சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!
ஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம்! இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல!
ஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].
ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம் கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6]! இப்படி பேசியுள்ளது சிதம்பரம்! எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்படி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது!
கேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத கருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்படி சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].
காஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.
பிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா?”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது! ஆகையால் இரு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் முஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].
அருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].
போலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர்! கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம்! ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய விவாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].
[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.
[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி–இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்!, http://islamindia.wordpress.com/2010/10/21/காஷ்மீர-இந்துக்கள்-பிரிவு/
[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்!
[5] Chidambaram said the authorities had videographed the proceedings of the seminar and submitted them to legal advisers for an opinion on whether laws were violated. “If it is established prima facie that the laws have been violated, Delhi police will take action in accordance with the law,” he said.
[6] http://timesofindia.indiatimes.com/india/Geelani-will-be-punished-if-sedition-charges-proved-Chidambaram/articleshow/6794772.cms
[9] http://www.indianexpress.com/news/Geelani-s-azaadi-talk-angers-BJP–interlocutor-says-let-s-be-mature/701315
[10] http://sify.com/news/kashmiri-hindus-protest-geelani-event-in-delhi-news-national-kkvtOggiebf.html
[13] http://www.indianexpress.com/news/geelanis-azaadi-talk-angers-bjp-interlocutor-says-lets-be-mature/701315/2
[14] http://www.mid-day.com/news/2010/oct/221010-News-Delhi-Hurriyat-leader-heckled-press-conference-Shah.htm
[16] Hurriyat hawk Syed Ali Shah Geelani, writer and Maoist sympathiser Arundhati Roy and parliament attack accused SAR Geelani were speakers at the event.
[17] She compared the protests in the Kashmir to the Naxals operating in central India and to even the ‘Narmada Bachao Andolan’. Roy said people everywhere are fighting for their rights.
[18] “You have to look for tactical, political and intellectual alliances and think about justice, otherwise you will be like fish swimming in a tank with strong walls and ultimately getting tired,” she said. Ms. Roy said she did not want young people in Kashmir to be let down even by their own leaders. She said the idea of justice linked struggles of people in Nagaland, Manipur, Chhattisgarh, Jharkhand and Orissa to the people of Kashmir.
[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:
http://www.global-sisterhood-network.org/content/view/2178/59/
[20] http://www.hindustantimes.com/Cops-to-look-into-Geelani-s-speech-for-any-offence/Article1-616582.aspx
குறிச்சொற்கள்: அருந்ததி ராய், இந்திய விரோதிகள், உள்துறை சூழ்ச்சி மன்னன், எல்.டி.ஜி. அரங்கம், எஸ். ஏ.ஆர். ஜிலானி, ஒற்றர், காங்கிரஸின் துரோகம், குருசரண்சிங், சித்தாந்த ஒற்றர், சீக்கியப் பிரிவினைவாதிகள், சூதுவாதுள்ள சிறியன், தேசத் துரோகம், தேசவிரோதம், வராவர ராவ்
11:08 பிப இல் ஒக்ரோபர் 23, 2010 |
Chidambaram’s link with all anti-national forces are revealed day by day. Perhaps, he wants to consolidate his position at state and national level, if any political change takes place.
It is well known fact that speech of every anti-national / seperatist leader is recorded.
And chidambaram is not an idiot for not understanding the speech of these renegades living in India as “Indians”!
Even USA would not have left this type of traitors.
But in India, they are not only encouraged but protected!
9:51 முப இல் ஒக்ரோபர் 28, 2010 |
In Tamilnadu, even for people like Seeman or some unknown, the police records the proceedings!
Therefore, it is a wonder how Chidambaram did not know that the proceedings of such anti-national seminar was not recorded by the Delhi police.
As now, they are ready, why he should delay them from taking action?
5:53 முப இல் ஒக்ரோபர் 27, 2010 |
When Shivaraj Patil spoiled the condition in one way, Chidambaram has been aiding and abeting the jihadis and Islamic fundamentalists.
Perhaps, Shivaraj Patil is better than Chidambaram, as situation was totally under the control of foreign jihadis at that time, but now, Chidambaram was just playing fiddle, when they have already started bombarding the borders!
9:32 முப இல் ஒக்ரோபர் 31, 2010 |
[…] [3] வேதபிரகாஷ், சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!, https://secularsim.wordpress.com/2010/10/23/354/ […]