காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்!

காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்!

கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்: “கத்தி போய் வால் வந்தது டும், டும், டும்” என்பதுபோல, அப்துல் கஃபூரின் அவதாரங்களும் பலவாறு மாறி வருகின்றன.

  • மந்திரவாதி, தாந்திரிக்[1], ஃபகிர்[2] / பக்கிரி, நரபலி கொடூரன், நரபலி மந்திரவாதி, சைக்கோ, சைக்கோ மந்திரவாதி, ………………என அவனது அந்தஸ்த்துகள் பெருகிவருகின்றன[3].
  • அசரீரி காளியாகியது போல, குழாய் மண்சட்டியாகிறது;
  • மனைவி, காதலியாகி, கள்ளக்காதலியாகிவிட்டாள்;
  • திடீரென்று ஒரு முத்துப்பேட்டை அலியார் வேறு வந்துவிட்டார்!
  • பலவித பொருட்கள் வருகின்றன: லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு………………
  • காளி சொல்லிதான் குரான் வைத்திருந்தானா, இல்லை முஸ்லீம் எப்படி இந்த வகையறாக்களை வைத்துக் கொண்டு பூஜை செய்தான் என்று தெரியவில்லை.
  • 15 பூஜை, நடுராத்திரி பூஜை, பரிகாரம் என சங்குகள், முறைகல் வேறு விவரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
  • தர்கா லாட்ஜாகிறது, வீடாகிறது;
  • குரானில் சொல்லியபடி, காளியை வழிப்பட்டானா, நரபலி கொடுத்தானா, என்பதையெல்லாம், நேர்மையான விசுவாசிகளும், நேயமுள்ள நம்பிக்கையாளர்களும்தான் பதில் சொல்லியாக வேண்டும்!

கள்ளக்காதலி நோய் தீர குழந்தையை நரபலி கொடுத்தேன்: மந்திரவாதி காளி கனவில் வந்து சொன்னதால் கள்ளக்காதலியின் நோய் தீர்க்க குழந்தையை நரபலி கொடுத்தேன் என்று “சைக்கோ” மந்திரவாதி பேட்டியளித்துள்ளார். மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் செரின்பாத்திமா. இவரது கணவர் கவுஸ்பாஷா சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது 1 1/2 வயது ஆண் குழந்தை காதர்யூசுப் என்பவனை “சைக்கோ” மந்திரவாதி அப்துல் கபூர் கடத்தி சென்று துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்தான். நேற்று அந்தகுழந்தையின் தலை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி பகுதியிலும், உடல் பாகங்கள் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள காட்டுப்பள்ளிவாசல் பகுதியிலும் தோண்டி எடுக்கப்பட்டன. குழந்தையை நரபலி கொடுத்ததாக “சைக்கோ” மந்திரவாதி அப்துல்கபூரும், அவனது கள்ளக்காதலி ரமலாபீவியும் கைது செய்யப்பட்டனர்.

“ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்?”: முஸ்லீம் என்று இந்தியாவில் அத்தகைய நம்பிக்கையாளர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று பார்க்கும் போது, அப்படியென்றால், அவர்கள் பேசுவதும், எழுதுவதும், கலாட்டா-ஆர்பாட்டம்-போராட்டம் என்றெல்லாம் செய்து மிரட்டுவதும், ஆனால் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தேறிவருவதற்கும் சம்பந்தமேயிலாது இருக்கிறதே? அதாவது, இருப்பதை மறைத்து அப்படி நாடகம் மாடுகிறார்களா, தமது குற்றங்களை மற்றவர்களின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்களா? இப்பிரச்சினை இப்படி ஊடகங்களில் அல்சப்படும்போதுதான், முஸ்லீம்களும் “ஷிர்க் எனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் செய்பவர்கள் யார்?”, என  ஜூலை[4] 24 மற்றும் 25 தேடிகளில் 2010 அன்று சென்னை தியாகராயர் அரங்கத்தில்[5] வைத்து சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையினருக்கும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையிலான விவாதம் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக ஏற்பட்டதாம்! ஆனால், இப்பிரச்சினைப் பற்றி விவாதித்தார்களா என்று தெரியவில்லை!

