Posts Tagged ‘உட்பூசல்’

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  ஜாதியக் கணக்குகள் [5]

ஜூலை 13, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  ஜாதியக் கணக்குகள் [5]

Modi tackling Dravidianism

அமித் ஷாவின் தமிழக விஜயம் – 2014: கடந்த 2014-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்றதும் முதல்முறையாக தமிழகம் வந்திருந்த அமித் ஷா, தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் வாக்குச் சாவடி களிலும் குறைந்தது 100 உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்படுமாறு அறிவுறுத்தியிருந்தார். இது எந்த அளவுக்கு செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதை இந்தப் பயணத்தின்போது அமித் ஷா ஆய்வு செய்ய இருப்பதாகக் கூறப்பட்டது. 20-12-2014 அன்று மறைமலைநகரில் நடந்த கூட்டத்தில் பேசினார்[1]. டிசம்பர் 24, 2014 அன்று முதன்முதலாக சென்னையில், பிஜேபி தொண்டர்களின் முன்பாக பேசினார்[2]. ஆனால், கட்சி உட்பூசல்களுடன் செயல்படுவதை கவனித்தார். அதனால், ஒருவேளை, ஜாதியத்துவத்தை வைத்தே, அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்தார் போலும். இதன் தொடர்ச்சி தான், ஜாதி சங்கத் தலைவர்களுடன் நடத்தும் பேச்சு, முதலியன, ஆனால், அங்கும் 2019ற்குள் என்ன பலன் பெற்றுவிடலாம் என்ற ரீதியில் புதியதான ஆட்கள் [ஆர்.எஸ்.எஸ் பின்னணி இல்லாதவர் என்றாலும் பரவாயில்லை, தேசவிரோத, இந்துவிரோத, இந்துக்கள் அல்லாதவர்கள்] சேர்க்கப்பட்டார்கள். “குழுக்கள்” அதிகமாகின. இவையெல்லாம், பதவி [அரசு நியமனங்கள்], பணம், அதிகாரம் என்ற பலன்களை எதிர்பார்த்து சேர்ந்த கூட்டமாகின. இதனால், 50-70 வருடங்களாக பணியாற்றி வந்தவர்கள் ஒதுக்கப் பட்டார்கள். நியாயம்-தர்மம் போன்ற கொள்கைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் அமைதியாக இருந்தனர். மற்றவர், போட்டி-கோஷ்டியரின் மீது சேற்றை வாறி இறைத்தனர். ஊடகங்களுக்கு தீனி போட்டு, தம்மை பிரபலப் படுத்திக் கொண்டனர்.

BJP Faction leaders, nominated, joined etc

ஆகஸ்ட் 2015ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்[3]: தேவேந்திரகுல வேளாளர் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா 06-08-2015 அன்று மதுரை வந்தார். அவரை பல்வேறு ஜாதிசங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

  1. நாடார் மகாஜன சங்கம் சார்பில் கரிக்கோல்ராஜ், பெரீஸ் மகேந்திரவேல்,
  2. ரெட்டி நலச் சங்கம் சார்பில் ஜி.ரங்கநாதன், பட்டாபிராம், ராமலிங்கம்,
  3. யாதவர் சங்கம் சார்பில் கோபாலகிருஷ்ணன், கபிலன், சரவணன்,
  4. நாயுடு சங்கம் சார்பில் ஜெயக்குமார்,
  5. தேவர் தேசிய பேரவை சார்பில் திருமாறன்,
  6. மருதுபாண்டியர் பேரவை சார்பில் கண்ணன்,
  7. அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவன தலைவர் ஆறுமுகம்,
  8. சவுராஷ்டிரா சமூக நல பேரவை சார்பில் ஜவஹர்லால்,
  9. செட்டியார் சமூகம் சார்பில் சிவானந்த சீனிவாசன்

உட்பட பலர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் அஇமூமுக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், வேலம்மாள் கல்வி நிறுவன தலைவர் எம்வி.முத்துராமலிங்கம், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் உட்பட பலர் தனித்தனியே சந்தித்தனர்[4]. இவர்களிடையே அமித்ஷா பேசியதாவது: ஊழல் மாநிலங்களில் தமிழகம் உயர்நிலையிலுள்ள சூழ்நிலை யுடன் நிலவுகிறது. தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும் என்பதே என் விருப்பம். பல்வேறு சமுதாயத்தினரும் இந்த இயக்கத்தில் இணைந்தால், தூய்மையான நிர்வாகம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றும் முயற்சியில் விரைந்து செயலாற்று வோம். ஊழலும், முன்னேற்றமும் ஒன்றாக செல்ல முடியாது. ஊழல் உள்ளபோதே தமிழகம் இந்தளவு முன்னேறியுள்ளது. ஊழலை ஒழித்துவிட்டால் தமிழகம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே சிறந்த மாநிலமாகத் திகழும். அப்போது தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையும் வாய்ப்பும் உருவாகும் என்றார்.

