Posts Tagged ‘மாநாடு’

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)

பிப்ரவரி 27, 2018

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)

ABVP 2018 conference. evening stage-1st day

பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அரங்கம்!: “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்”  23வது மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. 17-02-2018 அன்று பலர் மாணவ-மாணவியர்களுக்கு பலவித விசயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மாலையில், சிறப்பு  நிகழ்ச்சிகள் இருந்தன. நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ், சொற்பொழிவாற்றினார். சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்திர குமார் போஸ் 2016ல் பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்தார். ஹவுராவில் நடைபெற்ற பாஜக பொதுக்க கூட்டத்தின்போது அவர் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். முன்னதாக, கடந்தஜனவரி 23 ம் தேதி 2016 தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பான கோப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சந்திரகுமார் போஸும் கலந்து கொண்டார். அப்போதுபேசிய சந்திரகுமார், முந்தைய காங்கிரஸ் அரசு சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல கோப்புகளை அழித்துவிட்டது என குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியர், மாணவர்களுக்கு இணையாக தற்காப்பு கலை பற்றிய பயிற்சிகளை செய்து காட்டினர்.

ABVP 2018 conference.Sandeep member Minority

சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர்

ABVP 2018 conference.Sandeep member Minority.audience

சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் – கேட்கும் மாணவ-மாணவியர்.

ABVP 2018 conference.Students unite-1stday

மாணவமாணவியர்களுக்கு விளக்கம் கொடுத்து பேசியவர்கள், விவரங்கள்: திரு சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் கல்வி பற்றி பேசிக்கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர் வித்தியாசமான அணுகுமுறையில் இருந்தனர்; சிலர் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்-குறிப்புகள்ள் கூட எடுத்தனர்; சிலரோ தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர்;  சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்; மகேஷ் என்பவர், விவசாயத்தைப் பற்றி பேசி-விவாதித்துக் கொண்டிருந்தார். விலை அங்கு நடந்த உரையாடல்! லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்! நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்! கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.  பேசியதும் வேகவேகமாக சென்று விட்டார்!

ABVP 2018 conference.discussion about agriculture.2

விவசாயத்தைப் பற்றி பேசி-விவாதித்தது.

ABVP 2018 conference.discussion about agriculture

கேள்வி-பதில்…..

ABVP 2018 conference.discussion about agriculture.3

மாணவமாணவியர் ஏபிவிபி மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்?: எங்கள் குழு கலந்து கொண்டு, மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்டு, விவரங்களை சேகரித்தது. சுமார் 60 மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்ட போது [ஏபிவிபி பற்றி தெரியுமா, ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்கள், சித்தாந்தம் பற்றி தெரியுமா போன்ற கேள்விகளுக்கு……..இவை விடையாகவும் இருந்தன……..], அறிந்த விசயங்கள்:

  1. படிப்பு முதலிய விசயங்களுக்கு…………….., எனக்கு உதவுகிறார்கள் அதனால் நான் வந்து, கலந்து கொண்டேன்.
  2. ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், எவ்வாறு அப்படி இருக்க முடியும் என்பது பற்றி சொல்லிக் கொடுப்பதால், நான் இணைந்தேன்.
  3. நான் இந்து என்பதனால் கலந்து கொண்டேன்.
  4. எனக்கு புரியவில்லை, …………….எல்லோரும் வந்தார்கள், நானும் வந்தேன்……
  5. நமது நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. மாணவர்கள் அதனால், விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
  6. மோடி சிறந்த பிரதமர், என்னை கவர்ந்தவர், அதனால், யாதாவது செய்ய வேண்டும் என்று வந்தேன்.
  7. எனக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருந்ததால் / நான் ஸ்வம் சேவக் என்பதால் வந்தேன்,
  8. நான் அம்பேத்கர் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றாலும், இங்கு எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் விதத்தை புரிந்து கொண்டேன். தொடர்ந்து கலந்து கொள்வேன்.
  9. மற்ற மாணவர் சங்கம் போல நாமும் வலுவாக திகழ வேண்டும், அதற்காக உரிய முறையில் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.
  10. நண்பர் கலந்து கொண்டதால், கலந்து கொண்டேன்.
  11. சென்னைக்கு இரண்டு நாள் மாநாடு, பஸ் போகிறது, வருகிறாயா என்று நண்பன் கேட்டான், வந்தேன்.

இப்படி சிறிய விடை அளித்தார்களே தவிர, அதற்கு மேல் விசாரித்தால், அவர்கள் சொல்ல தயங்கின்றனர் அல்லது சொல்ல முடியாமல் இருந்தனர்.

ABVP 2018 conference.talking ancient science

லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்!

ABVP 2018 conference.talking ancient science.audience

கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.

