Posts Tagged ‘துப்பாக்கி’

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம் – இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

ஜனவரி 16, 2016

மால்டாவில் நடப்பது கஞ்சா செடி வளர்ப்பு, திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை, கள்ளநோட்டு விநியோகம்இடைஞ்சலாக இருக்கும் அரசு துறைகளைத் தாக்குவது இஸ்லாமிய குழுக்கள்!

03-01-2016 violence Malda by Mus;ims preplanned

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்லசொல்வது மம்தா (09-01-2016)!: மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சுமார் பத்து நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல இருந்து விட்டு, இவ்வாறு கூறியிருப்பதில் பல மர்மங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளது போலிருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார். இது அடுத்த மிகப்பெரிய பொய், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல! இந்த மாநாட்டில் முதல்வர் மம்தா பானர்ஜி 09-01-2016 சனிக்கிழமை கலந்துகொண்டார். மாநாட்டுக்கு முன்பும், அதற்குப் பிறகும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது[1]:

மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் முற்றிலும் மாறுபட்ட கோணம் கொண்டதாகும். அங்கு நிகழ்ந்த மோதல் என்பது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே நடைபெற்றதாகும். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித தொடர்பும் இல்லை. எனினும், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இங்கு மதவாத வன்முறைகளுக்கு இடமில்லை”, என்றார் அவர். எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே” அப்படியா மோதல்கள் நடக்கும்? கலவரங்கள், எரியூட்டல்கள் எல்லாம் இருக்கும்? அப்படியென்ன, அவர்கள் சட்டத்தை விட பெரிய மனிதர்களா, பி.எஸ்.எப்.வீரர்களை எதிர்க்கும் அளவுக்கு என்ன துணிவு உள்ளது? உள்ளூர் ஆட்கள் அவர்களுடன் மோதுகின்றனர் என்பதிலிருந்தே, எல்லைத் தாண்டிய விவகாரங்கள் உள்ளன என்பது தெரிகிறது. அவை தான் கஞ்சா வளர்ப்பு, திருட்டு ஆயுத தொழிற்சாலை, கள்லநோட்டு பரிவர்த்தனை முதலியவை.

மத்திய அமைச்சர்கள் பலர் உங்களைப் பாராட்டி பேசுகின்றனரே? என்ற கேள்விக்கு மம்தா அளித்த பதில்: “நான் எப்போதும் கூட்டாட்சிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மத்திய அரசு என்பது தாய் போன்றது. மாநில அரசுகள் பிள்ளைகள் போன்றவை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்தால் கூட்டாட்சி அமைப்பு வலுவடையும். ஜிஎஸ்டி மசோதா எங்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் அதை ஆதரிக்கிறோம். ஆனால், நிலம் கையக சட்ட மசோதா குறித்து எங்களுக்கு சில ஆட்சேபனைகள் உள்ளன”, என்றார் மம்தா.

Malda riots - Mamta manipulated for vote bank politucsதிவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள்சொல்வது அதிகாரிகள்: இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகக் கூறி அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தலைவர் கமலேஷ் திவாரிக்கு எதிராக மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் அண்மையில் பேரணி நடத்தி, போலீஸ் ஷ்டேசன்களைத் தாக்கியபோது, பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது[2]. இதில் காவல் நிலையம் மற்றும் ஏராளமான வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். உள்ளூர் அதிகாரிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதலே என்று கூறினார்கள்[3]. திவாரிக்கு எதிரான போராட்டம் என்பதெல்லாம் சாக்கே தவிர, எல்லை பாதுகாப்பு வீரகள் மற்றும் போல்லீஸாரைத் தாக்க வேண்டும் என்பது தான் அவர்களது குறிக்கோள் என்றனர்[4]. 35க்கும் மேலாக வாகனங்கள் சேதமடைந்தன; இந்துக்களின் வீடுகள் சூரையாடப்பட்டன; வேண்டுமென்றே பீஹார்[5], தில்லி, ராஜஸ்தான், பெங்களூரு என்று பல இடங்களில் ஆர்பாட்டம் செய்தனர், அங்கு ஐசிஸ்க்கு ஆதரவாக ஆனால் மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆகவே, இப்பிரச்சினையை அகில இந்திய ரீதியில் பெரிதாக்க திட்டமிட்டுள்ளனர் என்று தெரிகிறது. உண்மையில் கஞ்சா செடிகளை வளர்த்து, போதை மருந்து தயாரித்து விநியோகத்தில் ஈடுபட்ட முஸ்லிகளின் மீது நடவடிக்கை எடுப்பதை அந்த கும்பல் விரும்பவில்லை. ஆனால், இது திட்டமிடப்பட்ட மத வன்முறை என விஹெச்பி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன, என்ரு தமிழ் ஊடகங்கள் கூருவதும் விசித்திரமானது. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது.