சமதர்ம பூஜையா, செக்யூலார் தந்திரமா? குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பூஜை பொருட்கள், லட்சுமி குபேர எந்திரம், காளிபடம், பாக்கெட் அளவிலான குரான் புத்தகம், துளசிமாலை, விபூதி, குங்குமம், சிவப்பு துணி, காப்பு போன்ற பொருட்கள் கிடந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர்[6]. நள்ளிரவு குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் “சைக்கோ” மந்திராவதி அப்துல் கபூர் பூஜை செய்ததாக தெரிவித்தான். குழந்தை தலை மற்றும் உடல் பகுதி எலும்புகள் சேர்க்கப்பட்டு சூப்பர் இம்போசிங் செய்ய சென்னைக்கு அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

முஸ்லீம் மந்திரவாதி பேட்டி: ஏர்வாடி தர்காவிலே காதல் ஆரம்பம்: குழந்தை உடலை தோண்டி எடுத்தபோது “சைக்கோ” மந்திராவதி அப்துல்கபூர் அவனது கள்ளக்காதலி ரமலாபீவி ஆகியோரையும் போலீசார் அங்கு அழைத்து வந்திருந்தனர். அங்கு “சைக்கோ” மந்திரவாதி அப்துல் கபூர் நிருபர்களிடம் கூறியதாவது: “நான் கடந்த 1993-ம் ஆண்டு ஏர்வாடி தர்காவில் தங்கினேன். அங்கு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்து விட்டேன். பின்னர் காயல்பட்டினம் சென்றேன். அங்கு ரமலாபீவியை சந்தித்தேன். ரமலாபீவியும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரித்து விட்டதால் நாங்கள் 2 பேரும் கணவன்-மனைவிபோல வாழ்ந்தோம். ரமலாபீபிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். அவரது நோயை குணமாக்குவதாக கூறினேன். இனரென்ன டாக்டரா-மருத்துவரா என்று கேட்கவில்லை போலும்!

காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: பின்னர் மதுரை கோரிப்பாளையம் தர்காவுக்கு வந்து தங்கினோம். அங்கு தங்கி இருந்தபோது அதிகாலையில் வந்தகனவில் காளி தோன்றினார்[7]. தலைப்பிள்ளையாக பிறந்த ஆண் குழந்தையை நரபலி கொடுத்தால் ரமலாபீவியின் நோய் குணமாகும் என்று காளி கூறினார். இதனை நம்பிய நான் ரமலாபீவியை எழுப்பி சொன்னேன். பிறகு 2 பேரும் சேர்ந்து 1 1/2 வயது குழந்தை காதர் யூசுப்பை கடத்தி கொண்டு வந்தோம்.  காளி உத்தரவுப்படிதான் குழந்தையை நரபலி கொடுத்தோம். கொலைக்கும், எனக்கு சம்பந்தம் இல்லை. தண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள். இவ்வாறு “சைக்கோ” மந்திராவதி அப்துல்கபூர் கூறினான்.  இதனை அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அப்போது அவன் வெறிபிடித்தவன் போல கூச்சலிட்டான். பின்னர் பொதுமக்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு அவனை அழைத்து சென்றனர்.

முத்துப்பேட்டை அலியார் என்ன அறிவுரைகளை அளித்தார்?: விசாரணையில் அப்துல்கஃபூர், கடந்த 2009ல் முத்துப்பேட்டை அருகே பெருகவாழ்ந்தான் ஊரில் அலியார் (60) என்பவரை சந்தித்ததாகவும், அவரது அறிவுரைகளைக் கேட்டப் பிறகு[8], மாந்திரீக வலிமையில் குழந்தைகளை நரபலி கொடுக்கும் உணர்வும், கனவுகளும் வந்தன என்று போலீஸாரிடம் தெரிவித்திருந்தான். இதன்பேரில், அலியாரிடல் விசாரணை நடத்த தனிப்படை போலீசர் நேற்று முத்துப்பேட்டை விரைந்தனர். ஆக இந்த அலியார் என்ன சொன்னார் என்றும் பார்க்கவேண்டியதுள்ளது. ஏர்கெனவே முஸ்லீம் நண்பர்களே, தர்காக்களில் பல காமக்களியாட்டங்கள் நடந்து வருவதை எடுத்துக் காட்டியுள்ளார்கள்[9].

