Posts Tagged ‘தொண்டர்’

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

மார்ச் 21, 2013

அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன?

Aurobindu Ashram attacked by Dravidian group

இலங்கைப் பிரச்சினைக்காக புதுச்சேரியில் போராட்டம்: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள ஐ.நா.தீர்மானத்துக்கு மத்திய அரசு அனைத்து கட்சிகளுடன் கருத்து கேட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவும் அரசியல் கட்சிகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டது. இதற்கு பிற மாநிலத்தில் உள்ள பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.  புதுச்சேரியில், மாணவர் கூட்டமைப்பு மற்றும் வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், கடையடைப்பு போராட்டம் இன்று நடந்தது. இதையொட்டி புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன[1]. அரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன?

DK attacked Ayodhya mantap with petrol bombs

ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் மம்தா கூறியது: ஶ்ரீலங்கா பிரச்சினை விஷயத்தில் காங்கிரஸை ஆதரிப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்[2]. மம்தா பேஸ்புக்கில்[3] குறிப்பிட்டது, இவ்வாறாக உள்ளது[4]:

“Our Party supports the cause of the Tamil brothers and sisters. We are deeply concerned about the atrocities meted out to a section of Tamil population in a foreign country.Local sentiments and their causes sometimes become very critical. We are supporting their cause. At the same time, our Party follows a policy that we should not interfere into issues involving external relations with foreign countries. We leave it for the Central Government to decide on such issues. However, the concerns of the state and the sentiments of the people must be kept in view by the Centre, before taking any decision pertaining to foreign country.”

மாறாக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இலங்கை நட்பு நாடு என்பதால் அந்நாட்டு எதிராக தீர்மானம் கொண்டு வரக்கூடாது என கருத்து தெரிவித்து இருந்தார், என்று தமிழ் ஊடகங்கள் கூறியிருக்கின்றன. ஆங்கிலத்தில் இருப்பதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புதுவை அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடினார்கள். “தி ஹிந்து” காரணம் என்னவென்று தெரியவில்லை என்று குறிப்பிடுகின்றது[5].

புதுவையில் அரவிந்தர் ஆசிரமம் சூறை: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடந்த காலங்களில் வன்முறையில் ஈடுபடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்பொழுதும், அரவிந்தர் ஆசிரமம் அருகில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பகல் 12 மணியளவில் ஒன்று கூடி ஆர்பாட்டம் என்ற பெயரில், “ஒழிக” கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். அதனால், யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்து அதன் தலைவர் வீரமோகன், துணை தலைவர் இளங்கோ ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்து ஆசிரமம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென்று ஆசிரமத்துக்குள் புகுந்து அங்கிருந்த பூ ஜாடிகளை அடித்து உடைத்தனர்[6]. மேலும் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடிகள், அலுவலக பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள்[7]. மேலும் ஆசிரமத்தையும் கல்வீசி தாக்கினார்கள். இதில் ஆசிரம கட்டிடத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன[8]. இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையெல்லாம் மற்றவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை.

அப்படியென்றால், மென்மையான இலக்கு, தாக்குதலுக்கு ஏற்ற சௌகரியமான சின்னம், அவற்றைத் தாக்குவது சுலபம், யாரும் கேட்க மாட்டார்கள், அடித்தாலும், உதைத்தாலும், பெட்ரோல் பாம்ப் / குண்டு போட்டு வெடித்தாலும், ஏன் அரிவாளால் வெட்டினாலும் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அவர்கள் எப்படி அடையாளம் காண்கிறார்கள் அல்லது காட்டப்படுகிறது. இதே மாதிரி மற்ற சின்னங்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை, காணப்பட்டாலும், இதே மாதிரி தாக்கப்படுவதில்லை. அப்படியென்றல், இதில் உள்ள நுணுக்கம், ரகசியம், சதி தான் என்ன?

Salem Kanchi mutt attacked

எளிதான இலக்கைத் தேர்ந்தெடுத்து இவர்கள் தாக்குவது ஏன்?: உண்மையில் இவஎகள் தாக்க வேண்டும் என்றால், காங்கிரஸ்காரர்களைத் தாக்கியிருக்க வேண்டும். அவர்களது சின்னங்களைத் தாக்க வேண்டும் என்றால், சோனியா, ராஹுல், பிரியங்கா புகைப்படங்களைத் தாக்கியிருக்க வேண்டும். ஆனால், இப்படி சமந்தம் இல்லாமல் ஆசிரமத்தைத் தாக்குவது, பொருட்களை நாசம் செய்வது, வன்முறையில் ஈடுபடுவது என்பது இவர்களுக்கு வாடிக்கையாக இருந்து வருகின்றது. முன்பு, சென்னையில், பழைய மாம்பலத்தில், இதேபோல சம்பந்தமே இல்லாத, இரண்டு அப்பாவி பிராமணர்களைத் தாக்கி, அருவாளால் வெட்டியுள்ளனர். இப்பொழுது இங்கு இப்படி செய்த அட்டூழியத்திற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டனர்[9] என்று செய்திகள் வந்துள்ளன. அப்பொழுதும், வெட்டியதற்கு சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், பிறகு என்னவாயிற்று என்று எந்த செய்ட் ஹிகளும் வெளிவரவில்லை. இப்படி வன்முறையில் ஈடுபட்டு, ஒருவேளை கைது செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டால், அத்தகையோர் மறுபடி-மறுபடி வன்முறையில் ஈடுபடுவது வாடிக்கையாகி விடும்.

Raghavendra Brindavan attacked - Rama idol uprooted and thrown

© வேதபிரகாஷ்

21-03-2013


[5] A group of pro-Tamil activists today barged into the Aurobindo Ashram, damaged furniture and smashed glass panes after reportedly attacking and injuring the watchman. Police said activists of the Periyar Dravidar Kazhagam (PDK) also smashed flower pots and damaged the notice board, a clock and the ashram emblem atop the main gate. They also raised pro-Tamil slogans, police said, adding that the reason for the attack was not known.

http://www.thehindu.com/news/national/protamil-activists-attack-aurobindo-ashram/article4534302.ece