Posts Tagged ‘முட்டுக்கட்டை’

சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!

ஒக்ரோபர் 29, 2010

சூஸன்னா அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : போலீஸ் கைது செய்ய தயார், ஆனால் முட்டுக்கட்டை போடுவது உள்துறை தான்!

உள்துறை சூழ்ச்சிகள் தொடர்கின்றன: காஷ்மீர் பிரிவினைவாத குழு தலைவர் கிலானி மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாவம், இந்தியாவில் அந்நிலைக்கு வந்து விட்டார்கள். அதாவது பேசியது குற்றமா இல்லையா என்று ஆராய்ச்சி செய்து தான் போலீஸாருக்கு அதிகாரத்தையேக் கொடுப்பார்கள் போலிருக்கிறது. இவர்கள் இருவரையும் ராஜதுரோக குற்றத்தின் அடிப்படையில் கைது செய்ய டில்லி போலீஸ் தீவிரமாக இருந்தாலும், மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது[1].

தேச விரோத பேச்சும், காங்கிரஸின் நாட்டுப் பற்றும்: சில தினங்களுக்கு முன்பு, டில்லியில் காஷ்மீர் பிரச்னை குறித்த கருத்தரங்கிற்கு, உள்துறைக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்[2]. அந்த கூட்டத்தில் பிரிவினைவாத குழு தலைவரான சையது அலி ஷா கிலானியும், பிரபல எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயும் கலந்து கொண்டனராம். அந்த கூட்டத்தில் அருந்ததி ராய் பேசிய பேச்சு, கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளதாம். காஷ்மீர் தங்களின் பகுதி அல்ல என்பதை சர்வதேச அரங்கில் இந்தியாவே ஒப்பு கொண்டதாக அருந்ததி ராய் கூறியிருந்தாராம். இதற்கு இந்த கூட்டம் முடிந்ததுமே பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தாராம். அருந்ததி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தாராம். பாவம், நாட்டில் பிஜேபியைத் தவிர வேறு எந்த இந்தியனுக்கும் சுரணை வரவில்லும் போலும்! இதுகுறித்து டில்லி போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்துவர் என்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்திருந்தாராம்.

போலீஸார் கைது செய்ய தயாராக இருந்தாலும் உள்துறை செய்யும் சூழ்ச்சிகள்: இந்நிலையில் நேற்று இப்பிரச்னை தீவிர வடிவம் எடுக்க துவங்கியுள்ளது. அருந்ததி ராயை கைது செய்வதற்குண்டான சட்ட ரீதியிலான அனைத்து விவரங்களையும் சேகரித்து, அவரை கைது செய்யலாம் என்ற முடிவுக்கு டில்லி மாநகர போலீசின் சட்டப்பிரிவு வந்துள்ளது.  அறிக்கையும் கொடுத்தாகி விட்டது, ஆனாலும் கைது நடவடிக்கைக்கு முன்பாக மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது[3]. அருந்ததியின் பேச்சு, ராஜதுரோக குற்றம் என்றும் அவரை குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் கைது செய்யவும் முகாந்திரம் இருக்கிறது என்றும் டில்லி போலீஸ் நம்புகிறது. ஆனாலும் மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. காரணம் மிகவும் நுணுக்கமான இந்த பிரச்னையில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என உள்துறை அமைச்சகம் கருதுகிறது.  அதை போலவே சட்ட அமைச்சகமும் இதுபற்றி உள்துறை அமைச்சகத்தின் கருத்துக்களை கேட்டறிந்து விட்டு, எதையும் மேற்கொண்டு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அபிஷேக் சிங்வி, கபில் சிபல்,…….போன்ற சட்ட நிபுணர்கள் வாய்மூடி மௌனியாகி விட்டார்கள் போலும்!

“உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லைஎன்றும் பேசும் சட்ட அமைச்சர்! சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இதுபற்றி கூறுகையில், “உள்துறை அமைச்சகத்தில் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லைஎன்றார். பாவம் , இவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார், அவர் சீனாவில் இருக்கிறார். மானம் கெட்டவர்கள், நடந்து சென்றாலே நேராக பார்த்து கேட்டுவிடலாம், ஏனெனில் இருப்பது ஒரே கட்டிடத்தில் அருகருகே தானே! இதற்கிடையில் நேற்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா டில்லியில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அளித்த பேட்டியில், “கிலானி, அருந்ததி ஆகியோரின் பேச்சுக்கள் விவரம் ஆராயப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார். இப்படி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் போலிருக்கிறது!

இதே பிரஷாந்த் பூஷன் தான் முன்னமும் சூஸன்னாவை ஆதரித்தது[4]: இதே மற்றவர்கள் விஷயம் என்றால், ஆஹா முன்பு கோட்சேவிற்கு ஆஜரானாரே அதே வக்கில்தான், இப்பவும் ஆஜராகிறார் என்று கதை விடுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மைகளை மறைக்கிறார்கள். ஆமாம், இப்படி பல டிவி செனல்களுக்கு சொந்தக்காரர்களாக, சோனியாவின் நண்பர்களக இருந்தால், என்ன செய்ய முடியும்? அருந்ததி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்திருப்பதால், பிரபல மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.  பிரபல வக்கீலான பிரஷாந்த் பூஷன் கருத்து தெரிவிக்கையில், “சுதந்திரத்தை அடைய வேண்டுமென்று ராணுவத்தை தூண்டி விடும் வகையிலோ அல்லது வன்முறை கலவரம் போன்றவற்றிற்கு ஆதரவாகவோ பேசினால் மட்டுமே ராஜதுரோக வழக்கு போட முடியும்.  அருந்ததி ராயின் பேச்சு என்பது ராஜதுரோகம் என்று கூற முடியாது. அப்படி இருக்கையில் அவர் மீது ராஜதுரோக வழக்கு போட்டால் அது ஜனநாயகத்தின் முடிவையே குறிக்கும்’ என்றார்.

IN THE SUPREME COURT OF INDIA
CONTEMPT PETITION (CR) NO. 2/2001
IN THE MATTER OF:
J.R. PARASHAR AND ORS.
PETITIONERS
VERSUS
PRASHANT BHUSHAN AND ORS.
RESONDENTS

AFFIDAVIT IN REPLY ON BEHALF OF RESPONDENT NO. 1

I, Prashant Bhushan, son of Shanti Bhushan, resident of B-16, Sector 14, Noida, do hereby solemnly state and affirm as under:

நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது[5]: இதற்கிடையே, தனது பேச்சின் மூலம் எழுந்துள்ள சர்ச்சை குறித்து, அருந்ததி ராய், கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து செவ்வாய்க்கிழமை (26-10-2010) அறி்க்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “இங்குள்ள லட்சக்கணக்கான மக்கள்[6] தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். நானும் என்னைப் போன்ற விமர்சகர்களும் கடந்த பல ஆண்டுகளாக எழுதி வரும், பேசி வரும் கருத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். எனது பேச்சை முழுமையாகப் படித்தவர்களுக்கு, அது நீதிக்கான உரிமையின் குரல் என்பது புரியும். உலகின் மிகக் கொடூரமான ராணுவ ஆதிக்கங்களில் ஒன்றின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களின் நியாயத்துக்காக நான் பேசினேன்‘ என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ‘எழுத்தாளர்கள் தங்கள் மனம் திறந்து பேசுவதை இந்த அரசு அடக்க நினைப்பது பரிதாபமானது. மதவாதக் கொலைகாரர்கள், பெரிய நிறுவனங்களின் ஊழல்வாதிகள், கொள்ளையர்கள், ஆகியோர் சுதந்திரமாக நடமாடும் நிலையில், நீதி கேட்போரை சிறையிலடைப்பது பரிதாபமானது‘ என்று அருந்ததி ராய் தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

IN THE SUPREME COURT OF INDIA
CONTEMPT PETITION (CR) NO. 2/2001
IN THE MATTER OF:
J.R. PARASHAR AND ORS.
PETITIONERS
VERSUS
PRASHANT BHUSHAN AND ORS.
RESONDENTS

AFFIDAVIT IN REPLY ON BEHALF OF RESPONDENT NO. 3

I, Arundhati Roy, daughter of Mary Roy, resident of 2A Kautilya Marg, New Delhi 110021, do solemnly state and affirm as under. I have received the showcause notice issued by the Supreme Court and I have read and understood the contents of the contempt petition in which this notice has been issued[7].