15 நாள் பூஜை நடத்திய மந்திரவாதி: குழந்தையை நரபலி கொடுத்த பின்னர் 15 நாட்கள் பூஜை நடத்தியுள்ளார் அப்துல் கபூர் என்பது தெரிய வந்துள்ளது[10]. திருச்செந்தூர்-குலசேகரம் ரோட்டில் கல்லாமொழி நாயகம் ஹிலுருநபி தர்கா உள்ளது. இதனை சுற்றி 6 வீடுகள் உள்ளன. இவற்றில் 3 வீட்டில் மட்டுமே ஆட்கள் உள்ளனர். வெளியூரில் இருந்து தொழுகை நடத்த வருபவர்களுக்கு இங்குள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்கள் உதவி செய்வார்கள். கடந்த 4-ம் தேதி அப்துல் கபூர், ரமலா பீவியுடன் இங்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் கையி்ல் சில்வர் தூக்குவாளி வைத்திருந்துள்ளார். அங்குள்ளவர்களிடம் அப்துல் கபூர் தனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

கள்ளக்காதலியுடன் அர்தஜாம-நடுஇரவு பூஜைகள்: பின்னர் இரவு 9 மணி அளவில் தர்கா அருகே உள்ள உடைந்த ஓட்டு வீட்டில் வைத்து பூஜைகள் நடந்துள்ளது. இந்த பூஜை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அதன்பிறகு மறுநாள் காலை தாங்கள் கொண்டு வந்த தூக்கு வாளியுடன் அருகில் உள்ள காட்டு பகுதியில் சென்று பூஜை நடத்தியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் வரை பூஜை நடந்துள்ளது. இந்த பூஜை மூலம் அதீத மாந்திரீக சக்தி கிடைக்கும் என்று நம்பி இவ்வாறு செய்துள்ளனர். காதர் யூசுப்பை கடந்த 2-ம் தேதி மதுரையில் இருந்து கடத்தி 4-ம் தேதி கல்லாமொழிக்கு வந்துள்ளனர். இங்கு வந்து 2 நாட்கள் கழித்து குழந்தையைக் கொன்றுள்ளனர். அதாவது ஆறாம் தேதி நரபலியிட்டிருக்கிறான்.

நரபலி ஏரல் லாட்ஜில்தான் நடந்திருக்கிறது[11]: மதுரையில் இருந்து பஸ்சில் திருநெல்வேலி சென்றோம். குழந்தையை வெளியில் வைத்து கொலை செய்தால் தெரிந்து விடும் என ரமீலா சொன்னார். லாட்ஜில் அறை எடுத்து, அங்கு குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். இதன்படி, தூத்துக்குடி அருகே ஏரல் என்ற ஊருக்கு வந்தோம். பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள லாட்ஜில் அறை எடுத்தோம். குழந்தையின் வெள்ளி கொலுசு, வெள்ளி அறைஞாண்கயிரை கழற்றினேன். அதை விற்று வரும்படி ரமீலாவிடம் கொடுத்து அனுப்பினேன். அதை, 2,000 ரூபாய்க்கு ரமீலா விற்றார்.அறையில் இருந்த பாத்ரூமில் குழந்தையை ரமீலா பிடித்துக் கொண்டார். நான், கத்தியால் குழந்தையின் கழுத்தை அறுத்து, ரத்தத்தை ஒரு சில்வர் டப்பாவில் பிடித்தேன். உடலை ஒரு பெரிய தூக்குவாளியிலும், தலையை ஒரு சின்ன தூக்குவாளியிலும் போட்டு மூடினோம். அறையை காலி செய்து விட்டு, ஏர்வாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வந்தோம். ரத்தத்தை மண் சட்டியில் போட்டு வறுத்தோம். ரத்தம் லேகியம் போல் ஆனதும், அதை ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தோம். சில நாட்கள் கழித்து, குழந்தையின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்தோம்.

