Posts Tagged ‘நியாயம்’

முஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உயிரிழந்தவர்கள் முஸ்லிம்களைவிட தாழ்ந்தவர்களா?

செப்ரெம்பர் 18, 2013

முஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உயிரிழந்தவர்கள் முஸ்லிம்களைவிட தாழ்ந்தவர்களா?

 

முஸ்லிம்களால் எப்படி மனித உயிர்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உயிரிழந்தவர்கள் முஸ்லிம்களைவிட தாழ்ந்தவர்களா? இக்கேள்வி உச்சநீதி மன்றத்தால் மறைமுகமாக எழுப்பப்பட்டுள்ளது. 370ன் படி விசேஷ அந்தஸ்து உள்ளது என்பதால் மனிதர்களின் உயிர்களை வித்தியாசமாக மதிப்பிட முடியாது என்றும் உச்சநீதி மன்றம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தியாகம்  செய்த  வீரர்களின்  குடும்பங்களுக்கு  நிதியுதவி  செய்வதில் பாரபட்சம்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு, கலவரத்தை அடக்குதல், தீவிரவாதிகளை சமாளித்தல் என பல காரியங்களில் ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள், என பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து, தொலைதூர ஊர்கள்-கிராமங்களினின்று வேலைக்குச் சேர்ந்து, இங்கு கடமையை செய்து வரும் வீரர்களாக இருக்கின்றனர். அவர்கள் பல மொழிகள் பேசும், மதங்களால் வேறுபட்டவர்களாகக் கூட இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்று பார்த்து கடமையைச் செய்து வரவில்லை. இந்தியநாட்டிற்கு, இந்திய மக்களுக்கு சேவை செய்கிறோம் என்று தான் கடமையைச் செய்து வருகிறார்கள். ஆனால், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், இந்தியவிரோதிகள் என்று பலவிதமான குழுக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வருகின்றன என்பதால், அவர்களுடன் போராடும் போது, பலர் இறக்க நேரிடுகிறது. அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதியுதவி அளித்து வருகின்றன. ஆனால், இப்பொழுது கிஸ்த்வார் பகுதியில் ஏற்பட்ட இறப்புகளுக்கு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குறைவாகத்தான் நிதியுதவி கொடுப்போம், ஏனெனில் இறந்தவர்கள் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இங்கு வாழ்பவர்களும் இல்லை, இங்கு நிரந்தரமாக வசிக்கும் மக்களும் அல்லர், என்று வாதிட்டு, நிதியை குறைத்துக் கொடுக்க முயற்சித்துள்ளது.

 

பொதுநல  வழக்கும்,  மதவாத பிடிவாதமும்: கிஸ்த்வார் கலவரத்தை அடக்க வீரர்கள் அமர்த்தப் பட்டபோது[1], இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தகுந்த இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது[2]. அதற்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சார்பாக தாக்குதல் செய்யப்பட்ட தன்னிலை விளக்க பிரமாண அறிக்கையில், பாரபட்சம் மிக்க வாதங்கள் இடம் பெற்றன. எந்த 370 வேண்டும் என்கிறார்களோ,   புனிதம் என்று போற்றுகிறார்களோ, அதனை வைத்தே இந்தியர்களை பிரித்துப் பார்க்க முயன்றிருக்கிறார்கள். இதனால், அம்மாநிலத்தைச் சேர்ந்த போலீசாரைவிட வெளிமாநிலத்தவர் இறக்க நேரிடும் போது, இழப்பீட்டுத் தொகை குறைவாகக் கொடுக்கப்பட்டது. இந்த பாரபட்ச போக்கை எதிர்த்துதான் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

 

