Posts Tagged ‘காஷ்மீர்’

முஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உயிரிழந்தவர்கள் முஸ்லிம்களைவிட தாழ்ந்தவர்களா?

செப்ரெம்பர் 18, 2013

முஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உயிரிழந்தவர்கள் முஸ்லிம்களைவிட தாழ்ந்தவர்களா?

 

முஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உயிரிழந்தவர்கள் முஸ்லிம்களைவிட தாழ்ந்தவர்களா? இக்கேள்வி உச்சநீதி மன்றத்தால் மறைமுகமாக எழுப்பப்பட்டுள்ளது. 370ன் படி விசேஷ அந்தஸ்து உள்ளது என்பதால் மனிதர்களின் உயிர்களை வித்தியாசமாக மதிப்பிட முடியாது என்றும் உச்சநீதி மன்றம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தியாகம்  செய்த  வீரர்களின்  குடும்பங்களுக்கு  நிதியுதவி  செய்வதில் பாரபட்சம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு, கலவரத்தை அடக்குதல், தீவிரவாதிகளை சமாளித்தல் என பல காரியங்களில் ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள், என பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து, தொலைதூர ஊர்கள்-கிராமங்களினின்று வேலைக்குச் சேர்ந்து, இங்கு கடமையை செய்து வரும் வீரர்களாக இருக்கின்றனர். அவர்கள் பல மொழிகள் பேசும், மதங்களால் வேறுபட்டவர்களாகக் கூட இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்று பார்த்து கடமையைச் செய்து வரவில்லை. இந்தியநாட்டிற்கு, இந்திய மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று தான் கடமையைச் செய்து வருகிறார்கள். ஆனால், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், இந்தியவிரோதிகள் என்று பலவிதமான குழுக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வருகின்றன என்பதால், அவர்களுடன் போராடும் போது, பலர் இறக்க நேரிடுகிறது. அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. ஆனால், இப்பொழுது கிஸ்த்வார் பகுதியில் ஏற்பட்ட இறப்புகளுக்கு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குறைவாகத்தான் நிதியுதவி கொடுப்போம், ஏனெனில் இறந்தவர்கள் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இங்கு வாழ்பவர்களும் இல்லை, இங்கு நிரந்தரமாக வசிக்கும் மக்களும் அல்லர், என்று வாதிட்டு, நிதியை குறைத்துக் கொடுக்க முயற்சித்துள்ளது.

 

பொதுநல  வழக்கும்,  மதவாத பிடிவாதமும்: கிஸ்த்வார் கலவரத்தை அடக்க வீரர்கள் அமர்த்தப் பட்டபோது[1], இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தகுந்த இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது[2]. அதற்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சார்பாக தாக்குதல் செய்யப்பட்ட தன்னிலை விளக்க பிரமாண அறிக்கையில், பாரபட்சம் மிக்க வாதங்கள் இடம் பெற்றன. எந்த 370 வேண்டும் என்கிறார்களோ,   புனிதம் என்று போற்றுகிறார்களோ, அதனை வைத்தே இந்தியர்களை பிரித்துப் பார்க்க முயன்றிருக்கிறார்கள். இதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த போலீசாரைவிட வெளிமாநிலத்தவர் இறக்க நேரிடும் போது, இழப்பீட்டுத் தொகை குறைவாகக் கொடுக்கப்பட்டது. இந்த பாரபட்ச போக்கை எதிர்த்துதான் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

 

உமர் அப்துல்லா பாரபட்ச போக்கை எதிர்த்து வழக்கு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு, கலவரத்தை அடக்குதல், தீவிரவாதிகளை சமாளித்தல் என பல காரியங்களில் ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள், என பலர் ஈடுபட்டு உயிரிழந்தவர்களையே இவ்வாறு நடத்துகின்றனர் என்பது ஏன் என்பதனை அறிந்து கொள்ளவேண்டும். அவர்களது வாதம், “ஏனெனில் எங்களுக்கு இந்திய அரசிய நிர்ணய சட்டத்தின் சரத்து 370ன் படி விசேஷ அந்தஸ்து, உரிமைகள் எல்லாம் உள்ளன[3]. அவை மற்ற மாநிலத்தவர்களுக்கு அளிக்கமுடியாது. அவ்வாறு செய்வது எங்களது உரிமைகளை, சட்ட அந்தஸ்த்தை குறைப்பதாகும், மீறுவதாகும்”, என்றெல்லாம், உமர் அப்துல்லா அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட ஆவணங்களில் வாதங்கள் வைக்கப்பட்டிருந்தன[4]. அப்படியென்றால், ஏன் அவர்கள் அங்கு வந்து சாகவேண்டும்? ஏன் அம்மாநிலம் மற்ற மாநிலங்களை எதிர்பார்த்து வாழ வேண்டும்?