குழந்தைதலையை தர்காவில் புதைத்தால் விஷேசமா? எனது தாயார், சிறு வயதில் என்னை தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி தர்காவிற்கு அழைத்து செல்வார். எனவே, குழந்தையின் தலையை, தர்கா அருகிலேயே புதைக்க திட்டமிட்டோம். இதன்படி, குழந்தையின் தலையை வைத்திருந்த தூக்குவாளி, ரத்தம் அடைத்து வைத்திருந்த சில்வர் குழாய், குழந்தையின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை எடுத்து கொண்டு கல்லாமொழிக்கு சென்றோம். கடற்கரையில், ரத்தம் அடைத்த குழாயை, ரமீலாவின் தலையை சுற்றி கடலில் எறிந்தேன். தலை வைக்கப்பட்டிருந்த தூக்குவாளியை, ரமீலா தலையை சுற்றி கடற்கரையில் தலையை புதைத்தேன். கத்தி, வாளியை கடலில் வீசினேன்.பின், தினமும் அங்கு சென்று பூஜை செய்து தொழுது வந்தேன்.கடந்த 24ம் தேதி இரவு 8 மணிக்கு, தர்காவில் தூங்கி கொண்டிருந்த என்னையும், ரமீலாவையும் போலீசார் பிடித்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளக்காதலி ரமீலாவும் உடந்தையாக இருந்ததை ஒப்புக்கொண்டாள்: இவருக்கு உறுதுணையாக இருந்து குழந்தையை நரபலி கொடுத்தது குறித்து ரமீலாவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்), 302 (கொலை), 201 (தடயங்கள், சாட்சியங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ், மதுரை தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரமுருகேசன் வழக்குப்பதிவு செய்தார்.இருவரையும், மதுரை இரண்டாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி முன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஆஜர்படுத்தினார். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, அப்துல்கபூர் மதுரை சிறையிலும், ரமீலா திருச்சி சிறையிலும் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

முஸ்லீம் மாந்திரீகம் முதலியவற்றை நம்புவது, பரப்புவது முதலியன: ஒரு முஸ்லீம் நண்பர் தர்காக்கள் மற்றும் முஸ்லீம்களின் நம்பிக்கைகளைப் பற்றி விவரங்களை, “அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள்” என்ற தலைப்பில் கொடுத்துள்ளதையும் படிக்கலாம்[12]. ஒரு கோவிலைப் பற்றிய விவரங்களில், இப்படியும் சேர்த்திருக்கிறார்கள்[13], “இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது”. விஜய்குமார் என்பவர்[14], “முஸ்லீம் மாந்திரீகம்:, என்ற புத்தகத்தை ரூ.1000/- என்று இணைதளத்தில் போட்டுள்ளார். இப்படி ஏராளமான ஆதாரங்களைக் கொடுக்கலாம். முஸ்லீம்கள் ஜமாத், ஷரீயத் கோர்ட், தார் உல் கடா, என்ற பல நிலைகளில், அவர்களது குற்றவாளிகளை மறைத்துவிடுகின்றனர் எப்பொழுதாவது, இப்படி எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்ட கேசுகள்தாம், ஊடகங்களில் வருகின்றன. ஆனால், சில நாட்களில் இவையும் மறக்கப்படும், மறைக்கப்படும்.


[1] ஆங்கில டிவிக்களின் – டைம்ஸ்-நௌ, ஹெட்லைன்ஸ்-டுடே- உபயம். தாந்த்ரிக் முஸ்லிம் குழந்தையை பலிகொடுத்து ரத்தம் குடித்தான் என்ற ரீதியில், ஒலிபரப்பி, ஆங்கிலம் தெரிந்தவர்களை குழப்பியுள்ளது. இதனால், ஒரு அந்நிய தளம் இந்த செய்தியை ஒரு பிரபலமான கோவிலுடன் இணைத்து வெளியிட்டுள்ளது!

 

[2] இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டது.

