திருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)
“எல்லீசர்” பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:
- திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.
- ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு?]
- “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.
- “எல்லீசர்” அறக்கட்டளை விருது.
அப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா? செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:
நிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- இதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.
- திரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.
திரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது? தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா? திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.
- VHP R.B.V.S. மணியன்ஜி,
- காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,
- G.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்
அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.
2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்?: பி.ஆர். ஹரண், தமிழுக்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிஅ பங்கு என்ற கட்டுக்கதை, என்ற கட்டுரையில், “Misinformation campaigners project missionaries such as G.U. Pope, Constantine Joseph Beschi, Robert Caldwell, Barthalomaus Ziegenbalg, Francis Whyte Ellis and Dr. Samuel Green et al as great champions of Tamil and magnificent contributors to its development, including the introduction of “prose” writing. Of these, Francis Whyte Ellis or ‘Ellis Durai’ in Tamil, was a Madras-based civil servant in the British government and Samuel Green a doctor in Sri Lanka; both supported missionaries in evangelical causes,” என்று எழுதினார்.
“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.
“Ironically, A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages cannot be termed his own work as he allegedly took lots of passages from Francis Whyte Ellis, who wrote Dravidian Language Hypotheses.. To understand why Caldwell resorted to “research” South Indian languages, one should read Dr. K. Muthaia’s article, Caldwell Oppilakkanaththin Arasiyal Pinnani (“The Politics Behind Caldwell’s Comparative Grammar”), published in the April 1997 issue of the Tamil monthly magazine Kanaiyaazhi.”
“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.
ஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்?: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்?
- எல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன?
- “எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்?
- திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்?
- எல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்?
- யார் பணம் கொடுத்தது?
இதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா?
© வேதபிரகாஷ்
16-06-2017
[1] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil, Posted on August 2, 2010.
[2] Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 1, Posted on July 21, 2010.
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1324
Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 2, Posted on July 22, 2010.
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1325
Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 3, Posted on July 23, 2010.
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1326
Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 4, Posted on July 22, 2010.
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1327
Thamizhchelvan, The myth of Christian contribution to Tamil – 5, Posted on July 25, 2010.
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=1328
[3] https://www.facebook.com/jayaraman.v.o/posts/10154585311106709?hc_location=ufi
குறிச்சொற்கள்: இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசன், எல்லீசர், எல்லீசு துரை, எல்லீஸ், கட்டுக்கதை, கௌதமன், சாமி தியாகராசன், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவிழா, பிரச்சாரம், பொன்.ராதாகிருஷ்ணன், போலி, மாயை, ஹரண்
5:41 முப இல் ஜூன் 17, 2017 |
Yes, it also exposes the double-game played by B. R. Haran, Gowthamanm Sami thyagarajan etc. [writing against and supporting christians]
The Endowment in the name of Francis Whyte Ellis!
Disgusting and the award instituted given to V. G. Santhosam!
Next award, they may give to M. Deivanayagam and then, Devakala, then, John G. Samuel??
Of course, the duo Rajiv and Neelakandan might write another book!
11:01 முப இல் ஜூன் 17, 2017 |
Yes, I am totally disgusted and felt helpless about the things the way they are going on.
I do not know why and how they have been doing like this!
5:48 முப இல் ஜூன் 17, 2017 |
I record my earlier reply appearing at Tamil.Hindu.com:
M. Nachiappan on December 11, 2008 at 6:26 am
1. Whos is “மூவர் முதலிகள் முற்றம்”?
2. Can you give its address and the contacts – phone no, e-mail etc.
3. The mentioned mutt heads are useless according to my opinion as they cannot matach the propaganda or the manipulative skills of of the christians or mohammedans. Had it been so, the position would not be like this.
4. Moreover, the list includes the mutt-heads who have already been in anti-Hindu groups and activities. In fact, one of the so-called Jeers has been hobnobbing with them. Another has been with Karu; yet another has been creating a lot of problems within the Hindus. Therefore, these mutt-heads need not be involved.
Ref:http://vedaprakash.indiainteracts.com/2008/08/16/religion-of-tamizhar-an-international-conference-is-a-camouflage-or-subversaion-of-hindus/
5. Real Hindus, in the sense, who have guts should conduct the conference. The Hindus with other motives would only produce negative results, that would further harm the interests of the Hindus.
6. As pointed by Sri Vedaprakash, during the above-mentioned conference, Swami Omkarananda has volunteered himself to conduct the conference and therefore such Swamijis can be relied upon.
Ref: http://vedaprakash.indiainteracts.com/2008/12/07/thamizhar-samayam-a-reply-to-the-christian-protagonists-and-propagandists/#ff1
7. Anyway, there should be co-ordination, co-operation and consensus amng the Hindus.
Kindly give the details.
5:49 முப இல் ஜூன் 17, 2017 |
M. Nachiappan on December 28, 2008 at 6:15 am
Yesterday (27-12-2008), there had been a VHS- 2008 conference at Hotel Ashoka, wherein, one of the ‘controversial samiyars’ appeared to have participated.
He was questioned by other delegates and R.B.V.S. Manian, who inagurated the Conference, condemned the duplicity of Mutukumaraswamy Thampiran (he had not attended this conference, but was there with the “controversial one” in another “Hindu conference” held on 25-12-2008 at Thevar Mantapam, Chennai), who hobnobbing with the mylapore bishop (who has been aiding and abetting the thomas frauds) and other christians.
It is ironical how such duplicities and christian agents are infiltrating other conferences surreptiously, that too, masquerading as ‘Hindu samiyars’!
The above report only proves how the masqueraders have been roaming in India cheating Hindus.
The Sufis had / have been doing such nonsense and therefore, Hindus should expose such masquerades and cheats!
They also asdopt / adapt suffixes like “IYER”, and thus in Tamilnadu, we have ‘many christian iyers’. Not only the bishops / catholic bishops are addressed as ‘iyer’, but also folling pastors / prechers who roam with such names e.g, Mani Iyer of Annanagar. He has been fooling in spite of being a christian. His booklet was distributed by the Deivanayagam before the Kapakleswarar Temple. Though, a complaint has been lodged bty Ramagopalan, no action seems to have been taken.