Malada IHC - opium, Marx and tradeஊடுருவிய வங்கதேசத்தவர் 8 பேர் கைது: அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்துக்குள் ஊடுருவிய 8 நபர்கள் உள்பட 9 பேரை எல்லையோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் வேலை வாங்கித் தருகிறோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், அவர்களுக்கு உதவிகரமாக இருந்த இந்தியர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்[6]. இவர்கள் முஸ்லிம்கள் என்ரு குறிப்படத்தக்கது. சட்டங்களை மதிக்காமல் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, உள்ளூர் அரசியல்வாதிகளின் செல்வாக்குதான் காரணம். முஸ்லிம்கள் என்றாலே மம்தா அரசு மெத்தனமாக இருப்பதும், இவர்களுக்கு தைரியமாக இருப்பதால், அரசு துறை அதிகாரிகளை எதிர்ப்பது போன்ற போக்கு சாதாரணமாக உள்ளது. இப்படி தினமணி செய்தி வெளியிட்டாலும், எல்லைத்தாண்டி முஸ்லிம்ள் ஊடுருவல் செய்வது குறித்து விளக்கவில்லை.

Where Heroin is villain-Vast fields of illegal poppy crop at Gopalgunj in West Bengals Malda districtபிஜேபி உண்மை கண்டறியும் குழு திருப்பி அனுப்பப்பட்டது: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் அண்மையில் நிகழ்ந்த மதக் கலவரம் தொடர்பாக, உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது[7]. இதுகுறித்து அந்தக் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  மால்டா கலவரம் குறித்து நேரில் ஆராய, பாஜகவின் தேசிய பொதுச் செயலரும், எம்.பி.யுமான பூபேந்தர் சிங் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. எம்.பி.க்கள் எஸ்.எஸ்.அலுவாலியா, பி.டி.ராம் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களாவர். இந்த உண்மை கண்டறியும் குழு, தனது ஆய்வறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் விரைவில் அளிக்கும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மால்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3), ஹிந்துத்துவ அமைப்பு ஒன்றின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் தலைவர், பிற மதத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது[8]. ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Malda opium Police destroyஎல்லை மீறிய சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் குழுக்கள்: எல்லை ஊர்களான கோபால்கஞ், பலியாடங்கா, காலியாசக், மொஹப்பத்பூர், மோதாபாரி, டங்கா முதலியவை, இந்திய-விரோத சக்திகளின் புகலிடமாக உள்ளன. கஞ்சா வளர்ப்புதான் அதற்குக் காரணம். 13-01-2016 அன்று, காலியாசக் மற்றும் சுற்றியுள்ள 500 ஏக்கர் / 1500 பீகா பரப்பளவில் கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன[9]. இது ஜனவரி 5ம் தேதியிலிருந்து 13ம் தேதி வரை நடந்தது[10]. மேலும், போலீஸ் ஷ்டேசன்கள் எரியூட்டியது தெரியக்கூடாது என்று அவசர-அவசரமாக அவை மராமத்து செய்யப்பட்டு பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. கஞ்சா தவிர கள்ளநோட்டு விநியோகம் பெருமளவில் நடக்கிறது.  2015ல் ரூ.3.08 கோடிகள் பிடிபட்டுள்ளன, 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டத்திற்க்குப் புறம்பாக துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கு 1987 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவை எல்லாவற்றிலும் முச்லிம் இளைஞர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

16-01-2015

[1] தினமணி, மால்டாவில் ஏற்பட்டது மதக் கலவரம் அல்ல:மம்தா பானர்ஜி, By கொல்கத்தா, First Published : 10 January 2016 12:32 AM IST.

