Posts Tagged ‘உமா பாரதி’

கர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.

மே 4, 2013

கர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.

கர்நாடகதேதல் – 2013: தென்னிந்தியாவில், முதன் முதலாக பீஜேபி அரசு அமைந்த மாநிலமாக கர்நாடகனம் உள்ளது. ஆரம்பத்தில் நன்றாக நடந்து கொண்டிருந்த அரசு, பிறகு ரெட்டி சகோதரர்கள் மற்றும் எடியூரப்பா முதலியோர்களது ஊழல் விவகாரங்களினால், கக்கள் அதிருப்தியை வெளியிட ஆரம்பித்தனர். எடியூரப்பா பிஜேபியை விட்டு விலகி, தனி கட்சி ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டசபைக்கு நாளை மறுநாள் (5-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. பிரியபட்டணா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 223 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி கடந்த 15 நாட்களாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்[1].

பிஜேபிசார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: பா.ஜனதா சார்பில் ராஜ் நாத்சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, உமா பாரதி, வருண்காந்தி மற்றும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்மந்திரிகளும் கர்நாடகத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். முக்கியமாக குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியின் பிரசாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  பா.ஜனதா தலைவர்கள் தங்கள் பிரசாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழலை பற்றி அதிகம் பேசினர். காங்கிரசை இலக்காக வைத்து கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரசால் நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ்சார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: காங்கிரஸ் சார்பில் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி, எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய மந்திரி சிரஞ்சீவி மற்றும் மத்திய மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார நட்சத்திரம் ராகுல் காந்தி பா.ஜனதா அரசு மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார். பா.ஜனதாவை குறி வைத்தே அவரது பேச்சு இருந்தது. பா.ஜனதாவின் ஊழல், சுரங்க முறைகேடுகள் குறித்தும், கர்நாடகத்தை மாபியாக்களிடம் அடகு வைத்துவிட்டதாகவும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார். இறுதியாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று குல்பர்கா மற்றும் பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

மோடியின்வித்தைபலிக்குமா?: அதேபோல் பா.ஜனதாவின் முன்னணி தலைவர் நரேந்திமோடி நேற்று மங்களூர் மற்றும் பெல்காமில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். ஜனதா தளம் (எஸ்), கர்நாடக ஜனதா உள்ளிட்ட கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனல் பறந்த பிரசாரம் 04-05-2013 அன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 8-ந் தேதி (புதன்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது அன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.

சுயேச்சைகளின்உதவியில் 2008ல்ஆட்சிஅமைத்தபிஜேபி: கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்று 33.86 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்று 34.59 சதவீத ஓட்டுகளையும், ஜனதா தளம் (எஸ்) 28 இடங்களில் வெற்றி பெற்று 19.13 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.

எஸ்.எம். கிருஷ்ணாஅதிருப்தி: கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா, தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை புறக்கணித்திருக்கிறார்[2]. அதிருப்தியில் எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சியின் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தார், ஸ்ரீரங்கபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் ரவீந்திர ஸ்ரீகண்டய்யாவை மாற்றிவிட்டு தமது ஆதரவாளருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று நடிகர் அம்பரீஷ் திடீரென்று போர்கொடி உயர்த்தினார். அவரது நெருக்கடிக்கு பணிந்து கட்சி மேலிடம் அவரை மாற்றிவிட்டு அம்பரீசின் ஆதரவாளர் லிங்கராஜுக்கு சீட் வழங்கியது. தனது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். வீரப்ப மொய்லி, கிருஷ்ணாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்[3]. 25 வருடங்களுக்கு முன்பு, இவரே காரில் லட்சங்களை லஞ்சமாக வாங்கியபோது, அகப்பட்டார். ஆனால், இன்று உத்தமர் போல அமைச்சர் பதவியில் இருக்கிறார்.

The first major hitch in his career came in 1984, when as leader of the opposition, he was accused by an independent MLA of trying to bribe Janata Party MLAs to defect to the Congress. The infamous Moily tapes surfaced soon, with then chief minister Ramakrishna Hegde having a field day, coining such sobriquets for Moily as “oily Moily”.

காங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா? இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா? இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

லிங்காயத், ஒக்கலிகாவாக்குகளாகஏங்கும்கட்சிகள்[4]: கர்நாடகத்தில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா கவுடாக்களின் வாக்குகள் தான் மாநில அரசியலை தீர்மானிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. லிங்காயத்துகளின் வாக்குகளை பாஜகவுக்கு கொண்டு சேர்த்த எதியூரப்பா இப்போது தனிக் கட்சி தொடங்கிவிட்டார். மேலும் கவுடா சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடாவையும் பாஜக முதல்வர் பதவியில் இருந்து மாற்றியது. இதனால் சிதறும் லிங்காயத்து சமூக வாக்குகள் மற்றும் ஒக்கலிகா கவுடா வாக்குகளை அறுவடைய செய்ய கவுடா சமூகத்த்தைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணாவை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்பியது. இதனால் அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகினார். ஆனாலும் தாம் நினைத்ததுபோல் காங்கிரஸ் மேலிடம் செயல்படவில்லை என்ற அதிருப்தியில் கிருஷ்ணா இருக்கிறார். இதனால் ஒக்கலிகா கவுடா சமூகத்தின் வாக்குகள் என்னவாகும் என்ற கேள்வி கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது[5]. ஜனதா தளமும் இதை நம்பியுள்ளது[6]. லிங்காயத், ஒக்கலிகா ஓட்டுகள் சிதறுமா, அல்லது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா என்பது புதன்கிழமை தெரிந்து விடும்[7].
ராகுலால்அடக்கமுடியாதமேடைசண்டை: கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (01-05–2013) 3-வது கட்ட பிரசாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகர் அம்ப்ரிஷ் போட்டியிடுகிறார். கூட்டத்துக்கு அவர் தனது மனைவி நடிகை சுமலதாவுடன் வந்து இருந்தார்.  மேடையின் பின் வரிசையில் நடிகை சுமலதா அமர்ந்து இருந்தார். வேட்பாளர் என்ற வகையில் ராகுல்காந்தி இருக்கை அருகே காலியாக கிடந்த நாற்காலியில் நடிகர் அம்ப்ரிஷ் அமர முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அவரை பின் வரிசையில் அமரும்படி கூறினார். இதனை அவமானமாக கருதிய அம்ப்ரிஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்: ராகுல், “காங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்”, என்று ஒருமுறை சொன்னாராம்[8]. ராகுல் வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது நீயே பேசு என்று கோபமாக பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினார்[9]. பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார். தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்ப்ரிஷை மேடைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அம்ப்ரிஷ் மேடையில் ஏற மறுத்து விட்டார். ‘‘மேடையில் நான் இருந்தால் வேட்பாளரான எனது கணக்கில் பிரசார செலவு சேரும். இப்போது கட்சி கணக்கில் சென்று விடும். நீ என்னை அவமானப் படுத்தினாலும் நல்லதுதான் செய்து உள்ளாய்’’ என்று கூறி இறுதிவரை மேடையில் ஏறவில்லை. அம்ப்ரிசுக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள்: ஜாதியத்தில் ஜனநாயகம் ஊறிப்போனப் பிறகு, மதமும் சேர்கிறது. ஆமாம், தலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பிஜேபி மதவாத கட்சி என்று காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் சொல்லிவரும் நிலையில், அவர்களே மதவாத கட்சிளுடன் சேர்ந்து கொண்டு, தேர்தலில் போடியிடுவது, வாக்குறுதி கொடுத்து ஓட்டுகள் வாங்குவது, முஸ்லீம்களை வேட்பாளர்களாக நிறுத்தி, மற்றவர்களைப் பிரிப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், இவர்கள் எல்லோருமே செக்யூலார்ப் பழங்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வர்.

வேதபிரகாஷ்

04-05-2013


[8] When Rahul Gandhi said, “Congress can get defeated only by the Congress”, his partymen had seemed surprised. Today, senior Congress leaders are ruing that their colleagues and party workers are on the verge of proving their leader right.

http://governancenow.com/news/regular-story/congress-so-near-yet-so-far-battle-karnataka-assembly

முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்!

ஜனவரி 29, 2012

முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்!

முல்லாயமும், இமாமும் சண்டை போட்டுக் கொண்டு சேர்ந்து விட்டனராம்: முன்பு, இமாம் முலாயமை கடுமையாகத் தாக்கி, விவர்சனம் செய்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், தேர்தலில் கலந்து கொண்டதால், இமாம் புகாரியை முல்லாயமும் விமர்சனம் செய்துள்ளார்[1]. “காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்து முஸ்லீம்களை ஏமாற்றி வருகிறது. இதனால் 1970-80களில் முஸ்லீம்களின் பிற்போக்குத் தன்மைக்குக் காரணாமாக இருந்தது. முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று கட்டளையிடுவது[2] தில்லி சாஹி இமாம்”, என்று ஆணையிட்டுள்ளார்! சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள்? ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும்? பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியே, இவ்வாறு பேசியுள்ளார்[3]. தேர்தல் ஆணையர் இதனை கண்டுகொள்வாரா, விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.

யார் இந்த சாஹி இமாம் புகாரி? இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும்! அயல்நாட்டில் அப்படி பேசியதால், ஒன்றும் செய்யமுடியாது என்று விட்டார்களாம். பிறகு, அவர் இறந்ததைக் கூட, செய்தித்தாள்களில் சிறியதாகப் போட்டு, மக்கள் மறந்து விடவேண்டும் அல்லது இவையெல்லாம் தெரியாமலேயே போக வேண்டும் என்று வேலை செய்துள்ளன. அந்த இமாமின் மகன் தான், இப்பொழுது, “முல்லா”யம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று முழங்கியிருக்கிறார்.

குடும்பம் சகிதமாக இமாம் முல்லாயத்திற்கு ஆதரவு: மௌலானா அஹமது புகாரி என்பவர், தில்லியில் உள்ள ஜமா மஸ்ஜிதின் இமாம் ஆவர், சாஹி பிரிவைச் சேர்ந்தவர் ( Shahi Imam of Delhi’sJama Masjid Maulana Ahmad Bukhari ). இவருக்கு குடும்பம் எல்லாம் இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரிய வருகிறது. ஆமாம், இவரது மறுமகன் முஹம்மது உமர் கான், சமஜ்வாடி கட்சி வேட்பாளராக பேஹத் இன்ற இடத்தில் போட்டியிடுகிறார். அவரும், தனது மாமனார் பேசும் போது கூட இருந்தார். மாமனார்-மறுமகன் மேடையில் இருந்தது, மக்களுக்கு குசியாக இருந்ததாம். முல்லாயம் 18% ஒதுக்கீடு தருகிறேன் என்று வாக்களித்து விட்டாராம், பதிலுக்கு இதோ எங்களது முஸ்லீம் ஓட்டு என்று இமாம் சொல்லிவிட்டாராம்[6].

இமாம், மற்ற முஸ்லீம் மதத்தலைவர்கள் குழுமியிருந்தது: “தியோபந்த்” என்ற முஸ்லீம் அமைப்பிலிருந்து வந்திருந்த மதகுருமார்கள் சிலரும் – மௌலானா நூருல் ஹூடா (Maulana Noorul Huda) மற்றும் மௌலானா முப்டி அர்ஸத் பரூக்கி (Maulana Mufti Arshad Farooqui) முதலியோரும் இருந்தனர்[7]. முஸ்லீம்களின் விருப்பங்களை காக்கும் ஒரே கட்சி சமஜ்வாடி கட்சி தான் என்று அடித்து பேசினார். இமாமின் இத்தகைய மதவாத ரீதியில், ஒரு குறிப்பிட்ட கட்சிற்கு ஓட்டு போடுங்கள் என்று ஆணையிடுவதால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது, என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் இது “செக்யூலரிஸம்” ஆகுமா? பஞ்சாபில் கூட சீகிய மதத்தலைவர்கள் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று விவாதித்து வருகின்றனர்[8]. ஆனால், இவ்வாறு மதத்தலைவர்கள் தொடர்ந்து, அரசியலில் மீடுபடுவதும், ஒருசில கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வருவதும், “செக்யூலரிஸம்” வேறு பேசிக் கொண்டு இருக்கும் அக்கட்சிக:ளின் சுயரூபத்தைக் காட்டுகிறது. காங்கிரச்காரர்கள் தாம், இப்படி மதவாதத்தை கடைபிடித்து, பிஜேபியை மதவாதக் கட்சி என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதே போலத்தான் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் காலத்தை ஓட்டி வருகின்றன. இருப்பினும், சாதாரண மக்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வரும்போது, அரசியல்வாதிகள் சரியான பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள்.

“கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள்: பாரதிய ஜனதா கட்சியுடன், முலாயம் 2009ல் கூட்டு வைத்ததற்கு, என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆகையால், இனி “கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள் என்று பத்திரிக்கைக்காரர்கள் முன்பாகவே பேசியுள்ளார்[9]. அதாவது, தேவையென்றால், பிஜேபி செக்யூலர் கட்சியாக இருக்கும், மற்ற கட்சிகள் கூடு வைத்துக் கொள்ளும் அல்லது கூட்டணியில் இருக்கும், தேவையில்லை என்றால், மதவாத கட்சியாகிவிடுகிறது.

ஒசாமா பின் லாடனை ஆதரித்த தில்லி இமாம்!: “தில்லி இமாம் ஒரு மதவாதி, அவர் ஒசாமா பின் லாடனை ஆதரித்தவர், அதுமட்டுமல்லாது 2004ல், பிஜேபிக்கு எதிராக பத்வாவையும் போட்டவர்”, என்று கமெண்ட் அடித்தவர்[10], காங்கிரஸ் ஜோகர் – திக்விஜய சிங்[11]. “அவரை எதிர்த்தவர் தான், அவர் பகுதியிலிருந்து தேர்தலில் வென்றுள்ளார். இதிலிருந்தே, அவரது செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது, என்று தெரிந்து கொள்ளாலாம். ஆகவே, அத்தகைய மதவாதியான இமாம் புகாரி சொல்வதைக் கேட்டு முஸ்லீம் உபியில் ஏமாந்துவிட மாட்டார்கள்”, என்று கூறி முடித்தார்[12]. ஆனால், காங்கிரஸே அத்தகைய முஸ்லீம்களை தாஜா செய்யும் வேலையை செய்து வருகிறது. முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு என்று ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பிறகு, பிரச்சினை வரும் என்றறிந்ததும், ஜகா வாங்கியுள்ளது.

Bukhari calls stir anti-Islam, tells Muslims to stay away, August 22, 2011NEW DELHI: Syed Ahmed Bukhari, Shahi Imam of Delhi’s Jama Masjid, has called upon Muslims to stay away from the Anna movement saying his war cry – Vande Mataram and Bharat Mata Ki Jai – are against Islam.

“Islam does not condone the worship of the nation or land. It does not even condone worship of the mother who nurtures a child in her womb. How can Muslims then join his stir with a war cry that is against the basic tenets of Islam. I have advised them to stay away,” Bukhari told TOI.

Bukhari, who is not perceived to be close to the Congress, may have inadvertently voiced the very concerns that Congress leaders have been expressing off the record about how Anna’s stir has isolated Muslims though none of them had ventured to make a public statement on this. The call has also reignited the centuries old debate of Vande Mataram being anti-Muslim.

Even though Team Anna includes lawyers like Prashant and Shanti Bhushan who have taken up cudgels against Narendra Modi for his alleged role in the Gujarat riots, the Shahi Imam, one of the tallest Muslim religious leader, is critical of the movement because he feels that communalism and not corruption is the bane of the country. “If Anna had included communalism in his agenda, I would have been more convinced of his intentions,” he said.

