Posts Tagged ‘ஆர்பாட்டம்’

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஜூலை 18, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (4)

ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: 10-07-2023 அன்று ஆரம்பித்த கூட்டம் படநிலைகளில் நடைபெற்றது. 13-07-2023 முதல் 15-07-2023 வரை பொறுப்புள்ளவர்களுக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஊட்டியில் நடந்து வரும் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன[1]. எல்லா விவரங்களும் தெரியவில்லை என்றாலும், “தினமலர்” மூலம் இவ்விரங்கள் தெரிய வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், திருமணம் செய்து கொள்ளாமல் முழு நேரமாக பணியாற்றும், 1000க்கும் அதிகமானோர் உள்ளனர்[2]. ஆர்.எஸ்.எஸ்., தலைவர், பொதுச்செயலர் முதல் அகில இந்திய பொறுப்பாளர்கள், மாநில, மாவட்ட, தாலுகா, நகர அமைப்பாளர்கள் என, முக்கிய பொறுப்புகளில், ‘பிரசாரக்’ எனப்படும் முழுநேர ஊழியர்களே இருக்க முடியும்[3]. ஆனால், தற்போது பெரும்பாலான குடும்பங்களில், ஒரு குழந்தை மட்டுமே இருப்பதால், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு வரும் முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது[4]. அதாவது, குடும்பக் கட்டுப்பாடு அல்லது “ஒரு குழந்தை, ஒரு குடும்பம்” அங்கத்தினர் எண்ணிக்கை குறைய காரணமாகிறது என்று கணிக்கப் படுகிறது.

புதிய நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுவர்?: இது தொடர்பாக, ஊட்டியில் நடந்து வரும், ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, பல புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘இனி முழுநேர ஊழியர்களாக வருபவர்களுக்கான பணிக் காலத்தை, மூன்று ஆண்டுகளாக நிர்ணயம் செய்வோம். 30 வயதிற்குள் உள்ள பட்டப்படிப்பு முடித்த, ஆங்கிலம் தெரிந்த இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து அமைப்பாளராக நியமிக்கலாம். ‘அதற்காக, இந்திய அளவில் பயிற்சி மையத்தை துவங்கலாம்’ என்ற, புதிய திட்டத்தை சிலர் முன்வைத்துள்ளனர். ‘இத்திட்டத்தை செயல்படுத்தினால், முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவர்கள் வேறு பணிக்கு செல்லலாம் என்பதால், இதை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 30 வயதிற்குள் உள்ளவர் மூன்று ஆண்டுகள் பணி செய்து சென்று விடுவர். அப்படியென்றால், பயிற்சி பெற்று செல்லும் நிலையில் அவர்களால் என்ன பலன் என்று நுண்ணியமுறையில் ஆராய வேண்டிய நிலையும் உண்டாகிறது. வெளியே சென்ற பிறகு, அவர்களால் ஏற்ப்டும் தாக்கங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் ஆராய வேண்டியுள்ளது.

10-07-2023 முதல் 15-07-2023 வரை நடந்த கூட்டம்: ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பள்ளியில் ஒரு வாரம் நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனை கூட்டம் கடந்த, 10ம் தேதி திங்கட்கிழமை துவங்கியது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன்பாகவத் தலைமை வகித்தார். தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அமைப்பின் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடந்துள்ளன. இந்நிலையில், 16-06-2023 அன்று மாலை, 5:30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ்., தேசிய தலைவர் மோகன் பாகவத் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார்[5]. அவரை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர்[6]. இதை பற்றி தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பது வியப்பாக இருக்கிறது. அதே போல, பேஸ்புக் / முகநூல் மற்ற சமூக ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் / பிஜேபி-காரர்களே கண்டுகொள்ளாமல் இருப்பதும் தெரிகிறது.

2023ல் நடந்த முகாம்கள் பயிற்சி பெற்றவர் முதலியன: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், நாடு முழுதும் 105 இடங்களில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., முகாம்களில், 21,566 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, ஊட்டியில் நடந்த கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது[7]. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முழுநேர ஊழியர்கள் கூட்டம், கடந்த 10 முதல் 15-ம் தேதி வரை, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடந்தது. அதன் நிறைவில், கடந்த ஓராண்டில் ஆர்.எஸ்.எஸ்., செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை, பொதுச்செயலர் ஹொசபலே தாக்கல் செய்தார்[8]. அதில் கூறப்பட்டுள்ளதாவது[9]: நாடெங்கும் –

  • 63,724 ‘ஷாகா’ எனப்படும் தினசரி பயிற்சி வகுப்புகள்;
  • 23,299 ‘மிலன்’ எனப்படும் வாராந்திர கூடுதல்கள்;
  • 9548 ‘மண்டலி’ எனப்படும் மாதாந்திர கூடுதல்களும் நடந்து வருகின்றன[10].
  • ஏழு நாட்கள் ஆரம்ப நிலை உட்பட நான்கு நிலைகளில், ஆண்டுதோறும் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன.

எந்த பணிகளில் கவனம் செல்லுத்த வேண்டும்: கடந்த ஏப்ரல்,- மே மாதங்களில், 105 இடங்களில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிற்சி முகாம்கள், 20 நாட்கள் நடந்தன. மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்தது.

  • இந்த முகாம்களில், 21,566 பேர் பங்கேற்றனர்.
  • இதில் 16,908 பேர், 40 வயதிற்கு உட்பட்டவர்கள்;
  • 4,658 பேர் 40 முதல் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
  • 20 நாட்கள் விடுமுறை எடுத்து, 5,000 ரூபாய் செலவு செய்து, இந்த முகாம்களில், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கலந்து கொண்டிருப்பது, ஆர்.எஸ்.எஸ்., வளர்ச்சி பாதையில் செல்வதை காட்டுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • சமூகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்துதல்,
  • மதமாற்றத்தை தடுத்தல்,
  • கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றில் சேவை பணிகளை விரிவுபடுத்துதல்

 போன்ற பணிகளில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

உரையாடல் நடக்க வேண்டிய அவசியம்: கேரளாவில் கிறிஸ்தவர்களுடன் உரையாடல் என்று ஶ்ரீசுதர்சன் இருக்கும்பொழுதே ஆரம்பித்தது. இப்பொழுது மோடி காலத்தில் கொஞ்சம் அதிகமாகியுள்ளது எனலாம். ஆகவே, முன்பு போன்று, இவர்கள் கிறிஸ்தவர்களை இப்பொழுதெல்லாம் அதிகமாக விமர்சிப்பதில்லை. மாறாக, எதிர்வினை-விளம்பரம் கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது, அவர்களது பேச்சு, எழுத்து, சமுக்க ஊடகங்களில் உள்ள பதிவுகள் மூலம் அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுடனான உரையாடல் சிரமமாகத்தான் இருக்கும். முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் [Muslim Rashtriya Manch] மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. குஜராத், மஹராஷ்ட்ரா முதலிய மாநிலங்களில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது. அமீரகத்திற்கு மோடி செல்வதன் மூலமும் உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன.  சமீபத்தைய விஜயங்கள் அதை மெய்ப்பித்துள்ளது. சித்தாந்த ரீதியில் செயல்படும் இயக்கங்களின் இந்தியவிரோதத் தன்மையினைக் குறைத்து விட்டால், இவ்விசயத்திலும் அமைதி ஏற்படு, என்று எதிர்பார்க்கப் படுகிறது..

