Posts Tagged ‘வளர்ச்சி’

தமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்ன – பிஜேபி தோல்வி ஏன் (6)!

மே 29, 2016

தமிழக பிஜேபி அரசியல் ரீதியில் வலுபெற செய்ய வேண்டியவை என்னபிஜேபி தோல்வி ஏன் (6)!

மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்

தமிழக பிஜேபி செய்யவேண்டியவை என்ன?: தேசிய அளவில் ஆட்சியில் உள்ள, பலம் கொண்டுள்ள பிஜேபி மாநில அளவில் பலம் பெற வேண்டுமானால் செய்ய வேண்டியவை என சில எடுத்துக் காட்டப்படுகின்றன. இவையெல்லாம் கட்சியினால் செய்ய முடியாது எனும்போது, சங்கப்பரிவார் இயக்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி-எஸ்.டி, சிறுபான்மையினர், இலக்கியம், கலை, தொழிலாளர், ஆசிரியர் என்று பிரிவுகள் உண்டாக்கப்படவேண்டும்[1].

  1. திராவிட கட்சிகளின் சரித்திரம், தலைவர்கள் குணாதிசயங்கள், முரண்பாடுகள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி புதியதாக சேருபவர், தொண்டர்களுக்கு வகுப்புகள் வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  1. தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும், பேச்சுத்திறமையை வளர்க்க வேண்டும்[2]. திருக்குறள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, தமிழ்நாட்டு மக்கள் எப்படி, தேசியத்தோடு இருந்திருக்கிறார்கள், இந்துத்துவ உணர்வு கொண்டிருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டவேண்டும்.
  1. அரசியல் நிர்ணய சட்டம், தேர்தல் விதிமுறைகள் (வேட்பாளர்களுக்கு, தொண்டர்களுக்கு வேண்டிய விசயங்கள்), தேவையான சட்டதிட்ட நெறிமுறைகள், பொருளாதார விசயங்கள்-பிரச்சினைகள் (பொருட்-உற்பத்தி, சந்தை பொருளாதாரம், விலைவாசி) முதலியவற்றைப் பற்றி சொல்லிக்கொடுக்கப் படவேண்டும்.
  1. மக்களுக்குத் தேவையான முக்கியப் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வது (தடையில்லாத மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, குப்பைகளை அகற்றுவது), குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[3].
  1. பெண்கள் பிரச்சினைகள் (திருமணம், சொத்துரிமை, நவீனப் பிரச்சினைகள்), இளைஞர்களின் விசயங்கள் (நாகரிக பிறழ்சிகள்), சிறுபான்மையினர் உரிமைகள் (தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு அகற்றப்படல்) என்று எல்லாவற்றிற்கும் தொடர்ந்து குரல் கொடுப்பது, போராடுவது, முதலியவற்றில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்[4].

தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும்

  1. இடம், மேடை அமைப்பு, மேடை நிர்வாகம் (நேரத்தைக் கட்டுப்படுத்தல், தேவையானவற்றைப் பேசுதல், பாட்டு பாடுதல்), கூட்டத்தை சேர்க்கும் யுக்திகள், கூட்டத்தை ஈர்க்கும் வகையில் செய்யப்படும் விளம்பர முறைகள், முடிவாக மேடையில் பேசும் திறம் (தமிழில் திராவிட பாணியில்) முதலியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். மோடி போன்ற பேச்சாளர் தமிழில் உருவாக்க வேண்டும்.
  1. எப்படி மற்றவர்களின் நலன்களுக்காக வெளிப்படையாக அரசியல் செய்கிறார்களோ, அதேபோல, பெரும்பான்மைனரான “இந்துக்களையும்” ஒரு தடவை நினைத்துப் பாருங்கள் என்பது. ஸ்டாலின் கூட திமுகவில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என்றது, யோசிக்கத்தக்கது[5].
  1. தமிழக-திராவிட கட்சிகள் கூட்டு இல்லாமல் தேர்தலில் நின்று ஜெயிப்பது முடியாது என்ற நிலை மற்ற மாநிலகட்சிகளுக்கும், காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும் இருக்கும் போது, பிஜேபி தனித்துப் போட்டியிட்டது / போட்டியிடுவது தவறாகும்.
  1. வலுவுள்ள தொகுதிகளில் பிஜேபியை ஆதரிக்கச் சொல்வது, மற்ற இடங்களில் பரஸ்பர ஆதரவு கொடுப்பது, போன்ற சாதுர்யமான விசயங்களில் பேசிப்பார்ப்பது.
  1. இருக்கின்ற இந்து ஓட்டுகள் சிதறாமல் பாதுகாப்பது (பிஜெபி, இந்து மக்கள், கட்சி, சிவசேனா…………………………………………………), ஐஜேகே போன்றவர்களை ஒத்துழைக்கச் செய்வது. இந்து-ஒற்றுமை, ஓட்டு-ஒற்றுமை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

