Posts Tagged ‘கணக்கில் வராத பணம்’

தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!

ஒக்ரோபர் 28, 2010

தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி என்று கிலானிக்கு நோட்டீஸ்!

தும்பை விட்டு  வாலைப் பிடிக்கும் மன்மோஹன் அரசு: தேசத்துரோகக் குற்றத்தை விட்டுவிட்டு வருமானவரி கட்டவில்லை என்று இறங்கியிருக்கிறது!. “ஜம்மு – காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சயித் அலி ஷா கிலானி, வருமான வரி பாக்கித் தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31க்குள் செலுத்த வேண்டும்’ என, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது[1].

2002ல் சோதனை, 2010ல் நோட்டீஸ்: ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான கிலானி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர், 2002ல் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் 10.2 லட்சம் மற்றும் 10,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 5 லட்ச ரூபாய்) கைப்பற்றினர். விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வைர கைகடிகாரம் போன்றவற்றை வாங்கியதற்கான ஆவணங்களையும் கண்டுபிடித்தனர்.

பாகிஸ்தானிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்ற விலையுயர்ந்த வைர கடிகாரம்: ஜொலி-ஜொலிக்கும் வைரங்கள் பறித்த அந்த கடிகாரத்தை பாகிஸ்தான் அரசு தனக்குப் பரிசாக வழங்கியது என்று கிலானி அப்போது தெரிவித்தார்[2]. அதில் “பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து” [“From Pakistan Government”] என்று[3] பொறிக்கப்பட்டிருந்தது! ஜெயலலிதாவையும் விஞ்சிவிடுவாரோ/

பதிலளிக்காத ஜிலானியும், நோட்டீஸ் அனுப்பிய வருமானத்துறையும்: கிலானியிடம் விசாரணை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், அவரது வருமான விவரங்கள் குறித்த விவரங்களை கேள்வி-பதில் போல தயாரித்து, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், கிலானி உரிய பதில் அளிக்காததால், வருமான வரியாக 1.73 கோடி ரூபாயை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பினர்.

அப்பீலுக்குச் சென்ற ஜிலானி: இதை எதிர்த்து, வருமான வரி ஆணையரிடம் கிலானி தாக்கல் செய்த அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது:  “நான் காஷ்மீரில் எம்.எல்..,வாக பணியாற்றி ஓய்வு பெற்ற வகையில், ஓய்வூதியத் தொகை 7,100 ரூபாய் மற்றும் விவசாயம் செய்து வருவதால் அதிலிருந்து 10 ஆயிரம் என, வருடத்திற்கு 17,100 மட்டுமே கிடைக்கிறது. வேறு எந்த வகையிலும் எனக்கு வருமானம் வருவதில்லை. நான் செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை 1.73 கோடி ரூபாயை ரத்து செய்து உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்”,  இவ்வாறு கிலானி அப்பீல் செய்திருந்தார். அதாவது, இப்படி ஆட்டிப் படைத்து எகப்பட்டு செலவு செய்து கலாட்டா செய்து வருகின்றார் எனும்போது, வெளியிலிருந்து பணம் வருகிறது என்பது உறுதியாகிறது[4]. சமீபத்தில் கல்லடிப்பதற்கே கோடிக்கணக்கில் செலவழித்துள்ளதாகத் தெரிகிறது.

வருமானதுறை நடவடிக்கை எடுத்துள்ளதா, இழுத்தடித்து உதவியுள்ளதா? கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இந்த விசாரணையில், கிலானியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வருமான வரி தொகை 1.73 கோடி ரூபாயை டிசம்பர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, கிலானிக்கு உத்தரவிடப்பட்டது. ஆக, இத்தனை காலம் தூங்கி, திடீரென்று விழித்துக் கொண்டது, ஜிலானிக்கு உதவுவதைப் போலத்தான் உள்ளது. மன்மோஹன் சிங், சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்ற பொருளாதார பிஸ்தாக்கள் இந்தியாவை ஆண்டு, நிதித்துறையை நிர்வகித்து வந்துள்ள நிலையில், ஜிலானி இப்படி செல்லமாக வளர்க்கப்பட்டுள்ளார் என்றால், அவர்கள் உதவியுள்ளது நன்றகவே தெரிகிறது[5].