 

“Non-state” and “state” / “Non-state players” and “state players”: “Non-state” என்று இம்மாநிலத்தை அல்லாதவர் என்று குறிப்பிட்டு அத்தகைய வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. “Non-state” என்ற சொற்றொடர் “Non-state players” என்று விஷமத்தனமாக, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் விசயத்திலும் உபயோகப் படுத்துவதை கவனிக்கவேண்டும். அதாவது, அம்மாநிலத்தில் உள்ளவர்கள் அத்தகைய காரியங்களை செய்வதில்லை, வெளி-இடங்களினின்று, வெளி-மாநிலங்களினின்று, வெளி-நாடுகளினின்று வந்தவர்கள் தாம் அவ்வாறு செய்கின்றனர். அதேபோல, இந்த ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்களும் வெளி-மாநிலத்தவர்கள் என்பதால், அவ்வாறான அடைமொழி கொடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஒருவேளை நீதிபதிகள் இத்தகைய சொற்றொடர் பிரயோகத்தின் விஷத்தன்மையை, விசயத்தன்மையோடு பார்த்து அதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும் நினைத்திருக்கலாம்.

 

உங்களது மாநிலத்தை  மற்றவர்கள்  உதவி  இல்லாமல்  நிர்வகிக்க  முடியுமா?”   இப்படி  கேட்டது  உச்சநீதி  மன்றம்:  “உங்களது மாநிலத்தை மற்றவர்கள் உதவி இல்லாமல் நிர்வகிக்க முடியுமா? உங்களுக்கு அரசிய நிர்ணய சட்டத்தின் படி சிறப்பு அந்தஸ்து உள்ளது. ஆனால், மனிதர்களின் உயிர்களை வித்தியாசமாக மதிப்பிட முடியாது. அவர்கள் உங்கள் மாநிலத்தில் உயிரை இழந்துள்ளார்கள், தியாகம் செய்துள்ளார்கள். பிறகு எப்படி அவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?”, என்று தலைமை நீதிபது பி. சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சனா தேசாய் என்று எடுத்துக் காட்டி[5], மாநில செயலரை, வேறு தன்னிலை விளக்க பிரமாண அறிக்கையை தாக்குதல் செய்ய உத்தரவிட்டார். தவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்காக வாதிட்ட வக்கிலை நோக்கி, “உமது கட்சிக்காரருக்கு தாங்கள் சரியான முறையில் அறிவுரை, ஆலோசனை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. நாங்கள் ஏற்கெனவே பல வழக்குகளின் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஒத்துழைக்கவேண்டும்”, என்றும் நீதிமன்றம் அறிவுரைத்தது[6]. இங்கு மிகவும் வெளிப்படையாக –

  • உமது கட்சிக்காரருக்கு தாங்கள் சரியான முறையில் அறிவுரை, ஆலோசனை கொடுக்கவில்லை என்று தெரிகிறது” – மாநிலத்தின் விஷேசட்த் தன்மை இந்தியாவிற்கு எதிராக இருக்க முடியாது.
  • நாங்கள் ஏற்கெனவே பல வழக்குகளின் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஒத்துழைக்கவேண்டும்” – அதாவது, இத்தகைய தேவையில்லாத பிரச்சினைகளைக் கிளப்பி விட்டுக் கொண்டு, எங்களது நேரத்தை வீணாக்க வேண்டம் என்று சொல்லியுள்ளனர்.
  • உங்களது மாநிலத்தை மற்றவர்கள் உதவி இல்லாமல் நிர்வகிக்க முடியுமா?” – பெரும்பாலான சட்டங்கள், விதிகள் முதலியவற்றில் “இச்சட்டம் / இவ்விதிகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பொறுந்தாது” என்று ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்திய மக்களின் வரிப்பணம் தான் அம்மாநிலத்திற்கான செலவிற்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

 

கிறிஸ்தவர்  முஸ்லிம்களுக்காகவா  திடுகிறாரா  அல்லது  செக்யுலார்  இந்திய  சட்டங்களை  வளைக்கிறாரா?: சுனில் பெர்னான்டிஸ் என்ற வக்கில் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அபிடேவிட்டில், மாநில போலீஸாருக்கு அளிக்கப்பட்ட “இறப்பு உதவியை” நியாயப்படுத்தி வாதங்கள் பதிவு செய்யப்பட்டன[7]. அவர்கள் இங்கேயே இருப்பவர்கள், இருக்க வேண்டியவர்கள், ஆனால், மற்ற ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள் இங்கிருந்து செல்லவேண்டியவர்கள். அதனால், இம்மாநில போலீஸாருக்குக் கொடுக்கப்படும் தொகை, மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள் இம்மாநிலத்தவர்கள் அல்லர் என்று வாதிடப்பட்டது. உண்மையில், வாதிடுபவர்-வாதி-பிரதிவாதி இவர்கள் எல்லோரும் எம்மதத்தவர் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், இப்பொழுது அவையெல்லாம் பார்க்கப் படுகின்றன. ஏன் நீதிபதிகள் நியமனமே மதம், ஜாதிவாரியாகத்தான் செய்யப்படுகின்றன. அதற்கு செக்யூலரிஸ அரசியல்வாதிகள் பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இங்கு அத்தகைய விவரங்களும் கவனிக்க வேண்டியதாகிறது.