பங்கு கொண்டவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறதுதெரியவில்லை: இவ்வாறு பலவிதமான பதில்களினின்று அறியப் படுவதாவது:

  1. 23வது மாநாடாக இருந்தாலும், புதியதாக வருபவர்களுக்கு அமைப்பைப் பற்றி சரியாக தெரியவில்லை.
  2. ஒன்றிற்கு மேற்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்டவர்களும், “பாரதத்தைக் காக்க வேண்டும்”,” நான் இந்து” போன்ற வட்டங்களிலிருந்து வெளியே வரவில்லை.
  3. இருப்பவர்களும் ஒரே மாதிரியாக பேசுவது, சொன்னதையே திரும்ப-திரும்பச் சொல்வது போன்ற ரீதியில் உள்ளார்கள். தமது திட்டங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் [அப்-டேடிங் செய்யாமல்] உள்ளனர்.
  4. நடைமுறை பிரச்சினைகள், விவகாரங்கள், பற்றியவை தெரியாமல் இருக்கிறார்கள்.
  5. மற்ற மாணவ-மாணவியர் அமைப்புகள் பற்றி தெரிந்து வைத்து இருக்கவில்லை. தெரிந்து கொண்டாலும் அரைகுறையாக உள்ளது.
  6. அடிப்படை அரசியல் சித்தாந்தம், அரசியல் கட்சிகளின் தோற்றம்-வளர்ச்சி, அவற்றின் செயல்பாடுகள் முதலியவை தெரியவில்லை.

மாநாடு, கூட்டங்கள் நடக்கும் போது, 1000-100 என்று கலந்து கொண்டு பிரிந்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் இரண்டு-மூன்று-ஐந்து பேர் கூட சேர்ந்து பேசுவதில்லை. பிரதிநிதிகள், நகர-மாவட்ட அதிகாரிகள் கூடி பேசுகிறார்கள்.

ABVP 2018 conference.audience.Nambi

நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்

ABVP 2018 conference.audience.Nambi.narayanan

நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி………………

ABVP 2018 conference.audience

கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர்.

சித்தாந்த ரீதியில் என்ன செய்ய வேண்டும்?: கீழ் கண்ட விசயங்களை அனைத்து உறுப்பினர்களும் தெரிந்து கொண்டு அலச வேண்டும்:

  1. இந்துத்துவம் என்பது இந்தியாவை இணைக்க வல்ல பலமான சித்தாந்தம் என்றால், இத்தனை வருடங்கள் ஆகியும் இந்துத்துவவாதிகள், சித்தாந்த ரீதியில் ஏன் எதிரிகளை எதிர்க்காமல், எதிர்க்க முடியாமல் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும்.
  2. “இந்துத்துவம்” மற்ற மதங்களுக்கு எதிரானது என்ற எதிரிகளின் பிரச்சாரத்தை முறையாக எதிர்க்காமல், மறைமுகமாக எதிர்-பிரச்சாரம் மூலம் ஏன் அவர்களை ஆதரித்து வருகிறார்கள், இது மாற்றப்பட வேண்டும்.
  3. “இந்துத்துவவாதிகள்” குறிப்பிட்ட சித்தாந்திகள் இடது-வலது என்று இருபக்கங்களிலும் இருந்து கொண்டு, பலனைப் பெற்று வருகிறார்கள், அதாவது, அவகர்ளால் பிரயோஜனம் இல்லை என்பதை அறிய வேண்டும்.
  4. “இந்து-விரோதி” என்று “சிலரை” அறிந்த பிறகும், அவர்களின் பொய்களை ஏன் இந்துத்துவவாதிகள், மல்லுக் கட்டிக் கொண்டு பரப்பி வருவதை, ஆதரிப்பதை தடுக்க வேண்டும்.
  5. “இந்துத்துவவாதிகள்” போர்வையில், “இந்துக்கள்”, இந்துக்களின் நலன்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவது துரதிருஷ்டவசமானது, அது கண்டறியப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும்.
  6. இல்லை என்கிறான் ஒருவன், இருக்கிறது என்கிறான் இன்னொருவன். “இல்லை” என்பது உண்மையான பிறகும், அதைப் பற்றி சொல்லாமல் இருப்பது நாத்திகத்தை ஆதரிப்பதாக உள்ளது. இல்லாதத்தை இருக்கிறது என்ற பொய்யை திரும்ப-திரும்ப இந்துத்துவவாதிகள் போட்டு பரப்புவது, அவர்கள் உதவுவதைத் தான் மெய்ப்பிகிறது!
  7. “இல்லை என்று சொன்ன உண்மை” எனக்கு தெரியவில்லை, ஆனால், “இருக்கிறது என்ற சொன்ன பொய்” எனக்குத் தெரிகிறது என்று பாராட்டு ஏன்! இதெல்லாம் இந்துத்துவவாதிகளுக்கு என்று நான் சிந்தித்து எழுதினாலும், எதிர் சித்தாந்தவாதிகளை எதிர்ப்பதை அறிலாம், இதுதான் உண்மையான பிரச்சாரம்!
  8. +ve propaganda, –ve propaganda, anti/counter-propaganda, +ve suggestion, –ve suggestion, இதைப் பற்றியெல்லாம் இந்துத்துவவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்! ஒன்றை செய்யாதே, பார்க்காதே என்றால், அதனை செய்ய/பார்க்கத் தூண்டுவது எதிர்-தூண்டுதல், –ve suggestion , –ve suggestion ஆகும்!
  9. திமுக 1960-70களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்திக் கொண்டது. சமீபத்தில் “ஜல்லிக் கட்டு” விவகாரத்தில், உபயோகப்படுத்தப் பட்டார்கள். அதுபோல ஏபிவிபி எவ்வாறு மாணவர்களை ஒன்று சேர்க்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.
  10. திராவிடத்துவம் பேச்சுத் திறமையினால், பொய்யான இனவெறி கருதுகொளால், நாடகம்-சினிமா தொழில்களால், அவற்றால் செய்யப்பட்ட பிரச்சாரங்களினால் வளர்ந்தது. அதனை, இந்துத்துவம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தான் ஏபிவிபி உள்ளது.

