Archive for the ‘சித்தாந்த ஒற்றர்’ Category

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

மார்ச் 20, 2013

2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி!

எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது?: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.

manmohan-singh-scam

 

எதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்!

இந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

UPA-scam-list

 

ஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு

மோடியாராஹுலாஎன்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.

2G scam -Congress-DMK nexus

 

2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.

தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்?: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும்.  கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்! திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும்! முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன்? கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன்? அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.

Augusta - deal-commission-Italian connection

 

வேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை!

மாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா?: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].

05Fir12-13.qxp

 

தொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது!

224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது  21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Chidambaram, Finance Minister[11]:  Let me assure everyone that the government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha. The DMK leader has said he will review his decision if we pass a resolution in the house. We have taken note of that also. However at this point, the government is stable, the government will continue, and the government has a majority in the house. As for the resolution condemning genocide in Sri Lanka in Parliament, we have begun consulting all parties.

நிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].

CONgress.Sonia.Gandhi.Rahul.Gandhi.Manmohan.Singh.Scams.List

© வேதபிரகாஷ்

20-03-2013


[2] As DMK announced withdrawal of support on Tuesday morning, Samajwadi leader Ramgopal Yadav denied any crisis by saying that DMK was only indulging in “blackmail” and had not withdrawn support. He refused to speculate about the future.

[8] With 43 MPs between themselves, the SP and BSP — the two warring giants in Uttar Pradesh — will become crucial for the survival of the government. For, the UPA without the DMK will be more than 40 seats below the majority mark of 271.

[10] Finance Minister P Chidambaram exuded confidence when he remarked: “Let me assure you that the stability of the government and the continuance of the government are not an issue. The government is absolutely stable and enjoys a majority in the Lok Sabha.”

http://www.deccanherald.com/content/319974/dmk-pulls-upa-government-sees.html

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

ஜனவரி 20, 2011

இந்திய தேசிய கொடியை ஏற்றினால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுமாம்: காஷ்மீரத்தில் துரோகத்தனம், தேசவிரோதம், ஜிஹாதி குரூரத்தனம், முதலியவற்றின் கூட்டணி!

சிதம்பரத்தின் சதி வேலைகள்: சிதம்பரம் ஒட்டுமொத்தமாக, இந்திய தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவர்கிறார் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிய வருகிறது. முன்பு வந்தேமாதரம் விஷயத்தில் அந்தர்-பல்டி அடித்தது, ஜிஹாதி விஷயத்தில் மயங்கியது, மாவோயிஸத்தில் நிறத்தில் மூழ்கி, காவிநிறத்தை தூஷித்து, பச்சைநிறத்தில் மறுபடிட்யும் தோய்ந்து தேந்து விட்டார் போலும்! இடைத்தரககர்கள் வேறு பாஜகவை கொடியேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்வது வியப்பாகத்தா உள்ளது[1]. 1991ல் முரளி மனோஹர் ஜோஷி இவ்வாறே கொடியேற்றுவேன் என்று யாத்திரைக் கிளம்பியபோது தடுக்கப் பட்டார்.

பக்ஷி ஸ்டேடியத்திற்கும், லால் சைக்குக்கிற்கும் என்ன வித்தியாசம்? லால்சௌக் என்ன பாகிஸ்தானிலேயா உள்ளது? உமர் பாஜகவை அரசுமுறைப்படின் நடக்கும் பக்ஷி ஸ்டேடியத்தில் வந்து கொடியேற்றச் சொல்கிறார்[2]. ஏன் அப்பட்? லால் சௌக்கில், பலமுறை இந்தியக் கொடி எரிக்கப் பட்டுள்ளது. அப்பொழுது, இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி, சோனியா, சிதம்பரம் எந்த ஆளுக்கும் வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லலமல் கிடந்தார்கள். அதைப் பற்றி தெரிந்ஹும், தெரியாதவர் மாதிரி தூன்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று அப்துல்லா இவ்வாறு பேசுவதை ககது கொடுத்துக் கேட்கிறார்கள். தடுப்பதற்கு வழியைப் பார்க்கிறார்கள்.