 

மதரீதியில்  இயங்கிவரும்   ஜம்முகாஷ்மீர  அரசு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசிய நிர்ணய சட்டத்தின் சரத்து 370ன் படி விசேஷ அந்தஸ்து உள்ளது என்பது எல்லோரும் அறிந்த விசயம் தான். அதிலும் பிஜேபி, அதனை நீக்கவேண்டும் என்று கேட்டுவருவதால், இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகள் எதிர்த்து வருவதும் தெரிந்த கததான். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, சில உத்திரவாதங்கள், சரத்துகள் சேர்க்கப் பட்டு, அந்த 370 பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால், 1980களினின்று முஸ்லிம் அடிப்படைவாதம் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, இந்துக்களின் உரிமைகள் அடியோடு பறிக்கப்பட்டன; காஷ்மீர் பகுதிகளினின்று கொடுமைப் படுத்தி, சித்திரவதை செய்யப்பட்டு, பயமுறுத்தி வெளியேற்றப்பட்டு விட்டனர். இருக்கின்றவர்களையும் கட்டுப்படுத்த, இம்மாநில பெண்கள், இம்மாநில ஆண்களைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால் சொத்துரிமை கிடைக்காது என்ற சட்டத்தையும் எடுத்து வர முயற்சித்தனர். ஏனெனில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தவர் அல்லாதவர் அங்கு சொத்து எதையும் வாங்க முடியாது. எனவே, வெளிமாநிலத்தவர் அவ்வாறு திருமணம் செய்து கொண்டால், அவருக்கு எந்த சொத்திலும் உரிமை கிடைக்காது. ஆனால், செக்யூலரிஸ சித்தாந்திகள் இவற்றையெல்லாம் அதிகமாக ஊடகங்களில் விவாதிப்பதில்லை. ஏனெனில், அது அவர்கள் கடைபிடுத்து வரும் செக்யூலரிஸத்திற்கு ஓவ்வாதது என்று அமைதி காக்கின்றனர்.

 

காஷ்மீரப்  பெண்களும்,   சொத்துகளும், சொத்துரிமைகளும்[8]: தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், இந்தியவிரோதிகள் என்று பலவிதமான குழுக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி இந்துக்களை விரட்டியடித்துள்ளனர். அந்த குரூரமான செயல்பாடுகளில் இந்து பெண்கள் லட்சக்கணக்கில் பலவந்தமாக தங்களது பெற்றோரிடத்திலிருந்து, சகோதரர்களிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து, காதலர்களிடமிருந்து, குழந்தைகளிடமிருந்துப் பிரித்திருக்கின்றது; அவர்கள் முன்பே அப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டிருக்கிறது; அதனால் பல இந்து பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; எதிர்த்தவர்கள்-பணியாதவர்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; …………….அவ்வாறு பாதிக்கப்பட்டு வெளியேறினாலும், கோடிக்கணக்கான சொத்துகள் அங்குதான் உள்ளன. எனவே, எப்படி அவற்றை அபகரிக்கலாம், சட்டரீதியாக காஷ்மீரத்திற்கு சேர்க்கலாம் என்ற மனப்பாங்கில் தான் அந்த மசோதா எடுத்துவரப்பட்டது.

 

காஷ்மீரப்   போர்வையில்  இந்துபெண்களின்  உரிமைகளைப்  பரிக்க  எடுத்து  வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா “காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கென்று அளிக்கப் பட்டுள்ள 370 சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது, அவ்வாறு அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு, அம்மாநிலத்தின் குடியுரிமையை பெற்றிருந்தால், அது அச்சரத்தையே நீர்த்து விடும். ஆகையால் காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்து கொள்ளவேண்டும்”, என்பதுதான்!