Balasubramanian Adity, Vanathi Ladai

ஆகஸ்ட் 2017ல் அமித்ஷாவை சந்தித்த ஜாதிசங்க நிர்வாகிகள்: 25-12-2016 அன்று ஜெயலலிதா இறந்த பிறகு, அரசியல்வாதிகள், குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க தீவிரமாகி விட்டனர். கருணாநிதி படுத்த படுக்கையாகி விட்ட பிறகு, திமுக கடுமையாக அரசியல் குழப்பத்தை உண்டாக்க முயற்சித்து வருகிறது. மே 26, 27, 28 தேதிகளில் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டாலும், வரமுடியவில்லை. பிறகு, ஆகஸ்டில் வந்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித் ஷா, வன்னியர், நாடார், முத்தரையர், யாதவர் என பல 25க்கு மேற்பட்ட ஜாதி சங்க தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதாக  உரையாடினார். இதன் மூலம் பாஜக சாதி சங்களின் ஆதரவை பெற முயற்சி நடத்துகிறது.  டிசம்பர் 2017ல், 2ஜி வழக்கில் திமுக தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதாவது, திமுக ஊழல் கட்சி அல்ல என்று பிரச்சாரம் செய்யும். அதனால், என்டிஏவில் திமுக நுழைவதற்கும் பிரச்சினை இல்லை. மோடி ஜெயலலிதாவை சந்தித்தது போக, கருணாநிதியையும் பார்த்து வருகிறார். திமுக உள்ளே வந்தால், பிஜேபி விசுவாசிகளுக்கு “சான்ஸ்” குறையும், அதனால், எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அழகிரியை வைத்து, திமுகவை உடைத்து, அதிமுகவையும் உடைத்து, ர்ஜினியை வைத்தும் புதிய கூட்டணியை உண்டாக்கலாம்.

Faction MBJP - no takers 2016

2014ல் ஆரம்பித்த தமிழக பிஜேபிகோஷ்டி பூசல்[5]: மே.2014ல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி,  தேமுதிக., மதிமுக., பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாசும் வெற்றி பெற்றனர். அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாரதீய ஜனதா தலைவராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராகி விட்டதால், தமிழக பாஜக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு வானதி சீனிவாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தும், அதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், வானதி சீனிவாசன்–பொன்.ராதாகிருஷ்ணன் ஓரணியாக செயல்படும் நிலையில்[6], மூத்த தலைவர் இல.கணேசன்-தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். தமிழக பாஜக, இரு அணிகளாக பிளவு பட்டு இருப்பதை, அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்துக்கு, தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பாஜக பிரமுகர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். இதற்கிடையில் மோகன் ராஜூலும் ஒரு அணியாக செயல் படுவதாக தெரிகிறது. இந்தநிலையில் தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில், தமிழிசை தேர்வு செய்த வேட்பாளர்கள்தான் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், பொன்.ராதாகிருஷ்ணன்-அணியினர் ஏமாற்றம் அடைந்த நிலையில் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபடவில்லை.  இதனால்தான், குன்னூர் நகராட்சி தலைவர் பதவிக்கு, பாஜக வேட்பாளர் கடைசி வரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிந்தது. இது போன்ற நிலையில்தான், நெல்லை மேயர் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள், கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், பாஜக கட்சியை விட்டே விலகி, அதிமுக-வில் சேர்ந்துள்ளதை மேலிடத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது[7]. இவையெல்லாம் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்ட விவகாரங்கள்[8].

© வேதபிரகாஷ்

13-07-2018

 

Balasubramanian Adity, Sankara narayanan - Vanathi Ladai

[1] Shri Amit Shah address public meeting at Maraimalai Nagar,Chennai,Tamil Nadu: 20.12.2014

https://www.youtube.com/watch?v=ZyilYpqQKuA

[2] In his first ever speech made in Chennai on December 20, 2014, Shah exhorted party cadre in Tamil Nadu to end the cyclical ‘misrule’ of Dravidian parties and to take Tamil Nadu on board with Prime Minister Modi’s Mission for Growth. However, the party could not open its account in the State Assembly in the 2016 elections.

Indian Expess, Amit Shah to visit Tamil Nadu from August 22, to meet OBC leaders, Published: 30th July 2017 08:04 AM | Last Updated: 30th July 2017 08:04 AM

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/jul/30/amit-shah-to-visit-tamil-nadu-from-august-22-to-meet-obc-leaders-1635580.html

[3] தி.தமிழ்.இந்து, தமிழகத்தில் ஊழலை ஒழிக்க பாஜகவுக்கு ஆதரவு தர வேண்டும்: ஜாதி சங்க தலைவர்களிடம் அமித்ஷா வேண்டுகோள், Published : 07 Aug 2015 09:18 IST; Updated : 09 Jun 2017 17:30 IST.

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article7511314.ece

[5] சத்தியம்டிவி, தமிழக பாரதீய ஜனதாவில் கோஷ்டி பூசல்அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா?, on September 18, 2014 11:57 am.

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-top-leaders-bjp-willing-contest-from-coimbatore-249011.html

[7]  http://sathiyamweekly.com/?p=5416

[8] https://secularsim.wordpress.com/2016/05/29/from-1996-to-2016-how-bjp-faired-in-tamilnadu-elections/

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  பிரிந்து கிடக்கும் பிஜேபி-காரர்கள் [4]

ஜூலை 12, 2018

அமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் –  பிரிந்து கிடக்கும் பிஜேபிகாரர்கள் [4]

Amith ShaH tramslated by H Raja 09-07-2018

7.03 to 7.42 pm – அமித் ஷா பேச்சு: அமித் ஷா தொடர்ந்து பேசினார், “நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளோம்[1]. ஊழலை எதிர்த்து, சட்டம்-ஒழுங்குநிலை பேணும் கட்சிகளுடன் கூட்டு வைக்கப்படும். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும். 10 கோடி ஏழை மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலிமைமிக்க கட்சியாக பாஜக வெற்றி பெறும். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது என்றார்[2]. பிரதமர் மோடிக்கு தெரிவித்து வரும் ஆதரவுக்காக தமிழகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறிய அமித் ஷா தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அமித் ஷா இந்தியில் ஆற்றும் உரையை எச்.ராஜா தமிழில் மொழிப்பெயர்த்தார். கூட்டம் முடிந்து, வளாகத்தை விட்டு வெளியே வந்த போது, மழை பெய்ய ஆரம்பித்தது. தமிழிசை, அமித் ஷா வந்ததால் தான் மழை பெய்தது, என்றதெல்லாம் சொன்னது தமாஷாக இருந்தது. அமித் ஷா பேச்சு, தமிழக அரசியல்வாதிகளை சுசுப்பி விடத்தான் செயத்து. இருப்பினும் திராவிட கட்சிகள் அமைதியைக் காத்தன.

