Posts Tagged ‘கலியாசக்’

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

ஜனவரி 15, 2016

மால்டா கலவரங்களின் பின்னணி: இஸ்லாமிய அடிப்படைவாதம், கம்யூனிஸ புரட்சி பயங்கரவாதம், மார்க்சீய அறிவுஜீவித்தனம்!

Malda map, IHC, poppy cultivationபங்களாதேச எல்லைக்கருகில் உள்ள மால்டாவில் முஸ்லிம் ஜனத்தொகை அதிகமாவது: மால்டா மேற்குவங்காள மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில், பங்களாதேசத்தையொட்டி 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அந்நாட்டு முஸ்லிம்கள் எல்லைகளைத் தாண்டி வருவதும்-போவதும் சகஜமாக உள்ளது. “டோகன் முறையில்” பங்களாதேச முஸ்லிம்கள் “வேலைக்கு” என்று காலையில் வந்து, மாலைக்குத் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், திரும்பிச் செல்லாமல் தங்கிவிடும் முஸ்லிம்களை ஊக்குவித்துதான், அவர்களுக்கு ரேஷன் கார்ட், வாக்காளர் அடையாள சீட்டு, இப்பொழுது ஆதார் கார்ட் எல்லாம் வழங்கி, “முஸ்லிம் ஓட்டு வங்கிகளாக” எல்லைத்தொகுதிகளை மாற்றியிருக்கிறார்கள். இதனால், முஸ்லிம் தொகையும் கணிசமாக பெருகியுள்ளது. 40 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ ஆட்சியில் ஆயுத புரட்சி என்ற போர்வையில் வன்முறை ஊக்குவிக்கப்பட்டது. இப்பொழுது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், அதே போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது.

Malda riots - Mamta playing minority cardமார்க்சீய அரசியல் பாரம்பரியத்தைப் பின்பற்றும் மம்தா மற்றும் திரிணமூல் கட்சிக்காரர்கள்: பல நேரங்களில் இருகட்சிக்காரர்களும் சேர்ந்தே வேலை செய்து வருகின்றனர். ஏனெனில், அவர்கள் முஸ்லிம்களாக இருப்பது மட்டுமல்லாது, தொழில் ரீதியிலும் சேர்ந்தே செயல்பட வேண்டியுள்ளது. மால்டாவின் வடமேற்கில் புர்னியா உள்ளது. பீஹாரில். ஜார்கென்ட் மாவட்டத்தில் உள்ள இது, ஏற்கெனவே ஆயுதகடத்தல்-ஆயுதங்களுக்கு பிரசித்தியானது. ஜனவரி 2015ல் காலியாசக் கிராமத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த திருட்டுத்துப்பாக்கித் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது[1]. கஸ்சந்தபூர் [Khaschandpur] கிராமத்தில் திரிணமூல் தலைவர் உமாயூம் ஷேக்கின் வீட்டில் இருந்த பாதாள அறையிலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. கக்ரகர் குண்டுவெடிப்பில் கைதான ஜியா-உல்-ஹக் மற்றும் பங்களாதேசத்தின் ஜே.எம்.பியின் தீவிரவாதி ஜமால்-உல்-முஜாஹித்தீன் பர்த்வானில் உள்ள ரெஸூல் கரீமுக்கு “ஆயுதங்கள் செய்வது எப்படி” போன்ற புத்தகங்களை அனுப்பி வைத்தான்[2]. இதே நேரத்தில், மார்க்சிஸ்டுகளுக்கும் தொடர்புள்ளது.

Tiwari protest turned riotகம்யூனிஸ புரட்சி பயங்கரவாதமும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் சேர்ந்தே செயல்படுகிறது: கள்ளநோட்டு கும்பல், போதை மருந்து உற்பத்தி-விநியோகம், கொள்ளை என்று பலவித குற்றங்களில் இருகட்சியினரும் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அரசுதுறை அதிகாரிகள் கட்சிகளுக்கு சார்புள்ளவர்களாகவே இருப்பதினால், அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, எடுத்தால் தொடர்ந்து வழக்கு போடுவது-நடத்துவது முதலியவை தவிர்க்கப்படுகின்றன அல்லது தாமதப்படுத்தப் பட்டு, காலப்போக்கில் மறைக்கப்படுகின்றன. இருப்பினும், அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, சில நேரங்களில் இவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள், உண்மைகள் சில வெளிவருகின்றன. அரசியல் ரீதியில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வைத்தாலும், உண்மைகள் மாறப் போவதில்லை. மார்க்சிஸ்டுகளின் போலித்தனம் தான் வெளிப்படுகிறது. மார்க்சீய சித்தாந்த தாக்குதல் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றில் மட்டுமல்லாது, அறிவிஜீவிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