 

மாநிலத்திலிருந்து  விரட்டி  விட்டப்பிறகும், இந்து பெண்ணுரிமைகளைப்   பறிக்க  திட்டமிட்ட  மசோதா: அதாவது இந்து பெண்மணிகள் கூட தமக்கு தம் சொத்துரிமை, வேலையுரிமை வேண்டுமென்றால், காஷ்மீர ஆணைத் தான் மணந்து கொள்ளவேண்டும், அதாவது இந்து கிடைக்காவிட்டால் முஸ்லீமை மணந்துகொள்ளவேண்டும். இவ்வாறு முழுவதுமாக அம்மாநிலத்தை இஸ்லாம் மயமாக்க வேண்டும் என்பது தான் எண்ணம். அதனை தொடர்ந்து வரும், தீவிரவாத-பயங்கரவாத காரியங்களோடு, சட்டரீதியில் அமூல் படுத்த வேண்டும் என்ற ஜிஹாதித்தனம் தான் இதிலும் வெளிப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், தமக்கு எதிர்மறை விளம்பரம் கிடைக்கு என்ற்பதால், சட்டரீதியிலான பிரச்சினை என்று, அந்த மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டனர்[9]. இப்பொழுதும் அதே கோணத்தில் தான், இம்மாநிலத்தவர் இல்லையென்றால், அத்தொகைக் கிடைக்காது, என்று குரூரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர் என்பது கவனிக்கத் தக்கது.

 

கிஷ்த்வார் கலவரத்தின் பின்னணி[10]: கிஷ்த்வார் கலவரம் என்பது ஒரு பானைக்கு ஒரு பருக்கை என்பார்களே அதுபோல. இங்கு “ஒரு பானை” என்பது –

  • காஷ்மீரத்தில் நடக்கும் மதவாத ஆட்சி
  • மத்தியில் நடக்கும் செக்யூலரிஸ ஆட்சி
  • தீவிரவாதிகளின் ஆதிக்கம்
  • இந்துக்களை மனிதர்களாகவே மதிக்காத இஸ்லாமிய அடிப்படைவாதம்
  • இருக்கும் இந்துக்களையும் ஒழித்து விடவேண்டும் என்ற மிருகத்தனமான வெறியாட்டம்
  • அதற்குத் துணைப்போகும் பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள்
  • ஜிஹாதி என்ற பயங்கரவாதத்தைப் பின்பற்றும் இஸ்லாமிஸ்டுகள்

என்று காரணங்கள் பல வெளிப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கவீங்கே படிக்கவும்[11]. இப்படி மதவாதத்தை “செக்யூலரிஸம்” என்று இந்தியர்களை ஏமாற்றி வந்து, நீதித்துறையையும் ஏமாற்ற முயன்ற போது, வசமாக மாட்டிக் கொண்டார்கள் எனலாம்.

 

© வேதபிரகாஷ்

18-09-2013


[1] The bench was hearing a PIL seeking a direction to the Centre and Jammu and Kashmir government to provide adequate security and safe passage to pilgrims stranded due to curfew in Kishtwar where communal clashes had taken place on the day of Eid-ul-Fitr.

http://zeenews.india.com/news/jammu-and-kashmir/sc-raps-jandk-government-for-differential-compensation_876959.html

[3] The state, at the same time, also justified its stand of differential compensation policy by invoking the Instrument of Accession and the Special Status granted to it by Article 370 of the Constitution. “It is most respectfully submitted that where ex-gratia payments are made by way of discretionary relief, no legally enforceable right is vested in any beneficiary to claim equally or identical treatment with another beneficiary of ex-gratia reliefs under the same policy,” the affidavit said.

http://www.thehindu.com/news/national/other-states/sc-rape-jk-govt-for-differential-compensation/article5134895.ece

[6] “You (lawyer for J&K) are not properly advising your client. You must cooperate when you see we are burdened with so many cases,” the bench, also comprising Justice Ranjana Prakash Desai, said.

http://jammu.greaterkashmir.com/news/2013/Sep/17/sc-raps-jk-for-differential-compensation–45.asp

[9] Notwithstanding the stand of ruling National Conference on the issue, Jammu & Kashmir Government has said it has no plans to re-introduce the Permanent Resident Women Disqualification Bill in near future.

http://www.greaterkashmir.com/news/2012/jun/17/govt-dumps-permanent-resident-women-disqualification-bill-58.asp

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)

ஓகஸ்ட் 13, 2013

1990 திரும்ப நடக்காது – அதாவது இந்துக்கள் கிஷ்த்வாரிலிருந்து விரட்டியடிக்க மாட்டார்கள் – சொல்வது சிதம்பரம்(2)

J and K divided map

ஜம்முவில் நடவடிக்கை எடுக்கும் உமருக்கு,  ஏன் காஷ்மீரில் எடுக்கத் தெரியவில்லை: ரம்ஜானை சாக்காக வைத்துக் கொண்டு, கிஷ்த்வாரில் முஸ்லிம்கள் கலவரத்தை ஏற்படுத்தினால், காஷ்மீரில் உள்ள ஊக்குவிக்கும் தீவிரவாதிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல், ஜம்முவில் எட்டு மாவட்டங்களில் [Jammu, Kathua, Samba, Udhampur, Reasi, Rajouri, Doda and Kishtwar districts] ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளாராம்[1]. அதாவது இந்துக்கள் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு. இந்து யாத்ரிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வழக்கம் போல கலவரத்தை ஆராய உத்தரவிட்டு, அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்[2]. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்குமாம். பிறகு, பிஜேபி 2008ல் எப்படி அமர்நாத் யாத்திரையை அரசியலாக்கியதோ, அதே போல செய்ய முயல்கிறது என்கிறார்[3]. குரஜராத் கலவரத்தைப் பற்றியும் இழுத்துள்ளார்[4]. இவ்வளவும் பேசிய நிலையில், அந்த சஜன் அஹமது கிச்சுலூ ராஜினாமா செய்து விட்டார் என்ற செய்தியும் வருகிறது[5]. ஆனால், ஒவ்வொருவருடமும், இவர்கள் தாம் அமர்நாத் யாத்திரிகர்களை மிரட்டி வருகிறார்கள்[6].

