Posts Tagged ‘சதானந்த’

கர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.

மே 4, 2013

கர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.

கர்நாடகதேதல் – 2013: தென்னிந்தியாவில், முதன் முதலாக பீஜேபி அரசு அமைந்த மாநிலமாக கர்நாடகனம் உள்ளது. ஆரம்பத்தில் நன்றாக நடந்து கொண்டிருந்த அரசு, பிறகு ரெட்டி சகோதரர்கள் மற்றும் எடியூரப்பா முதலியோர்களது ஊழல் விவகாரங்களினால், கக்கள் அதிருப்தியை வெளியிட ஆரம்பித்தனர். எடியூரப்பா பிஜேபியை விட்டு விலகி, தனி கட்சி ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டசபைக்கு நாளை மறுநாள் (5-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. பிரியபட்டணா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 223 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி கடந்த 15 நாட்களாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்[1].

பிஜேபிசார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: பா.ஜனதா சார்பில் ராஜ் நாத்சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, உமா பாரதி, வருண்காந்தி மற்றும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்மந்திரிகளும் கர்நாடகத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். முக்கியமாக குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியின் பிரசாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  பா.ஜனதா தலைவர்கள் தங்கள் பிரசாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழலை பற்றி அதிகம் பேசினர். காங்கிரசை இலக்காக வைத்து கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரசால் நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ்சார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: காங்கிரஸ் சார்பில் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி, எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய மந்திரி சிரஞ்சீவி மற்றும் மத்திய மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர்.  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார நட்சத்திரம் ராகுல் காந்தி பா.ஜனதா அரசு மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார். பா.ஜனதாவை குறி வைத்தே அவரது பேச்சு இருந்தது. பா.ஜனதாவின் ஊழல், சுரங்க முறைகேடுகள் குறித்தும், கர்நாடகத்தை மாபியாக்களிடம் அடகு வைத்துவிட்டதாகவும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார். இறுதியாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று குல்பர்கா மற்றும் பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.

மோடியின்வித்தைபலிக்குமா?: அதேபோல் பா.ஜனதாவின் முன்னணி தலைவர் நரேந்திமோடி நேற்று மங்களூர் மற்றும் பெல்காமில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். ஜனதா தளம் (எஸ்), கர்நாடக ஜனதா உள்ளிட்ட கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனல் பறந்த பிரசாரம் 04-05-2013 அன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 8-ந் தேதி (புதன்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது அன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.

சுயேச்சைகளின்உதவியில் 2008ல்ஆட்சிஅமைத்தபிஜேபி: கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்று 33.86 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்று 34.59 சதவீத ஓட்டுகளையும், ஜனதா தளம் (எஸ்) 28 இடங்களில் வெற்றி பெற்று 19.13 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.

எஸ்.எம். கிருஷ்ணாஅதிருப்தி: கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா, தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை புறக்கணித்திருக்கிறார்[2]. அதிருப்தியில் எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சியின் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தார், ஸ்ரீரங்கபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் ரவீந்திர ஸ்ரீகண்டய்யாவை மாற்றிவிட்டு தமது ஆதரவாளருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று நடிகர் அம்பரீஷ் திடீரென்று போர்கொடி உயர்த்தினார். அவரது நெருக்கடிக்கு பணிந்து கட்சி மேலிடம் அவரை மாற்றிவிட்டு அம்பரீசின் ஆதரவாளர் லிங்கராஜுக்கு சீட் வழங்கியது. தனது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். வீரப்ப மொய்லி, கிருஷ்ணாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்[3]. 25 வருடங்களுக்கு முன்பு, இவரே காரில் லட்சங்களை லஞ்சமாக வாங்கியபோது, அகப்பட்டார். ஆனால், இன்று உத்தமர் போல அமைச்சர் பதவியில் இருக்கிறார்.

The first major hitch in his career came in 1984, when as leader of the opposition, he was accused by an independent MLA of trying to bribe Janata Party MLAs to defect to the Congress. The infamous Moily tapes surfaced soon, with then chief minister Ramakrishna Hegde having a field day, coining such sobriquets for Moily as “oily Moily”.