UGB_Main_Buildingஇந்திய வரலாற்றுப் பேரவையும் [Indan History Congress], மார்ச்சீயவாதமும், சரித்திரசாரியர்களும், முஸ்லிம்களும்: கடந்த 60 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் அவர்களை நன்றக கவனித்து வருவதால், அவர்களும் பதிலுக்கு ஆதரித்து வருகிறார்கள். இந்திய வரலாற்றுப் பேரவை [Indan History Congress[3]] ஆண்டு மாநாடுகள் அவ்விதமாகத்தான் மேற்கு வங்காளத்தில் பலமுறை நடத்தப் பட்டுள்ளது. மார்க்சீய சரித்திராசிரியகள் என்று தம்மை வெளிப்ப்டையாக அறிவித்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பாப்ரி மஸ்ஜித் வழக்கில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக சாட்சிகளாக இருந்துள்ளனர். ஆதாவது “செக்யூலரிஸ” ரீதியில் இந்துக்களுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். இதனை இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்திய சரித்திரத்தை அவர்களது சொத்து போல வைத்துக் கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார்கள். இடைக்காலத்தைத் தூக்கிப் பிடித்து, முகமதியர்களின் அக்கிரமங்களை, கொலைக்குற்றங்களை, கோவில் இடிப்புகளை, கொள்ளைகளை, மதமாற்றங்களை மறைத்து-மாற்றி எழுதி வருவதால், இக்குழுக்கள் அந்நியோன்னியமாக, கூடிக் குலாவி வருகின்றன. குறிப்பாக மால்டாவில் 2011 மற்றும் 2015 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்பொழுது, 76ம் வருட மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் தான், கலவரம் நடந்துள்ளது. டிசம்பர் 26 முதல் 30 வரை இந்தியா முழுவதிலிருந்தும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்[4]. ஆனால், இதைப் பற்றி தமிழ் ஊடகங்கள் அரைகுறையாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது.

Azam Khanமால்டா கலவரங்களைப் பற்றி தமிழ் ஊடகங்களின் அரைகுறை செய்தி வெளியீடு (ஜனவரி 7, 2015): தமிழ்.ஒன்.இந்தியா “மேற்கு வங்க மாநிலம் மதப்பிரச்சினையால் பற்றி எரிந்துகொண்டுள்ளது”, என்று ஆரம்பித்துள்ளது. காவல் நிலையங்களே அங்கு சூறையாடப்பட்டுவருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதில் தோல்வியடைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான், ஆர்எஸ்எஸ் அமைப்பினரை பார்த்து சர்ச்சைக்குறிய வகையில் கூறிய ஒரு வார்த்தை, இந்த மோதலுக்கு மூல காரணமாக கூறப்படுகிறது[5] என்று எடுத்துக் காட்டும் வீரகுமார் என்ற நிருபர் அவ்வார்த்தையைக் குறிப்பிடாதது வேடிக்கைதான். உண்மையில் ஓரினச்சேர்க்கை விசயத்தில் அருண் ஜெயிட்லி ஆதரவாக கருத்தை வெளியிட்டிருந்தார். 2014ம் ஆண்டில் உச்சநீதி மன்றம் ஓரினச்சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்[6]. ஆனால், ஆஸம் கான் நக்கலாக, அதனால் தான் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களக இருக்கிறார்கள், ஏனெனில், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்று விமர்சித்தார்[7]. ஆனால், தமிழ்.ஒன்.இந்தியா நிருபர் அந்த உண்மையினை மறைத்து, “ஆசம் கானுக்கு பதிலளிப்பதாக நினைத்துக்கொண்டு, முகமது நபியை அதே வார்த்தையால் சர்ச்சைக்குறிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் அகில் பாரதிய ஹிந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி”, என்று எழுதியிருப்பது விசமத்தனமாது[8].