Kishtwa riot - perpetrators and actors

சஜன் அஹமது கிச்சுலூவின் வேடங்கள்: முன்னமே கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் கலவரத்தில் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடப் பட்டது. மேலும் குறிப்பிட்ட 0.12 குழல் கொண்ட துப்பாக்கி தனியார் வைத்துள்ள துப்பாக்கியாகும். அதன் மூலமாகத்தான் ஒரு இந்து கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஷாஹன் வணிக வளாகத்தின் ஒரு கடையிலிருந்து 40 துப்பாக்கிகள், 1500 முறை சுடக்கூடிய துப்பாக்கிக் குண்டுகள் முதலியன கைப்பற்றப் பட்டன. அந்த வளாகம் சஜன் அஹமது கிச்சுலூவின் மகனுக்கு சொந்தமானது[7].  மேலும் கிச்சுலூவின் பாதுகாப்பு அதிகாரிகளுள் ஒருவனும்[8] இந்த கலவரம் ஆரம்பிக்க தூண்டுதலாக இருந்தான் என்று செய்திகள் சொல்கின்றன. இதிலிருந்து கிச்சுலூவின் தொடர்பு அறியப்படுகிறது. எதிர்கட்சியினர், இவற்றையெல்லாம், ஏற்கெனவே எடுத்துக் காட்டிஉள்ளனர்.

Kishtwa riot - police vehicle burnt

காணாமல் போன உள்துறை அமைச்சரும்,  இரட்டை வேடம் போடும் நிதியமைச்சரும்: இந்தியாவிற்கு உபயோகமான, பிரயோஜனமான, துணிவுள்ள, திராணியுள்ள யாதாவது, ஒரு உள்துறை அமைச்சர் சோனியா காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறாரா என்று பார்த்தால், இல்லை. இந்த கேடுகெட்ட சுசில் குமார் சிண்டே காணாமல் போய்விட்டார். பாவம், உடம்பு சரியில்லையாம். நல்லவேளை, சிவராஜ் பாட்டில் மாதரி வேடம் போடவில்லை. உடனே, சிதம்பரம் வநது விட்டார். பிரச்சினை வரக்கூடாது என்பதால், எழுதிவைத்ததை படித்தார், “1990 மாதிரி நடக்காது. இந்துக்கள் விரட்டப்படமாட்டார்கள்”, என்றெல்லாம் படித்துக் காட்டினார்[9]. அப்படியென்றால், இந்துக்கள் விரட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் அல்லது தகவல் வந்துள்ளதா? பிறகு எப்படி மெத்தனமாக இருக்கலாம்?

Hizbul Mujahidin surrender in Kishtwar

கிஷ்த்வார் தீவிரவாதிகளின் இடமாகக் கருதப் பட்டது: முன்பு ஹிஜ்புல் தீவிரவாதி இங்கு சரணடைந்துள்ளான். தில்லி குண்டுவெடிப்பின் போது (செப்டம்பர் 2011) அனுப்பப்பட்ட இ-மெயில் இங்கிருந்து தான் அனுப்பப்பட்டது[10]. ஆக்டோபர் 2012ல் தீவிரவாதிகளின் இடமும் கண்டுபிடிக்கப்படது[11]. சையது அலி ஜிலானி என்ற ஹுரியத் பிரிவினைவாதி ஆகஸ்ட் 14 மற்றும் 15 முழு ஹர்தாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறான். இவையெல்லாம் பிரச்சினை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் இயங்குவது தான் தெரிகிறது. 60% இருக்கும் முஸ்லிம் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றுதான், முந்தைய முறைகளை கையாளுகிறார்கள்.

