்றல், அத்தகைய கட்டுப்பாடு சட்டமே 2012ல் தான் உன்டாக்கியிருக்கிறார்கள். அதனால், அதற்கு முன்பான சட்டமீறல்கள் தப்பித்துக் கொள்ளும். இப்ப்டி சட்ட்டங்களே தீவிரவாதிகளுக்கு உதவும் வண்ணம் அமூலாக்கும் போதும், மத்திய அரசு பாதுபகாப்பு இயக்கங்களை, முறைகளை அரசியல்ரீதியிலாக ஆளும் கட்சி, அதாவது காங்கிரஸுக்கு சாதகமாக உபயோகப்படுத்தும் போது, தேசிய பாதுகாப்பே கேள்விக் குறியாகிறது. இவரே அத்தகைய துஷ்பிரயோகத்தைச் செய்து வரும்போது, மாநில அரசுகளை குறைகூறுவது வியப்பாக இருக்கிறது. இதுதான் இந்தியாவின் – இந்திய ஆட்சியாளர்களின் – காங்கிரஸ்காரர்களின் லட்சணமாக இருக்கிறது.

manmohan-singh-scam

சோனியாஏன்காங்கிரஸ்கரர்களைபொம்மைகளாகவைத்திருக்கிறார்?: காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பதவி மற்றும் தனிநபர் என்று பிரித்துப் பார்த்து முறையோடு இருக்க தெரியவில்லை என்று தெரிகிறது. மன்மோஹன் சிங் ஒரு தனி நபர், இந்தியர். அந்த முறையில் ஒரு இந்தியனுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் இருக்க வேண்டும். அவர் பிரதம மந்திரி எனும் போது, அவரது கடமைகள் அதிகமாகின்றன. ஆனால், சோனியாவிற்கு அடங்கி நடப்பதால், ஒரு பிரயோஜனமும் இல்லாத பிரதம மந்திரியாக இருக்கிறார். சரி, தனி நபராக எப்பொழுதுவாது செய்ல்படுகிறாரா, செயல்பட்டிருக்கிறாரா என்றால் இல்லை. அப்படியென்றால், சோனியா அவரை அந்த அளவிற்கு ஆட்டிப்படைப்பது எவ்வாறு, எப்படி. இதேபோலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்கள்.

 

வேதபிரகாஷ்

23-04-2013


[7] During and after 26/11, Rahul Gandhi took an active role in the efforts of the government to contain the fallout of one of India’s worst-ever terror attacks, said Milind Deora.

[10] Chiding the BJP government for its alleged role in illegal export of iron ore, Gandhi said, “your iron ore is being sold to China and they (BJP government) are earning crores of Rupees.” ….”But this (resource) is yours. Steel factories should be established here. It is steel which should go to China. Instead they are looting this (iron ore) to sit in Vidhan Sabha”.

http://timesofindia.indiatimes.com/india/BJP-has-looted-Karnataka-Rahul-Gandhi/articleshow/19694585.cms

[11] Noting that the Ammonium Nitrate Rules 2012 has been put in place to check its illegal trafficking and stockpiling, Union Home Minister Sushil Kumar Shinde told the Lok Sabha that misuse of the chemical could not be stopped, unless the states law-enforcement officials kept track of it more effectively.

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

ஏப்ரல் 23, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)

Boston-marathon-bombing-headline

பாஸ்டன்முதல்பெங்களூருவரைதீவிரவாதத்தைஅமெரிக்காவும்இந்தியாவும்அணுகும்முறைகள்:

  • 17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.
  • இன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.
  • இன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
  • 15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.
  • 22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.
  • அதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

Boston bomber - alert notice

பாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.  இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

boston-marathon-suspects

குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.

Boston bomber - a believer of Islam

தேசபக்திநாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tamerlan Tsarnaev as a boxer

பாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.

Boston-Marathon-bombing-suspect-No.-2-in-crowd

வீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

boston-marathon-bombing-injuries-hard-to-treat-shrapnel

கால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Location of boston_marathon bombings

தப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.

Boston bomber - hiding in a boat aerial view

சந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.

Boston-marathon-bombing-suspect-dzhokhar-tsarnaev-captured

விரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

boston blast victim a woman

குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

1)       April 15, 2:50 pm – Bombing attacks at the finish line of the marathon.2)   April 18, 10:30 pm – MIT police officer Sean Collier shot and killed.

3)   April 18, 11:00 pm – SUV hijacked by Tsarnaev brothers.

4)   April 18, shortly thereafter – SUV driver released unharmed.

5)   April 18, 11:18 pm – Surveillance photos identify brothers at an ATM.

6)   April 19, 1:00 am – Gunfire opens up on Laurel Ave. in Watertown between police and suspects. Tamerlan Tsarnaev is critically injured in the incident and later reported dead. Dzhokhar Tsarnaev escapes.

7)   April 19, 7:00 pm – More gunfire breaks out in Watertown, on Franklin St.;

Dzhokhar is found hiding in a stored boat and taken into custody.

இவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும்  பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

வேதபிரகாஷ்

22-04-2013


[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html

[5] தினமலர், பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2013,07:49 IST; மாற்றம் செய்த நாள் : ஏப்ரல் 20,2013,08:55 IST, http://www.dinamalar.com/news_detail.asp?id=694915