Posts Tagged ‘கார்’

சவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்!

ஏப்ரல் 15, 2013

சவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்!

Women can drive or not in Arabia

சவுதி பெண்கள் காரோட்டுவது பற்றி இளவரசர் கருத்து: சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பொழுது அல்வலீது பின் தலால் (Saudi billionaire Prince Alwaleed bin Talal) என்கின்ற பில்லியனர் இளவரசர் பெண்கள் காரோட்டுவது பற்றி தனது இணக்கமாகக் கருத்தை இவ்வாறு வெளியிட்டுள்ளார்[1]. இதனால் வெளிநாட்டு வேலைக்காரர்களை குறைக்கலாம். சவுதி பெண்களை காரோட்ட அனுமதித்தால் சுமார் 500,000 வேலையாட்களைக் குறைத்து விடலாம்[2], இதனால் சமூக மற்றும் பொருளாதார பலன்களையும் அடையலாம் என்று டுவிட்டரில் கருத்தைத் தெரிவித்துள்ளார்[3].

Manal al Sarif with Driving licence

டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து ஹலாலா, ஹராமா?: இக்கருத்து, இஸ்லாமிய சூரா கவுன்சிலின் தீர்மானத்திற்கும், போட்டுள்ள பத்வாவிற்கு எதிரானதாகும். இருப்பினும் கருத்து டுவிட்டரில் தெரிவித்துள்ளதால், மதகுருமார்கள் ஒருவேளை அது ஹலாலா-ஹராமா என்ற சர்ச்சைரயில் ஈடுபடலாம்.

manal-al-sharif with child

அரசரின் ஆணையும்,  இளவரசரின் கருத்தும்: கடந்த வாரம் தான், அரசர் அப்துல்லா சட்டத்திற்குப் புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டு வேலையாட்கள் வெளியேற மூன்று மாத அவகாசம் கொடுத்திருந்தார்ளீப்பொழுது இளவரசர் இப்படி கூறுகிறார். அப்படியென்றால், இனி சவுதி இஸ்லாமிய பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 500,000 பேர்களுக்கு, அதுவும் வெளிநாட்டவர்களுக்கு வேலை போய்விடும். இனி அவற்றில் மலையாளிகள் எத்தனை, தமிழர் எத்தனை, சிங்களத்தவர் எத்தனை, அதில் முஸ்லீம்கள் எத்தனை என்றெல்லாம் விவாதங்கள் வந்து விடும்.

Manal al-Sharif arrested 2011

காரோட்டியதற்காக மனல் அல் ஷரீப் சிறையில்  அடைக்கப்பட்டார்: கடந்த வருடம் 2012, மனல் அல் ஷரீப் (Manal al-Sharif) என்ற பெண் காரோட்டியதற்காக, மே 21, 2011 அன்று கைது செய்யப்பட்டு தண்டனையாக ஒரு வாரம் சிறையில் அடைக்கப் பட்டாள்[4]. அப்பொழுதும், சவுதி சமூகமாற்ற ஆர்வலர்கள், பெண்கள் காரோட்டக் கூடாது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தனர்[5]. முன்னர் அரேபிய வியாபாரக் குழுமையமும் இக்கருத்தை வெளியிட்டிருந்தது[6]. மனல் அல் ஷரீப், அரசரிடம் முறையீடு செய்தாள்[7].

Saudi Arabia - women driving car- cartoon

முலைப்பால் ஊட்டுங்கள்,  ஆனால்  காரை  ஓட்ட  பெண்களுக்கு  அனுமதியில்லை!: சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பற்பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லோரும் உடலை மறைப்புத் துணியால் மூடிக்கொண்டு இருக்கவேண்டும். வெளியே போனால், ஒரு ஆணுடன் தான் போக வேண்டும். வேலைக்குப் போகக் கூடாது…………….இப்படி ஏராளமான விதிகள். இந்நிலையில் பெண்கள் காரோட்ட வேண்டி கேட்டுள்ளார்கள். ஆனால், அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Saudi Arabia - women driving car- warned as immoral

செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் போட்டுள்ள பத்வா: செய்க் அப்துல் மோஷின் பின் நாசர் அலி ஒபைகன் என்ற இஸ்லாமிய வல்லுனர் சமீபத்தில் ஒரு பத்வா கொடுத்துள்ளார். இதன்படி, சௌதி பெண்கள் வெளிநாட்டு காரோட்டிகளுக்கு முலைப்பால் கொடுக்கலாம், அவ்வாறு செய்வதால், இஸ்லாமிய முறைப்படி, அவர்கள் மகன்கள் ஆவார், தமது மகள்களுக்கு சகோதரர்கள் ஆவர். இதன்படி, புதியவர்கள் கூட இந்த பத்வா மூலம், குடும்ப பெண்களுடன் கலந்து இருக்கலாம். இதனால், முலைப்பால் உண்ட அந்த அந்நிய ஆண்மகன் பெண்களிடம் செக்ஸ் ரீதியிலாக தொந்தரவு கொடுக்கமாட்டான். இஸ்லாம் இதை அனுமதிக்கிறது. மேலும் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் அவர்களின் கற்பிற்கு களங்கம் ஏற்படும். கமல் சுபி என்ற இஸ்லாமிய அறிஞர் தனது அறிக்கையில், “பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால், விபச்சாரம் பெருகும், ஆபாசப்படம் உருவாகும், ஓரின புணர்ச்சி ஏற்படும், விவாகரத்து ஏற்படும்”, என்று விளக்கமும் கொடுத்திருந்தார்[8].