Edara-e-Sharias link to Malda violence, the chairman of the group has admitted that it had called for a rally on January 3ஆஸம் கானின் ஓரினச்சேர்க்கை விமர்சனம், திவாரியின் பதில் முதலியன: ஆஸம் கான் பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ், எஸ்.பி தலைவர் தனது மனநிலையை இழந்து விட்டார் என்று கண்டித்தது. பிறகுதான், திவாரி உபியில் முஸ்லிம்கள் தான் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று விமர்சித்தார்[9]. அதற்கு அவர்களது தலைவரும் காரணமாக இருக்கலாம்[10], ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பிரம்மச்சாரிகள் என்றால், அவரும் அப்படியே, அதாவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்பட இந்தியில் கூறியிருந்தார். இவற்றையெல்லாம் தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. பிறகு அது “இது அன்ஜுமான் அக்லே சுன்னாதுல் ஜமாத் (ஏஜேஎஸ்) என்ற இஸ்லாமிய அமைப்பினருக்கு கோபத்தை வரவழைத்தது”, என்று தொடர்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 03-01-2015 அன்று மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேரணியின்போது, ஒரு காவல் நிலையம் முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. பல்வேறு கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இன்றும்கூட (07-01-2016), கலவரம் தொடருகிறது. இன்று, காளியாசாக் பகுதியில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாகவும், இந்துக்கள் உயிர் பயத்தில் இருப்பதாகவும், பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், 130 குற்றவாளிகளில் 9 பேரை மட்டுமே கைது செய்ததாகவும், அதிலும் 6 பேர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதாகவும் மம்தா மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், வன்முறைகள் தொடருவது குறிப்பிடத்தக்கது. இப்படியெல்லாம் வீரகுமார் எழுதி முடித்தாலும், அதன் பின்னணியைக் குறிப்பிடாதது ஆச்சரியமானது தான்!

© வேதபிரகாஷ்

15-01-2015

[1] The Telegraph, Arms unit near blast accused home – Illegal factory 10km from Bangla border, 4km from Burdwan suspect’s address, Monday , January 12 , 2015.

[2] http://www.telegraphindia.com/1150112/jsp/siliguri/story_7883.jsp – .Vpg2l7Z95dg

[3] http://www.indianhistorycongress.org.in/; http://www.ihc76.in/;

[4] http://www.ihc76.in/accomodetion.php; http://www.ihc76.in/indianhistorycongress/mainform/index.php ; http://www.ihc76.in/deligatfee.php

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மதக்கலவரத்தால் பற்றி எரியும் மேற்கு வங்கம்! காவல் நிலையங்கள் தீக்கிரை, Posted by: Veera Kumar, Published: Thursday, January 7, 2016, 16:49 [IST].

[6] Khan’s comments came after Union Finance Minister Arun Jaitley, last Saturday, 05-12-2015 said that the “judgment on gay sex should be reconsidered” by the Supreme Court. “Supreme Court’s 2014 verdict banning gay sex is not in accordance with evolving legal jurisprudence and court needs to reconsider it,” Jaitley said while speaking at Times LitFest.

[7] Zeenews, SP leader Azam Khan stirs fresh controversy, says RSS leaders are homosexuals, Last Updated: Monday, November 30, 2015 – 15:22.

[8] http://tamil.oneindia.com/news/india/malda-communal-violence-continues-244028.html – cmntTop

[9] http://zeenews.india.com/news/india/sp-leader-azam-khan-stirs-fresh-controversy-says-rss-leaders-are-homosexuals_1828366.html

[10] The Times of India had in a report said that Tiwari, who claims to be the working president of Hindu Mahasabha, had called Prophet Muhammad the first homosexual in the world.

[10] http://zeenews.india.com/news/india/this-is-what-kamlesh-tiwari-said-about-prophet-muhammad-which-infuriated-muslims_1833716.html