Posts Tagged ‘மற்ற பிற்பட்ட சமூகத்தினர்’

முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா? உண்மையை சொல்லவேண்டிய நிலை வந்து விட்டது.

ஜூலை 5, 2010

முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா? உண்மையை சொல்லவேண்டிய நிலை வந்து விட்டது.

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு:தவ்ஹுத் ஜமாத் அமைப்பு வலியுறுத்தல்[1]:  “கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்,” என தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் அமைப்பின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசினார். தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் சார்பில், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. மாநாட்டின் முதல் நிகழ்வாக, முஸ்லிம்கள் ஏராளமானோர் பங்கேற்ற பேரணி, சென்னை புதிய தலைமைச் செயலகம் அருகே துவங்கி, தீவுத்திடலில் முடிந்தது.தீவுத்திடலில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத்தின் நிறுவனர் ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது[2]:

ஜெய்னூல் ஆபிதீன் பேசியதாவது: “நாட்டு விடுதலைக்காக முஸ்லிம்கள் பாடுபட்டுள்ளதை குஷ்வந்த்சிங் போன்ற சிந்தனையாளர்கள் வெளி உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்[3]. ஆங்கிலேயர் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக அதை முஸ்லிம் மதகுருமார்கள் புறக்கணித்தனர்[4]. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்காக ஆங்கிலேயர் வழங்கிய வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் மறுத்தனர்[5]. தாங்கள் வகித்துவந்த உயர் பதவிகள் மற்றும் ஆங்கிலேயர் கொடுத்த சர்., ராவ்பகதூர் போன்ற பட்டங்களையும் புறக்கணித்தனர். கடந்த 2004ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலின்போது, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது[6]. கடந்த ஆண்டு, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி, நாட்டில் உள்ள 13 சதவீத முஸ்லிம்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இப்பரிந்துரையை உடனடியாக சட்டமாக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்[7]. இவ்வாறு ஜெய்னூல் அபிதீன் பேசினார்.இம்மாநாட்டில், தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாத் மாநில தலைவர் பக்கீர் முகமது அல்சாதி, பொதுச் செயலர் அப்துல் அமீது, நிர்வாகிகள், ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா? முஸ்லீம்கள் தங்களுக்கு 10% இட ஒதுக்கீடு கொடு, 15% இட ஒதுக்கீடு கொடு, என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்[8], இந்தியாவில் பல மாநிலங்களில் ஏற்கெனவே ஜாதிய அடிப்படையில் இட ஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்து வருகின்ற நிலை, அவர்களுடைய இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது. ஆக, எழும் கேள்வி, “முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு: மதரீதியிலா, ஜாதி ரீதியிலா?”. மதரீதியில் என்றால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, ஏனெனில் அத்தகைய முறை இந்திய அரசியல் நிர்ணய சாசனத்தில் இல்லை. ஜாதிரீதியில் என்றால், ஏற்கெனெவே அத்தகைய வசதி அமூலில் உள்ளது.

அரசியல் ஆக்கப் படும் விவகாரம்: காங்கிரஸைப் பற்றி தெரிந்த விஷயம், அது முஸ்லீம்களுக்கு எப்பொழுதும் தாஜா செய்து கொண்டு “ஓட்டு வங்கி அரசியல்” நடத்தி வருகிறது என்பதாகும். அதேப் போலத்தான் கம்யூனிஸவாதிகளும், மற்ற அரசியல் கட்சிக்களும். இந்நிலையில் பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இதனை எதிர்து வருகின்றது.  பிற்பட்ட வகுப்பினருக்கு எதிராக உள்ள ரங்கநாத் மிஸ்ரா பறிந்துரையை அமூலாக்க விடமாட்டோம் என்று பிரதான எதிர்கட்சியான பாஜப கூறுகிறது. “ஸ்வபிமான் சமவேசா” என்ற பிற்பட்டவர்காளுடைய மாநாட்டில் பேசிய பாஜக தலைவர், நிதின் கட்காரி, இது இந்திய அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிரானது மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான சதியாகும் என்றார்[9].

மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு எதிரானது அவர்களுடைய ஒதுக்கீட்டை பாதீபது என்றால் அது நியாயமாகுமா? பிற்பட்ட சமூகத்தினருக்கு எதிராக தீங்கிழைக்கும் வகயில் உள்ள இத்தகைய முறைகளை, ஓட்டுவங்கி அரசியல் என்ற வகையில் செயல்படுவதால் எதிர்ப்பதாக விளக்கினார். காங்கிரஸ் மறுபடி-மறுபடி முஸ்லீம்களை தாஜா செய்வது என்ற ரீதியில் செயல்பட்டு, மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு [(other backward classes (OBCs)] மாபெரும் துரோகத்தை செய்ய தீர்மானித்துள்ளது[10]. அவர்களுடைய ஒதுக்கீட்டிலிருந்து, மத ரீதியாக முஸ்லீம்களுக்கு எனத் தனியாக, வட்டிக் கொடுப்பது என்பது இந்திய அரசியல் நிர்ணய சாசனத்திற்கு எதிரானது. இருக்கின்ற மற்ற பிற்பட்ட சமூகத்தினருக்கு என்றுள்ள 27% லிருந்து முஸ்லீம்களுக்கு 8.4% கொடுக்கவேண்டும் என்று ஒரு பரிந்துரை உள்ளது. பிறகு அவர்களுடைய கதி என்னாவது? சமூகநீதி என்று பேசுவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
தமிழகத்தில் கூட கருணாநிதி, இதே மாதிரி 3.3% சதவீத இட ஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு கொடுத்து எஸ்.சிக்களை ஏமாற்றியுள்ளார்[11]. “அண்ணாதுரையின் 99வது பிறந்த நாள் பரிசாக பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக் கீட்டிலிருந்து, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கியது” – இதைப் பற்றிய முன்னுக்கு முரணான செய்திகள் பல வந்துள்ளன. அவர்கள், மற்றும் கிருத்ததவர்கள் எதிர்த்தும் தெரிகின்றது. மற்றவர்கள் தொடுத்த வழக்குகள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

இஸ்லாம், ஜாதி, ஒதுக்கீடு: இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பது குரான்படி அவர்களுடைய நம்பிக்கை. இதற்கு எதிராக எந்த உண்மையான முஸ்லீமும் இஸ்லாத்த்தில் ஜாதி உண்டு, ஆகையால் அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடு என்று கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அத்தகைய ஏமாற்றுவேலையல் முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள். அதாவது குரானை மதிக்காமல், முஸ்லீம்கள் மாறாக செய்ல்பட்டு வருகிறர்கள். இங்கு அவர்களின் அல்லாவின் கோபத்தைப் பற்றிக் கவலைப் படுவது கிடையாது. முஸ்லீகளிடையே உள்ள முரண்பாடுகளை சிலர் எடுத்துக் காட்டியுள்ளனர்[12].

இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா? இஸ்லாத்தில் சமத்துவம், தோளோடு தோள் தொட்டுக்கொண்டு, ஒட்டிக்கொண்டு, கட்டிக்கொண்டு இருப்போம், தொழுவோம்……………என்றெல்லாம் பேசி, பிர்ச்சாரம் செய்யும் வேலையில், எப்படி, இப்படியொரு கோரிக்கை இடுவர்? இஸ்லாத்தில் முஸ்லீம்கள் எல்லோரும் ஒன்றா, இல்லையா என்று அவர்கள் வெளிப்படையாக தமது சித்தாந்தத்தை சொல்லவேண்டிய நேரம் வந்து விட்டது. ஏனெனில், இரண்டு விதமாக பேசிவருவது மக்களுக்கு விசித்திரமாக உள்ளது.

முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும்[13]:  முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இட ஓதுக்கீடு தரும் கட்சிகளுக்கே வாக்களிக்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை. இதனால் அக்கட்சியின் பலம் குறைந்துவிட்டது. இதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்டவில்லை.  இந்நிலையில் இடஓதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இடஓதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 4ல் சென்னை தீவுத்திடலில் பேரணி மற்றும் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 10 சதவீத இடஓதுக்கீடு அளிக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்வையாளராக மட்டுமே கலந்து கொள்ள முடியும். பேசுவதற்கு யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. தவ்ஹீத் ஜமாத் ஒருபோதும் அரசியல் கட்சியாக மாறாது என்றார் அவர்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பிறகு வட இந்திய முஸ்லிம்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பதில்லை: அதாவது முஸ்லீம்களே, இவ்வகையில் காங்கிரஸின் நிலைப்பாட்டை அலசுகின்றன்ரா அல்லது பேரம் பேசுகின்றனரா என்பதை இந்தியர்கள் கவனமாகப் பார்க்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், முஸ்லீம்கள், ஜிஹாதி முஸ்லீம்கள் போலத்தான் பலநிலைகளிலும், நேரங்களில் தங்களை அடையாளங்காட்டிக் கொள்கிறார்கள். சிலர் தான் இந்திய தேசிய முஸ்லிம்களாக உள்ளனர்.

இதனால் கடந்த 2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்தது:  இப்படி முஸ்லீம்கள் உண்மையைச் சொல்வது பாராட்டவேண்டும். அதாவது, இந்தியாவைத் துண்டாடியப் பிறகும் எப்படி, இந்த காங்கிரஸும் முஸ்லீம்களும் அதே எண்ணங்களில் உள்ளர்கள் என்பதற்கு இதைவிட ஒன்றும் சான்று தேவையில்லை. இந்தியர்கள் எதிர்ப்பது, இத்தகைய இந்திய விரோத முஸ்லீம்களைத்தான் என்று மற்ற முஸ்லீம்களும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். காங்கிரஸோ அல்லது எந்த அரசியல் கட்சியோ, இத்தகைய வாக்குறுதி அளிக்கிறது என்றால், தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது? அப்படியென்றால், ஆர்களது மாநாடே தேச விரோதமானது தானே?

கிருத்துவர்களும் இதே பாட்டைப் பாடுவது நோக்கத்தக்கது[14]: தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி டெல்லியில் வரும் ஜூலை 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடக்கிறது[15].  இதுகுறித்து இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கத் தலைவர் தனராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தி தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூலை 21-ம் தேதி டெல்லியில் தேசிய அளவிலான கூட்டமைப்புடன் இணைந்து ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடக்கிறது. இது குறித்த ஆலோசனை கூட்டம் குவளைகண்ணியில் நாளை நடக்கிறது. இதில் 7 தென்மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தலித் கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஏமாற்றினால் வரும் தேர்தலில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம். தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்[16]. இக்கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

தலித் கிறிஸ்தவர்களை தொடர்ந்து ஏமாற்றினால் வரும் தேர்தலில் எங்களது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும் என காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்து கொள்கிறோம்: ஆக முஸ்லீம்கள், கிருத்துவர்கள் நெல்லையிலிருந்து ஒரே மாதிரியான அச்சுருத்தலை மிரட்டலை விடுக்கின்றனர். அது காங்கிரஸுக்குத்தான் என்பதும் நோக்கத்தக்கது. எப்படி இப்படி இரு மதத்தினரும் மதரீதியில் மிரட்டுவர், கோரிக்கைகள் இடுவர்…….மற்றவர்கள் எல்லாம் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும், படித்துக் கொண்டும் அமைதியாக இருப்பர் என்று தெரியவில்லை. ஆக, இதில் சம்பந்தப்பட்டவர்கள், கூடிபேசி, தீர்மானித்து, இத்தகய அரசியல் சூதாட்டங்களை நடத்தி, இந்தியர்களை ஏமாற்றத் தீர்மானித்துள்ளது நன்றாகவேத் தெரிகின்றது.

இந்தியர்களை ஏமாற்றும் வேலை: அம்பேத்காரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லை, நேருவே ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் மதரீதியில் எங்அளுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்றால் என்ன விஷயம் என்று இந்தியர்களுக்கு விளங்கவில்லை. சட்டரீதியாக முடியாது என்பதனை, ஒரு அரசியல் கட்சி முடியும் என்று வாக்குறுதி கொடுப்பது, இப்படி அழுத்தத்தை ஏற்படுத்துவது, மக்களை ஏமாற்றுவது என்ற முறையில் செல்லும் இந்த விவகாரத்தை இந்தியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

05-07-2010


[1] தினமலர், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு:தவ்ஹுத் ஜமாத் அமைப்பு வலியுறுத்தல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=32406

[2] ஜெய்னூல் ஆபிதீன் டிவியில் தமிழில் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம் போதகர். இப்பொழுது அரசியலிலும் ஈடுபடுவது ஆச்சரியமாக உள்ளது.