[3] ஊடகங்களில் முஸ்லீம்கள் அதிக அளவில் முஸ்லீம்களாகவே செயல்படுவதால், அவர்கள் இந்த சமாசாரத்தை அமுக்கி வாசித்து, மறைத்துவிட முயல்கின்றனர். ஆகையால், வித-விதமான செய்திகளை மாற்றி-மாற்றி வெளியிட்டு திசைத் திருப்பப் பார்க்கிறார்கள்.

[4] ஜூலை என்று அவர்கள் குறிப்பிடவில்லை, இல்லையென்றால் மாற்றிக்கொள்ளப்படும்.

[5] http://kky30100.wordpress.com/2010/07/27/ஷிர்க்-மற்றும்-பித்அத்-ச/

[6] கள்ளக்காதலி நோய் தீர குழந்தையை நரபலி கொடுத்தேன்: மந்திரவாதி , திங்கட்கிழமை, 26 ஜுலை 2010,

http://www.newindianews.com/view.php?2b3e0AA22eeYYDN30ecI4OXR2cddQQAKccd3AmM064b44xlmmaa43ffmA3d0e2y46600

[7] ஒரு முஸ்லீம் இவ்வாறு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மை சொல்கிறாரா தப்பித்துக் கொள்ள இப்படி நாடகம் ஆடுகிறாரா என்று தீவிர விசாரணை செய்யவேண்டிய அவசியம் உள்ளது.

[8] தினகரன் 27-07-2010, http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=11419&id1=4

[9] http://hrmanson.blogspot.com/2010/06/blog-post_1375.html

http://tmpolitics.wordpress.com/

[10] http://thatstamil.oneindia.in/news/2010/07/26/human-sacrifice-head-exhume.html

[11] தினமலர், குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன், ஜூலை 27, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=47984

[12] http://kadayanalluraqsha.com/?p=3187

[13] http://www.coimbatore.tn.nic.in/tamilversion/tourism_t.html

[14] http://siddhayogicscience.com/tamil/books.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “காளி உத்தரவுப்படிதான் நரபலி கொடுத்தோம், கொலைக்குதண்டனை கொடுப்பதாக இருந்தால் காளிக்கு கொடுங்கள்: கூறுவது அப்துல் கஃபூர்!”

  1. அனாதை இல்லங்கள், குழந்தைகள் கடத்தல். விற்றல், நரபலி, பாலியல் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? « Says:

    […] […]

  2. R. Karuppusami Says:

    Yes, yes, for every jihadi bombing, as Allah is inspiring, Allah could have been hanged, if his logic is applied.

    Really, it is sickening to now their mentality, as they utter such nonsense even after committing a heinous crime.

    As the committed persons happened to be Muslims in both cases – the human sacrifice in Tamilnadu and rapist in AP (Hyderabad) and the victims are also Muslims, all have been playing mute.

  3. இஸ்லாம்-இந்தியா Says:

    […] [7] https://secularsim.wordpress.com/2010/07/28/sacrificed-as-kali-instructed-so-abdul-gaffur/ […]

  4. மனைவியின் கள்ளத் தொடர்பு சந்தேகித்து குழ்ந்தைகளைக் கொன்ற முகம்மது அலி « இஸ்லாம்-இந்தியா Says:

    […] [7] https://secularsim.wordpress.com/2010/07/28/sacrificed-as-kali-instructed-so-abdul-gaffur/ […]

  5. குழந்தை-நரபலி கொடுத்த தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டது – காளி தப்பித்தாள்! &l Says:

    […] [2] https://secularsim.wordpress.com/2010/07/28/sacrificed-as-kali-instructed-so-abdul-gaffur/ […]

  6. முஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – Says:

    […] [6] https://secularsim.wordpress.com/2010/07/28/sacrificed-as-kali-instructed-so-abdul-gaffur/ […]

  7. முஸ்லிம் மாந்திரீகம் முறையில் நரபலி கொடுத்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் அப்துல்கபூர் – Says:

    […] [6] https://secularsim.wordpress.com/2010/07/28/sacrificed-as-kali-instructed-so-abdul-gaffur/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: