Posts Tagged ‘காவி அணிந்திருப்பவர்கள்’

காவி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள், சன்னியாசம் பெற்றவர்கள் என்று கூறக் கூடாது!

மார்ச் 17, 2010
காவி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள், சன்னியாசம் பெற்றவர்கள் என்றும் கூறக் கூடாது!

  • மிகவும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.
  • காவி அணிந்தைருப்பவர்கள் எல்லோரையுமே  துறவிகள் என்று கூறக் கூடாது!
  • காவி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே  சன்னியாசம் பெற்றவர்கள் என்றும கூறக் கூடாது!
இன்றளவில், முன்னமே குறிப்பிட்டதுபோல பிச்சைக்காரர்கள் கூட காவி அணுகிறார்கள்!
தண்டனையை நித்யானந்தா சந்திக்க வேண்டும் : யோகா குரு ராம்தேவ்
மார்ச் 17,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6919

Front page news and headlines today

புதுடில்லி : “செக்ஸ் விவகாரத்தில் சிக்கியுள்ள நித்யானந்தர் தான் செய்துள்ள தவறுகளுக்கு சட்டப்படி என்ன தண்டனை கிடைக்குமோ அதை அவர் சந்திக்க வேண்டும். செக்ஸ் குறித்த ஆய்வில் தான் ஈடுபட்டதாக அவர் கூறுவதை ஏற்க முடியாது’ என்று ராம்தேவ் கூறினார்.

பிரபல யோகா பயிற்சியாளரும் துறவியுமான ராம்தேவ் டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: காவித்துணி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள் என்றும் சன்னியாசம் பெற்றவர்கள் என்றும் கூறக் கூடாது. காவித்துணியின் புனிதத்தை உணர்ந்தவர்களை மட்டுமே அதற்குரிய தகுதியை அளிக்க வேண்டும். நித்யானந்தர் மீதான செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் குறித்து, நான் ஏற்கனவே கருத்து கூறவிட்டேன். அவர் தான் செய்த தவறுகளுக்கு சட்டப்படி என்ன தண்டனை கிடைக்குமோ அதை அவர் சந்தித்தே ஆக வேண்டும். ஆழ்ந்த நித்திரையில் தான் செக்ஸ் குறித்த ஆய்வு நடத்தியிருப்பதாக நித்யானந்தர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதுபோன்று அவர் கூறுவதையெல்லாம், யாராலும் ஏற்க முடியாது. இவ்வாறு ராம்தேவ் தெரிவித்தார்.