June 2016 onwards, women can drive in Saudi Arabia-2

பெண்கள் கூறும் பிரச்சினை: சவுதியில் என்ன பிரச்சினை என்னவென்றால், கடைக்குச் சென்றுவிட்டு வரும் பெண்கள் திரும்ப வீட்டுக்கு போக, காரோட்டி வருவதற்காகக் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அதனால், தாங்களே காரோட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் தேவையில்லாமை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள். இதையே, சவுதி பெண்கள் தமக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. சவுதி குடும்பத்திற்கு ஒரு காரோட்டித் தேவைப் படுகிறது. அதற்கு பெண்களே காரோட்ட அனுமதிக்கப்படவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பெண்கள் கூறுவதாவது[9], “ஒன்று எங்களை காரோட்ட அனுமதியுங்கள் அல்லது எங்களது காரோட்டிகளுக்கு முலைப்பால் ஊட்ட அனுமதியுங்கள்” என்று அதிரடியாகக் கேட்டுள்ளார்கள்!

வேதபிரகாஷ்

15-04-2013

June 2016 onwards, women can drive in Saudi Arabia-3


[1] Saudi billionaire Prince Alwaleed bin Talal has indicated support of allowing women there to drive. He says that would help the kingdom’s campaign to cut down on the number of foreign workers. Saudi Arabia follows an ultraconservative interpretation of Islam and bans women from driving. “The question of allowing women to drive in Saudi Arabia will save more than 500,000 jobs in addition to the social and economic benefits,” the prince wrote today on his Twitter account. http://www.nzherald.co.nz/world/news/article.cfm?c_id=2&objectid=10877569

[3] Thousands of foreign workers have been fired from their jobs and then deported, part of a government campaign against foreigners who illegally reside and work in the kingdom. Last week King Abdullah gave workers three months to try to legalise their presence. There are more than 8 million foreign workers in Saudi Arabia.

[4] A young Saudi woman detained for more than a week for breaking the ultra-conservative kingdom’s ban on women driving has appealed to King Abdullah for her release, her lawyer said. “Manal al Sharif hopes that the king will order her release and close her file,” her lawyer, Adnan al Saleh said. Read more: http://www.thenational.ae/news/world/middle-east/jailed-saudi-female-driver-manal-al-sharif-appeals-to-king-abdullah-for-release#ixzz2QUWyfrvf
Follow us: @TheNationalUAE on Twitter | thenational.ae on Facebook
http://online.wsj.com/article/SB10001424127887324077704578362160166544782.html

[8] The well-known academic Kamal Subhi – has presented a new report to the country’s legislative assembly, the Shura. The aim was to get it to drop plans to reconsider the ban. The report contains graphic warnings that letting women drive would increase prostitution, pornography, homosexuality and divorce.

http://www.bbc.co.uk/news/world-middle-east-16011926

சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்

மார்ச் 28, 2013

சி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்

 

சி.பி..  சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.

 

  1. தில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.
  2. சோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.
  3. அந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].

 

சி.பி.அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

 

  1. லல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.
  2. மாயாவதி மீதான வழக்குகள்.
  3. முல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.
  4. ஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்

 

ஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].

 

முடிவை இரவே  எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

 

பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்? அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா? …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்

 

அர்த்த ராத்திரியில் ரெய்ட்  ஆரம்பித்தது ஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா?

 

டி.ஆர்.அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].

 

கைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி?: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.

 

இந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா?: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].

 

சி.பி.ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்?: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா? நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்?

 

சி.பி.. என்னவிதமாக சுதந்திரமாக,  தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம்! அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது? அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.

 

© வேதபிரகாஷ்

28-03-2013


[1]CBI’s clean chit to the Italian middleman Ottavio Quattrocchi in the Bofors case.

http://newindianexpress.com/opinion/article1516897.ece

[2]  Naïve as he is, even Rahul Gandhi had blurted out that political parties tended to misuse CBI. “Every party in power can pressure institutions. Every government tries to push its people into such agencies. It is a fact, it is a reality of Indian politics,” he said in May 2009.

http://newindianexpress.com/opinion/article1516897.ece

[5] The investigating agency is also said to be conducting searches at the residence of Mr Stalin’s Secretary Raja Shankar.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

 

[9] . Immigration officials had arrested Joseph when he arrived at Hyderabad airport from Dubai on November 6, 2011 with a fake passport.

http://www.asianage.com/india/car-racket-led-cbi-stalin-s-bungalow-996

[10] Among the vehicles under the CBI scanner are 11 allegedly being used by the India Cements group, belonging to BCCI president N. Srinivasan.

http://www.asianage.com/india/car-racket-led-cbi-stalin-s-bungalow-996

[11] The DRI had assigned the probe to one of its senior officers called Muruganandam. However, Muruganandam fined only one vehicle while letting free the other 32.

கருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!

மார்ச் 21, 2013

கருணாநிதி பேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி!

Karu-sonia-affair-over

முடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ? கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

Sonia Karu alliance broken

பேரன்வீட்டில்ரெய்ட்குசும்புசெய்யும்சோனியாபாட்டி!: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்? சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும்?

Karu-sonia-affair-over2

அர்த்தராத்திரியில்ரெய்ட்ஆரம்பித்ததுஏன்?: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2].

Karu-sonia-alliance-broken

விவரங்களைக்கொடுதததுவருவாதுறைபிரிவைச்சேர்ந்தஅதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].

dmk-full-page-banners-ads-posters-sonia-dmk

© வேதபிரகாஷ்

21-03-2013


[2] The investigating agency is also said to be conducting searches at the residence of Mr Stalin’s Secretary Raja Shankar.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037

[6] Sources say the searches are being conducted after the Directorate of Revenue Intelligence complained that the DMK leader hadn’t paid the duty for some of the cars owned by him.

http://www.ndtv.com/article/south/dmk-leader-mk-stalin-s-chennai-house-raided-by-cbi-345037