Posts Tagged ‘அவதூறு’

“இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று”, என்று கருணாநிதி அவதூறு பேசிய வழக்கு தள்ளுபடியானது.

ஏப்ரல் 20, 2013

சட்டத்தை மீறும் நீதிகள்

இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்என்று”, என்றுகருணாநிதிஅவதூறு பேசியவழக்கு தள்ளுபடியானது.

இந்துக்களுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றம் செயல்படுகிறதா?: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதாவது, “இந்துஎன்றால்திருடன்என்றுஅர்த்தம்என்று”, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. அதை மீண்டும் பரிசீலித்து வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்படி கோரிய வக்கீலின் மனுவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது[1].

ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் கருணாநிதியின் இந்து-விரோதப் பேச்சு[2]: இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில், சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார்[3]. அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார். வாரணாசியிலிருந்து வெளிவந்த பழைய என்சைகிளோபீடியாவைக் குறிப்பிட்டு ஹிந்து என்றால், கொடிய, வேலைக்காரன், திருடன் என்றெல்லாம் பொருள்கூறினார். இருப்பினும் தனக்கேயுரித்த நக்கலுடன் “இருதயங்களைத் திருடும் கள்வர்கள்” என்றும் கேலிபேசினார்[4]. இதனால்…

View original post 576 more words

முகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது!

ஜூலை 6, 2010

முகமது நபியை இழிவுப் படுத்தியதாக ஜோஸப்பின் கை வெட்டப்பட்டது!

கேரளாவில் இப்படி கலாட்டாவா? கேரளாவில் படிப்பாளிகள் அதிகம், பல மதத்தவர்கள் இருக்கும், அதிலும் “கடவுளுக்கே சொந்தமான இடம்” என்றெல்லாம் கூறப்படுகின்ற நாடு, ஆனால், அந்த கடவுளுக்கு சொந்தமான மாநிலத்தில், கடவுளின் பெயரால், இத்தகைய கைவெட்டும் படலங்கள் எல்லாம் ஆரம்பமாகி விட்டன. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? கேட்டுக் கொண்டிருக்கிறாரா? என்ன பதில் சொல்வார்?

பி.காம் வினாத்தாள் பிரச்சினையக் கிளப்பியது: டீ. ஜே. ஜோஸப் தொடுபுழா (இடுக்கி மாவட்டம்) என்ற இடத்தில் உள்ள நியூமேன் காலேஜில் மலையாள மொழி விரிவுரையாளராக வேலைப் பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் வருட பி.காம் வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட கேள்வி முகமது நபியை இழிவுப் படுத்துவதாக உள்ளது என்று முஸ்லீம்கள் ஆட்சேபணைத் தெரிவித்தனர்.

ஜோஸப்-தாக்கப்பட்டது

ஜோஸப்-தாக்கப்பட்டது

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே ஏற்பட்டக் கற்பனை உரையாடல் சித்தரிக்கப் பட்டபோது ஏற்பட்டப் பிரச்சினை: பி. டி. குஞ்சு முஹமது (இவர் பல பரிசுகள் வென்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் சி,பி.எம் மின் எம்.எல்,ஏ) என்பரது ஒரு கட்டுரையை எடுத்துக் கொண்டு, ஒரு வினா இருந்தது போலும். குஞ்சு முஹமது “கர்ஸோம்” என்ற திரைப்படத்தை எடுத்துக் கொண்டு, ஒரு நம்பிக்கையில்லாதவன் (protagonist) கடவுளிடம் பேசுவது மாதிரி சித்தரிக்கப் பட்டிருந்தது. ஒரு பைத்தியக்காரன் கடவுளிடம் பேசுவது மாதிரி உரையாடல் இருக்கும். அந்த கட்டுரையிலிருந்து, ஒரு பத்தியை கமா, புள்ளிகள் முதலியவறை வைத்து, வகைப்படுத்த எடுத்துக் கொண்டார் ஜோஸப். அவ்வாறு செய்யும் போது, அவ்வுரையாடல் கடவுளுக்கும் முகமது நபிக்கும் இடையில் உள்ளது மாதிரி மாற்றியமைதிருந்தார் என்று குற்றஞ்சாட்டப் படுகிறது (While reproducing the conversation as a passage for punctuation, Joseph replaced the mad man with Muhammed, thus making it seem like a dialogue between God and Muhammed)[1]. கடவுளுக்கும் முஹமதுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கற்பனையான உரையாடல் என்பதில் “முஹமத்” என்பதன “முஹமது நபி” என்றே எடுத்துக் கொண்டு முஸ்லீம்கள் செயல்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன (In the question paper, he had used a passage about an imaginary dialogue between God and Muhammad, and the students were asked to comment. Certain Muslim organisations, assuming that ‘Muhammad’ in the passage was Prophet Muhammad, took offence and staged protest rallies and clamoured for action against the professor)[2].