Kishtwa riot - shops burnt

சையது அலி ஜிலானியின் மிரட்டல்கள்: சொல்லி வைத்தால் போல, சையது அலி ஜிலானி, கிராம பாதுகாப்பு கமிட்டி [Village Defence Committee (VDC) ] அங்கத்தினர்கள் மற்றும் [Special Police Officers (SPO)] சிறப்புப் போலீஸ் அதிகாரிகள் பிரச்சினை வந்தவுடன், உடனடியாக அவற்றைக் கலைத்துவிட வேண்டும் என்று சொல்கிறான். ஏனென்றால், அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஜம்முவில் போர் தொடுக்கிறார்களாம், அவர்களை அழித்து “சுத்தப்படுத்துகிறார்களாம்”, அவர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்றும் குற்றஞ்சாட்டுகிறான். உமர் அப்துல்லா தன்னுடைய தவறுகளுக்காக வருத்தம் தெரிவிக்கின்றார் மற்றும் தீவைத்தல், கற்பழிப்பு, கொலைசெய்தல் முதலியோர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார், என்றெல்லாம் பேசுகிறார். அதாவது, இந்துக்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்கிறான்[12]. வயதாகியும், மரியாதையாக இருக்க வேண்டிய நிலையில், இவ்வாறெல்லாம், வெறித்தனமாக பேசுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது. வேடிக்கை என்னவென்றால், கம்யூனிஸ்டுகளும் உடனே இதே பாட்டை பாட ஆரம்பித்துள்ளார்கள்.

kashmiri-pandit-cries-for-human-rights.2

திக் விஜய சிங் ரோகம் பிடித்துள்ள கம்யூனிஸ்டுகள்: “உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், உயிர்பலியையும், பொருட்சேதத்தையும் தடுத்திருக்கலாம்”, ஏன்று சொல்லிவிட்டு, “பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி தாம் தூண்டிவிட்டு, சிறுபான்மையினரின் வீடுகள்-கடைகளை தாக்குமாறு செய்கிறார்கள்”, என்று வேறு அறிக்கை விட்டிருக்கிறார்கள்[13]. வேடிக்கை என்னவென்றால், கிஷ்த்வாரில் இந்துக்கள்தாம் சிறுபான்மையினர். ஆகவே, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களூக்கே தெரியவில்லை போலும். பாகிஸ்தான் கொடிகளை எடுத்டுச் சென்றது அவர்களுக்குத் தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுபியதும் தெரியவில்லை. ஆனால், முரணாக இப்படி பேசுவதற்கு தெரிந்திருக்கிறது. கம்யூனிஸ்டுகளும் திக்விஜய் மாதிரியே பேச ஆரம்பித்திருப்பது வேடிக்கையே.

kashmiri-pandit-cries-for-human-rights.3

செக்யூலரிஸத்தால் வஞ்சிக்கப் படும் இந்துக்கள்: இந்துக்கள் தாக்கபடுகின்றனர் எனும் போது, அதனை வகுப்புவாதப் பிரச்சினை என்று செக்யூலார் ரீதியில் விட்டுவிட முடியாது. கடந்த 60-70 ஆண்டுகள் நிகழ்சிகளே, அவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் விளைவு, ஜிஹாதிகளின் உச்சக்கட்ட நடவடிக்கைகள், முஸ்லிம்களின் இந்துவொரோத செயல்கள் என்று தான் மெய்ப்பிக்கின்றன. பற்பல நேரங்களில்  ஆங்கில-இந்தி செனல்களில் பிரிவினைவாதிகள், ஜிஹாதிகள், அடிப்படைவாதிகள் இந்த உண்மைகளை  வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட் பட்டு வாழ்வதாக இருந்தால், பண்டிட்டுகள், அதாவது இந்துக்கள் காஷ்மீரத்திற்கு திரும்ப வரலாம் என்று தைரியமாக பேசியுள்ளனர். செக்யூலரிஸவாதிகள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அதே பிரிவினைவாதிகள், ஜிஹாதிகள், அடிப்படைவாதிகளுடன் சேர்ந்து கொண்டுதாவர்களது “மனித உரிமைகளை”ப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

kashmiri-pandit-cries-for-human-rightsஇந்துக்களின் உரிமைகளைப் பற்ரி ஏன் பேசுவதில்லை?

Kishtwar shops burnt.5தெருக்களில் நடக்கும் கலவரம், கடைகள் தாக்கப்படுதல்.

Stone-pelting young warriorsசிறிய ஜிஹாதிகளா, சிறுவர் ஜிஹாதிகளா – கல்லடிக்கும் ஜிஹாதிகள்!

The way Indian police has to work with the jihadisபதிலுக்கு கல்லடிக்கும் போலீஸ்!

Wandhma massacre21998ல் ஜிஹாதிகளால் ஈவு-இரக்கம் இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகள்

Wandhma massacre.31998ல் ஜிஹாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்ட இந்துக்கள்

Wandhma massacre4

© வேதபிரகாஷ்

13-08-2013


[3] “Their entire aim seems to be to recreate the conditions of 2008 (Amarnath land row agitation) so that they can exploit it in the subsequent parliament (polls) and then the assembly election. So, rather than appeal to political parties, which I know will fall on deaf ears, I am using the channels of the media to appeal to the people of Jammu and Kashmir not to fall prey to rumours,” Mr. Omar said.

[7] Some of the Opposition leaders also alleged that the unlicensed .12 bore guns used in the riots by some arsonists from one community were looted by unruly crowds from the shop of a Hindu inside the Shahan Complex, a commercial property registered in the name of Mr Kichloo’s son. Forty guns with 1500 rounds of ammunition were allegedly looted from the shop.

http://www.thehindu.com/news/national/jk-minister-quits-over-kishtwar-violence/article5015347.ece?ref=relatedNews

[8]  Kichloo’s personal security officer’s role in triggering violence would be one of the subjects of a judicial probe announced by the CM.

http://timesofindia.indiatimes.com/india/JK-junior-home-minister-resigns-on-Omars-nudge/articleshow/21792919.cms

[9] “The central government will extend all support to the state government to maintain law and order and ensure peace and harmony in the state,” he said. He sought to dismiss apprehensions that the situation could go out of hand and lead to a repeat of 1990 when the entire Kashmir Pandit community was forced to leave the Valley. “We will not allow repetition of 1990. We will not allow forced migration. We will not allow forced resettlement,” he asserted.

http://www.thehindu.com/news/national/will-not-allow-repeat-of-1990-in-jk-chidambaram/article5015421.ece?ref=relatedNews

[12] Hurriyat hardliner Syed Ali Geelani called for a complete shutdown on August 15 and 16 demanding immediate dissolution of village defence committees (VDC). Geelani said RSS and VDC have virtually waged a war against Muslims in Jammu and planned “ethnic cleaning” in the area. “Omar Abdullah is pleading for his wrongdoings and providing a clean chit to culprits involved in arson, rape and killing,” Geelani said in a statement.

http://timesofindia.indiatimes.com/india/JK-junior-home-minister-resigns-on-Omars-nudge/articleshow/21792919.cms

[13]  “In the meanwhile, the rioters had a free run. If the authorities had acted in time lives and property could have been saved and situation could have been brought under control. There are reports that activists of the BJP, RSS (and) VHP are fanning out and inciting people to attack houses and shops owned by the minority community,” a statement from the Communist Party of India-Marxist said.

http://www.firstpost.com/india/kishtwar-live-relief-for-thousands-of-pilgrims-as-amarnath-yatra-resumes-1024775.html

 

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா

நவம்பர் 1, 2010

சர்தார் படேல் (1875-1950) அவர்களின் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா


சர்தார் படேல் 135வது பிறந்த நாள் கொண்டாட்டம்: அக்டோபர் 31 சர்தார் வல்லபாய் படேலுடைய 135வது பிறந்த தினமாகும். வழக்கம் போல ஊடகங்கள் கூட ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. சென்ற ஆண்டு (31-10-2009) ருக்ஸானா பாட்டுப் பாடியது[1], இன்றோ அந்த லாயக்கில்லாத உள்துறை காஷ்மீரத்திற்குச் சென்று பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தச் சென்றுள்ளாதாகவும்[2], மிகவும் குறைந்த பாதுகாப்புடன் சென்றுள்ளதாகவும் உளையிட்டுக் கொண்டிருக்கின்றன. சர்தார் படேல் இல்லையென்றால், இப்பொழுதைய இந்தியா இல்லை, அதாவது 565 சிறிய-சிறிய ராஜசமஸ்தானைகளை (princely states) இணைத்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்கினர். ஆனால், இன்று யாரும் அவரை, குறிப்பாக எந்த இந்தியனும் நினைப்பதாக தெரியவில்லை. இன்று 31-10-2010, சர்தார் படேல் சாலையில், சென்னை ராஜ்பவனுக்கு எதிரில் சிலர் அவர் சிலைக்கு மாலைப்போட்டு மரியாதை செய்தபோது, யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வண்டிகள் மட்டும் வேகமாக சென்று வந்து கொண்டிருந்தன.  சிலர் கார் சன்னல்களின் வழியாக எட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒட்டிச் சென்றனர்.