Angry Raja, looking Tamilisai

பிஜேபியில் உள்ள பிரிவுகளும், கோஷங்கள் மூலம் வெளிப்பட்டன: முன்பே எடுத்துக் காட்டிய படி, தமிழிசை, இக்கூட்டத்தை, இங்கு ஏற்பாடு செய்ததில் தனிப்பட்ட அக்கரை எடுத்துக் கொண்டார். அமித் ஷா வரவேற்பு, தங்கும் அறை, உரையாடல் கூட்டம் என்று அனைத்திற்கும் ஏற்பாடு செய்தார். அமைப்பு ரீதியில் மற்றும் கட்சி ரீதியில் என்று இரு முறை பேச வாய்ப்பு பெற்றார். இருப்பினும் எச். ராஜா பேச அழைத்த போது, பேசி முடித்தபோது, அமித் ஷா, ராஜா பெயர் சொன்னபோது, தொண்டர் கூட்டம் ஆர்பரித்தது, ராஜாவின் ஆதரவு தெரிந்தது. ”இனி தமிழகத்து நிலையில் பார்த்தா, ராஜா, என்னத்தான் இருக்கிறதோ தெரியல, உன் பெயரைக் கேட்டாலே அதிருதே, ராஜா! இளசுகள் துடிக்குது” என்பது கூட்டத்தில் தெரிந்தது, அமித் ஷா என்றாலே, முகத்தை இருக்கி வைத்துக் கொண்டு, கேள்விக்கு கூர்மையாக பதில் சொல்பவர் என்று தான் பார்த்துள்ளோம்! ஆனால், ராஜா பெயர் சொன்னபோது, இரண்டு முறை புன்னகைத்தார், பாரு ராஜா, அது அலாதியானது! கனகோஷத்தில் பூத்தது. வானதி, அமித் ஷா கூட வந்தார், அவர் தான் தன் முகத்தை இருக்கத்துடன் வைத்துக் கொண்டார். இதெல்லாம், கட்சியில் இருக்கும் பிரிவுகளை எடுத்துக் காட்டியது. இது மற்ற ஆதரவாளர்களை நெருட செய்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மட்டும் கமென்ட் அடித்தனர். ஊடகங்கள் வழக்கம் போல பிஜேபி-எதிர்ப்பு செய்திகள் வெளியிட்டன.

Angry Raja, looking Tamilisai smiling

பேனர்கள், கொடிகள் வைத்ததற்கு விமர்சனம்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை வரவேற்று சென்னை விமான நிலையம் முதல் சாந்தோம் வரை வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன[3]. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அமித்ஷா 09-07-2018 அன்று சென்னை வந்தார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் ஆலோசனை நடத்துவதற்காக கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வந்தார். அமித்ஷா வரவேற்க பாஜவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்தனர். அவரை வரவேற்பதற்காக சென்னை நகரின் பல இடங்களில் வண்ண வண்ண வரவேற்பு பேனர்கள் களைகட்டின. சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்களால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். ஏற்கனவே அரசியல் கட்சிகள் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தூர தூக்கிப்போட்டுவிட்டு பாஜக சென்னையின் பல இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்களை வைத்திருந்தனர். இந்த பேனர்களால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம் பேனர் குறித்து விளக்கம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4]. இப்படி புலம்பி தள்ளினாலும், பிறகு அமைதியாகி விட்டன.

BJP internal problems

அமித் ஷா பேச்சிற்கு உஷாராக இருந்த திராவிட கட்சிகள்: திமுக ஏற்கெனவே பிஜேபியுடன் கூட்டிருந்தது, ஆகவே, ஸ்டாலின் அமைதியாக இருந்தது புரிந்தது. மறுபடியும் கூட்டு வைக்க வாய்ப்புள்ளது என்ற நிலையும் உள்ளது. இந்திராவை கொலை செய்ய முயன்று, அப்படியே கால்களில் விழுந்து சரணாகதி ஆன, குரூர கருணாநிதி கூட்டம் தான் இன்று அமித் ஷாவை எதிர்க்கிறது. ஆனால், கூட்டணி என்றால், “அந்தர்-பல்டி” அடிக்கும். அமித்ஷா எதிர்ப்பு, மோடி-எதிர்ப்பு என்பதை விட, இந்து-எதிர்ப்பு கொண்டு, திராவிட-துலுக்கப்-கிருத்துவ-கம்யூனிஸ்ட் கூட்டம் செயல்பட்டதும் தெரிந்தது. ஏனெனில், பிஜேபி கூட்டணியில், அவர்களுக்கு சீட் கிடைக்காது. அடையாளம் கேட்டதால் தான், கொதித்த ஊடக செக்யூலரிஸ்டுகள், பொங்கி, அடங்கி விட்டன, ஆனால், செய்தி-வெளியீடு காட்டிவிட்டது. அமித்ஷாவின் பேச்சின் ஆழத்தை உணர்ந்த செக்யூலரிஸ்ட்-இந்து-விரோத ஊடகங்கள் கதிகலங்கி விட்டன. பேசியதை அப்படியே போட துணிவில்லை. சென்னையளவில் டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ் டேக் திடீரென காணவில்லை என்று புலம்புகிறது பிபிசி. சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக என்று ஒப்பாரி வைக்கிறது இன்னொரு ஊடகம்.  70 ஆண்டுகளாக “அதே குட்டையில் ஊறி, நாறிவரும் கொழுத்த மட்டைகள்” வெட்கமில்லாமல் உண்மை மறைத்து நாடகம் ஆடுகின்றன! தமிழகத்தில் பிஜேபி காலூன்ற முடியாது என்றெல்லாம் இனி பேச முடியாது. ஆக “தமிழகத்தில் பிஜேபி” என்பது உண்மையாகி விட்டது, இனி ஜால்ரா போட வந்து விடுவார்கள், கூட்டம் பெரிதாகும், கூட்டணிக்கு பேரமும் வரும். கருணாநிதி மற்றும் நடந்தால், மெரினாவில் கூட்டம் போட்டு, “தமிழர் தலைவா வருக, நிலையான ஆட்சி தருக,” என்று மோடியை வரவேற்றுப் பேசுவார். கெட்ட கட்சியில் நல்ல தலைவர் என்றோம், இன்று உலக தலைவர் என்போம், “பாராள வந்தாய் நீ, பார்லிமென்டை அல்ல” என்று தூக்கிப்பிடிப்போம்! லேடியை அடக்கிய மோடி, உலக மாடிகளை கடந்த மோடி, அன்று மெரினா பக்கம் வாடி என்றாள், அண்ணன் மோடி வந்தே விட்டார், நீ போடி! என்றெல்லாம் பேசுவர்.