© வேதபிரகாஷ்

27-02-2018

ABVP 2018 conference.leaders

ஏபிவிபி தலைவர்கள்…………………………..

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

ஜனவரி 15, 2016

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

Malda map, IHC, poppy cultivationபங்களாதேச எல்லைக்கருகில் உள்ள மால்டாவில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகமாவது: மால்டா மேற்குவங்காள மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில், பங்களாதேசத்தையொட்டி 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டு முஸ்லிம்கள் எல்லைகளைத் தாண்டி வருவதும்-போவதும் சகஜமாக உள்ளது. “டோகன் முறையில்” பங்களாதேச முஸ்லிம்கள் “வேலைக்கு” என்று காலையில் வந்து, மாலைக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், திரும்பிச் செல்லாமல் தங்கிவிடும் முஸ்லிம்களை ஊக்குவித்துதான், அவர்களுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள சீட்டு, இப்பொழுது ஆதார் கார்ட் எல்லாம் வழங்கி, “முஸ்லிம் ஓட்டு வங்கிகளாக” எல்லைத்தொகுதிகளை மாற்றியிருக்கிறார்கள். இதனால், முஸ்லிம் தொகையும் கணிசமாக பெருகியுள்ளது. 40 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ ஆட்சியில் ஆயுத புரட்சி என்ற போர்வையில் வன்முறை ஊக்குவிக்கப்பட்டது. இப்பொழுது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

Malda riots - Mamta playing minority cardமார்க்சீய அரசியல் பாரம்பரியத்தைப் பின்பற்றும் மம்தா மற்றும் திரிணமூல் கட்சிக்காரர்கள்: பல நேரங்களில் இருகட்சிக்காரர்களும் சேர்ந்தே வேலை செய்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மட்டுமல்லாது, தொழில் ரீதியிலும் சேர்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. மால்டாவின் வடமேற்கில் புர்னியா உள்ளது. பீஹாரில். ஜார்கென்ட் மாவட்டத்தில் உள்ள இது, ஏற்கெனவே ஆயுதகடத்தல்-ஆயுதங்களுக்கு பிரசித்தியானது. ஜனவரி 2015ல் காலியாசக் கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது[1]. கஸ்சந்தபூர் [Khaschandpur] கிராமத்தில் திரிணமூல் தலைவர் உமாயூம் ஷேக்கின் வீட்டில் இருந்த பாதாள அறையிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. கக்ரகர் குண்டுவெடிப்பில் கைதான ஜியா-உல்-ஹக் மற்றும் பங்களாதேசத்தின் ஜே.எம்.பியின் தீவிரவாதி ஜமால்-உல்-முஜாஹித்தீன் பர்த்வானில் உள்ள ரெஸூல் கரீமுக்கு “ஆயுதங்கள் செய்வது எப்படி” போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தான்[2]. இதே நேரத்தில், மார்க்சிஸ்டுகளுக்கும் தொடர்புள்ளது.

Tiwari protest turned riotகம்யூனிஸ புரட்சி பயங்கரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சேர்ந்தே செயல்படுகிறது: கள்ளநோட்டு கும்பல், போதை மருந்து உற்பத்தி-விநியோகம், கொள்ளை என்று பலவித குற்றங்களில் இருகட்சியினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அரசுதுறை அதிகாரிகள் கட்சிகளுக்கு சார்புள்ளவர்களாகவே இருப்பதினால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, எடுத்தால் தொடர்ந்து வழக்கு போடுவது-நடத்துவது முதலியவை தவிர்க்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப் பட்டு, காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன. இருப்பினும், அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, சில நேரங்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், உண்மைகள் சில வெளிவருகின்றன. அரசியல் ரீதியில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், உண்மைகள் மாறப் போவதில்லை. மார்க்சிஸ்டுகளின் போலித்தனம் தான் வெளிப்படுகிறது. மார்க்சீய சித்தாந்த தாக்குதல் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றில் மட்டுமல்லாது, அறிவிஜீவிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

UGB_Main_Buildingஇந்திய வரலாற்றுப் பேரவையும் [Indan History Congress], மார்ச்சீயவாதமும், சரித்திரசாரியர்களும், முஸ்லிம்களும்: கடந்த 60 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவர்களை நன்றக கவனித்து வருவதால், அவர்களும் பதிலுக்கு ஆதரித்து வருகிறார்கள். இந்திய வரலாற்றுப் பேரவை [Indan History Congress[3]] ஆண்டு மாநாடுகள் அவ்விதமாகத்தான் மேற்கு வங்காளத்தில் பலமுறை நடத்தப் பட்டுள்ளது. மார்க்சீய சரித்திராசிரியகள் என்று தம்மை வெளிப்ப்டையாக அறிவித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாப்ரி மஸ்ஜித் வழக்கில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆதாவது “செக்யூலரிஸ” ரீதியில் இந்துக்களுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். இதனை இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய சரித்திரத்தை அவர்களது சொத்து போல வைத்துக் கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இடைக்காலத்தைத் தூக்கிப் பிடித்து, முகமதியர்களின் அக்கிரமங்களை, கொலைக்குற்றங்களை, கோவில் இடிப்புகளை, கொள்ளைகளை, மதமாற்றங்களை மறைத்து-மாற்றி எழுதி வருவதால், இக்குழுக்கள் அந்நியோன்னியமாக, கூடிக் குலாவி வருகின்றன. குறிப்பாக மால்டாவில் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, 76ம் வருட மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தான், கலவரம் நடந்துள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்[4]. ஆனால், இதைப் பற்றி தமிழ் ஊடகங்கள் அரைகுறையாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது.