[2] http://www.jansatta.com/national/protest-rally-of-muslims-turns-voilent-in-malda-mob-set-fire-on-vehicles-attacked-police-station/58609/

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3392013/The-region-epicentre-illegal-drug-trade-counterfeit-currency-racket-Kaliachak-India-s-Afghanistan-poppy-farming-weapons-smuggling-infiltration-radicalisation-make-lethal-cocktail.html

[4] : Local officials say the Kaliachak violence on January 3, was a pre-planned attack by Muslim groups under the garb of protesting against the hate speech of Akhil Bharat Hindu Mahasabha leader Kamlesh Tiwari, thus noted Soudhriti Bhabani.

Soudhriti Bhabani,The region is an epicentre of illegal drug trade’: Kaliachak is India’s Afghanistan where poppy farming, weapons smuggling and radicalisation make a lethal cocktail, PUBLISHED: 23:33 GMT, 9 January 2016 | UPDATED: 00:20 GMT, 10 January 2016.

[5] http://aajtak.intoday.in/story/after-malda-hungama-and-brawl-started-in-bihars-purniya-over-kamlesh-tiwaris-remark-on-paigamber-1-849458.html

[6]http://www.dinamani.com/india/2016/01/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/article3220099.ece

[7] தினமணி, மால்டா மதக் கலவரம்: உண்மை கண்டறியும் குழுவை அமைத்தது பாஜக, By  புது தில்லி, First Published : 11 January 2016 12:52 AM IST

[8]http://www.dinamani.com/india/2016/01/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article3221619.ece

[9] The Hindu, Crackdown on poppy in Malda, Shiv Sahay Singh, Kolkotta, January, 14, 2016

[10] http://www.thehindu.com/news/national/other-states/crackdown-on-poppy-in-malda/article8103838.ece

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

ஜனவரி 15, 2016

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

Malda map, IHC, poppy cultivationபங்களாதேச எல்லைக்கருகில் உள்ள மால்டாவில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகமாவது: மால்டா மேற்குவங்காள மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில், பங்களாதேசத்தையொட்டி 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டு முஸ்லிம்கள் எல்லைகளைத் தாண்டி வருவதும்-போவதும் சகஜமாக உள்ளது. “டோகன் முறையில்” பங்களாதேச முஸ்லிம்கள் “வேலைக்கு” என்று காலையில் வந்து, மாலைக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், திரும்பிச் செல்லாமல் தங்கிவிடும் முஸ்லிம்களை ஊக்குவித்துதான், அவர்களுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள சீட்டு, இப்பொழுது ஆதார் கார்ட் எல்லாம் வழங்கி, “முஸ்லிம் ஓட்டு வங்கிகளாக” எல்லைத்தொகுதிகளை மாற்றியிருக்கிறார்கள். இதனால், முஸ்லிம் தொகையும் கணிசமாக பெருகியுள்ளது. 40 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ ஆட்சியில் ஆயுத புரட்சி என்ற போர்வையில் வன்முறை ஊக்குவிக்கப்பட்டது. இப்பொழுது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

Malda riots - Mamta playing minority cardமார்க்சீய அரசியல் பாரம்பரியத்தைப் பின்பற்றும் மம்தா மற்றும் திரிணமூல் கட்சிக்காரர்கள்: பல நேரங்களில் இருகட்சிக்காரர்களும் சேர்ந்தே வேலை செய்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மட்டுமல்லாது, தொழில் ரீதியிலும் சேர்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. மால்டாவின் வடமேற்கில் புர்னியா உள்ளது. பீஹாரில். ஜார்கென்ட் மாவட்டத்தில் உள்ள இது, ஏற்கெனவே ஆயுதகடத்தல்-ஆயுதங்களுக்கு பிரசித்தியானது. ஜனவரி 2015ல் காலியாசக் கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது[1]. கஸ்சந்தபூர் [Khaschandpur] கிராமத்தில் திரிணமூல் தலைவர் உமாயூம் ஷேக்கின் வீட்டில் இருந்த பாதாள அறையிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. கக்ரகர் குண்டுவெடிப்பில் கைதான ஜியா-உல்-ஹக் மற்றும் பங்களாதேசத்தின் ஜே.எம்.பியின் தீவிரவாதி ஜமால்-உல்-முஜாஹித்தீன் பர்த்வானில் உள்ள ரெஸூல் கரீமுக்கு “ஆயுதங்கள் செய்வது எப்படி” போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தான்[2]. இதே நேரத்தில், மார்க்சிஸ்டுகளுக்கும் தொடர்புள்ளது.