Stalin, Mrs-Mr Raja, Durai murugan

தமிழக பிஜேபி முதலில் உட்பூசல்களிலிருந்து விடுபட்டு ஒற்றுமைக்கு வர வேண்டும்: பிஜேபியில் இருக்கும் உட்பூசல்கள், பிரிவினைகள் 2014லிருந்து மாறவே இல்லை[5]. மேடைகளில் எதிரும்-புதிருமாக உட்கார்ந்து கொள்வது மட்டுமில்லாமல், சமூக வளைதளங்களில் கோஷ்டிகளை உருவாக்கி பிரச்சினையைப் பெருக்கி வருகிறார்கள்[6]. ஒரு ஆதிக்க ஜாதியினர், இன்னொரு ஜாதியினரை தாக்கி வருகின்றனர். தனி நபர் தாக்குதல் அளவிலும் இறங்கி விட்டனர். திராவிட பாணியில், பலமுறை “பார்ப்பன எதிர்ப்பிலும்” இறங்குகிறார்கள். இதனால், மேலும் பிஜேபி ஆதரவாளர்கள் பிளவுபட்டு கிடக்கிறர்கள். கன்னியாகுமரி பலத்தை வைத்துக் கொண்டு, பிஜேபி பலத்தை வளர்ப்பதை விட, மத்திய திட்டங்கள் அங்கு வர திட்டம் போட்டுள்ளதால், போலியான ஆதரவு-எதிர்ப்பளார்பாட்டங்கள், போராட்டங்கள், சட்டம் ஒழுங்கு முறைகளை சீரழித்து வருகின்றன. வேண்டாம் என்றாலும், இல்லை என்றெல்லாம் பேசினாலும், குறிப்பிட்ட ஜாதி-மதம் ஆதிக்கம் வெளிப்படுகிறது. அரசியல் நியமனங்கள் எல்லாம், பெரும்பாலும் அவர்களுக்கே செல்கின்றன. கோடிகளில் துறைமுகம், 8-வழி சாலை போன்ற திட்டங்கள் அறிவிக்கும் போது, சம்பந்தப் பட்ட கான்ட்ராக்டர்கள், முதலியோர் குஷியாகி உள்ளனர். இதில் எதிர்ப்பவர்கள் “கமிஷன்” கிடைக்காதவர்கள் தாம். ஆக, ஊழல், சட்டம்-ஒழுங்கு மற்றும் வாரிசு அரசியலை இவர்கள் எவ்வாறு போக்கி, ஒற்றுமையை வளர்க்கப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-07-2018

CPR, Lakhsmanan, Raja, Murali, Tamilisai, POn.Radha

[1] தினமணி, தமிழகத்தில் பாஜக ஆட்சியமையும்: அமித் ஷா திட்டவட்டம், By DIN | Published on : 09th July 2018 08:33 PM

[2]http://www.dinamani.com/tamilnadu/2018/jul/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2956499.html

[3] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் எங்கு பார்த்தாலும் அமித் ஷா பேனர்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பாஜக!, Posted By: Kalai Mathi Updated: Monday, July 9, 2018, 18:01 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-workers-keeps-so-many-banners-welcome-amitshah-324483.html

[5] இது உதாரணத்திற்குக் கொடுக்கப்படுகிறது – Daily Pioneer, CARTEL LEADING TN BJP, ALLEGES SENIOR LEADER, Thursday, 05 May 2016 | Kumar Chellappan | CHENNAI.

[6] https://www.dailypioneer.com/nation/cartel-leading-tn-bjp-alleges-senior-leader.html

தமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)!

மே 29, 2016

தமிழக மக்களுக்கு சென்றடையாத பிஜேபியைப் பற்றிய நல்ல விவரங்கள் – பிஜேபி தோல்வி ஏன் (2)!

