Posts Tagged ‘முஸ்லீம் செக்ஸ்’

ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு!

மார்ச் 4, 2011

ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு:

ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு: பி. கே. குன்ஹாலிக்குட்டி என்பவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முக்கியமான தலைவர். அவர் இப்பொழுது மற்றொரு குற்றச்சாட்டிற்குட் பட்டுள்ளார். ஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு கேரளாவில் மிகவும் பிரசித்தியானது. கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லர் விபச்சாரத்தின் திரையாக உபயோகப்பட்டு வந்தது. இங்கு வரும் இளம்பெண்களை மயக்கி, விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தனர். அவ்வாறு பாதிக்கப் பட்ட பெண் ஒருத்தி கொத்தமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்ததால், இது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு என்றும் அழைக்கப் படுகிறது[1]. அதுமட்டுமல்லாத அந்த பாதிக்கப் பட்ட பெண் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலில் புணர்ச்சிகளுக்குட் பட்டு, கொத்தமங்கலத்தில் ஒரு வீட்டில் கிடந்தாள். அக்டோபர் 5, 1997 அன்று ஒரு இளம்பெண் தன்னை பலர் பாலியல் ரீதியில் வன்புணர்ச்சியில் ஈடுபட்டனர் என்று புகார் கொடுத்தாள். அதன் பிறகு அவள் அடையாளங்காட்டிய 43 பேர் குற்றஞ்சாட்டப் பட்டு, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அந்த ஏழுபேர்களில் ஒருவர் தான் இந்த குன்ஹாலிக்குட்டி(Kunhalikutty).

1997 லிருந்து 2011 வரை நடந்த விவகாரங்கள்[2]: இதுவரை நடந்துள்ள விவகாரங்கள்:

1997: ஐஸ்கிரீம் பார்லரை முகப்பாக வைத்துக் கொண்டு கோழிக்கோட்டில் செக்ஸ் / விபச்சாரம் நடப்பதாகவும், அதில் கேரளாவின் பெரிய அதிகாரிகள் மற்றும் மந்திரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால்[3], அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வேஸி என்ற அரசு சாரா நிறுவனம், அப்போதைய கேரள முதன் மந்திரி ஈ.கே. நாயனாரிடம்[4] புகார் கொடுத்தது.

1998: ரெஜினா என்ற பாதிக்கப் பட்ட பெண் ஒருத்தி, எப்படி, குன்ஹாலிக்குட்டி என்ற மந்திரி தன்னை பாலியல் ரீதியாக புணர்ந்தார் என்று விவரித்து, ஒரு வாக்குமூலம் கொடுத்தாள்.

1999: திடீரென்று ரெஜினா தன்னுடைய வாக்குமூலத்தை மறுத்தாள்[5]. இதனால், குன்ஹாலக்குட்டி, இந்த வழக்கில் ஒரு சாட்சியாக ஆஜரானார்.

2003: உள்ளூர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப் பட்ட அனைவரையும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்தது.

2004: ரெஜினா மறுபடியும் குன்ஹாலக்குட்டியின் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றாள். தான் பயமுறுத்தப் பட்டதாலும், பண ஆசை காட்டியதாலும் தான் அவ்வாறு முரண்பட்ட வாக்குமூலத்தைக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டாள்.

2005: இதனால், குன்ஹாலக்குட்டி, ஒமன் சாண்டி அரசிலிருந்து, ராஜினாமா செய்தார்.

2006: உச்சநீதி மன்ற இவ்வழக்கை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.

2011: குன்ஹாலக்குட்டி-ரௌஃப் பிரச்சினையால், மறுபடியும் இவ்வழக்கு அனைவரது கவனத்தை ஈர்த்த்துள்ளது.

குற்றஞ்சாட்டப் பட்ட குன்ஹாலிக்குட்டி தப்பியது: இவர் என்ற தொழிற்துறை அமைச்சரரக இருந்தார், இந்த செக்ஸ் வழக்கினால் பதவி 2005ல் விலக நேர்ந்தது. ஐஸ் கிரீம் பார்லருக்கு வரும் இளம்பெண்களை மயக்கி செக்ஸில் ஈடுபடுத்தி வந்த வழக்கில், பாதிக்கப் பட்ட பெண் ஒருத்தி இவரது பெயரைக் குறிப்பிட்டதால், ராஜினாமா செய்யவேண்டியிருந்தது. இருப்பினும், பிறகு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று, அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப் பட்டார். அப்பொழுது குன்ஹாலிக்குட்டி அப்பெண்ணிற்கு பணம் கொடுத்துதான், தப்பித்துக் கொண்டார், என்று சொல்லப் பட்டது.

