சாவிலும் மதம் பார்க்கும் இந்திய செக்யூலரிஸம் – சோனியா-ராகுலின் கேடுகெட்டத் தனம்!

சாவிலும் மதம் பார்க்கும் இந்திய செக்யூலரிஸம் – சோனியா-ராகுலின் கேடுகெட்டத் தனம்!

Indian soldier beheaded - wife cries demands for headராகுலுக்குஎப்பொழுதுஉணர்ச்சிபொங்கிஎழும்?: சீக்கியரின் இறுதி சடங்கில் எப்படி ராகுல் கலந்து கொண்டு, உணர்ச்சியைக் கொட்டியுள்ளார் எனும் போது, ஜனவரியில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, உடல்கள் அனுப்பப்பட்டபோது, ராகுல் அத்தகைய உணர்ச்சியை ஏன் காட்டவில்லை என்று தெரியவில்லை. பாகிஸ்தானியர், இரண்டு இந்திய ராணுவ வீரர்கள், கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் வந்து விட்டார்கள் என்று, சுட்டுக் கொன்று, உடலை சீர் குலைத்து, தலையினையும் வெட்டி, உடல்களை அனுப்பியுள்ளது. இந்த செய்தியைக் கூட ராணுவ அமைச்சகம் காலந்தாழ்த்திதான் உறுதி செய்தது[1]. தரம்வதி / தர்மவதி என்ற ஹேம்ராஜ் சிங்கின் மனைவி “எனது கணவரது தலையைத் தாருங்கள்”, கதறியது யாருக்கும் தெரியாமல் போய் விட்டது எனலாம்[2].  ஊடகங்கள் பெரிதாக அதனை அடிக்கடிக் காட்டி, மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை

Indian soldier beheaded - Dharmavati criesஇந்தியராணுவமந்திரிபுள்ளிவிவரங்களைத்தருவதோடுசரி: 2010லிருந்து 102 முறை பாகிஸ்தானியர் ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதிகளைத் தாண்டி வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்[3] என்று இந்திய ராணுவ மந்திரி எடுத்துக் காட்டுகிறார். சரி, பதிலுக்கு என்ன செய்தார்? ஆனால், பாகிஸ்தானியர், ராணுவ வீரர்களாகவும், தீவிரவாதிகளாகவும், ஜிஹாதிகளாகவும் மற்ற பெயர்களில் பலமுறை எல்லைகளைத் தாண்டி வந்தபோது, சுரணையற்ற இந்திய அரசு, நிலைமையை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்று பதிலடி கொடுக்காமல், தீவிரவாதத்தை ஊக்குவித்து, பெருக்கி வந்துள்ளது எனலாம். இதனால் தான், பாகிஸ்தான், இதெல்லாம் இந்தியாவின் பிரச்சாரம் என்று கூறிவருகிறது[4].

Indian soldier beheaded - wife and kidsஇந்தியவீரர்கள்கொல்லப்படுவது, கழுத்தறுக்கப்படுவது, தலைத்துண்டிக்கப்படுவதுதொடர்கின்றன: மார்ச் மாதத்தில், உச்சநீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தபோது, இவ்விஷயத்தில் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது[5]. முந்தைய கார்கில் போரிலும் ஒரு வீரரின் தலை வெட்டிய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால், அதனுடன் சேர்த்துக் கொண்டது. இந்தியாவின் ராணுவ மந்திரி, வெளியுறவு மந்திரி என்று இருப்பவர்கள் இந்தியர்க்ளகச் செயல்படாமல், தத்தம் மதத்தினராகத்தான் செயல் படு வருகிறார்கள். இதனால் தான், அயல்நாடுகள், இவர்களை மதிப்பதில்லை. விளைவு இந்திய வீரர்கள் கொல்லப்படுவது, கழுத்தறுக்கப்படுவது, தலைத் துண்டிக்கப்படுவது தொடர்கின.

Indian soldier beheaded - coffin carried by peopleஹேம்ராஜின்அந்திமகிரியையில்யாரும்கலந்துகொள்ளவில்லை: உபியில், செர்பூர் (மதுரா மாவட்டம்) என்ற ஊரில் நடந்த அந்திமக்கிரியை நிகழ்சியில் யாரும் – அதாவது ராகுல், சோனியா, என்று – கலந்து கொள்ளவில்லை[6]. உபி-முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அல்லது முல்லாயம் சிங் கூட கலந்து கொள்ளவில்லை. தர்மவதி தனது குழந்தைகளுடன் தனியாக இருக்கிறார். கிராமத்தில் உள்ளோர் அசோக சக்கிர விருது வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுள்ளனர்[7]. ஆனால், அவரது குடும்பத்தாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை!