© வேதபிரகாஷ்

18-07-2023


[1] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 15,2023 02:10; https://m.dinamalar.com/detail.php?id=3376352

[2] https://m.dinamalar.com/detail.php?id=3376352

[3] தினமலர், முழுநேர ஊழியர்களை அதிகரிக்க ஆர்.எஸ்.எஸ்., புதிய திட்டம், பதிவு செய்த நாள்: ஜூலை 16, 2023 02:48; https://m.dinamalar.com/detail.php?id=3377349

[4] https://m.dinamalar.com/detail.php?id=3377349

[5] தினமலர், ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் நிறைவு, பதிவு செய்த நாள்: ஜூலை 17,2023 02:07

https://m.dinamalar.com/detail.php?id=3378084

[6] https://m.dinamalar.com/detail.php?id=3378084

[7] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: ஜூலை 18,2023 06:49; https://m.dinamalar.com/detail.php?id=3379289

[8]  https://m.dinamalar.com/detail.php?id=3379289

[9] தினமலர், நடப்பாண்டில் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி பெற்றவர்கள் 21,566 பேர், பதிவு செய்த நாள்: 18,2023 06:49; மாற்றம் செய்த நாள்: ஜூலை 18,2023 08:02; https://m.dinamalar.com/detail.php?id=3379340

[10] https://m.dinamalar.com/detail.php?id=3379340

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழுகூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜூலை 15, 2023

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் உயர்நிலைக் குழு கூட்டம்: திராவிடத்துவத்தை இந்துத்துவம் வெல்ல முடியுமா (2)

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூலில் கூட்டம் நடக்கிறது: ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் மற்றும் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை அளித்துள்ளது பள்ளி நிர்வாகம்.

  1. பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, Sarkaryavah Shri Dattatreya Hosabale
  2. கிருஷ்ண கோபால், Sah sarkaryavah Krishna Gopal
  3. மன்மொஹன் வைத்யா, Sah sarkaryavah Manmohan Vaidya 
  4. சி.ஆர்.முகுந்த் Sah sarkaryavah CR Mukund
  5. அருண்குமார், Sah sarkaryavah Arun Kumar
  6. ராம்தத் Sah sarkaryavah Ramdutt 

முதலியோர் கலந்து கொள்கிறார்கள்[1]. தவிர நாடு முழுவதும் உள்ள பிராந்த பிரசாரக், சஹ பிராந்த பிரசாரக், க்ஷேத்ர பிரசாரக், அகிலபாரதிய பிரமுக், சஹபிரமுக் ஆகியோரும் கலந்து கொண்டனர்[2].

ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் விவரம்: JSS பப்ளிக் பள்ளி புகழ்பெற்ற J.S.S இன் ஒரு அங்கமாகும். மைசூர் மகாவித்யாபீடத்தில் 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. தரமான கல்வி மற்றும் சமூக மறுசீரமைப்புக்கு ஒத்ததாக இருக்கும் நாட்டின் மிகப்பெரிய தனியார் முயற்சியாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மைசூர் மாவட்டம், சுத்தூரில் உள்ள ஜகத்குரு ஸ்ரீவீரசிம்ஹாசன மடத்தின் மகா முனிவர்களால் அனுசரணை செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் இந்த மஹாவித்யாபீடத்திற்கு நமது வழிகாட்டும் சக்தியும் வழிகாட்டியுமான ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரி தேஷிகேந்திர மஹா ஸ்வாமிகளாவரு தலைமை தாங்குகிறார். சரித்திரத்தின் படி, காஞ்சி ராஜ ராஜசோழனுக்கும் தல்காட்டின் ராஜா மல்லனுக்கும் இடையேயான பகுதியில் அமைதியை நிலைநாட்ட உதவிய ஆதிஜகத்குரு, தனது ஆன்மீக போதனைகளாலும், சரியான நேரத்தில் தலையீடு செய்ததாலும், 10 ஆம் நூற்றாண்டில் சுத்தூர் மகாவித்யாபீடத்தை நிறுவினார். சுத்தூரில் வீரசிம்ஹாசன மடத்தை நிறுவ வேண்டும். அப்போதிருந்து, பண்டைய பீடமானது மத மற்றும் ஆன்மீக சிந்தனைகள், கலாச்சாரம் மற்றும் இலக்கியம், குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அம்மடத்தின் பள்ளி தான், இந்த “JSS பப்ளிக் பள்ளி.”

ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர் கூறியது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளா்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்[3].  நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுக்கல்லில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது[4].  ஜூலை 16ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள், சாதனைகள், எதிர் கொண்ட பிரச்னைகள், அடுத்த ஓராண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது[5].  இது தொடர்பாக பேசிய ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் சுனில் அம்பேத்கர், நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெறுகிறது[6]. இதில் அடுத்த 4 – 5 மாதங்களுக்கான செயல்திட்டங்கள், நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கப்படும். அமைப்பின் தற்போதைய சூழல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.  மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூட்டங்கள், அதில் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் விகிதம் குறித்து ஆராயப்படும் எனக் குறிப்பிட்டார். இதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஸ்வயம் சேவகர்கள் வந்துள்ளார்கள்.

கூட்டத்திற்கு இடையூறு செய்ய திட்டமா?: ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாள் மாநாடு 13-07-2023 அன்று தொடங்கியது. ஏற்கெனவே அறிவித்துள்ளதால் 500 போலீஸார் பாதுகாப்பு எல்லாம் கொடுக்கப் பட்டுள்ளது. இம்மாநாட்டில் இன்று அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான். இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு எதிராகவும், மோகன் பாகவத்துக்கு எதிராகவும் மதுரையைச் சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் ஊட்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்[7]. அதன்படி, இருவரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்தனர்[8]. இத்தகவல் கோவை மாவட்ட போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இத்தகவல் சூலூர் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, இருவரையும் வழியிலேயே மடக்கி பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சூலூர் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது மதுரையில் இருந்து கோவைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் பஸ்ஸில் இருப்பதைக் கண்டு பெண் போலீஸார் உதவியுடன் அவர்களை கீழே இறக்கினர்.

நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்தனர்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடத்தில் ஈடுபட முயன்ற மதுரை நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோரை போலீஸார் தடுத்து நிறுத்தனர்[9]. அப்போது, பெண் போலீஸை தகாத வார்த்தைகளால் பேசிய கன்னத்தில் அறைந்த காரணத்தால் நந்தினி, நிரஞ்சனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்[10]. இதனையடுத்து  கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருவரையும் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்[11]. பெண் காவலர் அளித்தப் புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் இருவரையும் கைது செய்த போலீசார், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்[12]. இருவரும் மத்திய பா.ஜ.க.வுக்கு எதிராவும், மோடிக்கு எதிராகவும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி, ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வர்ணித்து, விவரித்து வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

© வேதபிரகாஷ்

15-07-2023


[1] Rashtriya Swayamsevak Sangh, RSS Akhil Bharatiya Prant Pracharak Meet, 2023, at Ooty, on July 13-15, ., 11-Jul-2023, press statement

[2] https://www.rss.org/Encyc/2023/7/11/RSS-Akhil-Bharatiya-Prant-Pracharak-Meet-2023-at-Ooty-on-July-13-15.html

[3] தினத்தந்தி, ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர்கள் வருடாந்திர கூட்டம்: ஊட்டியில் நாளை தொடங்குகிறது , தினத்தந்தி ஜூலை 12, 12:23 am.

[4] https://www.dailythanthi.com/News/India/2611-like-attack-if-threat-call-over-pak-woman-who-came-to-india-for-lover-1007682?infinitescroll=1

[5] தமிழ்.ஒன்.இந்தியா, ஊட்டியில் துவங்கிய 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு! மோகன் பாகவத் உள்ளிட்டோர் பங்கேற்பு! நோக்கம் இதுதான், By Nantha Kumar R Published: Friday, July 14, 2023, 9:43 [IST]

[6] https://tamil.oneindia.com/news/coimbatore/3-day-rss-conclave-begins-in-ooty-mohan-bhagwat-expected-to-give-advices-tomorrow-521049.html?story=1

[7] குமுதம், கோயம்புத்தூர்: பெண் போலீசை தாக்கியதாக நந்தினி, நிரஞ்சனா கைதுஎன்ன நடந்தது?, ஜூலை 15, 2023.

[8] https://www.kumudam.com/news/tamilnadu/nandini-was-arrested-in-coimbatore

[9] மீடியான்.காம், ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு எதிராக போராட முயற்சிதடுத்த போலீஸுக்கு பளார்மதுரை நந்தினி கைது!, Karthikeyan Mediyaan News, 04.00 மாலை, 14-07-2023.

