Posts Tagged ‘சிக்கலானப் பிரச்சினை’

அப்துல் நாசர் மௌதானியும், சீதாராம் யச்சூரியும்!

ஓகஸ்ட் 29, 2010

அப்துல் நாசர் மௌதானியும், சீதாராம் யச்சூரியும்!

மதானியுடன் கூட்டு, சி.பி.ஐ (எம்) என்ன சொல்கிறது? சி.பி.ஐ (எம்) தலைவர்களில் ஒருவரான சீதாராம் யச்சூரி என்பவர், பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது உரையாடிக் கொண்டிருந்தார். மம்தா பேனர்ஜி அவரைப்பற்றியும், நேபாள மாவோயிஸ்டுகளைப் பற்றியும் இணைத்து பேசியுள்ளதைப் பற்றி ஒரு நிருபர் கேட்டார். இன்னொருவரோ, தீவிரவாதியான மதானியுடன் கேரளாவில் 2009ல் கூட்டுவைத்துக் கொண்டீர்களே, என்று கேட்டார்.

இதனால், சங்கடமடைந்த யச்சூரி[1], தனக்கு உரித்தான பாணியில் நழுவலுடன் பதிலளித்ததாவது, “நேபாள மோவோயிஸ்ட்கள் மற்றும் மம்தா என்று பார்க்கும்போது, அது மிகவும் சிக்கலானப் பிரச்சினையாகும். அதனுடன் மதானியை செர்த்து விட்டால், இன்னும் மிக-அதிகச்சிக்கலான பிரச்சினையாகி விடும். ஆகவே, மம்தாவைப் பொறுத்த கேள்விக்கு மட்டும் பதிலளிக்கிறேன்”, என்று தப்பித்துக் கொண்டுவிட்டார்!


[1] http://sify.com/finance/ducking-madani-news-analysis-ki3akdijgfi.html