Tiwari protest turned riotகம்யூனிஸ புரட்சி பயங்கரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சேர்ந்தே செயல்படுகிறது: கள்ளநோட்டு கும்பல், போதை மருந்து உற்பத்தி-விநியோகம், கொள்ளை என்று பலவித குற்றங்களில் இருகட்சியினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அரசுதுறை அதிகாரிகள் கட்சிகளுக்கு சார்புள்ளவர்களாகவே இருப்பதினால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, எடுத்தால் தொடர்ந்து வழக்கு போடுவது-நடத்துவது முதலியவை தவிர்க்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப் பட்டு, காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன. இருப்பினும், அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, சில நேரங்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், உண்மைகள் சில வெளிவருகின்றன. அரசியல் ரீதியில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், உண்மைகள் மாறப் போவதில்லை. மார்க்சிஸ்டுகளின் போலித்தனம் தான் வெளிப்படுகிறது. மார்க்சீய சித்தாந்த தாக்குதல் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றில் மட்டுமல்லாது, அறிவிஜீவிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

UGB_Main_Buildingஇந்திய வரலாற்றுப் பேரவையும் [Indan History Congress], மார்ச்சீயவாதமும், சரித்திரசாரியர்களும், முஸ்லிம்களும்: கடந்த 60 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவர்களை நன்றக கவனித்து வருவதால், அவர்களும் பதிலுக்கு ஆதரித்து வருகிறார்கள். இந்திய வரலாற்றுப் பேரவை [Indan History Congress[3]] ஆண்டு மாநாடுகள் அவ்விதமாகத்தான் மேற்கு வங்காளத்தில் பலமுறை நடத்தப் பட்டுள்ளது. மார்க்சீய சரித்திராசிரியகள் என்று தம்மை வெளிப்ப்டையாக அறிவித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாப்ரி மஸ்ஜித் வழக்கில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆதாவது “செக்யூலரிஸ” ரீதியில் இந்துக்களுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். இதனை இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய சரித்திரத்தை அவர்களது சொத்து போல வைத்துக் கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இடைக்காலத்தைத் தூக்கிப் பிடித்து, முகமதியர்களின் அக்கிரமங்களை, கொலைக்குற்றங்களை, கோவில் இடிப்புகளை, கொள்ளைகளை, மதமாற்றங்களை மறைத்து-மாற்றி எழுதி வருவதால், இக்குழுக்கள் அந்நியோன்னியமாக, கூடிக் குலாவி வருகின்றன. குறிப்பாக மால்டாவில் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, 76ம் வருட மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தான், கலவரம் நடந்துள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்[4]. ஆனால், இதைப் பற்றி தமிழ் ஊடகங்கள் அரைகுறையாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது.

Azam Khanமால்டா கலவரங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களின் அரைகுறை செய்தி வெளியீடு (ஜனவரி 7, 2015): தமிழ்.ஒன்.இந்தியா “மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது”, என்று ஆரம்பித்துள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது[5] என்று எடுத்துக் காட்டும் வீரகுமார் என்ற நிருபர் அவ்வார்த்தையைக் குறிப்பிடாதது வேடிக்கைதான். உண்மையில் ஓரினச்சேர்க்கை விசயத்தில் அருண் ஜெயிட்லி ஆதரவாக கருத்தை வெளியிட்டிருந்தார். 2014ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்[6]. ஆனால், ஆஸம் கான் நக்கலாக, அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களக இருக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று விமர்சித்தார்[7]. ஆனால், தமிழ்.ஒன்.இந்தியா நிருபர் அந்த உண்மையினை மறைத்து, “ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி”, என்று எழுதியிருப்பது விசமத்தனமாது[8].