உமர் சோனியா மெய்னோவையும் சந்தித்தாராம்[3]: சோனியாவயும் சந்தித்துள்ள உமர், அவரையே வந்து கொடியேற்றச் சொல்லியிருக்கலாமே? இந்தியயவின் ஒருத்துவத்தன்மையை, தன்னுடைய தேசிய பற்றை, அவ்வாறு கொடியேற்றீ பறைச் சாற்றியிருக்கலாமே? ஆனால், அவ்வாறு முன்வருவதில்லை. ஏனெனில், அவ்வாறு செய்தால், முஸ்லீம் ஓட்டுகள் மட்டுமல்ல, ஜிஹாதிகளின் துப்பாக்கிகளும் சோனியாவை நோக்கித் திரும்பிவிடும் என்பது நன்றாகவே தெரியும். ஆகையால்தான் தொடை நடுங்கி சிதம்பரம், ஜிஹாதிகளை தாஜா செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு[4]: உள்துறை சதிகள் மறுபடியும் ஆரம்பித்து விட்டன. ஆமாம், ஏன் சோனியாவே சென்று கொடி ஏற்றலாமே? ஏன் அவ்வாறு செய்வதில்லை? காங்கிரஸ்காரர்கள் ஏன் இதை யோப்சித்துப் பார்ப்பதில்லை? காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. குடியரசுத் தினத்தன்று பாஜக ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ப. சிதம்பரத்துடன் உமர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநகரில் உள்ள “லால் சவுக்” பகுதியில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. மேலும், ஸ்ரீநகர் நோக்கி அக்கட்சி “ஏக்தா யாத்ரா” என்ற பெயரில் யாத்திரையையும் நடத்தி வருகிறது. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[5].

ஜிஹாதிகளுக்கு தார்மீக ஆதரவு அளித்து வரும் உமர் அப்துல்லா தேசியக் கொடியை ஏற்றுவதைத் தடுக்க ஒப்பாரி: காஷ்மீரில் உள்ள லால் சவுக்கில், குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்ற திட்டமிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையை தடுத்து நிறுத்தும்படி அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரியுள்ளார். “சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும், காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியேற்ற நாங்கள் தான் செல்ல வேண்டியுள்ளது”. தேசியக் கொடி ஏற்றுவதால் மாநிலத்தின் அமைதி பாதிக்கப்படலாம் என்று உமர் அப்துல்லா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேசியக் கொடியை ஏற்றினால் அமைதிக்குக் குந்தகம் இந்நிலையில் தான் ஏற்படும் என்றால், அம்மாநிலத்தின் நிலைமையே சதேகத்தில் உள்ளதே?

இந்துக்களை ஒழித்து, முஸ்லீம்களை தாஜா செய்து வரும் காங்கிரஸ்: மைனாரிட்டிகளின் ஓட்டுகளுக்காக இந்த விஷயத்தில் காங்கிரஸ் அக்கறையில்லாமல் உள்ளது’ எனக் கூறிய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி, கடந்த 12ம் தேதி கோல்கட்டாவில் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி யாத்திரையை துவக்கி வைத்தார். இந்த யாத்திரை, 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 37 கி.மீ., பயணம் செய்து, வரும் 24ம் தேதி காஷ்மீரை சென்றடைகிறது. காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டதால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானான்.  இதை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்ததில், 110 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். ஊரடங்கு உத்தரவாலும், பிரிவினைவாத அமைப்புகளின் வேலை நிறுத்தத்தாலும் காஷ்மீரின் இயல்பு நிலை முடங்கியது. காஷ்மீரில் சகஜநிலையை ஏற்படுத்த, பார்வையாளர் சிலரை மத்திய அரசு அனுப்பியது. இதைத் தொடர்ந்து, காஷ்மீருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பி வருகிறது.

இந்தியதேசிய ஆதரவு ஊர்வனமும், தேசிய-விரோதி ஊர்வலங்களும்: இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினரின் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது; இதை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் சிதம்பரத்தை டில்லியில் நேற்று சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. இது குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா குறிப்பிடுகையில், “பாரதிய ஜனதா நடத்தும் யாத்திரையால் காஷ்மீரில் சட்டம் – ஒழுங்கு பிரச்னைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி கோரினேன். இந்த விஷயத்தில் அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பாதுகாப்புக்காக ஐந்து பட்டாலியன்களை அமைப்பது, காஷ்மீர் போலீஸ் துறையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அமைச்சர் சிதம்பரத்திடம் விவாதித்தேன்‘ என்றார். குடியரசு தினத்தன்று பா.ஜ., யாத்திரைக்கு போட்டியாக பிரிவினைவாத அமைப்புகள் சில, யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளன. அனைத்து யாத்திரைக்கும் தடை விதிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாரதிய ஜனதாவின் யாத்திரை, ஜம்முவில் கதுவா மாவட்டம் லக்கின்பூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது.