உமர் அப்துல்லா பாரபட்ச போக்கை எதிர்த்து வழக்கு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு, கலவரத்தை அடக்குதல், தீவிரவாதிகளை சமாளித்தல் என பல காரியங்களில் ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள், என பலர் ஈடுபட்டு உயிரிழந்தவர்களையே இவ்வாறு நடத்துகின்றனர் என்பது ஏன் என்பதனை அறிந்து கொள்ளவேண்டும். அவர்களது வாதம், “ஏனெனில் எங்களுக்கு இந்திய அரசிய நிர்ணய சட்டத்தின் சரத்து 370ன் படி விசேஷ அந்தஸ்து, உரிமைகள் எல்லாம் உள்ளன[3]. அவை மற்ற மாநிலத்தவர்களுக்கு அளிக்கமுடியாது. அவ்வாறு செய்வது எங்களது உரிமைகளை, சட்ட அந்தஸ்த்தை குறைப்பதாகும், மீறுவதாகும்”, என்றெல்லாம், உமர் அப்துல்லா அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட ஆவணங்களில் வாதங்கள் வைக்கப்பட்டிருந்தன[4]. அப்படியென்றால், ஏன் அவர்கள் அங்கு வந்து சாகவேண்டும்? ஏன் அம்மாநிலம் மற்ற மாநிலங்களை எதிர்பார்த்து வாழ வேண்டும்?

 

“Non-state” and “state” / “Non-state players” and “state players”: “Non-state” என்று இம்மாநிலத்தை அல்லாதவர் என்று குறிப்பிட்டு அத்தகைய வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. “Non-state” என்ற சொற்றொடர் “Non-state players” என்று விஷமத்தனமாக, தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் விசயத்திலும் உபயோகப் படுத்துவதை கவனிக்கவேண்டும். அதாவது, அம்மாநிலத்தில் உள்ளவர்கள் அத்தகைய காரியங்களை செய்வதில்லை, வெளி-இடங்களினின்று, வெளி-மாநிலங்களினின்று, வெளி-நாடுகளினின்று வந்தவர்கள் தாம் அவ்வாறு செய்கின்றனர். அதேபோல, இந்த ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்களும் வெளி-மாநிலத்தவர்கள் என்பதால், அவ்வாறான அடைமொழி கொடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. ஒருவேளை நீதிபதிகள் இத்தகைய சொற்றொடர் பிரயோகத்தின் விஷத்தன்மையை, விசயத்தன்மையோடு பார்த்து அதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்றும் நினைத்திருக்கலாம்.

 

உங்களது மாநிலத்தை  மற்றவர்கள்  உதவி  இல்லாமல்  நிர்வகிக்க  முடியுமா?”   இப்படி  கேட்டது  உச்சநீதி  மன்றம்:  “உங்களது மாநிலத்தை மற்றவர்கள் உதவி இல்லாமல் நிர்வகிக்க முடியுமா? உங்களுக்கு அரசிய நிர்ணய சட்டத்தின் படி சிறப்பு அந்தஸ்து உள்ளது. ஆனால், மனிதர்களின் உயிர்களை வித்தியாசமாக மதிப்பிட முடியாது. அவர்கள் உங்கள் மாநிலத்தில் உயிரை இழந்துள்ளார்கள், தியாகம் செய்துள்ளார்கள். பிறகு எப்படி அவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?”, என்று தலைமை நீதிபது பி. சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சனா தேசாய் என்று எடுத்துக் காட்டி[5], மாநில செயலரை, வேறு தன்னிலை விளக்க பிரமாண அறிக்கையை தாக்குதல் செய்ய உத்தரவிட்டார். தவிர, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்காக வாதிட்ட வக்கிலை நோக்கி, “உமது கட்சிக்காரருக்கு தாங்கள் சரியான முறையில் அறிவுரை, ஆலோசனை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. நாங்கள் ஏற்கெனவே பல வழக்குகளின் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஒத்துழைக்கவேண்டும்”, என்றும் நீதிமன்றம் அறிவுரைத்தது[6]. இங்கு மிகவும் வெளிப்படையாக –