Edara-e-Sharias link to Malda violence, the chairman of the group has admitted that it had called for a rally on January 3ஆஸம் கானின் ஓரினச்சேர்க்கை விமர்சனம், திவாரியின் பதில் முதலியன: ஆஸம் கான் பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ், எஸ்.பி தலைவர் தனது மனநிலையை இழந்து விட்டார் என்று கண்டித்தது. பிறகுதான், திவாரி உபியில் முஸ்லிம்கள் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தார்[9]. அதற்கு அவர்களது தலைவரும் காரணமாக இருக்கலாம்[10], ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பிரம்மச்சாரிகள் என்றால், அவரும் அப்படியே, அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்பட இந்தியில் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. பிறகு அது “இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது”, என்று தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 03-01-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும்கூட (07-01-2016), கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் வீரகுமார் எழுதி முடித்தாலும், அதன் பின்னணியைக் குறிப்பிடாதது ஆச்சரியமானது தான்!

© வேதபிரகாஷ்

15-01-2015

[1] The Telegraph, Arms unit near blast accused home – Illegal factory 10km from Bangla border, 4km from Burdwan suspect’s address, Monday , January 12 , 2015.

[2] http://www.telegraphindia.com/1150112/jsp/siliguri/story_7883.jsp – .Vpg2l7Z95dg

[3] http://www.indianhistorycongress.org.in/; http://www.ihc76.in/;

[4] http://www.ihc76.in/accomodetion.php; http://www.ihc76.in/indianhistorycongress/mainform/index.php ; http://www.ihc76.in/deligatfee.php

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்! காவல் நிலையங்கள் தீக்கிரை, Posted by: Veera Kumar, Published: Thursday, January 7, 2016, 16:49 [IST].

[6] Khan’s comments came after Union Finance Minister Arun Jaitley, last Saturday, 05-12-2015 said that the “judgment on gay sex should be reconsidered” by the Supreme Court. “Supreme Court’s 2014 verdict banning gay sex is not in accordance with evolving legal jurisprudence and court needs to reconsider it,” Jaitley said while speaking at Times LitFest.

[7] Zeenews, SP leader Azam Khan stirs fresh controversy, says RSS leaders are homosexuals, Last Updated: Monday, November 30, 2015 – 15:22.

[8] http://tamil.oneindia.com/news/india/malda-communal-violence-continues-244028.html – cmntTop

[9] http://zeenews.india.com/news/india/sp-leader-azam-khan-stirs-fresh-controversy-says-rss-leaders-are-homosexuals_1828366.html

[10] The Times of India had in a report said that Tiwari, who claims to be the working president of Hindu Mahasabha, had called Prophet Muhammad the first homosexual in the world.

[10] http://zeenews.india.com/news/india/this-is-what-kamlesh-tiwari-said-about-prophet-muhammad-which-infuriated-muslims_1833716.html

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(1)

ஓகஸ்ட் 13, 2013

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(1)

Curfew-in-Kishtwar-as-riot-toll-rises-to-two

கிஷ்த்வார் கலவரத்தின் பின்னணி: கிஷ்த்வார் கலவரம் என்பது ஒரு பானைக்கு ஒரு பருக்கை என்பார்களே அதுபோல. இங்கு “ஒரு பானை” என்பது –

  • காஷ்மீரத்தில் நடக்கும் மதவாத ஆட்சி
  • மத்தியில் நடக்கும் செக்யூலரிஸ ஆட்சி
  • தீவிரவாதிகளின் ஆதிக்கம்
  • இந்துக்களை மனிதர்களாகவே மதிக்காத இஸ்லாமிய அடிப்படைவாதம்
  • இருக்கும் இந்துக்களையும் ஒழித்து விடவேண்டும் என்ற மிருகத்தனமான வெறியாட்டம்
  • அதற்குத் துணைப்போகும் பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள்
  • ஜிஹாதி என்ற பயங்கரவாதத்தைப் பின்ன்பற்றும் இஸ்லாமிஸ்டுகள்

என்று காரணங்கள் பல வெளிப்படுகின்றன.