[10] https://mediyaan.com/covai-police-arrested-social-activists-madurai-nandhini-niranjana/

[11] இ.டிவி.பாரத், Coimbatore: பெண் காவலரை தாக்கியதாக சமூக ஆர்வலர் நந்தினி உட்பட இருவர் கைது!, Published: 14-07-2023. 12.00 hours

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/videos/other-videos/two-social-activists-arrested-for-assaulting-female-police-officer-in-coimbatore/tamil-nadu20230714125845520520247

“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (2)

திசெம்பர் 17, 2017

பெண் குளிப்பதை பார்த்தார்என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது? (2)

The Hindu-tamil-reports- gov.convoy killed

கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்: இப்படி தலைப்பிட்டு, “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது. “இதற்கிடையே ஆளுநர் சென்னைக்கு கிழக்குக்கடற்கரை சாலை வழியாக திரும்பினார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க காஞ்சிபுரத்திலிருந்து சென்ற பொலிரோ ஜீப் வாகனம் பின்னர் கோவளம் வரை பாதுகாப்புக்கு வந்து விட்டு பின்னர் காஞ்சிபுரம் திரும்பியது”. அதாவது அந்த பணி முடிந்து விட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பேரூர் திருப்போரூர் சாலை வழியாக கிழக்கு கடற்கரை அருகே வந்துக்கொண்டிருந்தது. மாலை 4 மணி அளவில் புதிய கல்பாக்கம் பேருந்து நிலையம் அருகே டிவிஎஸ் எக்செல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியது. ஆக, இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் என்று நிருபருக்குத் தெரியவில்லையா? இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர், திருவஞ்சாவடியைச்சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (30) என்பவரும் அவருடன் பயணித்த நரேஷ்குமார் என்பவரின் மகன் கார்திக் (11) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்[1]. அவர்கள் மீது மோதிய பொலீரோ காவல் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த கெளசல்யா (70) என்ற மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அவரும் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆனது. இந்த விபத்தில் பொலீரோ போலீஸ் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஆய்வாளர் கண்ணபிரான் மற்றும் மூன்று காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் வாகனம் கட்டுப்பாடில்லாமல் அதிக வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[2].  பிறகு, இதில் கவர்னரை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்பதனைக் கவனிக்க வேண்டும். ஊடகக்காரர்கள், முன்கூட்டியே, ஏதோ தீர்மானமாக இப்படித்தான் எழுத வேண்டும் என்ற முடிவோடு எழுதி, செய்திகளாக வெளியிடும் போக்கு தான் இதில் காணப்படுகிறது. இதற்கு, கீழ்கண்ட பொய்யானது-கற்பனையானது-தமாஷுக்கு எழுதியது என்பதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

Ungal news-15-12-2017

கற்பனை செய்தியின் வர்ணனைகருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் எதிர்ப்பையும் மீறி ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால்[3]: கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்த வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைப்புக்குள் இளம் பெண் ஒருவர் குளித்ததையும் பார்த்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த அக்டோபர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை மற்றும் திருப்பூரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநர் துப்புரவு பணியையும் மேற்கொண்டார். ஆளுநர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாகவும், இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. எனினும் தனது ஆய்வுகள் தொடரும் என்று ஆளுநர் கூறியிருந்தார். கடலூரில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தார். எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையத்தில் இன்று ஆய்வு நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்றார். அப்போது அம்பேத்கர் நகரில் உள்ள கழிவறைகளை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார்[4].

Governor visit to Caddalore- 15-12-2017-Troll trousers

கற்பனை செய்தியின் வர்ணனைநடப்பது பாஜக ஆட்சி, அதனால் கிருஷ்னர் முறையைக் கையேண்டேன்[5]: அந்த நேரம் அங்கிருந்த கீற்று மறைப்பை ஆளுநர் திறந்து பார்த்தார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் ஆளுநரை பார்த்து அலறினார். இந்த பெண்ணின் சப்தம் கேட்டு அங்கு கூடிய ஊர்மக்கள், ஆளுநரை சுற்றி வளைத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் ஊர்பொதுமக்களிடம் இருந்து ஆளுநரை பத்திரமாக மீட்டனர். இளம்பெண் குளித்ததை நேரில் பார்த்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்மக்கள் கூறியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்துள்ளனர். இது குறித்து பன்வாரிலால் புரோகித் பிச்சுப் போட்ட இந்தியிலும் தமிழிலும் அளித்த பேட்டி: “நடப்பது பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சியல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை ஆற்றங்கரையில் குளித்திருந்த பெண்களின் ஆடைகளை களவாடினார் நானும் அதே போல ட்ரை பண்ணினேன். என்னை டம்மி ஆக்க கிளம்பிவிட்டது ஒரு கூட்டம். நான் நினைத்தால் எதை வேண்டுமாலும் செய்யமுடியும். மோடி மாதிரி பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர், கௌதமி என்று வேற லெவெல் போக முடியும். கொட்டாயில் இருக்கும் பெண்ணை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. காலையில்தான், திமுக , சிறுத்தைகள் எதிர்ப்பு போராட்டம்னு படிச்சேன். இப்போ தெரிந்து போயிற்று. அவங்க போய் பார்க்கறதுக்கு முன்னாடி கவர்னரான நான் எப்படி போகலாம் என்ற பொறாமை தான்[6].

Ungal news-15-12-2017-2

கற்பனை செய்தியின் வர்ணனைகண்னைத் துடைத்துக் கொண்ட ஆளுநர் பன்வாரிலால்[7]: தமிழச்சி குளிப்பதை தமிழன் மட்டுமே பார்க்கலாம் என்ற கோவம் போல. ஆட்சிக்கும், தமிழன் ஆளவேண்டியதை எப்படி பாஜக இந்திக்காரன் ஆளலாம் என்று இதே கதைதானே விடறாங்க. கோப்போடு ஆய்வு செய்யும் ஆளுனர்கள் நடுவே, சோப்போடு ஆய்வு செய்யும் வித்தியாசமான ஆளுனர். நானாக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பாக்கதான் நான் போனேன். இத புரிஞ்சுக்காம கிண்டலா பண்றீங்க. இது கையாலாகாத எதிர்க்கட்சியின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம். நீங்க ஒழுங்கா அரசியலும் மக்களுக்கு நல்லதும் பண்ணா எதுக்குடா நான் வந்து உங்க வேலையை பார்க்கணும். நான் என்ன கருணாவை. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா. நல்ல இருக்கவே மாடீங்கடா.” என்று மோடி போலவே கண்ணீர் சிந்தி சால்வையால் துடைத்துக் கொண்டார்[8].

Anti Gov, ant-modi to anti-hindu attitude

இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்: ஆக இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, கவர்னர் மீது தாக்குதல், தூஷணம் என்பது, பிஜேபி தாக்கதல் ஆகி, மோடியில் வந்து முடிந்துள்ளது. கிருஷ்ணர் என்று ஆரம்பித்து, இந்து தாக்குதலில் முடிந்துள்ளது. எனவே, அந்த அமானுஷ்யன், “அ. சையது அபுதாஹிர்” முதலியோரது மனம், மனத்தின் வெளிப்பாடு, முதலியவையும் நன்றாக புரிய வைக்கின்றன. உண்மையான செக்யூலரிஸவாதியாக இருந்தால், கற்பனையிலும் பொய்யான உதாரணங்கள் வராது, நிதர்சனத்தில் ஆபாச-நக்கல் இருக்காது, மததுவேசத்தில் வெளிப்படும் தூஷணங்கள் இருக்காது, …ஆனால், இவையெல்லாம் சேர்ந்திருப்பதால், இந்துக்கள் எளிமையான தாக்குதல் இலக்கில் உள்ளனர், தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர், பலவிதங்களில் கொடுமைகளுக்கு [வீடுகளில் நகை திருட்டு, தெருக்களில் தாலி / செயின் அறுப்பு, பேஸ்புக் காதல், பாலியல் வக்கிரங்கள் முதலியன] உள்ளாகி வருகின்றனர் என்பது உண்மையாகிறது.

© வேதபிரகாஷ்

16-12-2017

Governor visit to Caddalore- 15-12-2017-webduniya

[1] தி.இந்து, கல்பாக்கம் அருகே ஆளுநருக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி விபத்து: சிறுவன் உட்பட 3 பேர் பலி, போலீஸாரும் காயம்,, Published :  15 Dec 2017  21:24 IST; Updated :  15 Dec 2017  21:24 IST.