குன்ஹாலிக்குட்டியின் மீதுள்ள குற்றச்சாட்டுகள்: அதுமட்டுமல்லாது, உள்ளூர் ஆஸ்பத்திரிலிருந்து அப்பெண் மனநிலை சரியில்லலதவர் என்று சான்றிதழ் பெற்றது, பொய்யான சுய-வாக்குமூலங்களைப் பெற்றது, குன்ஹாலிக்குட்டியின் டைரியில் பிரயாணங்களைப் பற்ரிய விவரங்களை திருத்தியது, என ஆரம்பித்து, இப்பொழுது நீதிபதிகளுக்கே பணம் கொடுத்து சாதகமான தீர்ப்பு வாங்கியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. ரெஜினா என்ற பெண்ணின் வாக்குமூலத்தில், குன்ஹாலிக்குட்டியின் செயல்கள் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. அதன் பிரதி / நகல் கேரள பெண்கள் கமிஷனிடம் உள்ளது[6].

மறுமகன் இப்பொழுது குற்றஞ்சாட்டுவது: ஆனால், இப்பொழுது, அவ்வாறு அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதில், இரு நீதிபதிகள் காசு வாங்கிக் கொண்டுதான், அவ்வாறு செய்தனர் என்ற குற்றாச்சாட்டு இப்பொழுது (பிப்ரவரி 14, 2011) எழுந்துள்ளது. குன்ஹாலிக்குட்டியின் மைத்துனரான கே. ஏ. ரௌஃப் என்பவர் கே. நாராயண குருப் மற்றும் கே. தங்கப்பன் என்ற இரு நீதிபதிகள் அவ்வாறு செய்ததாக, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி தந்தபோது, வெளிப்படையாகக் கூறினார். “அப்பெண் பொட்டா என்ற இடத்தில் உள்ள கிருத்துவ வழிப்பாடு மையத்திற்கு[7] செல்வது வழக்கமாக இருந்ததால், அம்மையத்தின் பாதிரியார் ஜியார்ஜ் பணக்கல் என்பவரை நாங்கள் சந்தித்தோம். எப்பெண்ணின் வாயை மூட ரூ……..லட்சம் பணம் கொடுத்தோம்”, என்றெல்லாம் கூறினார்[8]. கேரளாவின் பார் கவுன்சில் இதற்கான – நீதிபதிகள் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது[9].

இப்படி தொடர்ந்து காங்கிரஸ்காரர்கள் செக்ஸ் வழக்குகளில் சிக்கி வருவது, காங்கிரஸ் பாரம்பரியம் என்றுதான்  தோன்றுகிறது. நேரு காலத்தில் அவரே பற்பல பெண்களுடன் தொயர்பு வைத்திருந்தது பற்றி புத்தகங்களே வந்துள்ளன. பிரோஸ் காந்தியும் அவ்வாறே பேசப்பட்டார். என்.டி.திவாரி சமீபத்தில் மாட்டிக் கொண்டார். பி.ஜே.குரியன், குட்டி ……என்று தொடர்கிறது.

வேதபிரகாஷ்

04-03-2011


[3] அரசியல் இருப்பதால் பரஸ்பர குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இருப்பினும் செக்ஸ் ஆட்டங்கள் நடந்துள்ளதை மறுக்கவில்லை.

[4] கற்பழிப்பது டீ குடிப்பது போன்றது என்று பொன்மொழியை உதிர்த்தவர் இவர்தான். பிறகு நான் என்ன இல்லாததை சொல்லிவிட்டேன், அதுதான் கம்யூனிஸ்ட் மானிஃபஸ்டோவிலே இது உள்ளதே என்று விளக்கமும் அளித்தார்!

[5] ரெஜினாவின் கணவன் பிரமோத் என்பவருக்கு வளைகுடா நாட்டில் வேலை வாங்கித்தருவதாகவும் வாக்குக் கொடுக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது.

[7] ரெட்ரீட் என்று அழைக்கப் படும் இந்த கிருத்துவ மையங்களிலும் பல செக்ஸ் கேளிக்கைகள் நடக்கின்றன, அச்வற்றிலும் பலர் சிக்கியுளனர்.