Warning to Hindus by the Tigers of Allah

இங்கு “ஒரு பருக்கை” என்பது, முஸ்லிம்களுக்கு எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் ஒரு காரணம் சொன்னால், மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

  • இந்துக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது,
  • பெண்கள் பர்தா அணிந்து கொள்ளவேண்டும்,
  • தொழுகை நேரத்தில் அவர்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது,
  • அவர்கள் கடைகளைக் கூட மூடி வைக்க வேண்டும், ஏனெனில், திறந்து வைத்தால் மக்கள் நடமாட்டம் இருக்கும்,
    • போக்குவரத்து இருக்கும், சப்தம் வரும்,
    • அதனால் அவர்களது கவனம் சிதறும்,
    • தொழுகைக்கு பாதிப்பு ஏற்படும்,
    • இல்லை தெருக்களில் ஆக்கிரமித்டுக் கொண்டு தொழுகை செய்ய முடியாது

என்று காரணங்களை ஒருபக்கத்தில் அடுக்கிக் கொண்டே போவார்கள். மறுபக்கத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையென்றால், வெளியேறுங்கள் என்று அறிக்கைகள் விடுவார்கள்; துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பார்கள்; மசூதிகளினின்றும் ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவிப்பார்கள். பிறகு,

  • இந்து பெண்களை கலாட்டா செய்வது
    • பயமுறுத்துவது
    • பின்தொடர்வது
    • காதலிப்பேன் என்பது[1]
    • மணந்து கொள் என்று வற்புறுத்துவது[2]
    • இந்துக்களை மிரட்டுவது
      • நான்கு-ஐந்து பேர்கள் சேர்ந்து கொண்டு மிரட்டுவது
      • மதம் மாறச் சொல்லி மிரட்டுவது.
      • வீடு, சொத்துக்களை விற்றுவிடு என்பது
        • கடைகளில் வந்து மிரட்டுவது
        • வாசல்களில் இடைஞ்சல்கள் செய்வது
        • கோழி, ஆடு அறுப்பது

என பலவழிகளில் தொந்தரவு கொடுத்து, மிரட்டி, வெளியேற வைப்பார்கள்[3]. மீறி இருப்பவர்கள், கொல்லப்படுவார்கள். அவர்களின் மனைவி-மகள்கள் கடத்தப் படுவார்கள்; கற்பழிக்கப்படுவார்கள், கொல்லப்படுவார்கள். இப்படி தொடர்ந்து நடக்கும் குரூரக் கொடுமைகள் தாங்காமல் ஓடியே போய்விடுவார்கள்[4]. அவ்வாறுதான், காஷ்மீரத்திலிருந்து இந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். இருக்கும் இந்துப் பெண்களுக்கும் சட்டரீதியில் பிரச்சினை ஏற்படுத்தினார்கள்[5]. காஷ்மீரப் பெண், காஷ்மீர ஆணைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும்[6] என்று மசோதாவை எடுத்துக் கொண்டு வந்தார்கள்[7]. நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்தும் பீதியைக் கிளப்பியுள்ளார்கள்[8]. தமிழக முஸ்லிம்களும் இவர்களின் உரிமைகள் பற்றி கவலைப்பட மாட்டார்கள், போராட்டம் நடத்த மாட்டார்கள்.

Warning to Hindus by the Tigers of Allah.2

ஈத் – ரம்ஜான் என்று வைத்துக் கொண்டு அரங்கேற்றப் பட்ட நாடகம்  (09-08-2013):  “இஸ்லாம்” என்ற அமைதி, ஏன் யாருக்கும் “அமைதியை” தருவதில்லை என தெரியவில்லை. காஷ்மீரைப் பொறுத்த வரைக்கும், ரம்ஜான், ஈத், என்ற சாக்கு வைத்துக் கொண்டு, வெள்ளிக் கிழமைகளில் ஜிஹாதிகள் இந்துக்களைத் தாக்குவதை புண்ணியமாக கருதுகின்றனர். கிஷ்த்வாரில், பன்டிர்னா, ஹுல்லார், குலீத் முதலிய இடங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து முஸ்லிம்கள், ஈத்-உல்-பித்ர் தொழுகைக்காக சௌகன் மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் பாகிஸ்தான் கொடிகளை கைகளில் உயரப் பிடித்துக் கொண்டு, இந்தியாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனைத்தான், இங்கிருந்த மக்கள் தட்டிக் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் இந்துக்கள் ஆகிவிட்டார்கள், ஏனெனில் முஸ்லிம்கள் தட்டிக்கேட்கமாட்டார்கள். கேட்டால் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பார்க்கள். இப்படி உரிமையுடன் வார்த்தையில் ஆரம்பித்த வாக்குவாதம், கற்களில் முடிந்திருக்கிறது. பிறகு கலவரமாகி விட்டது[9]. சில வாரங்களுக்கு முன்னர் இங்கு யாசின் மாலிக், சபிர் ஷா போன்ற பிரிவினைவாதிகளும் வந்து சென்றுள்ளனர். இது ஒரு பக்கம்.