[2] http://tamil.thehindu.com/tamilnadu/article21715911.ece

[3] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[4] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

[5] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[6] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

[7] உங்கள்.நியூஸ், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ, அழுக்கு போக நல்லா தேய்ச்சு குளிக்கிறாங்களானு பார்க்கவே எட்டிப் பார்த்தேன்பன்வாரிலால் வாக்குமூலம், செய்தியாளர்: அமானுஷ்யன், December 15, 2017.

[8] http://www.ungalnews.com/2017/12/15/governor-in-controversy/

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (4)

ஏப்ரல் 27, 2013

பாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (4)

Muslims protest against the arrest of the suspects.2

போலீஸாருக்கு எதிராக முஸ்லீம்களின் சுவரொட்டிகள், ஆர்பாட்டங்கள்: போலீஸார் சந்தேகிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை உறுதி செய்த பிறகுதான் கைது செய்துள்ளனர் மற்றும் விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதற்குள் ஒரு பக்கம், தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளிப்படையாக, சுவரொட்டிகள் ஒட்டி, போலீஸார் பொய் வழக்குப் போட்டு, கைது செய்துள்ளதாக ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது, வழக்கம் போல, இணைதளத்திலும், பிரச்சார வேலையில் இறங்கியுள்ளனர்.

Muslims protest against the arrest of the suspects.3

மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக சுவரொட்டிக் கூறுவது, “”வன்மையாக கண்டிக்கிறோம்! சட்டவிரோதமாக கடத்திச் சென்று பொய் வழக்கு போடும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்!” காவல்துறையே! கிச்சான் புகாரி உள்ளீட்ட முஸ்லிம் இளைஞர்களை உடனே விடுதலை செய்! தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை பலிகடாவாக்காதே!”.

Muslims protest against the arrest of the suspects

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)யின் சுவரொட்டிக் கூறுவது, “பெங்களூரு குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புகாரி உட்பட 5 முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கு பதிவுசெய்து கைதுசெய்ததையும், கோவை மற்றும் மதுரையில் தொடரும் காவல்தூரையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் ஆர்பாட்டம்”.

இதெல்லாம் சரி, ஆனால் இதுவரை கொல்லப்பட்டவர்கள் நிலையென்ன?

அவர்களுடைய மனைவிமார்களின் கதி என்ன?

அவர்களது பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

அவர்களுக்கெல்லாம் யார் ஆதரவு கொடுப்பார்கள்?

  • இதுதான் மனித நேயமா?
  • மனிதத்தன்மையா?
  • மனித உணர்வா?
  • மனித எண்ணமா?

ஆட்கொணர்வுமனுதாக்கல், மனித உரிமைகள் முதலியன:  இதே மாதிரி இன்னொரு அறிப்பும் காணப்படுகிறது[1] – “பெங்களூரு குண்டு வெடிப்பை மையபடுத்தி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்யும் போக்கு சில நாட்களாக அரங்கேறி வருகிறது…. “கிச்சான் புகாரி”யை இரண்டு நாட்களுக்கு முன்பே காவல்துறை கடத்தி சென்றதாகவும், அவரது மனைவி மதுரை உயர்நீதி மன்றத்தில் “ஆட்கொணர்வு” மனு தாக்கல் செய்ததையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டதாக ஊடங்களில் செய்தி வெளியானது என்றும், “மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்” கூறியுள்ளது. கோவை சிறைவாசிகளுக்காக சட்ட ரீதியாக போராடி வரும் CTM அமைப்பை சேர்ந்த கிச்சான் புகாரி வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைக்க பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மற்ற இளைஞர்களும் அப்பாவிகள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஊடங்கள், காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுத்து வருகின்றன. காவல் துறையின் இதுபோன்ற போக்கு தமிழகத்தில் மீண்டும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத பாதையை நோக்கி தள்ளும் செயலாகவே அமையும், என கவலை தெரிவித்தது, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம். நேற்று நடந்த அணைத்து முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் உடனே இவ்விசயத்தில் தலையிட வேண்டும்.சட்டமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்ப பட வேண்டும், என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது”.

Bangalore blast - tracing the bike used

25-04-2013ல்நடந்தகூட்டம், ஆர்பாட்டம்: நெல்லை: பெங்களூர் குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புஹாரி உள்ளிட்ட 3 முஸ்லீம் இளைஞர்களை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததையும், கோவை, மதுரை மற்றும் நெல்லையில் தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சி சார்பில் இன்று 25.04.2013 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[2]. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி, ம.ம.மு.க மாநிலத்தலைவர் பாளை.எஸ்.ரஃபீக், ஜமாத்துல் உலமா சபைசலாஹுதீன் ரியாஜி, எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக்,மதிமுக அரசியல் மையக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம், ஐ.என்.டி.ஜே மாநிலச்செயலாளர் அப்துல் காதர் மன்பயீ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் துரை அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்[3]. இறுதியாக எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஐ.உஸ்மான் கான் நன்றிகூறினார். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்[4].

Bangalore blast victims 2013

பாஸ்டனும், பெங்களூரும், போலீஸாரும், முஸ்லீம்களும்: பாஸ்டனில் குண்டுகள் வெடித்தபோது, மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். சந்தேகத்தின் மீதுதான், சொர்னேவ் சகோதரர்கள் சுற்றிவளைக்கப் பட்டார்கள், பிடிக்கப் பட்டார்கள். அவர்கள் முஸ்லீம்கள் தாம், என்றறிந்தும், முன்னரே அவர்கள் எப்.பி.ஐ.யினால் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிந்தும் மக்கள் விசாரணையில் தலையிடவில்லை. அங்கும் முஸ்லீம்கள் இருந்தாலும், இதுபோல சுவரொட்டிகள் ஒட்டி, போலீஸார் பொய் வழக்குப் போட்டு, கைது செய்துள்ளதாக ஆர்பாட்டத்தில் இறங்கவில்லை,  கலாட்டா செய்யவில்லை, மாறாக பிடிபட்டபோது, மக்கள் மகிழ்சியோடு கொண்டாட்டத்தில் இறங்கினார்கள். 22-04-2013 அன்று குற்றாவாளி என்று கோர்ட்டில் நிறுத்தவும் செய்தனர். ஆனால், இங்கோ போலீஸார் விசாரணை செய்து வரும் வேளையிலே தமதிச்சைக்கேற்றவாறு பதவிகளில் இருப்பவர்கள், மற்றவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள், பேசுகிறார்கள். முயன்ற வரையில் இடைஞ்சல்களை செய்து வருகின்றனர்.

Bangalore blast victim2

சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது: இந்தியாவில், அரசியல்வாதிகள் எப்படி குண்டுவெடிப்பிற்காக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்களோ, ஊடகங்களும், சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது என்ற ரீதியில் செயல்படுவதைப் போலிருக்கிறது. இங்கு தமிழகத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர் எனும்போது, பொறுப்புள்ள முஸ்லீம்கள், சந்தேகிக்கப்பட்டவர்கள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டனர், செல்போனில் ஏன் அப்படி ஒருவரொக்கு ஒருவர் தொடர்பு கொண்டனர். குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் எப்படி, ஏன் உபயோகிக்கப்பட்டது, தீவிரவாத இயக்கத்துடன் ஏன் தொடர்பு வைத்திருந்தனர், என்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கப்படவில்லை[5]. ஊடகங்களும் தங்களது புலன் விசாரிக்கும் யுக்திகளை கையாண்டு எதையும் எடுத்துக் காட்டவில்லை[6]. மாறாக, இதற்குள் பீர் மொஹித்தீனின் மனைவி சையத் அலி பாத்திமா மற்றும் பஸீரின் மனைவி சம்சுன் நிஸா ஊடகங்களுக்கு முன்னர், தங்களது கணவர்கள் அப்பாவிகள் என்று பேட்டி அளித்துள்ளனர்[7];

Wives of the suspects - BB before media

போலீஸ் கமிஷனர் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை; போலீஸரும், அமைச்சரும் கைதானவர்களின் எண்ணிக்கைப் பற்றி தவறாகக் கூறுகின்றனர், என்றெல்லாம் செய்திகளை வெளியிடுகின்றனர்[8].