சொந்ததேசத்தில் இந்துக்கள்-பண்டிட்டுகள் அகதிகள்[6]: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்துக்களான பண்டிட்டுகள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து டில்லியில் ஒமர் கூறியதாவது: பண்டிட்டுகள் இல்லாத காஷ்மீர் ஒரு முழுமையடையாத காஷ்மீர் தான். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறத் துவங்கினர். அவர்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த தேவையான முயற்சிகளை, அரசு மேற்கொண்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு உணர்வு இல்லாத காரணத்தால் அவர்கள் மீண்டும் காஷ்மீரில் குடியேற அச்சப்படுகின்றனர். பாதுகாப்பு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது எங்களது கடமை. அவர்கள் மீண்டும் குடியேறுவதற்காக, அரசு சில சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் இது போதுமானதல்ல. பண்டிட்டுகள் காஷ்மீரில் குடியேறினால் தான், இந்த மாநிலம் முழுமை பெற்றதாகும். இவ்வாறு ஒமர் கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

20-01-2011


[1] SHUJAAT BUKHARI, Interlocutors ask BJP not to hoist tricolour, http://www.thehindu.com/news/national/article1102872.ece

[4] உள்துறை அமைச்சர் சிதம்பரம் – ஒமர் அப்துல்லா சந்திப்பு ஜனவரி 19,2011,0 http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169366

[6] பா.ஜ., யாத்திரையை தடுங்கள்: சிதம்பரத்திடம் ஒமர் கோரிக்கை, ஜனவரி 20,2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=169732

 

சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!

ஒக்ரோபர் 23, 2010

சிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்!

ஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம்! இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல!

Geelani holds convention in Delhi

Geelani holds convention in Delhi

ஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].

Indian dogs go back home

Indian dogs go back home

ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம்  கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6]! இப்படி பேசியுள்ளது சிதம்பரம்! எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்படி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது!

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

கல்லடி-காவாலித்தனத்தை-செய்துகாட்டும்-இந்தியவிரோதி

கேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத கருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்படி சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].

Protest against Geelani in Delhi

Protest against Geelani in Delhi

காஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.

எதிர்ப்பு-தெரிவித்தவர்கள்-தாக்கப்பட்டனர்

எதிர்ப்பு-தெரிவித்தவர்கள்-தாக்கப்பட்டனர்

பிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா?”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது! ஆகையால் இரு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் முஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].

Geelani.21-10-2010

Geelani.21-10-2010

அருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].

ஜிலானி-அருந்ததி

ஜிலானி-அருந்ததி

போலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர்! கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம்! ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய விவாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].


[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.

[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதிஇந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்!, http://islamindia.wordpress.com/2010/10/21/காஷ்மீர-இந்துக்கள்-பிரிவு/

[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்!

[5] Chidambaram said the authorities had videographed the proceedings of the seminar and submitted them to legal advisers for an opinion on whether laws were violated. “If it is established prima facie that the laws have been violated, Delhi police will take action in accordance with the law,” he said.

[16] Hurriyat hawk Syed Ali Shah Geelani, writer and Maoist sympathiser Arundhati Roy and parliament attack accused SAR Geelani were speakers at the event.

[17] She compared the protests in the Kashmir to the Naxals operating in central India and to even the ‘Narmada Bachao Andolan’. Roy said people everywhere are fighting for their rights.

[18] “You have to look for tactical, political and intellectual alliances and think about justice, otherwise you will be like fish swimming in a tank with strong walls and ultimately getting tired,” she said. Ms. Roy said she did not want young people in Kashmir to be let down even by their own leaders. She said the idea of justice linked struggles of people in Nagaland, Manipur, Chhattisgarh, Jharkhand and Orissa to the people of Kashmir.

[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:

http://www.global-sisterhood-network.org/content/view/2178/59/