சேறை வாறி இறைத்தாலும் தாமரை மலரும்

  1. முதன்முறையில் வாக்களிக்கப் போகும் இளம் வாக்காளர்களை கவனத்தில் ஈர்ப்பது – படிப்பு (கல்லூரிகளில் அனுமதி, கட்டணம் குறைப்பு / சலுகை), வேலை (படிப்பு முடிந்ததும் வேலை) போன்றவற்றில் தான் அவர்கள் விருப்பத்தைக் கொண்டிருப்பர். உண்மையான திட்டங்கள் இருக்கின்றன என்றால் தான் அவர்கள் அரசியல்வாதிகளை நம்புவர்.
  1. வீடு-வீடாகச் சென்று சுருக்கமாக விசயத்தைச் சொல்லி, மாற்ற முயற்சிப்பது. துண்டு பிரசுரம் கொடுக்கலாம்.
  1. சமூக வலைதளங்களில் நாகரிகமாக, உண்மையினைச் சொல்லி பிரச்சாரம் செய்வது.
  1. குறிப்பாக பெண்களிடம் ஆதரவைக் கேட்பது – இங்குதான் அவர்கள் ஜெயலலிதாவிடமிருந்து விடுபட வேண்டும்
  1. தீவிர, அர்த்தமில்லாத இந்தித்துவவாதத்தை குறைத்துக் கொள்வது – இது தேவையில்லை, ஏனெனில், சில திக இந்துக்கள் இவர்களை விட தீவிர இந்துக்களாக இருக்கின்றனர் என்பது உண்மை.

மோடி ம்முன்னேற்றம், வளர்ச்சி

  1. குறைந்தது 10 இடங்களிலாவது வெல்வது, அத்தகைய இடங்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பது. திருத்தணி, திருவண்ணாமலை, சிதம்பரம், ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், போன்ற இடங்களில் வியாபார ரீதியில் திராவிடக் கட்சிகள் மற்றும் முஸ்லிம்கள் பலமாக இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் போலவே அவ்விடங்களில் பலம் பெறா வேண்டும்.
  1. இந்துக்கள்” இந்துக்கள் என்ற உணர்வை எடுத்துக் காட்டுவது. குறிபிட்டத் தொகுதிகளில் “இந்து நலன்கள்” காக்க குறிப்பிட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க கோருவது.
  1. “இந்துக்கள்”, இந்துக்கள்” என்று விண்ணப்பப் படிவங்களில் எழுதிக் கொள்பவர்கள், சொல்லிக் கொள்பவர்கள், சடங்குகள்-கிரியைகள் செய்து வருபவர்கள், கோவில்-குளங்களுக்கு சென்று வருபவர்கள், ஐயப்பன்-ஆதிபராசக்தி விரதமிருந்து சென்று வருபவர்கள், அலகு-குத்தி, காவடி ஏந்துபவர்கள், நீத்தார் கடன் செய்பவர்கள்………………………………………………………………..என இப்படியுள்ள வகையறாக்கள், ஏன் இந்துக்கள் என்று உணர்ந்து, இந்த தடவை இந்து நலன்களை காக்கும், அல்லது காப்போம் என்று சொல்லும் கட்சிகளை ஆதரிக்க செய்வது.

தமிழில் பேச பயிற்சி கொடுக்க வேண்டும்- மேடைப் பேச்சு கலை-மோடி

 © வேதபிரகாஷ்

 28-05-2016

[1] இவையெல்லாம் ஏற்கெனவே இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதில் பலனில்லை, அவை ஏதோ சிலருக்கு மட்டும் தெரிந்த அளவில் உள்ள “லிளப்புகள்” போன்று செயல்படுவதில் எந்த பலனும் இல்லை. பொது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

[2]  தேசிய தலைவர்கள் ஹிந்தியில் பேசுவதால், அது தமிழக ரீதியில் வித்தியாசமாக்கிக் காட்டுகிறது.

[3] ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் சங்கத்தின் மூலமாகவும் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளலாம்.

[4] முக்கியமான விசயங்கள் உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்கட்சிகள் அவ்வப்போது, அவர்களுக்கு வேலையில்லை என்றால் எழுப்பும் பிரச்சினைகளும் (சபரிமலை கோவில் நுழைவு, மதுவிலக்கு போன்றவை) இவற்றில் சேரும்.

[5] நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்தது முதலியவை திராவிட சித்தாந்த முரண்பாடு, அது கூடிய சீக்கிரத்தில் மறைந்து விடும், ஏனெனில், மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.