Bangalore blast victim Rakshita

சந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார்?: சந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார், என்ற சிறிய விஷயம்தான் புரியவில்லை. கை-கால்கள் போனவர்களின் மனைவி, மகன், மகள், உறவினர்கள் ஏன் அவ்வாறு பேட்டிக் கொடுப்பதில்லை, இல்ல ஊடகங்கள் அவர்களிடம் ஏன் அவர்களின் கருத்தைக் கேட்பதில்லை, இல்லை அவர்கள் அவ்வாறு பேட்டி கொடுக்கப் பயப்படுகிறர்களா, அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா? ஏன் மனித உரிமையாளர்கள், ஊடகக் காரர்கள், மற்ற விளம்பரக்காரர்கள் இதைப்பற்றி ஒன்றும் செய்திகள் வெளியிடுவதில்லை. ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களைச் சென்று பார்க்க எல்லா அரசியல்வாதிகளும் வருவது வழக்கம்[9]. ஆனால், இப்பொழுது ,முதலமைச்சரைத் தவிர, யாரும் வரவில்லை – ஏன்? ஒருவேளை காயமடைந்தவர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லையா, இல்லை, பிஜேபி ஆட்சி நடத்தும் மாநிலத்தில் உள்ளார்கள் என்பதால் கண்டு கொள்ளப்படவில்லையா, இல்லை, அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று கண்டுகொள்ளவில்லையா. இத்தகைய வாதம் “கம்யூனிலிஸம்” என்ற நோக்கில் வைக்கவில்லை, ஆனால், காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளும் விதத்தௌ வைத்து வைக்கப் படுகிறது. தேர்தல் என்பதால், ஓட்டு வருமா, வராதா என்று யோசிக்கிறார்கள் போலும்.

Wives of suspects file petition - bangalore blast

காயமடைந்தவர்களில் 8 பேர் போலீஸ்காரர்கள்: மொத்தம் 16 பேர் காயமடைந்து, கே.சி. மற்றும் இதர ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்[10]. இதில் எட்டு போலிஸ்காரர்களும் அடங்கும். லீசா மற்றும் ரக்சிதா சுஜாய் என்ற இரு மாணவிகளைப் பற்றிதான் விவரங்கள் வருகின்றனவே தவிர மற்றவர்களில் நிலைப் பற்றி ஊடகங்கள் மூலம் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டே பரீட்சை எழுத அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் என்றுதான் செய்திகள் வந்துள்ளன[11].

Bbangalore-bomb-blast-victim-recalls-the-horror Bangalore blast victim

பெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம்: பலவழிகளில், அதிகமாக பெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம் எனலாம். ஏனெனில், 16 பேரில், எட்டு பேர் போலீஸார் என்பது மட்டுமல்லாது, அவர்கள் தாங்கள் செய்யும் கடமைகளையும் செய்யவிடாமல், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சந்தேகிக்கப்பபவர்களில் உறவினர்கள் என்று எல்லோரும் சேர்ந்து கொண்டு தொந்தரவு கொடுக்கின்றனர்; குறை கூறுகின்றனர்; ஏன் தூஷணமும் செய்து வருகின்றனர். இதனையும் பாஸ்டன் குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியர்கள் எந்த அளவிற்கு கேவலமாக இருக்கிறார்கள்  என்பதனை அறிந்து கொள்ளலாம்.

வேதபிரகாஷ்

27-04-2013


[6] டெஹல்கா-tehelka- போன்று புறப்பட்டு கொட்டும் விளையாட்டுகளை (sting operations) நடத்தவில்லை, ஆசைக்காட்டி-காசு கொடுத்து பேட்டி எடுக்கவில்லை, வீடியோ எடுக்கவில்லை, ……………….

ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்!

ஏப்ரல் 18, 2013

ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வைத்திருக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்!

ஆர்.எஸ்.எஸ்உடன்காங்கிரஸ்நேரிடையாகமோதல்: “பிஜேபி மற்றும் சங்கப்பரிவார் தாம் இப்படி அரசியல் ஆதயங்களுக்காக இத்தலையான செயல்களைச் செய்ய முடிவுக்கு வருகிறார்கள்”, என்று கர்நாடக சட்டசபையின் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா குற்றாஞ்சாட்டினார்[1].

Congress Legislature Party leader Siddaramaiah blamed the BJP and the Sangh Parivar saying that they end up committing such acts for political gains.

எச். விஸ்வநாத்[2] என்ற மைசூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர், “ஆர்.எஸ்.எஸ்,ஐ இந்த சபவத்தில் சந்தேகிக்க இடமுண்டு. ஆர்.எஸ்.எஸ்ற்கு தீவிரவாதத்தில் பங்குக் கொள்ளும் சரித்திரம் உள்ளது. அவர்கள் மெலாகாவில் செய்துள்ளனர். மத்தியப் புலனாய்வு இவ்வழக்கை எடுத்து சோதித்து தேர்தலுக்கு முன்னர் உண்மையைக் கண்டறிய வேண்டும்”.

Another Congress leader, H Vishwanath, MP from Mysore, alleged that RSS is a suspect in the incident. “RSS has a history of indulging in acts of terrorism. They have done it in Malegaon. The Central investigation agencies should crack the case and expose those behind the blasts before the elections are over,” he stated.

இதே நேரத்தில் தட்சிண கர்நாடகப் பகுதியில் காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்.ஐ வம்பிற்கு இழுத்துக் கொண்டுள்ளது. பி. ராமநாத், தட்சிண கர்நாடக மாவட்டப் பகுதியின் காங்கிரஸ் தலைவர் “ஆர்.எஸ்.எஸ்.ன் மீது போர் தொடுத்துள்ளதாக ஒரு ஆங்கில நாளிதழ் கூறுகிறது. ஏனெனில், ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக கூட்டங்களில் அவர் அவ்வாறு பேசி வருகிறார்[3].

இந்துகட்சிகள்தாங்களேகுண்டுகளைவைத்துக்கொள்ளும்: காங்கிரஸில் பொறுப்புள்ள, மூத்த தலைவர்கள் எல்லாம் இப்படி அபத்தமாக உளறியுள்ளார்கள். முன்புகூட, திக் விஜய் சிங், மும்பை குண்டு வெடிப்பை வலதுசாரி தீவிரவாதத்துடன் இணைத்துப் பேசியுள்ளார்[4].  “26/11 – ஒரு ஆர்.எஸ்.எஸ்.ன் சதியா?” [26/11 RSS Ki Saazish? -26/11, An RSS Conspiracy? ] என்ற புத்தகத்தை டிசம்பர் 6, 2010 அன்று வெளியிட்டு இவ்வாறு பேசினார்[5]. வழக்கு தொடரப் போவதாக அறிவித்த போது, ஆஜிஸ் பர்னி என்ற அப்புத்தகாசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்[6]. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது[7]. அப்பொழுதும் காங்கிரஸ் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டது[8]. அதற்கும் முன்னர் சென்னை குண்டுவெடிப்பு சம்பந்தமாக மூப்பனார் மற்றும் கருணாநிதி, ஆர்.எஸ்.எஸ்.காரர்களே குண்டு வைத்துக் கொண்டனர் என்று முஸ்லீம் கூட்டத்திலேயே பேசியுள்ளனர்[9]. இப்பொழுதும் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் இந்த குண்டுவெடிப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்.ற்கும் சம்பந்தம் உள்ளது என்று பேசிவருகின்றனர்[10].

தில்லிஇமாமும், திக்விஜய்சிங்கும்: திக் விஜய் சிங்கை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும்[11], முந்தைய தில்லி இமாம் போல கைது செய்யப்படமால் சுற்றி வருகிறார். இருவரும் இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசுவது, தூஷிப்பது, முதலிய வேலைகளில் ஈடுபடுவது ஒப்புமையாக உள்ளது. திக் விஜய் சிங் இந்தியாவில் செய்து வருகிறார் என்றால், தில்லி இமாம் பாகிஸ்தானிற்கும் சென்று பேசியுள்ளார். ஜூலை 17, 2011ல் பாரதிய யுவமோர்சாவினர் திக் விஜயசிங்கிற்கு எதிராக கருப்புக் கொடிகள் காட்டியபோது, காங்கிரஸ்காரர்கள் அவர்களை அடித்துள்ளனர். அதனால் வழக்குத் தொடுத்தபோது, உஜ்ஜயினி கோர்ட்டில், பெயிலில் விடமுடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தது[12]. இருப்பினும் இப்பொழுது – அதாவது பெங்களூரில் குண்டு வெடித்த அதே நாளில் – இந்தூர் கோர்ட்டில் கைது-வாரண்டிற்கு எதிராக பெயிலைப் பெற்றுள்ளார்[13].