இவர்கள் எல்லோருமே, பெரிய பணக்காரர்கள், அதிகார வர்க்கத்தினரின் ஆதரவாளர்கள், தாங்களே முதலாளிகள் மற்றும் முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் கோஷ்டியினர் என்பதால், ஏதோ மக்களின் உரிமைக்குப் போராடுகிறொம் என்ற போர்வையில் செயல்படுவார்கள்.

ORIGINAL JURISDICTION

In the matter of

CONTEMPT PETITION (CRL) NO. 10 OF 2001

(Suo motu Contempt Proceedings under Rule 3(a) of the Rules to regulate proceedings for Contempt of the Supreme Court 1975 initiated on the basis of Affidavit dated 16.4.2001 filed on 17.4.2001 in Contempt Petition (Crl) No.  2/2001 titled J.R. Parashar and Others Versus Prasant Bhushan and Others.)

Affidavit in Response of the respondent/noticee

I, Arundhati Roy, daughter of Mary Roy, resident of 2A Kautilya Marg, New Delhi 110021, do hereby state and affirm as follows: That I have read and understood the contents of the Contempt Notice issued to me dated 5th September 2001 and my reply to it is as under[8]:

நோபல் பரிசுக்காக அலையும் சூஸன்னா அருந்ததி: “அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம் என்ற கருத்து அவருடையாக இருந்து வருகிறது. அவர் வரும் வேளையில் காஷ்மீர் பிரச்னை பெரியதாக வெடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை.  மேலும்  காஷ்மீர் இந்து பண்டிட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ., பேசி வருவதும் நெருக்கடியை தருகிறது. தவிர புக்கர் பரிசு பெற்றவர் அருந்ததி ராய். அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அது சர்வதேச அளவில் பேசப்படும் விஷயமாகி விடும்.  ஆகவே அருந்ததி ராய் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவசரம் காட்டுவதா வேண்டாமா என்ற குழப்பம் அரசுக்கு ஏற்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன”[9], இப்படியெல்லாம் நினைக்க வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய நிலையில், “பிரபலம் வேண்டும்” என்ரு வெறித்தனத்துடன் செய்யும் காரியங்களை நாட்டு நலனுடன் இணைத்து பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், சூஸன்னா அருந்ததி, அடுத்த நோபல் பரிசுக்காகவே இத்தகைய நாடகம் ஆடுகிறார் என்பது தெரிந்த விஷயமே. அடுத்த புத்தகம் காஷ்மீர போராளிகளைப் பற்றியதாம்! இலக்கு 2011!

வேதபிரகாஷ்

© 28-10-2010

 


 

[1] தினமலர், அருந்ததி ராய் மீது ராஜதுரோக குற்றச்சாட்டு : கைது செய்ய தீவிரம், பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2010,23:27 IST, மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2010,00:09 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=114407

[2] ஆனால் உள்துறைக்கு தெரியாது என்று சொல்லிவிட்டது!

[3] முன்பு தமிழக போலீஸார் ஒரு காமுகனை – கற்பழித்து நிர்வான வீடியோ எடுத்தவனை – கைது செய்ய வேண்டும் எனும் போது, கருணாநிதியின் உத்தரவு பெற்றுதான் செய்தனரே, அதைப் போன்ற சமாச்சாரம் தான் இது. குற்றத்தின் தன்மையினை விட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலை தான் கருத்திற்கொள்ளப்படுகிறது.

[6] ஆனால், அதே நேரத்தில் லட்சக் கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்வது சூஸன்னாவிற்குத் தெரியவில்லையாம்!

[9] நன்றி-தினமலர் மற்றும் அதன் டில்லி நிருபர்