Posts Tagged ‘பாராளுமன்றத்தைத் தாக்கியது’

அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்?

ஜூலை 9, 2010

அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்?

காங்கிரஸைப் பார்த்து கேட்டுள்ளது, பி.ஜே.பியின் தலைவர் நிதின் கட்காரி என்பவர்!

अफजल गुरु को ‘कांग्रेस का दामाद’ कहने वाले बीजेपी के राष्ट्रीय अध्यक्ष पर कांग्रेस आगबबूला हो गई है।

அப்சல் குரு கோ “காங்கிரேச் கா தாமாத்” கஹ்னே வாலே பிஜேபி கே ராஷ்ட்ரீய அத்யக்ஸ பர் காங்கிரஸ் ஆகபபூலா ஹோ கயா ஹை!

அப்சல் குரு என்ன உன்னுடைய மாப்பிள்ளையா, பிறகு எதற்கு அத்தகைய உபச்சாரம் செய்கிறாய்? அவனுக்கு பெண்ண தரப்போகிறார்களா? பிறகு எதற்கு காலந்தாழ்த்துகிறார்கள்? (தூக்குப் போடாமல் காலம் தாழ்த்தி பிரச்சினை வளர்த்து அரசியல் செய்யும் போக்கு)

நான் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்? நமது பாராளுமன்றத்தைக் காக்க உயிர்விட்ட தியாகிகளை அவர்கள்தாம் அவமானப்படுத்தி விட்டார்கள். அதனால், அவர்கள்தாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பாராளுமன்றத்தைத் தகர்க்க முயன்றவர்களுக்கும், பாராளுமன்றத்தைக் காக்க உயிர்விட்டவர்களுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லையா, என்று கேட்கப்படுகிறது.

காங்கிரஸ் பயங்கரவாதத்தை எதிர்க்கமுடியாத கட்சி: காங்கிரஸ் கட்சியில் முழுக்க முழுக்க அச்சமூட்டும் / அச்சப்படும் நபர்களே உள்ளனர். அவர்கள் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வென்றதும் இல்லை. பயங்கரவாதிகளிடம் சரணடையும் கட்சிதான் காங்கிரஸ். அது ஒருபோதும் இந்தியாவைக் காப்பாற்ற முயன்றதில்லை,” என்றும் கட்கரி கூறினார்.

பார்லி., அட்டாக் பயங்கரவாதி அப்சல் குரு காங்கிரசாருக்கு மருமகனா ? நிதின் கட்காரி ஆவேச கேள்வி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35972

புதுடில்லி: பார்லி., தாக்குதல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அப்சல்குருவுக்கு தூக்கு தண்டனை வழங்குவதில் காங்கிரஸ் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த பயங்கரவாதி காங்., கட்சிக்கு மருமகனா இதனால் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது என்ற கட்காரியின் பேச்சு டில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் சூட்டை கிளப்பியிருக்கிறது. பா.ஜ., அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசும்போது லாலுவும், மாயாவதியும், ராம்விலாஸ் பஸ்வானும், காங்., தலைவர் சோனியாவுக்கு ஆதரவு தெரிவித்து ( நாய்கள் போல) சுற்றி வருகின்றனர். இந்த பேச்சு கடும் எதிர்ப்பை கிளப்பியது, இதற்கு பின்னர் நான் ஒரு உவமையாகத்தான் சொன்னேன், யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் டேராடூனில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அப்சல் குருவை தூக்குத்தண்டனை வழங்குவதில் கால தாமதம் செய்யப்பட்டு வருகிறது. டில்லி முதல்வரிடம் கேட்டால் உள்துறை உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறுகிறார். அறிக்கைகள் மீது அமர்ந்து இருக்கிறாரா முதல்வர்? அப்சல் குருவை காப்பாற்ற ஏன் காங்கிரஸ் முயற்சிக்கிறது? அப்சல்குரு என்ன காங்கிரசாருக்கு மருமகனா ? இவருக்கு பெண் கொடுக்கப் போகிறீர்களா என்று கேட்டார்.

காங்., பொங்கி எழுகிறது : இந்த பேச்சு காங்., மத்தியில் கடும் அதிருப்தியையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவரது பேச்சுக்கு காங்., தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. காங்., மேலிடம் வெளியிட்டுள்ள செய்தியில், கட்காரி மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது. காங்., செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில் , கட்காரியின் பேச்சு மோசமாக உள்ளது. இவ்வாறு இழி சொல்லை பேசுவதை நிறுத்திக கொள்ள வேண்டும் . ஆனால் இதற்கு நான் ஒன்றும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என கட்காரி கூறியுள்ளார். பா.ஜ., வும் கட்காரியின் பேச்சில் தவறு ஓன்றும் இல்லை என கூறியுள்ளது.