தமிழக பிஜேபி கூட்டணி தோல்விதிராவிடத்துவ மேடை பேச்சு, கவர்ச்சி அரசியல், முதலியவை இல்லை: நவம்பர் 2015ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரான நடிகர் நெப்போலியன் மற்றும் அக்கட்சியின் மாநில தேர்தல் பிரிவு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி நியமிக்கப்பட்டனர்[1]. தி.மு.க.வில் மு.க. அழகிரி ஆதரவாளராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சராக நடிகர் நெப்போலியன். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உறவினரும் ஆவார். தி.மு.கவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சியை விட்டு விலகி அமித்ஷா முன்னிலையில் கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அவர் இணைந்தார். தற்போது அவருக்கு கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். இதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்து எம்.பி.யாக இருந்தவர் மலைச்சாமி. அவர் அ.தி.மு.க.வை விட்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மாநில தேர்தல் பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பா.ஜ.க. கலைபிரிவின் அறங்காவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், அதன் செயலராக நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்[2]. நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினராக்கப்பட்டார். பா.ஜ.க. பிரசார பிரிவின் துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி நியமிக்கப்பட்டார். இப்படி செய்திகள் வந்தன.

சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன்

எஸ்.வி சேகர், பிஜேபி மற்ற பிஜேபிகாரர்கள்: ஏற்கெனவே, எஸ்.வி. சேகர் இருந்து, புகைந்து கொண்டிருந்தது தெரிந்த விசயமே[3]. என்னைக் கட்சி பயன்படுத்திக் கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லை என்றால், அது எனக்கு நல்லது. இவ்வளவுதான் சொல்ல முடியும், என்று ஆதங்கப்படுகிறார் எஸ்.வி.சேகர்[4]. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரான அவரை, நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக பாஜகவில் இருந்து முறைப்படி அழைக்கவில்லை என்ற கோபம்தான் வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இப்படி கொப்பளித்துள்ளது. தனது 6001வது நாடக அரங்கேற்ற விழாவுக்கு ஜெயலலிதாவை தலைமை தாங்க அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறும் எஸ்.வி.சேகர், ஒருபக்கம் தமிழக பாஜகவினர் மீது சாடுகிறார்[5]. மோடிக்கு வேண்டியவர் எனது போலக் காட்டிக் கொண்டு, இவர் கராத்தே தியாகராஜனை ஆதரித்தார் என்பதும் தெரிந்த விசயமே. ஆனால், தேர்தல் நேரத்தில் இவர்கள் எல்லோரும் எங்கே இருந்தனர் என்று தெரியவில்லை. எங்குமே இவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. பிறகு எதற்காக, இவர்களை கட்சியில் சேர்க்கவேண்டும், பதவிகள் கொடுக்க வேண்டும்.

சேலம்பொது கூட்டம் கர்நாடக்கா அமைச்சர் பிரச்சாரம்பாஜக மத்திய அமைச்சர்கள் மற்றும் மோடி முதலியோரது பிரச்சாரம்: 29-04-2016 அன்று மூன்று இடங்களில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும், தே நாளில் திருச்செங்கோடு உள்ளிட்ட, மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்[6]. 30-04-2016 அன்று கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தமிழக பாஜக இணை பொறுப்பாளருமான சி.டி.ரவி, சேலம் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் கோபிநாத், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோரை ஆதரித்து நேற்று சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். 06-05-2016 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் அந்திவாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். மாலை சென்னையில், நந்தனம்- வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது. வெங்கைய்ய நாயுடு நன்றாகத்தான் பேசினார். பிறகு வந்த மோடி தனக்கேயுரிய பாணியில் ஹிந்தியில் மோடி பேசினார். இவையெல்லாம் பிஜேபி மற்றும் மோடி ரசிகர்கள், தொண்டர்கள், பின்பற்றுபவர்களுக்கு விருந்தாக இருந்தது. அவர்கள் கைதட்டி அரவாரம் செய்து ரசித்து சந்தோசப்பட்டனர். ஆனால், பொது மக்களுக்கு விசயம் சென்றடையவில்லை.

தாமரை வெல்லட்டும், தமிழகம் வளரட்டும்மோடி அரிசியா, அம்மா அரிசியா கோஷம் பொது மக்களுக்கு சென்றடையவில்லை: உண்மையில் அரிசி-அரசியல் தமிழகத்தில் நன்றாகவே வேலை செய்யும். அண்ணாதுரை ரூபாய்க்கு படி அரிசி கொடுப்பேன் என்று மேடையில், மக்களைக் கவர்ந்து ஓட்டைப் பெற்றனர். கருணாநிதியும் அத்தகைய முறையைக் கையாண்டார். ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி கொடுத்து, பாமர மக்களைக் கவர்ந்தார். பிரதமர் மோடியை அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய வைத்தும் கூட பாஜகவுக்கு பலனில்லை[7]. தமிழக மக்கள் மாதம் 20 கிலோ இலவச அரிசி பெறுவதற்கு மத்திய அரசே காரணம் என்றும், ஆனால் அதிமுக அரசு அதனை தான் வழங்குவதுபோல் காட்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை என்ற விவரத்தை பிப்ரவரி 2016ல் தினமலர் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா மிகக் குறைந்த விலையில் வழங்குவது அம்மா அரிசி இல்லை அது மோடி அரிசி என்று கூறிப்பார்த்தும் யாரும் அதை கேட்டதாக தெரியவில்லை[8].