Indian soldier beheaded - coffin Yemarajஜியாஉல்ஹக்கொல்லப்பட்டபோதோஏகப்பட்டஅரசியல்கலாட்டா: இதே அந்த போலீஸ் அதிகாரி சுட்டுக் கொள்ளப்பட்டு, சடங்குகள் நடந்தபோது, அரசியல்வாதிகள் கலந்து கொண்டார்கள். ஏனெனில், அவர் – ஜியா உல் ஹக் அதாவது முஸ்லீம்! ஆபிஸர்-ஆன்-டியூட்டி பதவி ஆலித்தபோது, அவரது மனைவி பர்வீன், டிஎஸ்பி பதவிதான் வேண்டும் என்று அடம் பிடித்தார்[8]. அதுமட்டுமல்ல, குடும்பத்தை சேர்ந்த எட்டு நபர்களுக்கு வேலை வேண்டும் என்று ஒரு பட்டியலையும் கொடுத்தார்[9]. இதனால் வேலை விஷயத்தில் இவருக்கும், இவரது மாமனாட்ருக்கும் சண்டை ஏற்பட்டது[10]. அகிலேஷ் வாக்குக் கொடுக்காவிட்டால், அந்திமக்கிரியைகூட செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்தார்[11]. இப்படி ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு வந்தன, செய்திகளை, விடியோக்களை வெளியிட்டன!

Indian soldier beheaded - Women protestசுரணையற்றஇந்தியர்கள்செக்யூலரிஸத்தில்ஊறித்திளைத்துள்ளனர்: ஆக சாவிலும் இந்திய செக்யூலரிஸம் மதம் பார்க்கிறது, அதன்படியே, சோனியா-ராகுல் உணர்ச்சிப் பொங்க, தேர்ந்தெடுத்து அந்திமக் கிரியைகளில் பங்கு கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட விதவைகளுக்குக் கூட உபி பாரபட்சம் காட்டுகிறது. இப்படி அந்த செக்யூலரிஸத் தன்மை வெளிப்படுகிறது. இதையும் நல்லது என்று பாராட்டிக் கொண்டு, பிரச்சாரம் செய்து இந்தியர்களை லாயக்கில்லாதவர்களாக, பேடிகளாக, சுரணையற்றவர்களாக மாற்றி வைத்துள்ளனர்.

வேதபிரகாஷ்

04-05-2013


[3] Last year on April 26, 2012 defence minister, A K Antony in a written reply in Rajya Sabha had said a total of 102 ceasefire violations along the LoC in Jammu and Kashmir have taken place since 2010. Read more at: http://indiatoday.intoday.in/story/army-jawans-pakistani-troops-line-of-control-poonch/1/241332.html

[9] Parveen has prepared a list of eight people to hand over to the government for the proposed jobs. Most of the people in the list belong to her father’s family. The name of Zia-ul-Haq’s cousin has been placed at 8th position.

http://daily.bhaskar.com/article/UP-up-dsp-killing-zia-ul-haqs-wife-battles-in-laws-over-govt-jobs-4200670-NOR.html

[10] Haq’s father has strongly objected to the composition of the list, saying after Parveen, only members from the police officer’s side of family should be given the jobs.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , ,

2 பதில்கள் to “சாவிலும் மதம் பார்க்கும் இந்திய செக்யூலரிஸம் – சோனியா-ராகுலின் கேடுகெட்டத் தனம்!”

  1. சேலம்ஆடிட்டர்ரமேஷ்கொலைவழக்கு: முக்கியஎதிரி “போலீஸ்’ பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது! | Says:

    […] [10] https://secularsim.wordpress.com/2013/05/04/seculatism-looks-into-religion-even-in-death-thus-follows… […]

  2. சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கு: முக்கியஎதிரி “போலீஸ்’ பக்ருதீன் துப்பாக்கி முனையில் கைது Says:

    […] [10] https://secularsim.wordpress.com/2013/05/04/seculatism-looks-into-religion-even-in-death-thus-follows… […]

பின்னூட்டமொன்றை இடுக