Azam Khanமால்டா கலவரங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களின் அரைகுறை செய்தி வெளியீடு (ஜனவரி 7, 2015): தமிழ்.ஒன்.இந்தியா “மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது”, என்று ஆரம்பித்துள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது[5] என்று எடுத்துக் காட்டும் வீரகுமார் என்ற நிருபர் அவ்வார்த்தையைக் குறிப்பிடாதது வேடிக்கைதான். உண்மையில் ஓரினச்சேர்க்கை விசயத்தில் அருண் ஜெயிட்லி ஆதரவாக கருத்தை வெளியிட்டிருந்தார். 2014ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்[6]. ஆனால், ஆஸம் கான் நக்கலாக, அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களக இருக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று விமர்சித்தார்[7]. ஆனால், தமிழ்.ஒன்.இந்தியா நிருபர் அந்த உண்மையினை மறைத்து, “ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி”, என்று எழுதியிருப்பது விசமத்தனமாது[8].

Edara-e-Sharias link to Malda violence, the chairman of the group has admitted that it had called for a rally on January 3ஆஸம் கானின் ஓரினச்சேர்க்கை விமர்சனம், திவாரியின் பதில் முதலியன: ஆஸம் கான் பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ், எஸ்.பி தலைவர் தனது மனநிலையை இழந்து விட்டார் என்று கண்டித்தது. பிறகுதான், திவாரி உபியில் முஸ்லிம்கள் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தார்[9]. அதற்கு அவர்களது தலைவரும் காரணமாக இருக்கலாம்[10], ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பிரம்மச்சாரிகள் என்றால், அவரும் அப்படியே, அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்பட இந்தியில் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. பிறகு அது “இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது”, என்று தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 03-01-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும்கூட (07-01-2016), கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் வீரகுமார் எழுதி முடித்தாலும், அதன் பின்னணியைக் குறிப்பிடாதது ஆச்சரியமானது தான்!

© வேதபிரகாஷ்

15-01-2015

[1] The Telegraph, Arms unit near blast accused home – Illegal factory 10km from Bangla border, 4km from Burdwan suspect’s address, Monday , January 12 , 2015.

[2] http://www.telegraphindia.com/1150112/jsp/siliguri/story_7883.jsp – .Vpg2l7Z95dg

[3] http://www.indianhistorycongress.org.in/; http://www.ihc76.in/;

[4] http://www.ihc76.in/accomodetion.php; http://www.ihc76.in/indianhistorycongress/mainform/index.php ; http://www.ihc76.in/deligatfee.php

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்! காவல் நிலையங்கள் தீக்கிரை, Posted by: Veera Kumar, Published: Thursday, January 7, 2016, 16:49 [IST].

[6] Khan’s comments came after Union Finance Minister Arun Jaitley, last Saturday, 05-12-2015 said that the “judgment on gay sex should be reconsidered” by the Supreme Court. “Supreme Court’s 2014 verdict banning gay sex is not in accordance with evolving legal jurisprudence and court needs to reconsider it,” Jaitley said while speaking at Times LitFest.

[7] Zeenews, SP leader Azam Khan stirs fresh controversy, says RSS leaders are homosexuals, Last Updated: Monday, November 30, 2015 – 15:22.

[8] http://tamil.oneindia.com/news/india/malda-communal-violence-continues-244028.html – cmntTop

[9] http://zeenews.india.com/news/india/sp-leader-azam-khan-stirs-fresh-controversy-says-rss-leaders-are-homosexuals_1828366.html

[10] The Times of India had in a report said that Tiwari, who claims to be the working president of Hindu Mahasabha, had called Prophet Muhammad the first homosexual in the world.

[10] http://zeenews.india.com/news/india/this-is-what-kamlesh-tiwari-said-about-prophet-muhammad-which-infuriated-muslims_1833716.html

திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல!

திசெம்பர் 20, 2015

திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல!

muththukumaraswamy thambiran in a aal religios meeting

சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],

“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.

குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது!

ஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்!

சதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்!

போதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது!

அதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது!

கருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

மொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”

எஸ்ரா சற்குணம், ஆவுடையப்பன், வீரமணி, விஸ்வநாதன், ஜேப்பியார், சந்தோஷம், செல்வராஜ்எம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:

Yesterday (27-12-2008), there had been a VHS- 2008 conference at Hotel Ashoka, wherein, one of the ‘controversial samiyars’ appeared to have participated.