maniarasanavd-அரிசி அர்சியல்நெருக்கடி ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல்[9]: தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சட்டசபை தேர்தலுக்கு பின், ரேஷனில் இலவச அரிசி தொடந்து வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில், ஒரு கிலோ அரிசி, 3.50 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த தி.மு.க., ஆட்சியில், கிலோ அரிசி, இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டு பின், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷனில், 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதற்கு, தற்போது மாதம்தோறும், 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், 2.96 லட்சம் டன் அரிசியை, தமிழக அரசு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, கிலோ மூன்று ரூபாய்; 5.65 ரூபாய்; 8.30 ரூபாய் என்று, மூன்று வகை விலைகளில்வாங்குகிறது. பற்றாக்குறை அரிசி ஒரு கிலோ, 19 ரூபாய் என்ற விலையில் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசுக்கு, இலவச அரிசி வழங்குவதால், கூடுதல் சுமை ஏற்பட்டு வருகிறது. இதனால், சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசி தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 அம்மா அர்சி - 2016 தேர்தல்

விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது: இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது[10]: விலைக்கு அரிசி வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு அரசு வழங்குகிறது என்ற விவரம் பலருக்கும் தெரியவில்லை. இதனால், சிலர் அரிசியை, பிற மாநிலங்களுக்கும், வியாபாரிகளுக்கும் விற்கின்றனர். அரிசிக்கு விலை வைத்தால், தேவை உள்ளவர்கள் மட்டும் வாங்குவர். தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டத்தை, செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், மத்திய அரசிடம் இருந்து, குறைந்த விலையில் அரிசி கிடைக்காது. அரிசிக்கான ரேஷன் கார்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செலவும் உயர்ந்து வருகிறது. எனவே, சட்டசபை தேர்தல் முடிந்ததும், இலவச அரிசிக்கு பதில், குறைந்தபட்ச விலையை அரசு, நிர்ணயிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜி எஸ் டி வரி - மசோதா - ரசியல்ஜி.எஸ்.டியும், அரசியலும்: கலால் / எக்சைஸ் தீர்வை / வரி [Excise duty] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது மத்திய அரசு வசூலித்து வருகிறது. அதில் ஒருபகுதி மாநிலங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சேவை வரி [Service Tax] அறிமுகப்படுத்தியப் பிறாகும், இம்முறை தொடர்ந்தது. 2006-07களில் “பொருட்கள் மற்றும் சேவை வரி சட்டம்” [The Goods and Services Act] அறிமுகப்படுத்த வேண்டிய முயற்சிகள் தொடங்கின. காங்கிரஸ் கூட்டணி ஆரம்பித்து வைத்தாலும், அதற்கான தொலைநோக்கு திட்டம், அமல் படுத்தும் துணிவு, மாநிலங்களுடன் சரியில்லாத உறவுகள் போன்ற காரணங்களினால் அப்படியே வைத்திருந்தது. 2014ல் மோடி பதவிக்கு வந்ததும், அயல்நாட்டு மூலதனம் [FDI] வரவேண்டுமானால், ஜி.எஸ்.டி அமூல்படுத்தவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் வழக்கம்போல தகராறு செய்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அமெரிக்கா-முதலாளித்துவம் என்றெல்லாம் தடுத்துக் கொண்டேயிருந்தனர். இந்நிலையில் 2016 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, கம்யூனிஸ்டுகளும் அதே நிலையை அடைந்தனர். அதனால், மம்தா, ஜெயா ஒப்புக் கொண்டால், “பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா” அமூலாக்கப்பட்டு விடும். ஆனால், தமிழக பிஜேபிக்காரர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவில்லை.

© வேதபிரகாஷ்

 28-05-2016

[1] தமிழ்.ஒன்.இந்தியா, பாஜக தமிழக துணைத் தலைவரானார் நடிகர் நெப்போலியன்தேர்தல் பிரிவு தலைவர் மலைச்சாமி!!, By: Mathi, Published: Thursday, November 26, 2015, 15:35 [IST]

[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-napolean-made-vice-president-tn-bjp-240819.html

[3] https://www.patrikai.com/sv-shekhar-tease-bjp-party/

[4] தமிழ்.ஒன்.இந்தியா, என்னை பயன்படுத்திக்கொண்டால் பாஜகவுக்கு நல்லது, இல்லை என்றால்.. எச்சரிக்கிறாரா எஸ்.வி.சேகர்?, By: Veera Kumar, Published: Friday, May 27, 2016, 15:36 [IST].

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/s-v-shekar-showing-anger-toward-tamilnadu-bjp-254686.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/nirmala-sitharaman-prakash-javadekar-will-campaign-on-friday-intamil-nadu-252433.html

[7] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழகத்தில் மோடி அரிசியை தூக்கி சாப்பிட்டு பீர் குடித்த டாஸ்மாக், By: Siva, Published: Thursday, May 19, 2016, 12:23 [IST]

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/modi-wave-powerless-amma-s-state-254054.html

[9] தினமலர், நெருக்கடி ரேஷனில் இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடர்வதில்…நிதி பற்றாக்குறையில் அரசு தள்ளாடுவதால் சிக்கல், பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2016,20:12 IST.

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1450802

2016 தமிழக சட்டசபை தேர்தலும் தனித்து விடப்பட்ட பிஜேபியும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் – பிஜேபி தோல்வி ஏன் (1)!

மே 28, 2016

2016 தமிழக சட்டசபை தேர்தலும் தனித்து விடப்பட்ட பிஜேபியும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் – பிஜேபி தோல்வி ஏன் (1)!