வேதபிரகாஷ்

18-04-2013


[1] Deccan Herald, Thursday 18 April 2013 News updated at 3:43 AM IST 

http://www.deccanherald.com/content/326750/cong-suspects-rss-hand-bjp.html

[3] Dakshina Kannada District Congress Committee President B Ramanath Rai sounded the bugle by declaring war against Sangh Parivar on Wednesday. During a speech at Bantwal on Wednesday, Rai said his opponent was RSS leader Kalladka Prabhakar Bhat and not the candidate Rajesh Naik. He is just a pawn in the scheme of things. The real opponent is Bhat,” he said. He said these polls will be an opportunity to give a fitting reply to the persons who have hatched conspiracies and torn the social fabric in this district and urged people to support Congress in this fight. He also took a dig at the parivar supremo in Bantwal taluk saying that the BJP factory churns out lies and false accusations, but it will not work this time. Security UP: Security has been stepped up in twin districts of Dakshina Kannada and Udupi on Wednesday following a blast near BJP office in Bangalore. Inspector General of Police (Western range) Pratap Reddy said: Guidelines have been issued for increased alert. With additional deployment being done in view of polls, we are using them to enhance coverage.

http://timesofindia.indiatimes.com/city/mangalore/Congress-takes-a-dig-at-Sangh-Parivar/articleshow/19600581.cms

[6] It was at this book’s launch on December 6 where Singh had said that Mumbai ATS chief Hemant Karkare had called him, hours before he was killed in the terror attacks, to tell him about threats he had received for probing Hindu extremists and their terror links. Burney, however, tendered an apology on January 29, saying that he would like to “clarify and apologise if he has hurt anyone by the title of his book and is happy to change the title” if that would assuage feelings.

http://www.dnaindia.com/india/1501809/report-rss-rejects-aziz-burney-apology-to-pursue-case-against-him

[7] The Chief Judicial Magistrate Court in Allahabad on Friday ordered registration of a case against Congress leader Digvijay Singh for this statement in Ujjain on July 18 calling RSS a bomb making factory. Singh had said the “RSS was spreading terrorism in the country and it has been making bomb factories.” The Congress general secretary had earlier courted controversy when he said that he did not rule out the involvement of Sangh in Mumbai serial blasts.While the RSS and the BJP had slammed him, the Congress had washed its hands off the comments. Read more at:http://indiatoday.intoday.in/story/digvijay-singh-booked-for-remarks-against-rss/1/149268.html

[9] இப்பொது கூட்டம் காங்கிரஸ் மைதானத்தில் சுமார் 12-13 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் இறப்பதற்கு முன்பாக நடந்த கூட்டம் அது.

[10]Congress Legislature Party leader Siddaramaiah blamed the BJP and the Sangh Parivar saying that they end up committing such acts for political gains. Another Congress leader, H Vishwanath, MP from Mysore, alleged that RSS is a suspect in the incident. “RSS has a history of indulging in acts of terrorism. They have done it in Malegaon. The Central investigation agencies should crack the case and expose those behind the blasts before the elections are over,” he stated.

http://www.deccanherald.com/content/326750/cong-suspects-rss-hand-bjp.html

[12]  A local court here on Tuesday issued a non-bailable arrest warrant against Congress General Secretary Digvijay Singh and Ujjain’s Congress MP Prem Chand Guddu after they failed to appear before it in connection with a case against them and others for allegedly thrashing Bharatiya Janata Yuva Morcha (BJYM) workers.

http://zeenews.india.com/news/madhya-pradesh/local-court-issues-non-bailable-warrant-against-digvijay-singh_839408.html

[13]  Indore Bench of Madhya Pradesh High Court on Wednesday granted anticipatory bail to senior Congress leader Digvijaya Singh and party MP Prem Chand Guddu in connection with a case filed against them and others for allegedly thrashing BJP youth wing workers in Ujjain in 2011. Justice PK Jaiswal, who on Tuesday heard arguments on separate applications filed by the two and reserved his judgement, granted pre-arrest bail on Wednesday, their lawyer Akash Sharma told PTI.

http://ibnlive.in.com/news/high-court-grants-anticipatory-bail-to-digvijaya-singh-mp/386123-37-64.html

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

மார்ச் 21, 2013

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

Aurobindu Ashram attacked by Dravidian group

இலங்கைப் பிரச்சினைக்காக புதுச்சேரியில் போராட்டம்: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா.தீர்மானத்துக்கு மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கருத்து கேட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்கு பிற மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன[1]. அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன?

DK attacked Ayodhya mantap with petrol bombs

ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் மம்தா கூறியது: ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் காங்கிரஸை ஆதரிப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்[2]. மம்தா பேஸ்புக்கில்[3] குறிப்பிட்டது, இவ்வாறாக உள்ளது[4]:

“Our Party supports the cause of the Tamil brothers and sisters. We are deeply concerned about the atrocities meted out to a section of Tamil population in a foreign country.Local sentiments and their causes sometimes become very critical. We are supporting their cause. At the same time, our Party follows a policy that we should not interfere into issues involving external relations with foreign countries. We leave it for the Central Government to decide on such issues. However, the concerns of the state and the sentiments of the people must be kept in view by the Centre, before taking any decision pertaining to foreign country.”

மாறாக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இலங்கை நட்பு நாடு என்பதால் அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்து இருந்தார், என்று தமிழ் ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுவை அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடினார்கள். “தி ஹிந்து” காரணம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிடுகின்றது[5].

புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சூறை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடந்த காலங்களில் வன்முறையில் ஈடுபடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதும், அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடி ஆர்பாட்டம் என்ற பெயரில், “ஒழிக” கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அதனால், யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்து அதன் தலைவர் வீரமோகன், துணை தலைவர் இளங்கோ ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூ ஜாடிகளை அடித்து உடைத்தனர்[6]. மேலும் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடிகள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்[7]. மேலும் ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதில் ஆசிரம கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன[8]. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை.

அப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன?

Salem Kanchi mutt attacked

எளிதான இலக்கைத் தேர்ந்தெடுத்து இவர்கள் தாக்குவது ஏன்?: உண்மையில் இவஎகள் தாக்க வேண்டும் என்றால், காங்கிரஸ்காரர்களைத் தாக்கியிருக்க வேண்டும். அவர்களது சின்னங்களைத் தாக்க வேண்டும் என்றால், சோனியா, ராஹுல், பிரியங்கா புகைப்படங்களைத் தாக்கியிருக்க வேண்டும். ஆனால், இப்படி சமந்தம் இல்லாமல் ஆசிரமத்தைத் தாக்குவது, பொருட்களை நாசம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு வாடிக்கையாக இருந்து வருகின்றது. முன்பு, சென்னையில், பழைய மாம்பலத்தில், இதேபோல சம்பந்தமே இல்லாத, இரண்டு அப்பாவி பிராமணர்களைத் தாக்கி, அருவாளால் வெட்டியுள்ளனர். இப்பொழுது இங்கு இப்படி செய்த அட்டூழியத்திற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்[9] என்று செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதும், வெட்டியதற்கு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று எந்த செய்ட் ஹிகளும் வெளிவரவில்லை. இப்படி வன்முறையில் ஈடுபட்டு, ஒருவேளை கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டால், அத்தகையோர் மறுபடி-மறுபடி வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகி விடும்.

Raghavendra Brindavan attacked - Rama idol uprooted and thrown

© வேதபிரகாஷ்

21-03-2013


[5] A group of pro-Tamil activists today barged into the Aurobindo Ashram, damaged furniture and smashed glass panes after reportedly attacking and injuring the watchman. Police said activists of the Periyar Dravidar Kazhagam (PDK) also smashed flower pots and damaged the notice board, a clock and the ashram emblem atop the main gate. They also raised pro-Tamil slogans, police said, adding that the reason for the attack was not known.

http://www.thehindu.com/news/national/protamil-activists-attack-aurobindo-ashram/article4534302.ece

நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்!

ஏப்ரல் 30, 2012

நித்யானந்தா, மதுரை ஆதீனம், இளைய பட்டம்: சட்டம், பாரம்பரியம், சம்பிரதாயம், செக்யூலரிஸம்!

சட்டப்படி பட்டமேற்பது தடுக்கமுடியாதது: மடாதிபதி அதிகாரத்தில், இளையப் பட்டத்தை சட்டப் படி அமர்த்தலாம். அதனை யாராலும் தடுக்க முடியாது. விவரம் தெரியாதவர்கள் விளம்பரத்திற்காக எதிர்க்கலாம். மதுரை ஆதீனம் சாதாரணமாக சர்ச்சைகளில் சிக்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது, சர்ச்சைக்குள்ளவரை அவ்வாறு நியமிப்பதுதான் கேள்விகளை எழுப்புகின்றன. இந்துவிரோத சக்திகளும், இதனைப் பெரிது படுத்தி செய்திகளாக்கி காசாக்கப் பார்க்கின்றன. ஒத்த காலத்தில் மற்ற மதத்தலைவர்கள் பற்பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களை விட்டுவிட்டு, இப்படி திரும்பியுள்ளது நோக்கத்தக்கது. ஆங்கில நாளிதழ்கள் நித்யானந்த மதுரை மடத்தின் கவர்னர் ஆகியுள்ளார்[1] என்று செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. “ஹிந்து அவுட்விட்ஸ்” – Hindu outfits protest over Nityananda app’ment as Mutt head[3] – என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன[4]. நித்யானந்தா இவ்வாறெல்லாம் The controversial Bidadi-based godman,  self-styled godman, controversial self-styled godman விவரிக்கப் பாடுவதும் தவித்திருக்கலாம். அதாவது, வழக்குகள் முடிந்த பின்னர், இத்தகைய செயல்களில் ஈடுபடலாம்.

மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா பதவியேற்றார்: மதுரை ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் 29-04-2012 (ஞாயிற்றுக்கிழமை)  அன்று பொறுப்பேற்றார். அவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்[5]. பாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.

விழா நிகழ்ச்சி, பத்திரிக்கையாளர்கள் கூட்டம்: மதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹெட்போனுடன் கூடிய வயர்லெஸ் மைக் உள்ளிட்ட நவீன ஒலிபெருக்கி சாதனங்கள் சகிதமாக மதுரை ஆதீனமும், நித்யானந்தரும் மேடையில் தங்க ஆசனங்களில் அமர்ந்தனர். முறைப்படி நித்யானந்தாவை 293-வது மதுரை ஆதீனமாக நியமிப்பதாகவும், இனி அவர், “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்யானந்த ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என அழைக்கப்படுவார் என்று தற்போதைய ஆதீனம் அறிவித்தார். பின்னர், நித்யானந்தாவை மதுரை ஆதீனமாக நியமிப்பதற்கு அடையாளமாக, அவரது கழுத்தில் ஆதீனகர்த்தர்கள் அணியும் தங்க மாலை மற்றும் கிரீடங்களை தற்போதைய ஆதீனம் அணிவித்தார்[6].

2500 ஆண்டு ஆதீனத்தின் தொன்மை: “இந்த ஆதீனம் 2500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். திருஞானசம்பந்தர் இதை புணரமைத்து 1500 ஆண்டு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு மதுரை மீனாட்சி அம்மன்கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்கள் மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் அவற்றை அரசு எடுத்துக்கொண்டது. மதுரை ஆதீனம் 293வது குருமகா சன்னிதானமாக நித்தியானந்தா சுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது திடீர் என எடுத்தமுடிவு அல்ல. கடந்த 8 ஆண்டுகளாக யோசித்து வந்தோம். மதுரை ஆதீன மடத்தில் பதவி வகித்தவர்கள் அத்தனை பேரும் ஆற்றல்மிக்கவர்கள்[7]. சைவ சித்தானந்தத்தில் ஆற்றல் மிக்கவர்களாக இருந்து வந்தார்கள். அதேபோல நானும் எழுந்தருளி ஞானம், எழுச்சி, உணர்வு, போர்க்குணம் போன்ற தகுதியுடவனாக இருக்கிறேன். இப்போது 293வது மகா சன்னிதானமாக சிறந்தவரை தேர்ந்தெடுத்துள்ளோம். சிவன்-பார்வதி ஆசியுடன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எழுச்சி, ஆற்றல், போர்குணம் கொண்ட ஒரு ஞானியை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளோம்”, இதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம் என்றார்[8].

மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி- நிதுயானந்தா அறிவிப்பு[9]: மதுரை ஆதீன மடத்தின் வளர்ச்சிக்கு ரூ.5 கோடி வழங்குவதாகவும், பெங்களூர் மடத்திலிருந்து மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும் நித்யானந்தா அறிவித்தார். மதுரை ஆதீன மடத்துக்குள்பட்ட பகுதியில் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். “நித்யானந்தர் ஆசிரமும், மதுரை ஆதீன மடமும் இணைந்து செயல்படும். இந்த மடத்தில் நித்யானந்தாவுக்கு முழு அதிகாரம் அளிப்பதாகவும், அவர் விரும்பிய மாற்றங்களை, பணிகளைச் செய்யலாம். நான் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவேன். நித்யானந்தர் அவ்வப்போது வந்து செல்வார். நிர்வாகத்தை இருவரும் இணைந்து மேற்கொள்வோம்‘ என்றார் மதுரை ஆதீனம்.

இந்து மக்கள் கட்சி அமைப்புகள் ஆர்ப்பாட்டம்: மதுரை ஆதீனத்தைச் சந்திப்பதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்களை தனியாகச் சந்திக்க மதுரை ஆதீனம் மறுத்துவிட்டார். அதையடுத்து, சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 6 பேர் மட்டும் மதுரை ஆதீனத்தைச் சந்தித்தனர். புதிய ஆதீனத்தை நியமிக்க மற்ற ஆதீனகர்த்தர்களுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை என்றும், ஆதீனப் பொறுப்பேற்க நித்யானந்தருக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன என்றும் அவர்களிடம் மதுரை ஆதீனம் கூறியுள்ளார். அதையடுத்து, அங்கு நித்யானந்தரின் சீடர்கள், நித்யானந்தரை வாழ்த்தி கோஷம் எழுப்பியுள்ளனர். உடனே சுரேஷ்பாபு தலைமையில் சென்றவர்கள் தேவாரம் பாடினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பிரச்னையைத் தவிர்ப்பதற்காக போலீஸார் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு மதுரை ஆதீன மடத்தின் அருகே இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரம்பரியம் தெரியவில்லை என்று கேள்விகள் கேட்கும் இந்து மக்கள் கட்சி தலைவர்: பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறியதாவது: “ஆதீனமானவற்கு முன் குறிப்பிட்ட காலம் இளைய ஆதீனமாக இருந்து தீட்சை பெற்று, முறைப்படி நாமகரணம் சூடி பொறுப்பேற்றுக் கொள்வதுதான் வழக்கம். ஓர் ஆசிரமத்தின் மடாதிபதியை திடீரென இன்னோர் ஆதீனத்தின் தலைவராக நியமிக்க வேண்டிய அவசரம் ஏன் எனத் தெரியவில்லை. மடாதிபதிகள் ருத்ராக்சத்தைத் தான் அணிவார்கள், இவர்கள் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவையெல்லாம் பாரம்பரியமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.