He was questioned by other delegates and R.B.V.S. Manian, who inagurated the Conference, condemned the duplicity of Mutukumaraswamy Thampiran (he had not attended this conference, but was there with the “controversial one” in another “Hindu conference” held on 25-12-2008 at Thevar Mantapam, Chennai), who hobnobbing with the mylapore bishop (who has been aiding and abetting the thomas frauds) and other christians.

It is ironical how such duplicities and christian agents are infiltrating other conferences surreptiously, that too, masquerading as ‘Hindu samiyars’!

The above report only proves how the masqueraders have been roaming in India cheating Hindus.

The Sufis had / have been doing such nonsense and therefore, Hindus should expose such masquerades and cheats!

They also asdopt / adapt suffixes like “IYER”, and thus in Tamilnadu, we have ‘many christian iyers’. Not only the bishops / catholic bishops are addressed as ‘iyer’, but also folling pastors / prechers who roam with such names e.g, Mani Iyer of Annanagar. He has been fooling in spite of being a christian. His booklet was distributed by the Deivanayagam before the Kapakleswarar Temple. Though, a complaint has been lodged bty Ramagopalan, no action seems to have been taken.

எம். நாச்சியப்பன் பதிவின் தமிழாக்கம், “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில்வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார்.

இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த ஆர்.பி.வி.எஸ்.மணியன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.

இவ்வாறு எப்படி இந்த இரட்டை வேடக்காரர்கள் மற்றும் கிருத்துவ ஏஜென்டுகள் அமைதியாகஹிந்து சந்நியாசிகளைபோல உள்ளே நுழைந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இது இந்தியாவில் இத்தகையோர் வேடமிட்டு திரிந்து கொண்டு இந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைத்தான் மெய்பிக்கிறது.

(முன்னர்) சூபிக்கள் அவ்வாறு ஏமாற்றி வந்தார்கள், ஆகையால், இந்துக்கள் இப்பொழுது இத்தகைய வேடதாரிகளை வெளிப்படுத்திக் காட்டவேண்டும்.

இவர்கள் எல்லோரும் போதாகுறைக்குஐயர்என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உலாவி வருகிறார்கள். இது போலஐயர்என்று விளிக்கப்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்ணாநகரில் கூடமணி ஐயர்ரென்ற பாதிரி இருக்கிறார். கிருத்துவனாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருகிறா அவனுடைய சிறுபுத்தகத்தை தெய்வநாயகம் மயிலாப்பூர் கோவிலின் முன்பு விநியோகம் செய்து கொண்டிருந்தான். ராமகோபாலன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

moovar-all-speakers- conference 2009தமிழர் சமயம் மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, கத்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர்! ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.

நான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:

Muthukumaraswamy Thambiran (7.54 to 8.12): (He was the only person who talked sitting). First recited several verses from Tevaram, Tiruvacakam etc., and then compared certain practices of Tamils and Jews. Abraham’s native place is mentioned as “Ur” and there is no other language other than Tamil gives the meaning “the (native) place” / “the place (of belonging)” and therefore Abraham was a Tamil / Dravidian[6][46]. Take the practice of Muslims going to Haj wearing unstitched white cloths worshipping Ka’ba, and it is a Tamil practice. Only there, Muslim women are taken by men and they can worship. We know that “bible” is a European book, but it is actually mentioned as an “oriental book”. In fact, Buddha[7][47], Mahavira and other religious heads were also “Tamil-not-knowing Dravidians” only. The belief in previous birth and karma are known to Jesus, as he asks his disciples pointing a blind as to whether his blindness had been due to his sins committed this in this life or earlier birth. The westerners or Christians may not be knowing the meaning of Jesus’ words, “Take the bed and go away”, but Tamils know. As Jesus knew the Tamil practice, he said so. Only Tamils could take their bed and walk away, as they used to use mat made of reeds for sleeping and it could be folded and taken away after sleep. As Tamils follow different types of “seclusions (Tittugal), Jews also follow: the usage of Vibuthi; ear-boring practice; etc. It is believed that Tirumular lived for 3000 years to compose his work – each song for a year. This need not be thought as impossible. If thousands of names and numbers could be stored in hand, none would have believed say 10 years back, but now in a every hand, cell phone is there, as a proof. Therefore, people have to believe (that Tirumular lived for 3000 years). Adam and Eve are nothing but Adhan and Avvai. Similarly, “Pitha-Sudhan-Parisuddha Avi” (Father, Son and Spirit) are nothing but “Shiva-Parvatrhi-Murugan”. Thus, there have been many similarities between Jews and Tamils, and Tamils and Christians.

முத்துக்குமாரசாமி தம்பிரான்24 ஜனவரி 2009 அன்று நடந்தஉலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கும் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் நடத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா? அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே? “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள்? இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை? “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9] ஞாபகத்தில் கொள்ளவேண்டும்!

moovar-sami-jemo-tnr-conference 2009உறுதி கொண்ட பணி தொடர்ந்து நடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும்.  இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.

© வேதபிரகாஷ்

20-12-2015

[1] Ezhavendan on December 25, 2008 at 5:37 pm. ; http://www.tamilhindu.com/2008/12/role-of-hindu-mutts/

[2] M. Nachiappan on December 28, 2008 at 6:15 am ; http://www.tamilhindu.com/2008/12/role-of-hindu-mutts/

[3] http://www.tamilhindu.com/2008/08/christian-conspiracy-thwarted/

[4] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[5] https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/

[6] [46] His full speech has been rhetoric only. Though, the audience was laughing, it is not known as to whether they accept his rhetoric or ridicule him.