Kishtwa rioters with PAKI flags

எங்களை கேட்க நீங்கள் யார்?: இன்னொரு பக்கம், காஷ்மீரிலிருந்து இந்துக்களை எப்படி விரடியடித்தார்களோ, அதே முறையை ஆரம்பிக்க மேற்குறிப்பிடப் பட்டபடி ஒத்திகையை ஆரம்பித்தார்கள். 09-08-2013  வெள்ளிக்கிழமை அன்று அப்படித்தான் முஸ்லிம்கள் அடாவடித்தனமான கட்டளை போட்டார்கள். ஆனால், இவர்கள் “ஈத்” ஊர்வலம் என்று தெருக்களில் கூட்டமாக சென்றார்கள். அப்பொழுது, தெருவில் சென்றுக் கொண்டிருந்த, சில இளைஞர்களை நிற்கச் சொன்னார்கள். அவர்களில் சிலர் இந்துக்கள் என்றதும், என்ன ஊர்வலத்தை தொந்தரவு செய்கிறீர்களா, என்ன கொழுப்பு என்று திட்டி, அடிக்க வந்து விட்டார்கள். தடுக்க வந்தவர்களை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி மறுபக்கம் கலவரம் ஆரம்பித்தது.  அதாவது கலவரத்தை ஆரம்பிக்க இப்பட்டி வம்பு செய்யவேண்டும்.

Kishtwa rioters with PAK flags

முஸ்லிம்கள் திட்டமிட்டு ஆரம்பித்த கலவரம்: உடனே முஸ்லிம்கள் இந்துக்களின் கடைகளைத் தாக்க ஆரம்பித்து விட்டார்கள். 50ற்கும் மேற்பட்ட இந்துக்களின் கடைகள் நாசமாகின என்ற 3-4 முஸ்லிம் கடைகள் தாம் பதிக்கப்பட்டன (13-08-2013 அன்று 120 என்று உயர்ந்து விட்டன). இதிலிருந்தே, திட்டமிட்ட செயல் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்துக்கள் கிஷ்த்வாரில் வருடாவருடம், “மைசைல் யாத்திரை” என்று செல்வார்கள். முஸ்லிம்கள் அவர்களையும் விடவில்லை. தாக்குதல்களில் இந்து யாத்திரிகர்களில் வண்டிகள் சேதமடைந்தன. இப்படி கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீஸார் தட்டிக் கேட்கவில்லை.

Location of Kisthwar in J-K and its importance

போலீஸாரும் கலவரத்தில் சேர்ந்து கொண்டார்கள்  (08-08-2013): இவற்றையெல்லாம் போலீஸார் பார்த்துக் கொண்டு இருந்தனர். உதவிக்குக் கேட்டும் ஒன்றும் செய்யவில்லை, சும்மாவே இருந்தார்கள். அதுமட்டுமல்லாது, கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் கலவரத்தில் பங்கு கொண்டுள்ளனர்[10]. இவர்கள் வியாழக்கிழமை இரவே, இந்து வீடுகளின் மீது கற்களை எறியும் போது, கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும்,  உமர் அப்துல்லா கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

 