“எனக்கு முழு அதிகாரம் உள்ளது புதிய ஆதீனம் நியமிக்கப்பட்டது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறினார். எனக்குள்ள முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி நித்யானந்தரை மதுரை ஆதீனமாக நியமித்துள்ளேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: “மதுரை ஆதீன மடத்துக்கு வந்த நித்யானந்தர் சில நாள்கள் தங்கியிருந்தார். அவரது அழைப்பின்பேரில் நான் பெங்களூரிலுள்ள அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நித்யானந்தாவின் போர்க் குணம், ஞானம், எழுச்சி போன்றவற்றைப் பார்த்து, எனது வாரிசாக நியமித்தேன். அவரிடம் நோய்களை குணமாக்கும் வல்லமையும் இருக்கிறது. எனக்கு பல ஆண்டுகளாக சுவாசப் பிரச்சனை (வீசிங்) இருந்தது. இதை அவர் குணப்படுத்தினார். பல அற்புதங்கள் நிகழ்த்திய திருஞானசம்பந்தரிடம் இருந்த சக்திகள் இவரிடம் இருப்பதாக உணருகிறேன்.

தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம்: உலகம் முழுவதும் அவருக்கு 1 கோடிக்கும் மேல் பக்தர்கள் உள்ளனர். மதுரை ஆதீன மடத்தில் இனி நானும், அவரும் தந்தை – மகன் போல இணைந்து செயல்படுவோம் என்றார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நித்யானந்தர் கூறியது: மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள நான், 292-வது ஆதீனம் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பேன். மடத்துக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி நிதியில், நான்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜூன் 5-ம் தேதி 292-வது ஆதீனத்துக்கு கனகாபிஷேகம் நடைபெறும். 151 நாடுகளிலுள்ள நித்யானந்த பீடங்கள் 292-வது மதுரை ஆதீனத்துக்கு கட்டுப்பட்டு இயங்கும் என்றார்.

இந்த நிலையில் பெங்களூரில் தங்கி உள்ள மதுரை ஆதீனம் அளித்துள்ள பேட்டி[10]:

கேள்வி: மதுரையின் இளைய ஆதீனமாக திடீரென நித்யானந்தாவை நியமித்தது ஏன்?

பதில்: இப்போதும் நாம்தான் தலைமை பொறுப்பில் இருக்கிறோம். நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனமாக பட்டம் சூட்டப்பட்டுள்ளது. அவர் எனது கட்டளையின்படி பணிகளை கவனிப்பார்.

கே: இனி நித்யானந்தா மதுரையிலேயே தங்கி ஆன்மீக பணியில் ஈடுபடுவாரா?

ப: நித்யானந்தாவுக்கு உலக அளவில் தியான பீடங்கள் உள்ளன. பெங்களூரில் தலைமை தியான பீடம் அமைந்துள்ளது. அந்த பணிகளையும் அவர் கவனிக்க வேண்டும். எனவே மதுரைக்கு அடிக்கடி வந்து ஆன்மீக பணிகளை கவனிப்பார்.

கே: மீனாட்சி அம்மன் கோவிலை, மதுரை ஆதீனத்திற்குள் கொண்டு வருவேன் என்று நித்யானந்தா கூறி இருக்கிறாரே?

ப: மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 1865-ம் ஆண்டு வரை மதுரை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. எனவேதான் மீனாட்சி அம்மன் கோவிலை மீண்டும் ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அவர் மதுரை சன்னிதானத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டுக்கொடுப்பார். அவரது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.

கே: இதுவரை நீங்கள் இந்த முயற்சியில் ஈடுபட வில்லையே ஏன்?

ப: எனக்கு நிறைய ஆன்மீக பணிகள் இருந்த காரணத்தால் அதுபற்றி சிந்திக்கவில்லை. ஆனால் சிவபெருமானின் அருள் பெற்ற நித்யானந்தாவால் இது முடியும் என்று நினைக்கிறேன்.

கே: நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு இளைய ஆதீனம் பட்டம் வழங்குவது ஏற்புடையதா?

ப: நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது அறியாமையினாலும், பொறாமையினாலும், புரிந்து கொள்ளுதல் இல்லாததாலும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எள்ளளவும் உண்மை இல்லை. அவரது நடவடிக்கைகளை பலதடவை கவனித்த பின்னர்தான் இந்த பொறுப்பிற்கு அவர் தகுதியானவர் என்று முடிவு செய்தேன்.

கே: மதுரையில் நித்யானந்தாவுக்கு விழா எடுக்கப்படுமா?

ப: இன்று (வெள்ளிக்கிழமை – 27-04-2012) மாலை நானும், நித்யானந்தாவும் மதுரை வருகிறோம். நாளை மதுரை ஆதீனத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறோம்.

ஜூன் மாதம் 5-ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தங்க சிம்மாசனம், தங்க செங்கோல் ஆகியவற்றை நித்யானந்தா எனக்கு வழங்குகிறார். அப்போது இளைய ஆதீனமான நித்யானந்தாவுக்கு கவுரவம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 ஊடகக்காரர்களின் மேதாவித்தனம்: செக்யூலரிஸ ஊடகக்காரர்களுக்கு, குறிப்பாக இந்துவிரோத நிருபர்களுக்கு, அர்த்தமில்லாத கேள்விகள் கேட்பதில் வல்லவர்கள். ஐகோர்ட் போனாலும் செல்லாது: “ஆதீன மடத்தின் விதிப்படி, ஓலைச்சுவடி மூலம் தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; ஆனால் யாரிடமும் ஆலோசிக்காமல் திடீரென்று நியமித்து விட்டீர்களே?” என நிருபர்கள் கேட்டதற்கு, “”ஓலைச்சுவடியைப் பாருங்கள். அதில் நித்யானந்தா பெயர்தான் இருக்கும். இதை மற்ற ஆதீனங்கள் அங்கீகரித்துள்ளனர். இந்து சமயம் நலிவடையாமல் இருக்கவும், தூக்கி நிறுத்தவுமே அவரைத் தேர்ந்தெடுத்தேன். இதற்கு எதிராக ஐகோர்ட் போனாலும் அது செல்லாது,” என்றார் ஆதீனம்[11].  இதே சாதுர்யம் மற்ற விஷயங்களில் வெளிப்படாது. காஷ்மீர் தீவிரவாதிகள் முப்டி முஹம்மது சையதின் மகளைக் கடத்திக் கொண்டு வைத்திருந்த போது, விட்டில் பிரியாணி செய்து அவளுக்கு அனுப்பி வைத்தனர். அதாவது, அவள் இருக்கும் இருப்பிடம் தெரிந்தேயிருந்தது. இப்பொழுதும், ஒரு கலெக்டரைப் பிடுத்து வைத்துள்ளார்கள் என்கிறார்கள். ஆனால், அவருக்கு வேண்டியவை கொடுத்தனுப்பப் படுக்கின்றன[12]. மத்தியஸ்தம் பேசுகின்ரவர்கள் தாராளமாகச் சென்ரு வருகின்றனர். ஆனால், அரசாங்கத்திற்கு தெரியாது என்பது போல நாடகமாடி வருவது மக்களை ஏமாற்றத்தான். சர்ச்சிற்கும் நக்சல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு பல உள்ளதும் தெரிகிறது[13]. இதேபோலத்தான், நக்சல்கள் கேட்டத்தைக் கொடுத்து, ஒரிசா எம்.எல்.ஏ.ஐ மீட்டுள்ளனர். இவற்றில் கிருத்துவ பாதிரியார்கள் இடைதரகர்களாக ஈடுபட்டு வருவதை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. எந்த புத்திசாலியான நிருபரும் இந்த போக்குவரத்துகளை அறிந்தும், ஒன்ரும் தெரியாதது போலக் காட்டிக் கொள்கிறர்கள். திருநெல்வாலியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்று செய்தி போடுகிறர்கள். ஆனால், அங்கு சென்று, அங்குள்ள பிஷப்புகள், பாதிரிகளிடம் என்ன நடக்கிறது என்று நேரிடையாகக் கேட்டுவிடலாமா? ஏன் கேட்பதில்லை?


[12] Manish Kunjam, former legislator from Konta district, took the medicines for Menon, an asthma patient, yesterday after Maoists made an appeal for medical help (the Union of Catholic Asian News).

http://www.ucanindia.in/news/abducted-collector%E2%80%99s-health-worsens/17642/daily

[13] “We can’t believe he has been kidnapped,” said Father Biju Uppanmackal, a priest working in Sukma in Bastar district, a tribal area under Maoist control.

http://www.ucanindia.in/news/maoists-under-fire-for-abduction/17620/daily