Image0011

Image0011

சர்தார் படேல் செய்தது என்ன? 600ற்கும் மேற்பட்ட சிறிய ராஜசமஸ்தானைகளை இந்தியாவுடன் சேர அழைத்தப்போது, சுமார் 560 சமஸ்ததனங்கள் ஒப்புக் கொண்டன. பிறகு 565 இந்தியாவுடன் சேர / இணைய கையெழுத்திட்டு பத்திரங்களைக் கொடுத்தன. ஆனால், ஜுனாகர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் என்ற மூன்று சம்ஸ்தானங்கள்தாம் இணையவில்லை. ராணுவ நடவடிக்கை மூலம் முதலில் ஜுனாகர், பிறகு ஹைதராபாத் இணைக்கப்பட்டது. காஷ்மீர் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் நேரத்தில்தான் நேரு வந்து குழப்பிவிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றதால், அப்பிரச்சினை இன்றும் தொடர்கிறது! ஆனால், படேலை விட்டிருந்தால், காஷ்மீரத்தை அன்றே இந்தியாவுடன் சேர்த்திருப்பார். அத்தகைய உறுதி இன்றைய ஆட்சியாளர்களுக்குன் இல்லை. ஆக, இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால், அதற்கு அவர்தாம் காரணம். திபெத்திற்கு உதவ ராணுவத்தை அனுப்பலாம் என்று ஆலோசனை சொன்னார், அனால், நேரு மறுத்துவிட்டார். அதனால்தான் திபெத்தில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. தான் இறப்பதற்கு முன்பு கூட (டிசம்பர் 1950), சீனாவை நம்ப வேண்டாம் என்று நேருக்குக் கடிதம் எழுதினார். ஆனால் நேரு கேட்கவில்லை “இந்து-சீனி பாயி-பாயி” என்றார், சீனர்களோ 1962ல் படையெடுத்து எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். இப்பிரச்சினையும் இன்று தொடர்கிறது!

 

இணைதள போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள்: மாலை பாரதீய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் நல்ல ஆட்சி / நிர்வாகம் (Good Governance), ஒழுக்கம் என்றால் என்ன (What is Integrity) போன்ற தலைப்புகளில் நடந்த அகில இந்திய கட்டுரைப் போட்டிகளில் வென்ற பதினைந்து மாணவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன. பங்கு கொண்டவர்கள் எல்லாமே முக்கியமானவர்கள்தாம். எஸ்.பி. ஆம்புரோஸ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை செயலர், என். விட்டல் ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய மத்திரி விஜிலன்ஸ் கமிஷனர், கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் (ஓய்வு), முந்தைய தலைமை தேர்தல் கமிஷனர், குமரி அனந்தன், என்று பலர் கலந்து கொண்டனர்.

கட்டுரைப் போட்டிகளின் விவரங்கள்: சர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட் மற்றும் பாரதீய வித்யா பவன் சிவ்-ஜி (SIV G) வருடந்தோரும் www.siv-g.org என்ற இணைதளத்தில் ஆன்-லைன் கட்டுரைப் போட்டிகள் நடத்துகிறார்கள். 21 வயதிலுள்ள பள்ளி-கல்லூரி மாணவி-மாணவியர் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதல் மூன்று பரிசுகள் – ரொக்கப்பரிசுகள் (ரூ.5000, 3000 மற்றும் 1000), தவிர 12 ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்படுகின்றன.

சர்தார் படேலை மறப்பதேன்? இன்றைய இந்தியாவின் வரைப்படம் இப்படி இருக்கிறது என்றால் அதற்கு சர்தார் வல்லபாய் படேல் தான் காரணம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 24-31 வாரத்தை “விஜிலென்ஸ் அவேர்னஸ் வீக்” (Vigilance Awareness Week) என்று கொண்டாடும் மத்திய அரசு அலுவலகங்கள் கூட இந்நாள் அவரது பிறந்த நாள், அதை நினைவில் கொள்ளும் வகையில் தான் இவ்வாரம் அவ்வாறாகக் கொண்டாடப் படுகிறது என்பதனை ஒருவேளை அறியாதிருப்பர். ஏனெனில் காங்கிரஸ்காரர்களே அவரை அவ்வாறு இருட்டடிப்புச் செய்கின்றனர். காங்கிரஸுக்குலுள்ள, குறிப்பாக நேரு ஆதாரவாளர்கள் பட்டேலைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. உண்மையில் காந்தி சொன்னதற்காக, படேல் பல தடவை விட்டுக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, சுதந்திரத்திற்கு முன்பாக காங்கிரஸின் தலைவர் பதவிக்கு படேலிற்குதான் அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதாவது உள்ள 16 அங்கத்தினர்களில் 13 பேர் படேலையும், ஒருவர் நேருவையும் ஆதரித்தனர். இருப்பினும் காந்தி சொன்னதற்காக, படேல் விட்டுக் கொடுத்தார். அதாவது, சுதந்திரம் கிடைத்தப் பிறகு காங்கிரஸ் தலைவர் தான் பிரதம மந்திரி பதவியைப் பெறுவார் என்று அறிந்தும் விட்டுக் கொடுத்தார். அவர் இறந்தபோது, இறுதி யாத்திரையின் போது 1500க்கும் மேற்பட்ட ஐஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வந்திருந்து இறுதி மரியாதை செய்தனர். ஏனெனில் அவர்களுக்கு படேலுடைய நிர்வாகம், ஆளுமை, உறுதி முதலியவற்றைக் கண்டு அவ்வளவு மதிப்பு, மரியாதை. ஆனால், அவருக்கு 1991ல் தான் “பாரத் ரத்னா” கொடுக்கப்பட்டது!

வேதபிரகாஷ்

© 31-10-2010


[2] நவம்பர் 6ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வருவதை முன்னிட்டு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=117531