  • உமது கட்சிக்காரருக்கு தாங்கள் சரியான முறையில் அறிவுரை, ஆலோசனை கொடுக்கவில்லை என்று தெரிகிறது” – மாநிலத்தின் விஷேசட்த் தன்மை இந்தியாவிற்கு எதிராக இருக்க முடியாது.
  • நாங்கள் ஏற்கெனவே பல வழக்குகளின் சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஒத்துழைக்கவேண்டும்” – அதாவது, இத்தகைய தேவையில்லாத பிரச்சினைகளைக் கிளப்பி விட்டுக் கொண்டு, எங்களது நேரத்தை வீணாக்க வேண்டம் என்று சொல்லியுள்ளனர்.
  • உங்களது மாநிலத்தை மற்றவர்கள் உதவி இல்லாமல் நிர்வகிக்க முடியுமா?” – பெரும்பாலான சட்டங்கள், விதிகள் முதலியவற்றில் “இச்சட்டம் / இவ்விதிகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பொறுந்தாது” என்று ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இந்திய மக்களின் வரிப்பணம் தான் அம்மாநிலத்திற்கான செலவிற்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

 

கிறிஸ்தவர்  முஸ்லிம்களுக்காகவா  திடுகிறாரா  அல்லது  செக்யுலார்  இந்திய  சட்டங்களை  வளைக்கிறாரா?: சுனில் பெர்னான்டிஸ் என்ற வக்கில் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அபிடேவிட்டில், மாநில போலீஸாருக்கு அளிக்கப்பட்ட “இறப்பு உதவியை” நியாயப்படுத்தி வாதங்கள் பதிவு செய்யப்பட்டன[7]. அவர்கள் இங்கேயே இருப்பவர்கள், இருக்க வேண்டியவர்கள், ஆனால், மற்ற ராணுவம், பாதுகாப்பு, மத்திய சிறப்புப் படை வீரர்கள் இங்கிருந்து செல்லவேண்டியவர்கள். அதனால், இம்மாநில போலீஸாருக்குக் கொடுக்கப்படும் தொகை, மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள் இம்மாநிலத்தவர்கள் அல்லர் என்று வாதிடப்பட்டது. உண்மையில், வாதிடுபவர்-வாதி-பிரதிவாதி இவர்கள் எல்லோரும் எம்மதத்தவர் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், இப்பொழுது அவையெல்லாம் பார்க்கப் படுகின்றன. ஏன் நீதிபதிகள் நியமனமே மதம், ஜாதிவாரியாகத்தான் செய்யப்படுகின்றன. அதற்கு செக்யூலரிஸ அரசியல்வாதிகள் பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இங்கு அத்தகைய விவரங்களும் கவனிக்க வேண்டியதாகிறது.

 

மதரீதியில்  இயங்கிவரும்   ஜம்முகாஷ்மீர  அரசு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசிய நிர்ணய சட்டத்தின் சரத்து 370ன் படி விசேஷ அந்தஸ்து உள்ளது என்பது எல்லோரும் அறிந்த விசயம் தான். அதிலும் பிஜேபி, அதனை நீக்கவேண்டும் என்று கேட்டுவருவதால், இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகள் எதிர்த்து வருவதும் தெரிந்த கததான். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, சில உத்திரவாதங்கள், சரத்துகள் சேர்க்கப் பட்டு, அந்த 370 பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால், 1980களினின்று முஸ்லிம் அடிப்படைவாதம் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கும் போது, இந்துக்களின் உரிமைகள் அடியோடு பறிக்கப்பட்டன; காஷ்மீர் பகுதிகளினின்று கொடுமைப் படுத்தி, சித்திரவதை செய்யப்பட்டு, பயமுறுத்தி வெளியேற்றப்பட்டு விட்டனர். இருக்கின்றவர்களையும் கட்டுப்படுத்த, இம்மாநில பெண்கள், இம்மாநில ஆண்களைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும், இல்லையென்றால் சொத்துரிமை கிடைக்காது என்ற சட்டத்தையும் எடுத்து வர முயற்சித்தனர். ஏனெனில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தவர் அல்லாதவர் அங்கு சொத்து எதையும் வாங்க முடியாது. எனவே, வெளிமாநிலத்தவர் அவ்வாறு திருமணம் செய்து கொண்டால், அவருக்கு எந்த சொத்திலும் உரிமை கிடைக்காது. ஆனால், செக்யூலரிஸ சித்தாந்திகள் இவற்றையெல்லாம் அதிகமாக ஊடகங்களில் விவாதிப்பதில்லை. ஏனெனில், அது அவர்கள் கடைபிடுத்து வரும் செக்யூலரிஸத்திற்கு ஓவ்வாதது என்று அமைதி காக்கின்றனர்.

 

காஷ்மீரப்  பெண்களும்,   சொத்துகளும், சொத்துரிமைகளும்[8]: தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், இந்தியவிரோதிகள் என்று பலவிதமான குழுக்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி இந்துக்களை விரட்டியடித்துள்ளனர். அந்த குரூரமான செயல்பாடுகளில் இந்து பெண்கள் லட்சக்கணக்கில் பலவந்தமாக தங்களது பெற்றோரிடத்திலிருந்து, சகோதரர்களிடமிருந்து, கணவன்மார்களிடமிருந்து, காதலர்களிடமிருந்து, குழந்தைகளிடமிருந்துப் பிரித்திருக்கின்றது; அவர்கள் முன்பே அப்பெண்களின் கற்பு சூரையாடப்பட்டிருக்கிறது; அதனால் பல இந்து பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; எதிர்த்தவர்கள்-பணியாதவர்கள், கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; …………….அவ்வாறு பாதிக்கப்பட்டு வெளியேறினாலும், கோடிக்கணக்கான சொத்துகள் அங்குதான் உள்ளன. எனவே, எப்படி அவற்றை அபகரிக்கலாம், சட்டரீதியாக காஷ்மீரத்திற்கு சேர்க்கலாம் என்ற மனப்பாங்கில் தான் அந்த மசோதா எடுத்துவரப்பட்டது.

 

காஷ்மீரப்   போர்வையில்  இந்துபெண்களின்  உரிமைகளைப்  பரிக்க  எடுத்து  வரப்பட்ட  மசோதா (2010): காஷ்மீரப் பெண் ஒருத்தி அம்மாநிலத்திற்கு வெளியே யாரையாவது மணந்து கொண்டால், அவளுக்கு அம்மாநிலத்தில் சொத்துரிமை மற்றும் வேலையுரிமை பரிக்கப் படவேண்டும் என்று ஒரு தனிப்பட்ட நபர் எடுத்து வந்த சட்டமசோதாவை எதிர்த்து பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அந்த தனி நபர் வேறு யாரும் இல்லை – அந்த கொடியக் கூனி பூதனை மெஹ்பூபா முஃப்டியின் கட்சியைச் சேர்ந்த முர்தாஜா கான் (PDP legislator Murtaza Khan, People’s Democratic Party) என்பவன் தான்! எதிர்பார்த்தபடி, அறிமுகநிலையிலேயே அந்த மசோதா எதிர்ப்பு இல்லாமல் “அறிமுகப்படுத்தப் பட்டது”! அந்தக் கட்சி, அம்மசோதா “காஷ்மீர மாநிலத்தின் பெண்களின் அடையாளத்தைக் காப்பாதாக”, வினோதமாக வாதிட்டனர்! அதாவது, இப்பொழுதும் இந்துக்கள், இந்துப் பெண்கள் கொல்லப்படுவது, கற்பழிக்கப் படுவது, அவர்களது அடையாளங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப் படுவது, முதலியன அந்தக் குருடர்களுக்குத் தெரியவில்லை போலும்!  அக்கட்சி தொடர்ந்து வாதிட்டது என்னவென்றால், “காஷ்மீரப் பெண்கள் அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் அம்மாநிலத்திற்கென்று அளிக்கப் பட்டுள்ள 370 சரத்தின் மகத்துவம் குறைவது மட்டுமல்லாது, அவ்வாறு அம்மாநிலமற்ற குடிமகன்களை மணந்து கொண்டு, அம்மாநிலத்தின் குடியுரிமையை பெற்றிருந்தால், அது அச்சரத்தையே நீர்த்து விடும். ஆகையால் காஷ்மீரப் பெண்கள் காஷ்மீர ஆண்களைத் தான் மணந்து கொள்ளவேண்டும்”, என்பதுதான்!

 

மாநிலத்திலிருந்து  விரட்டி  விட்டப்பிறகும், இந்து பெண்ணுரிமைகளைப்   பறிக்க  திட்டமிட்ட  மசோதா: அதாவது இந்து பெண்மணிகள் கூட தமக்கு தம் சொத்துரிமை, வேலையுரிமை வேண்டுமென்றால், காஷ்மீர ஆணைத் தான் மணந்து கொள்ளவேண்டும், அதாவது இந்து கிடைக்காவிட்டால் முஸ்லீமை மணந்துகொள்ளவேண்டும். இவ்வாறு முழுவதுமாக அம்மாநிலத்தை இஸ்லாம் மயமாக்க வேண்டும் என்பது தான் எண்ணம். அதனை தொடர்ந்து வரும், தீவிரவாத-பயங்கரவாத காரியங்களோடு, சட்டரீதியில் அமூல் படுத்த வேண்டும் என்ற ஜிஹாதித்தனம் தான் இதிலும் வெளிப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், தமக்கு எதிர்மறை விளம்பரம் கிடைக்கு என்ற்பதால், சட்டரீதியிலான பிரச்சினை என்று, அந்த மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டனர்[9]. இப்பொழுதும் அதே கோணத்தில் தான், இம்மாநிலத்தவர் இல்லையென்றால், அத்தொகைக் கிடைக்காது, என்று குரூரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர் என்பது கவனிக்கத் தக்கது.

 

கிஷ்த்வார் கலவரத்தின் பின்னணி[10]: கிஷ்த்வார் கலவரம் என்பது ஒரு பானைக்கு ஒரு பருக்கை என்பார்களே அதுபோல. இங்கு “ஒரு பானை” என்பது –

  • காஷ்மீரத்தில் நடக்கும் மதவாத ஆட்சி
  • மத்தியில் நடக்கும் செக்யூலரிஸ ஆட்சி
  • தீவிரவாதிகளின் ஆதிக்கம்
  • இந்துக்களை மனிதர்களாகவே மதிக்காத இஸ்லாமிய அடிப்படைவாதம்
  • இருக்கும் இந்துக்களையும் ஒழித்து விடவேண்டும் என்ற மிருகத்தனமான வெறியாட்டம்
  • அதற்குத் துணைப்போகும் பிரிவினைவாதிகள், இந்திய விரோதிகள்
  • ஜிஹாதி என்ற பயங்கரவாதத்தைப் பின்பற்றும் இஸ்லாமிஸ்டுகள்

என்று காரணங்கள் பல வெளிப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கவீங்கே படிக்கவும்[11]. இப்படி மதவாதத்தை “செக்யூலரிஸம்” என்று இந்தியர்களை ஏமாற்றி வந்து, நீதித்துறையையும் ஏமாற்ற முயன்ற போது, வசமாக மாட்டிக் கொண்டார்கள் எனலாம்.

 

© வேதபிரகாஷ்

18-09-2013


[1] The bench was hearing a PIL seeking a direction to the Centre and Jammu and Kashmir government to provide adequate security and safe passage to pilgrims stranded due to curfew in Kishtwar where communal clashes had taken place on the day of Eid-ul-Fitr.

http://zeenews.india.com/news/jammu-and-kashmir/sc-raps-jandk-government-for-differential-compensation_876959.html

[3] The state, at the same time, also justified its stand of differential compensation policy by invoking the Instrument of Accession and the Special Status granted to it by Article 370 of the Constitution. “It is most respectfully submitted that where ex-gratia payments are made by way of discretionary relief, no legally enforceable right is vested in any beneficiary to claim equally or identical treatment with another beneficiary of ex-gratia reliefs under the same policy,” the affidavit said.

http://www.thehindu.com/news/national/other-states/sc-rape-jk-govt-for-differential-compensation/article5134895.ece

[6] “You (lawyer for J&K) are not properly advising your client. You must cooperate when you see we are burdened with so many cases,” the bench, also comprising Justice Ranjana Prakash Desai, said.

http://jammu.greaterkashmir.com/news/2013/Sep/17/sc-raps-jk-for-differential-compensation–45.asp

[9] Notwithstanding the stand of ruling National Conference on the issue, Jammu & Kashmir Government has said it has no plans to re-introduce the Permanent Resident Women Disqualification Bill in near future.

http://www.greaterkashmir.com/news/2012/jun/17/govt-dumps-permanent-resident-women-disqualification-bill-58.asp