15 வேலைக்காரர்கள் என சொகுசு வாழ்க்கை வாழும் ஜிலானி[6]: இவருக்கு இரண்டு மகன்கள், ஐந்து பெண்கள்[7]. இவர்களுக்கே செலவு அதிகமாம். அதாவது, தனது மருமகன்கள் பேரில் அதிகமாக செலவு செய்துள்ளாராம். அவர்களும், இவரைப்போலவே, இந்தியாவிற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார்கள்[8]. வருமான வரித்துறை தயாரித்த அறிக்கையின் படி, கிலானியின் மாத வருமானம் 1 லட்சத்திலிருந்து 1.50 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது. அவரது வீட்டில் 15 வேலைக்காரர்கள் இருக்கின்றனர். சமையல் செலவாக மட்டும் மாதம் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவழிப்பதாக கிலானியின் மனைவியே ஒப்புக் கொண்டிருக்கிறார்[9]. இது குறித்து கிலானியிடம் கேட்டபோது, “தனக்கு எந்தவிதமான நோட்டீசும் அனுப்பப்படவில்லை’ என தெரிவித்தார்[10]. வருமான வரித்துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து, அத்துறையின் தீர்ப்பாயத்துக்கு செல்லவும் கிலானி திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் பால் ஊட்டி வளர்த்த பாம்பு எனலாமா? இந்திராகாந்தி பிந்தரன்வாலாவை வளர்த்த மாதிரி, சோனியா ஜிலானியை வளர்த்துள்ளார் போலும்! தீவிரவாதி, பிரரவினைவாதி என்றெல்லாம் இருக்கும் போது, இப்படி அரசு இப்படி மெத்தனமாக இருந்திருக்கிறது என்று ஆச்சரியமாக உள்ளது. அமெரிக்காவே விசா அளிக்க மறுத்த போது[11], மன்மோஹன் சிங் பாஸ்போர்ட்டை கொடுக்க ஆணையிட்டார்[12]. தீவிரவாதத்தை / வன்முறையை கைவிடவில்லை என்ற காரணத்திற்காகத்தான் விசா மறுக்கப் பட்டது என்று அமெரிக்கா காரணம் கூறியது. ஆக அமெரிக்காவைவிட, இந்தியா தாராளமாக செயல்பட்டு வந்துள்ளது.

வேதபிரகாஷ்

28-10-2010

 


 

[1] தினமலர், 1.73 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த கிலானிக்கு நோட்டீஸ், அக்டோபர் 28, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=115180

[2] தினமணி,  வைரக் கடிகாரம் பரிசு பெற்ற வழக்கு: ரூ.1.73 கோடி வரி செலுத்த கிலானிக்கு உத்தரவு, First Published : 28 Oct 2010 12:10:00 AM IST.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=324299&SectionID=130&MainSectionID=130&SEO……..81

[4] Hurriyat Leader Syed Ali Shah Geelani’s Arrest – ISI Funding for Kashmiri Militants, 10 June 2002

http://www.jammu-kashmir.com/insights/insight20020601a.html

[5] அதாவது சோனியா மெய்னோவிற்குத் தெரியாமல், எதுவும் நடப்பதில்லை. ஆகவே, இப்படி நாடகம் ஆடி, இந்தியர்களை இவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக ஏமாற்றிவருவதே, பெரிய தேசத்துரோகக் குற்றம் தான்!

[6] According to Jammu and Kashmir police chief, A.K. Suri, Geelani, in his returns filed in the last two years, had shown he received a monthly pension of Rs 7,100 per month from the Jammu and Kashmir Assembly for being a former MLA and Rs 10,000 as agriculture income. However, the approximate monthly expense of Geelani worked out to more than Rs. 1,50,000. One diamond studded watch with the inscription “From Pakistan government” and two vehicles purchased out of unaccounted sources were also recovered from Geelani’s residence.  Geelani also maintained 14 servants at his house who were paid Rs. 2,000 each. Geelani’s wife on interrogation revealed she was given Rs 25,000 per month for kitchen expenses, and said the house was on rent but did not specify the rent amount and to whom it was being paid to. Geelani’s driver and close confidant, G. M. Baba also possessed  a truck worth Rs.2,40,000 and a drilling machine worth Rs. 1,40,000 besides documents relating to mining contract business of stone quarries. Baba has not been filing his income tax returns.

[7] He has two sons named Naseem and Nayeem, and five daughters. http://en.wikipedia.org/wiki/Syed_Ali_Shah_Geelani

[8] On 10 June 2002, police in New Delhi arrested Iftikhar Geelani, son-in-law of Syed Ali Shah Geelani. Police and income tax officials raided Iftikhar Geelani’s residence in New Delhi and seized a computer which had a file of five pages with information about the strength of troops of the Indian Army and paramilitary forces in Jammu and Kashmir. Geelani, a correspondent with a Kashmir-based daily has also been charged under the Official Secrets Act.

[10] இது வழக்கமாக, எல்லா இந்திய அரசியல்வாதியும் கூறும் பதில்தான்! அதுதான், அப்பீல் என்றெல்லாம் செறுள்ளார் போலும்!

[11] The reason given by the U.S. for turning down Geelani’s request for a visa was, that he has” failed to renounce violence”.