வெட்டப்பட்டக்கை-ஜோஸப்-கேரளா

வெட்டப்பட்டக்கை-ஜோஸப்-கேரளா

கல்லூரி தாக்கப்பட்டது: அந்தகல்லுரியின் மீது கற்கள் எரியப் பட்டன. ஜோஸப்பின் மீது நடவடிக்கை எடுக்கக் கூறினர். அதன்படி, ஜோஸப் கைது செய்யப் பட்டார். பிறகு அந்த கல்லூரியிலிருந்தும் பணிநீக்கம் செய்யப்பட்டார். கல்லூரி அதிகாரம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. ஆனால் கடந்த ஜூலை 4ம் தேதி, ஜோஸப், சர்ச்சிற்குச் சென்று தாய்-சகோதரி இவர்களுடன் திரும்பி வரும்போது, காரிலிருந்து வெளியே இழுக்கப் பட்டு, கத்திகளால் தாக்கப்பட்டார். கால்-கைகளில் வெட்டு விழுந்தன[3].

Joseph-attacked-by-jihadis

Joseph-attacked-by-jihadis

கையை வெட்டியதற்காக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப் பட்டனர்: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா என்ற இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது 05-07-2010 அன்று செய்யப் பட்டனர். இதைத்தவிர, தீவிரவாதத்துடன் தொடர்புடைய மற்ற 12 நபர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். முண்டெத்தைச் சேர்ந்த அஸ்ரஃப் (37) மற்றும் எரமலூரைச் சேர்ந்த ஜாஃபர் (28) கைது செய்யப்பட்டு, மாஜிஸ்ட்ரேடின் முன்பு எடுத்துவரப்பட்டடு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாம் ஜோஸப்பின் கையை ஞாயிற்றுக் கிழமை அன்று வெட்டினர் என்று அடையாளங்கணப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய வேதிகை என்ற அமைப்பு போலீஸாரிடம் தமது இயக்க ஆட்களுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்துள்ளனர். இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்பட பல கட்சிகள் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளனர் மற்றும் தாக்கிய நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறுக் கேட்டுக் கொண்டுள்ளனர்[4].


Ashraf and Jaffar, who were arrested in connection with the attack on Professor T.J. Joseph at Muvattupuzha, coming out of a court after being remanded to judicial custody.

கைது-செய்யப்பட்ட-இருவர்-கேரளா

கைது-செய்யப்பட்ட-இருவர்-கேரளா

கடவுளர்கள் விமர்சிக்கப் படக்கூடாது என்றால், அது எல்லொருக்கும் பொறுந்தக் குடியதாக இருக்க வேண்டும்: இந்தியாவில், இந்து மதம், இந்துமதக் கடவுளர்கள், ஏன் பெண் கடவுளர்களே, மிகவும் அசிங்கமாக, ஆபாசமாக தூஷிக்கப் பட்டுள்ளனர்[5]; விமசர்னம் செய்யப் பட்டுள்ளனர்; ஏன் ஹுஸைன் போன்றவஎகளல் படங்களாகவும் வரைந்துக் காட்டப் பட்டுள்ளன[6]; கருணாநிதி போன்ற கஞ்சிக் குடிக்கும் ஆட்கள் இந்துக்களை “திருடர்கள்” என்றெல்லாம் திட்டியிருக்கின்றனர்[7]. வழக்குகள் போட்டும் ஒன்றும் நடக்கவில்லை. சட்டம் தூங்கிக் கொண்டே இருக்கிறது[8]. நீதிபதிகள் குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றனர்[9]. ஆனால், முஸ்லீம்களோ, சட்டத்தை நேராக கையில் எடுத்துக் கொண்டு விடுவார்கள். சிறிது காலத்தில் விஷயத்தை மறந்து விடுவார்கள். ஆக, சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம் என்றால், இந்தியாவில், ஒரே மாதிரியான குற்றங்கள் செய்யும் போது, அனைவரும் அதே மாதிரித்தான் தண்டிக்கப் பட வேண்டும்[10]. வழக்குகளை நடத்தாமல், கருணாநிதி போன்ற கோழைகள் அமுக்கி வைத்தாலும், அது மாபெரும் குற்றம்தான். அத்தகைய சமத்துவம் இந்தியாவில் வரவில்லையென்றால், செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசிக் கொண்டு மக்களைத் தொடர்ந்து பேசி ஏமாற்றி வரமுடியாது[11]. மக்களும் கொதித்தெழுந்து விட்டால், தங்களது உணர்ச்சிகள், நினைவுகள், மனங்கள் பாதிக்கப் பட்டால், அவர்களும் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவர்.