உமர் அப்துல்லா ஆடிய நாடகம்: இங்கு 60% முஸ்லிம்கள், 40% இந்துக்கள் இருக்கின்றார்கள். கடந்த தேர்தலில் பிஜேபியின் வேட்பாளர் சுனில் சர்மா சுமார் 2,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், சஜன் அஹமது கிச்சுலூ [Sajad Ahmad Kichloo] என்ற தேசிய மாநாடு கட்சி வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.  வருடாவருடம், “ஈத்” பண்டிகைக்கு முன்னர் இங்கு அமைதி குலைக்க வேலைகள் நடந்து வருகிறது என்பது தெரிந்த விஷயமே என்கிறார்கள்[11]. அதாவது, அப்படி நடக்கும் என்று தெரிந்தே இருக்கிறது. உமர் அப்துல்லா ஊடகங்களில் அமைதியாக இருங்கள், வதந்திகளை நம்பாதீர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்[12]. ஒரு இந்து, ஒரு முஸ்லிம் கலவரத்தில் கொல்லப்பட்டார்களாம். இரு போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து, வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்களாம். “ஒரு இந்து-ஓரு முஸ்லிம்” நீக்கப்பட்டதால், இன்னொரு  “ஒரு இந்து-ஓரு முஸ்லிம்” போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்[13]. முதலமைச்சராக இருப்பதினால், இவருக்கு எல்லா விஷயங்களும் தெரிந்துதான் உள்ளது. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காமல், அருண் ஜெயிட்லி கிஷ்த்வாருக்கு வருகிறார் என்று அறிந்ததும், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அவரை விமானநிலையத்திலிருந்து அப்படியே திருப்பி அனுப்பப் பட்டார்[14]. வியாக்கிழமை அன்றே இவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால், கலவரத்தைத் தடுத்திருக்கலாமே? அப்படியென்றால், கலவரம் நடந்தால், அரசியலாக்கலாம் என்ற எண்ணம் உமருக்குத்தான் உள்ளது என்றாகிறது.

Kishtwa riot - perpetrators and actors

உமரின்டுவிட்டகுறும்பு, வம்பு, குதர்க்கம்: உமர் திடீரென்று காஷ்மீரின் “திவிஜய சிங்” ஆகிவிட்டார், இல்லை அவரையும் மிஞ்சி விட்டார். அருண் ஜைட்லியை திரும்ப அனுப்பியதல்லாமல், டுவிட்டர் மூலம் சீண்டிய்யுள்ள்ளார். 2002 என்று சொல்லி வம்புக்கு இழுக்கிறார்.

Omar Abdullah        ✔ @abdullah_omar

Would Jaitley be so kind as to inform Parliament whether the Gujarat Home Minister or MOS Home resigned or even offered to in 2002!

1:43 PM – 12 Aug 2013

 

Omar Abdullah        ✔ @abdullah_omar

3 unfortunate deaths – 1 Hindu, 2 Muslim & we’ve a judicial inquiry with my Minister resigning. Would the BJP care to recount 2002 response.

1:45 PM – 12 Aug 2013

 

Omar Abdullah        ✔ @abdullah_omar

Oh that’s right they can’t because their star PM hopeful waited days to call out the army & has yet to apologise. Hypocrites.

1:47 PM – 12 Aug 2013

 

இப்பொழுது, அவரது உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய்ட்துள்ளாராம். பிஜேபி ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார். “வேடதாரிகள்” என்று விமர்சிக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

13-08-2013


[5] டைம்ஸ் ஆஃப் இந்தியா, Row over bill denying rights to women marrying outside J&K, TIMES NEWS NETWORK & AGENCIES, Mar 14, 2010, 03.56am IST, மேலும் விவரங்களுக்கு,

http://timesofindia.indiatimes.com/india/Row-over-bill-denying-rights-to-women-marrying-outside-JK/articleshow/5681323.cms

[9] Official sources said people from the peripheral villages of Bandirna, Hullar and Kuleed were heading for the spacious Chowgan Grounds to join congregational Eid-ul-Fitr prayers around 10 a.m., when a section of local Hindus objected to their pro-azadi slogans. What began as an altercation culminated in a major clash in which people from both sides resorted to intense stone pelting.

http://www.thehindu.com/news/national/curfew-in-jk-after-communal-clashes/article5006660.ece

[10] Even as over 10,000 people performed Eid prayers, some miscreants ransacked commercial properties and set shops and vehicles on fire. The district headquarters turned into a battlefield with even government-controlled Village Defence Committee (VDC) members and Special Police Officers joining the violence, in some cases even using firearms. Private firing with .12 bore guns was also reported. Some VDC members and SPOs had also vitiated the atmosphere, a few of whom were caught red-handed throwing stones at select houses on Thursday night.

http://www.thehindu.com/news/national/curfew-in-jk-after-communal-clashes/article5006660.ece