[7] [47] We do not know how the Buddhists would respond to it, as they have been very fond of “Arya” title very often as reflected in the Pali scriptures, inscriptions etc.

[8] http://www.tamilhindu.com/2008/08/christian-conspiracy-thwarted/

[9] https://apostlethomasindia.wordpress.com/2010/04/04/tamil-scholars-condemn-christian-author-for-misrepresenting-tiruvalluvar-as-st-thomass-disciple-r-s-narayanaswami-2/

[10] https://christianityindia.wordpress.com/2014/02/22/deivanayagam-pseudo-researcher-and-christian-agent-spreading-thomas-myth/

[11] https://christianityindia.wordpress.com/2014/02/19/religious-frauds-carried-on-by-dubious-christians-in-chennai/

[12] https://christianityindia.wordpress.com/2014/02/20/1575-christian-religious-frauds-imposed-on-gullible-hindus/

[13] https://christianityindia.wordpress.com/2014/02/21/catholic-church-continues-to-engage-in-falsifying-history-for-propagation-of-faith/

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் 20வது மாநில மாநாடும் – என்னுடைய எண்ணத்தொகுப்பும்!

பிப்ரவரி 16, 2014

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் 20வது மாநில மாநாடும் – என்னுடைய எண்ணத்தொகுப்பும்!

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளிக்கு முன்னால் வைக்கப் பட்டுள்ள பேனர்

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளிக்கு முன்னால் வைக்கப் பட்டுள்ள பேனர்

திரு சந்திரசேகர் என்னுடைய நண்பர், அவரைப் பார்க்க பலர் வந்து சென்றுக் கொண்டிருப்பர். அவர்கள் எல்லோரும் ஏபிவிபிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகப் படுத்தி வைப்பார். நானும் “ஹலோ” என்ற ரீதியிலும், சில விசயங்களைப் பற்றி பேசுவது உண்டு. அவர்கள் அவர்களது வேலையைப் பார்த்து கொண்டு சென்று விடுவர் சந்திரசேகர் பலமுறை அவர்களது நிகழ்ச்சிகளுக்கு வரச்சொன்னதுண்டு. ஆனால், நேரமில்லை, உடல் அசௌகரியம், வீட்டுப் பிரச்சினைகளசென்ற பல காரணங்களினால் முடியாமல் இருந்தது. அந்நிலையில் அவர்களது மாநாடு சனி-ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் நடப்பதாகவும் அதற்கு வருமாறும் ஆழைத்தார். இதனால், சென்றிருந்தேன். முதல் நாள் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இரண்டாவது நாள் கலந்து கொண்டேன். அதுபற்றிய குறிப்பே இது.

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (Akhila Bbharata Vidhyarthi Parishad – ABVP – ஏ.பி.வி.பி.) எனும் தேசிய மாணவர் அமைப்பின் இரண்டு நாள் மாநில மாநாடு, கொரட்டூர், சென்னையில் பிப்ரவரி 15, 16 தேதிகளில் நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது[1].

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

நல்லிகுப்புசாமி விவேகானந்த வித்யாலயா பள்ளி

“தமிழக எழுகச்சி, பாரத வளர்ச்சி” என்பது மாநாட்டின் முக்கிய தலைப்பாக இருந்தது. “அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர்

பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர்

வாசலில் பச்சையப்பன் கல்லூரியின் ஏபிவிபி பிரிவின் பேனர் வரவழைத்தது. இது குறித்து ஏபிவிபி அமைப்பின் மாநில இணைச் செயலர் முத்துராமலிங்கம் ஏற்கெனவே ஊடகங்களுக்கு செய்தி கொடுத்துள்ளார். தினமணி மட்டும் தான் சிறுகுறிப்பை வெளியிட்டுள்ளது[2].

“அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

“அளசிங்கர் அரங்கம்” என்ற அரங்கத்தில் நடந்தது.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பின் 20-ஆவது மாநில மாநாடு, சென்னை கொரட்டூரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடந்து முடிந்தது. மாநாட்டை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து 15-02-2014 அன்று தொடங்கி வைத்தார். பிஜேபியுடன் அரசியல் கூட்டு வைத்துக் கொண்ட பிறகு, இவ்வாறு கூட்டங்களில் கலந்து கொள்வது போலவுள்ளது. இருப்பினும், மற்ற நேரங்களிலும் கலந்து கொண்டால் நல்லது என்று தோன்றியது. “தமிழக வளர்ச்சி; பாரத எழுச்சி’ என்பதை மைய கருத்தாகக் கொண்டு நடைபெறும் இம்மாநாட்டில், பாரதத்தின் பெருமைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம், மதுவின் தீமைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில், அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர் [இவர் பெயர் அபேதகர் என்கிறர்கள், ஆனால், உச்சரிக்கும் போது அம்பேத்கர் என்றுதான் சொல்கிறார்கள்], தேசிய செயலர் ஆர்.ராஜ்குமார், மாநிலத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம், மாநிலச் செயலர் சண்முக ராஜா, காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன், அமைப்பின் மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர்

அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் அகில இந்திய அமைப்புச் செயலர் சுனில் அம்பேத்கர்

இரண்டாம் நாள்- 16-02-2-14 அன்று சுனில் அம்பேத்கர் அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தின் குறிக்கோள், திட்டங்கள் மற்றும் செயல்பாடு (The Mission, Vision and Action of ABVP) என்பது பற்றி பேசினார், மதியம் பிரபல மருத்துவர் வி. சொக்கலிங்கம் மதுவினால் ஏற்படும் தீமைகளை மருத்துவ ரீதியில் விளக்கினார். மிகவும் நகைச்சுவையுடன், ஆனால் அதே நேரத்தில் நுணுக்கமான விசயங்களை அருமையாக எடுத்துரைத்தார். மாணவர்களுடன் கலந்துரையாடல் போல, பேச்சை தொடர்ந்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மாணவ-மாணவிகளின் உற்சாகம், கவனிப்பாக உரையைக் கேட்டு, நடுநடுவில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தல், அருமையான விசயங்களை சொன்னபோது கைத்தட்டியது முதலியவற்றைக் கண்டு, மிகவும் நெகிழ்ந்து போனார்.

Dr Chockalingam and Dr Senthamarai ABVP

Dr Chockalingam and Dr Senthamarai ABVP

மருத்துவர் வி. சொக்கலிங்கம் 1966ல் மருத்துவப் பட்டம் பெற்றவர். முந்தைய முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜியார் போன்றோருக்கு சிகிச்சை செய்துள்ளார். இவரது மகன் ஆனந்த் மற்றும் மகள் பிரியா இருவரும் மருத்துவர்கள் தாம்[3]. தேவகி மருத்துவமனை ஆரம்பித்தவர்களில் ஒருவர். தொழிலையே தெய்வமாக மதிக்கிறேன் என்று பல விசயங்களைச் சொன்னார். சைனாவில் ஒரு தடவை “நூறாண்டு காலம் வாழ்வது எப்படி?”, என்று பேச ஆரம்பித்தபோது, 18,000 பேர்கள் குழுமியிருந்த கூட்டத்தில் சுமார் 2,000 பேர் அந்த தலைப்புக்கே எதிர்ப்புத் தெரிவித்தனராம். ஏனெனில், அவ்சர்கள் எல்லோரும் 10, 110, 120 வயது கொண்டவர்கள். இதனால், நூறாண்டிற்குப் பிறகும் எப்படி வாழ வேண்டும் என்று தலைப்பை மாற்றிக் கொண்டாராம். இதுபோல பல சுவையான விவரங்களைக் கொடுத்தார். உடல், மனம், உயிர், அறிவு முதலியவற்றிற்குள்ள தொடர்பு பற்றி கூறும் போது, அவரது ஆழமாக ஞானம் வெளிப்பட்டது.

சுனில் அம்பேத்கர் , சந்திரசேகர் முதலியோர்

சுனில் அம்பேத்கர் , சந்திரசேகர் முதலியோர்

தொடர்ந்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன், “சமுதாய பிரச்சினைகளுக்கு மதுவின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது”, என்பது பற்றி விளக்கமாக பேசினார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன்

மொத்தம் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 272 மாணவ-மாணவிகள் பதிவு செய்து கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் மாநாட்டில் அவர்களது கலந்துரையாடல்கள், நடவடிக்கைகள் முதலியன மிகவும் கட்டுப்பாடாக இருந்தன. மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் பிஎச்டி, எம்பில், பொறியியல் என்று பலதுறைகளில் படிப்பவர்கள் ஆவர். அவர்கள் தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

தரையில் தான் வரிசையாக சீராக உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

பெரியவர்கள், சில முக்கியஸ்தர்களுக்கு மட்டும் தான் சுமார் 50 நாற்காளிகள் போடப் பட்டிருந்தன. அவர்களில் கூட சிலர், மற்றவர்கள் வந்தபோது, நாற்காலிகளில் உட்காரச் சொல்லி, கீழே உட்கார்ந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

மற்ற மாணவ [SFI, DYFI] இயக்கத்தினரைப் போலல்லாது, சித்தாந்த ரீதியில் இவர்கள் பயிற்சி பெறாதவர்களைப் போன்றே இருக்கின்றனர். வெளியிலிருந்து பார்ப்பவர்கள், ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போல அவர்கள் இல்லை. மிகவும் எளிமையாக, சாதாரணமாக, வெளிப்படையாக பேசும் இயல்புடையவர்களாக இருந்தனர்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

சுமார் 25 பேர்களிடம் பேசி பார்த்தபோது, மற்ற மாணவ இயக்கத்தினர் அவர்களை கிண்டல் அளித்து வந்தாலும், விமர்சித்து வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்வதில்லை என்றார்கள். இருப்பினும் [SFI, DYFI] இயக்கத்தினரைப் போல் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன என்று தெரிந்தது.

