Posts Tagged ‘கோயம்புத்தூர்’

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை?

செப்ரெம்பர் 1, 2010

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 52 பேர், 200ற்கும் மேற்பட்ட காயமடைந்தோர் பற்றி ஏன் ஊடகங்களோ மற்றவர்களோ பேசுவதில்லை?

துன்மார்க்க கோவை குண்டு வெடிப்பு: 1998-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் நாள் பா.ஜ.க. தலைவர் அத்வானியின் கொல்வதற்காக, சதி திட்டம் தீட்டப் பட்டு, கலவரத்தை உருவாக்க நகரின் பல பகுதிகளில் குண்டுகள் வைக்கப் பட்டு, அவை வெடித்ததில் 52 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர், 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 100 கோடிக்கு மேல் சொத்து நாசமடைந்தது. இவையெல்லாம் அப்பொழுதைய எண்ணிக்கையாகும். அதற்குப் பிறகு இவை அதிகமாகியுள்ளது. தீவிரவாதிகள் கைது, நீதிமன்ற வழாக்காடு என்று செய்திகள் வர வர, இந்த மக்களை மறந்து விட்டார்கள் அல்லது மறக்கடிக்கப் பட்டார்கள். ஆனால், இன்று வரை, அதற்ககக் காரணமானவர்களின் நிலைப் பற்றி வரிந்து கொண்டு எழுதி வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்டோர்களைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

குண்டுகள் வைத்தது உண்மை, மக்கள் கொல்லப்பட்டது உண்மை, காயமடைந்தது உண்மை: முஸ்லீம்கள் திட்டமிட்டு, ஜிஹாத் என்று குண்டுகள் வைத்தது, குண்டுகள் வெடித்தது, வெடித்ததில் மக்கள் பரிதாபகரமாக இறந்தது, காயமடைந்தது, ரத்தம் சிந்தியது, உடல் உறுப்புகள் சிதறியது, முதலிய கோரக் காட்சிகளும் உண்மைதான். ஆனால், அவர்களுடைய உரிமைகளைப் பற்றி ஒன்றும் சொல்லப்படுவதில்லையே? ஏன்? கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் என்னவாயிற்று? கை-கால்களை இழந்தவர்களின் நிலையென்ன? படுகாயமடந்த மற்றவர்கள் என்னவானார்கள்? அவர்கள் கண்ணீர் சிந்தாமல், கஷ்டபடாமல் சந்தொஷமாகவா இருக்கிறார்கள்? ஊடகங்கள் எந்த செய்திகளையும் வெளியிடுவதில்லை!

பிப்ரவரி 14, 2009: துக்கமான தினமா, மகிழ்ச்சியான தினமா?: இந்த தேதியை மக்கள் ‘காதலர் தினம்’ என்றுதான் ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்களே தவிர, கோயம்புத்தூரில் ஜிஹாதிகல் குண்டு வைத்த தினம் என்று நினைக்க மாட்டார்கள்! ஆக, மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளால் கோவையில் 52 அப்பாவி மக்கள், குறிப்பாக இந்துக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள் என்று சிலர் நினைவுகூருகின்றனர். அந்தக் குண்டு வெடிப்பில் உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவை நகரில் 14-02-2009ல் ஊர்வலமாகச் சென்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 600 பேர்கள் தடையுத்தரவை மீறியதாகக் கைது செய்யப்பட்டனர். மாறாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதியை பாபர் மசூதி இடி்க்கப்பட்ட நாளாக இந்தியா முழுவதிலும் முஸ்லீம்கள் ஆர்பாட்டம் செய்து, ரயில் மறியல், சாலை மறியல் போன்ற பலவிதக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டால் யாரும் கண்டு கொள்வதில்லை மத்திய, மாநில அரசுகள் இதற்குத் தடை விதிப்பதில்லை மாறாக, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்ற பெயரில் போலீசாரை ரயில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாவலுக்கு ஆயிரக் கணக்கில் கொண்டு நிறுத்துகிறது.