While questioning where Anna is getting funds to organize such a massive rally, Bukhari has accused Anna of indulging in politics at the behest of the RSS and the BJP.

காந்தியை எதிர்த்த பாணியில், அன்னா ஹஜாரே இயக்கத்தை எதிர்த்த இமாம் புகாரி: சமீபத்தில் பெருமளவில், ஊழலுக்கு எதிராக நடந்ட, நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் முஸ்லீம் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேறு ஆணையிட்டுள்ளார்[13]. சரி, அப்படி என்ன, அன்னா செய்து விட்டார்? “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ? “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார்! அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது? பிறகு, நாங்கள் “இந்துக்கள்” கூட வேலை செய்ய மாட்டோம், அவர்கள் “காபிர்கள்” என்று வெளிப்ப்டையாகச் சொல்லி, ஜின்னா பாதையில் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மகாத்மா காந்தியையே எதிர்த்தவர்கள், அன்னா ஹஜாரேவை மதிப்பார்களா என்ன?

வேதபிரகாஷ்

29-01-2012


[1] Twenty years after he admonished the then Shahi Imam of Delhi’s Jama Masjid, Syed Abdullah Bukhari, for dabbling in Uttar Pradesh politics — the Maulana had campaigned for the Janata Dal in the 1991 Assembly elections — Samajwadi Party chief Mulayam Singh has joined forces with the late cleric’s son and the present Shahi Imam, Syed Ahmed Bukhari, to win over Muslims in the poll-bound State. http://www.thehindu.com/news/states/other-states/article2840357.ece

[4] A Muzaffarnagar court on Saturday (October 18, 2008) issued a non-bailable warrant against the Shahi Imam of Delhi Jama Masjid Syed Ahmad Bukhari for not appearing before it in a 2007 case related to violation of election code of conducthttp://www.expressindia.com/latest-news/Nonbailable-warrant-issued-against-Shahi-Imam/375080/

[5] Non-bailable arrest warrants against Bukhari

A court in Gorakhpur has ordered issuance of non-bailable arrest warrants and initiation of proceedings for attachment of property against the Shahi Imam of Delhi Jama Masjid, Syed Abdullah Bukhari, for securing his attendance in a defamation case.

Bukhari has been evading appearance before the court of the judicial magistrate despite non-bailable warrants of arrest and proceedings under section 83 of the CrPC ordered against him on several occasions since 1993.

The magistrate has again ordered the Delhi police to arrest Bukhari and produce him before his court on October 21.

An advocate had filed a defamation suit against Bukhari for allegedly making anti-Indian statements, as published in a newspaper on December 9, 1992.

[9] Bhukhari called upon the community to close the “Kalyan Singh chapter”. Since Yadav had publically apologised for his poll pact with former BJP CM Kalyan Singh in 2009, it was no longer a factor, Bukhari told journalists.

http://www.hindustantimes.com/Specials/Coverage/Assembly-Elections-2012/Chunk-HT-UI-AssemblyElections2012-UP-TopStories/Close-Kalyan-chapter-vote-for-SP-Bukhari/SP-Article10-803528.aspx

[11] Congress general secretary Digvijay Singh said, “Bukhari is a communal person, who at one time supported Osama Bin Laden.”

http://www.hindustantimes.com/Specials/Coverage/Assembly-Elections-2012/Chunk-HT-UI-AssemblyElections2012-UP-TopStories/Close-Kalyan-chapter-vote-for-SP-Bukhari/SP-Article10-803528.aspx

[12] “Bukhari’s worth can be estimated from the fact that his opponent has won from the area he lives in. Muslims of UP will not get misled by his appeal,” Digvijaya said while talking to the reporters.

http://timesofindia.indiatimes.com/india/UP-Muslims-will-not-be-misled-by-communal-Bukhari-Digvijaya/articleshow/11665792.cms