காங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா? இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா? இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

லிங்காயத், ஒக்கலிகாவாக்குகளாகஏங்கும்கட்சிகள்[4]: கர்நாடகத்தில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா கவுடாக்களின் வாக்குகள் தான் மாநில அரசியலை தீர்மானிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. லிங்காயத்துகளின் வாக்குகளை பாஜகவுக்கு கொண்டு சேர்த்த எதியூரப்பா இப்போது தனிக் கட்சி தொடங்கிவிட்டார். மேலும் கவுடா சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடாவையும் பாஜக முதல்வர் பதவியில் இருந்து மாற்றியது. இதனால் சிதறும் லிங்காயத்து சமூக வாக்குகள் மற்றும் ஒக்கலிகா கவுடா வாக்குகளை அறுவடைய செய்ய கவுடா சமூகத்த்தைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணாவை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்பியது. இதனால் அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகினார். ஆனாலும் தாம் நினைத்ததுபோல் காங்கிரஸ் மேலிடம் செயல்படவில்லை என்ற அதிருப்தியில் கிருஷ்ணா இருக்கிறார். இதனால் ஒக்கலிகா கவுடா சமூகத்தின் வாக்குகள் என்னவாகும் என்ற கேள்வி கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது[5]. ஜனதா தளமும் இதை நம்பியுள்ளது[6]. லிங்காயத், ஒக்கலிகா ஓட்டுகள் சிதறுமா, அல்லது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா என்பது புதன்கிழமை தெரிந்து விடும்[7].
ராகுலால்அடக்கமுடியாதமேடைசண்டை: கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (01-05–2013) 3-வது கட்ட பிரசாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகர் அம்ப்ரிஷ் போட்டியிடுகிறார். கூட்டத்துக்கு அவர் தனது மனைவி நடிகை சுமலதாவுடன் வந்து இருந்தார்.  மேடையின் பின் வரிசையில் நடிகை சுமலதா அமர்ந்து இருந்தார். வேட்பாளர் என்ற வகையில் ராகுல்காந்தி இருக்கை அருகே காலியாக கிடந்த நாற்காலியில் நடிகர் அம்ப்ரிஷ் அமர முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அவரை பின் வரிசையில் அமரும்படி கூறினார். இதனை அவமானமாக கருதிய அம்ப்ரிஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்: ராகுல், “காங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்”, என்று ஒருமுறை சொன்னாராம்[8]. ராகுல் வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது நீயே பேசு என்று கோபமாக பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினார்[9]. பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார். தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்ப்ரிஷை மேடைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அம்ப்ரிஷ் மேடையில் ஏற மறுத்து விட்டார். ‘‘மேடையில் நான் இருந்தால் வேட்பாளரான எனது கணக்கில் பிரசார செலவு சேரும். இப்போது கட்சி கணக்கில் சென்று விடும். நீ என்னை அவமானப் படுத்தினாலும் நல்லதுதான் செய்து உள்ளாய்’’ என்று கூறி இறுதிவரை மேடையில் ஏறவில்லை. அம்ப்ரிசுக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள்: ஜாதியத்தில் ஜனநாயகம் ஊறிப்போனப் பிறகு, மதமும் சேர்கிறது. ஆமாம், தலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பிஜேபி மதவாத கட்சி என்று காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் சொல்லிவரும் நிலையில், அவர்களே மதவாத கட்சிளுடன் சேர்ந்து கொண்டு, தேர்தலில் போடியிடுவது, வாக்குறுதி கொடுத்து ஓட்டுகள் வாங்குவது, முஸ்லீம்களை வேட்பாளர்களாக நிறுத்தி, மற்றவர்களைப் பிரிப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், இவர்கள் எல்லோருமே செக்யூலார்ப் பழங்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வர்.

வேதபிரகாஷ்

04-05-2013


[8] When Rahul Gandhi said, “Congress can get defeated only by the Congress”, his partymen had seemed surprised. Today, senior Congress leaders are ruing that their colleagues and party workers are on the verge of proving their leader right.

http://governancenow.com/news/regular-story/congress-so-near-yet-so-far-battle-karnataka-assembly