[3] அம்பேத்கார் சொன்னதை ஏன் குறிப்பிடவில்லை என்று நோக்கத்தக்கது. குறிப்பாக, “பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை” என்ற நூலில் முஸ்லீம்களின் அடிப்படைவாதம், மதவாதம், நாட்டைத் துண்டாட செய்யும் செயல்கள் அனைவற்றையும் விளக்கியுள்ளார். ஆகையால், முஸ்லிம்கள், செக்யூலரிஸவாதிகள் இதனை அப்படியே அமுக்கிவிடுவர்.

[4] இதெல்லாம் சப்பைக் கட்டும், சரித்திரத்திற்குப் புரம்பான பேச்சுகள். இந்திய சுதந்திர வரலாறு என்பது 60-80 ஆண்டுகளுக்கு முந்தையது. இதில் முஸ்லீம்கள் மதரீதியில் இந்தியாவைத் துண்டாடினர் என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்பொழுதும், மதரீதியில் இட ஒதுக்கீடு கேட்பதால் தான், இந்தியர்கள் கவலைக் கொள்கின்றனர்.

[5] இதைவிட பெரிய போய்யை எந்த முஸ்லீமும் சொல்லமுடியாது. கிலாஃபத்தின் கதையை அறியாதவர்போல பேசுவது, பச்சைத்துரோகமான செயல். அதிலும் இந்தியாவில் இருந்து கொண்டு இப்படி புளிகு மூட்டைகளை அவிழ்து விடுவது, ஹிட்லரின் பிரச்சாரத்தையும் மிஞ்சிவிடும் வகையில் உள்ளது.

[6] ஒரு அரசியல் கட்சியிம் வாக்குறுதி சட்டமாகாது, மேலும் தேர்தலில் இத்தகைய வாக்குறுதி கொடுத்தார்கள் என்றால், தேர்தல் கமிஷனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

[7] இத்தகைய அச்சுருத்தல், மறைமுக உடன்படிக்கைகள், தேர்தல் நேரக்கூட்டு பேரங்கள் முதலியவற்றை தேர்த கமிஷன் கவனிக்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் தான், பெரும்பான்மை இந்தியர்களை இப்படி, ஓட்டுவங்கி மூலம் ஏமாற்றிவருவர் என்பது தெரியவில்லை.

[8] http://tntjsw.blogspot.com/2010/05/tntj_18.html

[9] http://timesofindia.indiatimes.com/City/Bangalore/Misra-panel-suggestions-go-against-culture-Gadkari/articleshow/6129206.cms

[10] http://www.deccanherald.com/content/79277/centre-keen-appeasing-minorities-gadkari.html

[11] http://dravidianatheism.wordpress.com/2009/10/28/திராவிடம்-இஸ்லாம்-தமிழக/

[12] சின்னக்கருப்பன், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்,

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20410147&format=html

[13] 10% இட ஒதுக்கீடு தரும் கட்சிகளுக்கே ஓட்டு-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 20, 2010, 14:12[IST], http://thatstamil.oneindia.in/news/2010/06/20/tamilnadu-tawheed-jamath-reservation-assembly.html

[14] பட்டியல் இனத்தில் சேர்க்கக் கோரி தலித் கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம்,

வெள்ளிக்கிழமை, ஜூன் 25, 2010, 15:02[IST], http://thatstamil.oneindia.in/news/2010/06/25/dalit-christians-sc-agitation-delhi.html

[15] இது மாபெரும் மோசடியாகும், ஏனெனில், உச்சநீதி மன்றத்தில் ஏற்கெனெவே ஒரு தீர்ப்பு உள்ளது. அதை மறைத்து இவர்கள் இப்படி வேடம் போட்டுக் கொண்டு ஏசுவை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றனர்.

[16] இதற்கும் கருணாநிதி வருகிறார் என்றால் அந்த சதிதிட்டம் என்னவென்பது இந்தியர்கள் அறிந்தே ஆகவேண்டும்.