தமிழக பிஜேபி தலைவர்கள்

பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாதுபோன்ற கோஷங்கள்: தமிழக பிஜேபியினர் ஒரு மாயையான கற்பனையில் மிதந்து கொண்டிருந்தனர் என்பது அவர்களது பிரச்சாரம், பேச்சு, அறிக்கைகள் முதலியன இருந்தன. “பாஜக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது”, என்ற அளவுக்கு அறிக்கைக்கைகள் விடப்பட்டன[1]. திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையாக இருந்தனர். ஆனால், அதில், பிஜேபி தலைவர்களுக்குள் ஒருமித்த கருத்து, முயற்சி மற்றும் பேச்சுவார்த்தை இல்லை. இல. கணேசன் மற்றும் தமிழிசை பேச்சுகளில் இது வெளிப்பட்டது[2]. பிஜேபிக்கு வலிந்து “இடைத்தரகம்” செய்துவரும் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், இந்துத்துவ எழுத்தாளர்கள், சமூகவலை போராளிகள் வேறு உசுப்பிவிடும் நிலையில் பொய்களை சொல்லி, சதோஷப்படுத்தி வந்தனர். 100 இடங்களைப் பிடித்து விடலாம் என்றெல்லாம் கணக்குக் காட்டினர். வதந்திகளை உருவாக்கி குழப்பத்தை உண்டாக்கினர். ஜெயாவைப் பொறுத்த வரையில், மோடி-ரேஞ்சில் உள்ளவர்களுடன் தான் பேசுவார், மற்ற மத்திய அமைச்சர்களுடன் பேசமாட்டர். ஆனால், தேவையில்லாமல் மற்ற பிஜெபிக்காரர்கள் கமென்ட் அடித்துக் கொண்டிருந்தனர். ஜி.எஸ்.டி விவகாரத்தில் மோடி, அருண் ஜெயிட்லி ஜெயாவுடன் பேசிப்பார்த்தாலும் உடன்படவில்லை. இதனால், மேலிடம் ஜெயாவுடன் கூட்டு வைத்துக் கொள்ள விரும்பவில்லை[3]. ஆனால், தமிழகத்தலைவர்கள் மாறி-மாறி பேசிக் கொண்டிருந்தார்கள்.

வெங்கைய்ய நாயுடு, ராஜா, மோடி, தமிழிசை சென்னை. வொய்.எம்.சி.மைதானம்

காங்கிரஸ்திமுக கூட்டணி பிஜேபியை தனியாக ஒதுக்கியது – 2016 தேர்தலில் தனித்து விடப்பட்ட பிஜேபி:: காங்கிரஸ் திமுகவோடு சேர்ந்தவுடன், நிலைமை மாறிவிட்டது. “ஊழல் ஊழலோடு சேர்ந்து விட்டது” என்பதை விட மற்ற பேரங்கள் பின்னணியில் இருந்தன. விஜய்காந்தின் பேரம் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளுடன் வெற்றிப் பெறாதலால்[4], வேறு கூட்டணி உருவாக்க திட்டமிட்டார். அந்நிலையில் தான் அந்த மக்கள் கூட்டணி உருவானது. பாமக தனியாக நிற்க திட்டமிட்டதாலும், ஜெயலலிதா தனியாக நிற்பது என்று உறுதியாக இருந்ததாலும், பிஜேபி தனியாகத் தள்ளப்பட்டது. அதிமுக மற்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணிகளுடன் மோதி வெல்வது என்பது நடக்காத காரியம் என்றுணர்ந்த போதிலும், தேர்தலில் குதித்தது. முகநூலிலும் நேரிடையாக, வேட்பாளர்கள் மற்றும் மறைமுகமாக அவர்களது நண்பர்கள் முதலியோரின் பிரச்சாரம் அதிரடியாக இருந்தாலும், நிதர்சனமாக இல்லை[5]. ஆகாசத்தில் கோட்டையைக் கட்டும் ரீதியில் தான் இருந்தது. விசுவாசமான தொண்டர்கள் (உண்மையானவர், பிரிவினைக் கூட்டத்தவர், நொந்து போனவர்கள் உட்பட), புதியதாக சேர்ந்துள்ள இளைஞர்கள் (விசுவாசம் மிக்கவர், ஆர்வத்துடன் இருப்பவர் மற்ற வகையறாக்கள்) முதலியோர் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று அவர்களுக்கேத் தெரிந்தது. இங்கு தினமலரின் அலசல் ஓரளவுக்கு சரியாக இருப்பதால், அது சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

அருண் ஜெயிட்லி, ஜயலலிதா

பிஜேபி-அதிமுக பாராளுமன்ற லடாய்கள்[6]: தினமலர் சொல்வது, “நில எடுப்பு மசோதா தொடர்பாக, துவக்கத்தில்பா..,வுடன் நல் முகம் காட்டிய, .தி.மு.., திடுமென பின்வாங்கியதில், பிரதமர் மோடிக்கு, .தி.மு.., மீது கடும் கசப்பு ஏற்பட்டது. இருந்த போதும் ஜெயலலிதாவுடன் அரசியல் ரீதியிலான நட்பை நல்லவிதமாகவே தொடர வேண்டும் என, முடிவெடுத்த மோடி, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிறப்பு நீதிமன்றம் தண்டித்து, அவர் ஜாமினில் இருந்த போது இல்லம் தேடி சென்று, உடல் நலம் விசாரித்து சென்றார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் ஜெயலலிதாவை, இல்லம் தேடி வந்து பார்த்து சென்றார். ஆனாலும், ராஜ்யசாபாவில் பா.., கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆதரவு உள்ளிட்ட பல விஷயங்களிலும், .தி.மு.., – பா..,வை விட்டுவிலகியே நின்றது.இதனால், மத்திய அமைச்சர்கள் பலரும், அடிக்கடி தமிழகம் வர துவங்கினர்.தங்கள் துறை தொடர்பான நடவடிக்கைகளை தன்னிச்சையாக மேற்கொண்டனர். பியுஷ் கோயல், சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் என, பல அமைச்சர்களும் தமிழகம் வந்து சென்றனர். இதை, தமிழக அரசு தரப்பில் விரும்பவில்லை. லேசுபாசான அதிருப்திகளை அதிகாரிகள் மட்டும் வெளிப்படுத்தினர். ஆனால், .தி.மு.., தலைமை, ‘ரியாக்ட்செய்யவில்லை[7].