Tamilaruvi Manian, Chockalingam, ABVP

Tamilaruvi Manian, Chockalingam, ABVP

பாரதத்தின் பெருமைகள், வாக்களிப்பதன் முக்கியத்துவம், மதுவின் தீமைகள் முதலியவை மட்டும் இக்கால மாணவ-மாணவிகள் தெரிந்து கொண்டால் போதாது, இதற்கு மேலும், குறிப்பாக சித்தாந்த ரீதியில், பல மாற்று / எதிர்க் கருத்து கொண்ட, மாணவ-மாணவிய இயக்கத்தினர் அளவிற்கு பேச்சுத் திறமை, கருத்துமோதல்கள், வாதம் புரியும் தன்மை, முதலியவற்றில் தேர்ச்சிப் பெற்றவர்களாக இல்லை.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

ð  எதற்காக இம்மாட்டில் கலந்து கொள்கிறீர்கள்?

ð  இம்மாட்டில் பங்கு கொள்வதால் என்ன நன்மை ஏற்பட்டது?

ð  படித்து விட்டு என்ன செய்யப் போகிறீர்கள்?

ð  படித்து வேலைக்குச் சென்ற பிறகும் இவ்வியக்கத்தில் இருப்பீர்களா?

ð  மற்ற மாணவ இயக்கத்தினர், கல்லூரிகளில், பல்கலைக்கழகத்தில் உங்களுடன் எப்படி நடந்து கொள்கின்றனர்?

ð  அவர்கள் கூட்டங்களில், மாநாடுகளில் கலந்து கொண்டதுண்டா?

ð  சித்தாந்த ரீதியில் அவர்களுடன் விவாதித்துண்டா?

ð  குறிப்பாக சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் விவாதித்துண்டா?

ð  உங்களை “இந்துத்வவாதிகள்” என்று விமர்சிக்கிறர்களே, அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இப்படி பல கேள்விகளை நேரிடையாகக் கேட்டுப் பார்த்தேன், அவர்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. நாட்டுப் பற்றைத் தவிர மற்ற நிகழ்கால அரசியல் விவகாரங்கள், பொருளாதார பிரச்சினைகள், சமூகமாற்ற தாக்கங்கள் முதலியவற்றைப் பற்றிய தெளிவான சிந்தனை, எதிர்கொள்ள வேண்டிய முறைகள் முதலியவற்றைப் பற்றி தெரியாமலே இருக்கிறார்கள்.

கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

பதிவு நடைபெறும் இடம் – கலந்து கொண்டவர்கள், பார்வையாளர்கள்

பங்குகொண்டவர்களின் மற்றொரு புகைப்படத் தோற்றம்.

Sectional view ABVP

Sectional view ABVP

சேஷாத்ரி (ஆடிட்டர் ரமேஷின் சகோதரர்), கௌதமன் முதலியோர்.

eshadri, brother of Ramesh, Gauthaman etc ABVP

eshadri, brother of Ramesh, Gauthaman etc ABVP

தினமணியில் வெளியான விவரங்கள் (17-02-2014) –  பூரண மது ஒழிப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட முன் வர வேண்டும் என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தினார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய மாணவர் அமைப்பின் 20-ஆவது மாநில மாநாடு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) நடைபெற்றது. இதில் மது ஒழிப்பு தொடர்பான சிறப்பு கருத்தரங்கில் தமிழருவி மணியன் பேசியது:

மதுவுக்கு எதிராக என் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கம் போராடி வருகிறது. இதில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என 1 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வரிடம் அளிக்கும் இயக்கத்தை நடத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் இருந்து 15 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி தமிழக கலால்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் அளித்தோம். டாஸ்மாக் மற்றும் பாரில் குடிப்பதற்காக மட்டும் ரூ.50 ஆயிரம் கோடியை தமிழக மக்கள் செலவழிக்கின்றனர். தமிழகத்தில் இவ்வளவு ரூபாய்க்கு குடிக்கிறார்கள் என்றால் ஏழ்மையை எப்படி ஒழிக்க முடியும். மதுவை பூரணமாக ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கட்சியினர் கூட்டாக சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும், பூரண மதுவிலக்கும் கண்டிப்பாக நிகழும்.

காந்திய மக்கள் இயக்கம் தற்போது கட்சியாக மாற்றம் அடைந்துள்ளது. மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்பதை நோக்கி எங்கள் கட்சி செயல்படுகிறது. மாணவர்கள் நினைத்தால் மதுவை கண்டிப்பாக ஒழிக்க முடியும். ஆதலால் தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக உருவாக்க பூரண மது ஒழிப்புக்கு ஆதரவாக மாணவர்கள் போராட வர வேண்டும். ஒரு டாஸ்மாக் கடைக்கு 100 மாணவர்கள் என்ற ரீதியில் கூடி மதுக்கடைகளை மூடுமாறு போராடுங்கள். மதுக்கடைகள் உடனடியாக மூடப்படும் என்றார் தமிழருவி மணியன். முன்னதாக, ஏபிவிபி-யின் அகில பாரத அமைப்புச் செயலாளர் சுனில் அம்பேத்கர் ஏபிவிபி பற்றியும், டாக்டர் சொக்கலிங்கம் மதுவினால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினர். இந்த மாநாட்டில் ஏபிவிபி-யின் மாநில தலைவர் டாக்டர் சுப்பைய்யா, மாநில செயலாளர் செந்தில் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏபிவிபி-யைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


[2]  தினமணி, சென்னையில் 15, 16-இல் ஏபிவிபி மாநில மாநாடு

, By dn, சென்னை, First Published : 08 February 2014 04:10 AM IST