[1] Indian Express, Controversial question paper: Lecturer’s hand chopped off,  http://www.indianexpress.com/news/controversial-question-paper-lecturers-hand-chopped-off/642261/0

[2] The Hindu, Two held for chopping off Ernakulam professor’s palm, dated Tuesday, Jul 06, 2010,

http://www.hindu.com/2010/07/06/stories/2010070657111100.htm

[3] Economics Times, Alleging blasphemy, fanatics hack lecturer’s hand, 5 Jul 2010, 0351 hrs IST,ET Bureau & Agencies

http://economictimes.indiatimes.com/news/politics/nation/Taliban-writ-in-Gods-own-country/articleshow/6129310.cms

[4] The Hindu, Two held for chopping off Ernakulam professor’s palm, dated Tuesday, Jul 06, 2010,

http://www.hindu.com/2010/07/06/stories/2010070657111100.htm

[5] நாத்திகம் போர்வையில் எப்படி பலத்ரப்பட்ட சித்தாந்திவாதிகள் பேசியுள்ளனர், எழுதியுள்ளனர், பாங்களை எடுத்துள்ளனர், வரைந்துள்ளனர்………..என்பவற்றைப் பட்டியல் போட்டுக் காண்பித்தால், பெரியதாக நீண்டுக் கொண்டேயிருக்கும்

[6] இந்த கொடிய காமக்குரூரக் காரனும் இந்திய சட்டங்களினின்று தப்பித்து, துபாயில், தீவிரவாதி போல வாழ்ந்து வரௌவது நோக்கத்தக்கது.

[7] நீதியை, நீதித்தாயை நேராக பார்க்கக் கூட பயந்து சாகும் கோழைகள் இவர்கள், ஆனால், நீதி தேவன் என்றெல்லாம் பேசுவார்கள்.

[8] மது வேறு தாராளமாக ஊற்றிக் கொடுப்பதனால், தமிழகத்தில் கேட்கவே வேண்டாம், மயகத்தில் தான் உள்ளனர். செம்மொழி மாநாடே அத்தகைய மயக்கத்தில் நடத்டப் பட்டது.

[9] நீதிபதிகள் எல்லோரும் அரசியல் கட்சிகள் சார்பில், பரிந்துரை செய்யப் பட்டு அமர்த்தப் படுவதால், நீதிதுறையின் மதிப்பே போய்விட்டது. உதாரணத்திற்கு கே. ஜி. பாலகிருஷ்ணன் ராமர் பாலம் விஷயத்தில் கேட்ட கேள்விகள் முதலியவற்றை நினைவில் கொள்ளலாம். அத்தகைய கேள்விகளை பாலகிருஷ்ணன் முகமதியர்கள் விஷயத்தில் கேட்டிருப்பாரா? இதுதான் நீதியின் லட்சணமா?

[10] ஆனால், இவை நடப்பதில்லை. காஷ்மீரத்திலேயே, இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள், இந்த்குப் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்; அவர்களது கோடானுகோடி சொத்துகள் அபகரிக்கப் படுகின்றன. ஆனால், சட்டம் தூங்கிறது.

[11] உண்மையிலேயே இந்துக்கள் தாம், அவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் பட்டு வருகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள்கூட காக்கப்படுவதில்லை.