பிஜேபி- அதிமுக லடாய் 2016 தேர்தல்

வெள்ளம் புரட்டிப் போட்ட கூட்டணி[8]: தினமலர் தொடர்கிறது, “கடந்த நவம்பர் இறுதியில், தமிழகத்தை மழை, வெள்ளம் புரட்டி போட்டது. தமிழக முதல்வரான ஜெயலலிதா, மக்களைச் சந்திக்காமல், வீட்டிலேயே முடங்கி இருக்க, டில்லியில் இருந்து கிளம்பி வந்தார் பிரதமர் மோடி. தன்னிச்சையாகவே, பாதிக்கப்பட்ட இடங்களை சென்று பார்த்தவர், சென்னை வந்து முதல்வரை சந்தித்தார். மழை, வெள்ள பாதிப்புகளுக்காக முதற்கட்டமாக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கினார். பிரதமர் வருகிறார் என தெரிந்ததும், அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் சென்னையை சுற்றிப் பார்த்தார் ஜெயலலிதா. இப்படி இரண்டு தரப்புக்குமான இடைவெளி அதிகரிக்க துவங்கியது.இருந்த போதும், தமிழக பா.., தலைவர்கள் பலரும் சட்டசபை தேர்தலில், .தி.மு..,வுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என விரும்ப, கடைசி கட்ட முயற்சியும் எடுக்கப்பட்டது. .தி.மு..,வின் டில்லி முக்கிய பிரமுகரை சந்தித்து, பா.., முக்கிய தலைவர் பேசினார்மூன்றில் ஒரு பங்கு இடங்கள், தேர்தல் முடிந்ததும்கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என, கூட்டணி பேசினர்.ஆனால் அதை, .தி.மு.., தலைமை விரும்பவில்லை. தமிழகத்தில் பா..,வால் எந்த நன்மையும் இல்லைகடந்த முறை போல இம்முறையும் கிட்டத்தட்ட தனித்து தான் போட்டிஒன்றிரண்டு சிறிய கட்சிகளும் கூட, இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி என, முடிவெடுத்தார் ஜெயலலிதா[9].

modi-jayalalitha

பனிப்போரை சமாளித்த ஜெயா: தினமலர் தொடர்கிறது, “இதை பா.ஜ., ரசிக்கவில்லை. இருந்த போதும், லோக்சபா தேர்தலைப் போல, விஜயகாந்தை வைத்து கூட்டணி அமைக்க எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வி. இதனால், தமிழகத்தில் தனித்து விடப்பட்டு விட்டது.விளைவு, ஜெயலலிதாவை சந்திக்க முடிய வில்லை என, பா.ஜ., மத்திய அமைச்சர்கள் கடும் விமர்சனம்.  ஜெ., பொதுக்கூட்டங்களுக்கு வந்து வெயிலால் இறந்தவர்களை வைத்து, தீவிர அரசியல், ஜெயலலிதா போகும் பிரசார கூட்டங்களுக்கு கடுமையான நெருக்கடி. அதனால், அவர் தன் பிரசார பயணத் திட்டத்தை மாற்ற வேண்டியதானது,  தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் தீவிரம்*முடுக்கி விடப்பட்ட வருமானவரித்துறை; தமிழகம் முழுவதும், 45 இடங்களில் ரெய்டு, கரூரில் அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு நெருக்கமான அன்புநாதன் வீடு, குடோன் ரெய்டு. பல கோடி ரூபாய் பறிமுதல்; அதே கரூர் கந்தம்பாளையத்தை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் மணிமாறன் வீடு, குடோனில் ரெய்டு; 5 கோடி ரூபாய் பறிமுதல். இப்படி தொடர்ச்சியாக தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை மூலமாக நெருக்கடி கொடுப்பதன் மூலம் கூட்டணிக்கு வராத அ.தி.மு.க.,வை பழிவாங்கத் துடிக்கிறது பா.ஜ., என, ஆளும்கட்சித் தரப்பில் இருந்து பொருமல் சத்தம் கேட்க துவங்கி உள்ளது.

 © வேதபிரகாஷ்

 28-05-2016

[1] http://www.bjptn.org/event.php?id=32

[2] தினமலர், தேர்தல் களம், தமிழிசையின் பேட்டி, ஏப்ரல்.4, 2016.

[3]  மோடி ராஜினாமா, ஜெயா கவிழ்ப்பு, ஒரு ஓட்டு வித்தியாசம் முதலியவற்றை விசுவசமான பிஜேபிக்காரர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.

[4] பிஜேபிக்கு வலிந்து “இடைத்தரகம்” செய்துவரும் மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், இந்துத்துவ எழுத்தாளர்கள், சமூகவலை போராளிகள், இதிலும் விளையாடியுள்ளனர்.  வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முடிவு செய்வதற்காக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் அடங்கிய தேமுதிக நிர்வாகிகள், தில்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவர்கள் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக செய்திகள் கசிந்தன. இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக – பாஜக மூத்த தலைவர்கள் சந்திப்பு என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பான வீண் வதந்தி என தெரிவித்தார்.

http://www.dinamani.com/tn-election-2016/2016/03/08/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/article3316506.ece

[5] https://www.facebook.com/TamilnaduBJP/?fref=nf

[6] தினமலர், சீறீ பாய்கிறதா புலி, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016,21:58 IST

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508489

[8] தினமலர், சீறீ பாய்கிறதா புலி, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 24,2016,21:58 IST

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508489